திருக்குறள்
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1294
அத்யாயம்-24
“நான் எந்த தப்பும் செய்யவில்லை .நான் மன்னிப்பு கேட்க முடியாது”என்ற தீர்மானத்துடன் அவள் இருந்தாள் .
“தராதரம் இல்லாத பொண்ணை கூட்டிட்டு வந்து எங்களை நல்லா அவமானப் படுத்தறப்பா” சித்தப்பாவின் வார்த்தைகள் இங்கே இவனுக்கு காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
அவள் அவனிடம் நெருங்கி வர முடிவதில்லை. திருமணம் முடிந்த உடனேயே அவள் அலுவலகம் வர வேண்டாம் என்றுவிட்டான்.
பின்னாடி இருந்த தோட்டத்தை கூட்டிப் பெருக்கி குப்பை அள்ளுவாள் . சுத்தமான இடத்தில அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பாள். கோவிலுக்குப் போவாள். இருந்தாலும் அங்கே இறைவனைப் பார்க்க தெம்பில்லை.
ஏதோ வீட்டுல ஒரு சின்ன சண்டை இதுக்கெல்லாம் இப்படி பண்ணுவாங்களா என்று யாரும் என்னுடைய இதயத் தாமரையைப் பற்றி எண்ணி விடாதீர்கள். பெற்றவர்களும் உற்றவர்களும் இருக்கும்போதே பலர் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகமாக இருக்கும் பொழுது , யாரும் இல்லாத அனாதையாக இருப்பவர்களுக்கு நீ அனாதை என்று சொல்லிக் காட்டும் போது வரும் வேதனையும் வலியும் மிக அதிகம் தான் . அதிலும் கண்டவர்கள் பேசலாம் கொண்டவனே பேசும் பொழுது தாங்க முடியாதது தான் . கணவன் எதிரில் நிற்கும் போது ஒரு மனைவி ,தனக்கென்று யாரும் இல்லை தான் ஒரு அனாதை என்று உணர வைக்கும் தரும் மிகக் கொடுமையானது.
அலுவலகம் வந்த சூர்யாவுக்கும் மனசு சரியில்லை. அப்போது குணசேகரன் வந்தார்.
“சார் !”
“”வாங்க குணசேகரன் ! அந்த புது ரெசோர்ட்ஸ்க்கு பிரைசிங் டீடெயில்ஸ் அனுப்பியாச்சா?”
“அனுப்பியாச்சு சார் . அதை உங்களுக்கும் மெயில் அனுப்பி இருக்கேன். “
“‘ ஓகே ! நான் செக் பண்ணிட்டு கூப்பிடறேன்.”
கவனம் அவர் அனுப்பிய மெயிலில் இருந்தது.
“சார்! ‘
“என்ன?” என்பது போல பார்த்தான்.
இந்த வாரம் வெள்ளிக் கிழமை லீவு வேணும் சார்.
“எதுக்கு ?” இப்போது சூர்யாவின் பார்வை அவரை உற்று நோக்கியது.
“போன வருஷம் என் மனைவி அம்மை போட்டு சீரியஸா இருந்தா. அப்ப வேண்டிகிட்டது. காப்பு கட்டி தீ மிதிக்கணும் . பூச்சட்டி எடுக்கறேன்னு வேண்டுதல் .அதுக்குத் தான் சார் .”
“உங்க மனைவிக்கு சரியானதுக்கு காரணம் உங்க பிரார்த்தனையா இல்ல மருத்துவமா ?”
“அவங்கவங்க நம்பிக்கையைப் பொறுத்த விஷயம் சார் “
“ராத்திரி பகல் தூக்கம் பாக்காம மருத்துவம் பார்த்த மருத்துவருக்கும் நர்ஸுக்கும் நீங்க காட்டற நண்றியா இது?”
“சார்! நீங்க சொல்லறது எல்லாம் சரிதான். முதல்ல ஒரு மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். ஆனா சரியாகவில்லை . அம்மாகிட்ட வேண்டிக்கிட்டேன். அப்புறம் அதே மருத்துவமனையில வேறு ஒரு மருத்துவர் வந்து பார்த்தார். அவரு பேரு கணேசன். உங்களுக்கு எப்படி வேணுன்னாலும் தோன்றலாம் . ஆனா எங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் அந்த அம்மா தான் அவரு பிள்ளை கணேசனை அனுப்பி பாக்க வச்சாங்க . இல்லாட்டி அது வரைக்கும் கண் முழிக்காத பிள்ளை அவரு வந்து பார்த்ததுக்கு அப்புறம் எப்படி கண்ணு முழுச்சுப் பார்ப்பா?”
அவரின் பதிலுக்கு எப்படி பதில் பேச வேண்டும் என்று தெரியாமல் இருந்தான் சூர்யா. அவனை பொறுத்த வரை இந்த சாமி எல்லாம் உண்மை பொய் என்று பிரித்து பார்க்க முடிந்ததில்லை. அதைப் பற்றிய எண்ணங்கள் கூட வந்ததில்லை.
“ஓகே லீவு எடுத்துக்கோங்க. கார்த்திக் கிட்ட சொல்லிடுங்க.”
“தங் யு சார் ” இறுக்கியில் இருந்து எழுந்து கதவு வரை சென்றவர்,
“நீங்க சொல்லற அந்த டாக்டர் கூட கடவுளுக்கு நன்றி சொல்லுங்கன்னு தான் சொன்னார். நான் இதை உங்களுக்கு எதிரா பேசல. சொல்லணுன்னு தோணிச்சு.”
சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அவரின் வார்த்தைகள் தான் அவனுக்கு சில விஷயங்களை சொல்லாமல் சொன்னது.
“நம்பிக்கையை சார்ந்த விஷயம் சார்”
‘எங்க வீட்டுப் பெரியவர்களை அவ எதிர்த்து பேசிட்டா ‘இந்த எண்ணத்தோடயே இருந்தவனுக்கு, முதன் முதலாக அவளுக்குன்னு ஒரு விஷயத்துல நம்பிக்கை இருந்தா அதை எப்படி நாம அசிங்கப் படுத்தலாம் என்ற எண்ணம் வந்தது. அவள் நம்பிக்கை அவளுக்கு. அவளுக்காக அந்த ஒற்றை மரம் இருந்தால் என்ன? மனதில் தெளிவுப் பிறந்தவனுக்கு அப்போதே அவளை பார்க்க வேண்டும் என்றது தோன்றி விட வீட்டுக்கு விரைந்தான்.
வீடு எங்கும் தேடித் பார்த்தான். அவளைக் காணவில்லை.
தோட்டத்துக்குப் போனான். அப்போது தான் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மரத்தில் கொஞ்சிக் கொண்டிருந்த பறவைகள் அவனைத் தான் நினைவுக்கு கொண்டு வந்தன. தன்னையும் மீறி கண்களில் வந்த கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்தாதவள் விம்மி விம்மி அழுதாள் .,அவன் சொல்லை எண்ணி எண்ணி.
இது அவளுக்கு இன்று பூத்த காதல் இல்லையே.
அவளுக்கு காலில அடிபட்டது, பாடங்கள் கற்றுக் கொடுத்தது, மாதாந்திர பேட் அவளுக்கு மட்டும் இல்லாமல் அவள் கேட்டதற்காக பள்ளி குழந்தைகளுக்கு வாங்கியது., கிணறு வெட்டிக் கொடுத்தது, அலுவலகத்தில் பழகிய நாட்கள் என்று தன்னுடைய பழைய நினைவுகளுடன் கிணத்தடியில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவளை பின்னோக்கி இடையோடு கட்டிக் கொண்டவனை அவன் என்ன தவறு செய்தாலும் அவளால் அவனை தண்டிக்க முடியாது. இருப்பினும் அவன் அவளை அனாதை என்று சொன்னது அவள் மனதில் எத்தனை பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது என்பதை அவன் அறிய மாட்டான். ஏன் அது அவளுக்கும் கூட அப்போதைக்குத் தெரியாது.
அன்று அவன் அநாதை என்று சொன்ன சொல் தான் அவனைப் பிரிந்து மகனை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இவனிடம் வந்தால் thaதன n மகன் நிச்சயம் அநாதை ஆகி விடுவான்.
அவள் தன்னை கட்டிக் கொண்டவன் நெஞ்சில் புதைந்து அழுதாள் . விம்மி விம்மி அழுதவளின் கஷ்டம் அவனுக்குப் புரிந்தது. இது அவனைப் பிரிந்த இந்த சில நாட்கள் பிரிவுக்கா?
அழுதவளின் தலையை தடவி முதுகை நீவி சமாதானம் செய்தான்.
அவளைப் பொருத்த வரையில் அதை காதல் என்று நினைத்தாலும் அவனைப் பொறுத்த வரையில் அவளை சமாதானம் செய்வது அவனது கடமையே.
இப்போது ஓரளவு சமாதானம் ஆகிய பிறகு, சாப்டீங்களா? என்றாள் .
இது இதுதான் முடிந்து விடும் விஷயமா? அல்லது இப்போது தான் தொடங்கி இருக்கும் விஷயமா?
சூர்யா வந்து கொண்டிருப்பது கூர்க்குக்கு. நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கே மழை அதிகமாக இருப்பதால் நேராக கூர்க் செல்லாமல் அங்கே கீழேயே இருக்கும் மற்றொரு ரெசார்ட்டுக்கு வந்து விடு என்றான். கூர்க் மைசூர் இரண்டு இடங்களிலும் அவனுக்கு ரெசோர்ட்ஸ், காட்டேஜ்ஸ் உண்டு. ஏற்கனவே சூர்யாவின் கம்பனி மூலம் எப்போதுமே பிஸியாகவே தான் இருக்கும் அவை இரண்டும். வேண்டும் என்றால் ஆன்லைன் ஆப் லைன் இரண்டிலுமே தங்கும் விடுதிகளை புக் செய்து கொள்ள முடியும். வருபவர்களுக்கு மனம் நோகாத சர்வீஸ் கிடைக்கும். சுத்தமான இடம் , சுத்தமான காற்று, இனிமையாக பேசும் வேலை ஆட்கள், சற்று பெரிய அறைகள், அறைக்குள் போன், ட்ரையர், கீசர், அறைக்குளேயே உணவை சூடுபடுத்திக் கொள்ளும் வசதி, அலைந்து விட்டு வந்தால் படுத்த உடனேயே உறங்க வைக்கும் மெத்தை இன்னும் பல வசதிகள்…
சரி என்று கூர்க் பாதைக்கு செல்லாமல் நேராக சென்றான். வீட்டுக்கு வா என்று நண்பன் அகன் எத்தனையோ சொன்னாலும் கேட்காமல் இவன் ஹோட்டலிலேயே தங்கிக் கொள்கிறேன் என்று விட்டான்.
காலையில் வாங்கிய அந்த இட்லி போதுமானதாக இருந்தது. மதிய உணவு ஏதும் இன்னும் சாப்பிடவில்லை. இறங்கி ஒரு டீ குடிக்கலாம். இறங்கினான்.
“கூர்க் தான் போகலை. அட்லீஸ்ட் என்னையாவது ட்ரை பண்ணேன்.” ரோபஸ்ட்டா காபி மனம் அழைத்து. டீக்கு பதில் காபி சொன்னான்.
இவனுக்கு எப்போதும் பிடித்தம் டீ தான். ஹாஸ்டலில் அது தான் பழக்கம். சித்தி சித்தப்பாவுக்கு இந்த வகை குழம்பி ரொம்ப பிடிக்கும். போகும் போது வாங்கிட்டு போகணும் . மனைவியிடமிருந்து அவனுடைய எண்ணங்களை கஷ்டப்பட்டு மீட்டுக் கொண்டு வந்திருந்தான் சூர்யா .
காபியை குடித்து விட்டு காரின் அருகில் வந்தவன் காலில் விழுந்தது பூமாலை. இல்லையில்லை அழகியக் குழந்தை . எங்கிருந்தோ ஓடி வந்து முட்டியை கட்டிக் கொண்டு அப்பா என்றது…
ஆனந்த அதிர்ச்சி.
எதுவும் யோசிக்காமல் கையில் தூக்கியவன்
குழந்தையின் முகத்தைப் ஆராய்ந்தான் அது வேறு யாரோ அல்ல. அச்சு அசல் தன்னுடைய சிறு வயது பருவம் தான். தொப்புளுக்கு மேலே தனக்கு இருப்பது போலவே அழகிய சிகப்பு மச்சம். ஒரு நொடி வழி விரித்துப் பார்த்தான்.
” ஜட்டி போடாம வெளில வரக் கூடாது என்று சொல்லிக் கொண்டே வந்து குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள் அந்தப் பெண். அவன் மனைவி . கொடுப்பானா அவன்?
அவள் அதிர்ச்சியுடன் கையில் சட்டையை கையில் வைத்துக் கொண்டு இமை தட்ட மறந்து போனாள் .
அவனோ கோபத்தோடு அவளை உறுத்து விழித்தான்.
சட்டை இல்லாத குழந்தை வெறும் ஜட்டியுடன் வாயில் ஒற்றை விரலை வைத்து அவனை தோளோடு கட்டிக் கொண்டது.
“குழந்தையை குடுங்க. சட்டை போடனும் அவன் முகத்திரை நேராகப் பார்ப்பதை தவிர்த்தாள் .
திரும்பியிருந்த முகத்தை கன்னத்தோடு அழுத்திப் பிடித்தவன் கேட்டது “என் குழந்தையா ?” கோபமாக வெளி வந்ததது அவன் குரல்.
ப்ளீஸ் குழந்தையை குடுங்க. இப்படி அழுத்திப் பிடிக்காதீங்க குழந்தைக்கு வலிக்கும் என்றவளை முறைத்தவன் பார்வை இன்னும் மாறவில்லை. அவன் கைப்பேசி அழைத்தது. அவன் கவனச் சிதறலை பயன்படுத்தி கொண்டு அவன் கையில் இருந்து குழந்தையை பிடுங்கிகே கொண்டாள் . குழந்தையோ அவனிடமிருந்த்து வராமல் அப்பா என்று அழுத்தமாக கழுத்தைக் கட்டிக் கொண்டது.
அவளிடமிருந்து சட்டையை பிடுங்கி கொண்டு அவனே போட்டு விட்டான். அவள் சொன்னது சரிதான். அதற்குள் குழந்தைக்கு அவன் பிடித்திருந்த இடம் சிவந்து விட்டது.
இன்னும் இருட்ட ஆரம்பிக்கவில்லை. அவள் முகம் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. இப்போது அதிர்ச்சி மாறி குழந்தைக்கான பறி தவிப்பு தெரிந்தது.
“நீங்க இங்க எங்க?”
அவள் குரல் அவளுக்கு கேட்டிருக்காது. அவனுக்கு கேட்டு விட்டது.
இப்போது நினைத்தாலும் அவன் குழந்தையை தூக்கி கொண்டு சென்று விட முடியும் . இருப்பினும் தன்னுடையக் குழந்தையை தனக்குத் தெரியாமல் அவள் எப்படி மறைக்கலாம் என்ற ஆத்திரம் அதிகமாக இருந்தது. இவள் இருப்பிடம் தெரிந்து கொள்ள வேண்டும். லீகலா குழந்தையை வாங்க வேண்டும். கூடவே விவாகரத்தும். அன்று கோபத்தில் இவளை வீட்டை விட்டு வெளியில் போ என்று சொல்லியிருந்தாலும் இன்னும் விவாகரத்து என்பது நீதி மன்றத்தில் முறையாக வாங்கவில்லை. நீதி மன்றம் சொன்னால் போதுமா?
ஏதோ போன் என்று உள்ளே சென்றவளைத் தொடர்ந்து .பல்லை கடித்துக் கொண்டு அவள் பின்னால் சென்றான்.
போனில் அவர்கள் சொன்ன ஆர்டரை எடுத்துக் கொண்டாள் . இப்ப அனுப்பறேன். என்று சொல்லி விட்டு அங்கே இருந்த ஒரு ஆணிடம் லிஸ்டை கொடுத்து எடுக்க சொன்னாள் . நன்றாகவே அவள் கன்னடம் பேசினாலும் இவனுக்குப் புரியவில்லை.
அது ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் போன்ற கடை.
நீங்க எங்க இங்க ? அவள் மீண்டும் கேட்டதற்கு, இப்ப நீ சொன்னியே எஸ் கே ரிச்சர்ட்ஸ்., அத வாங்க வந்திருக்கேன் . ஒரு கையில் குழந்தை, இன்னொரு கையும் குழந்தையிடம் தான் இருந்தது. இரு கைகளிலும் குழந்தையை பிடித்துக் கொண்டிருந்தாலும் அழுத்தம் தரவில்லை. குழந்தை மேக நீல நிற சட்டை. அழகாக இருந்தான். அவன் அம்மாவும் அதே நிற உடையில் தான் இருந்தாள் . அவளை ரசிக்க தோன்றவில்லை. கொலை வெறி மட்டும் தான் அவள் மீது அப்போது சூர்யாவுக்கு இருந்தது .
“அது., நீங்க.. உங்க இடமா?” திக்கி திணறி வந்த வார்த்தைகளில் எச்சில் முழுங்கி கொண்டாள்.
அகன் சார் ஏன் இதைப் பற்றி சொல்லவில்லை?
“ஏன் அதிர்ச்சியா இருக்கா ? “
விழி விரித்துப் பார்த்தாள் .
இப்போது கடையில் பெரிய கூட்டம் இல்லை. குழந்தை அவளிடம் தான் இருந்தது. அவன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.
அப்போது கடைக்கு நிறைய ஆட்கள் வரத் தொடங்கினார்கள் .
இப்போது அவளுக்கு
துடிக்கும் இதயம் ……
