உருத்திரா❤️ 36

“அப்போ உனக்கு இந்த மேரேஜ் ஓகேவா திகள்? திரும்ப கல்யாணம் பண்ண வேண்டாமா?” என்று கேட்ட அப்பாவிடம் வேண்டாம் என மறுத்துவிட்டாள் திகள்விழி.

அவளுடைய பதிலில் இருந்த தெளிவு சோமசுந்தரத்தின் மனதை நிறைத்தது.

அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமிருக்கிறதா என்பதுதான் அவருக்கு முக்கியம். மற்றபடி, கல்யாணம் எப்போது, எப்படி நடந்தது என்பதெல்லாம் தேவையில்லை என மனதை தேற்றிக்கொண்டார்.

சரியாக அபிராமி பேச்சை மாற்றினார்.

“தங்கம் உன் கல்யாணத்துக்கு நானும் சாம்பவியும் கிஃப்ட் அனுப்புறோம் வாங்கிக்கோ! அப்படியே அவனையும் கொஞ்ச நாள் வச்சு அனுப்பு. நாங்க நிம்மதியா இருப்போம்” என்றார் அபிராமி.

“அபி எனக்கு கிஃப்ட் கூட சேர்த்து புளியோதரை மிக்ஸ், தொக்கு, அப்புறம் மசாலா பொடி… உன்னோட இட்லிப் பொடி எல்லாம் சேர்த்து அனுப்பு. பவியோட ஸ்பெஷல் ஊறுகாயை மறந்துறாத!” என லிஸ்ட் சொன்னவளைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க,

“இதோ லிஸ்ட் எழுதிக்கிறேன் ஒருவாரத்துல வந்திரும்!” என்று துள்ளிக் குதிக்காத குறையாக மருமகளுக்கு கொடுத்தனுப்ப பொருட்கள் செய்வதற்கு ஓடினார் சாம்பவி.

இரண்டு மகள்களையும் இந்த வீட்டு பெண்கள் தாங்குவதைப் பார்த்து உள்ளம் நிறைந்துபோனது சோமசுந்தரத்துக்கும், பார்வதிக்கும்.

தங்களுடைய மகள்கள் இருவரும் அன்பான கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு, ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டனர்.

சிறிதுநேரம் வீட்டினரோடு பேசிவிட்டு போனை வைத்தான் பத்ரன்.

“தூங்கலாம் குட்டச்சி! நான் போய் குளிச்சிட்டு வரேன். தயவுசெய்து குட்டி டிரஸ் போடாத, அப்புறம் பாஞ்சுட்டா என்னை குறை சொல்லுவ!” என்று எச்சரித்துவிட்டுக் குளியலறைக்குள் போனான்.

அவன் பேச்சில் சிரித்த திகள், கபோர்டை உருட்டி அழகான புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு ஓடினாள்.

‘வெயிட் பண்ணுங்க மாமா! நான் கட்டப்போற சேலையை பார்த்து, அந்த குட்டி டிரஸ் எவ்வளவோ பரவாயில்லைன்னு சொல்ல வைக்கல, நான் உங்க குட்டச்சி இல்ல!’ என மனதிற்குள் சவால் விட்டபடி தயாராக ஆரம்பித்தாள்.

அவன் குளித்து முடித்து, தூங்குவதற்காக பெட்டை செட் பண்ணிக்கொண்டிருக்க, அவள் அறைக்குள் வந்தபாடில்லை!

“விழி என்ன பண்ற? டிரஸ் சேஞ்ச் பண்ண இவ்வளவு நேரமா… குட்டச்சி?” என்று கத்தியபடி வாசல் பக்கம் திரும்பினான்.

அங்கு கந்தர்வ கன்னிகையே தோற்கும் பூலோக அப்சரஸாக நின்றிருந்தாள் திகள்விழி. உள்ளே இருப்பதை படம் போட்டுக் காட்டும் சேலை என பெயருக்கு ஒரு துணி!

ஜாக்கெட்டில் மறைப்பு என முன்னால் மட்டுமே இருக்க, ஒற்றைக் கயிறு தோளிலிருந்து துணி விழாமல் பிடித்திருந்தது. பின்னால் சுத்தம்! ஜன்னல் வைத்துப் பார்த்திருக்கிறான். அங்கு சொர்க்கலோக கதவல்லவா இருந்தது!

அதை மறைக்கும் எண்ணம் துளியும் இல்லாமல், கூந்தலை மொத்தமாகத் தூக்கி வலது பக்கம் வழிய விட்டிருந்தவள், பத்ரனின் திகைத்த நிலை கண்டு எழுந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கினாள்.

“இந்த டிரஸ் ஓகேவா மாமா! குட்டியா இல்லைல… தூங்கலாமா?” என்று அப்பாவியாய் கேட்டவளைப் பாவமாகப் பார்த்தான்.

“என்ன முழிக்கிறிங்க? வாங்க, வாங்க!” என்று அவன் கையை பிடித்தவளின் இடையில் கைகொடுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான் பத்ரன்.

“எனக்கு விதவிதமா தண்டனை கொடுக்க உன்னால மட்டும்தாண்டி முடியும்! என்னடி பிளவுஸ் இது? கயிறு வச்சே முழுசா தச்சிருக்காங்க… 

இதெல்லாம் எங்க வாங்குற? சேலை அதுக்கு மேல… என்னை ரொம்பச் சோதிக்கிற குட்டச்சி!” என்றவன் இதழ்கள், துணி மறைக்காத அவள் தோள்களில் ஊர்வலம் வந்தன.

பத்ரன் பேச்சில் எழுந்த உஷ்ணம் அவள் அடிவயிற்றில் குளிரைப் பரப்பியது!

“உங்களை சோதிக்கிறேன்னு தெரியுதுல! பின்ன ஏன் அமைதியா இருக்கிங்க… இதை மாட்டுறதுக்கு மட்டுமே கஷ்டமா இருந்தது. கழட்டுறது ஈசிதான்!” என்றவள் பேச்சில் இன்னும் அவன் பிடி அழுத்தமாக அவளில் பதிந்தது.

“வேண்டாம் விழி! உனக்கு இரண்டு வருஷம் படிப்பு இருக்கு. என்னை சீண்டாத, அப்புறம் இதுக்காகவே உன்னை தேடி வந்த மாதிரி ஆகிடும்” என்றவன் பேச்சில் கோபம் வர,

“என்ன இதுக்காக? பொண்டாட்டி கூட லவ் மேக்கிங் பண்ணாம வேற யார்கூட பண்ணுவாங்க லூசு மாமா! உங்களுக்கு வேணுமா? வேண்டாமா?” என்று கேட்டாள்.

பதில் சொல்ல முடியாமல் அவன் தடுமாறுவதைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் திகள்விழி.

இவரு சரிப்பட்டு வரமாட்டாரு…

“சரி நீங்க தூங்குங்க! நான் பகல்ல நல்லா தூங்கிட்டேன் அதனால இப்போ தூக்கம் வரல. பக்கத்து ரூம்ல கொஞ்ச நேரம் பரதநாட்டிய ஸ்டெப்ஸ் பிராக்டீஸ் பண்ணிட்டு, டயர்டானதும் தூங்க வரேன் நீங்க படுங்க…” என்று பொம்மை போல சொல்லி சிரித்துவிட்டு போனாள்.

அவள் போனதும் இரண்டு நிமிடம்கூட அவனால் அமைதியாக அமர முடியவில்லை.

‘வேண்டாம்னு சொன்னா திரும்ப வேணுமானு கேக்கணும்ல? அதான உலக வழக்கம்! கும்முனு ரெடியாகி என்னைத் தவிக்கவிட்டுட்டு டான்ஸ் ஆடப் போறேன்னு போய்ட்டா!

என்னால கண்ட்ரோல் பண்ண முடியலையே! ம்கூம்… அவகிட்டயே போகலாம்!’ எனப் பக்கத்து அறைக்குள் நுழைந்தவனோ அவள் நாட்டியத்தை கண்டு உறைந்து போனான்.

சும்மாவே அவள் இடை வளைவில் செத்துப் பிழைப்பவன், இப்போது முழுநிலவாய் இடை தெரிய, தன்னை மறந்து ஆடிக்கொண்டிருப்பவளைக் கண்டு பித்து பிடித்தது.

அவன் நிற்பதை ஓரக்கண்ணால் கண்டுகொண்ட திருடி, எதுவும் அறியாதது போல தலையைத் திருப்பி அவனை பார்த்தாள்.

“அட நீங்களா மாமா! தூக்கம் வரலையா? வந்து உட்கார்ந்து டான்ஸ் பாருங்க! உங்களுக்கு என் சிருங்கார ரசம் பார்க்க ஆசைன்னு சொன்னிங்களே! பாருங்க!”

என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு ஆட ஆரம்பித்தாள். 

அவள் கண்கள் காட்டும் பாவனைகள், கைகள் காட்டும் அசைவுகள், முகத்தில் தோன்றும் வெட்கம், நடன அசைவுகளில் வெளிப்படும் காதல் உணர்வுகள் என அனைத்தையும் ரசித்து உள்வாங்கின பத்ரனின் விழிகள்.

தன் ஆண்மையைச் சோதிக்கும் பெண்ணவளை அதற்கு மேல் விட அவன் தயாராக இல்லை. வேகமாக அவளை நெருங்கி விழியை அணைத்துக்கொண்டான்.

“சார் வேண்டாம்னு சொன்னாரு!”

“இப்போ வேணும்!” என்றவன் பேச்சில் நமட்டுச் சிரிப்பு சிரித்தவளைத் தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்கு நடந்தான்.

“சிரிக்காதடி குட்டச்சி! வேணும்னே உசுப்பேத்தி விளையாட்டு காட்டுற இதுக்கே உன்னை என்ன பண்றேன் பாரு!” என்று கோபமாகச் சொல்ல நினைத்த டயலாக்கைக் குழைந்த குரலில் சொல்ல, அவள் சிரிப்பு இன்னும் அதிகமானது!

கழட்டுவது ஈசி என்ற மேலாடையின் முடிச்சில் அவன் கைகள் பட, தாராளமாக அவனை முன்னேற அனுமதித்தாள் பெண்ணவள்!

“விழி சேஃப்டி! வெயிட் பண்ணு நான் கடைக்குப் போயிட்டு வரேன்” என்று எழுந்தவனை தன்மீது விழவைத்தவள்,

“அந்த கபோர்ட்ல இருக்கு, வரும்போது சூப்பர் மார்க்கெட்ல வாங்கிட்டேன்” என்று சிரித்தாள்.

“அடிப்பாவி!”

“போதும் வாயா! எப்போ பாரு வாயைப் பொளக்குறதே வேலையாப் போச்சு!” என்று அவன் இதழ்களை அடைத்துவிட, அவளை மெய் தீண்டி உருக்க ஆரம்பித்தான் இரும்புக் கொல்லன்.

பெண்ணுடலை போதையாகக் கொள்ளும் பித்தனுக்கு அவளின் உணர்வுகள் தேவையில்லாமல் போகலாம்!

தன்னவளை காதலோடு கொண்டாடும் காதலனுக்கு பெண்ணவளின் உணர்வுகள் பொக்கிஷம் அல்லவா? அவளை கொண்டாடக் கடமைப்பட்டவனின் கைகள் நிகழ்த்தும் மாயத்தில் உலகை மறந்தாள் திகள்விழி!

அனைத்தும் புரிந்த வயது, மருத்துவ மாணவி வேறு. இருந்தும் முதல் அனுபவத்தில் பயந்தவளை சமாதானம் செய்து தேற்றினான் கந்தர்வன்.

இத்தனை நாட்களாய் அவனைப் பித்தாக்கிய இடையை முத்தங்களால் கோர்த்திட, துடித்தெழுந்தாள் பெண்ணவள்.

கூடல் கேட்டு தொடங்கியவளோ அவன் வேகம் கண்டு மிரண்டு விழிக்க, கேலிச் சிரிப்பு அவன் இதழ்களில்!

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த வாய் என்னென்ன பேசி என்னை வம்பிழுத்துச்சு! இப்போ அமைதியா இருக்கு குட்டச்சி!” என்றவனை கண்டு இதழ்களைச் சுழித்தாள் திகள்விழி.

சுழித்த இதழ்கள் அவன் உணர்வுகளை சுண்டி இழுக்க, மீண்டும் அவள் இதழ்களில் தஞ்சம் புகுந்தான். பெண்ணவளின் தாடையில் குட்டிக் குட்டி முத்தமிட்டு, கடித்துவைத்து காதல் காட்டினான் களாபன்.

இதழ்களும், இடைவளைவும் அவனிடம் மாட்டிப் படாதபாடு பட்டன. இனி தனியாக இவனிடம் ஆடிக்காட்டக்கூடாது என முடிவே செய்துவிட்டாள்.

“போதும் மாமா!” என்று அணத்தியவளின் பேச்சு, இன்னும் வேண்டும் என முன்னேறியவன் செயல்களில் நின்றுபோனது.

முற்றும் முடிந்து மூச்சுவாங்க விலகி படுத்தவளைத் தூக்கி தன்மீது போட்டுக்கொண்டான் பத்ரன்.

“குட்டச்சி, I felt like heaven!” என்றவனின் வாயை மூடிய திகள்விழி, வெட்கம் கொண்டு அவன் நெஞ்சில் புதைந்தாள்.

அடுத்துவந்த நாட்கள் அனைத்தும் பத்ரனுக்கு சொர்க்கத்தில் மிதப்பதைப் போல இருந்தன. அவனுடைய உலகமே திகள்விழியை சுற்றி இயங்கியது. காலையில் அவள் முகத்தில் விழிப்பதில் தொடங்கி, இரவில் அவள் நெஞ்சில் புதைந்து தேடலை முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஒவ்வொரு நொடியையும் மனதுக்குள் பொக்கிஷமாகச் சேமித்துக்கொண்டான்.

இரண்டு நாட்கள் திகளை விடுமுறை எடுக்கவைத்து அவளோடு ஊர் சுற்றினான். திகளுக்கு பிடித்தமான இடங்களுக்குச் சென்றார்கள். பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்தான். கடைத்தெருக்களில் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் நேரம், அவ்வப்போது அவனை நிமிர்ந்து பார்த்து அவள் சிரிக்கும் அழகில் தன்னையே தொலைத்துப்போனான் பத்ரன்.

அவளுக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான். திகள்விழி கல்லூரிக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தன்னோடே அவளை வைத்துக்கொண்டு சுற்றினான்.

அவளுக்குச் சமையல் வேலைகளில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக, சொன்னபடியே சமையல் செய்ய ஓர் இந்திய பெண்மணியையும் வேலைக்கு அமர்த்திவிட்டான்.

அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுப்பது, கல்லூரிக்குச் செல்லும்போது தேவையானவற்றை எடுத்துவைத்திருக்கிறாளா என்று கவனிப்பது, அவள் திரும்பி வந்ததும் அன்றைய நாள் எப்படி போனது என கேட்டு அவளுடன் நேரம் செலவிடுவது என்று பத்ரனுடைய நாட்கள் திகளைச் சுற்றியே நகர்ந்தன.

இரவில் பத்ரனின் காதலிலும் மோகத்திலும் மூழ்கி மயங்கிக்கிடப்பவள், காலையில் அலாரம் அடித்ததும் அவசர அவசரமாக எழுந்து கல்லூரிக்குக் கிளம்புவாள்.

“மாமா எல்லாம் உங்களாலதான்! ராத்திரி தூங்கவிடாம பண்ணிட்டு, காலையில சீக்கிரம் கிளம்ப சொன்னா எப்படி?” என்று அவள் சிணுங்கும்போதெல்லாம்,

“ராத்திரி தூங்குற ஐடியாலதான் நானும் பெட்டுக்கு வருவேன்! நீ போடுற குட்டி டிரஸ் பார்த்து என் ஹார்ட் ஸ்லிப் ஆகுது. நான் என்ன பண்றது குட்டச்சி?” என்று அவளை பதிலுக்கு சீண்டுபவனை, “போயா!” என்று திட்டியபடி அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தன் வெட்கத்தை மறைப்பாள்.

ஏற்கெனவே கார் ஓட்டத் தெரிந்திருந்ததால், திகள்விழிக்கு கல்லூரிக்கு சென்று வருவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. புதிய வீடு என்றாலும் சீக்கிரம் செட் ஆகிவிட்டதால், அவளுடைய படிப்பும் வழக்கம்போலத் தொடர்ந்தது.

ஒரு மாதம் கணவன் மனைவியாக இருவரும் தனியாக கழித்த ஒவ்வொரு நொடியும் அவர்களுடைய வாழ்க்கையின் அழகான நினைவுகளாக மாறின.

இந்தியா கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு லக்கேஜை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் பத்ரன். மறுநாள் அவன் கிளம்பிவிடுவானே என்ற வருத்தம் திகள்விழியின் மனதை அழுத்தத் தொடங்கியது.

அமைதியாகப் பின்னாலிருந்து பத்ரனை கட்டிக்கொண்டாள்.

“என்னாச்சு குட்டச்சி?” என்று அவளை முன்னால் இழுத்தவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் விழி.

“மாமா…”

“ம்ம்ம்…”

“நீங்க இந்தியா போய்ட்டா, நான் தனியா ரொம்ப ஃபீல் பண்ணுவேன்! எனக்கு வருத்தமா இருக்கு” என்றவளுடைய குரலில் இருந்த தவிப்பு அவன் இதயத்தை ஏதோ செய்தது.

“விழிமா…”

“நீங்க கண்டிப்பா போகணும்னு எனக்கு தெரியும். உங்களுக்கு வேலை அதிகமா இருக்கும், பொறுப்புகள் இருக்கும். அதெல்லாம் எனக்கும் புரியுது ஆனால்…” என்று முடிக்க முடியாமல் அவனுடைய சட்டையை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“என் கூடவே ஒரு மாசம் இருந்துட்டு, இப்போ திடீர்னு என்னை தனியா விட்டுட்டு போறது கஷ்டமா இருக்கு மாமா!” என்று தேம்ப ஆரம்பித்தாள்.

“ஏய் குட்டச்சி! இப்போ எதுக்குடி அழற? இங்க பாரு, உன்னை இங்கே விட்டுட்டுப் போக எனக்கு மட்டும் ஆசையா விழி? உன்னோட படிப்பு முடியணும். இன்னும் ரெண்டு வருஷம்தானே? அதை முடிச்சிட்டு நீ என்கூடவே வந்துடலாம்” என அவளை சமாதானம் செய்தான் பத்ரன்.

காதலியாக இருந்தபோதே அவளைப் பிரிந்திருக்க அத்தனை சிரமப்பட்டான். இப்போது மனைவியாக மாறிவிட்டவளை ரொம்பவும் தேடுவான். 

புரிகிறது! அவசரப்பட்டுத் தாலி கட்டி, வாழவும் ஆரம்பித்து இரண்டு வருடப் பிரிவு என்பது கஷ்டமாகத்தானே இருக்கும்.

“ரெண்டு வருஷம் ரொம்ப அதிகம்!”

“உன்னை விட எனக்கு ரொம்ப அதிகம் குட்டச்சி! உன் குட்டி டிரஸ், டான்ஸ், வழவழ பேச்சுனு எல்லாத்தையும் தேடுவேன்” என்றவன் அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“உன்னை பார்க்காம என்னாலயும் இருக்க முடியாது விழி! உன் குரலைக் கேட்காம, உன் முகத்தைப் பார்க்காம என்னோட நாள் ஓடுமா? தினமும் பேசுவோம்.

லீவ் விட்டதும் நீ இந்தியா வரணும். நான் அடிக்கடி இங்க வரேன். உனக்கு என்ன வேணுமோ என்கிட்டதான் கேக்கணும். பழைய ஞாபகத்துல அத்தை, மாமாகிட்ட கேட்கக்கூடாது. எல்லாத்தையும் நானே உனக்கு செஞ்சு தருவேன். நீ ஸ்டெடீஸ்ல கவனம் வை போதும்”

அவள் எதுவும் பேசாமல் அவனுடைய மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

“இப்படி அழுதா நான் நிம்மதியா போக முடியாது குட்டச்சி!”

“நிஜமாவே லீவுக்கு வருவிங்களா?”

“உன் மேல சத்தியமா வருவேன்!”

“வரலைன்னா?”

“என் குட்டச்சி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்” என்றவன் கிண்டலில் அழுதுகொண்டே சிரித்தாள்.

திகள் சிரிப்பை பார்த்ததும் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவளைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அப்படியே தூங்கிப்போனாள் திகள்விழி.

மறுநாள் காலை, பத்ரன் கிளம்ப தயாராகி நிற்பதைக் கண்டு அவளுடைய கண்கள் மீண்டும் கலங்கின. அழக்கூடாது என அழுகையை அடக்கினாள்.

“விழி இங்கே வா” என்று அவன் அழைத்ததும் ஓடிச்சென்று பத்ரனைக் கட்டிக்கொண்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் இருங்க மாமா!” என்றவளுடைய குரலில் இருந்த கெஞ்சல் அவனுக்கு வருத்தமாக இருந்தது.

“நேரமாச்சு குட்டச்சி! ஃப்ளைட் டைம் மிஸ்ஸாகிடும்”

“எனக்குத் தெரியும்…” என்று அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

ஒருவழியாக அவனை விட்டவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

“நான் போயிட்டு வரேன் விழி! நேரத்துக்குச் சாப்பிடணும். ஃபீல் பண்ணி அழுதுட்டு இருக்கக்கூடாது டெய்லி கால் பண்ணு நான் இருக்கேன்!” என்றவனுக்கு, சரி எனத் தலையாட்டினாள்.

ஆனால், கண்களில் வழிந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. ஃப்ளைட் அன்னௌன்ஸ்மென்ட் வரும் வரை அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டிருந்தான் பத்ரன்.

“I love you குட்டச்சி!” என்று அவள் விரல்களில் முத்தமிட்டான்.

“Love you too மாமா!” என அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

பத்ரன் அவளை இறுக அணைத்துக்கொண்டு, திகள் தலையில் முத்தமிட்டான். பின்னர் மனமே இல்லாமல் அவளிடமிருந்து விலகி உள்ளே போய்விட்டான்.

அங்கேயே நின்றிருந்த திகள்விழி, கண்ணீரோடு அவனுக்கு கையசைத்தாள். அவள் முகத்தைப் பார்த்தால் எங்கே அவளை அப்படியே தூக்கிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுவிடுவோமோ என பயந்து திரும்பிப் பார்க்காமல் போனான்.

ஏற்கெனவே மூன்று வருடங்கள் தனியாக இருந்ததை மறந்து, குழந்தை போல அழுதுகொண்டே வீட்டுக்குக் கிளம்பினாள் விழி. இந்தியா வரும் வரை பத்ரனுக்கு அவள் நினைவுகள்தான்! கண்டிப்பாக அழுதுகொண்டிருப்பாள் என்ற கவலை அவனை வாட்டியது.

இங்கு ருத்ரா வீட்டில் ஒரு மாதத்தில் நிறைய மாற்றங்கள்.

பாட்டி, அம்மா டார்ச்சர் ஓவராக இருந்தால் நிலாவைத் தூக்கிக்கொண்டு அவன் வீட்டுக்கு ஓடிவிடுவான். இரண்டு நாள் கழித்து அவன் மனைவி விடாமல் திட்ட ஆரம்பித்ததும் மீண்டும் நடராஜன் வீட்டுக்கு ஓடுவான்.

‘பேசாம பைத்தியமாவே சுத்திருக்கலாம்!’ என்று அவனே வருத்தப்படும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள் அவன் குடும்பத்தினர்!

ஆரலி! ஆரலி! என்று சுற்றுபவனைப் பொடணியிலேயே போட்டு ஆபீஸுக்கு அனுப்பிவிட்டு, இரண்டு பெண்களும் அவளோடு நேரம் செலவிடுவதை கூட விட்டுவிடுவான்.

“அம்மாடி நிலா! வாம்மா கொஞ்ச நேரம் வாக்கிங் போவோம்” என்று நடராஜன் அவளோடு காலை, மாலை நடைப்பயிற்சிக்குப் போவது.

தன் டெரர் அப்பா மகாதேவன் தினமும் ஸ்நாக்ஸ் வாங்கி வந்து, “இந்தாம்மா நிலா! உன் அத்தை செய்யுற கேசரி, பொங்கல் சாப்ட்டு சாப்ட்டு அலுத்திருக்கும். நான் புது சாட் ஐட்டம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று அவளிடம் கொடுப்பதை சிரித்த முகத்தோடு வாங்கிச் சாப்பிடுபவள்,

“நாளைக்கு எனக்கு வேற ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வாங்க, மாமா!” என்பாள்.

அவனைவிட சிறப்பாக நிலாவை ருத்ராவின் குடும்பம் தாங்குவதைப் பார்த்து உள்ளம் பொசுபொசுவென இருக்கும். 

சும்மாவே அவளை யாருக்கும் தர மறுக்கும் பிடிவாதக்காரன் அவன்! தன் முன்னே அவளை விதவிதமாக கொஞ்சினால் சும்மா இருப்பானா!

“இருந்துதான் ஆகணும்! இல்லைனா வீட்டை விட்டு நீ கிளம்பு!” எனத் தாத்தா உத்தரவு போட்டுவிட்டார்.

பிள்ளை மட்டும் பிறக்கட்டும். உங்ககிட்ட குடுத்துட்டு இவளைக் கடத்திட்டு காணாம போகலைன்னா நான் ஏகதச ருத்ரா இல்லடா! எனச் சபதம் போட்டுக்கொண்டு சுற்றுவது பாவம் நிலாஞ்சிக்குத் தெரியாது.

அவளுடைய முற்பாதி வாழ்க்கை ஆயிரம் துயரங்களை பரிசாகக் கொடுத்திருந்தாலும், பிற்பாதியில் நிலாவின் குடும்பமும் சரி, ருத்ராவின் குடும்பமும் சரி, அவளை தாங்கிப் பிடிக்கும் வரங்களாகவே மாறியிருந்தன.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!