அத்தியாயம் 37

அகிலாவின் இதழ் மென்மையில் கார்த்திக் சற்று கிறங்கி தான் போனான். 

இந்த அணைப்பும், முத்தமும் அவனுக்கு இந்நேரம் தேவைப்பட்டது. அவளை தன்னோடு இறுக்கி தனக்குள் புதைத்து கொண்டு, அவளின் மென்மையான இதழில் சற்று வன்மையை கூட்டினான் இந்த கள்ள பையன். 

ஆஹ்…. டேய் பொறுக்கி என்ற அகிலா,  அவனின் இறுக்கமான பிடிக்குள் இருந்து திமிறினாள். 

என்னை விடு டா. ஆறுதல் சொல்லலாம்னு நினச்சா” நீ என்ன டா பண்ற” என்று கேட்டு அவனின் திண்ணிய மார்பில் ஒரு அடியை கொடுத்தாள் அகிலா. 

அப்போ நீ ஆசையா எனக்கு முத்தம் கொடுக்கலையா அகி என்று கேட்டான் கார்த்திக். 

போடா பொறுக்கி என்ற அகிலா அவனை பார்க்காது திரும்பி கொண்டாள். 

அவளை பின்னோடு அணைத்து கொண்ட கார்த்திக்,  அவளின் காது மடலில் முத்தம் வைத்தான். ஐ லவ் யூ அகி என்றான். 

அகிலாவின் உதடுகள் அவனின் இரும்பு உதடுகள் பட்டு நன்றாக சிவந்து இருந்தது. நான் சொல்ல மாட்டேன் என்றாள் அகிலா. 

ஏன்? என்று அவனின் காதோடு கிசு கிசுத்தான். 

ஏனா என்னோட லிப்ஸ்ஸை நீ கடிச்சிட்ட. எனக்கு வலிக்குது என்றாள் வெட்கத்தில் சிவந்து. 

அவளை தன் முன் திருப்பி, அவளின் இடையை இறுக்கி பிடித்து தன் உதடுகளால் மென்மையான முத்தத்தை அவளுக்கு வழங்கினான்  கார்த்திக். 

****

நடு நிசி இரவு மணி பன்னிரண்டை தாண்டியது. 

அஸ்வந்த்தின் வீடு முழு இருட்டாக இருக்க, அனைவரும் நிம்மதியான தூக்கத்தில் இருந்தனர். 

திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட, அபிராமியின் முகத்தில் முத்து முத்தான வியர்வை துளிகள் பூத்தது. 

மூச்சு விட சிரமப்பட்டாள் அபிராமி. 

மின் விசிறி மின்சாரம் இல்லாமல் அதனின் வேலையை நிறுத்தி விட்டதால் காற்று இல்லாமல் அபிராமி லேசாக கண் விழித்தாள். 

கண் முன் கும்மிருட்டு தவிர வேறு எதுவும் அவளின் கண்களுக்கு புலப்படவில்லை. 

அபிராமி அந்த இருட்டிலும் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். திடீரென்று எதோ ஒரு உருவம் அவளின் அருகில் வந்து நின்றது. 

 

கும்மிருட்டிலும் அந்த உருவம் அபிராமியின் கண்களுக்கு நன்றாக தெரிந்தது. அந்த உருவம் ஒரு கூரிய கத்தி ஒன்றை எடுத்து சுஜித் துயில் கொண்டிருக்கும் தொட்டிலை நெருங்கியது. 

அபிராமி விருட்டென்று துள்ளி விழுந்தாள். அந்த உருவம் கூரிய கத்தியை எடுத்து சுஜித்தின் தொட்டிலுக்குள் கத்தியை செலுத்தும் நொடி, டேய் என்று பாய்ந்து வந்து அந்த உருவத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளினாள் அபிராமி. 

ஆஹ்….. என்று இடுப்பு உடைந்து வலியில் அலறினான் அஸ்வந்த். 

மின்சாரம் வீட்டிற்குள் நொடியில் பரவ, அஸ்வந்த் தலைகீழாக தரையில் கிடந்தான். 

அச்சோ….. என்னங்க என்று தான் துடித்து போய் அபிராமி அவனை எழுப்ப, சங்கரும் பாரிஜாதமும் கல கலவென்று சிரிக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தாள். 

பாரிஜாதம் கையில் ஒரு கேக் பெட்டியோடு நின்று கொண்டு, கீழே விழுந்து கிடக்கும் மகனின் கோலத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்தார். 

அபிராமி,  மாமனாரையும் மாமியாரையும் பார்த்து புரியாது விழித்தாள். 

ஹாப்பி என்று சங்கர் வாய் திறக்க, அப்பா என்று கத்தினான் அஸ்வந்த். 

சரி ப்பா நீயே சொல்லு என்று அவர் வாயை மூடி கொண்டார். 

அஸ்வந்த் தரையில் விழுந்தாலும் மாஸாக எழுந்து ஸ்டைல் காட்டினான். 

ஹாப்பி பர்த்டே அபி என்று அவளின் கரத்தை பிடித்து குலுக்கினான். 

 

அபிராமிக்கு இப்பொழுது தான் ஞாபகம் வந்தது இன்று தன்னுடைய பிறந்தநாள் என்று. அதற்காக கணவன் காட்டிய மாஸ் என்ட்ரியும் பிடித்து இருந்தது போலும் அவளுக்கு. 

இவ்ளோ கஷ்டப்பட்டு மாஸ் என்ட்ரி கொடுக்கணுமாங்க என்று கிண்டல் செய்தாள். 

நீ வேற ஏன் அபி என்று குழந்தை போல் சிணுங்கினான் அஸ்வந்த். 

அபி கேக் வெட்டு ம்மா என்றார் பாரிஜாதம். 

டீப்பாயில் கேக் வைத்ததும், அஸ்வந்த் தான் கொண்டு வந்த கூரிய கத்தியை எடுத்து அபிராமியிடம் கொடுத்தான். 

அபிராமி களுக் என்று மீண்டும் ஒரு சிரிப்பை சிரித்து விட்டு, கேக் கட் பண்ணி குரங்கு வித்தை காட்டிய தன் கணவனுக்கு முதலில் ஊட்டி விட்டாள். 

 

அஸ்வந்த் அவளிடம் வாங்கி விட்டு அதே கேக்கில் அவளுக்கும் ஊட்டினான். 

சங்கரும் பாரிஜாதமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அர்த்தப் புன்னகையை உதிர்த்தனர். 

மாமனார் மாமியாருக்கும் அபிராமி கேக் ஊட்டி விட, அவர்கள் மறுக்காமல் அதை வாங்கி கொண்டு பெண்ணவளுக்கு அன்பு முத்தங்களை வழங்கினர். 

அவர்களின் கண்களுக்கு அபிராமி ஒரு தேவக் கன்னிகையை போல் தெரிந்தாள். தன் மகனின் வாழ்க்கையை மீட்டு, ஒரு அழகான வாழ்க்கையை அவனுக்கு வழங்கியது போல் தான் எப்பொழுதும் இவர்கள் இருவரும் அவளை பார்த்தனர். 

அபி நான் என் பேரனை எங்க அறைக்கு எடுத்துட்டு போறேன் ம்மா. இல்லைனா இந்த திருட்டு பையன் பொம்மை கத்தியை வச்சி என் பேரனையும் உன்னையும் பயமுறுத்துவான் என்று பாரிஜாதம் தூங்கி கொண்டிருக்கும் சுஜித்தை அள்ளி கொண்டு சென்றார். 

அவர்கள் இருவரும் அறையை தாண்டி செல்லும் வரை காத்திருந்த அபிராமி கட்டிலில் விழுந்து புரண்டு புரண்டு சிரித்தாள். 

அவளுக்கு இன்னும் தரையில் விழுந்து கிடந்த அஸ்வந்த்தின் உருவம் மனக்கண்ணில் வந்து போக, அவளால் சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. 

அஸ்வந்த் கோபமாக தன் பற்களை கடித்தான். தன்னை நினைத்து தான் சிரிக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்து விட்டது போலும். 

உன் சிரிப்பை நிறுத்து டி. இல்லைனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று கோபத்தில் தன் பற்களை கடித்து கொண்டு கூறினான் அஸ்வந்த். 

 

அபிராமி முகத்தை பாவமான நாய் குட்டி போல் வைத்து கொண்டு கட்டிலில் இருந்து இறங்கி எழுந்து நின்றாள். 

அவனின் கோபமான முகம் கூட அவளுக்கு சிரிப்பை தான் வரவழைத்தது போலும். இரு கைகளாலும் வாயை பொத்தி கொண்டு சிரித்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது. 

இன்னும் சிரிக்கிறியா டி நீ? என்றவன் அவளின் கை பிடித்து இழுத்தான். 

அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலே வந்து விழுந்தாள் அபிராமி. 

அஸ்வந்த் அவளின் நெருக்கத்தில் தடுமாறி போனான். ஏனோ இந்த கன்னிகை இன்று இரவு பேரழகியாக தெரிந்தாள் அவனின் கண்களுக்கு. 

இந்த வாய் தான சிரிச்சிது என்றவன் அவளின் இதழை வன்மையாக கவ்வினான். 

அபிராமி அவனின் வன்மையில் மூச்சுக்கு சிரமப்பட ஆரம்பித்தாள். 

ஜெல்லி மிட்டாய் போன்று இருக்கும் அவளின் இதழை விட மனமில்லாமல் மென்மையாக அவளின் இதழை உறிஞ்சி கொண்டிருந்தான் அஸ்வந்த். 

 

அவனின் வன்மை குறைந்து மென்மையை அவன் கையில் எடுக்க, அபிராமியோ அந்த முத்தத்தில் தானும் கலந்து கொண்டாள். 

பெண்மையின் தேகத்தில் உணர்வுகள் என்னும் பூ அதிகமாக பூக்க தொடங்க, அவனின் நெஞ்சில் சாய்ந்து கண் மூடி கிறங்கி தான் போனாள் பாவை. 

அவளின் விழிகளில் மோகத்தை கண்ட அஸ்வந்த் அவளின் இதழில் இருந்து கீழ் இறங்கி கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளின் வாசத்தை தன் நாசியில் ஏற்றி கொண்டான். 

 

அவளை முல்லை கொடி போல் அள்ளி கட்டிலில் படர்த்த, அவனின் திண்ணிய தோள்களை பிடித்து தன் அருகில் இழுத்தாள் அபிராமி. 

முல்லை கொடியை சுற்றும் தேனியாக மாறி போனான் அஸ்வந்த். 

 

அவளின் கருங்கூந்தலில் தன் முகத்தை புதைத்து கொண்டான் அஸ்வந்த். 

அபிராமி அவனின் திண்ணிய மார்பை வருடி கொடுக்க, அவளின் ஆசையை தன் ஆசையாய் எடுத்து கொண்டு அவளை முழுமையாக எடுத்து கொண்டான் அஸ்வந்த். 

அன்று இரவு காதலும் காமமும் சேர்ந்து இருவரையும் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றன. 

 அபிராமியின் மேனியை தன் உதடுகளால் சிவக்க வைத்தான் அஸ்வந்த். 

அவளின் பஞ்சு மிட்டாய் கன்னங்களில் கோடி முத்தம் கொடுத்தாலும் போதாது என்பது போல் அவளின் கன்னங்களை கடித்து தின்றான். 

அவளின் மேனி முழுதும் தன் விரல்களால் கோலம் போட்டான். 

அங்கு ஒரு அழகான கூடல் அரங்கேறியது. அஸ்வந்த்தின் உயிரணுக்கள் பாய்ந்து கொண்டு அபிராமியின் கருவறையை நோக்கி வேகமெடுத்தன. 

குழந்தை வேண்டாம். சுஜித் ஒருவனே போதும் என்று கூறிய நாயகன் இன்று இரவு மட்டும் அந்த விஷயத்தை மறந்து விட்டான் போலும். 

அபிராமி கடைசி துளி கண்ணீரை தன் கன்னங்களில் இறக்கினாள். 

****

இங்கு கார்த்திக்கின் வீட்டில் கார்த்திகாவின் அறையில்…. 

வெற்றுடல் மேனியாய் இருந்தனர் ஆகாஷும் கார்த்திகாவும். 

கார்த்திகா ஆகாஷின் தோளில் தலை சாய்த்து இருந்தாள். 

சாரி மாமா. நான் வேணும்னு பண்ணல என்று இரவு முழுதும் ஒரே மன்னிப்பு புராணம் தான் இங்கு நடைபெற்றிருக்குமோ? 

நீ இன்னும் பால் டப்பாவா தான இருக்குற. அதான் சரி எது? தவறு எதுன்னு? உனக்கு யோசிக்க தெரியல என்றான் ஆகாஷ். 

சத்தியமா எனக்கு தெரியாது மாமா. அத்தையும் மாமாவும் என்றவள் சற்று வார்த்தையை நிறுத்தி ஆகாஷை பார்த்தாள்..

சொல்லு என்றான் ஆகாஷ். 

அத்தையும் மாமாவும் இல்லைனு எனக்கு தெரியாது என்றாள். 

அவங்களுக்கு என்ன சின்ன வயசா? நீ வீட்டுக்கு வரும் போதே அவங்க எண்பதை தாண்டிட்டாங்கனு உனக்கு தெரியாதா? என்று கேட்டான். 

கார்த்திகா மௌனமானாள். கணவனை இவ்வளவு காலம் தனிமையில் விட்டு விட்டதை எண்ணி தவித்தாள். 

இதுக்கு தான் நான் உன்னைய பால் டப்பானு சொல்லுறேன் என்றான் ஆகாஷ். 

ஆனால், உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. உங்க மனசுக்கு வேற ஒரு நல்ல பொண்ணு உங்களுக்கு கிடைச்சிருக்கணும் என்று சோகமாக கூறினாள் கார்த்திகா. 

 

ம்ம்ச் உன்னைய தவிர வேற யாரும் எனக்கு பொருத்தமா இருக்க மாட்டாங்க பால் டப்பா என்றான் ஆகாஷ். 

என்னைய இப்படி பால் டப்பாவா கடவுள் படைச்சதுக்கு காரணம்,  நான் உங்களுக்கு கிடைக்கணும் தான் என்றாள் கார்த்திகா. 

அவளின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தான் ஆகாஷ். 

புது வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்றான். 

நீங்க ஒரு தேவ தூதன். அதான் கடவுள் எனக்காக உங்கள அனுப்பி வச்சிருக்காரு என்றாள் அவள். 

இருவரும் இவ்வளவு நாள் பிரிந்து இருந்த ஏக்கங்களை இந்த ஒரு இரவில் தீர்த்து கொள்ள ஆயத்தமாகி விட்டனர். 

ஆனால், இவர்களுக்கு புரியவில்லை போலும். இருவரின் ஏக்கங்களையும் தீர்த்து கொள்ள ஒரு இரவு அல்ல ஒரு யுகமே பற்றாது என்று. 

****

கார்த்திக் எப்பொழுதும் போல் இல்லாமல் புது உற்சாகத்தோடு அடுத்த நாள் அலுவலகம் சென்றான். 

அங்கு அகிலாவை காணவில்லை என்றதும் அவனின் புது உற்சாகமும் வடிந்து போனது. 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page