அத்யாயம் -25

திருக்குறள்

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1295

அத்யாயம் -25

சூர்யா கையில் குழந்தையுடன் நின்றுக் கொண்டிருந்தான். 
இப்போது கடையில் பெரிய கூட்டம் இல்லை. திடீரென இரண்டு பெரிய பேருந்துகள் வந்து நிற்கவும் அதிரிலிருந்து நிறைய பேர் இறங்கினார்கள். சுற்றுலா வந்திருப்பார்கள். இப்போது ஷாப்பிங் நேரம்.

நிறைய பேர் வரவும் பேச விரும்பாதவன் சொன்னது இதுதான்.

“எப்ப என்னோட புள்ளையை நீ என்கிட்டையே மறச்சிட்டியோ இனி இந்த குழந்தையை எப்படி லீகலா எங்கிட்ட கொண்டு வரனுன்னு எனக்குத் தெரியும் . இனிமே நீ எங்கையும் ஓடவோ ஒளியவோமுடியாது.”

“ஆம்! அவன் சொல்வது சரி தான்.இனி தனக்கு ஓடி ஒளிய இடமில்லை. என்ன செய்வது? அவனின் வார்த்தைகளை கேட்டவளுக்கு உடலில் லேசான நடுக்கம் வந்தது. அவனோ அசால்டாக குழந்தையை காரில் அமர்த்திக் கொண்டு கிளம்பி விட்டான். சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தாள் அவள். எதுவும் புரியாத குழந்தையோ காரில் ஏரிய குஷியில் இவளுக்கு டாடா காட்டி விட்டு  சென்dறு விட்டான். அந்த பெரிய வோல்வோ கார் கண்ணில் இருந்து மறைந்து விட்டது. அவள் உடல் மட்டும் நடுங்கி கொண்டிருந்தது.

‘கடவுளே நான் எப்படி இந்த பிள்ளையை காப்பாத்துவேன் ‘கண்களில் நீர் தளும்பி நின்றாலும் இப்போது அழ நேரமில்லை. கடைப் பையன் வந்து அழைத்தான். வேறு என்ன? வேலைதான் அப்போது அவளை கடத்திக் கொண்டு போகிறது.

இரவில் அவன் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள். இரவுக்கு உண்ண வேண்டும் என்பது கூட அவளுக்கு நினைவில் இல்லை. பிள்ளை என்ன பண்ணுதோ? அழுதுதா என்ன சாப்பிட்டான்? அன்னைக்கு பிள்ளையை பற்றி நினைக்கவும் கவலை கொள்ளவும் விஷயங்கள் வேண்டுமா என்ன? சும்மா நின்று கொண்டிருந்தால் கூட அருகில் ஏதாவது தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து துடைத்து வீடு சுத்தம் காத்து அவன் சுத்தம் பார்த்து என்று வளர்த்துக் கொண்டிருப்பவள். இவள் படும் அவஸ்தையை பார்த்து விட்டு கார்த்திக்  அல்லது அவன் அத்தை தான் அவர்கள் வீட்டில் வைத்து இந்த பிள்ளையை வளர்த்தார்கள். அப்போதுமே மணிக்கு ஒரு முறை அவர்களுக்கு அழைத்து, குழந்தை என்ன செய்கிறான் என்று கேட்டு விடுவாள் . இப்போது  யாரோ ஒரு தெரியாதவன் தூக்கிச் சென்று விட்டான் . தெரியாதவன் என்றால் அவளுக்குத் தெரியும். குழந்தைக்குத் தெரியாது. இல்லையா? அதுவும் இல்லாமல் அவனுக்கு குழந்தையை பற்றி எதுவுமேத் தெரியாதே . அவனால் எப்படி குழந்தையை சமாளிக்க முடியும்? என் பிள்ளையை எங்கிட்ட கொடுத்துடுங்களேன் கதறிய மனதுடன் அழுகையும் கலந்து சாலையைக் கடந்து அவள் சரியாக அந்த இடம் வந்து சேர்ந்தது ஆச்சர்யம் தான் .

இங்கே இவன் மல்லாந்து படுத்திருந்தான். குழந்தைக்கு மட்டும் ஒரே ஒரு தோசை ஆர்டர் செய்து ஊட்டுவதற்குள் படாத பாடு பட்டு விட்டான். இரண்டு வாய் தான் உண்டான் குழந்தை. மிச்சம் இருந்ததை இவன் தான் உண்டான்.

உணவை வீணடிக்கக் கூடாது. ஹாஸ்டலில் சொல்லிக் கொடுத்தாலும் அவளின் வார்த்தை தான் அவனை திருத்தியது.

“ராஜா! இங்க பாருங்களேன் எவ்ளோ சாப்பாடு இப்படி கொட்டி இருக்காங்க . எனக்கு எல்லாம் இப்படி சாப்பாடு கிடைச்சதே இல்ல. வேண்டான்னா எங்க கிட்டையாவது கொடுத்திருக்கலாமில்ல ? உணவுக்கான ஏக்கம். தண்ணீருக்கான ஏக்கம் எல்லாம் அவளின் கண்களில் தான் அவன் முதன் முதலாகப் பார்த்தது . உணவை குப்பையில் கொட்டப் போனவன் தானே உண்டு முடித்தான். அவளாக இருந்திருந்தால், தேனாக தித்திக்கிறது என்று கூறி குழந்தையிடம் ஆயிரம் கதைப் பேசி இருப்பாள். இவனுக்கு அது எல்லாம் தெரியாது. அழுதுக் கொண்டே இருந்த குழந்தை தானே உறங்க ஆரம்பித்தது விட்டது. அன்னை இல்லாமல் இந்த பிள்ளையை எப்படி வளர்ப்பது? எந்த பிரச்சனையாக இருந்தாலும் பெற்றவளிடம் இருந்து குழந்தையை பிரிப்பது சரியா? சண்டைகள் சங்கடங்கள் துரோகம் ஏமாற்றம் எல்லாம் பெரியவர்களுக்குத் தானே. குழந்ததைக்கு இல்லையே என்றது மூளை . அப்படி என்றால் இந்த இரண்டு வருடங்கள் நான் பிரிந்திருக்கிறேனே. எனக்கு சொல்லக் கூட இல்லையே பாவி. ராட்சசி. மனம் சண்டைப் போட்டது. இவர்களுக்குள் நடக்கும் கலவரம் பெரியது தான்.

இப்போது காலிங் பெல் சத்தம் கேட்டது திரை  விலக்கி பார்த்தான்

அவள் தான்.

அவன் வந்து பார்த்தாலும் கதவை திறக்கவில்லை. மீண்டும் மீண்டும் பெல் அடித்து ஓய்ந்தவள் அங்கேயே அழுதுக்  கொண்டு அமர்ந்து விட்டாள் . மழையில் நனைத்திருந்தாலும் குழந்தையை விட்டு செல்ல மனம் வரவில்லை. குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்தது இரவெல்லாம் அங்கேயே தான் இருந்தாள் அவள். இரவில் திடீரென்று முழிப்பு வந்தவன் கதவை திறந்து பார்த்தபோது குளிரில் உடல் வெடவெடுக்க இருந்த தன்னுடைய முன்னாள் மனைவியைத் தான் , அவசரமாக அவளை அள்ளி எடுத்து கட்டிலில் கிடத்தியவன் உடல் எங்கும் துடைத்து முதல் உதவிகளை செய்தான். அப்போதும் நடுக்கம் குறையவில்லை. யோசித்தவன் அவள் உடைகளை களைந்து பெட் சீட் போட்டு மூடி சூடு நீர் பருகக் கொடுத்து என்று எல்லாம் செய்து விட்டான். இன்னும் நடுக்கம் குறையவில்லை. பிள்ளைக்கு என்று பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு நல்ல உணவு இல்லாமல் சக்தி எல்லாம் வடிந்து கொண்டிருந்தது. அது அவனுக்குத் தெரியாது.

  தன்னுடைய உடல் சூடு கொடுக்கலாம். அவனுக்குப் பிடிக்கவில்லை. அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவளுக்கு நடுக்கம் குறைந்து விட்டது. அரை மயக்க நிலையில் பிள்ளையை கட்டிக் கொண்டு உறங்கி விட்டாள் .

“காலையில் எழுந்து தன்னுடைய உடைகளை போட்டுக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள். இன்னும் கதிர் எழுந்திருக்கவில்லை. லேசாக உடல் அசைத்தான் கணவனும் தான். பிரிவுக்கு பிறகு பார்க்கும் மனைவியின் முகம். “இங்க வாடி” இழுக்க கைப் போனது. இவள் வேண்டாம் என்று எல்லா நினைவுகளையும் கொண்டு வந்து நிறுத்தியது மூளை.

“எங்கடி கிளம்பிட்டா?’

“என் வீட்டுக்கு “

“நீ மட்டும் ஓடு “

” அது எப்படி என் பிள்ளையை இங்க அதுவும் முகம் தெரியாதவர்கிட்ட விட முடியும்?”

“பெத்த அப்பனை முகம் தெரியாம பண்ணது நீதானே?”

“பிள்ளைக்கு அப்பாவை காட்ட வேண்டியது அம்மா தான் “

“ஓ! அப்ப என் பிள்ளைக்கு வேற எவனையாவது அப்பாவா காட்டுவியா?”

“ஓ காட்டலாமே “

“உன் கூட படுக்கறவன் எல்லாம் என் பிள்ளைக்கு அப்பா இல்லடி “

“ஓ! அப்படியா முகம் திருப்பவளின் கன்னத்தில் மாறி மாறி அரை விழுந்தது. அப்போதும் அவள் கலங்கவில்லை.

“நீங்க என்னை அடிச்சா நீங்கதான் இந்த பிள்ளைக்கு அப்பான்னு சொல்ல முடியுமா?”

மீண்டும் கோபத்தில் அவளின் கழுத்தை நெரித்தவன் உன்னை கொன்னுடுவன் ராஸ்கல். நான் என்ன பிள்ளை பெத்துக்க வக்கில்லாதவனா? அச்சு அசலா அப்படியே என்னோட உருவமா பிறந்து நிக்கறாண்டி . எங்க குடும்பத்து வாரிசு. அடுத்த ராஜா “

கதிரின் அழுகையினால் அன்று அவள் உயிருடன் தப்பித்தாள் .

தொண்டையை தேய்த்து  விட்டுக் கொண்டவள்,

“இது உங்க பிள்ளைன்னு நீங்க சொல்லலாம். dna சொல்லாது” என்றதும் அவனுக்கு இன்னும் கொலை வெறி அதிகமானது.

“கிளம்பு இல்லன்னா நான் உன்ன கொன்னுடுவேன் “

அவள் ஒரு பார்வை பார்த்தாள் . அதில் ஆயிரம் அர்த்தங்கள். அவளின் முகம் பார்க்க முடியாதவன் தலையை திருப்பி முன் தலையைக் கோதிக் கொண்டான். இடது பக்கத்தில் இருந்த அவனின் கன்னத்தின் தழும்பு காணாமல் போய் இருந்தது.  பலர் பார்த்து பயந்தார்கள். அவனே பார்த்து பயந்த போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டான்.  தழும்பு மாறினாலும் அவள் முத்தங்களை வாங்கி கொண்ட தழும்பு இல்லாத முகம் கூட அவனுக்கு வெறுப்பாகத் தான் இருந்தது . அழுத பிள்ளையை சமாதானம் செய்து தூக்கிக் கொண்டு போனாள் . உடலில் சக்தி இல்லாமல் தளர்ந்த நடையுடன் சென்றவளை பால் கனி வழியாக அவன் பார்த்தது யாரோ ஒரு ஆடவனுடன் அவள் பைக்கில் ஏறி செல்வதை தான்.

அவள் தன் உடமை என்ற கோபமா? தெரியவில்லை அவசரமாக தன்னுடைய காரில் கிளம்பியவன் வந்த வேகத்தில் அந்த பைக்கை ஓவர் டேக் செய்து இருந்தான் . அவளோ அசரவில்லை. அவனுக்கு நன்றி சொல்லி விட்டு இவன் காரில் ஏறிக் க் கொண்டாள் .

“யாரு டி அவன்?”

“அதை பத்தி உங்களுக்கு என்ன?”

“உனக்கு படுக்க சுகம் வேணுன்னா சொல்லு.  நானும் இங்க தான் இருப்பேன் “

“குழந்தை எதிர்க்க என்ன பேசணுன்னு தெரியாதா?”

தவறை உணர்ந்தவன் அமைதியானான் .அவளோ எதுவுமே நடக்காதது போல குழந்தையிடம் பேசிக் கொண்டு வந்தாள். கடந்து போகும் கடைகள், தெருவில் நின்ற நாய்கள், கத்திக் கொண்டிருந்த காகம் எத்தனை எத்தனை விஷயங்கள் தான் அவர்களால் பேச முடியும்? அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது . இப்படி மூச்சு விடமால் பேசும் தாமரையை அவன் அவள் சிறு பிள்ளையாக பார்த்தது தான் .

அவளோ, “இங்க லெப்ட், நேரா” வழி சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் நிறுத்தியது ஒரு பழைய சின்ன வீட்டில் .

இந்த மாதிரி ஒரு வீட்டிலா என் பிள்ளை வளர வேண்டும். விடாப் பிடியாக அவள் வீட்டை வந்து பார்த்தான். அங்கே வந்ததுமே யாரோ ஒரு பெண் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். கதிரும் அவரிடம் ஆசையாக பாட்டி என்று தாவிக் கொண்டான்.

சூர்யாவைப் பார்த்த அவர் தாமரையிடம் கண்களில் பேசினார்.

“இவருதான் அவரு” என்று அறிமுகப்படுத்தவும் அவரோ இவனுக்கு வணக்கம்  சொல்லி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு அவர் வீட்டுக்கு போனார்.

“எப்படி இருக்க வேண்டியவன் டீ என் பிள்ளை ? இப்படிப்பட்ட இடத்துல. சீ! என் வீட்டு கக்கூஸ் கூட எவ்ளோ பெரிசா இருக்கும். மனசு தாங்கலடி “

“வீடு மட்டும் பெரிசா இருந்தா போதாது. இங்க நாங்க இருக்கறது சின்ன வீடுதான். ஆனா இவங்களுக்கு எல்லாம் மனசு ரொம்ப பெரிசு . உங்களுக்கு எங்க மனசு பத்தி எல்லாம் தெரிய போகுது ? எப்பவுமே உங்களுக்கு உடம்பு தானே தெரியும்?”

அவளின் இரட்டை அர்த்தப் பேச்சு அவனை இன்னும் ஆத்திரப் படுத்தியது.

“உனக்கு மட்டும் என்ன? உடம்பு சுகத்துக்காகத்  தானே  என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட. இப்ப அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி கூட எவனோ ஒருத்தன் கூட பல்லை இளிச்சுக்கிட்டு பைக்குல வர. நல்ல குடும்பத்து பொண்ணுங்க பண்ணற காரியமா இது?”
அவன் எத்தனை சண்டை போட்டாலும் வாய் திறக்கக் கூடாது . அமைதியாக இருந்தாள் . அந்த வீட்டில் தன்னுடைய சிறு புகைப் படம் கூட இல்லை. பிள்ளைக்குத் தெரியவே கூடாது என்று எப்படி பார்த்துக் கொள்கிறாள். வெறுப்புடன் கிளம்பி விட்டான்.

நேரே ஹோட்டலுக்குச் சென்றவன் வக்கீலிடம் பேசினான். குழந்தை அவளிடம் இருக்கக் கூடாது.

அவரின் யோசனைப் படி அவளிடம் பேரம் பேசினான். வேண்டாம் என்று சொல்லி இருந்தால் இன்னும் நிறைய என்று பணத்தை கொடுத்து எப்படியாவது அவளை சம்மதிக்க வைத்திருக்கலாம். அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

துடிக்கும் இதயம் ..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page