அத்தியாயம் 34

கார்த்திக்கை அடிப்பேன் என்று கூறிய ஆகாஷை வெறித்து பார்த்தாள் அகிலா. 

மாமா உங்க ப்ரென்ட் ரொம்ப ஓவரா போறாரு பார்த்துக்கோங்க என்றாள். 

அவனை அடிச்சா என்ன தப்பு? என்று கேட்டான் அஸ்வந்த். 

மாமா இந்த பிளான் இவரையும் கார்த்திகாவையும் சேர்த்து வைக்குறதுக்கு தான். ஆனால், இவர் இப்படி கார்த்திக்கை அடிச்சா எப்படி கார்த்திகா இவரோட சேர்ந்து வாழ்வாள் என்று கேட்டாள் அகிலா. 

அவனை அடிக்குறது தப்பே இல்லை. ஏனா அவன் என் ப்ரென்ட் லைஃபை ஸ்பாயில் பண்ணிருக்குறான் என்று கோபமாக கூறினான் அஸ்வந்த். 

அகிலா அதற்கு மேல் பேச முடியாமல் சென்று விடலாம் என்று திரும்ப, ஒன் மினிட் சிஸ்டர் என்றான் ஆகாஷ். 

அகிலா அவனை முறைத்து பார்க்க, நான் என் குழந்தையை பார்க்கல. அதுனால ஈவினிங் என்னோட கம்பெனி கொடுங்க என்றான். 

அகிலா தன் கால்களை தரையில் உதைத்து விட்டு சென்றாள். 

நண்பர்கள் இருவரும் அவளின் சிறு பிள்ளை தன கோபத்தில் குலுங்கி சிரித்தனர். 

என்ன டா உன் மச்சினிச்சிக்கு அவனை ரொம்ப புடிக்கும் போலயே. பார்த்தாலே தெரியுது. அவன் என்கிட்டே மூக்குல பன்ச் வாங்குனதும் துடிச்சு போய் அவனை பிடிக்கிறாள் என்று சிரித்தான் ஆகாஷ். 

உங்க ஜோடியை சேர்த்து வச்சிட்டு அப்பறமா இந்த ஜோடியை வேற நான் சேர்த்து வைக்க வேண்டியது இருக்குது. ஒரு பெரிய பொறுப்பு என் தலையில இருக்கு மச்சான் என்றான் அஸ்வந்த். 

ஆகாஷின் சிரிப்பு நொடியில் மறைந்து போனது. நீ அபிராமியோட சந்தோசமா இருக்குறியா? என்று கேட்டான். 

 

அஸ்வந்த் மௌனமாகி விட்டான். 

சொல்லு மச்சான். சுகன்யா இறந்தது நீ சொல்லி என்னாலையே நம்ப முடியல. அப்படி இருக்கறப்ப உன்னாலயும் தாங்கிக்க முடியாதுனு எனக்கு தெரியும். இருந்தாலும் உன்னைய நம்பி ஒரு பொண்ணு வந்துருக்குறாள் அதான் கேட்டேன் என்றான் ஆகாஷ். 

சந்தோசமா இருக்க முயற்சி பண்றேன் மச்சான். அவளை பார்க்கும் போது எனக்கு சுகன்யா ஞாபகம் தான் அதிகமா வருது. சுஜித்தை நல்லா கவனிச்சிக்குறாள். அவளுக்கு ஒரு குறையும் வைக்க கூடாதுனு தான் நானும் நினைக்குறேன். ஆனால், அவளோட சேர்ந்து குழந்தை மட்டும் பெற்றுக்க மாட்டேன் மச்சான் என்ற நண்பனை அதிர்ச்சியாக பார்த்தான் ஆகாஷ். 

அஸ்வந்த் நண்பனின் முகத்தை பார்க்கவே சங்கடப்பட்டான். 

என்ன டா அசால்ட்டா குழந்தை பெற்றுக்க  மாட்டேன்னு சொல்லுற. குழந்தை பெற்றுக்கு மாட்டியா? இல்லை குழந்தை கொடுக்க மாட்டியா? மும்பையில என்கிட்டே அபிராமியை பற்றி என்ன சொன்ன? ஏற்கனவே குழந்தை பொறக்காதுனு தப்பா திரிச்சி பேசி தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்துச்சுனு சொன்னியா இல்லையா டா? என்று கோபமாக கேட்டான் ஆகாஷ். 

 

அஸ்வந்த் மௌனமாக இருந்தான். நண்பனின் கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், குற்ற உணர்ச்சி அவன் மனதை கொன்றது. 

 

ஊர்க்காரங்க சொன்னது உண்மையாகாதா மச்சான் என்று கேட்டான் ஆகாஷ். 

மச்சான் ப்ளீஸ் டா என்னைய எதும் கேட்காத. நான் சாகுற வரைக்கும் அபி எனக்கு துணையா வேணும் டா என்றான் அஸ்வந்த். 

 

ஆகாஷ்ஷுக்கும் அவன் நிலைமை புரிந்தது. நண்பன் பயத்தில் தான் அபிராமியிடமிருந்து விலகி இருக்கிறான் என்று புரிந்து கொண்டான். 

மச்சான், ஈவினிங் உன் மச்சினிச்சி வருவாளா? என்று சந்தேகமாக கேட்டு பேச்சை அகிலாவின் பக்கம் மாற்றி விட்டான் ஆகாஷ். 

வருவாள் டா. வராமல் எங்க போய்ட போறாள்? என்றான் அஸ்வந்த். 

****

கார்த்திக் பைக்கை வேகமாக ஓட்டி கொண்டு தன் வீட்டிற்கு வந்தான். 

பைக் சத்தம் கேட்டு அவனின் தாய் கிட்சனில் இருந்து வெளியே வந்தார். இந்த நேரம் வீட்டுக்கு வர மாட்டானே என்று யோசித்தவர், அப்பொழுது தான் அவனின் முகத்தை பார்த்தார். 

 

அவனின் குட்டி மூக்கு உடைந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. 

அச்சோ கார்த்திக்! என்னாச்சிப்பா உனக்கு என்று அந்த தாய் குலம் மகனின் ரத்தத்தை பார்த்து துடித்து தான் போனார். 

 

தாயின் பதற்றமான குரலிலும்,  அண்ணனுக்கு என்னாச்சி என்று பதற்றத்தோடும் அறையிலிருந்து வெளியே வந்தாள் கார்த்திகா.

கார்த்திக் வேகமாக வீட்டிற்குள் வந்தவன், கையில் வைத்திருந்த தன் அலுவலக பேக்கை வீட்டிற்குள் விசிறி அடித்தான். 

அது சுவற்றில் பட்டு தரையில் வழுக்கி கொண்டு விழுந்தது. 

அவனின் கோபம் கண்டு தாயும் தங்கையும் அவனை மாறி மாறி பார்த்தனர். 

 

அலுவலகத்தில் அனைவர் முன்னும் அசிங்கப்பட்டது வேறு அவனால் இன்னும் மறக்க முடியவில்லை. 

என்னாச்சி ப்பா? பயத்தோடு கேட்டார் அவனின் தாய். 

கார்த்திக் தங்கையை வெறித்தான். 

அவள் பயத்தில் சுவற்றில் பல்லி போல் ஒட்டி நின்றாள். எதற்காக அண்ணன் இப்படி நம்மை பார்க்கிறார் என்று யோசித்தாள். 

அந்த ஆகாஷ் வந்துருக்குறான் ம்மா என்றான் கார்த்திக். 

கார்த்திகாவின் கண்கள் பெரிதாக விரிந்தது. 

ஆகாஷ்னி அப்பாவா? என்று கேட்டார் அவனின் தாய். 

கார்த்திக் தாயை கொலை வெறியோடு முறைத்து பார்த்தான். 

அப்போ காலையில் நான் பார்த்தது அவரையா? என்று மனதோடு கேள்வி கேட்டாள் கார்த்திகா. 

அவன் அகிலாவை கல்யாணம் பண்ணிக்க போறானாம் என்று கூற அவனின் தாய் கனி அதிர்ந்து விட்டார். 

கார்த்திகா சுவற்றோடு இன்னும் நெருங்கி நின்றாள். மனம் ரணமாக வலித்தது. 

பெற்ற அப்பன் பேச்சை கேட்டு உன் வாழ்க்கையை நீயே அழிச்சிக்கிட்டியே டி பாவி என்று மனதிற்குள் கார்த்திகாவை திட்டினார் கனி. 

அகிலானா, அன்னைக்கு வீட்டுக்கு போய் ஒரு பொண்ணை அடிச்சிட்டு வந்திங்களே அவளா ப்பா என்று கேட்டார்.

 

ஆமா ம்மா என்றான். 

அந்த பொண்ணுக்கு தான் அவரு கார்த்திகா புருஷனு தெரியுமே? அந்த பொண்ணு எப்படி ப்பா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாள் என்று குழப்பத்தோடு கேட்டார் கனி. 

அண்ணனும் தாயும் பேசுக்கொண்டிருக்கும் அகிலாவை பற்றி கார்த்திகாவுக்கு தெரியவில்லை. 

ஆனால், ஆகாஷ்ஷுக்கு திருமணமாக போகின்றது என்று அண்ணனின் வாயால் கேட்டதும் அவளுக்கு அழுகை வந்தது. காலையில் நாம் அவரை ஒரு பெண்ணுடன் பார்த்தது போல் இருந்தது. அப்போ அண்ணனும் அம்மாவும் சொல்லுற பொண்ணு அவங்க தானா என்று நினைத்தவள் விம்மினாள். 

அவளின் விம்மலில் கார்த்திக் அவளை தீயாக முறைத்தான். அண்ணனின் கண்களில் தெரிந்த கோபத்தில் அவளின் அழுகை இன்னும் அதிகமாகியது. 

அவளின் அழுகை குரலை காது கொடுத்து கேட்க முடியாதவன், படிக்க வேண்டிய வயசுல ஒருத்தனை நம்பி ஓடி போய் வாழ்க்கையை தொலைச்சிட்டு இப்போ கண்ணை கசக்குறியா? என்று கேட்டவன் அவளை அடிக்க பாய்ந்தான். 

 

பாய்ந்த வேகத்தில் அப்படியே நின்று விட்டான். பயத்தில் கண்களை மூடி நின்ற கார்த்திகா இன்னும் அண்ணனின் கரம் நம் மேல் விழவில்லை என்று விழிகளை திறந்தாள். 

 

கார்த்திக் பார்வை சென்ற இடத்தில் ஆகாஷ்னி நின்றிருந்தாள். 

மாமா என்று உதடு குவித்து நின்றது அந்த பூக்குவியல். 

 

தன் தாயை அடிக்க தான் மாமா கை ஓங்கினார் போல என்று அந்த குட்டி குழந்தைக்கும் தெரிந்து விட்டது போலும். 

 

அது உதட்டை குவித்து, மாமா என்று அழுதது.

கார்த்திகா அழுது கொண்டே அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள். 

கனி தன் பேத்தியின் அழுகையை சமாதானம் செய்தார். 

கார்த்திக் உச்சக்கட்டமான கோபத்தில் தன் கைகளை ஓங்கி சுவற்றில் குத்தி கொண்டான். 

வீட்டிற்குள் இருக்கவே கடுப்பாக இருக்க, தன் பைக்கில் மறுபடி வெளியே சென்று விட்டான். 

****

மாலை நேரம் வந்து விட்டது. ஆகாஷ் அகிலாவின் இருக்கையின் அருகில் நின்றான். 

தன் அருகில் நிழல் ஆடுவது போல் இருக்க, அகிலா நிமிர்ந்து பார்த்தாள். 

மிஸ் அகிலா வாங்க கிளம்புவோம் என்று மரியாதையோடு அவன் அழைக்க, 

மிஸ்டர் ஆகாஷ் எனக்கு இன்னும் ஒர்க் பெண்டிங் இருக்குதே என்று வேண்டும் என்றே பொய் கூறினாள் அகிலா. 

எனக்கும் கொஞ்சம் ஒர்க் பெண்டிங்ல தான் இருக்குது என்ற ஆகாஷ், தன் கை விரல்களை இறுக்கி, ” யாரையாவது மூக்குலயே குத்தணும் போல இருக்குது ” என்று அகிலாவை பார்த்து கூறினான்.

 

ஹான் ப்ரோ ஒர்க் கம்ப்ளீட் என்று எழுந்தாள் அகிலா. 

ஆகாஷ் தன் வாய்க்குள் சிரித்து கொண்டான். 

இருவரும் கிளம்பினர். 

***

இவ்ளோ நேரமாயிட்டு பையன் இன்னும் வீட்டுக்கு வரல. அப்போவே கோபத்தோட கிளம்பி போனான். இன்னும் வரலையே என்று சிறு குழந்தையை தொலைத்தது போல் கார்த்திக்கை தேடினார் கனி. 

கார்த்திகாவும் அண்ணன் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று தாய் கூறியதில் வீட்டின் ஹாலிலேயே அண்ணனுக்காக காத்திருந்தாள். 

பைக் ஒன்று வீட்டிற்குள் வரும் சத்தம் கேட்டது. கார்த்திகாவும் கனியும் வீட்டிற்கு வந்தவர்களை பார்த்து அதிர்ந்து நின்றனர்.

வந்தது கார்த்திக் இல்லை. அதற்கு பதிலாக ஆகாஷ்ஷும் அகிலாவும் வந்தார்கள்.

 

ஆகாஷ்ஷை பார்த்த கார்த்திகா உறைந்து நின்றாள். வெகு நாட்கள் கழித்து அவனை முழுதாக பார்க்கிறாள். 

அவனின் உடல் சற்று மெலிந்திருந்தது.  ஆங்காங்கே அவனின் தாடியில் குட்டி குட்டி வெள்ளை முடிகள் முளைத்திருத்தது. 

இவள் அவனை இன்ச் இன்ச்சாக பார்க்க, அவன் ஹாலில் இருந்த சோஃபாவில் ஒரு காகிதத்தை தூக்கி போட்டான். 

 

கனி அவனை பார்த்து கொண்டே அந்த பேப்பரை கையில் எடுத்தார். அதில் என்ன எழுதி இருக்கிறது என்று அவருக்கு புரியவில்லை. 

கார்த்திகாவிடம் வந்து பேப்பரை நீட்டினார். 

கார்த்திகாவின் இதயம் பட படவென்று துடித்தது. கைகள் நடுங்கின. 

சைன் பண்ணு என்றான் ஆகாஷ். 

அது என்ன பேப்பர் தம்பி என்று கேட்டார் கனி. 

உங்க பொண்ணை அதுல சைன் பண்ண சொல்லுங்க. அப்போ தான் எங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் மேரேஜ் ஆகும் என்று அகிலாவின் தோளில் கை போட்டு பதில் கூறினான் ஆகாஷ். 

கனியின் விழிகள் குளமானது. மகளை திரும்பி பார்த்தார். அவள் கைகள் நடுங்க நின்றிருந்தாள். 

சீக்கிரம் என்றான் ஆகாஷ். 

அகிலா கார்த்திகாவை பார்த்தாள். ஒரு சைன் பண்றதுக்கு உனக்கு இவ்ளோ நேரமா என்று கேட்டாள் கோபமாக. 

கார்த்திகா இப்பொழுது தான் அகிலாவின் முகத்தை தெளிவாக பார்த்தாள். எங்கோ பார்த்தது போல் தெரிந்தது. ஆனால், எங்கு பார்த்தோம் என்று ஞாபகம் வரவில்லை. 

உங்க பையன் வீட்டுல இல்லை போல என்று சோஃபாவில் சாதாரணமாக அமர்ந்தான் ஆகாஷ். 

அவனை அடி பட்ட பார்வை பார்த்தாள் கார்த்திகா. 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page