ஆடி வரும் வண்ண மயிலே-41

அத்தியாயம்:41 

ராகவன் மீனாவை தவிர அவனை.. யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்றான்.  

குரு “ அது உண்மை தான் உன் சொந்த பெரியப்பா நான்…என்னால் கூட உன்னை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை…விடு நடந்ததை பேசி என்ன பயன்.  

இந்த தடவை நீ எலக்சனில் நிற்க வேணாம்…அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.. அடுத்த தடவை பார்த்து கொள்ளலாம்.  

எனக்கு பிறகு நீ தானே என் அரசியல் வாரிசு…அந்த உரிமை நான் வேறு யாருக்குமே கொடுக்க மாட்டேன்…அதை பற்றி நீ யோசிக்க வேணாம் என் ரத்தம் டா நீ உன்னை விடவா என் பதவி முக்கியம்…? 

உன்னை வாரிசாக நான் அறிவிக்காத காரணம் பாண்டி…அவன் இருக்கும் வரைக்கும் உன்னை நாட்டுக்கு நன்மை செய்ய விட மாட்டான்… என் சனங்கள் கஷ்டப்பட கூடாது என்று நினைத்தேன்.  

அதனால் தான் நானே நின்றேன்…இப்போ சனங்களுக்கு உன் மேலே நம்பிக்கை வந்திருக்கும்…நீ நீதி தவறவில்லை என்று இனி உன்னை ஏற்று கொள்வாங்க..”  என்றார்.  

ராகவன் “ பெரியப்பா இப்போ எனக்கு அரசியல் ஆசை போய் விட்டது…அதனால் தான் என் சியாமி, மாப்பிள்ளையை இழந்தேன்…திரும்ப நம்ம குடும்பத்தை இழக்க விரும்பவில்லை.  

பாண்டி தான் தப்பானவன் மாலதி, சரிகா இல்லை…அவங்க எங்கே பெரியப்பா..? அவங்களை நான் பார்க்க வேணும்…என் மயூரி என்னை பற்றி என்ன நினைக்கிறாளோ தெரியாது…” என்றான்.  

புவனா “ அண்ணா மாலதி சரிகாவை …அழைத்து கொண்டு அவங்க சொந்த ஊருக்கு போய் விட்டாங்க…நானும் அம்மாவும் பேசி பார்த்தோம் அவங்களை நாங்க பார்த்து கொள்கிறோம் என்று.  

அவங்களுக்கு ஒரு பயம் பாண்டி வழக்கில் தங்களை கோர்த்து விடுவாங்க என்று…அது தான் சொல்லாமல் ஊருக்கு போய் விட்டாங்க அப்பா… அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லி பவா கிட்ட சொல்லி இருக்கிறார்.  

அந்த ராஜவேலு மயூவை கடத்த முயற்ச்சி செய்தான்..நல்ல வேளை பவா தான் அவளை காப்பாற்றினான்…மயூரி உன்னை பற்றி தப்பாக நினைக்க மாட்டாள் அண்ணா… 

அவள் சியாமளா அண்ணியின் பெண்ணு…” என்று அவள் சொன்ன வேளை அப்பா என்ற குரல் கேட்டது…அனைவருமே பார்க்க மயூரி,  கல்யாணி,கிருபா நின்றிருந்தார்கள்.  

மயூரி ஓடி வந்து ராகவனை அணைத்து கொண்டவள்… 

“ அப்பா நீங்க அம்மாவை கொலை செய்யவில்லை…எனக்கு அது போதும் ஏன் பா அந்த பாண்டியை கொலை செய்தீங்க… 

அவனை போலிஸில் பிடித்து கொடுத்து இருக்கலாம் இல்லையா..? என அழு குரலில் கேட்டாள்.  

மகள் கண்களை துடைத்து விட்டவன்…அவளை அணைத்து கொண்டு.  

“ பிடித்து கொடுக்க தான் மா போனேன்…ஆனால் அவன் என்னை கொலைகாரனாகி விட்டான்…அது மட்டுமல்ல உன் அம்மா, மாமா சாவுக்கு நீதி கிடைக்க வேணாமா..? 

என் பெண்ணுங்க இரண்டு பேருமே…ஆபத்து இல்லாமல் வாழ வேணும் பாண்டி இருந்தால்…நிச்சயமாக உனக்கு ஆபத்து பாப்பா உன் அம்மாவை நான்.. உயிருக்கு உயிராக காதலித்து கல்யாணம் பண்ணியவன்.  

அவளை நானே கொலை செய்வேனா பாப்பா…?உன்னை உன் தாத்தா கிட்ட கொடுத்த காரணம் பாண்டி, மாலதியால்… உன் உயிருக்கு ஆபத்து ஏதும் வந்து விட கூடாது என்று தான். 

என் காதலின் பரிசு நீ சந்தோஷமாக வாழ வேணும் பாப்பா…” என்றான்.  

கல்யாணி “ இப்போ தான் மாப்பிள்ளை எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு…ஒருவன் சாவில் நிம்மதி அடைய கூடாது தான்… 

ஆனால் செத்தது எங்க ஒரே பெண்ணு… அவளுக்கு நீங்க நியாயம் வாங்கி கொடுத்து விட்டீங்க… 

எங்களை பொறுத்த வரை நீங்க கொலைகார் இல்ல…” என்றார்…பிறகு தந்தை கூட கொஞ்ச நேரம் பேசி இருந்து விட்டு…மனசே இல்லாது மயூரி கிளம்பி விட்டாள்.  

சக்ரபாணி ராகவனை மன்னிக்க தயாரக இல்லை…ஆனால் அவன் செய்தது சரியென நினைத்து தான்.. பேத்தியை அவனை பார்க்க அனுப்பினார்.  

தீர்ப்பு வர முன்னே எலக்சன் தேதி அறிவித்து  இருந்தார்கள்…இந்த முறையும் நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு தான் வோட்டு போட்டு இருந்தார்கள்…திரும்பவும் குரு மூர்த்தியை தான் முதல்வராக தெரிவு செய்து இருந்தார்கள்.  

அவர் நாட்டுக்கு, மக்களுக்கு செய்த சேவை அப்படி… பாண்டி கேஸ்ஸில் இரண்டு வாரங்களில் தீர்ப்பு வந்தது…பாண்டியின் குற்றங்களின் அளவை வைத்து ராகவனுக்கு… மூன்று வருட சிறை தண்டனையும் பிணை தொகை ஐம்பது லட்சம் கட்ட வேணும் என்று.  

அவன் குடும்பத்துக்கு கஷ்டமாக தான் இருந்தது…மூன்று வருடம் என்பது நெடியது இல்லையே…கண்கள் மூடி திறக்க வருடம் ஓடி விடும் மீனா, புவனா, மயூரி தான் ரொம்ப அழுதார்கள்.  

ராகவன் ஜெயிலுக்கு போய் இன்றோடு இரண்டு மாதம் ஆகி இருந்தது…கிருபாவை புவனா விருந்துக்கு அழைக்க அவன் மறுக்க முடியாமல்… தாய், கல்யாணி, மயூரி கூட வந்திருந்தான்.  

அவனை கண்டதும் தர்ஷன் அப்பா என ஓடி போக அவனும் சந்தோஷமாக அவனை தூக்கி கொண்டான்… 

புவனா கையில் இருந்த தியா கூட ப்பா,  ப்பா அவனை அழைத்தாள்… இதை  எல்லாம் குரு, கல்யாணி பார்த்து கொண்டு இருந்தார்கள்.  

சாப்பிட்டு முடிய கிருபா, சாரதா, கல்யாணி, மயூரி கிளம்ப போக. ..குரு சாரதா கூட பேச வேணும் என்றார்.  

குரு “ நான் நாள் கடத்த விரும்பவில்லை சாரதா…நீ என் மருமகளோடு உயிர் தோழி உன் குடும்பம் பற்றி எனக்கு தெரியும்…அதை விட உன் பையனுக்கு இருக்கும் நாட்டு பற்றும்.  

நான் இதை கேட்பது சரியா என தெரியாது…ஆனால் என் பேரபசங்களுக்காக கேட்கிறேன் என் பெண்ணை… உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறேன்… 

உனக்கு இதில் விருப்பம் என்றால் உன் முடிவை சொல்லு…நான் வற்புறுத்த மாட்டேன் அது போல எனக்கு அந்தஸ்து இந்த ஜாதி…எதுவுமே முக்கியம் இல்லை கிருபா உன் முடிவு என்ன..? 

நீ என் மாப்பிள்ளையின் நண்பனும் கூட..உன் மனசில் இருப்பதை வெளிபடையாக சொல்லு…” என கேட்டார்…  

புவனா அப்பா என சத்தமாக அழைக்க…. மற்றவர்கள் அதிர்ச்சியாக நின்றிருந்தார்கள்.  

புவனா “ என்னப்பா பேசி கொண்டு இருக்கிறீங்க…? நான் உங்க கிட்ட முன்பே சொல்லி விட்டேன்…என் வாழ்க்கையில் அவரை தவிர வேறு யாருக்குமே இடம் இல்லை என்று…பிறகு எதற்காக திரும்ப இந்த பேச்சை எடுத்தீங்க.  

எனக்கு என் புள்ளைங்க இருக்கிறாங்க…அவங்களை நல்லபடியாக வளர்க்க என் தொழில் இருக்கு…எனக்கு அது போதும் பா பீளிஸ் தயவு செய்து இந்த பேச்சை எடுக்க வேணாம்.  

ஸாரி கிருபா சார் அப்பா எதற்காக… இந்த பேச்சை எடுத்தார் என தெரியவில்லை எனக்கு நல்லது செய்வதாக நினைத்து…உங்களை சங்கடபடுத்தி விட்டார்….” என்றாள்.  

குரு “ எத்தனை நாளைக்கு புவனா நீ பரத்தையே நினைத்து கொண்டு இருக்க போகிற…தர்ஷன், தியாவை நினைத்து பார்த்தாயா..?அவங்க அப்பா அன்பு தெரியாமல் வளர வேணுமா..? 

தர்ஷன் கிருபாவை என்ன சொல்லி அழைக்கிறான் என்று பார்க்கிறாய் தானே…?அவனுக்கு அப்பா ஏக்கம் இருக்கு அது தான் ஹூரோ போல… தன்னை காத்த கிருபாவை அப்பாவாக நினைக்கிறான்.  

உனக்காக இல்லை என்றாலும் கூட உன் புள்ளைங்களை நினைத்து…நான் சொல்வதை கேளு உன் கிட்ட எல்லாம் இருக்கு புவனா…ஆனால் உன்னை பாதுகாக்க ஒரு துணை வேணாமா..? 

நானும் உன் அம்மாவும் எத்தனை நாளைக்கு உன் கூட இருக்க முடியும்…? கிருபா உன் புருஷனின் நண்பன் மட்டுமல்ல ராணுவீரனும் கூட… 

உன் வாழ்க்கை நல்லா இருக்கும் மா… பரத் கூட இப்போ நான் செய்வதை தான்… சரி என்று சொல்வான்…” என்றார்.  

கிருபா “ சார் மறுத்து பேசுவதாக நினைக்க வேணாம்…புவனாவை வற்புறுத்த வேணாம் எனக்கு புவனாவை விட தர்ஷன், தியா பாப்பாவை தான் பிடித்து இருக்கு… 

புவனாவை கல்யாணம் பண்ணி கொண்டு தான் இவங்களுக்கு…அப்பா அன்பை கொடுக்க வேணும் என்று இல்லை.  

நான் இனி இங்கே தானே இருக்க போகிறேன்…இவங்களை பார்த்து கொள்வேன் இது என் நண்பன் பரத்துக்காக …இவங்க அவனின் ரத்தம்.  

உங்க பெண்ணை பீரியாக விடுங்க…அன்பு, காதல்,உறவு வற்புறுத்தி வராது சார்…ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன் புவனாவுக்கு துணையாக எப்பவுமே நான் நிற்பேன்…” என்றான்.  

அப்படி சொன்னவனை புவனா சட்டென பார்த்தாள்…அதற்க்கு பிறகு அவர்கள்… இது பற்றி எதுவுமே பேசாது கிளம்பி விட்டார்கள் . 

வீட்டுக்கு வந்த கல்யாணி இது பற்றி சக்ரபாணியிடம் சொல்ல… 

“ ம் நானும் குரு போல தான் நினைத்தேன்…புவனாவுக்கு வயதா ஆகிவிட்டது…? அவளுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்…ஒரு அப்பா என்ற உறவு வேணும் கல்யாணி… அது கிருபாவா இருந்தால் நல்லா இருக்கும்.  

ஆ…நம்ம பாப்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டேன்…நிறைய நல்ல சம்பந்தம் வந்திருக்கு குரு, மீனா கூட கலந்து பேசி…முடிவெடுக்கலாம்…”என்றார்.  

“ தாத்தா நான் உங்க கூட பேச வேணும்…நான் பேசவில்லை என்றால் பிறகு எப்பவுமே என்னால் பேச முடியாது…தாத்தா வந்து நான் பவதீப்பை கல்யாணம் பண்ணி கொள்ள விரும்புகிறேன். 

நீங்க இதற்க்கு சம்மதிக்க வேணும்…நீங்க பேசினால் தான் அவர் என்னை கல்யாணம் பண்ணுவார்…” என்றாள் மயூரி.  

“ நீ நினைப்பது எதுவுமே நடக்காது மயூரிகா…உன் அம்மா வாழ்க்கை போல உன் வாழ்க்கையில் தப்பு நடக்க விட மாட்டேன்… 

நான் உன் தாத்தா மா உன் ஒவ்வொரு அசைவும்… பார்வையின் அர்த்தமும் எனக்கு தெரியும்.  

உன் கிட்ட இருந்து இந்த பதில் தான் வரும் என எதிர்பார்த்தேன்…உன் அம்மா கேட்டது போல நீ கேட்டு விட்ட ஆனால் இந்த தடவை …உன் தாத்தாவால் உன் ஆசையை நிறைவேற்ற முடியாது.  

நான் ஒரு முடிவெடுத்து இருக்கிறேன்…நீ ஹையர் ஸ்டடி படிக்க லண்டன் யூனிவர்சிட்டியில் ஏற்பாடு செய்து விட்டேன்…நீயும் உன் பாட்டி, கண்மணி பாரினுக்கு அடுத்த மாதம் கிளம்புகிறீங்க. 

உன் அம்மா போல முடியாது மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த என்று வை…அதற்க்கு பிறகு உன் தாத்தாவை நீ உயிரோடு பார்க்க மாட்ட…இரண்டு வருட படிப்பு ஆர்ஸ்ட் தான்.  

கண்ணில் பார்க்காது கருத்தில்  நிலைக்காது…அந்த பையனை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்…என்னை நானே அழித்து கொள்வேன் புரிகிறதா..?  

பவதீப் உன் உயிர்,மானத்தை காத்தவன் தான்…அதற்காக உனக்கு அவன் புருஷனாக வர முடியாது… 

இந்த சக்ரபாணியின் பேத்திக்கு புருஷனாக வர… ஒரு தகுதி இருக்க வேணும் அந்த தகுதி… அவனிடம் இல்லை.  

கல்யாணி உன் பேத்திக்கு எடுத்து சொல்லி புரிய வை…என்று சொல்லி விட்டு போனார். 

மயில் ஆடி வரும்….
 
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page