அத்தியாயம் 4
“என்ன கீர்த்தி சொல்ற ”
“ உண்மையதான் அக்கா சொல்றேன். இப்ப நீ லவ் பண்றேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் என் மனசே நிம்மதியா இருக்கு. இப்படி ஒருத்தன் கூட எவளும் வாழ மாட்டாக்கா. ஆனா எனக்கு இது மட்டும் தான் தெரிய மாட்டேங்குது. பொண்ணுங்க விஷயத்துல வீக், தண்ணி, தம்முனு இல்லாத கெட்ட பழக்கமே இல்ல. இருந்தாலும் இவன் எப்படி நம்பர் ஒன் பிசினஸ்மேன் ஆனான்னு.”
“ நீ என்ன வேலை டி பாக்குற, இவர் கம்பெனில இவர நீ பார்த்து இருக்கியா வேற பொண்ணுங்க கூட ”
” எல்லாம் பகல்ல உத்தமன் வேஷம் தான் போடுவான். நைட்ல தான் இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடுவான் போல, ஆஃபீஸே இவன கழுவி கழுவி ஊத்தும். ஆனா இவன் வந்தா எல்லாம் பயந்து பம்பிகிட்டு தான் நிக்கும். யாருக்கும் மூஞ்சிக்கு நேரா சொல்ல தைரியம் இல்ல. எப்படி சொல்லுவாங்க காசு கொடுக்குற முதலாளி இல்ல. நானும் அப்படித்தான் கையை கட்டி நிக்க வேண்டியதுதா இருக்கு. ரெண்டு தடவை தான் பார்த்து இருக்கேன். மூன்றாவது தடவை இதோ இப்ப தான் பார்த்தேன்.
நல்ல வேலை இவனுக்கு கீழ நான் வேலை பார்க்கல”
“ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்குது கீர்த்தி. இப்படி ஒரு மாப்பிள்ளைய தான் அப்பா எனக்கு பார்த்து இருக்காரா ? இதுல இல்லாத பீத்தல் வேற எவ்ளோ பெருமை பேசினார் தெரியுமா?”
“ அப்பாவுக்கு தெரியாம தான் இருந்திருக்கும்கா. இல்லனா உனக்கு போய் இப்படி ஒரு மாப்பிள்ளைய பார்ப்பாரா ”
“இருந்தாலும் கீர்த்தி ஒரு அப்பாவா இதெல்லாம் விசாரிக்கணும்ல்ல. என்னவோ போ நீ இப்ப சொன்னதும் ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்ச ஒரு ஃபீல் கிடைக்குது.”
“ இன்னும் நீ தப்பிக்கவே இல்ல அக்கா. முதல்ல எல்லாத்தையும் பேக் பண்ணு. முக்கியமான சர்டிபிகேட் எல்லாத்தையும் வீட்ல இருந்து நான் போய் எடுத்துட்டு வரவா. ”
“ஆமாடி அதெல்லாம் எடுத்துட்டு வந்துரு. அது இல்லாம ஒண்ணுமே பண்ண முடியாது. ”
“சரி ஓகே நீ எந்த ஃபீலும் பண்ணிக்காத, உனக்கு தேவையான எல்லா அரேஞ்ச்மெண்ட்டும் நான் பாத்துக்கிறேன். ஆனா மண்டபத்துல நான் இருக்க மாட்டேன். நீ சமாளி அம்மா, அண்ணா கிட்ட மட்டும். வேற யாரும் என்ன தேட மாட்டாங்க.”
“ கீர்த்தி அப்படின்னா இந்த நிச்சயத்தை தடுக்க வழி இல்லையா”
“இந்த நிச்சயத்தை தடுக்க வழி இல்லக்கா. வேணும்னா அந்த ஆள் மோதிரத்தை போட விடாம தடுத்துரு. அது போதும். மத்தபடி அவங்க தானே பேசிப்பாங்க. நீ சும்மா பொம்மை மாதிரி உக்காந்துட்டு வந்துரு. காலையில அஞ்சு மணிக்கு முகூர்த்தம். நீ மூணு மணிக்கு கிளம்பிரு. ”
“கீர்த்தி எனக்கு பயமா இருக்கு. நான் போனதுக்கு அப்புறம் உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா ”
“ எனக்கு என்னக்கா ஆக போகுது. எனக்கும், நீ ஓடுனதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி நானும் இருந்துக்குறேன்.”
“ரம்யாவோ சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு எல்லாம் சரியா வரும்ல்ல ”
“எல்லாம் சரியா வரும். முதல்ல உன் ஃபோனை குடு. உன் ஆளுக்கு போன் போட்டு, காலையில பஸ் ஸ்டாண்டுக்கு வர சொல்லு, நீயும் இங்க இருந்து கிளம்பினா சரியா இருக்கும். ரெண்டு பேரும் பஸ் புடிச்சு ஏதாவது ஒரு ஊருக்கு போயிடுங்க. இந்த ஊர்ல இருந்தா கண்டிப்பா கண்டுபிடிச்சிருவாங்க. ”
“எங்களுக்கு எந்த ஊரு தெரியும் கீர்த்தி. திடீர்னு எங்க போவோம் நாங்க .”
“அவருக்கும் இதுதான் சொந்த ஊரா அக்கா.”
“ ஆமா”
“ அப்படின்னா நீ நான் சொல்ற மாதிரி செய்றியா? என்னோட வீட்டு அட்ரஸ் கொடுக்கிறேன். கீ உன் கையில கொடுத்துடுறேன். பேசாம ரெண்டு பேரும் நான் தங்கி இருக்க ரெண்ட் ஹவுஸ்க்கு போயிடுறீங்களா?”
“ கீர்த்தி உனக்கு எதுவும் பிரச்சனை வந்துட போகுது”
“ எனக்கு என்னக்கா பிரச்சனை வரப்போகுது. அந்த ஹவுஸ் ஓனர் பக்கத்துல இல்ல. நீங்க போய் பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, எனக்கு ஃபோன் பண்ணா கூட நான் எப்படி போகணும்னு ரூட்டு சொல்லுவேன். ”
“ எனக்கு அம்மாவை நினைச்சா தான் கவலையா இருக்கு. எப்படியும் அம்மாவுக்கு நான் சொல்லி புரிய வச்சிடுவேன். ”
“நீ என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி, அப்பா பார்த்த மாப்பிள்ளைய பத்தி சொல்லிரு கீர்த்தி அதுக்கப்புறம் அம்மாவே முடிவு பண்ணிப்பாங்க. ”
“ சரி ஓகே நமக்கு டைம் இல்ல அக்கா. நான் கிளம்புறேன் இப்படியே ”
“ ஏதாவது சாப்பிட்டு போடி. ”
“ இப்பதான கொடுத்தீங்க. அதுவே போதும். நம்ம வீட்டு சாவியை எப்போதும் வைக்கிற இடத்துல தானே வச்சிருக்கீங்க. இல்ல மாத்தி எங்கேயாவது வச்சிட்டீங்களா?”
“ இல்லடா எப்பவும் வைக்கிற இடம் தான் ”
“ அப்ப சரி. அக்கா கால் பண்ணி மாமாவுக்கு விஷயத்தை சொல்லிவிட்டு அதுக்கப்புறம் கீழே போ”
“சரிடி நீ பாத்து போ. ஏதாவது சொல்லனும்னா எனக்கு கால் பண்ணு”
ஓகே.
அத்தியாயம் 6
“நம்ம வீட்டு சாவியை எப்போதும் வைக்கிற இடத்துல தானே அக்கா வச்சிருக்கீங்க. இல்ல மாத்தி எங்கேயாவது வச்சிட்டீங்களா?”
“ இல்லடா எப்பவும் வைக்கிற இடம் தான் ”
“ அப்ப சரி. அக்கா கால் பண்ணி மாமாவுக்கு விஷயத்தை சொல்லிட்டு அதுக்கப்புறம் கீழே போ”
“ ம்ம் நான் என்ன பாத்துக்குறேன். நீ பார்த்து போயிட்டு வா. நைட் டைமா இருக்கு. ”
“ நீ கவலைப்படாதே அக்கா நான் என்ன தனியாவா போக போறேன். குமரன் மாமா என் கூட தான் வருவாங்க. ”
“ஓ அப்ப சரி அவன் உன்ன பாத்துப்பான் ”
“என்னக்கா ஒரு மாதிரி சொல்ற நீ சொல்ற மாடுலேஷனே சரியில்லயே ”
“அது ஒன்னுமில்ல. குமரனுக்கு உன் மேல ஒரு கண்ணு ”
“ ஐயோ இது எப்ப இருந்து ”
” ரொம்ப நாளாவே தான். உன்ன பத்தி கேட்டுட்டே இருப்பான். அப்படியே உன்ன பத்தி சொல்லும்போது அவனோட ஃபேஸ் ரியாக்ஷன பார்க்கணுமே”
“என்னக்கா நீ இந்த விஷயத்தை இவ்வளவு லேட்டா சொல்றியே, பரவால்ல இனிமேல் மாமா கிட்ட பேசி அவர் வாயாலே உண்மையை சொல்ல வச்சிவிடுவேன். என்ன லவ் பண்ணவும் ஒரு ஆள் இருக்கு ” என்று கீர்த்தி சிரிப்புடன் கூற,
“கீர்த்தி நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ என்ன விளையாட்டுக்கு பேசிட்டு இருக்கடி.”
“விளையாடல சிஸ்டா . நானும் சீரியஸா தான் பேசுறேன். மாமாவோட அம்மாவுக்கு தெரியுமா இந்த விஷயம். தெரிஞ்சது சாமி ஆடிடும். ”
“ஏன் உனக்கு குமரன பிடிக்காதா?”
” மாமாவ பிடிக்காம இருக்குமா, அப்பா ஒவ்வொரு தடவ திட்டும் போதும் என்ன சிரிக்க வைக்கிறதே மாமா தான. நான் சென்னை போய் ரொம்ப மிஸ் பண்ணேனா அது குமரன் மாமாவ தான். அப்படிப்பட்டவரை நான் எப்படி வேணான்னு சொல்லுவேன். ஆனா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் சுத்தி இருக்கவங்களுக்கு சுத்தமா இருக்காது.
“ எதுக்கு பிரச்சனைய கிளப்பிக்கிட்டு, இதோ இந்த கல்யாணத்துல மாமா கூட ஜாலியா பேசி என்ஜாய் பண்ணிட்டு நான் பொட்டிய கட்டிட்டு சென்னை கிளம்பிடுவேன். கண்டிப்பா இந்த ஊர் மாப்பிள்ளை எனக்கு வேணாம்க்கா. சென்னைல தான் இனிமே நான் இருக்கபோறேன். ஒரு மாப்பிள்ளை பார்த்து செட்டில் ஆயிடுவேன். ”
“நீ வேணும்னா குமரன கல்யாணம் பண்ணி சென்னை கூட்டிட்டு போ ”
“ அக்கா நீ என்ன உன் கல்யாணத்துக்கு நான் பிளான் போட்டு கொடுத்தா, என் கல்யாணத்துக்கு நீ ப்ளான் போடுறியா. உன் கல்யாணத்துல நடக்க போற கலவரத்தையே எப்படி அம்மா தாங்க போகிறாங்கன்னு தெரியல. முதல்ல உன் கல்யாணம் நடக்கட்டும், அண்ணா கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் எனக்கு ஒரு நல்ல வேலை தேடணும். அதுக்கப்புறம் தான் என் கல்யாணத்தைப் பத்தி நான் யோசிக்கவே முடியும் ”
அடுத்து ரம்யா ஏதோ பேச வருவதற்கு முன்பே,
“ போதும் போதும்க்கா. இதுக்கு மேல நீ எது பேசினாலும் அது நடக்காது. நடக்காதத எதுக்கு பேசணும். முதல்ல நீ உன் ஆளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லு. அப்பதான் அவரும் அலார்ட்டா இருப்பாரு. உனக்கு கல்யாணம்னு சோகத்துல தண்ணி அடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடக்க போறாரு. ”
“ கீர்த்தி அவருக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது. ”
“கிடையாது தான் கா. ஆனா உன்ன பிரிஞ்ச துக்கத்துல பழக்கம் இல்லாம கூட அடிக்கலாம் இல்லையா, அதுக்காக சொல்றேன். ”
“ம்ம் நீ சொல்றதும் சரிதாண்டி. அப்படி நடக்கவும் சான்ஸ் இருக்கு. லாஸ்ட்டா என்கிட்ட பேசுறப்ப கூட ரொம்ப வெக்ஸ் ஆகி பேசினாரு. எதுக்கும் பேசிட்டுறது நல்லது தான் ” என்று ரம்யா ஃபோன் பேச செல்ல,
கீர்த்தி அறையில் இருந்து வெளியே வந்தவள். சுற்றி முற்றி குமரனை தான் தேடிக் கொண்டிருந்தாள்.
– தொடரும்
