அத்தியாயம் 5

சக்கரவர்த்தி இல்லத்தின் கீழ்த்தளத்தில், முன்புறம் வரவேற்பறை; அதைத் தாண்டி உள்ளே சென்றால், இடப்பக்கம் சமையலறை, பூஜையறை, உணவுக்கூடம்(Dining Hall) ஆகியவை உள்ளன. மத்தியில் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளுடன் கூடிய பெரிய ஹாலும், வலப்பக்கம் ராதாவின் அறை, ருக்மணியின் அறை மற்றும் உறவினர்கள் தங்குவதற்கான அறைகளும் அமைந்துள்ளன.

முதல் தளத்தில் இளையவர்கள் நால்வருக்குமான அறைகள் உள்ளன. வலப்பக்கம் மிதுன் மற்றும் வைஷாலியின் அறைகளும், இடப்பக்கம் தேவ் மற்றும் சூர்யாவின் அறைகளும் அமைந்துள்ளன.

படுக்கையறைகளைத் தவிர அனைத்து அறைகளிலும், வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என எல்லா இடங்களிலும் பாதுகாப்புக்காகக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

அதற்கான பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறையும் கண்காணிப்புப் பணியாளர்களும் வீட்டிற்கு வெளியே இருந்த விருந்தினர் இல்லத்தில் இயங்கி வந்தனர். மிதுன் தன் மடிக்கணினியில் எப்போதாவது அந்தக் காட்சிகளைப் பார்ப்பதுண்டு. அன்று காலை உணவு மேசையில் நடந்த களேபரத்தைக் கண்டு, அலுவலகத்தில் இருந்தபடியே தொலைபேசியில் அழைத்து, ‘இனிமேல் தினமும் நதியாவிற்கு உணவை அவளுடைய அறைக்கே கொண்டு செல்லும்படி’ தன் பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.

மிதுனுக்கு அவள் மேல் பரிதாபமெல்லாம் இல்லை; அவனுக்குத் தேவை அனைத்து இரவுகளிலும் தன் காரியம் தங்குதடையின்றி நடக்க வேண்டும், அவ்வளவுதான்!

*****

“எங்க ரூபிணி அண்ணி, ‘மித்து அண்ணாவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு’ ஒத்த கால்ல நின்னாங்க. ஆனா அண்ணன்தான் அவங்களை தேவ் அண்ணனுக்குக் கட்டி வச்சுட்டாங்க” என வைஷாலி கூறியதும்,

“எதுக்கு உங்க மித்து அண்ணன் ரூபிணியைக் கல்யாணம் பண்ணிக்கல?” நதியா ஆர்வமாய்க் கேட்டாள்.

“அவர்தான் உங்களை லவ் பண்றாரே…”

“ஆமா… அவர் என்னை லவ் பண்றாருல!”

“போங்க அண்ணி… நீங்க சிரிக்காம காமெடி பண்றீங்க” என்று வைஷாலி உண்மை தெரியாமல் பேசிட,

‘யாரு நானா? என் வாழ்க்கையே சிரிப்பா சிரிச்சுப் போய் இருக்கு!’ என்று மனதிற்குள் புலம்பினாள் நதியா.

தோழியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்ததால் வைஷாலி தன் அறைக்குச் சென்றுவிட, ‘விட்டா போதும்…’ என்று நினைத்த நதியா நன்றாக உறங்கிப் போனாள். மதிய உணவிற்காக மணி அடித்தபோதும் அவள் எழவில்லை. மாலை கண் விழித்து முகம் கழுவியபோது, அவளுக்குத் தேநீரும் சிற்றுண்டியும் வந்தன.

இரவுணவையும் முடித்தவள் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். மெத்தைக்கு வலப்பக்கம் சற்று தள்ளி மிதுனின் ஆளுயரப் புகைப்படம் சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. அப்படத்தில் அவன் கறுப்பு நிறக் கோட்டுச் சூட்டு அணிந்து, பாக்கெட்டில் கை நுழைத்தவாறு, மிடுக்காய்த் தன் கன்னத்தில் குழிவிழச் சிரித்தபடி நின்றிருந்தான். அதிலிருந்த அவன் முகத்தையே உற்றுப் பார்த்தவள், 

“இவருக்குச் சிரிக்கத் தெரியுமா? ச்சீ… ச்சீ… இது ஏதோ ஏஐ எடிட்டிங்கா இருக்கும். அவராவது இவ்வளவு அழகாச் சிரிக்கிறதாவது? ரோபோ மாதிரியே நடக்குறதும் பேசுறதும்” என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பினாள்.

“இதென்ன… இங்க ஒரு போட்டோ வச்சிருக்காங்க. இதான் அவரோட ஒரிஜினல் போட்டோ. உர்ருன்னு விறைப்பா இருக்காரு. ஷர்ட்டோட சேர்த்து கோட்டுக்கும் கஞ்சி போடுவார் போல!” என்று அவள் தனக்குள் பேசிக்கொண்டே இருக்க, திடீரென அந்தப் புகைப்படம் அசைந்தது.

ஐயோ… புகைப்படம் அல்ல, அது மிதுன்தான்! அவன் அறைக்குள் நுழையும்போது, கடவுச்சொல்லைப் பயன்படுத்த மாட்டான், தன் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்துவிட்டே வருவான். அதனால் எவ்வித சத்தமும் எழாது.

மிதுன் ஆடை மாற்றும் அறைக்குள் நுழைய, நதியாவோ அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போயிருந்தாள். அவன் உணவருந்துவதற்காகக் கீழே செல்ல, பெருமூச்சு விட்டபடி மெத்தையில் அமர்ந்தவள், ‘அவர் ஏதும் கோபத்தில் கத்துவாரோ?’ என்ற யோசனையிலேயே இருந்தாள்.

உணவருந்தும் மேசையில் அனைவரும் அமைதியாக உணவருந்த, “அண்ணா…. அண்ணியையும் கீழக் கூப்பிட்டு வந்திருக்கலாம்ல?” வைஷாலி மிதுனிடம் ஆசையாய்க் கேட்டதும், “அவ கொஞ்சம் ஷை டைப். அதான் நான் அவளை ரூம்லேயே சாப்பிடச் சொல்லிட்டேன்” என்று தன் தங்கையைச் சமாளித்தான்.

“அதெல்லாம் இல்ல… அண்ணி நல்லா ஜாலியாப் பேசுறாங்க. நீங்க ஆபீஸுக்குப் போன பிறகு, நானும் அவங்களும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்” தங்கை அழகாய்ப் பேசிட, மிதுன் சிரித்தவாறே அதைக் கேட்டிருந்தான்.

“இவனையே நான் உனக்கு அண்ணன் இல்லைன்னு சொல்றேன். இவன் பொண்டாட்டி உனக்கு அண்ணியா? தகுதி தராதரம் தெரியாம அவகிட்ட போய் பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத. அப்புறம் உன் அண்ணனை மயக்குன மாதிரி உன்னையும் பேசியே மயக்கிடுவா” என்று ராதா அவரது மகளைக் கடிந்துகொள்ள, “அம்மா… என்ன இதெல்லாம்? வைஷு சின்னப் பொண்ணு. அவகிட்ட எதுக்கு இந்த மாதிரிலாம் பேசுறீங்க?”அவரது பேச்சில் இருந்த விபரீதத்தை உணர்ந்து, மிதுன் இடைமறித்தான்.

“சூர்யா… அவனை என்கிட்ட பேச வேணாம்னு சொல்லு. பொண்டாட்டியை சொன்னதும் அவனுக்கு கோபம் வருதா? நான் சாப்பிடட்டுமா? இல்லை எழுந்து போகட்டுமா?” பொறுப்பாய் இருந்த மகன் இப்படியெல்லாம் செய்கிறானே என்ற ஆதங்கத்தில் அவர் எரிந்துவிழ, மிதுன் ஆத்திரத்தில் உணவருந்துவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்து அறைக்குச் சென்றான்.

அவன் தம்பிகளுக்கும் தங்கைக்கும் அண்ணன் சாப்பிடாமல் சென்றதில் வருத்தம்தான். சக்கரவர்த்தியின் மறைவிற்குப் பிறகு பள்ளி பயிலும் குழந்தைகளாய் இருந்தவர்களை அரவணைத்து, நல்வழிப்படுத்தி, கேட்கும் முன்பே அவர்களின் தேவைகளை நிறைவேற்றி… அண்ணனாக மட்டுமல்லாமல் தந்தையாகவும் இருக்கிறான். அவனது மொத்த உலகமும் இந்தக் குடும்பமே!

பெரியவன் தேவ் முதுநிலை வணிக மேலாண்மை படித்து முடித்ததும், மிதுன் அவனிடம் சக்கரவர்த்தி நிறுவனத்தின் சில கிளைகளின் பொறுப்பை ஒப்படைத்தான். நிர்வாகத்தை முழுமையாக அவனிடம் தந்திருந்தாலும், தம்பி அதைத் திறம்பட நடத்துகிறானா என்பதையும் கவனித்துக் கொள்கிறான்.

சின்னவன் சூர்யா இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் இறுதியாண்டில் இருக்கிறான். சூர்யாவிற்குத் தங்களது பிசினஸில் நாட்டமில்லை என்றாலும், மிதுன் அவனுக்குப் பிடித்த துறையிலேயே தொழில் ஏற்படுத்தித் தரும் எண்ணத்தில் இருக்கிறான்.

மிதுனைப் போலவே அவனுடைய தம்பிகளும் தங்கையும் அவன் மேல் மரியாதை கலந்த அன்பை வைத்திருக்கின்றனர். அண்ணன் சொன்னால் “சரி…” என்பார்கள், அவ்வளவுதான்! மறுபேச்சு பேச மாட்டார்கள். மிதுனும் அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை ஒருபோதும் செய்திட மாட்டான்.

அறைக்குச் சென்றவன், மெத்தையில் காலை நீட்டிச் சாய்ந்து அமர்ந்து, கண்கள் மூடி யோசனையில் ஆழ்ந்திருந்தான். சில நாட்களுக்கு முன்பு வரை, உணவருந்தும்போது தம்பி தங்கையின் குறும்புகளும் கிண்டல்களும் சிரிப்பொலிகளும் நிறைந்திருக்கும்.

தொழிலில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், அவர்களோடு இருக்கையில் அத்தனையும் பறந்துவிடும். மிதுன் வீட்டில் இருக்கும்போது, அவர்கள் போடும் சின்னச் சின்னச் சண்டைகளில் மனம்விட்டுச் சிரித்தபடி இருப்பான்.

ராதாவிற்கு சகலமும் மிதுன்தான். இருபது வயதிலேயே பொறுப்பான குடும்பத் தலைவனாக மாறி, தந்தையின் இழப்பை ஈடுசெய்து, உடைந்து போயிருந்த தாய்க்கு ஆறுதலாக இருந்தவன் அல்லவா?! மகனுக்குப் பிடித்ததை அவரே சமைப்பதும், அவன் வீட்டில் இருந்தால் அவனுக்கு அருகிலிருந்து தேவையானதையெல்லாம் செய்வதும்தான் அவருக்கு முக்கியமான வேலையே.

இன்று அன்னையின் கோபமும் தம்பிகளின் விலகலும் அவனுக்கு மன உளைச்சலைத் தந்தன. இருந்தாலும் என்ன செய்வது? அவனும் இப்போது சூழ்நிலைக் கைதிதான்! 

வெளியே இருந்த பால்கனியில் நின்று, நதியா அவளுடைய தோழியிடம் அலைபேசியில் பேசிவிட்டு அப்போதுதான் அறைக்குள் நுழைந்தாள். அவன் கண்களை மூடியிருக்க, ‘அப்பாடா! தூங்குறார் போல…’ என்று நிம்மதிப் பெருமூச்சுடன் மெத்தைக்குச் சென்று படுத்துக்கொண்டவள், “நதியா வேக்கப்… குளிச்சிட்டு வா!” இறுகிப் போயிருந்த குரலில் அவன் கர்ஜித்ததும் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.

“சார்…” அவள் பயத்துடன் அவனைப் பார்த்திட, “வாட்? எழுந்து போய்க் குளி…” என்றான் சற்றே நிதானமான குரலில்.

“சார்… நான்தான் காலையிலேயே குளிச்சுட்டேனே… இப்போ திரும்பவும் குளிக்கணுமா?”

“நான் உன்னை இப்போதான் குளிச்சுட்டு வரச் சொன்னேன்”

“இந்நேரத்துக்குப் பச்சத் தண்ணில குளிக்க முடியல”

“ஹீட்டரை ஆன் பண்ணிக்க வேண்டியதுதானே?”

“அதை எப்படி ஆன் பண்றது? இந்த டேப் என்னவோ வித்தியாசமா இருக்கு… இதை எப்படி யூஸ் பண்றதுன்னே தெரியல” அவள் கேட்பதும் நியாயம்தான். இப்போதிருக்கும் குழாய் வகைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அதை அழுத்த வேண்டுமா, திருக வேண்டுமா, இழுக்க வேண்டுமா அல்லது அது தானியங்கி முறையா? ஒரு குழாயைத் திறப்பதிலேயே இத்தனைச் சிக்கல்கள் இருக்கின்றன.

“ம்ச்… வீட்டுல என்னதான் பண்ற நீ? மெய்ட் வந்தா அவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க மாட்டியா?” என்று சலிப்போடு அவளைப் பார்த்தவன், அவளது கையைப் பிடித்துக் குளியலறைக்குள் இழுத்துச் சென்றான். 

“இங்க இருக்கிறதுதான் ஹீட்டர் சுவிட்ச். குளிக்கப்போறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஆன் பண்ணிடு. இங்க இருக்குற கண்ட்ரோலை இப்படி இப்படி மாத்தினா குழாய், ஷவர், பாத்டப், ஹேண்ட் ஷவர்ல ஹாட் வாட்டர் வரும். என்ன… புரிஞ்சதா?” என்று ஏதோ சிறு குழந்தைக்குப் பாடம் சொல்லித் தருவது போல விவரித்துக் கொண்டிருந்தான்.

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘சோதனை செய்கிறேன்’ என்று அந்தத் திருகினை நதியா லேசாக அசைத்ததும் சட்டென ஷவரிலிருந்து கொட்டிய தண்ணீர், அதற்குக் கீழே நின்றிருந்தவன் மேல் விழுந்தது. அவள் பதற்றத்தில் அதை மூடத் தெரியாமல் மேலும் அதிகமாக்கிவிட, கட்டுக்கடங்காமல் பொழிந்த நீரின் வேகத்தில் மிதுன் சுதாரித்து விலகுவதற்குள் தொப்பலாக நனைந்திருந்தான்.

ஒருவழியாக அவன் குழாயை நிறுத்தியிருக்க, முழுக்க நனைந்திருந்தவனைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வெளிப்படத் துடித்த சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை மடித்து, “சாரி சார்… தெரியாம…” அவள் சொல்லி முடிப்பதற்குள், மிதுன் விட்ட அறையில் அவளுடைய கன்னம் சிவந்துபோனது.

அவள் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்தவாறு நின்றிருக்க, “ஸ்டுபிட்… என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் வச்சுக்காத, தொலைச்சுடுவேன்! டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் குளிச்சுட்டு வா” என்று ஆக்ரோஷமாகக் கத்திவிட்டுச் சென்றான். அவன் கோபத்திற்குப் பயந்து, அழுதுகொண்டே சீக்கிரமே குளித்துவிட்டு வெளியே வந்தாள்.

மெத்தையில் அமர்ந்திருந்தவனை அவள் பார்த்திட, அவனது கண்ஜாடையிலேயே ஆடைகளைக் களைந்து படுத்தாள். நதியா அழுவது தெரிந்தும் மிதுன் தன் கடமையில் முனைப்பாக இருக்க, கோபமும் கண்ணீருமாகத் தலையைப் பக்கவாட்டில் திருப்பித் தலையணையை நனைத்தபடி இருந்தாள்.

‘அப்புறம் அடிச்சா அழாம சிரிக்கவா செய்வா? அதுவும் அவன் முரட்டுக்கையை வெச்சு அடிச்சா?’ லாஜிக்காக யோசித்தான் மிதுன். (அடிக்கிறதையும் அடிச்சுட்டு யோசனையைப் பாரு!)

அவன் விலகிப் படுத்துக்கொள்ள, இன்னும் சற்று விம்மி அழுதாள். அவள் எழுந்து சென்று உடை மாற்றி வரும்வரை அமைதியாக இருந்தவன், அதன்பின் “ட்ரெஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டு வந்து படு” என்க, கொலைவெறியோடு அவனைப் பார்த்தாள்.

‘இதுக்கு அந்தப் பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்… நைட் வரைக்கும் உன் நிலைமை இதுதான்’ என்று மனதிற்குள் புலம்பியவள், அவன் அறைந்த ஆத்திரத்தையும் தன் உடையின் மீது காட்டி, அதை கழற்றித் தூக்கி எறிந்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

‘இது ஒரு வேலை… இதுக்கு வந்திருக்கிற நான் ஒரு டேஷு!’ – தன்னை அர்ச்சித்துக்கொண்டே படுத்திருந்தாள். எது எப்படிப் போனால் என்ன? நம்ம மிதுனுக்குக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மட்டும்தான் முக்கியம். சாரி… கட்டுப்பாடு மட்டும் மிஸ் ஆகிடுச்சு…

அவன் கட்டுப்பாடின்றி இரவெல்லாம் அவளுடன் கூடலில் இருந்திட, அசதியில் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை.

நதியா தன் போனில் ஓர் அபாயச் சத்தத்தை அலாரமாக வைத்து, காலையில் சீக்கிரமே கண்விழித்துக் குளிக்கச் சென்றாள்.

அந்தச் சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்த மிதுன், கோபத்தை அவள் மீது காட்ட முடியாமல் தலையணையின் மீது காட்டி, அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் படுத்துக்கொண்டான்.

நதியா அவனைப் பழிவாங்கும் நோக்கத்தில் எதையும் செய்யவில்லை. ‘வேலைக்கு வந்தாச்சு… சரியாக இருப்போமே!’ என்ற எண்ணத்தில்தான் அவள் அப்படி நடந்துகொண்டாள்.

❤️‍🔥மோகம் தீர்ப்பாள்❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page