அத்தியாயம் 4

“இந்நேரத்துக்கு எதுக்கு குளிக்கணும்?” கேட்டவள் குழப்பமாய் அவனைப் பார்த்திட, “நீ எதுக்கு இங்க வந்திருக்கன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? இல்ல ஞாபகப் படுத்தனுமா?” மிதுன் நதியாவை அழுத்தமாய் பார்த்துக் கேட்டிட, முகம் வெளிறிப் போனாள்.

“சார்..” என்று தயக்கமாய் நின்றவளை, ‘என்ன’ என்பதைப் போல் ஏறிட்டுப் பார்த்தான். “சார்.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” அவள் தயக்கமாய் கேட்டிட, 

“யூ டாமிட்.. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? இவ்வளவு தூரம் வந்த பிறகு, இப்போ டைம் கேட்டா எப்படி? உன்னோட அம்மா என் கஸ்டடியில தான் இருக்காங்க. மறந்துடுச்சா. முதல்ல நீ வெளில போ, என்னோட டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. அதோட வேல்யூ தெரியுமா உனக்கு. நீயும் வேணாம். உன் அக்ரிமெண்ட்டும் வேணாம். நீ கிளம்பு.. ஸ்டுபிட்” அனல் சிந்தும் விழிகளோடு, பற்களை கடித்தபடி வார்த்தைகளைக் கொட்டியிருந்தான்.

அவனுடைய கோபத்தைக் கண்டு மிரண்டு போனவள், “சாரி சார்.. இனிமே இப்படி பண்ண மாட்டேன். நீங்க என்ன பண்ண சொன்னாலும் பண்றேன். அக்ரிமெண்ட் லாம் கேன்சல் பண்ணிடாதீங்க” என்று கண்ணீரோடு சொல்லிட, கண்களை மூடி பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் “சரி போய் குளிச்சுட்டு வா” என்றான்.

மிதுன் அவளுக்கு பாவம் எல்லாம் பார்க்கவில்லை. அவனுடைய வேலை நடக்க வேண்டுமே. அதற்காகத் தான் இத்தனை பொறுமை.

நதியா தன்னுடைய சூட்கேஸை திறந்து நைட் ட்ரெஸை எடுத்து, குளிக்க சென்றாள். குளித்து முடித்து வெளியே வந்தவள் மெத்தைக்கு வர, “ட்ரெஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டு படு” மிதுன் சொல்லிட திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.

“ஹான்.. என்ன சொன்னீங்க”

“உன்னோட ஃபுல் ட்ரெஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டு படு” என்று மிதுன் எரிச்சலோடு சொல்ல, வேகவேகமாக உடைகளை களைந்து மெத்தையில் படுத்தாள். மிதுன் அவனது உடைகளைக் களைய கண்களை மூடிக் கொண்டாள். 

“காலை தூக்கு..”

“ஹான்..”

“உன்னோட ரெண்டு காலையும் தூக்கி பெட் மேல வை” 

அவள் கால்களை தூக்கி மெத்தை மேல் வைத்திட, அவள் மேல் பாதி விழுந்தும் விழாமலும் அவன் அவளுடைய பெண்மையை ஆக்கிரமித்தான். தன்னிச்சையாக அவள் கைகள் அவன் தோளைப் பிடிக்க, விருட்டென்று அதை தட்டிவிட்டவன், தன் பழுப்புநிற விழிகளால் அவளை கோபமாகப் பார்த்திட, திரும்பிக் கொண்டாள்.

வலி தாங்க முடியாமல் பல்லைக் கடித்து, மெத்தை விரிப்பை கைகளால் இறுக்கி, மெத்தையில் கால் விரல்களை அழுத்தமாக ஊன்றி வலி பொறுத்தாள். அவளுக்கு வலியோடு சேர்த்து உயிரணுக்களையும் தந்தவன் விலகிப் படுத்திட, போர்வையை தலை வரை போர்த்தி கொண்டு, கால்களை குறுக்கி, சுருண்டு படுத்தவாறு அழுதாள்.

காதல், திருமணம் என அவளுக்கிருந்த எல்லா கனவுகளும் அழிந்திட, காலம் அவளை சூழ்நிலைக் கைதியாக்கி நிறுத்தியிருக்க, ‘எனக்கேன் இப்படி ஒரு நிலை?’ என நினைத்து கண்ணீரில் கரைந்தாள்.

அவளுடைய விசும்பல் சத்தத்தையும், அழுவதால் அவள் முதுகு குலுங்குவதையும் சலனமின்றி அவன் பார்த்திருந்தான். 

அவனுக்குத் தெரியும் அவள் தாய்க்காக, அவருடைய சிகிச்சைக்காக தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள். அவளை அவன் தேர்ந்தெடுக்க முதன்மைக் காரணமும் அதுதான். சூழ்நிலைக் கைதியாய் இருப்பவள் நிச்சயம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க மாட்டாள் என்ற நம்பிக்கை தான் அவனுக்கு.

‘எந்த பெண்ணும் இப்படி ஒரு நிலையில் இருந்தால் வருந்தத்தான் செய்வாள்’ என்று யோசித்தவன், அவளுக்கு ஆறுதல் சொல்ல முற்படவில்லை. அது அவனுக்கு  அவசியமற்ற ஒன்று. 

நதியா அழுது முடித்து உடைகளை போட்டுக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றாள். முகம் கழுவி வந்தவள் டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருக்க, டிஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்திருந்த மிதுன், மடிக்கணினியோடு மெத்தையில் அமர்ந்திருந்தான்.

“தூங்கலையா?” அவன் மெல்லிய குரலில் கேட்டிட, “இன்னும் இல்ல..” அவள் தழுதழுத்த குரலோடு சொன்னாள். “ட்ரஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டு படு” என்று அவன் சொல்லிட, திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவன் பழுப்பு நிற விழிகளை அவள் விழிகள் ஒருகணம் சந்தித்து மீண்டிட, அவளுக்கு தெரியும் இது வேண்டுகோள் இல்லை, கட்டளை.

மௌனமாய் உடைகளைக் களைந்து, கால்களை தூக்கியவாறு மெத்தையில் படுத்தாள். மனதிற்குள் காதல் இல்லாமல், செல்லச் சீண்டல்கள் இல்லாமல், வலி என்றால் அரவணைத்திடும் கரங்கள் இல்லாமல், கடமையாய் கூடலை நிகழ்த்தினான். பகலில் தூங்கியதால் அவளுக்கு தூக்கமும் வரவில்லை, அவள் தூங்க நினைத்தாலும் அவன் விடுவதாயில்லை. அந்த இரவு முழுவதும் அவன் மோகப்பசிக்கு அவள் இரையாகி இருந்தாள்.

“நதியாமா எழுந்திருடா இன்னும் தூங்கிட்டு இருக்க. எழுந்து கிளம்பு. லேட்டா எழுந்தா சாப்பிட முடியாது. எழுந்திரு என் செல்லக்குட்டில” நதியாவின் அப்பா மூர்த்தி அவள் தலை வருடி அவளை எழுப்பிட, அவள் அசையவில்லையே.

“எழுந்திருமா.. அய்யோ என் பொண்ணு அழகா தூங்குறா. அவளை எழுப்ப மனசே வரலையே” என்று மூர்த்தி அவளை எழுப்பிட, அங்கு வந்த நதியாவின் அம்மா சாந்தி, ” இப்படியே கொஞ்சிட்டு இருங்க. உங்க பொண்ணு நாளைப்பின்னே கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்குப் போயிட்டா, வர்றவன் இப்படி கொஞ்சி தான் எழுப்புவானாக்கும். முதுகிலேயே ரெண்டு போடுவான்” கோபமாய் அவள் முதுகில் அடித்து எழுப்ப, துள்ளிக் கொண்டு எழுந்தாள் நதியா.

“அப்பா இந்த சாந்திம்மா நமக்கு வேணாம். டிவோர்ஸ் பண்ணிடுங்க. நான் வேற நல்லா அம்மாவா பார்த்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். வர வர இவங்க டார்ச்சர் தாங்கல” என்று அவள் குறும்புத்தனமாய் சிரிக்க, “அடிக் கழுத.. உனக்கு கல்யாணம் பண்ணனும்னு பேசுனா நீ உன் அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறியா?உன்னை..” சாந்தி அவளை அடிக்கத் துரத்திட, நதியா வேகமாக ஓடி பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.

“எல்லாம் நீங்க தர்ற செல்லம் தான்” என்று சாந்தி, மகளுக்கும் சேர்த்து கணவனின் முதுகில் அடிகளை பரிசாகத் தந்தார்.

தண்ணீர் அவளை நனைக்க, என்ன ஷவரை திறக்காமலே தண்ணீ வருது’ அவள் கண்களை மெல்ல மூடித் திறக்க, மிதுன் கோபமாய் அவளை பார்த்தவாறு நின்றிருந்தான். அவளை இத்தனை நேரமாய் எழுப்பி பார்த்தவன், அவள் விழிக்காததால் ஒரு கிளாஸ் தண்ணீரை அவள் மேல் ஊற்றியிருந்தான். 

அவன் கோபமுகத்தை பார்த்து அவள் அரண்டு போய் எழுந்து உட்கார்ந்ததால் அவளுக்கு மேல் இருந்த போர்வை விலகிட, அவள் போட்டிருந்த செயினை தவிர உடலில் வேறு எதுவுமில்லை. அவன் வேகமாய் திரும்பி நின்றிட, போர்வையை போர்த்தியவாறு எழுந்து பாத்ரூமிற்குள் ஓடிவிட்டாள். 

‘நான் எத்தனை மணிக்கு தூங்கினேன்? இப்படியேவா நைட் முழுக்க இருந்தேன்? அய்யோ நிம்மதியா தூங்க கூட முடியலையே’ மனதிற்குள் புலம்பியவாறு அவள் நின்றிருக்க, பாத்ரூம் கதவு ஓங்கித் தட்டும் சத்தம் கேட்டதும், வேகமாய் குளித்து உடை மாற்றி வெளியே சென்றாள். 

“நதியா நீ பேசிக்கலி ரொம்ப சோம்பேறியா? யூ வேஸ்ட் மை டைம். லிசன் மீ. இனிமே இப்படி எல்லாம் பண்ணாத. நான் கிளம்புறேன். சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்று சொல்லி மிதுன் கிளம்பிட, “அப்பாடா.. இனிமே நிம்மதியா தூங்கலாம்” என மெத்தையில் விழுந்தவள், நித்திரைக்கு செல்ல, காலிங்பெல் சத்தம் கேட்டு விழித்தாள். யாரென்று பார்த்துவிட்டு கதவை திறந்தாள்.

உள்ளே நுழைந்த 2 பெண்கள் 2 ஆண்கள் துரித வேகத்தில் அந்த அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். நதியா அவர்களை பார்த்திருக்க, வேலையாட்களில் “ஒருவர் நீங்க போய் சாப்பிடுங்கமா. அதுக்குள்ள நாங்க க்ளீன் பண்ணிடுவோம்” என்றார்.

“வாரம் ஒருதடவையா க்ளீன் பண்ணுவீங்க?” அவள் கேட்டிட, “இல்லம்மா.. மிதுன் சார் ரூம் மட்டும் தினமும் க்ளீன் பண்ணி, தினமும் பெட்ஷீட், பில்லோ கவர், ஸ்கிரீன் கவர், டேபிள் கவர் எல்லாம் மாத்தனும். மத்தவங்க ரூம் வாரம் ஒருநாள் தான் பண்ணுவோம். சாருக்கு எல்லாம் சுத்தமா இருக்கணும். ஏதோ விசிடி னு சொல்லுவாங்களே. அது இருக்காம்” ஒரு பணிப்பெண் பேசியபடி வேலையை செய்தார்.

‘ஓஹோ ஓசிடி யை தான் அப்படி சொல்றாங்களா?’ அவள் சிரித்துக் கொண்டே நின்றிட, முதல் நாள் இரவு வேறு சாப்பிடாததால் பசியெடுத்தது.

ருக்மணி பாட்டி அவர் மகள் வீட்டிற்கு சென்றிருக்க, ரூபிணியின் பெற்றோர் நேற்றே வீட்டிற்கு கிளம்பியிருக்க, மற்றவர்கள் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

முதலில் சற்று தயங்கியவள், வயிறு பசி தாங்காமல் கூப்பாடு போட டைனிங் டேபிளில் வைஷாலிக்கு அருகே சென்று அமர்ந்தாள். வைஷு நதியாவை பார்த்து சிரித்திட, அவளும் பதிலுக்கு சிநேகமாய் புன்னகைத்து தனக்கான தட்டில் உணவினை பரிமாறிக் கொண்டிருந்தாள்.

ராதா கோபமாக அருகிலிருந்த பீங்கான் தட்டை தட்டி விட, நதியா அதிர்ந்து போய் அவரை பார்த்தாள். “உன் அண்ணனுக்கு புத்தி கெட்டுப் போச்சு போல. கண்டதுங்கள வீட்டுக்குள்ள விட்டிருக்கான். என்ன ஜாதியோ, என்ன இனமோ, யாரோ, எவரோ ஒண்ணும் தெரியல. காலைல எந்திரிச்சதும் சோத்துக்கு செத்த மாதிரி அறிவே இல்லாம வந்து உட்கார கொஞ்சம் கூட வெட்கமா இல்ல” தேவ்விடம் பேசுவது போல் ராதா குத்தலாய் சொல்லிட, நதியாவிற்கு சுருக்கென்றது. 

ஒன்றும் பேசாமல், சாப்பிடாமல் எழுந்து அறைக்குச் சென்றாள். சுத்தம் செய்து முடித்து பணியாட்கள் கிளம்பியிருக்க, மெத்தையில் விழுந்தவளின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது, 

நதியாவின் அப்பா மிதுனை போல இண்டர்நேஷனல் பிசினஸ்மேன் இல்லையென்றாலும் அவரும் தமிழ்நாட்டில் பெரிய பிசினஸ்மேன் தான். டெக்னிக்கல் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து வந்தார். மருத்துவம், விவசாயம், விளையாட்டு போன்ற துறைகளுக்கு தேவையான துணிகளை தயாரிக்கும் நிறுவனம்.

கால் தரையிலேயே படாமல் செல்லமாய் ஊட்டி வளர்த்த மகள் இப்படி கண்ணீரிலே நனைந்திருப்பாள் என்று அவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அவள் அழுதபடி படுத்திருக்க யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தாள்.

வைஷாலி தான் வந்திருந்தாள். யார் பாஸ்வேர்டு போட்டு அறைக்குள் வந்தாலும் ஒரு சத்தம் வரும். நதியாவுக்கு அருகில் வந்து அமர்ந்தவள், “அண்ணி நான் வைஷு.. மித்து அண்ணாவோட செல்ல தங்கச்சி. எங்க அண்ணன் என்னை பத்திலாம் உங்க கிட்ட பேசுவாரா?” படபடவென்று குழந்தை போல் பேசினாள்.

நதியா என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல், அவள் பேசுவதற்கு தலையை மட்டும் ஆட்டியவாறு இருந்தாள். “அம்மாவுக்கு மித்து அண்ணன் தான் ஸ்பெஷல், ரொம்ப பிடிக்கும். அதான் சொல்லாம கல்யாணம் பண்ணிட்டாருன்னு வருத்தத்துல இருக்காங்க. கொஞ்ச நாள் போனா சரியாகிடுவாங்க” என்றவள், “இருங்க உங்களுக்கு சாப்பாடு கொண்டு வர சொல்றேன்” என்று எழுந்து இண்டர்காமிற்கு அருகே சென்றாள்.

அதற்குள் சாப்பாட்டுடன் வேலையாள் அழைப்பு மணியை அழுத்திட, வைஷு கதவை திறந்திட, அவர்கள் உணவை வைத்து விட்டு சென்றனர். “நீங்க முதல்ல சாப்பிடுங்க வாங்க” வைஷு வற்புறுத்திட, நதியா எழுந்து அங்கிருந்த டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தாள். 

வயிறும் மனமும் லேசாகியிருக்க, அவள் சிரித்தாள். “அண்ணி நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க. உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க. எங்க அண்ணன் லவ் பண்ணுவாருன்னு நினைச்சாலே ஆச்சரியமா இருக்கு” சிரித்துக் கொண்டே வைஷாலி கேட்டிட, நதியா தனக்கு தெரிந்த கற்பனைக் காதல் கதைகளை எல்லாம் தன்னுடைய காதல் கதையாக சொல்லி அவளை நம்ப வைத்தாள்.

வைஷாலி பேஷன் டெக்னாலஜி முதல் வருடம் படிக்கிறாள். தற்போது செமஸ்டர் விடுமுறையில் இருக்கிறாள். இருவரும் படிப்பு, பொழுதுபோக்கு பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். நதியாவுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, இதில் உடல் அலுப்பு வேறு. அவளுக்கு தூக்கம் கண்களை சுழற்ற, அதை அடக்கிக் கொண்டு அவளிடம் பேசினாள்.

❤️‍🔥மோகம் தீர்ப்பாள்❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page