கார்த்திக் அலுவலகம் சென்று அகிலாவை தேடினான். அவள் இன்று வந்திருக்கவில்லை.
இப்பொழுது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. இன்று அக்காவின் பிறந்தநாளுக்கு அக்கா வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறினாளே என்று சிந்தித்தவன், அன்றைய நாளை சிரமப்பட்டு கடத்தினான்.
எப்பொழுதும் அவன் கண்களில் அகிலாவின் பிம்பம் தெரிந்து கொண்டே இருக்கும். இன்று தெரியவில்லையே என்ற ஏக்கம் அதிகமாக இருந்ததினால் அந்த நாளை சிரமப்பட்டு தள்ளினான்.
****
அடுத்த நாள் அதே போல் அலுவலகம் வந்தவன் அகிலாவை தான் முதலில் தேடினான். இன்றும் அவளை பார்க்க முடியவில்லை.
கார்த்திக்கின் முகம் இறுக்கமாக மாறியது.
எப்பொழுது கதிரவன் மறைந்து மாலை வரும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவன், மாலை நேரம் நெருங்க ஆரம்பித்ததும் பைக்கை முறுக்கி கொண்டு சென்றது என்னமோ அகிலாவின் வீட்டிற்கு தான்.
அகிலாவின் வீட்டு முன் பைக்கை நிறுத்தி விட்டு இரண்டு நிமிடங்கள் மௌனமாக நின்றான். பின் விறு விறுவென்று வீட்டிற்குள் நுழைந்தான்.
கதவு திறந்தே இருந்தது. வீடு வெறுமையாக இருந்தது. வீட்டில் ஆள் இருப்பது போல் தோன்றவில்லை. ஆனால், கிட்சனில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது.
கார்த்திக் மௌனமாக நின்றிருந்தான். அவன் நின்ற இடத்தில் நேர் எதிரில் இருந்தது அகிலாவின் அறை. முன்பு ஒரு நாள் இதே போல் தன் தங்கையை காணவில்லை என்றதும் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து அகிலாவின் அறை கதவை திறந்து அவளை வெளியே இழுத்து வந்தது ஞாபகம் வர, தன்னையே மனதிற்குள் திட்டி கொண்டு நின்றான் கார்த்திக்.
ஆஹ்…. என்ற அகிலாவின் அறைக்குள் இருந்து லேசான முனங்கல் சத்தம்.
கார்த்திக் எதையும் யோசிக்காமல் அகிலாவின் அறையை திறந்து உள்ளே சென்றான். அங்கே அந்த பஞ்சு மெத்தையில் தடித்து சிவந்து போன உடம்போடு அகிலா முனங்கி கொண்டு படுத்திருந்தாள்.
கார்த்திக் உடனே அவளின் அருகில் சென்று அவளின் முகத்தை அள்ளினான். அகி என்ன டி ஆச்சு? என்று அவளின் மேனியை பார்த்து அதிர்ந்து கேட்டான். அவனின் விழிகள் கோரமாக சிவந்து இருந்தது.
திடீரென்று வீட்டிற்குள் வந்து அவளின் முகத்தை தாங்கி கொண்டிருக்கும் கார்த்திக்கை பார்த்ததும் அவளுக்கு திகிலாக இருந்தது.
கார்த்திக் நீ எப்படி இங்கே? என்று கேட்டாள்.
உன்னைய ரெண்டு நாளா பார்க்கலயே டி என்றான் சோகமான குரலில்.
உடம்பு முடியல என்றாள் அகிலா.
பொய் சொல்லுற நீ. ஒழுங்கா என்னாச்சுன்னு சொல்லு என்று கேட்டான்.
நீ பார்க்ல வச்சி முரட்டு தனமா என் லிப்ஸை கடிச்சி வச்சதை அப்பா பார்த்துட்டாரு போல. வீட்டுக்கு வந்து பெல்ட் வச்சி என் தோலை உறிச்சிட்டாரு என்று கூறினாள்.
அடிச்சாரா? என்று கேட்டவனுக்கு மனம் வலித்தது. பூ போல இருந்த மேனியை இப்படி ரத்த களறி ஆக்கி விட்டாரே என்று அவளின் தந்தையை மனதிற்குள் திட்டினான்.
அவளின் முகத்தை தவிர, உடம்பின் அனைத்து இடங்களும் சிவப்பாக ரத்தம் கட்டி போய் இருந்தது. அதை கண்டவனின் விழிகளும் சிவந்தது.
அந்த நேரம் சரியாக, ” கௌரி என்று அழைத்து கொண்டு வந்தார் கல்யாண் “.
கார்த்திக் அவரின் குரலை கேட்டதும் அகிலாவை விட்டு விட்டு ஹாலுக்கு வந்து அவரின் சட்டை காலரை பற்றினான்.
இவன் எப்பொழுது வீட்டிற்குள் வந்தான் என்பது போல் கௌரி திகைத்து நின்றார்.
தம்பி சட்டையை விடு ப்பா. கல்யாண் பொறுமையாக கூறினார் அவனிடம்.
கார்த்திக் அவரின் சட்டை காலரில் இருந்து கை எடுத்தான். அகியை ஏன் இப்படி அடிச்சிருக்கீங்க? அவள் உடம்பு தாங்குமா? அதுவும் பெல்ட்டால என்று கத்தினான்.
அகிலா மெதுவாக அறையை விட்டு எழுந்து வந்தாள்.
கார்த்திக் என்று அவள் அழைத்த நேரத்தில், ” அம்மாவை அழைச்சிட்டு வாங்க தம்பி வீட்டுல பேசுவோம் ” என்றார் கல்யாண்.
அகியை இப்படி போட்டு அடிச்சிருக்கிறீங்க பர்ஸ்ட் எனக்கு பதில் சொல்லுங்க. அப்பறம் எங்க அம்மாவை அழைச்சிட்டு வரேன் என்றான் கார்த்திக்.
அட குரங்கு பயல என்று புலம்பினாள் அகிலா.
கௌரி சிரித்து கொண்டவர், “தம்பி அம்மாவை அழைச்சிட்டு வாங்க. உங்களுக்கும் அகிலாவுக்கும் கல்யாணம் பண்றது பற்றி பேசலாம் என்றார் கௌரி”.
கார்த்திக் அவர்களின் வார்த்தையில் உறைந்து நின்றான்.
அகிலா அவனின் அருகில் வந்து அவன் மூக்கில் மேல் கை வைத்து சுவாசம் வருகிறதா என்று செக் செய்தாள்.
கார்த்திக் அகிலாவை பார்த்தான்.
அப்பா பேசுறது நிஜம் தான் என்றவள் அவனை அழைத்து கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.
அந்த பையனுக்கு நான் அகிலாவை அடிச்சிட்டேன்னு எவ்ளோ கோபம் வருது பார்த்தியா? என்று கௌரியிடம் கேட்டார் கல்யாண்.
ஆமாங்க என்றவரும் தன் புது மருமகனுக்கு காஃபி தயாரிக்க சென்று விட்டார்.
இங்கு கார்த்திக்கை அறைக்குள் அழைத்து வந்த அகிலா, நேற்றே அஸ்வந்த் மாமா நம்ப விஷயத்தை வீட்டுல பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டாரு என்றாள்.
உண்மையாவா? அது சரி. சார்க்கு எப்படி தெரியும்? என்று கேட்டான் கார்த்திக்.
ஏன் தெரியாது? எல்லாமே தெரிஞ்சிருக்குது. அதோட மாமா சொன்னதும் அம்மா அப்பாவும் சரி சொல்லிட்டாங்க என்றாள்.
கார்த்திக்கிற்கு சிறகே இல்லாமல் வானத்தில் பறப்பது போல் ஒரு உணர்வு. அவனுடன் அகிலாவும் இணைந்து கொண்டாள்.
****
ஐந்து மாதங்களுக்கு பிறகு…
திடீரென்று ஒரு நாள் அஸ்வந்த்திற்கு ஒரு அழைப்பு வந்தது.
அந்த பக்கம் கேட்ட செய்தியில் அவசரமாக தன் நண்பனை அழைத்து கொண்டு கிளம்பினான் அஸ்வந்த்.
அவன் வந்தது சுகன்யா மருத்துவமனை.
ஆகாஷும் அஸ்வந்த்தும் மருத்துவமனைக்குள் உள்ளே நுழையும் நொடி, ” சார் மேடம் நல்லா தான் இருந்தாங்க. திடிர்னு மயங்கி விழுந்துட்டாங்க என்று ஓடி வந்து கூறினாள்” ஒரு செவிலி.
இந்த மருத்துவமனையில் டீனாக போறுப்பேற்ற பின் அபிராமி ஒரு நாள் கூட தவறாமல் மருத்துவமனை வந்து விடுவாள்.
இன்றும் வழக்கம் போல் வந்திருந்தாள். மேல் தளத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க சென்றவள் தலை சுற்றி கீழே விழுந்து விட்டாள்.
அஸ்வந்த் பதற்றத்தோடு முதன்மையாளர் அறைக்குள் நுழைந்தான். அவன் மனம் முழுதும் அபிராமிக்கு ஒன்றும் நேர்ந்திருக்க கூடாது என்று மட்டும் தான் ஓடியது.
உள்ளே நுழைந்த அஸ்வந்த்தின் கண்களில் அபிராமி சோர்வான முகத்துடன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது தெரிய, உடனே ஓடி சென்று அவளை தோளோடு அணைத்து கொண்டு ” என்னாச்சு அபி? ” என்று கேட்டான்.
அவளை சுற்றி மருத்துவமனை நிர்வாகமே கூடி இருந்தது. அவளின் அருகில் உதட்டை பிதுக்கி கொண்டு நின்றிருந்தான் சுஜித்.
அம்மா கீழே விழுந்துட்டாங்கப்பா என்று கூறினான். இப்பொழுதெல்லாம் நம் சுஜித் நடக்க ஆரம்பித்து விட்டான். அவனுக்கு ஒரு வயது எட்டி விட்டது என்று கூறினால் யாரும் நம்ப விட்டார்கள். அவ்வளவு அழகாக நடப்பான் இந்த குட்டி இளவரசன்.
அவளை சுற்றி இருந்த மருத்துவ நிர்வாகம், ” வாழ்த்துக்கள் சார் ” என்று கோரசாக கத்தி வைக்க, அஸ்வந்த் அவனின் முட்டை விழிகளை உருட்டினான்.
“ஷீ இஸ் ப்ரெக்னெண்ட்” என்று அவளை பரிசோதித்த மருத்துவர் கூற, அஸ்வந்த் அதிர்ச்சியான சிலையாகி தான் போனான் அங்கே.
ஆகாஷின் உதடுகள் அழகாக விரிந்தது. அபி வாழ்த்துக்கள் டா என்று அவளின் கரங்களை பற்றி அவன் கூற, தேங்க் யூ அண்ணா என்று வராத சிரிப்பை வர வைத்து கூறினாள் அபிராமி.
டேய் சுஜித் உனக்கு ஒரு குட்டி தம்பி பொறக்க போறான் டா என்று அவனை தூக்கி கொண்டு வெளியே சென்றான் ஆகாஷ்.
அப்பியா குட்டி தம்பி என்னைய மாறி இருப்பானா மாமா? என்று ஏகத்துக்கும் சந்தோஷத்துடன் அவன் ஆகாஷிடம் அவன் வினவ,
ஆமா டா. உங்க அம்மா வயிற்றுல இருக்குறான் அவன். வளர்ந்து வந்து உன்னோட சண்டை போட போறான் பாரு என்று குட்டி இளவரசனிடம் பேசி கொண்டே சென்றான் ஆகாஷ்.
இங்கே கூடி இருந்த கூட்டம் கலைய, சோர்வான முகத்துடன் இருந்த அபிராமி லேசான கலங்கிய விழிகளுடன் தன் கணவனை ஏறிட்டாள்.
சாரிங்க என்றாள்.
அவளின் சாரி என்ற வார்த்தையில் புரியாது அவளை பார்த்தான் அஸ்வந்த்.
நான் என்னைய ஒழுங்கா கவனிக்காமல் விட்டுட்டேன். ரெண்டு மாசமா பீரியட்ஸ் வரல. இர்ரெகுலர் பீரியட்ஸ்னு நினைச்சி அசால்ட்டா விட்டுட்டேங்க. நீங்க சுஜித் மட்டும் போதும்னு சொன்னிங்க. நான் தான் கவனமா இருந்துருக்கணும். நான் வேணும்னா இதை கலச்சி….. என்று அவள் முழுதாக கூறி முடிக்கும் முன் அஸ்வந்த் அவளின் வாயை பொத்தினான்.
வேணாம் அபி. எதும் பேசாத. ஒரு உயிரை கொல்றது ரொம்ப பாவம். நம்ப இதை பெற்றுக்கலாம். இது நம்ப குழந்தை என்றான் அஸ்வந்த்.
அவனின் வார்த்தையில் குலுங்கி அழுதாள் அபிராமி.
அபி இன்னும் கொஞ்ச நாள் நீ ஒர்க் வர வேணாம். வீட்டுல இரு. நான் உன்னைய பார்த்துக்குறேன் என்றான்.
இந்த இன்பமான செய்தி இரு வீட்டிலும் தெரிவிக்கப்பட, இரு குடும்பத்திற்கும் அவ்வளவு மகிழ்ச்சி. அவர்களின் சந்தோசத்தை வார்த்தையால் கூற முடியாது.
அதுவும் அஸ்வந்த் அவளை விட்டு ஒரு அடி கூட நகர்ந்து செல்ல மாட்டான். அவளை பூ போல் தாங்கினான். அவளின் கைகளில் தன் கையை கோர்த்து கொண்டு தான் சுற்றுவான். தன் உயிரை கொடுத்தாவது பிள்ளையையும் அபிராமியையும் காப்பாற்றி விட வேண்டும் என்று எண்ணினான்.
*****
நாட்கள் அழகாக நகர்ந்தது.
அவர்களின் கருவும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. கரு வளர வளர, அபிராமியின் முகம் பொலிவாக மாறியது. அவளின் புஷ் புஷ் கன்னங்களில் முத்தம் வைத்தான் அஸ்வந்த்.
அப்பா நானும் என்று மற்றொரு கன்னத்தில் முத்தம் வைத்தான் சுஜித்.
அன்றைய நாளில் அழகான தேவதை போல் மிளிர்ந்தாள் அபிராமி.
கைகளில் அடுக்கு அடுக்கான வளையல்கள் குலுங்க தன் பானை வயிற்றை தூக்கி கொண்டு நடந்தாள் அபிராமி.
அவளின் கையை கெட்டியாக பிடித்திருந்தான் அஸ்வந்த்.
அகிலா மணப்பெண்ணாக மேடையில் நின்று அக்காவிற்கு கை காட்டினாள். அவளின் அருகில் மணக் கோலத்தில் நின்றிருந்தான் கார்த்திக்.
இருவரின் திருமணமும் இன்று தான் நடைபெற்றிருந்தது. இரவு வரவேற்பு நம் கார்த்திக்கின் வீட்டில் நடப்பதால் அதில் கலந்து கொண்டனர் நம் நாயகியும் நாயகனும்.
சில மாதங்களுக்கு முன்பே இருவரின் திருமணத்தை பற்றி வீட்டில் பேசி இருந்தாலும், நம் கார்த்திக்கும் அகிலாவும் காதல் பறவைகள் போல் ஊர் சுற்ற ஆசைப்பட்டு இவ்வளவு நாட்கள் காலத்தை கடத்தி விட்டனர்.
கௌரி, கல்யாண், சங்கர், பாரிஜாதம் அனைவரும் மணமேடையில் கீழ் நின்று கதைகள் பேசி சிரித்து கொண்டிருந்தனர்.
அபிராமியின் பானை வயிற்றை பார்த்து கார்த்திகா தன் கணவன் ஆகாஷின் தோளில் இடித்தாள்.
அவன் கார்த்திகாவை பார்த்து நைசாக கண் அடித்தான்.
கார்த்திகா வெட்கத்தில் சிவந்து கொண்டிருந்தாள்.
அங்கு குட்டி தேவதையாக ஆகாஷ்னி, சுஜித்தை அழைத்து கொண்டு மணமேடைக்கு சென்று அங்கு அவர்கள் ஜாலியாக விளையாடி கொண்டிருக்க, அந்த பிஞ்சு மழலைகளின் விளையாட்டை பார்த்து லேசாக கீழ் உதட்டை அழுந்த கடித்தாள் அபிராமி.
அவளின் விழிகள் கலங்கி இருக்க, கைகளும் லேசாக நடுங்க என்னாச்சு அபி? என்று அஸ்வந்த் பதறினான்.
ஒன்னும் இல்லைங்க என்ற அபிராமி அவனின் கை விரல்களை இறுக்கி தான் பிடித்தாள்.
என்னாச்சு அபி வயிறு வலிக்குதா? என்றவனின் கண்களில் இருந்து நீர் கொட்டியது.
மச்சான் என்று அவன் அழைக்கும் நேரம் ஆகாஷ் ஓடி வந்தான்.
கார்த்திக் மேடையில் நின்றிருந்தவன் கீழே இவர்களின் பதற்றத்தை பார்த்து விட்டு ஓடி வந்தான்.
அபிராமிக்கு டெலிவரி பெயின் வந்துருச்சு என்றார் பாரிஜாதம்.
கார்த்திக் உடனே எதையும் யோசிக்காமல் காரை எடுத்து வர, மொத்த குடும்பமும் காரில் ஏறியது.
அஸ்வந்த் அபிராமியை விட்டு விலகாமல் அருகிலேயே இருந்தான்.
ஒன்னும் இல்லை அபி. சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிரலாம் என்றான் அஸ்வந்த்.
அப்பா எனக்கு தம்பி பாப்பா பொறக்க போறாங்களா? என்று ஆசையாக கேட்டான் சுஜித்.
ஆமா. சுஜித் தங்கம் கொஞ்சுறதுக்கு தம்பி பாப்பா வர போறாங்க என்றாள் அகிலா.
அஸ்வந்த்தின் இதயம் தாறுமாறாக துடித்தது.
அன்றும் சுகன்யாவிற்கு இரவு தான் வலி வந்தது. இன்றும் அபிராமிக்கு இரவு தான் வலி வந்துருக்குது என்றவனின் மனம் ஒரு நிலையில் இல்லை.
அவர்களின் சுகன்யா மருத்துவமனைக்கே வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே காரில் வரும் போது கூறிவிட்டதால் அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. அபிராமியை உடனே டெலிவரி வார்டுக்கு அழைத்து சென்றனர்.
அஸ்வந்த் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். அவனின் இதயம் பலமாக துடித்தது.
அபிராமியின் அலறல் சத்தம் அஸ்வந்த்தின் இதயத்தை தாக்கியது.
டேய் மச்சான் என்று கதறினான் அஸ்வந்த்.
ஒன்னும் இல்லை டா. குழந்தைங்க நல்ல படியா பொறக்கும் என்று தன் நண்பனுக்கு ஆறுதல் வழங்கினான் ஆகாஷ்.
கார்த்திக் அகிலாவை பார்த்தான். நமக்கும் குழந்தை பிறக்கும் போது அகி இப்படி தான் அலறுவாளோ என்று இப்பொழுதே அவனுக்கு பயம் வந்து விட்டது.
அகிலா அங்கும் இங்கும் துள்ளி கொண்டிருந்தாள். கார்த்திக் அவளின் அருகில் சென்றான்.
அகி என்று முகத்தை பாவமாக வைத்திருந்தான். அவனின் பாவமான முகத்தை பார்த்த நம் அகிக்கு சிரிப்பு தான் வந்தது.
இதை எல்லாம் எல்லா பொண்ணுங்களும் கடந்து தான் வரணும் பேபி என்றாள் அகிலா.
அபிராமியின் அலறல் சத்தம் கொஞ்சம் மட்டுப் பட்டு இரண்டு பூக்குவியல் தேகங்களின் அழுகை சத்தம் கேட்டது.
அஸ்வந்த் பயத்தோடு நின்றிருந்தான்.
டெலிவரி அறையில் இருந்து இரண்டு பெண் மருத்துவர்கள் வெளியில் வந்தனர்.
இருவரின் கையிலும் ஒவ்வொரு பூங்கொத்துகள் இருந்தன.
வாழ்த்துக்கள் சார். உங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க பொறந்துருக்காங்க என்றனர்.
கௌரியும் பாரிஜாதமும் ஆளுக்கொரு பூக்குவியலை கையில் வாங்கினர்.
ஹை எனக்கு ரெண்டு தங்கச்சி பாப்பா பொறந்துருக்காங்க என்று துள்ளினான் சுஜித்.
அஸ்வந்த் அதே பயத்தோடு மருத்துவரை பார்த்தான்.
டோன்ட் ஒர்ரி சார். தாயும் சேயும் நலம் என்றனர்.
அஸ்வந்த் புதிதாக பிறந்த குழந்தைகளை கூட பார்க்காமல் அபிராமியை பார்க்க தான் ஓடினான்.
சோர்வாக கட்டிலில் படுத்திருந்த அபிராமியை பார்த்ததும் தான் அவனுக்கே நிம்மதி.
தன்னை பார்க்க ஆவலாக வந்த தன் கணவனை பார்த்தவள், அவ்வளவு சோர்விலும், நார்மல் டெலிவரி தாங்க எனக்கு. நான் நல்லா இருக்குறேன். உங்களோட, சுஜித்தோட அப்புறம் ரெண்டு பொண்ணுங்களோட சேர்ந்து இன்னும் நிறைய வருஷத்துக்கு நல்லா வாழுவேன் என்றாள்.
அவளின் பிறை நெற்றியில் முத்தம் வைத்தான் அஸ்வந்த்.
ரொம்ப பயத்துட்டேன் டி என்றவன் அவன் முகம் முழுக்க முத்த தூறல்கள் தான் பொழிந்தான்.
அழுது கொண்டிருக்கும் குட்டி பிஞ்சு மொட்டுகளை தூக்கி கொண்டு வந்தனர் கௌரியும் பாரிஜாதமும்.
தன் கைகளால் தான் பெற்ற குழந்தைகளை வாங்கிய அபிராமி, சுஜித்தை தான் முதலில் தேடினாள்.
அம்மா என்று அவளின் தேடலுக்கு பதில் கொடுத்தான் சுஜித்.
மருத்துவமனை பெட்டில் ஏறி அபிராமியின் அருகில் அமர்ந்து தன் தங்கைகளுக்கு முத்தம் கொடுத்தான்.
அஸ்வந்த் அபிராமியின் அருகில் அமர்ந்து தன் குழந்தைகளை கொஞ்சினான்.
இரு குட்டிகளும் அப்படியே அபிராமியை உரித்து வைத்திருந்தனர்.
மாமா அப்படியே ஒரு போஸ் கொடுங்க என்றாள் அகிலா.
அபிராமி, அஸ்வந்த் அவர்களின் மூன்று குழந்தைகளும் இருக்க அப்படியே அவர்களை ஒரு க்ளிக் எடுத்து கொண்டாள் அகிலா.
இவர்களின் குடும்பம் இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வாசர்களாகிய நீங்கள் இவர்களை வாழ்த்துங்கள்.
முற்றும் ❤️❤️❤️
