அத்தியாயம் 5

சக்கரவர்த்தி இல்லத்தின் கீழ் தளத்தில் முன்புறம் வரவேற்பு பகுதி, அதைத் தாண்டி உள்ளே சென்றால், இடப்புறம் சமையலறை, பூஜையறை, டைனிங் ஹால், மத்தியில் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளுடன் பெரிய ஹால், வலப்புறம் ராதாவின் அறை, ருக்மணியின் அறை, அதோடு உறவினர்கள் வந்தால் தங்குவதற்கான அறைகளும் உள்ளன.

முதல் தளத்தில் சிறியவர்கள் நால்வருக்குமான அறை இருக்கிறது. வலப்புறம் மிதுன், வைஷாலி அறைகளும், இடப்புறம் தேவ், சூர்யா அறைகளும் இருந்தன.

படுக்கையறைகளைத் தவிர மற்ற எல்லா அறைகளிலும், வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என எல்லா இடங்களிலும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 

அதற்கான சர்வர் ரூமும், கண்காணிப்பு ஆட்களும் வீட்டிற்கு வெளியே இருந்த ஒரு கெஸ்ட் ஹவுஸில் இருக்க, மிதுன் ஆபீஸில் அவனுடைய லேப்டாப்பில் எப்போதாவது அந்த வீடியோக்களை பார்ப்பான். இன்று காலை டைனிங் டேபிளில் நடந்த களேபரத்தை வீடியோவில் பார்த்தவன், ஆபீஸில் இருந்து போனில் அழைத்து, வேலையாட்களிடம் இனிமேல் தினமும் நதியாவுக்கு உணவை அறைக்கே எடுத்துச் செல்லும்படி உத்தரவிட்டிருந்தான். 

மிதுனுக்கு அவள் மேல் பரிதாபம் எல்லாம் இல்லை. இரவு அவன் காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டும் அல்லவா, அதற்குத்தான். 

“எங்க ரூபிணி அண்ணி மித்து அண்ணாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னாங்க. ஆனா அண்ணன் தான் தேவ் அண்ணனுக்கு ரூபிணியை கல்யாணம் பண்ணி வச்சுடுச்சு” என வைஷாலி சொல்லிட,

“எதுக்கு உங்க மித்து அண்ணன் ரூபிணியை கல்யாணம் பண்ணல?” நதியா ஆர்வமாய் கேட்டாள்.

“அவர் தான் உங்களை லவ் பண்றாரே?”

“ஆமா.. அவர் என்னை லவ் பண்றாருல” 

“போங்க அண்ணி நீங்க சிரிக்காம காமெடி பண்றீங்க” வைஷாலி உண்மை தெரியாது பேசிட,

‘யாரு நானா? என் வாழ்க்கையே சிரிப்பா சிரிச்சு போய் இருக்கு’ மனதோடு புலம்பினாள் நதியா.

தோழியிடம் இருந்து போன் அழைப்பு வந்ததால் வைஷாலி எழுந்து அவளது அறைக்குச் சென்றுவிட, விட்டால் போதும் என்று நினைத்த நதியா அசந்து தூங்கி விட்டாள். மதிய உணவு தர மணி அடித்தும் எழவில்லை. அவள் மாலை கண் விழித்து முகம் கழுவிட, டீ ஸ்நாக்ஸ் வந்தது. 

சாப்பிட்டு முடித்து அந்த அறையை சுற்றிப் பார்த்தாள். மெத்தைக்கு வலப்புறம் கொஞ்சம் தள்ளி மிதுனின் ஆளுயர புகைப்படம் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்தது. புகைப்படத்தில் கருப்பு நிற கோட் சூட் அணிந்து, ஒரு பாக்கெட்டில் கை நுழைத்தவாறு, மிடுக்காய், கன்னத்தில் கன்னக்குழி தெரியுமளவு சிரித்தவாறு நின்றிருந்தான். புகைப்படத்தில் இருந்த அவன் முகத்தையே உற்று பார்த்தவள், 

“இவருக்கு சிரிக்க தெரியுமா? ச்சீ.. ச்சீ.. இது AI எடிட்டிங்கா இருக்கும். அவராவது இவ்வளவு அழகா சிரிக்கிறதாவது. ரோபா மாதிரியே நடக்கிறதும், பேசுறதும்” என்று புலம்பிக் கொண்டே திரும்பினாள்.

“இதென்ன இங்க ஒரு போட்டோ வைச்சிருக்காங்க. இதான் அவர் ஒரிஜினல் போட்டோ. உர்ருன்னு விறைப்பா இருக்காரு. ஷர்ட் டோட சேர்த்து கோட் டுக்கும் கஞ்சி போடுவார் போல” அவள் தன்னோடு பேசிக் கொண்டேயிருக்க போட்டோ அசைந்தது.

அய்யோ போட்டோ இல்ல, அது மிதுன் தான். மிதுன் ரூமுக்குள்ள வரும்போது, பாஸ்வேர்டு போட்டு வரமாட்டான். அவனோட தம்ப் (பெருவிரல் ரேகை) ப்ரெஸ் பண்ணிட்டு வருவான். அதனால சத்தம் வராது. 

அவன் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் உடை மாற்ற சென்றிருக்க, நதியா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றிருந்தாள். அவன் சாப்பிடுவதற்காக கீழே டைனிங் ஹாலுக்குச் சென்றிட, நதியாவுக்கு அறைக்கே உணவு வந்தது. 

டைனிங் டேபிளில் அனைவரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, “அண்ணா அண்ணியை யும் கீழ சாப்பிட கூப்பிட்டு வந்திருக்கலாம்ல” வைஷாலி மிதுனிடம் கேட்டிட, “அவ கொஞ்சம் ஷை டைப், அதான் நான் அவளை ரூம்லேயே சாப்பிட சொல்லிட்டேன்” என்று தங்கையை சமாளித்தான்.

“அதெல்லாம் இல்ல. அண்ணி நல்லா ஜாலியா பேசுறாங்க. நீங்க ஆபீஸுக்கு போன பிறகு நானும் அவங்களும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்” தங்கை அழகாய் பேசிட, மிதுன் சிரித்தவாறே கேட்டிருந்தான்.

“இவனையே நான் உனக்கு அண்ணன் இல்லன்னு சொல்லுறேன். இவன் பொண்டாட்டி உனக்கு அண்ணியா? தகுதி தராதரம் தெரியாம அவ கிட்ட போய் பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத. அப்புறம் உன் அண்ணனை மயக்குன மாதிரி உன்னையும் பேசியே மயக்கிடுவா” ராதா அவரது மகளை கடிந்திட, “அம்மா என்ன இதெல்லாம். வைஷு சின்னப் பொண்ணு. அவ கிட்ட எதுக்கு இந்த மாதிரிலாம் பேசுறீங்க” அவர் சொன்ன வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து சொன்னான்.

“சூர்யா அவனை என்கிட்ட பேச வேணாம்னு சொல்லு. பொண்டாட்டியை சொன்னதும் அவனுக்கு கோபம் வருதா? நான் சாப்பிடட்டுமா? இல்லை எழுந்து போகட்டுமா?” பொறுப்பாய் இருந்த மகன் இப்படியெல்லாம் செய்கிறானே என்ற ஆதங்கத்தில் அவர் பேசிட, மிதுன் கோபத்தில் சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்து அறைக்குச் சென்றான். 

அவன் தம்பிகளுக்கும், தங்கைக்கும் அண்ணன் சாப்பிடாமல் சென்றதில் வருத்தம் தான். சக்கரவர்த்தியின் மறைவிற்கு பிறகு பள்ளி பயிலும் குழந்தைகளாய் இருந்தவர்களை அரவணைத்து, நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் கேட்கும்முன் செய்து, மிதுன் அவர்களுக்கு அண்ணனாக மட்டும் இல்லாமல் தந்தையாய் இருக்கிறான். அவன் மொத்த உலகமும் இந்த குடும்பம் தான். 

பெரியவன் தேவ் முதுநிலை பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து முடித்ததும், அவனிடம் சக்கரவர்த்தி நிறுவனத்தின் சில கிளைகளின் பொறுப்பை ஒப்படைத்தான். முழு பொறுப்பை ஒப்படைத்தாலும் தம்பி அதை திறம்பட நிர்வகிக்கிறானா என்றும் கவனித்தும் கொள்கிறான்.

சின்னவன் சூர்யா இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் இறுதியாண்டில் இருக்கிறான். சூர்யாவிற்கு பிசினஸில் நாட்டமில்லை என்றாலும், மிதுன் அவனுக்கு பிடித்த துறையிலேயே பிசினஸ் ஏற்படுத்தி தரும் எண்ணத்தில் இருக்கிறான். 

மிதுன் போலவே அவனுடைய தம்பிகளும், தங்கையும் அவன் மேல் மரியாதை கலந்த அன்பை வைத்திருக்கின்றனர். அண்ணன் சொன்னால் “சரி..” என்பார்கள் அவ்வளவுதான், மறுபேச்சு பேசமாட்டார்கள். மிதுனும் அவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை ஒருபோதும் செய்திடமாட்டான்.

அறைக்குச் சென்றவன் மெத்தையில் காலை நீட்டி சாய்ந்து அமர்ந்து கண்கள் மூடி யோசனையில் இருந்தான். கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம் டைனிங் டேபிளில் சாப்பிடும் போது தம்பி தங்கையின் குறும்புகளும், கிண்டல்களும், சிரிப்பு சத்தங்களும் நிறைந்திருக்கும். 

பிசினஸில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், அவர்களோடு இருக்கையில் அத்தனையும் பறந்து விடும். மிதுன் வீட்டில் இருக்கும் போது அவர்கள் போடும் சின்ன சின்ன சண்டைகளில் மனம் விட்டு சிரித்தபடி இருப்பான். 

அவன் அம்மாவிற்கு சகலமும் மிதுன் தான். 20 வயதில் பொறுப்பாய் குடும்பத் தலைவனாய் மாறி, அப்பாவின் இழப்பை ஈடு செய்து, உடைந்து போயிருந்த அம்மாவிற்கு ஆறுதலாக இருந்தவன் அல்லவா. மகனுக்கு பிடித்ததை அவரே சமைப்பதும், அவன் வீட்டில் இருந்தால் அவனுக்கு அருகிலிருந்து தேவையானதை எல்லாம் செய்வதும் தான் அவருக்கு முக்கியமான வேலையே.  

இன்று அம்மாவின் கோபமும், தம்பிகளின் விலகலும் அவனுக்கு வலியைத்தான் தந்தன. இருந்தாலும் என்ன செய்வது, அவனும் இப்போது சூழ்நிலைக் கைதி தான். 

அறைக்கு வெளியே இருந்த பால்கனியில் நின்று, நதியா அவளுடைய தோழியிடம் போனில் பேசிவிட்டு அப்போதுதான் அறைக்குள் வந்தாள். அவன் கண்களை மூடியிருக்க, ‘அப்பாடா தூங்குறார் போல..’ நிம்மதி பெருமூச்சு விட்டு அவள் மெத்தைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். “நதியா வேக்கப், குளிச்சுட்டு வா” இறுகிப் போயிருந்த குரலில் அவன் சொல்லிட, திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.

“சார்..” அவள் தயக்கமாய் அவனை பார்த்திட, “வாட்? எழுந்து குளி போ” பொறுமையாகத் தான் சொன்னான்.

“சார்.. நான் தான் காலையிலேயே குளிச்சுட்டேனே.. இப்போ வேற குளிக்கணுமா?” 

“நான் உன்னை இப்போ தான் குளிச்சுட்டு வர சொன்னேன்”

“சார்.. இந்நேரத்துக்கு பச்சை தண்ணில குளிக்க முடியல”

“ஹீட்டர் ஆன் பண்ணிக்க வேண்டியது தான?”

“அது எப்படி ஆன் பண்றது? இந்த டேப் வித்தியாசமா இருக்கு. அதை எப்படி யூஸ் பண்றதுன்னு தெரியல” அவள் கேட்பதும் நியாயம் தான். இப்போதிருக்கும் குழாய் வகைகள் ஒவ்வொன்றும் ஒருமாதிரி இருக்கின்றன. எப்படி அதை பிரஸ் செய்வது, எப்படி அதை திருகுவது, இழுக்க வேண்டுமா? ஆட்டோமேட்டிக்கா? இவ்வளவு பிரச்சனை அதில் இருக்கிறது.

“வீட்ல என்னதான் பண்ற நீ? மெயிட் வந்தா அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க மாட்டியா?” என கேட்டவன், அவளை கையைப் பிடித்து பாத்ரூமிற்குள் இழுத்துச் சென்று இங்க இருக்கிறது ஹீட்டர் சுவிட்ச். குளிக்கிறதுக்கு டென் மினிட்ஸ் முன்னாடி ஆன் பண்ணிடு. இங்க இருக்கிற கண்ட்ரோலை இப்படி இப்படி மாத்தினா டேப், ஷவர், பாத்டப், ஹேன்ட் ஷவர்ல ஹாட் வாட்டர் வரும். என்ன புரிஞ்சதா?” சிறு குழந்தைக்கு பாடம் சொல்லித் தருவதை போல சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, செக் செய்கிறேன் என்று அந்த கண்ட்ரோலை அவள் அசைத்திட ஷவரில் இருந்து தண்ணீர் வர, அதன் கீழே நின்றிருந்தவன் மேல் தண்ணீர் விழுந்தது. பதற்றத்தில் அதை மூட தெரியாமல் தண்ணீரை அவள் அதிகமாக்கிட, மிதுன் நீரை உணர்ந்து விலகி நிற்பதற்குள் தொப்பலாக நனைந்திருந்தான். 

ஒருவழியாக அவன் குழாயை நிறுத்தியிருக்க, முழுக்க நனைந்திருந்தவனை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை மடித்து, “சாரி சார்..தெரியாம.. ” அவள் சொல்லி முடிப்பதற்குள், அவன் விட்ட அறையில் அவளுடைய கன்னம் சிவந்திருந்தது. 

அவள் அதிர்ச்சியாய் கன்னத்தைப் பிடித்தவாறு நின்றிருக்க, “ஸ்டுபிட்.. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் வச்சுக்காத. தொலைச்சுடுவேன். டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா குளிச்சுட்டு வா” அவன் ஆக்ரோஷமாய் கத்திச் சென்றிட, அழுது கொண்டே அவன் கோபத்திற்கு பயந்து சீக்கிரமே குளித்து வெளியே சென்றாள்.

மெத்தையில் அமர்ந்திருந்தவனை அவள் பார்த்திட, அவன் காட்டிய கண் ஜாடையிலேயே உடைகளைக் களைந்து மெத்தையில் படுத்தாள். நதியா அழுவது தெரிந்திருந்தும், அவன் தன்னுடைய கடமையில் முனைப்பாய் இருக்க, கோபமும் கண்ணீருமாய் தலையை பக்கவாட்டில் திருப்பி தலையணையை நனைத்தவாறு இருந்தாள். 

அப்புறம் அடிச்சா அழாம சிரிக்கவா செய்வா? அதுவும் அவன் முரட்டுக் கையை வச்சு அடிச்சா? லாஜிக்காக யோசித்தான் மிதுன்.

(அடிக்கிறதையும் அடிச்சுட்டு யோசனையை பாரு)

அவன் விலகி படுத்திட, இன்னும் கொஞ்சம் அழுதாள். அவள் எழுந்து பாத்ரூம் சென்று உடை மாற்றி வரும்வரை அமைதியாய் இருந்தவன், அதன்பின் “ட்ரெஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டு வந்து படு” என்க, கொலை வெறியோடு அவனைப் பார்த்தாள். 

‘இதுக்கு அந்த பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். நைட் வரைக்கும் உன் நிலைமை இதுதான்’ மனதிற்குள்ளே பேசியவள் அவன் அடித்த கோபத்தையும் தன் உடையின் மீது காட்டி, அதை கழற்றி தூக்கி எறிந்துவிட்டு படுத்துக் கொண்டாள்.  

‘இது ஒரு வேலை. இதுக்கு வந்திருக்கிற நான் ஒரு டேஷு’ தன்னை அர்ச்சித்துக் கொண்டே படுத்திருந்தாள். எது எப்படி போனா என்ன? நம்ம மிதுனுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மட்டும் தான் முக்கியம். சாரி.. கட்டுப்பாடு மட்டும் மிஸ் ஆகிடுச்சு. 

அவன் கட்டுப்பாடின்றி இரவெல்லாம் அவளுடன் கூடலில் இருந்திட, அசதியில் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை. 

நதியா தன்னுடைய போனில் ஒரு அபாய சத்தத்தை அலாரம் வைத்து காலையில் சீக்கிரமே கண் விழித்து, குளிக்க சென்றாள்.

அந்த சத்தத்தில் அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்த மிதுன், கோபத்தை அவள் மீது காட்ட முடியாமல் தலையணையின் மீது காட்டி, அதை தூக்கி எறிந்து விட்டு படுத்துக் கொண்டான். 

நதியா அவனைப் பழிவாங்கும் நோக்கத்தில் எதையும் செய்யவில்லை. ‘வேலைக்கு வந்தாச்சு. சரியாக இருப்போமே’ என்ற எண்ணத்தில் தான் அவள் அப்படி நடந்துகொண்டாள். 

❤️‍🔥மோகம் தீர்ப்பாள்❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page