இதயம்!
துடிப்பு – 07
அனைவரும் ஆழ்ந்த உறகத்தில் இருந்த நேரம் அது.சாத்வேதின் மாளிகையைச் சுற்றி,நியமிக்கப்பட்டிருந்த காவலாளிகள் துப்பாக்கியுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.
சாத்வேதுக்கு,உறக்கம் எட்டாக் கனியாய் இருக்க,மகனின் பக்கத்தில் அமர்ந்து அவனின் தலையை வெகு நேரமாய் வருடி விட்டவாறு இருந்தவருக்கு,இருக்கும் பொறுப்புக்களும் கடமைகளும் மற்றைய நேரங்களில் மகனிடம் நெருங்கிட தடையாய்.
அபிஷேக்கிடம்,தற்பொழுது அசைவுகள் இருந்த போதிலும்,அவனால் எழுந்து நடமாடுவது எல்லாம் இயலாத காரியம்.ஓரிரண்டு வார்த்தைகள்,அதிகம் கதைத்தாலே,ஆழமாக மூச்சு வாங்கத் துவங்கிடும்.
மகன் ஒரு புறம்..
தன்னை நம்பியிருக்கும் மக்கள் ஒரு புறம்..
நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து ஒரு புறம்..
என,அனைத்தும் சுற்றி வளைத்திருக்க,அவற்றை சமாளிப்பது முதன் முதலாய் அத்தனை உளைச்சலை தந்தது,மனிதருக்கு.
எத்தனையோ இடர்பாடுகளையும் இன்னல்களையும் கடந்து நாட்டை திறம்பட நிர்வகித்த,தலை சிறந்த ஆட்சியாளர் என்ற போதிலும்,ஏனோ இந்த சமயம் மனதில் பெரும் தளர்வு.
தீர்வு தேடிக் கொண்டிருக்கும்,பிரச்சினைகளை யோசித்தவாறு இருந்தவரோ,மகனின் அறைக்கதவை சாற்றி விட்டு வெளியேறிட,அவ்விடத்தில் பெரும் அமைதி.
மாளிகையில் சமையலுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும்,பகுதியின் பின்னே,வேலையாட்கள் சிலருக்கான தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மிக நம்பிக்கைக்குரிய,பணியாளர்கள் மட்டுமே,அதுவும் சாத்வேதின் நேரடி கண்காணிப்பின் கீழே,வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.
பணியாளர்கள் அனைவரும் உறங்கி இருக்க,ஒருவன் மட்டும் இமைகளை மூடி தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.
மெதுவாய் விழி திறந்திடவும்,சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர்,கதவைத் திறந்தவாறு உள்ளே நுழையவும் சரியாய் இருக்க,சட்டென போர்வையை இழுத்து தன்னை முழுதாக மூடிக் கொண்டவனுக்கு,மாட்டிக் கொண்டு விடுவோமா என சிறு பயம்.
காஷ்யப்பின்,நம்பிக்கைக்குரிய ஒற்றன் தான்,அவன்.அவன் கூறியதற்கு,இணங்கவே இம்மாளிகையின் கிட்டத் தட்ட நான்கு வருடமாக வேலை பார்ப்பது.
ஆஜ்வின் இல்லாத சமயம்,வேலைக்கு ஆட்கள் எடுக்க,அதுவே தக்க தருணம் என ஊகித்து,இவனை உள்ளே அனுப்பி இருந்தார்,காஷ்யப்.
அவரின் ஊகம் பொய்த்துப் போகவில்லை.அவரின் அடியாளுமே,சிறு துளி சந்தேகமும் வராதவாறு,நடந்து கொள்ள யாரின் பார்வையும் இதுவரை அவன் மேல் திரும்பியது இல்லை,என்பதே அவனின் எண்ணம்.
அனைவரும் உறங்கியதை உறுதி செய்தவாறு,மெல்ல எழுந்தான்,அவன்.
எழுந்தவனோ,அரவம் எழுப்பாது கதவை சாற்றிக் கொண்டு பூனை நடையுடன் மாளிகையின் முன் கூடத்தை அடைந்து,தூணொன்றின் பின்னே ஒளிந்து கொண்டிட,அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவன் மனம் கணக்குப் போட்டது.
அபிஷேக்கின் அறை,முதல் தளத்தில் அமைக்கப்பட்டிருக்க,அதற்கு வெளியில் மட்டும்,காவலுக்கு ஒருத்தனை நியமித்து இருந்தனர்.
அபிஷேக்கின் அறைக்குள்,அனுமதியின்றிய நபர்கள் யாரேனும் நுழையும் பட்சத்தில்,மாளிகை முழுவதும் சைரன் ஒலி கேட்பதுண்டு.
அவனோ,தன் பாக்கெட்டில் இருந்த,உள்ளங்கை அளவே இருக்கும் கருவி மூலம்,அதை தடை செய்தவனோ,சாதுர்யமாய் உள் நுழைந்தவனின் மனதில் அபிஷேக்கை கொலை செய்யும் எண்ணம் எல்லாம்,இல்லை.
பரபரவென,அறையின் மூலையில் இருந்த குப்பைத் தொட்டியை ஆராய்ந்தவனின் முகத்தில் சலிப்பான பாவம்.
அடுத்து,அவனோ அங்கிருந்த அபிஷேக்கின் பொருட்களை ஆராயும் போதே,பின்னிருந்து அவனை வளைத்து பிடித்து,கத்த விடாமல் செய்து,தரதரவென்று இழுத்துச் சென்றது,உருவமொன்று.
மூன்று நாட்களுக்கு பிறகு,
யாத்ரிக்கு,மகனை அனுப்ப விருப்பமேயில்லை.ஆயினும்,கடமை என்று வரும் போது,அதில் இருந்து தடுக்கவும் முடியவில்லை.
அவன் எங்கே செல்கிறான் என்று இதுவரை,தெரியப்படுத்தியும் இருக்காது இருக்க,அதுவே அவரின் பயத்துக்கு காரணமாய்.
தாயிடம் கூறிக் கொண்டு,கிளம்பியவனோ,பதினைந்து நிமிடங்களில் அவர்களின் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்திட,அங்கு அவனுக்கென காத்துக் கிடந்தார்,பிரதீஷும் தோழர்களும்.
அமிதேஷும் விஷ்வின்னும்,முன்பு இதே துறையில் இருந்த போதிலும்,அமிதேஷோ தனது தாயின் பயத்தை கருத்தில் கொண்டு,தனது ஆசையை தவிர்த்து வேறு துறையில் செல்லலானான்.
ஆயினும்,தற்சமயம் அவனின் உதவி தேவைப்படவே,மறுக்காமல் சாத்வேதின் விண்ணப்பத்தை ஏற்றிருந்தான்,தாயிடம் தெரிவித்திடாமல்.
“இப்போ போய் அங்க நாள் படி ரெண்டு வாரத்துக்குள்ள நீங்க திரும்பி ஆகனும்..நம்ம பிரபஞ்சத்த தாண்டி இந்த ஸ்பேஸ் ஷிப் பூமி இருக்குற பிரபஞ்சத்துக்குள்ள நுழைறப்போ அதுக்குரிய சிக்னல இந்த ஸ்க்ரீன் காட்டும்..” என்றார்,ஸ்பேஸ் ஷிப்பில் இருந்த திரையை காட்டி.
“ஆஜு டேவிட் எப்டியும் கெஸ் பண்ணி இருப்பான் நீங்க எல்லாரும் அங்க வர்ரத..அவனோட இருக்குற வாட்ச்கு நம்ம ஸ்பேஸ் ஷிப் பூமியோட க்ராவிட்டிக்குள்ள போகும் போதே சிக்னல் காட்டிரும்..ஸோ ப்ராப்ளம் இருக்காதுன்னு நெனக்கிறேன்..”
அத்தோடு,மூவரின் கையிலும் ஒரு சிறிய கைக்கடிகாரம் போன்றதோர் கருவியை நீட்ட,அமிதேஷும் விஷ்வின்னும் புரியாமல் பார்த்தனர்.
“இது உங்க சேஃப்டிக்காக..ஏதாச்சும் ஆபத்துன்னு தெரிஞ்சா இந்த ரெட் பட்டன ப்ரெஸ் பண்ணுங்க..பட் ப்ரெஸ் பண்ணும் போது கண்டிப்பா வாட்ச் கைல இருக்கனும்..அப்போ விசிபலானத இன்விசிபலா மாத்தற ஒரு வக லைட் இதுல இருந்து வெளிய வரும்..ஸோ நீங்க யாரோட கண்ணுக்கும் தெரிய மாட்டீங்க..ஏதாச்சும் ப்ராப்ளம்னா இத யூஸ் பண்ணுங்க..” என்றவரின் முகத்தில் அசாத்திய நம்பிக்கை மிளிர்ந்தது.
அது அவன் மீது,அவர் வைத்த நம்பிக்கையின் சாயல்.
அடுத்த சில நிமிடங்களில் ஸ்பேஸ் ஷிப்பை இயக்கி,விண்வெளியில் பறக்கத் துவங்கினர்.மின்னல் வேகத்தில் இயங்கிய ஸ்பேஸ் ஷிப்பின் திரையில் சிக்னல் புலப்பட,பூமி இருக்கும் பிரபஞ்சத்தினுள் நுழைந்ததை உணர்ந்தவனின்,மனதில் தன்னால் ஒரு படபடப்பு.
விழிகளில் மெல்லிய தவிப்பு.வதனத்தில் சிறு அலைப்புறுதல்.தோழர்கள் இருவரும் அவனைக் கவனிப்பதாய் இல்லை.
மேலும் ஒரு நாள் கடந்த நிலையில்,ஸ்பேஸ் ஷிப்பின் வேகம் தன்னால் கூடிப் போக,அதை ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போல் இருக்க, அவர்களின் கட்டுப்பாட்டை மீறி,குறித்த திசையொன்றில் இயங்கத் துவங்கிட,அமிதேஷ் சற்றே பயந்து விட்டான்.
வெகுநாள் இத்துறையுடன் பழக்கம் அற்றுப் போயிருக்க,அவனுக்குள் பய விதை.
“பூமியோட க்ராவிட்டி எல்லைக்குள்ள நாம வந்துட்டோம்..அதான் ஸ்பேஸ் ஷிப் இவ்ளோ ஸ்பீடா போகுது..” என்றவனின்,பல அனுபவப் பாடங்கள் ஸ்பேஸ் ஷிப்பை,தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரை வைக்க கை கொடுக்க,ஸ்க்ரீனில் தெரிந்த பூமியின் வரைபடத்தை பார்த்தவனோ,பிரதீஷ் குறிப்பிட்டுக் கூறிய இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் இருக்கும்,ஆள் அரவமற்ற மணல்வெளியொன்றில்,ஸ்பேஸ் ஷிப்பை தரை இறக்கினான்.
சில நொடிகளில் புழுதி அகன்று போக,பூமியில் பாதம் பதித்து அவன் இறங்கிட,இதழ்களின் ஓரம் மெல்லிய புன்னகை.
அத்துடன் மனதின் ஓரம் படர்ந்திருந்த படபடப்பு,பெரும் அலையென ஆர்ப்பரித்து கிளம்ப,ஹேசல் நிற விழிகளில் அப்பட்டமான தவிப்பு.
என்னவோ உணர்வுகள் அவனுக்குள்;அவன் உயிருக்குள்.சரிவரத் தெரியவில்லை;முழுதாய் புரியவில்லை.
தெரிந்து ஆழம் காண,அவன் விரும்பவுமில்லை.அப்படியே இருக்கட்டும் என்று தான் நினைத்தான்.அதற்கு மேல் ஒரு படியும் அவன் யோசித்திடாததன் காரணம்,சந்தேகமாய் இருப்பது உறுதியாகி விடும் என்ற பயமோ என்னவோ..?
பூமி தேடி வந்த பயணத்தில் இதயம் தொலைக்க விரும்பாதவன் அவன்.
ஓர் இதயம் வேண்டி,பூமி தேடி வந்த அவன் பயணத்திலேயே,அவன் இதயம் முழுதாய் தொலையப் போவது அவனுக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு இல்லையே.
இதுவோ,
அவன் தேடும் ஓர் இதயத்தையும்,அவனைத் தேடும் ஓர் இதயத்தையும் சுமக்கும் ஒரு பயணம்!
பூமியில் அவர்கள் தரையிறங்கி இத்துடன் ஒரு நாள் முடிந்திருக்க,அனைத்திலும் கை தேர்ந்தவன் போல் நடந்து கொள்ளும் தோழனை புரியாது பார்த்து இருந்தனர்,மற்றைய இருவரும்.
“டேய் இவன் நம்ம உலகத்துல பொறந்தவனா இல்லன்னா பூமி வாசியான்னு எனக்கே சந்தேகமா இருக்குடா..ஒரு வேள நம்மள எல்லாம் ஏமாத்திட்டு பூமி வாசி ஒருத்தன் தான் ஆஜ்வின்னு நம்ம உலகத்துல இருக்கானோ..?” விஷ்வினின் காதில் கிசுகிசுத்தவனை முறைத்தான்,அவன்.
விஷ்வின்னுக்கோ,நினைவுகள் பழையதை நோக்கி சுழன்றன.
அன்று,பிரதீஷ் கூறி முடிக்கையில் விஷ்வின்னும் வந்திருந்தான்.பிரஜின் தான்,அவனை அழைத்திருந்தது.
“மீதிய பிரஜின் சொல்லுவாரு..” என்ற பிரதீஷோ,அத்துடன் விடை பெற்றுச் செல்ல,அனைவரின் கவனமும் பிரஜினின் புறம் திரும்பியது.
“எக்ஸாக்டா அந்த இதயத்த சுமக்குற ஆள் யாருன்னு எப்டி கண்டு பிடிக்கிறதுங்குறது தான உங்க டவுட்..”
“நா இப்போ நார்மலா ஆஜுவோட கைய புடிச்சா அதுல எந்த வித்யாசமும் தெரியாது..பட் ஆஜு அபியோட கைய பிடிச்சா அவனால ஒரு டிஃபரன்ஸ ஃபீல் பண்ண முடியும்..தட் மீன்ஸ் ஒரு ஹீட்ட ஃபீல் பண்ணுவான்..அதுவும் இல்லாம ரெண்டு பேரோட ரேடியேஷனும் சேர்ந்து ரெண்டு பேர் பாடிலயும் சில சிம்டம்ப்ஸ் காட்டும்..”
“அதாவது டச் பண்ண எடம் வேர்க்குறது..இல்லன்னா நார்மல் ஹீட்ட விட கொஞ்சம் அதிகமா ஹீட் ஆகறது..பட் கண்டிப்பா நார்மலா ஒருத்தர் டச் பண்றத ரேடியேஷன் நடக்குற ஒருத்தர டச் பண்ணா வர்ர டிஃபரன்ஸ அவங்களால ஃபீல் பண்ண முடியும்..”
“அதனால நம்ம பக்கத்து நாட்டுல இருக்குற ஆள கண்டு பிடிக்க நாம பவனிய கார்ட்ஸ் கூட அனுப்ப போறோம்..அதுவும் அங்க பாப்யுலேஷன் ரொம்ப கம்மினால டூ மன்த்ஸ்குள்ள நம்மளால கண்டிப்பா கண்டு பிடிச்சிர்லாம்..”
“தென் ஆஜ்வின தான் பூமிக்கு அனுப்ப போறோம்..” என்க,சட்டென திரும்பி தோழனை விஷ்வின் ஏறிட,அவன் முகத்தில் படிக்கும் படியாக எந்த வித உணர்வும் இல்லை.
“பூமில எத்தன பேரு இருப்பாங்க..அவங்கள போய் எப்டி கண்டு பிடிக்கிறது..? அப்டின்னாலும் அது சாத்தியமா ப்பா..”
“சாத்தியமா இல்லயான்னு தெரியாது..ஆனா கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கறத தவிர வேற ஆப்ஷன் இல்ல..” என்றவரின் குரலில் கொஞ்சம் காட்டம்.
“சரி இப்போ கைய புடிச்சி ஆஜுக்கு தெரிஞ்சுருமா யாருன்னு..? சம்டைம் அப்டி இல்லன்னா என்ன பண்றது..?”
“ஆஜ்வினோட இதயம் அத காட்டிக் கொடுத்துரும்..”என்க,அரிமாவவனின் விழிகளுமே,சற்று அதிர்ந்து விரிந்தன.
அவனுக்கும் இந்த விடயம் பற்றி பெரிதாக தெரியாது.பிறகு கூறுவதாய்,பிரஜின் தெரிவித்திருக்க,அவவனுக்கு நினைவுபடுத்தி கேட்டிட,நேரம் இருக்கவில்லை.
“வாட்..? என்ன சொல்றீங்க பிரஜின்..”
“ஆஜ்வினோட பல்ஸ் ரேட் கம்மி..அதுல்லாம அவனோட இதயத்தோட கன்ட்ராக்ஷன் ஸ்ட்ரென்த் கம்மினால வால்வ் க்ளோஸ் ஆகற சவுண்டும் கேக்காது..இதுல எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான..”
“திரும்ப திரும்ப எத்தன தடவ இத சொல்லுவாரோ..” சலிப்பாய் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்,அமிதேஷ்.
“நார்மலா மனுஷன் டென்ஷன் ஆனா ஸ்ட்ரெஸ் ஆனா அவனோட ஹார்ட் பீட் கூடும்..ஆஜ்வினோடதும் கூடலாம்..சம்டைம் ரெண்டோ மூனோ பி பி எம் கூடலாம்..”
“ஆஜ்வின் பாடில இருக்குறது ஹை ரேடியேஷன்..அபியோட பாடில இருக்குற ரேடியேஷன ஸ்ட்ரென்த விட இது ரொம்ப அதிகம்..அப்டி அதே அளவு ரேடியேஷன் இருக்குற ஆளுங்க யாரு சரி ஆஜ்வின தொட்டாங்கனா அதுல அவனோட ஒடம்புல இன்னும் வலிமயான பவர்ஃபுல்லான ரேடியேஷன ஆக்டிவ் பண்ணும்..”
“அந்த ரேடியேஷனால அவனோட மயோகாடியல் செல்ஸ் ஸ்பெஷலைஸ் ஆகி இருக்கு..இந்த டபுள் பவர் ரேடியேஷன் ஆட்டோமேடிக்கா அவனோட மயோகாடியல் செல்ஸ்ல் ஒரு வால்டேஜ டிஃபரன்ஸ ஜெனரேட் பண்ணும்..”
“ஸோ அது கரண்டாகி பரவ,எஸ் ஏ நாட் ஆக்டிவ் ஆகி அவனோட ஹார்ட்டோட கன்டக்ஷன் சிஸ்டம் வர்க் ஆகும்..ஸோ அந்த டைம் மட்டும் அவனோட ஹார்ட்டு லப் டப் சவுண்டோட சிக்ஸ்டி டூ ஹன்ட்ரட் பல்ஸ் ரேட்டோட துடிக்கும்..”
“இது உண்ம தான பிரஜின்..?”
“மியூட்டேஷன்ஸ்னால என்னென்ன சேஞ்சஸ் வரும்னு கெஸ் பண்ண முடியாததுக்கு இது இரு க்ரேட் எக்ஸாம்பிள் சார்..”
“அப்போ ஆஜுவோட பாடில இருந்து கைய எடுத்துட்டாங்கனா என்ன ஆகும் அங்கிள்..? அதுல்லாம இப்டி திடுதிடுப்னு ஹார்ட் பீட் கூடிப் போறது அவனுக்கு ஏதாச்சும் ப்ராப்ளம்..?” இழுவையாய்,விஷ்வின் குரல்.
“அப்டி டச் இல்லாமப் போச்சுன்னா கொஞ்ச செக்கன்ஸ்ல அவன் ஹார்ட் நார்மல் ஆயிரும்..எந்த கெடுதியான எஃபெக்டும் இல்ல விஷ்வின்..நார்மலா மனுஷங்களுக்கு நடக்குறது தான..” என்க,அனைவருக்கும் அதை நம்புவது சற்றே சிரமமாகத் தான் இருந்தது.
அரிமா அவனுமே,தன்னை மீற இடது புற நெஞ்சில் கை வைத்து பார்த்திட்டான்.
அரவம் தரா தன்னிதயம்,ஆர்ப்பரித்து துடிக்குமா என்கின்ற சந்தேகம்,அவனுக்குள் அந்த நொடி எழுந்து பூதாகரமாய் விரிந்தது.
“ஹை ரெஸிஸ்டன்ஸோட ஆஜுவோட பாடி செல்ஸ் இருக்குறதால அவனுக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல..டபுள் என்ன நார்மல் ரேடியேஷன விட பத்து மடங்கு பவரோட ரேடியேஷன தாங்கக் கூடிய செல்ஸ் தான் இப்டி ஹை ரேடியேஷன்கு ரெஸிஸ்டா இருக்குற செல்ஸ்..”
“அதுல ஒரே ஒரு ஸ்பெஷல் என்னன்னா அவனோட மயோகாடியல் செல்ஸ்..அது மியூட்டேஷன்னால தான் இப்டி ஆகி இருக்கு..அந்த மியூட்டேஷன் இல்லன்னா கூட எந்த ப்ராப்ளமும் இல்ல..பட் என்ன இந்த ஹார்ட் ரேட் கூட்றதோ இல்லன்னா ஹார்ட் சவுண்ட் கேக்கறதோ இருக்காது அவ்ளோ தான்..” என்றவர் பல முறை எடுத்துக் கூறிய போதும்,அவர்களின் திகைப்பு நீங்கிய பாடில்லை.
“நெஜமாலுமே இவன் மனுஷன் தானா..” தன்னை மீறி கேட்டு விட்ட அமிதேஷோ,அனைவரினதும் சீற்றப் பார்வைக்கு ஆளாகவும் தவறிடவில்லை.
“தோ இது பல்ஸ் மானிட்டர்ஸ்..”என்றவாறு இரு சிறு கருவிகளை எடுத்து நீட்ட,புரியாமல் பார்த்தனர்.
“ஒன்ன ஆஜு கைல கட்டி விடுங்க..மத்தத நீங்க வச்சிக்கோங்க..ரெண்டும் வயர்லெஸ்ஸா கனெக்ட் ஆகி இருக்கும்..அப்டி நாம தேட்ற ஆள் ஆஜுவ தவறுதலா இடிச்சிட்டு போனா கூட ஃபிவ் செக்கன்ஸ் கூட்ற ஹார்ட் பீட்ட இந்த பல்ஸ் மானிட்டர் சென்ஸ் பண்ணும்..”
“சம் டைம் அவன் அதக் கவனிக்க மறந்தா கூட,உங்க கைல இன்னொன்னு இருந்தா அதக் கவனிச்சுக்கலாம்..” என்றிட,அனைவரின் முகத்திலும் மீளவும் அப்பட்டமான அதிர்வு.
“டேய் விஷ்..டேய்..” என அமிதேஷ் உலுக்கவுமே,தன்னிலை கலைந்தான்,அவன்.
“என்னடா யோசிச்சி கிட்டு இருக்க..?” என்றிட,மறுப்பாய் இல்லையென்றான்.
டேவிட் ஏற்பாடு செய்திருந்த வீட்டின் ஓர் அறையில் மூவரும் தங்கிக் கொள்ள,அவர்களுக்கு தேவையான அனைத்தையும் மன நிறைவுடனேயே,செய்து கொடுத்திருந்தார்,அவர்.
அமிதேஷும் விஷ்வின்னும் கட்டிலில் அமர்ந்து இருக்க,அரிமா அவனோ யன்னல் அருகே நின்று இயற்கையை வெறித்திருந்தான்.
இருவருக்கும் நேற்றில் இருந்து,அவன் கடைபிடிக்கும் அசாத்திய அமைதிக்கான காரணம் பிடிபடவில்லை.என்னவென்று கேட்ட போதிலும்,அவன் இதழ் பிரித்து ஒற்றை வார்த்தை உதிர்த்திடவும் மாட்டேன் என்றான்.
“சரி இந்த டேவிட் யாரு மச்சான்..?” வேறு பேச்சுக்குத் தாவினான்,அமிதேஷ்.
“ஏன் இந்த சந்தேகம்..?”
“ஏன்னா அவன பொறுத்த வர நம்ம வேற்றுக்கிரக வாசி..ஏலியன்..அப்டி இருக்கும் போது அத தெரிஞ்சி கிட்டு இவ்ளோ உதவி எல்லாம் பண்றான்..? இவ்ளோ நல்லவனா அவன்..?”
“டேய் எரும..முன்ன நாம படிக்கிறப்போ கட்டப்பையனா ஒருத்தன் சுத்துவானே..ஷவின்னு அவன் பேர ஸ்டைலா சொல்லிட்டு திரிவான்..அவன் தான் இது..?”
“வாட் என்ன சொல்ற நீ..?”
“அவன் நம்ம ஆஜுவோட டீம்ல அவனுக்கு கீழ தான வர்க் பண்ணிட்டு இருந்தான்..ஒரு தடவ ஆராய்ச்சிக்காக பூமிக்கு வந்தப்போ லவ்வாகி இங்கயே இருந்துட்டானாம்..”
“எதே! அப்போ அவன் ஏலியன்னு யாருக்கும் சந்தேகம் வர்லியா..?”
“எத வச்சுடா சந்தேகம் வரும்..? நம்மளுக்கும் இந்த பூமி வாசிங்களுக்கும் என்ன வித்யாசம்னு சொல்லு..நட உட மோஸ்ட்ஸி பழக்க வழக்கம் எல்லாம் ஒரே மாதிரி தான இருக்கு..ஒரு விஷயம் என்னன்னா பூமி பத்தி அதுல இருக்குற எடங்கள பத்தி நம்மளுக்கு அவ்ளோவா தெரியாது..அப்டி இருக்குறப்போ அந்த எடத்துல அடாப்ட் ஆகி இருக்குறது அவ்ளோ கஷ்டமா என்ன..?” என்க,வாஸ்தவமான கேள்வி என்பதால்,எதிர்த்து பேசவில்லை,அமிதேஷ்.
“இவன் மட்டுமா இங்க இருக்கான் பூமிவாசியா..? இல்லன்னா வேற யாராச்சும் இருக்காங்களா..?”
“இப்போதக்கி இவன் மட்டுந்தான்..அதுவும் இவன் இங்க பூமிவாசிய குடியேறினது தெரிஞ்சதும் அங்க நம்ம நாட்டுல பெரிய ப்ரச்சன ஆச்சு தெர்யும்ல..அதுக்கப்றம் யாரும் இப்டி பூமிக்கு வந்து இங்கயே இருக்கக் கூடாதுன்னு ரொம்பக் கவனமா இருக்காரு நம்ம ஜனாதிபதி..எல்லாரும் பூமிக்கு வந்தா நம்ம உலகம் என்னாகுறது..?”
“நம்ப முடில டா..இதெல்லாம் எப்டி சாத்தியம்..?”
“ஓவரா யோசிக்காத..இது தான் உண்ம..பியான்ட் தி ரியாலிட்டி நடக்குறது..நம்பறத தவிர வேற வழியில்ல..” என்றதும்,அரை மனதாய் ஒப்புக் கொண்டான்.
சில நிமிடங்கள் கழித்து,அறைக்குள் நுழைந்தான்,அரிமாவவன்.அவன் முகத்தில் பலவித யோசனை ரேகைகள் சூழ்ந்து கிடக்க,அதை அகற்றும் வழி தெரியாமல் அவனுக்குள் சற்றே தடுமாற்றம்.
அதே நேரம்,
தன்னறைக்குள் நின்றிருந்த பாவையவளின் கவனமோ,அறைக்கதவில் நிலைத்திருந்தது.
அதற்கு மேல் அதீத கவனத்துடன் யாரேனும் வருகிறார்களா என கதவில் காதை வைத்து உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தாள்,ராகவி.
இருவரின் நடத்தையிலும் சில சந்தேகம் வந்திருக்க,கதவைப் பூட்ட வேண்டாம் என எச்சரித்து விட்டு போயிருந்தார்,கணேஷ்வரி.
விழிகளில் துளிர்த்த கண்ணீருடன்,அவள் அழைப்பெடுத்திட,ஏனோ அது ஏற்கப்படும் வரை பொறுமை காக்க இயலாமல் போனவளது,இதயம் படபடவென துடித்தது.
துடிக்கும்.
2026.03.18
