திருக்குறள்
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1298
அத்யாயம் -28
“உனக்குன்னு யாரும் இல்ல தாமரை. போதும் இதுக்கு மேல அலட்டிக்க வேணாம்” மூளை சொன்னது.
“உனக்காக நான் இருக்கேன். எனக்காக வந்து விடு”அவளுக்காக அங்கே ஒரு இதயம் துடிக்கிறது. சூர்யாதான் அது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அன்னைக்காக துடிக்கும் இதயம் கதிர்தான். காரணமே இல்லாமல் அழும் குழந்தையைப் பக்கத்து வீட்டு அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. பிறகு தான் அவர்களுக்கு செய்தி வந்தது.
“நீங்க இப்ப இங்க வர வேணாம். கதிர மட்டும் கொஞ்சம் பார்த்துக்குங்க. இங்க நிலைமை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நாங்க சொல்லறோம். நாங்களும் இப்ப பாக்க முடியல . நீங்க அலைய வேண்டாம் ” அகன் தான் அவருக்கு அழைத்துச் சொல்லி விட்டான் . அறுவை சிகிச்சை நடந்து முடித்து விட்டது. மருத்துவர்கள் மாற்றி மாற்றி நிறைய பேர் வந்துப்பார்த்தார்கள்.
“ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சது. கெட்டதுல ஒரு நல்லதா எந்த உடல் உறுப்புக்கும் எந்த அடியோ சேதாரமோ இல்ல. முதுகு எலும்பு மட்டும் தான் நல்ல அடி வாங்கி இருக்கு. தலைல அடி கொஞ்சம் பயப்படற விஷயம் தான். 24 மணி நேரம் ஆகட்டும் அப்புறம் சொல்லறோம் என்று சொல்லி விட்டு நகர்ந்துக் கொண்டார்.
மற்றவர்கள் அனைவரையும் கார்த்திக் விடாப் பிடியாக வீட்டுக்கு அனுப்பினான் . கீர்த்தியும் குழந்தையைத் தன்னுடன் வைத்துக் கொண்டாள் . கதிர் பொதுவாக அம்மா வேண்டும் என்று இப்படி அழுததில்லை. இன்று அவன் அடம் அதிகமாகி அழுதுக் கொண்டே இருந்தான். பெற்றது அவள் இல்லை என்றாலும் கதிருக்கு அன்னை அவள் தான். இது தான் இயற்கை.
சூர்யாவுக்கு கையில் இருந்த மாணிக்கத்தை சேற்றில் தவற விட்டது புரிந்தது. சேற்றில் விழுந்தாலும் மாணிக்கம் தான் என்பதும் புரிந்தது. கண் கெட்டப் பின் சூர்யா நமஸ்காரம் செய்துக் கொண்டிருக்கிறான் . அன்று குணசேகரன் சொன்னது நினைவுக்கு வந்தது.
பூஞ்சட்டி தூக்கறேன் தீ மிதிக்கறேன் என்று எல்லாம் இவன் வேண்டிக் கொள்ளவில்லை. மனைவிக்கு என்ன பிடிக்கும்? அவளுக்கு தண்ணி தான் பிடிக்கும். “எங்க ஊரு ஆறு ஏரி எல்லாம் சுத்தம் செய்யறேன்.” இறைவனிடம் வேண்டிக் கொண்டான். இயற்கையாக இருக்கும் அந்த உலகத்து நாயகி அவனுக்கு கண் திறப்பாளா ?
ஒரு முறை கிரேசி மோகனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.
“இந்த உலகத்துலேயே அழகி யாரு ?”
பதில் – “அகழ்வாரைத் தாங்கும் நிலம். அவளை விட யாரு அழகி? என்றார். சரிதான் இல்லையா? இயற்கை அன்னைதான் பேரழகி . அவளின் கருணை தான் நம்மை வாழ வைக்கிறது. சரிதானே !
24 மணி நேரம் யுகமாக கழிந்தது என்று சொன்னால் நான் மற்றவர்களிடமிருந்து வேறு பட வேண்டாமா. சரி இப்படி சொல்லலாமா ? சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாக கூடப் போகவில்லை. அதை விட மெதுவாக பெரிய முள் நகர்ந்துக் கொண்டிருந்தது.
நல்ல மருத்துவம் நல்ல மருத்துவர்கள் எல்லாம் இருந்தாலும் அவளுக்கு தான் கண் திறக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமே.
மறு நாள் காலையில் வேறு யாரோ மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். நிறைய மருத்துவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்களேத் தவிர இங்கு இவர்களுக்கு யாரும் எதுவும் சொல்லவில்லை.
“பல்ஸ் எல்லாம் ஸ்டேபிளா தான் இருக்கு பார்க்கலாம் ” என்றார் ஒரு மருத்துவர்.
“டாக்டர் உயிருக்கு?”
“இன்னிக்கு மாலை வரை பாக்கலாம் . இப்ப எதுவும் சொல்ல முடியாது. “
மாலை ஆனது. அவள் கண் விழிக்கவில்லை .
கார்த்திக்கும் சூர்யாவும் சென்று பார்த்தார்கள் .
அப்போது அங்கே வேறு ஒரு மருத்துவர் வந்தார். அவர்தான் கதிருக்குப் பார்ப்பவர்.
“என்ன தாமரை இது? இப்படி படுத்துக் கிடந்தா பிள்ளையை யார் பாக்கறது? எப்பப் பாத்தாலும் சவலைப் புள்ளைக்கு சத்து மருந்து கேப்ப. இப்ப என்ன இப்படி இருக்க ? வா கதிருக்கு நிறைய சத்து மருந்து எடுத்து வச்சுருக்கேன். சீக்கிரம் வந்து வாங்கிக்கோ” சொல்லி விட்டு அங்கே இருந்த நர்ஸிடம் சில விஷயங்களைக் கேட்டுக் கொண்டவர் , யாரு பாக்கறா ?
“அரவிந்தா தானே நான் பேசிக்கறேன் “
அவர் பேசப் பேச அருகில் இருந்த சூர்யாவுக்கு கண்ணீர் முட்டியது. கதிர் அவள் குழந்தை இல்லை. இருந்தும் அவனுக்காக, என் வீட்டு வாரிசுக்காக அவள் தன்னை உருக்கிக் கொண்டிருக்கிறாள். வாங்கும் சம்பளத்தில் நல்ல வீடு, நல்ல உணவு என்று அவள் தனக்காக எதுவும் பார்க்கவில்லை . அவள் வீட்டை தன் வீட்டு கழிப்பறையுடன் ஒப்பிட்ட வார்த்தைகள் அவன் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. அவள் என்னிடம் கீடாது முதன் முதலில் என் பிள்ளை. அதுவும் கூட அவளுக்காக இல்லை. எனக்காகவே பிறந்தவள். இவளையா நான் வேண்டாம் என்று ஒதுக்கினேன்? இந்த முட்டாளை மன்னித்து விடு கதறி என்ன பிரயோஜனம் ?
மருத்துவருக்குப் பிறகு அனிதா வந்துப் பார்த்தாள் . “நம்ம வீட்டுல பாப்பா வரப் போகுது தாமரை. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? உன்கிட்டதான் முதல்ல சொல்லறேன். இன்னும் அகன் கிட்ட கூட சொல்லல.”
கேட்டுக் கொண்டிருந்த சூர்யாவுக்கு அதிர்ச்சி தான் . இது தான் உண்மையான அன்பா?
தாமரையின் கையை தன்னுடைய வயிற்றில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள் அனிதா . “ஒரு வாரம் ஆகி இருக்கு தாமரை. “
அதற்கு மேல் பேச முடியாதவள் கண்ணீரை அடக்க
முடியாமல் வெளியில் ஓடி விட்டாள் .
சூர்யாவும் தான் அவளிடம் எத்தனையோப் பேசினான். “ப்ளீஸ் டீ எழுந்து வந்து என்னை நல்லா அடி டீ. அம்மா இல்லாத பையன். அடிச்சு திருத்த ஆள் இல்லை. நீதாண்டி வேணும். எனக்கு டயர்டா இருந்தா கூட காபி கொடுப்ப. இப்படி உன்கிட்ட உக்காந்து அழறேன் . கண்ணை கூட திறக்க மாட்டேங்கற. ப்ளீஸ் டீ என்னை பழி வாங்காத. சீக்கிரம் எங்கிட்ட வாடி ” அவனின் எந்த வார்த்தைக்கும் அவளிடம் அசைவில்லை.
குழந்தை நல மருத்துவரின் அறிவுரைப்படி கதிர் அழைத்து வரப்பட்டான். மருத்துவர் தான் அவனை தூக்கிக் கொண்டு வந்தார்.
“அம்மாக்கு ஊசிப் போடுவாங்க வலிக்குமில்ல. சீக்கிரம் எழுந்து வரச் சொல்லு ” அவனுக்கு ஏற்ற வகையில் சொல்லி தூக்கிக் கொண்டு வந்தார்.
அம்மாவைப் பார்த்ததும் கதிர் முதலில் பயந்து விட்டான் . மருத்துவர் அருகில் இருந்த ஊசியை காட்டவும் பயத்தில் அம்மாவை எழுப்பினான்.
“அம்மா அம்மா ஏந்து .(எழுந்திரு ) ஊசி வேணாம் . அம்மாக்கு ஊசி வேணாம்.”
குழ்நதையின் கதறல் அவளை அசைத்துப் பார்த்தது. கண் மணிகள் அசைய ஆரம்பித்தது.”
மருந்து மருத்துவர்கள் செய்ய முடியாத விஷயத்தை மகன் செய்து விட்டான் . மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். உடனே முன்னேற்றம் எதுவும் இல்லை என்றாலும் குழந்தைக்காக என்று அவளின் மூளை அவளை தட்டி எழுப்பியது.
அத்தனை எளிதில் என்னை நிறுத்தி விட முடியாது. அவள் இதயம் இப்போது வேகமாக துடிக்க உன்னோடு நான் என்று இப்போது கடிகார முட்களும் வேகமாக பின் தொடர்ந்தது. அவளின் இதயத் துடிப்பை இனி யாராலும் நிறுத்த முடியாது . அது கதிருக்கானது .. இனி எப்போதும் அவளுக்கு துடிக்கும் இதயம்.
நாம விட முடியாத சிலர் இருக்காங்க இல்ல. நிஜத்துல பல குற்றவாளிக்கு தண்டனை இருக்கறதில்லை. பட் கதைல நாம அப்படி விடக் கூடாது இல்லையா? அப்படி சொல்லறதை விடவும் கதைலயாவது குற்றவாளிகளுக்கு கடவுள் ஒழுங்கா தண்டனை கொடுக்கட்டுமே !
இங்கே ஆதவன் வீட்டை விட்டு தாங்காத தான் இருந்தான். அவ்வபோது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும் அவன் எப்போதுமே தனியாக இருப்பது தான் அவனுக்குப் பிடித்தம். அவன் சொன்னதை நாமும் நம்புவோம். LGBTQ பற்றி நான் ஏற்கனவே சொன்னதுதான் . பலருக்கும் அது சரியாகத் த தோன்றினாலும் பலருக்கு அது ஏற்றுக் கொள்ள முடியாது. அசிங்கமானது. சீ! என்ற அருவருப்பு கொண்டவர்கள் தான் அதிகம்.
“இது எங்க ரைட்ஸ். உனக்கு பெண்ணை பிடிக்கலாம். ஆனா எனக்கு ஆண் தான் பிடிக்கிறது. இட்ஸ் குவைட் நேச்சுரல் “சொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள். எனக்கு ஆண் பெண் இரண்டுமே ஓகே தான் தோள் குலுக்கும் மங்கைகளும் இருக்கிறார்கள்.
ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் , ஆண் பெண், திருநங்கை மட்டும் பிடிக்கும் சிலர், திருநம்பிக்கு சிலர் , எனக்கு உடல் தான் வேண்டும். எந்த பாலினம் பற்றியும் கவலை இல்லை என்று இதில் பல பிரிவினர் இருக்கிறார்கள்.
“இதுனால உங்களை பெத்தவங்க மனசு எவ்ளோ கஷ்டப்படும்.” கேட்பவர்கள் பத்தாம் பசலிகள். இதுனால வீட்டுக்கும் நல்லது இல்ல நாட்டுக்கும் நல்லதில்லை. யாராவது இப்படி பேச வாய் திறந்தால் போதும் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் வாயில் வண்ண வண்ணமாக வரும். இந்த பிரிவில் வருபவன்தான் ஆதவன். சில நாட்கள் பெண்களுடன் இருப்பவன் பல நாட்கள் ஆண்களுடன் தான் இருப்பான். வேலை? அதற்கு என்ன அவசியம்? கேட்கும்போது பணம் அனுப்பும் அன்னை. கேட்காமலே பணம் கொடுக்கும் தந்தை . அது போதாது என்று உனக்காக நானும் இருக்கிறேன் என்று வாரிக் கொடுக்கும் வங்கிகளிலிருந்து வரும் வட்டி. பார்ட்டி பண்ண பெண்கள். உடன் படுக்க ஆண்கள். இது போதாதா?
அளவுக்கு மீறிய இவனின் செயலில் அசிங்கமாக வெளியேற்றப் பட்டான். பாலியல் தொந்தரவு. சொன்னது பெண்கள் இல்லை. ஆண்கள் . நிர்வாகம் முடிவெடுத்து இவனையும் இவன் உடன் இருந்த இவனின் காதலனா காதலியா எப்படி சொல்ல வேண்டும் என்றுத் தெரியவில்லை. அவ்ஸர்களின் சேர்த்தே தான் வெளியேற்றப் பட்டார்கள்.
பத்தலை பத்தலை பத்தலை.
எனக்கு ஆண்கள் கூட இருக்கும் போது பொண்ணு மாதிரி பீலிங்ஸ் வரணும். அதுக்கு…? “அய்யா ஆபரேஷன் பண்ணிக்க போறாருங்கோ “
எடுத்தோம் கவுதோன்னு எடுக்கற முடிவா இது?
யோசித்து அலசி ஆராய்ந்து …
இந்த ஆராய்ச்சி எல்லாம் என்னால முடியாது. அவனே செய்துகட்டும் .
நம்முடைய நாயகி கண் விழித்து விட்டாள் அந்த கதைக்குப் போகலாம்.
சில நாள் மருத்துவ வாசம். பல நாள் பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயம். மற்றவர்கள் நான் இருக்கிறேன் என்று சொன்ன போதும் பிடிவாதமாக சூர்யா தான் இருந்தான்.
” எனக்கு அவகிட்ட மன்னிப்புக் கேட்க கூட தகுதி இல்லை . ப்ளீஸ் இதுக்காவது எனக்கு அனுமதி கொடுங்க . அகன் , கார்த்திக்கும் அமைதியாகிவிட்டார்கள். மெதுவா உடல் அசைத்து. அமர்ந்து நின்று நடந்து நிச்சயம் குழந்தை தான் அவள் . மருத்துவமனையில் பல நர்ஸுகள் பார்த்துக் கொண்டார்கள். வீட்டுக்கு வந்தப் பிறகு யார் எப்படி பார்த்துக் கொள்வார்கள் உள்ளங்கை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாள் தாமரை .
“என்ன யோசனை தாமரை? ” கேட்டுக்கொண்டே கீர்த்தி வந்தாள் .
அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் …
துடிக்கும் இதயம் …
