உன்னில் சிறையாகிறேன் – 34

என்ன என்னவோ கனவுகளை வளர்த்தேன், கனவுகள் கடைசி வரை கனவாய் மட்டுமே போனதே காதலே…!

உன்னில் சிறையாகிறேன் – 34

​”சொல்லுங்க தாத்தா, என் அம்மா, அப்பா, அண்ணனுங்க, அண்ணி, அண்ணன் பையன், அவ்வளவு ஏன் வயித்துல இருந்த பச்சக்குழந்தையைக் கூட விட்டு வைக்காம அநியாயமா கொன்னது இந்த கார்தானே, 

இது உங்க பேரன் அக்னியோட கார் தானே, அக்னி தான் என் குடும்பத்தைக் கொன்ன கொலைகாரனா, சொல்லுங்க தாத்தா” என்று ஆங்காரமாக கத்தினாள் அருவி, 

அவளின் ஆவேசமான கர்ஜனையில் வீட்டில் இருந்த மொத்தபேரும் ஓடி வந்தனர், வசந்தா கூட அங்கு வந்து விட்டாள்,

​”அருவி… கொஞ்சம் அமைதியா இருமா… நான் சொல்றதைக் கேளு… அக்னி மேல எந்தத் தப்பும் இல்ல அது அவனையும் மீறி” என்று அவர் தழுதழுக்க,

​”அவரையும் மீறி தெரியாம நடந்திருச்சுன்னு சொல்றீங்களா தாத்தா, உசிரா உறவா ஒன்னா வாழ்ந்த எல்லாரையும் ஒரேநாள்ல மொத்தமா இழந்துட்டு,  அனாதையா அலைஞ்சப்போ கூட வராத ஆத்திரம் இப்போ வருது தாத்தா, 

ஒரு கோடி ரூபாய் பணத்தைக் குடுத்து என்னை நீங்க ஏன் விலைக்கு வாங்கினீங்கன்னு இப்போ புரியுது, உங்க பேரன் செஞ்ச கொலைக்கு என்னைப் பரிகாரப் பொருளா மாத்திட்டீங்க இல்ல,

என் குடும்பத்தை அழிச்ச அதே கொலைகாரனுக்கு என்னை கட்டி வச்சு அழகு பார்த்தீங்களே, உங்களுக்கு கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லையா” என்ற ​அருவியின் ஆவேசத்தில் திருவாசகம் தலைகுனிந்து நின்றார்,

​”நடந்த உண்மையை மறைக்கத் தானே போலீஸை விலை பேசினீங்க, அன்னைக்கு அந்தச் சம்பவத்துல உங்க பேரனோட கார் இருந்ததை ஏன் மறைச்சீங்க, 

உங்க பேரனை காப்பாத்த இன்னும் என்னெல்லாம் பண்ணீங்க தாத்தா, அதையும் சொல்லிடுங்க மொத்தமா கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்” என்ற அருவி ஒவ்வொரு வார்த்தையையும் ஆத்திரத்தில் கொட்டினாள், 

“உங்க பேரன் ஒரு கொலைகாரன், இனிமே அந்தப் பாவியோட நிழல் கூட என்மேல படக்கூடாது, ஒரு அனாதைப் பொண்ணை ஏமாத்துறது உங்களுக்கு அவ்ளோ மலிவாப் போயிடுச்சா, 

நீங்க என்கிட்ட காட்டுனது அன்பே இல்ல, அது வெறும் நடிப்பு, உங்க எல்லாரையும் பார்க்கும்போது அருவருப்பா இருக்கு தாத்தா, பணம் இருந்தா என்னா வேணாலும் பண்ணலாம்னு நினைச்சீங்களா, 

என் குடும்பத்தோட சாவுக்கு நீதி கிடைக்கிற வரைக்கும் ஓய மாட்டேன் தாத்தா, இவ்வளவு நாளும் நீங்க பார்த்த அருவி வேற, இனிமே நீங்க பாக்கப் போற அருவி வேற, உங்க பேரன் பண்ணதப்புக்கு நிச்சயமா தண்டனை கிடைக்கும்,

எந்த சட்டத்தை காசு குடுத்து விலைக்கு வாங்குனீங்களோ அதே சட்டத்து முன்னாடி உங்க பேரனை குற்றவாளியா நிற்க வச்சு, சட்டபடி தண்டனை வாங்கி குடுப்பேன்” என்று அருவி சொல்ல,

“ஏய் எங்க வந்து என்னடி பேச்சுப் பேசுற, என் வீட்டு கேட்டைத் தொட்டுப் பாக்கக் கூட தகுதி இல்லாத நீ, என் வீட்டுக்குள்ள வந்து நின்னு என் பையனையே கொலைகாரன்னு பழி சொல்றியா” என்ற,

வசந்தா நோக்கிப் பாய்ந்து வந்தாள், தன்னிடம் பாய்ந்து வந்தவளின் கழுத்தை உக்கிரமாக எட்டிப் பிடித்தாள் அருவி,

“ஒரு குடும்பத்தையே கொன்ன கொலைகாரனை பையனா பெத்த நீ என் தகுதியைப் பத்தி பேசுறியா, உங்க பணவெறிக்கு என் குடும்பத்தை பலி குடும்பம் தான் கிடைச்சுதா” என்று 

உரத்த குரலில் பொங்கிய அருவி இன்னமும் உக்கிரம் கூடிப் போய் வசந்தாவின் கழுத்தை நெறித்தாள் அருவி, மூச்சு விடமுடியாமல் நாக்குத் தள்ள விழி பிதுங்கி நின்றாள் வசந்தா, 

நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவன் அருவியிடம் வந்தார்,

“இங்க பாரும்மா முதல்ல கையை எடு இல்லன்னா அவ செத்துப் போயிருவா” என்றார்,

“செத்தா சாகட்டும் செத்து ஒழியட்டும் என் அம்மாவை கொன்னான் இல்ல அவனுக்கும் அம்மா இல்லாம போகட்டும்” என்று வசந்தாவின் கழுத்தை விட மறுத்தாள் அருவி,

“கோபத்துல முட்டாள் தனமா ஏதும் பண்ணாம யோசி, இப்ப இவளைக் கொன்னா மட்டும் எல்லாமே சரியாகிடுமா, 

எதுவா இருந்தாலும் பேசிக்கலாம், அவளை விடு” என்று அருவியிடம் மாட்டிருந்த வசந்தாவின் கழுத்தை விடுவித்தார் வாசுதேவன், 

நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சியிலும் பயத்திலும் வெளவெளத்துப் போனாள் வசந்தா, கழுத்தைப் பிடித்துக் கொண்டு விட்டால் போதுமென அறைக்குள் நுழைந்து கொண்டாள்,

கண்ணை மறைக்கும் கோபத்திலும், புத்தியை மழுங்கடிக்கும் ஆத்திரத்திலும் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட மனமில்லாமல் அப்படியே நின்றிருந்தவளைப் பார்க்கவே பாவமாகவும் பரிதாபமானதாகவும் இருந்தது,

“நீ சொல்ற எதுவுமே எனக்கு தெரியாதும்மா, இப்ப நீ சொல்லி தான் தெரியும், பணமிருந்தா எவ்ளோ பெரிய தப்பையும் ஈசியா மூடி மறைக்கலாம்னு நினைக்கிற ஆள் நானல்ல, 

நீ சொல்றது உண்மையா இருந்தா, அக்னியால தான் உன் குடும்பம் அழிஞ்சதுன்னா அதுக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏத்துக்கிட்டு, 

அவனை சட்டப்படி தண்டிக்க என்ன பண்ணனுமோ நிச்சயமா அதைப் பண்ணுவேன்” என்று கூறி விறுவிறுவென வெளியே சென்றார் வாசுதேவன்,

குனிந்த தலை நிமிராமல் தளர்ந்து போய் நின்ற திருவாசகத்தை திரும்பி பார்த்தவள்,

“இனிமே நானும் திரும்பி வர மாட்டே, அதே மாதிரி என்னைத் தேடி யாரும் வந்துடாதீங்க” என்று கூறி விட்டுச் சென்று விட்டாள் அருவி,

சென்றாள் என்பதை விட தன்னவனை தூக்கி எறிந்து விட்டாள் என்பதே பொருத்தமாக இருக்கும்,

“அருவிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுடுச்சு, அன்னைக்கு நடந்த விபத்து, அதுல அவ குடும்பம் சிதைஞ்சு போனது, அதுக்குக் காரணமான கார், 

அந்தக் கார் யாருடையதுங்கிற வரைக்கும் எல்லா ஆதாரமும் அவ கைக்குக் கிடைச்சுடுச்சு அக்னி, இனிமே அருவி திரும்பி வரமாட்டா, நீயே நேர்ல போனாலும் அவ கோபம் அதிகம் தான் ஆகும்” என்றார் தாத்தா,

​”இல்ல தாத்தா… நான் அவளை அப்படியே விட்டிட மாட்டேன், அது ப்ளான் பண்ணி பண்ணது இல்ல, நடந்தது ஒரு ஆக்ஸிடெண்டுன்னு அவளுக்குத் தெரியனும்,

நான் யாருன்னு அவளுக்குத் தெரியனும், அதுக்கு அவகிட்ட நான் பேசணும்… என் மனசில இருக்கிறதை எல்லாத்தையும் மறைக்காம சொல்லணும்” என்று அக்னி பேசிக் கொண்டிருக்கும் போது,

“நீ சொல்ற கதையை எல்லாம் கேட்க அவ ஒன்னும் முட்டாள் இல்லடா” என்றவாறு அங்கே வந்தார் வாசுதேவன், 

“என்னடா அப்படியே நின்னுட்ட ஒரு குடும்பத்தையே அழிச்ச கொலைகாரப் பாவியை என் மகன்னு சொல்லவே கேவலமா இருக்கு, 

நீ செஞ்ச தப்புக்கு நீ சட்டப்படி தண்டிக்கப் படனும், அதுக்கு தான் இவங்க வந்திருக்காங்க” என்று அங்கு வந்த போலீஸாரைக் காட்டினார் வாசுதேவன்,

“நீ என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றியா வாசு” என்று மகனிடம் எகிறிக் கொண்டுவந்தார் திருவாசகம்,

“தாத்தா நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க, என் மகிழோட ஆசை இதுதான்னா அதை சந்தோஷமா ஏத்துக்கறேன்” என்று தாத்தாவை அடக்கிய அக்னி, 

கைகளை நீட்ட போலீஸார் அவனின் கைகளில் விலங்கிட்டனர், எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்த அக்னியின் கைகளோ நீதி தேவதையின் வசம் ஒப்படைக்கப்பட்டது,

தன்னவளது நீதிக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் துணிந்தவன் எந்தவித எதிர்ப்பும் சொல்லாமல் அவர்களுடன் சென்றான் அக்னி, திருவாசகம் தான் பதறித் துடித்தார்,

“என்ன நடந்ததுன்னு தெரியாம அநியாயமா இப்படி பண்ணிட்டியே, நீ எல்லாம் ஒரு அப்பாவா, என் பேரனையே கொலைகாரன்னு சொல்லிட்ட இல்ல, இனி என் முகத்துலயே முழிக்காத” என்று கோபப்பட்ட திருவாசகம் அங்கிருந்து வேகமாக சென்றார்,

**************

ஒருமாதகாலம் ஆன நிலையில்: ஆரம்பத்தில் பிடிபடாமல் இருந்தால்கூட இதுதான் தன் வாழ்க்கை, இனி இவன்தான் தனக்கானவன் என்று,

அவளாகவே ஒருமுடிவுக்கு வந்ததால்தானோ என்னவோ தன் கற்பையும் மனதையும் எவ்வித தங்குதடையும் சொல்லாமல் அவனுக்காக கொடுத்தாள்,

அதற்குப் பலனாக அவன் கொடுத்த வலிகளோ எதிரிக்குக்கூட வரக்கூடாத நிலையல்லவா, சின்னஞ்சிறு பெண்ணவளின் உள்ளம் இன்னமும் எத்தனை துயரைத் தான் தாங்குமோ,

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருப்ப அருவி, உன்னை பாக்க பாக்க மனசே வலிக்கிது, முதல்ல எழுந்து கொஞ்சமாவது சாப்பிடு” என்ற தன் தோழியை கலங்கியே சிவந்த விழிகளில் நோக்கினாள் அருவி,

“என்னை அப்படி பாக்காத அருவி, உன் லைஃப்ல நீ இழந்த இழப்போட வலி என்னன்னு எனக்குப் புரியுது, ஆனா அதுக்காக நீ ஏன் தண்டிச்சுக்கிற, நடக்கிற எல்லா பிரதச்சனையில இருந்து நீ மறுபடியும் மீண்டு வரனும் அருவி, உனக்காக இல்லன்னாலும் எனக்காக நம்ம குழந்தைகளுக்காகவாவது மீண்டு வா” என்று தமிழினி சொல்ல, 

என்ன நினைத்தாளோ என்னவோ தமிழினியைக் கட்டிக் கொண்டு ஓவென அழுதாள், அவளின் மனபாரமும் வலியும் கரையும் அளவு அழுது தீர்த்தாள், 

“அழு நல்லா அழு இத்தோட அழுதே எல்லாத்தையும் முடிச்சிரு, இனிமே நீ அழவே கூடாதுங்கிற அளவு அழுதுரு, ஆனா இனி என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்னு துணிவோட எழுந்திருச்சிரு அருவி” என்று அவளுடன் தானும் அழுதாள் தமிழினி,

இருவரின் அழுகைச் சத்தமும் அந்த அறையெங்கும் எதிரொலித்து ஓய்ந்தது, தமிழினியின் தோளில் சாய்ந்திருந்தவள் மனதிற்குள் தேங்கிக் கிடந்த நஞ்சு, கண்ணீராக வெளியேறிவிட, 

இப்போது ஒருவிதமான வெறுமை அவளைச் சூழ்ந்தது, ​அப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டு இருவரும் நிமிர்ந்தனர், அங்கே ரோஹித் நின்றிருந்தான், 

​”மேடம்…” என்று அவன் அழைக்க, அருவி அவனை ஏறிட்டாள்.

​”நீங்க செஞ்சதுல எந்தத் தப்பும் இல்ல மேடம், உங்களுக்குத் துரோகம் செஞ்சவருக்குத் தண்டனை கிடைச்சிருக்கு, அதுக்காக நீங்க ஏன் இப்படி முடங்கிக் கிடக்கணும்” என்று ரோஹித் கம்பீரமாகக் கேட்டான்,

​அருவி மௌனமாக இருக்கவே, ரோஹித் தொடர்ந்து பேசினான்,

“அக்னி சார் ஜெயில்ல இருக்கிறது அவரோட தப்புக்கான தண்டனை, ஆனா நீங்க இப்படி இருக்கிறது உங்களுக்கே நீங்க குடுத்துக்கிற தண்டனை, 

உங்ககூட நாங்க இருக்கோம் மேடம், நீங்க எதுக்கும் கலங்காம தைரியமா இருங்க மேடம்” என்றான், ​அருவி மெல்லத் தலையசைத்தாள், 

​”ஓகே மேடம், இதையெல்லாம் விடுங்க, ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான் வந்தேன், அடுத்த வாரம் என் அக்காவோட கல்யாணம், 

நீங்களும் தமிழும் கண்டிப்பா வரணும், நீங்க வராம இருந்தா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் மேடம்” என்று ரோஹித் உரிமையோடு அழைத்தான், தமிழினி அருவியின் கையைப் பற்றினாள்,

“ஆமா அருவி, ரோஹித் சொல்றது சரிதான், நாம போயிட்டு வரலாம், நீ வர்றேன்னு சொல்லு” என்று வற்புறுத்தினாள்,

​அருவி ஒரு நிமிடம் யோசித்தாள், அக்னியின் நினைவுகளும், அவனால் ஏற்பட்ட ரணங்களும் அவளைத் துரத்தினாலும், தன்னைச் சுற்றி இருக்கும் இவர்களின் அன்புக்காக அவள் தன்னையே தேற்றிக் கொள்ள முடிவெடுத்தாள், 

“சரி ரோஹித்… நான் வர்றேன்,” என்றாள் மெல்லிய குரலில், அதைக் கேட்டதும் ​ரோஹித் முகத்தை பார்க்கனும் தலைவனுக்கு ஆயிரம் வாட்ஸ் பல்பை விடமும் ப்ரைட்டா எரிந்தது,

ரோஹித் தன் அக்கா திருமணத்தை முன்னிறுத்தி அருவியை தன் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்து, தன் குடுத்தினர்கள் மூலமாக அருவியை திருமணம் செய்ய,

சாரி தப்பா சொல்லிட்டேன், மறுமணம் செய்ய யாரிடமும் சொல்லாம திட்டம் போட்டிருக்கேன், அவனின் திட்டம் பலிக்குமா?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page