அத்தியாயம்-34

மருத்துவமனை ஏற்கனவே பரபரப்பாக இருந்தது. தற்பொழுது கூடுதல் கலவரத்துடன் இருந்தது. அதற்கு காரணம் அபியின் செல்ல மகள் காணாமல் போனது தான். 

ஆம், அந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதியாக இருக்க சிறிது நேரம் ஆனவுடன், இவ்வளவு ஆட்கள் இருக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுரையின் பேரில், கரண் அபியின் தாயும் அவனும் இருப்பதாக சொல்லிவிட்டு, மற்றவர்களை வினோதன் மூலம் வெளியேற்ற சொன்னான்.

அவர்களும் குழந்தையை ஒரு முறை கொஞ்சி விட்டு, அபியிடம் ஆயிரம் பத்தங்கள், பத்திரங்கள் சொல்லிவிட்டு கிளம்பினர்.

அப்பொழுது கரணக்கு அலுவலகத்தில் இருந்து  போன் கால் வந்தது. குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை கண்டவன், தொல்லை செய்ய வேண்டாம் என்று அறையில் இருந்து வெளியேறி, நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தான்.

குழந்தை உறங்கி இருக்க, கௌரி அபியிடம், “குழந்தை உறங்கும் நேரத்திலேயே நீயும் உறங்கி ஓய்வெடுத்துக் கொள். அப்பொழுதுதான் உனக்கும் உடல்நிலை தேறி வரும்,” என்றார்.

அவளையும் உறங்க சொல்லிவிட்டு கழிவறை சென்று விட்டு வந்து, சோபாவில் சாய்ந்தவர், நடந்த கலவரத்தில் அவருக்கும் உடம்பு சோர்வாக இருந்ததால், லேசாக சோபாவில் சாய்ந்து கண்ணயர்ந்தார். கரண் இருக்கும் நம்பிக்கையில்.

அப்பொழுது, சரியாக மாஸ்க் அணிந்த துப்புரவு தொழிலாளி அந்த  சுற்றி பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தான். அறையில் அபி உறங்கிக் கொண்டிருக்க, அதைப் பார்த்து சற்று நிம்மதி அடைந்தவன், சோபாவில் அமர்ந்திருக்கும் கௌரியை கண்டு கோபம் கொண்டான். இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவரைக் கடந்து செல்லப் போக, சத்தத்தில் முழித்தவர், “என்னப்பா வேணும்? யார் நீ? பாட்டுக்கு உள்ள வர?” என்றவுடன், “ பாத்ரூம் கிளீன் பண்ண வந்திருக்கேன். நீங்க தூங்கிட்டு இருந்தீங்க, அதனாலதான் உங்கள தொல்லை செய்ய வேண்டாம் என்று நான்  உள்ள போறேன். மன்னிச்சிருங்க ” என்றான் அவன்.

அவரும் “சரிப்பா, கொஞ்சம் சீக்கிரம் பண்ணிட்டு போங்க. உள்ளே தூங்குது. தொல்லை ஆகிடாதே. இன்னிக்கு தான் குழந்தை பிறந்திருக்கு, அதனால தான் சொல்றேன்,” என்று பணிவாக கூறினார்.

அவனும் “சரிங்க பண்ணிரேன்” என்று விட்டு கழிவறைக்கு சென்று, அடுத்த 10 நிமிடத்தில் வெளியே வந்தான். தற்பொழுது நன்றாக சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார் கௌரி.

அப்பொழுது அபியும்  குழந்தையும் தூங்குவதை கவனித்தவன், சற்றும் யோசிக்காமல் குழந்தையின் அருகில் வந்து, அதன் மூக்கில் ஒரு கர்ச்சீப்பை வைத்து அழுத்திவிட்டு,

குழந்தையை தூக்கிக் கொண்டு அவன் வைத்திருந்த பக்கெட்டில் வைத்து  தடம் தெரியாமல் அகன்றான்.

குழந்தை சென்றது கூட தெரியாமல் பெண்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருக்க, அடுத்து பத்து நிமிடம் கழித்து அறைக்குள் நுழைந்தவனுக்கு, பாத்ரூம் சுத்தம் செய்த  பினாயில் வாடை அடிக்க, முகத்தை மூடிக்கொண்டு மீண்டும் வெளியே செல்லப் போனவன், “குழந்தைக்கு இந்த வாடை ஒத்துக்கொள்ளுமோ?” என்று நினைத்து, ஜன்னல் கதவுகளை திறப்பதற்காக குழந்தை தொட்டிலை தாண்டி சென்றவன், தொட்டிலில் குழந்தையை பார்ப்பதற்கு திரும்பினான் .

அவனின் மகளை காணாமல் துடித்து கத்த ஆரம்பித்தான்: “ஐயோ, அம்முமா எங்க? அத்தை! அபி!”

அவனின் குரலில் இருவரும் அடித்து பிடித்து எழுந்தனர். 

“குழந்தை இங்க இருந்தது, எங்க காணோம்? ரெண்டு பேரும் குழந்தையை கவனிக்காமல் என்ன தூங்கிட்டு இருக்கீங்க?” என்று சத்தம் போட்டான்.

அபியும் அவசரத்தில் எழுந்தவள் முடியாமல் மீண்டும் படுத்து விட்டாள். அந்த நிலையிலும், “அபி,  ப்ளீஸ், சாரி. ஒன்னும் இல்ல. நான் பாத்துக்குறேன். நீ படு,” என்றான்.

“என்னங்க சொல்றீங்க?  என்னைய விடுங்க. நம்ம குழந்தை எங்க?” என்று அபி அழுது கொண்டே கேட்டாள்.

“எனக்கும் தெரியல. இப்ப தான் கிளீன் பண்ணின பினாயில் ஸ்மெல் அடிக்குதுன்னு ஜன்னல் ஓபன் பண்ணி வைக்கலாம்னு பார்த்தா குழந்தையை காணோம்,” என்றான்.

“ஐயோ தம்பி, என்ன சொல்றீங்க?” என்று அடித்துப் பிடித்து எழுந்து வந்த கௌரியை பார்த்தவன், “என்னத்தை இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க? நீங்க இருக்கறதுனால தான் நான் ஒரு முக்கியமான ஆபீஸ் கால் வந்ததுன்னு பேச போயிருந்தேன். பாருங்க, குழந்தையை காணோம்,” என்றவன் வேகமாக அறையை விட்டு வெளியே சென்றான்.

“என்ன தம்பி சொல்றீங்க? இங்கே தானே இருக்கோம்?  வெளியாள் யாரும் வரலையே. இங்க பாத்ரூம் கிளீன் பண்ண மட்டும்தான் வந்துட்டு போனாங்க. வேற யாரும் உள்ளுக்குள்ள வரல. இப்ப தான் நான் கண் அசந்தேன்,” என்று சொன்னதை கேட்டவன் நின்று, “என்ன சொன்னீங்க? யார் வந்தா?” என்றான்.

“மாஸ்க் போட்டுட்டு ஒரு பையன் வந்தாங்க. பாத்ரூம் கிளீன் பண்ணதுக்குன்னு வந்துட்டு கிளீன் பண்ணிட்டு போயிருப்பாங்க. வேற யாருமே வரல,” என்றார்.

அப்பொழுது வேகமாக வினோதன் அறைக்கு வர, கரணின் பதட்ட முகத்தை கண்டவன், “என்னாச்சு?” என்றான். விஷயத்தை கூறியவன், “வா, உடனடியாக சிசிடிவி அறைக்கு போகலாம்,” என்று இருவரும் அங்கே ஓடி சென்றனர்.

அப்பொழுது பார்த்தால், விஐபி தளத்தில் கரண்ட் கட் ஆகி, ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தமையால் சிசிடிவிகள் வேலை செய்யாமல் இருந்தது. அதில் கடுப்பான கரண் கத்திக்கொண்டிருந்ததால் தான் பரபரப்பான மருத்துவமனை தற்பொழுது கலவரமாக மாறியது.

நிர்வாகத்தை சேர்ந்தவர்களை ஒரு வழி செய்து விட்டான். அவனின் கத்தலில் பயந்த நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், குழந்தையை மருத்துவமனை முழுவதும் தேட உத்தரவிட்டனர். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொருத்தர் சென்றனர். அனைத்து இடத்திலும் பார்த்துவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே வந்து மூச்சு வாங்க நின்ற பணியாளர்கள், “சார், குழந்தை எங்கேயும் இல்ல,” என்றனர்.

“இன்குபேட்டர் அறை, வேற ஏதாவது குழந்தைகள் ஒரே இடத்தில் இருக்கிற மாதிரி ஏதாவது அறை இருக்கா?” என்றவுடன், ஒரு நர்ஸ் முன் வந்து, “சார், எல்லா அறைகளிலும்  பார்த்துட்டேன். அங்க உங்க குழந்தை இல்ல. இன்னைக்கு உங்க குழந்தை பிறக்கிறப்ப நானும் பக்கத்துல இருந்தேன். அதனால அதோட முகம் எனக்கு ஞாபகம் இருக்கு. நான் அடிச்சு சொல்றேன், எந்த இடத்திலும் உங்க குழந்தையை காணல,” என்றாள்.

அதைக் கேட்டு இன்னும் பதட்டமானவன் பேசிக் கொண்டிருக்க, அங்கே போலீஸ் அதிகாரிகள் வந்து விவரத்தை கேட்டனர். கரண் கம்ப்ளைன்ட் கொடுத்தவுடன், “நாங்க பாத்துக்குறோம் சார்,” என்று கூறி சிசிடிவி குறித்து கேட்டனர்.

அவன் உண்மையை கூறியதால், அவர்கள் மேனேஜ்மென்ட்டை மேலும் கண்டித்தனர். தனது ஆட்களை வைத்து அனைத்து இடங்களிலும் தேட சொன்னார். கரண் குழந்தையின் புகைப்படத்தையும் அனைவருக்கும் அனுப்பினான்.

மற்றொரு புறம், தனது காரில் வெற்றி சிரிப்புடன் அந்த குழந்தையை கடத்திய இளைஞன் சென்று கொண்டிருந்தான். ஆனால் குழந்தை அவனிடம் இல்லை; அது அந்த மருத்துவமனையிலேயே இருந்தது.

அனைவரும் தேடி வந்து, “சார், மார்ச்சுவரி தவிர எல்லாத்தையும் பார்த்துட்டோம்,” என்றனர்.

“இப்ப என்ன சொன்னீங்க?” என்று கேட்டான்.

“மார்ச்சுவரி தவிர எல்லா இடத்திலும் பார்த்துட்டோம்னு சொன்னேன் சார்,” என்றான் கான்ஸ்டபிள்.

“ஏன் அங்க போய் பார்க்கல? சீக்கிரமா அங்க போய் தேடுங்க,” என்றான்.

“சார், குழந்தையை யாராவது அங்க வைப்பாங்களா?” என்றவுடன் “அதெல்லாம் எனக்கு தெரியாது. போய் அங்கயும் செக் பண்ணிட்டு வாங்க,” என்று கத்தியவன், அவர்களுக்கு முன்பே வினோதனை அழைத்து கொண்டு ஓடினான்.

அங்கே வாசலில் ஒருவன் அமர்ந்திருந்தான். அனைவரும் கும்பலாக வருவதைக் கண்டு பதறினான். விஷயத்தை கேட்டு, “உடனடியாக ஓபன் பண்ணுங்க. இங்க ஏதாவது குழந்தை இருக்கா பார்க்கணும்,” என்றனர்.

அவன் தயங்க, பின்னால் போலீசார் வர, உடனே ஒத்துக்கொண்டான். ஒவ்வொரு பெட்டியையும் திறந்து காட்டினான். எங்கும் இல்லை. நடுவில் இரண்டு பெட்டிகள் மட்டும் பூட்டியிருந்தது.

“ஏன் இது மட்டும் திறக்கல? திறந்து விடுங்கள்,” என்றனர்.

“சார், அதுல எதுவும் இல்லை. உள்ளே கொஞ்சம் டேமேஜ் ஆகி இருக்கும். கூலிங் சிஸ்டம் வேலை செய்யாது அதனால திறக்கல,” என்றான்.

“சொன்னதை செய்,” என்றவுடன் அவன் பயந்து திறந்தான். முதல் பெட்டியில் எதுவும் இல்லை. அடுத்ததையும் திறந்தான்.

செல்போன் டார்ச்சை வைத்து உள்ளே பார்த்தபோது, உள்ளே கடைசியில் குழந்தை சுருண்டு கிடந்தது.

“எடு! எடு! இந்த ரேக்க வெளியே எடு!” என்று கத்தினான் கரண்.

அவர்கள் முயன்றும் அது வரவில்லை. “என்னய்யா வர மாட்டேங்குது?” 

“சார், இது பிணம் வைக்கிற சைஸ். இதை உடனே எடுக்க முடியாது,” என்றான்.

அவன் ஒரு நொடியில் தீர்வு நினைத்தான். மருத்துவமனை பின்புறம் இரும்பு வேலை நடப்பதை நினைத்து, உடனே அங்கு ஓடினான். வினோதன் பின்னால் ஓடினான்.

அங்கு வேலை செய்தவர்களிடம் நிலைமையை கூறி உதவி கேட்டான். அவர்கள் உடனே கருவியை கொண்டு வந்தனர்.

“சார், இப்படி பண்ண கூடாது,” என்றவனை கரண் அறைந்தான்.

“அங்க என் குழந்தை உயிருக்கு போராடுது!” என்று கத்தினான்.

அந்த கருவியால் ரேக்கின் ஹேண்டில் பகுதியை கட் செய்ய சொன்னான். இரண்டு நிமிடத்தில் அவர்கள் அதை செய்தனர்.

அப்போதும் குழந்தையை எடுக்க முடியாமல் போக, கரண் திடீரென்று அந்த ராக்கில் உள்ளே ஏறினான்.

வினோதன் அதிர்ந்து “என்னடா பண்ற?” என்றான். “நான் உள்ளே போய் குழந்தையை எடுத்து சிக்னல் தரேன், நீ உடனே என்னை இழு,” என்றவன் கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்து குழந்தையை கண்டான். கண்ணீருடன் “அம்மு” என்று அழைத்தபடி, காயமடைந்த கையை பொருட்படுத்தாமல் குழந்தையை பிடித்து சிக்னல் கொடுத்தான்.

வினோதன் மற்றும் போலீசார் அவனை வெளியே இழுத்தனர். அதில் அவனுக்கு காயம் ஏற்பட்டாலும் எதையும் கண்டு கொள்ளாமல் குழந்தையை காப்பாற்றினான். 

கரண் குழந்தையுடன் வெளியே வந்து தடுமாற, வினோதன் தாங்கினான். குழந்தையை பார்த்து அதுக்கு முத்தங்கள் கொடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டவன் டாக்டரை அழைக்கச் சொல்லி, அபியை பார்க்க ஓடினான்.

டாக்டர் குழந்தையை பார்த்து, குளோரோஃபார்ம் காரணமாக மயக்கம் தான், ஆபத்து இல்லை என்றார். கரணின் கையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஐந்து நிமிடங்கள் கழித்து அறைக்குள் வந்த போலீசாரை பார்த்த கரண், “சார் யார்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்று கேட்டான். அவர்கள் கண்டுபிடித்தோம் என்றதும், அபியை ஆறுதல் கூறி, “நீ அழக்கூடாது; நீ நன்றாக இருக்கணும்,” என்று சொல்லி அவளை அமைதிப்படுத்தினான்.

பின்னர் குற்றவாளியை கண்டுபிடிக்கப் போவதாக கூறி வெளியே வந்தான். 

அப்போது வினோதன், “இதைக் கடத்தியது உன் மாமன்காரன் தான்,” என்று போலீசார் காட்டிய வீடியோவை காட்டினான். 

அதில் ஒருவர் குழந்தையை வைத்து பணம் வாங்கிச் செல்வதும், பின்னர் மருத்துவமனை விட்டு வெளியே வந்தவுடன் மாஸ்க் கழற்றி சிரிப்பதும் பதிவு ஆகியிருந்தது.

அந்த முகத்தை ஜூம் செய்து பார்த்த போது, அது மேகநாதன் என்பதைக் கண்டு கரண் உறுதிசெய்தான்..

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page