“சார்…” என்று தயக்கமாய் நின்றவளை, ‘என்ன’ என்பதைப் போல் ஏறிட்டுப் பார்த்தான். “சார்.. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்” என்று இழுத்தவளுக்கு, அவனது கூர்மையான பார்வையில் வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறின.
“யூ டாமிட்… என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? இவ்வளவு தூரம் வந்த பிறகு, இப்போ டைம் கேட்டா எப்படி? உன்னோட அம்மா என் கஸ்டடியிலதான் இருக்காங்க, மறந்துடுச்சா? முதல்ல நீ வெளில போ… என்னோட நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. அதோட வேல்யூ தெரியுமா உனக்கு? நீயும் வேணாம், உன் அக்ரிமெண்ட்டும் வேணாம். நீ கிளம்பு… ஸ்டுபிட்!” அனல் சிந்தும் விழிகளோடு, பற்களைக் கடித்தபடி வார்த்தைகளைக் கொட்டியிருந்தான்.
அவன் கோபத்தைக் கண்டு மிரண்டவள், “சாரி சார்… இனிமே இப்படிக் கேட்க மாட்டேன். நீங்க என்ன பண்ணச் சொன்னாலும் பண்றேன். அக்ரிமெண்டையெல்லாம் கேன்சல் பண்ணிடாதீங்க” என்று கண்ணீரோடு விம்மிட, கண்களை மூடிப் பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “சரி, போய் குளிச்சுட்டு வா” என்றான்.
மிதுன் அவளுக்குப் பாவமெல்லாம் பார்க்கவில்லை. அவனுடைய வேலை நடக்க வேண்டுமே, அதற்காகத்தான் இத்தனை பொறுமை!
நதியா தன் சூட்கேஸைத் திறந்து நைட் டிரஸ்ஸை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வெளியே வந்தவள் மெத்தைக்கு அருகே வர, “டிரஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டுப் படு” என்று மிதுன் உத்தரவிட்டதும், திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“ஹான்… என்ன சொன்னீங்க?!”
“உன்னோட ஃபுல் டிரஸ்ஸையும் ரிமூவ் பண்ணிட்டுப் படு” என்று மிதுன் கர்ஜிக்க, வேகவேகமாக உடைகளைக் களைந்து மெத்தையில் படுத்தாள். அவன் தன் மேலாடையை அவிழ்க்க, இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டாள்.
“காலை தூக்கு…” அவன் அதிகாரக்குரலில் கட்டளையிட,
“ஹான்…” புரியாத பேதையவள் விழித்தாள்.
“உன்னோட ரெண்டு காலையும் தூக்கி பெட் மேல வை…”
அவள் கால்களைத் தூக்கி மெத்தை மீது வைக்க, பாதி விழுந்தும் விழாமலும் மிதுன் அவளுடைய பெண்மையை ஆக்கிரமித்தான். தன்னிச்சையாக அவளது கைகள் அவன் தோளைப் பிடிக்க, விருட்டென்று அதைத் தட்டிவிட்டவன் தன் பழுப்பு நிற விழிகளால் அவளை நோக்கி அனல் பார்வையை வீசிட, பாவையவள் முகம் திருப்பிக்கொண்டாள்.
வேதனை தாங்க முடியாமல் பல்லைக் கடித்து, மெத்தை விரிப்பை கைகளால் இறுக்கி, மெத்தையில் கால் விரல்களை அழுத்தமாக ஊன்றி வலி பொறுத்தாள்.
அவளுக்கு வலியோடு சேர்த்து உயிரணுக்களையும் தந்தவன் விலகிப் படுத்துக்கொள்ள, போர்வையை தலை வரை போர்த்தி கால்களை குறுக்கி, சுருண்டு படுத்தவாறு அழுதாள்.
காதல், திருமணம் என அவளுக்கிருந்த எல்லாக் கனவுகளும் அழிந்திட, காலம் அவளைச் சூழ்நிலைக் கைதியாக்கி நிறுத்தியிருக்க, ‘எனக்கேன் இப்படி ஒரு நிலை?’ என நினைத்துக் கண்ணீரில் கரைந்தாள்.
அவளுடைய விசும்பல் சத்தத்தையும், அழுவதால் அவள் முதுகு குலுங்குவதையும் மிதுன் சலனமின்றிப் பார்த்திருந்தான்.
‘அவள் தன் தாய்க்காக, அவருடைய சிகிச்சைக்காகத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள்’ என்பது மிதுன் அறிந்ததே. அவளை அவன் தேர்ந்தெடுத்ததற்கான முதன்மைக் காரணமும் அதுதான். சூழ்நிலைக் கைதியாய் இருப்பவள் நிச்சயம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க மாட்டாள் என்ற நம்பிக்கைதான் அவனுக்கு.
‘எந்தப் பெண்ணும் இப்படி ஒரு நிலையில் இருந்தால் வருந்தத்தான் செய்வாள்’ என்று யோசித்தவன், அவளுக்கு ஆறுதல் சொல்ல முற்படவில்லை. அது அவனுக்கு அவசியமற்ற ஒன்று!
நதியா அழுது முடித்து உடைகளை அணிந்துகொண்டவள், குளியலறைக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்தில் முகம் துடைத்தபடி வெளியே வந்து அவனைப் பார்க்க, டீஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தவன் மடிக்கணினியோடு மெத்தையில் அமர்ந்திருந்தான்.
“தூங்கலையா?” மிதுன் மெல்லிய குரலில் வினவ, “இன்னும் இல்ல…” தழுதழுத்த குரலோடு பதிலளித்தாள். “டிரஸ்ஸை ரிமூவ் பண்ணிட்டுப் படு” என்று அவன் கூறியதும் திகைத்து நின்றவள், சட்டென நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவனது பழுப்பு நிற விழிகளை இவள் கண்கள் ஒருகணம் சந்தித்து மீண்டிட, அவளுக்குத் தெரியும் இது வேண்டுகோள் இல்லை, கட்டளை.
மௌனமாய் உடைகளைக் களைந்து, கால்களை தூக்கியவாறு மெத்தையில் படுத்தாள். மனதிற்குள் காதலின்றி, இதமான செல்லச் சீண்டல்களின்றி, வலி என்றால் அரவணைத்திடும் கரங்களின்றி கடமையாய் கூடலை நிகழ்த்தினான்.
பகலில் தூங்கியதால் அவளுக்கு உறக்கம் வரவில்லை, அவள் தூங்க நினைத்தாலும் அவன் விடுவதாயில்லை. அந்த இரவு முழுவதும் அவனது மோகப்பசிக்கு இரையானாள்.
“நதியாமா… விடிஞ்சிருச்சுடா, இன்னும் தூங்கிட்டு இருக்க. சீக்கிரம் கிளம்பு. லேட்டானா அப்புறம் சாப்பிட முடியாது. கண்ணைத் திறந்து பாரு என் செல்லக்குட்டில!” நதியாவின் தந்தை மூர்த்தி, அவள் தலை வருடி அவளை எழுப்ப, அவளோ அசையவில்லையே!
“எழுந்திருமா… அய்யோ என் பொண்ணு அழகா தூங்குறா! அவளை எழுப்ப மனசே வரலையே” என்று மூர்த்தி கெஞ்சிட, அங்கு வந்த நதியாவின் தாய் சாந்தி, “இப்படியே அவளைச் சீராட்டிட்டு இருங்க. உங்க பொண்ணு நாளைப்பின்னே கல்யாணம் ஆகிப் புருஷன் வீட்டுக்குப் போயிட்டா, வர்றவன் இப்படி கொஞ்சிதான் எழுப்புவானாக்கும்? முதுகிலேயே ரெண்டு போடுவான்” எனக் கோபமாய் அவள் முதுகில் அடிக்க, துள்ளி எழுந்தாள் நதியா.
“அப்பா… இந்தச் சாந்திம்மா நமக்கு வேணாம், டிவோர்ஸ் பண்ணிடுங்க. நான் வேற நல்ல அம்மாவைப் பார்த்து உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். வர வர இவங்க டார்ச்சர் தாங்கல…” என்று அவள் சுட்டித்தனமாகச் சிரிக்க,
“அடிக் கழுதை… உனக்குக் கல்யாணம் பண்ணனும்னு பேசினா, நீ உன் அப்பாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறியா? உன்னை…” சாந்தி அவளை அடிக்கத் துரத்த, நதியா வேகமாக ஓடி குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.
“எல்லாம் நீங்க தர்ற செல்லம்தான்” என்று சாந்தி, மகளுக்கும் சேர்த்துத் தன் கணவனின் முதுகில் அடிகளைப் பரிசாகத் தந்தார்.
தண்ணீர் அவளை நனைக்கத் தொடங்கியதும், ‘என்ன, ஷவரைத் திறக்காமலேயே தண்ணி வருது?’ நதியா கண்களை மெல்ல மூடித் திறக்க, மிதுன் ஆவேசமாய் நின்றிருந்தான். அவளை இத்தனை நேரமாய் எழுப்பிப் பார்த்தவன், அவள் விழிக்காததால் குவளையிலிருந்து நீரை அவள் மீது ஊற்றியிருந்தான்.
அவன் கோபமுகத்தைக் கண்டு அரண்டு போய் சட்டென நதியா எழுந்தமர்ந்தபோது, அவளுக்கு மேல் இருந்த போர்வை விலகியது. அவள் அணிந்திருந்த சங்கிலியைத் தவிர உடலில் வேறு ஆடைகள் எதுவுமில்லை. அவன் வேகமாகத் திரும்பிக் கொள்ள, பதற்றத்துடன் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.
‘நான் எத்தனை மணிக்குத் தூங்கினேன்? இப்படியேவா நைட் முழுக்க இருந்தேன்? அய்யோ, நிம்மதியா தூங்கக்கூட முடியலையே’ மனதிற்குள் புலம்பியவாறு அவள் நின்றிருக்க, குளியலறை கதவு ஓங்கித் தட்டப்படும் சத்தம் கேட்டதும், அவசர அவசரமாகத் தன் குளியலை முடித்து உடை மாற்றி வெளியே சென்றாள்.
“நதியா… நீ பேசிக்காவே ரொம்ப சோம்பேறியா? யூ ஆர் வேஸ்டிங் மை டைம். லிசன்… இனிமே இப்படியெல்லாம் பண்ணாத. நான் கிளம்புறேன். நீ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு” மிதுன் தன் தாடையைத் தடவியபடி, கண்கள் சுருக்கி அவளை உற்றுநோக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
“அப்பாடா… இப்போ நிம்மதியாத் தூங்கலாம்” என மெத்தையில் விழுந்தவள் நித்திரைக்குச் செல்ல, அழைப்பு மணி சத்தம் கேட்டு விழித்தாள். வாசலில் நின்றவர்கள் யாரென்று பார்த்துவிட்டுக் கதவைத் திறந்தாள்.
உள்ளே நுழைந்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அதிவேகத்தில் அந்த அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். நதியா அவர்களை விசித்திரமாகப் பார்த்திருக்க, வேலையாட்களில் ஒருவர், “நீங்க போய் சாப்பிடுங்கம்மா… அதுக்குள்ள நாங்க கிளீன் பண்ணிடுவோம்” என்றார்.
“வாரம் ஒருதடவையா கிளீன் பண்ணுவீங்க?” அவள் கேட்க, “இல்லம்மா… மிதுன் சார் ரூம் மட்டும் தினமும் கிளீன் பண்ணி, தினமும் பெட்ஷீட், தலையணை உறை, ஜன்னல் திரை, டேபிள் உறை எல்லாம் மாத்தணும். மத்தவங்க ரூம் வாரம் ஒருநாள்தான் பண்ணுவோம். சாருக்கு எல்லாமே சுத்தமா இருக்கணும். ஏதோ வீசிடி-னு சொல்லுவாங்களே… அது இருக்காம்!” என்று ஒரு பணிப்பெண் பேசியபடியே வேலையைச் செய்தார்.
‘ஓஹோ… ஓசிடி-யைத் தான் அப்படி சொல்றாங்களா?’ அவள் சிரித்துக் கொண்டே நின்றிருக்க, முந்தைய நாள் இரவு வேறு எதுவும் சாப்பிடாததால் இப்போது அவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது.
ருக்மணி பாட்டி தன் மகள் வீட்டிற்குச் சென்றிருக்க, ரூபிணியின் பெற்றோர் நேற்றே கிளம்பியிருந்தனர். மற்றவர்கள் உணவு மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
முதலில் சற்றுத் தயங்கியவள், வயிறு பசி தாங்காமல் கூப்பாடு போட, உணவு மேஜையில் வைஷாலிக்கு அருகே சென்று அமர்ந்தாள். வைஷு நதியாவைப் பார்த்துச் சிரித்திட, அவளும் பதிலுக்குச் சிநேகமாய்ப் புன்னகைத்துத் தனக்கான தட்டில் உணவினைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
ராதா ஆத்திரத்தில் அருகிலிருந்த பீங்கான் தட்டைத் தட்டிவிட, அது கீழே விழுந்து உடைந்த சத்தத்தில் நதியா அதிர்ந்துபோய் அவரைப் பார்த்தாள்.
“உன் அண்ணனுக்குப் புத்தி கெட்டுப்போச்சு போல. கண்டதையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டிருக்கான். என்ன சாதியோ, என்ன இனமோ… யாரோ எவரோ ஒண்ணும் தெரியல. காலைல எந்திரிச்சதும் சோத்துக்குச் செத்த மாதிரி, அறிவே இல்லாம வந்து உட்காரக் கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?” என்று தேவ்விடம் பேசுவது போல் ராதா குத்தலாகக் கூறியதும், நதியாவிற்குச் சுருக்கென்றது.
உணவருந்தாமல் மௌனமாக எழுந்து தன் அறைக்குச் சென்றாள். சுத்தம் செய்து முடித்துப் பணியாட்கள் கிளம்பியிருக்க, மெத்தையில் சாய்ந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் உடைப்பெடுத்தது.
நதியாவின் தந்தை மிதுனைப் போல இண்டர்நேஷனல் பிசினஸ்மேன் இல்லையென்றாலும், அவரும் தமிழ்நாட்டில் பெரிய பிசினஸ்மேன் தான். அவர் மருத்துவ, விவசாய மற்றும் விளையாட்டுத் துறைகளுக்குத் தேவையான துணிகளைத் தயாரிக்கும் ‘டெக்னிக்கல் டெக்ஸ்டைல்’ தொழிலைச் செய்து வந்தார்.
கால் தரையிலேயே படாமல் செல்லமாக வளர்த்த மகள், இப்படி கண்ணீரில் நனைந்திருப்பாள் என்று பெற்றவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அவள் அழுதபடி படுத்திருக்க, யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டுத் தன் கண்களைத் துடைத்தபடி எழுந்தமர்ந்தாள்.
வைஷாலிதான் வந்திருந்தாள். அந்த அறையின் டிஜிட்டல் கதவில் யார் கடவுச்சொல் போட்டுத் திறந்தாலும் ஒருவித எச்சரிக்கை ஒலி எழும்.
நதியாவுக்கு அருகில் வந்தமர்ந்தவள், “அண்ணி… நான் வைஷு, மித்து அண்ணாவோட செல்லத் தங்கச்சி. எங்க அண்ணன் என்னைப் பத்திலாம் உங்ககிட்ட பேசுவாரா?” என்று படபடவென்று குழந்தைபோல் பேசினாள்.
நதியா என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல், அவள் பேசுவதற்குத் தலையை மட்டும் ஆட்டியவாறு இருந்தாள்.
“அம்மாவுக்கு மித்து அண்ணன்தான் ஸ்பெஷல், ரொம்பப் பிடிக்கும். அதான் சொல்லாமக் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு வருத்தத்துல இருக்காங்க. கொஞ்ச நாள் போனா சரியாகிடுவாங்க” நதியாவிற்கு ஆறுதலாகப் பேசியவள், “இருங்க உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வரச் சொல்றேன்” என்று எழுந்து இண்டர்காமிற்கு அருகே சென்றாள்.
அவள் அழைப்பதற்கு முன்பே உணவுடன் வந்த வேலையாள் அழைப்பு மணியை அழுத்த, வைஷு கதவைத் திறந்ததும் அவர்கள் தட்டுகளை வைத்துவிட்டுச் சென்றனர். “நீங்க முதல்ல சாப்பிடுங்க, வாங்க…” என்று வைஷு வற்புறுத்தியதால் நதியா எழுந்து, அங்கிருந்த மேஜையில் அமர்ந்து உணவருந்தினாள்.
வயிறும் மனமும் லேசாகியிருக்க, அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். “அண்ணி… நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க! உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க. எங்க அண்ணன் லவ் பண்ணுவாருன்னு நினைச்சாலே ஆச்சரியமா இருக்கு!” என்று வைஷாலி குறும்புத்தனமாகச் சிரிக்க, நதியா தனக்குத் தெரிந்த கற்பனைச் சம்பவங்களையெல்லாம் தன்னுடைய சொந்தக் கதையாகச் சொல்லி அவளை நம்பவைத்தாள்.
வைஷாலி ஃபேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படிப்பவள், தற்போது செமஸ்டர் விடுமுறையில் இருக்கிறாள். இருவரும் கல்வி, பொழுதுபோக்கு பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். நதியாவுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, அதோடு உடல் சோர்வு வேறு. அவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றினாலும், அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடம் பேசினாள்.
❤️🔥மோகம் தீர்ப்பாள்❤️🔥
