அத்தியாயம்-4

அபி  முதல் நாள் காலேஜ் முடிச்சுட்டு கரன் வருவதற்குள் எப்படியாவது பஸ் ஏறிடனும் என வேகமா கல்லூரி கேட் கிட்ட வந்து நின்னுட்டு சுத்தி ஒரு முறை அவன் இல்லை என்பதை  கன்ஃபார்ம் பண்ணிட்டு ரோட்டை பார்த்து திரும்ப அவன் அவளுக்கு முன்பாக நின்று அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

அதைப் பார்த்த அபி பயந்து பின்னால் நகர அவளின் தோழிகள் மேல் இடித்துக் கொண்டு நின்றாள்.

அவளின் செயலில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் “நான் வரத்துக்குள்ள எதுக்கு கிளம்பின என்ன பார்த்துட்டு தானே போகணும்னு சொல்லி இருக்கேன் !” என்றான் கரண் கோபமான குரலில். 

“சீனியர் நீங்க அப்படி ஒன்னும் சொல்லல ஐ லவ் யூ மட்டும் தான் சொன்னீங்க!”  என்று வந்தனா எடுத்து கொடுத்தாள். 

அதைக் கேட்ட கரணின் நண்பர்கள் சிரிக்க சமிக்ஷாவோ “இப்ப இது ரொம்ப தேவை அவர் உன்கிட்ட கேட்டாரு பாரு!”  என்று வந்தனாவை கடிந்து கொள்ள 

அவளும் ” சாரி ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்!”  என்று இழித்து வைத்தாள். 

“உன் பிரெண்ட்ஸே சொல்றாங்க பாரு.  நான் உன்னுடைய லவ்வர் என்று அதனால நீ என்ன பார்த்துட்டு தானே கிளம்பனும்!  சரி இப்ப சொல்றேன்.  காலையில வந்த உடனே என்ன பாக்கணும் அதே மாதிரி மதியம் நான் உன் கூட தான் உட்கார்ந்து லஞ்ச் சாப்பிடுவேன்.  ஈவினிங் விளம்பரத்துக்கு முன்னாடியும் என்ன பார்த்துட்டு தான் கிளம்பனும் புரியுதா?”  என்றான் அவளோ அவனை பார்த்து முழித்தாள். 

அவளிடம் இருந்து பதில் வராத காரணத்தால் “சொல்றது புரியுதா?”  என்று சற்று குரல் உயர்த்த  அதில் பயந்தவள் தலை தானாக சரி என்று ஆடியது. 

அதில் சிரித்தவன் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு லாலிபாப் பிரித்து அவள் வாய அருகே கொண்டு செல்ல அவள் அமைதியாக இருப்பதை பார்த்து ஆ என்று அவன் வாயை திறந்து காண்பிக்க வேண்டாம் என்பது போல் தலை அசைத்தாள்.

மீண்டும் அவன் முரைத்துப் பார்த்தான் அதில் பயந்தவள் ஆ என்று வாயை திறக்க அவள் வாய்க்குள் வைப்பது போல் உள்ளே வைத்து ஒரு சுழற்று சுழட்டியவன் பின்பு அதை எடுத்து தனது வாய்க்குள் வைத்துக் கொண்டு பாய் பச்சைக்கிளி என்று கூறிவிட்டு அவளை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான். 

அதை அங்கு செல்லும் சில மாணவ மாணவிகள் பார்த்துவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டே செல்வதை கண்ட அபிக்கு தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. 

அதை உணர்ந்த வந்தனா மற்றும் சமிக்ஷா இருவரும் அவளை ஆறுதல் படுத்தி மூவரும் பிரைவேட் பஸ்ஸில் ஏறி தங்கள் இல்லத்திற்கு சென்றனர். 

முதல் நாள் தனது மகள் சோர்வாக வருவதை கண்ட அவளது தாய் கௌரி “என்னடி ஆச்சு அபி ஏன் முகம் ஒரு மாதிரியாக இருக்கு?”  என்றார். 

அந்தக் கேள்வியை கேட்டவுடன் தன்னை இயல்பாக்கி கொண்டவள் “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா இவ்வளவு நாள் வீட்டில் ஆட்டம் போட்டுட்டு இப்போ காலேஜுக்கு போனது ஒரு மாதிரி இருக்கு அது மட்டும் இல்லாம பஸ்ல ரொம்ப கூட்டம் அதுதான் வேற ஒன்னும் இல்ல!”  என்றால். 

தனது அறைக்கு சென்று குளித்து வேறு உடை அணிந்து வந்தவளை பார்த்த கௌரி  சூடாக டீ யும் பக்கோடாவையும் கொடுக்க அதை வாங்கி சாப்பிட்டு குடித்து முடித்தவளை பார்த்தவர் “காலேஜ் பஸ் பத்தி கேட்டுட்டு வந்தியா?”  என்றார் .

அதை கேட்டவளோ” இதை கேட்கிற நிலைமையில் இன்னிக்கு நான் இருந்தேன் !” என்று வாய்விட்டு புலம்ப

” என்னடி சொல்ற கேட்டியா கேட்கலையா?”  என்றார் மீண்டும். 

“இல்லமா சாரி நாளைக்கு கேட்டுட்டு வரேன் !” என்ற அவள் அப்படியே கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தால்.

 பின்பு அவளது அக்காவும் வர அவளிடமும் பேசிவிட்டு அன்றைய இரவு அப்படியே கழிந்தது.

 இரவு படுப்பதற்கு முன்பு காரணமே இல்லாமல்  கரண் உடைய முகம் கண் முன்னால் வந்து செல்ல “இவன் பேஸ் வேற அதுவும் அந்த கண்ணு இருக்கே அப்பா தாங்க முடியல என்ன கண்ணுடா இதுவரைக்கும் நான் இப்படி ஒரு கண்ண பார்த்ததே கிடையாது ! அபி பார்த்து ஜாக்கிரதை அந்த கண்ணுல விழுந்துடாத!” என்று கூறியவள் அப்படியே தூங்கிப் போனால். 

கரண் மாலை தனது நண்பர்களுடன் சுற்றிவிட்டு ஆறு மணி போல் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு செல்ல இவனும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு மிகப்பெரிய பங்களாவிற்குள் நுழைந்தவன் வண்டியை பார்க் செய்துவிட்டு வீட்டிற்குள் வர செந்தில்நாதன் தனது மகனை பார்ப்பதற்காகவே கம்பீரமாக சோபாவில் அமர்ந்திருந்தார். 

இவனைப் பார்த்தவுடன் “என்னடா முதல் நாள் காலேஜ் எல்லாம் எப்படி போச்சு!”  என்றார் .

அதை கவனிக்காமல் அவன் செல்ல பார்க்க ஜெயந்தி அவனது சித்தி அதாவது செந்தில் நாதனுக்கு இரண்டாவது மனைவி “கரண் அப்பா உன்கிட்ட தான்பா கேட்கிறார் பதில் சொல்லிட்டு போகலாமே பா?”  என்றார். 

அதில் அவரை திரும்பிப் பார்த்த முறைத்தவன் தனது தந்தையை பார்த்துவிட்டு “என்னமோ இப்பதான் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் இயர் காலேஜ் போற மாதிரி கேக்குறீங்க அதெல்லாம் எப்பவும் போல தான் போச்சு !” என்றவன் அதற்கு மேல் அங்க நிற்க பிடிக்காமல் தனது அறைக்கு சென்று விட்டான்.

இப்போ கரண் பேமிலி பத்தின இன்ட்ரோடக்ஷன் பாத்துரலாம்…

செந்தில்நாதன்  ஒரு பிரபல கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி வைத்திருக்கிறார். கரண் ஹார்டுவேர் சொல்யூஷன் என்ற பெயரில்..

செந்தில் நாதனுக்கும் சூரிய கலா என்ற பெண்ணுக்கும் பிறந்த ஒரே குழந்தை தான் கரண். 

சூரிய கலா ஜெயந்தி  கலாவின் தங்கை இருவரும் ஒரே வீட்டில் வளரும் அண்ணன் தம்பியின் குழந்தைகள் . அதாவது சூரியகலா வின் தந்தை அண்ணன் அவரின் தம்பியின் மகள்தான் ஜெயந்தி. 

ஒரே வீட்டில் இருக்கும் பொழுது சூரியகலா வின் அழகின் மேலும் அறிவின் மேலும் ஜெயந்தி பொறாமை படுவாள்.

 பெயருக்கு ஒரு டிகிரி படித்துவிட்டு வெட்டியாக சுற்றி கொண்டு இருந்தவர்  சூரிய கலாவிற்கு செந்தில்நாதன் வரன் பொருத்தமாக அமைந்துவிட இவர்களுடைய திருமணம்  மிகவும் கிராண்டாக  செய்து  நல்லபடியாக தங்கள் வாழ்க்கையை நடத்தியவர்கள் குழந்தை பெற்று இருக்க பிரசவத்திற்கு சூரியகலாவை அனுப்ப முடியாது தானே வைத்த பார்த்துக் கொள்வேன் என்று செந்தில்நாதன் கூறி விட 

ஜெயந்தி சூரிய கலவிற்கு துணையாக அனுப்பி வைத்தார் ஜெயந்தியின் தாய் மனதில் பல கணக்குகளை போட்டுக்கொண்டு.

செந்தில் நாதனுக்கு தனது மனைவியிடம் உடல் சுகத்திற்காக நெருங்க முடியாத நேரத்தில் தவித்துக் கொண்டிருந்ததை புரிந்து கொண்ட ஜெயந்தி அந்த சொத்தையும் அவரையும் வளைத்து போட பார்த்து தங்கள் வீட்டில் அக்கா தன்னை மிகவும் கேவலமாக நடத்துவாள் என்று சூரிய கலாவை பற்றி மிக மோசமாக கூறி செந்தில்நாதன் மனதில் இடம் பிடித்தவள் உடலிலும் இடம் கொடுத்து மிகவும் நெருங்கி பழகினால்.

ஆரம்பத்தில் ஜெயந்தியை நம்பாதவர் அவருடைய திறமையான நடிப்பில் உண்மை என நம்பியும் இளமை ஹார்மோன்களின் திண்டாட்டத்தாலும் வேறு வழி இல்லாமல் ஜெயந்தியின் வழியில் விழுந்துவிட்டார். 

 இதை ஒரு நாள் சூரிய கலா பார்த்துவிட்டு செந்தில்நாதன் இல்லாத நேரத்தில் சத்தம் போட்டு அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்று கூற ஜெயந்தி சற்றும் யோசிக்காமல் சூரிய கலாவின் குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து விட அதில் பயந்தவர் பார்த்து ஆணவ சிரிப்பு சிரித்த ஜெயந்தி தன்னை பற்றி வீட்டில் கூறினால் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டினாள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல். 

 அதிலிருந்து சூரியகலா  ஜெயந்தி எது சொன்னாலும் கேட்க ஆரம்பித்தார். 

இதற்கு இடையே ஜெயந்தி சூரியாவிற்கு ஸ்லோ பாயாசனை உணவில் வைத்துக் கொடுக்க நாளடைவில் அதுவும் அவர் படுத்த படுக்கையாக்கி விட ஜெயந்தியின் ஆட்டம் மிகவும் ஜாஸ்தி ஆகியது. 

ஒரு நாள் கரண் ஒரு வயது குழந்தை அழுது கொண்டிருக்க செந்தில்நாதன் இருக்கும்பொழுது அவனை சமாதானப்படுத்துவதற்காக கையில் வைத்துக் கொண்டு இருந்த ஜெயந்தியின் முடியை பிடித்து அவன் ஆட்டிக் கொண்டிருக்க செந்தில்நாதன் அங்கிருந்து சென்றதும் குழந்தையை இறக்கிவிட்டு அவனது கன்னத்தில் அடித்து விட்டு அங்கிருந்து ஜெயந்தி சென்றுவிட 

இதையெல்லாம் அவர்களுக்கு எதிரே இருந்த அறையில் படித்துக் கொண்டிருந்த கலாவின் கண்களுக்கு தெரிந்தது.

தனது மகனை அடிப்பதை பார்த்து பொறுக்க முடியாத சூரிய கலா கஷ்டப்பட்டு எழுந்து தனது மகனை பார்க்க வந்தவர் படியில் தடுமாறி கீழே விழுந்து குழந்தை கண் முன்னே இறந்து போனார். 

அப்பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்கே வந்த செந்தில்நாதன் மனைவி இறந்து கிடந்ததை பார்த்து மிகவும் கவலையுற்றவர் அடுத்தடுத்து வேலைகளை செய்ய சூரியக்கலா இறந்த அடுத்த ஒரு மாதத்தில் குழந்தையை பார்த்துக் கொள்ள கண்டிப்பாக உங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்று ஜெயந்தி உடைய தாய் பேசிப் பேசியே செந்தில் நாதனுக்கும் ஜெயந்திக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. 

அதன் பிறகு கேட்கவா வேண்டும் கரண்  தனிமைப்படுத்தப்பட்டான் செந்தில் நாதனோ ஜெயந்தியின் அழகிலும் காமத்திலும் புரண்டு கொண்டிருந்தவர் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய கரணை துளி கூட கண்டுகொள்ளவில்லை.  காரணம் ஜெயந்தி அவர் முன்பு கரண் தன்னுடைய மகன் போல் பார்த்துக் கொள்வார் அதாவது நடிப்பார். 

அதை நம்பி ஏமாந்து போய்விட்டார். அதன் பிறகு அடுத்த ஒன்பது மாதத்தில் நவீன் என்ற ஆண் வாரிசு பிறந்தது செந்தில்நாதன் மற்றும் ஜெயந்தி தம்பதியருக்கு. 

அதன் பிறகு கரணை யாருமே கண்டு கொள்ளவில்லை.

 நவீன் தான் அந்த வீட்டில் இளவரசன் போல் வளம் வந்தான். 

அதற்கு அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து நந்தினி என்ற ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்தார் ஜெயந்தி. 

கரண் முற்றிலும் தனிமைப்படுத்த பட்டான் அதாவது வேலைக்காரர்கள் அவனை வளர்க்க ஆரம்பித்தனர். 

நவீன் பிறந்த உடனேயே தன்னால் ஒரு குழந்தையை தான் பார்த்துக் கொள்ள முடியும்.

 அதனால் கரணுக்கு கேர் டேக்கர் வைத்து விடுங்கள் என்று ஜெயந்தி திட்டவட்டமாக கூறி விட செந்தில் நாதன் அப்பொழுது ஜெயந்தியின் பேச்சுக்கு அடிமையாகி விட்டதால் அவரும் தனது வீட்டில் வேலை செய்யும் ஒரு வயதான பெண்மணி இடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க, தனக்கு மிகவும் பிடித்த  சூரிய கலாவை இறந்துவிட்ட சோகத்தில் இருந்தவருக்கு அவருக்கு அவர் உருவமாகவே பிறந்திருக்கும் கரணையும்  அவர் உருவமாகவே பார்த்தவர் வழக்க ஆரம்பித்தார் . ஜெயந்தியின் கெட்ட குணத்தை பற்றி முழுவதும் இவருக்கு தெரியும் அதனால் அவர்களை விட்டு இவன் தள்ளி இருந்தால்தான் பாதுகாப்பு என்ற ஒரு எண்ணமும் இருந்தது. 

 செந்தில்நாதன் இருக்கும்பொழுது கரன் ஜெயந்தியுடன் இருப்பான் அதைத் தவிர மத்த நேரம் எல்லாம் அந்த பாட்டி தான் அவனை வளர்த்தார். 

கரணுக்கு  ஐந்து வயது வரை வளர்த்தவர் அதற்கு மேல் வயோதிகம் காரணமாக இறந்துவிட இன்னும் தனிமையடைந்து போனான்.

அதுவும் அந்தப் பாட்டி இறந்த பிறகு அவன் காது படவே இவன் கூட இருந்தா எல்லாரும் சாகத்தான் செய்வாங்க போல என்று அவ்வப்பொழுது ஜெயந்தியும் மற்ற வேலைக்காரர்களும் பேசும் பேச்சை கேட்டவன் யார் அருகிலும் செல்லாமல் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டான். 

 தானே தனது வேலைகளை பார்க்க அந்த பாட்டி பழகி இருந்ததால் அவனுக்கு பிரச்சனை இல்லாமல் போனது.

 அதுவரை வீட்டில் யாரிடமும் அவன் ஒட்டாமல் தனிமை அடைந்து விட வழக்கம்போல் ஜெயந்தியின் ஆட்டம் கொடி கட்டியது.

 நாளாக நாளாக நவீன் மற்றும் நந்தினி இருவரும் ஜெயந்தி விஷ என்னத்தால் கரன்மேல் அன்பு இல்லாமல் வளர ஆரம்பித்தனர். 

ஒரு கட்டத்தில் கரண்  முரடானாக மாறிவிட  யார் சொல்லியும் கேட்காமல் இருக்க ஆரம்பித்தான்.

அதனால் செந்தில்நாதன் அவனை எப்பொழுது பார்த்தாலும் திட்டிக்கொண்டு இருப்பார் இதுதான் இவர்கள் குடும்பம். 

சாரி பிரண்ட்ஸ் introduction ரொம்ப நீளமா போயிருச்சு வேற வழி இல்ல. ஏன் கரண் எதனால தன்னோட பேமிலி கிட்ட கோவமா இருக்கான் அப்படின்னு நீங்க தெரிஞ்சுக்கணும் அதுக்காகத்தான்.

மறுநாள் விடியல் அனைவருக்கும் அழகாக விடிய இன்னைக்கு என்னெல்லாம் கூத்து செய்யப் போகிறானோ என்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பி வந்த அபி  தனது தோழிகளுடன் வகுப்பறைக்கு வந்தவள் அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சி அடைந்தால்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page