ஆகாஷ் கார்த்திகாவை வெறித்து பார்த்தான். அவனின் விழியில் உண்டான உணர்வுகளை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் வெகு நேரம் வெறித்து பார்த்தனர்.
சின்னஞ்சிறு பாதம் தன் வெண்ணிற கொலுசுகள் சிணுங்க நடந்து வர, ஆகாஷின் விழிகள் அந்த குட்டி மழலையை பார்த்தது.
தன்னுடைய குழந்தையை பார்த்ததும் ஆகாஷின் விழிகள் சந்தோஷத்தால் நிரம்பியது. குழந்தை அப்படியே ஆகாஷை உரித்து வைத்திருந்தாள்.
ஆகாஷ் நொடியில் தன் பார்வையை மாற்றி கொண்டான்.
கனி அவனின் விழிகளை தான் பார்த்து கொண்டிருந்தார். குழந்தையை பார்த்ததும் தந்தை என்ற ஒரு உணர்வு வந்து குழந்தையை அள்ளி கொஞ்சுவான் என்று அவர் நினைத்திருக்க, ஆனால், அவனின் பார்வையில் எந்த ஒரு மாற்றத்தையும் அவரால் கண்டு கொள்ள முடியவில்லை.
அகிலா குழந்தையை பார்த்ததும் மலைத்து போனாள். இவ்வளவு பெரிய குழந்தை இருக்கும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.
பரவாயில்லை குழந்தையை பெத்துகிட்டிங்க போலயே என்ற ஆகாஷின் வார்த்தையில் கார்த்திகா செத்து விட்டாள்.
குழந்தையை கலச்சிருப்பிங்கனு நினச்சேன் என்ற அடுத்த வார்த்தை தேள் போல் கொட்டியது அவளை.
அகிலாவே அவனின் வார்த்தையில் உறைந்து விட்டாள்.
தன் புடவை முந்தானை வைத்து தன் வாயை பொத்தி கொண்டு அழுதார் கனி. அவரின் விழிகள் மறைந்து போன தன் கணவரின் புகைப்படத்தை வெறித்தது.
ஆகாஷ் வெறுப்பான பார்வையால் கனியை பார்த்தான்.
அவனின் தேள் கொட்டிய விஷமான வார்த்தையில் கார்த்திகா குலுங்கி அழுதாள்.
நடிக்காத டி என்றான் ஆகாஷ்.
கார்த்திகா தன் அறைக்குள் நுழைந்து கதவை தாழ் போடும் நொடி, ஆகாஷ் அவளின் கையை இறுக்கமாக பற்றினான்.
சைன் பண்ணிட்டு நீ எந்த ரூம்ல வேணும்னாலும் போய் உட்கார்ந்து அழு என்றான் ஆகாஷ்.
கார்த்திகாவின் மனம் மௌனமாக கண்ணீர் வடித்தது.
சீக்கிரம் சைன் பண்ணுங்க. லேட் ஆகுது என்று கத்தினாள் அகிலா.
கனி அவளின் அருகில் வந்தார். நீயும் ஒரு பொண்ணு தான ம்மா. அவளோட இடத்துல இருந்து நீ யோசிச்சு பாரு என்றார்.
இதுல யோசிக்குறதுக்கு என்ன இருக்குது? அவளுக்கு அவரோட சேர்ந்து வாழ புடிக்கல. அதுனால பிரிஞ்சி வந்துட்டாள். எனக்கு ஆகாஷை பிடிச்சிருக்கு. அதுனால நாங்க சேர்ந்து வாழ முடிவு பண்ணிட்டோம். இவள் விவாகரத்து கொடுத்துட்டா நாங்க கல்யாண வேலையை ஆரம்பிச்சிருவோம் என்றாள் அகிலா.
கனியின் முகம் கோபத்தில் சிவந்தது. அப்படி என்ன ம்மா அடுத்தவ புருஷன் மேல உனக்கு அவ்ளோ ஆசை? என்று கோபத்தில் வார்த்தையால் குத்தினார். மகளின் வாழ்க்கை பாழாக போகிறதே என்ற ஆதங்கம் அவருக்கு.
அகிலாவின் விழிகளில் இருந்து நீர் துளிகள் சிதறியது.
ஆகாஷின் கண்களில் கோப கனல் தெறித்தது.
கனியின் மேல் உண்டான கோபத்தில் அவரை எதுவும் செய்ய முடியாமல் கார்த்திகாவின் செவியில் ஓங்கி ஒரு அறையை விட்டான் ஆகாஷ்.
கார்த்திகா அவனின் ஒரு அறைக்கே சுருண்டு விழுந்தாள்.
அகிலா சுடு சொல் தாங்காமல் மனம் உடைந்து விட்டாள்.
இங்கு இவன் வந்ததே கார்த்திகாவுக்கு இன்னும் தன் மேல் அதே காதல் இருக்கின்றதா? இல்லை அவனை மறந்து விட்டு தனிமையில் வாழலாம் என்று முடிவு எடுத்து விட்டாளா? என்று அறிந்து கொள்ள தான் வந்தான். ஏனெனில் அவனுக்கு கார்த்திகாவை பற்றி நன்றாக தெரியும்.
அதனால் தான் கார்த்திக் வீட்டில் இல்லாத நேரம் வந்தான். கார்த்திக் இருந்தால் நிச்சயமாக டைவர்ஸ் பேப்பரில் தங்கையை கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி விடுவான். அவனுக்கு தன் கோபம் தான் பெருசு.
ஆனால், இங்கு வந்த பின் அகிலாவின் மேல் இப்படி ஒரு சுடு சொல் விழும் என்று ஆகாஷ் நினைத்திருக்கவில்லை.
அகிலா சோஃபாவில் மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
ப்ரோ ரொம்ப அசிங்கமா இருக்கு ப்ரோ என்று வாய் விட்டு கதறினாள் அகிலா.
ஒன்னும் இல்லைடா மா அகி. வா நம்ப கிளம்புவோம் என்று அவளை அழைத்தான் ஆகாஷ். தன்னை நம்பி, தன்னுடன் இந்த திட்டத்திற்கு சம்மதம் அளித்து வந்த பெண்ணை இப்படி தேவை இல்லாத வார்த்தை பேசி விட்டார்களே என்று அவனுக்கு இருவர் மேலும் ஆத்திரமாக வந்தது.
இந்த அம்மாகிட்டே இருந்து தான் அவனுக்கு கோபமும், தேவை இல்லாத வார்த்தையும் வருது போல என்ற அகிலா கார்த்திக்கை பற்றி கூறினாள்.
ஆகாஷ் அவளின் தோளில் கை போட்டு அவளை தூக்கி நிமிர்த்தினான். இவங்களால தான் ப்ரோ அந்த ஆள் செத்துட்டாரு போல என்று சுவற்றில் தொங்கிய போட்டோவை காட்டினாள் அகிலா.
போட்டோவை பார்த்ததும் ஆகாஷ்ஷிற்கு உச்ச கட்ட அதிர்ச்சி. அகிலாவை விட்டு விட்டு கார்த்திகாவிடம் சென்றான்.
அவள் இப்பொழுது தான் தரையிலிருந்து எழுந்து, சுவற்றோடு ஒட்டி அமர்ந்திருந்தாள்.
கார்த்திகாவின் செவியில் மீண்டும் ஒரு அறை ஓங்கி விட்டான். அவளின் தலை முடியை இறுக்கமாக பற்றினான்.
கார்த்திகா வலியில் முகம் சுணங்கினாள்.
உங்க அப்பன் சாகுறதுக்கு முன்னாடி சொல்லிட்டு செத்தானா? என்று கேட்டான்.
கார்த்திகா அவன் கூறுவது புரியாமல் பார்த்தாள்.
தம்பி அவளை விட்டுரு ப்பா என்றார் கனி.
நம் ஆகாஷ்னி பாப்பா அவனின் அருகில் ஓடி வந்து, தன் தாயை பற்றி இருக்கும் அவனின் கைகளை எடுத்து விட்டாள்.
அவனின் வலிமையான கரத்தை ஆகாஷ்னியால் பிரித்து எடுக்க முடியாது. ஆனால், அவன் தன் கைகளை தளர்த்தி விட்டதால் அவனின் கையை பிரித்து எடுக்க முடிந்தது குட்டி தேவதையால்.
உன் அம்மா சரியான சைக்கோ என்று தன் மகளிடம் கூறினான் ஆகாஷ்.
ஆகாஷ்னி அவனின் அருகில் சென்று அவனின் குச்சு குச்சு தாடியை தொட்டு பார்த்தாள். அவளை அள்ளி தூக்கி கொஞ்சினான் ஆகாஷ்.
ஆகாஷ்ஷயும் அவனின் குழந்தையையும் பார்த்த அகிலா, போங்க ப்ரோ நான் கிளம்புறேன் என்று கோபமாக கிளம்பினாள்.
அவள் வீட்டை விட்டு வெளியேறும் நொடி கார்த்திக்கின் பைக் வீட்டுக்குள் நுழைந்தது.
அவனை பார்த்த அகிலா சிலையாக நின்றாள். இவங்களே இப்போ தான் சேர போற மாதிரி தெரியுது. இந்த லூசு பையன் வேற வந்தால் காரியத்தை கெடுத்துருவானே என்று நினைத்தாள் அகிலா.
கார்த்திக் ஆகாஷை பார்த்து, “டேய் ” என்று பாய்ந்து வந்தான் வீட்டிற்குள். அகிலா அவனை லாவகமாக பிடித்து நிறுத்தினாள்.
ஆகாஷ், ஆகாஷ்னி, கார்த்திகா மூவரும் தனி உலகில் சஞ்சரித்தனர்.
ஏன் என்னைய விட்டு வந்திங்க மேடம்? என்று கேட்டான் ஆகாஷ்.
கார்த்திகா அவனை முறைத்து பார்த்தாள். நான் ஏன் உங்கள விட்டு வந்தேன்னு உங்களுக்கு தெரியாதா சார்? என்று அதே கேள்வியை திருப்பி கேட்டாள்.
தெரியல மேடம் நீங்களே சொல்லுங்க என்றான் ஆகாஷ்.
ஏன் நான் உங்கள விட்டுட்டு வந்தேனா நீங்க என்று கூறி அவன் முகத்தை பார்த்தாள் கார்த்திகா. அவன் முகத்தை பார்க்க கள்ளம் கபடம் இல்லாமல் வளர்ந்த குழந்தை போல் தெரிந்தான்.
தன் கண்களை மூடி கொண்டு, நீங்க உங்களோட பி ஏ வோட தப்பான ரிலேசன்ஷிப்ல இருந்திங்க என்றாள்.
தன் புருவத்தை உயர்த்திய ஆகாஷ், நீங்க பார்த்தீங்களா மேடம்? நான் என் பி ஏ வோட தப்பான ரிலேசன்ஷிப்ல இருந்ததை? என்று கேட்டான்.
இ.. இல்… இல்லை என்று திக்கி திணறினாள் கார்த்திகா. அப்போ உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தப்பான தொடர்புல இருக்குறது என்று கேட்டான்.
அவனின் கேள்வி கார்த்திக்கை யோசிக்க வைத்தது.
அப்…. எங்க அப்பா சொன்னாங்க என்றாள் கார்த்திகா.
என்னைய ரெண்டு வருஷம் லவ் பண்ணி, என்னோட முழுசா மூணு மாசம் வாழ்ந்தது நீங்களா? இல்லை உங்க அப்பாவா? என்று கேட்டான்.
கார்த்திகா விழிகளை விரித்து மௌனம் காத்தாள்.
தம்பி அவள் சின்ன பொண்ணு ப்பா.. தெரியாமல் அவங்க அப்பா பேச்சை கேட்டு என்று கனி ஏதோ கூற வர, ஆகாஷ் அவரை கை நீட்டி தடுத்தான்.
கார்த்திகா அவனை உறுத்து பார்த்தாள்.
சரி. நான் என் பி ஏ மோகனாவோட ஒண்ணா இருந்ததா வச்சிப்போம். உங்க அப்பா சொன்னது உண்மைனு வச்சிக்கலாம். வீட்டுல எனக்காக பொண்டாட்டி நீங்க இருக்கும் போது நான் எதுக்கு அந்த பி ஏ வோட ஒண்ணா இருக்கணும் சொல்லுங்க. நீங்க என்னைய பற்றி நினைச்சீங்களா? என்கிட்டே வந்து கேட்டிருக்கலாமே? எதுக்கு டா அப்படி பண்ணனு கேட்டு என் சட்டையை புடிச்சிருக்கலாமே? உங்களுக்கு அதுக்கான எல்லா உரிமையும் உங்களுக்கு இருந்துச்சே. ஏன் நீங்க கேட்காமல் விட்டிங்க என்று கேட்டான்.
அவனின் கேள்வி இவளை செருப்பால் அடித்தது போல் இருந்தது.
ஆகாஷ் அகிலாவை திரும்பி பார்த்தான். அகிலா, “எதுக்கு டா இவங்க என் மேல தப்பான பழி போடுறாங்க “என்று கேட்டான்.
அவள் பதில் இல்லாமல் முழித்தாள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து, ஒரு வேலை ஒய்ப்கிட்டே சட்டிஸ்பையா இல்லைனா வெளியே ஆள் தேடி போவாங்க ப்ரோ என்றாள் அகிலா.
எனக்கு என் பொண்டாட்டிக்கிட்டே முழு திருப்தி கிடைக்கும் போது நான் ஏன் வெளியே போக போறேன் என்று கேட்டான் ஆகாஷ்.
கார்த்திகாவிற்கு குற்ற உணர்ச்சி நெஞ்சை கவ்வியது. நாம் எதையும் கண்களால் பார்க்காமல், கணவனிடமும் கேட்காமல் தந்தையின் சொல் பேச்சை மட்டும் கேட்டு தவறு செய்து விட்டோமோ என்று மனசாட்சி அவளை திருப்பி கேட்டது.
ஹய்யோ போதும் ப்பா தம்பி என்று கதறினார் கனி. மகளை இவ்வாறு ஒவ்வொரு கேள்வியாக கேட்கும் போது பெற்ற தாயால் அதை பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை.
அகிலாவும் கார்த்திக்கும் கனியை புரியாத பார்வை பார்த்தனர்.
தம்பி நீ எந்த பொண்ணோடும் தப்பான உறவுல இருக்கலப்பா. கார்த்திக் அப்பா தான் கார்த்திகாகிட்டே பொய் சொல்லிட்டாரு என்று கதறினார் கனி.
பொய்யா? என்று அண்ணனும் தங்கையும் ஒரே நேரத்தில் கேட்டனர். ஆகாஷ்ஷின் உதடுகளில் இருந்து சிறு கீற்று போல் சிரிப்பு தென்பட்டது.
உன் அப்பாவுக்கு தங்கச்சினா அவ்ளோ இஷ்டம். அவள் ஓடி போய் கல்யாணம் பண்ணிகிட்டத அவரால ஏற்றுக்க முடியல. அதுனால தான் அவர் இவளை எப்படியாவது வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து, வேறொரு பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு யோசிச்சாரு. அதே நேரம் இவளும் மாசமா இருக்குறத கால் பண்ணி சொன்னாள். உங்க அப்பா தந்திரமா யோசிச்சி , பாசமா இவள்க்கிட்டே பேசி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து, இந்த தம்பி மேல தேவை இல்லாத பழியை சுமத்திட்டாரு. கருவை கலச்சிட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சாரு. ஆனால், இவள் கடைசி வரை அதுக்கு ஒத்துக்கல. தனியாவே கஷ்டப்பட்டு புள்ளையை பெத்துக்கிட்டாள். புருஷன் துணை இல்லாமல் தனியாவே இருந்துட்டாள்.
நான் செஞ்ச மடத்தனத்தால என் புள்ளை வாழ்க்கை போச்சேனு தினமும் அதையே யோசிச்சு, அவளை பற்றி வருத்தப்பட்டு, குற்ற உணர்ச்சி தாங்காமல் நெஞ்சு வழியால் செத்து போய்ட்டார் என்ற கனி கண்ணீர் சிந்தி அழுதார்.
கார்த்திகாவும் கார்த்திக்கும் அதிர்ச்சியில் நின்றனர்.
அகிலாவும் ஆகாஷும் அந்த வீட்டை விட்டு அமைதியாக வெளியேறினர்.
அடுத்த பதிவில் பார்ப்போம் .
