காதல் – 11

காதல்-11 
 

 

ஆபிசிலில் மும்மரமாக வேலை செய்துக் கொண்டு இருந்த இன்பராஜா தன் எதிரே அமர்ந்து வேறு வேலைகளை செய்துக் கொண்டு இருக்கும் அருணிடம்,

“அருண் நாளைக்கு சூட்டீங்க்கு தேவையான ஏற்பாடு எல்லாம் ரெடி தானே. ” என்று கேட்டான்.

அருண் அருகில் மற்ற வேலைகளை செய்துக் கொண்டு இருந்த கீதாவோ “ரெடி சார்” என  கூற. அவளை கேள்விக்குறியாக பார்த்தான் ராஜா.

“நான் அருண் கிட்ட கேள்வி கேட்டேன். நீங்க பதில் சொல்றீங்க கீதா. ” என்றிட.

“நான் தான் சார் இந்த கான்ஸ்ப் ரெடி பண்ணேன். அதன் நான் பதில் சொன்னேன் “

அவளை புரியாமல் பார்த்தவன் “ஏன் அருணுக்கு தான் இந்த ஆட் கெடுத்தேன். என்னாச்சி நீங்க எதுக்கு ரெடி பண்ணீங்க?” என்று அருணை பார்த்துக் கொண்டே கேட்டவனிடம்,

“அருணுக்கு உடம்பு சரியில்ல சார். நீங்க வேற கான்ஸ்ப் இன்னிக்கு ஈவீனிங்கே ரெடியா இருக்கனும் சொன்னிங்க. அதான் சார்  நான் ரெடி பண்ணேன்” என கீதா சொல்லி முடிக்க.

அருணின் முகத்தில் தெரிந்த சோர்வை கண்டவன்” என்னாச்சி உங்களுக்கு” என இன்பராஜா  கேட்டான்.

அருணோ “உடம்பு சரி இல்ல சார். ” என்க.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்து “உடம்பு சரியில்லனா  நாளைக்கு ரெடி பண்ணி கொடுத்து இருக்கலாமே. எதுக்கு லேடிஸை இவ்வளவு நேரம் வைட் பண்ண வச்சி இருக்கீங்க. டைம் என்ன ஆகுது தெரியுமா அருண். இந்த டைம்ல அவங்க எப்படி தனியா போவாங்க.” என்று சற்று கண்டிக்கும் குரலில் கேட்டான் ராஜா. 

ராஜாவை பொறுத்தவரை ஆபிஸ் வேலை முடியவில்லை என்றாலும் கீதாவை மட்டும் இல்லை வேற எந்த ஒரு பெண்கள் வேலை செய்தாலும், அந்திசாயம் வேளையில் ஆபிஸில் இருக்க அனுமதிக்க மாட்டான். எப்பொழுதும் சரியான நேரத்துக்கு கிளம்பியே ஆக வேண்டும் என்று எல்லாருக்கும் கட்டளை விதித்து உள்ளான் இன்பராஜா..

கீதாவோ சலிப்புடன் “ஆமா, ஆமா ரொம்ப அக்கறை தான். “என்று வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள்.

கீதாவின் முணுமுணுப்பு அவனின் காதில் விழ.கேள்வியோடு  அவளிடமே கேட்டான் “என்னவோ இப்ப சொன்னீங்களே? என்ன சொன்னீங்க என் காதில் சரியா விழல” என வேண்டுமென்றே கீதாவை சீண்ட.

“அது ஒன்னும் இல்ல சார் மீட்டீங்லாம் வச்சா லேட்டா தானே போக முடியும். அதை சொன்னேன்” என சலித்துக்கொண்டு இருந்தவளை அழந்து பார்த்து.

“மீட்டீங் எப்போவும் இவ்வளவு நேரம் வைக்க மாட்டோம் கீதா”  இன்பராஜா சொல்ல.

அவள் மீண்டும் ஏதே சொல்ல வாயை திறக்க. அருண் குரல் கேட்டு அமைதியானாள்.

அருணோ ” சார் நாளைக்கு இந்த கான்ஸ்ப் தான் ஆட் பிலிம் அதனால் தான் கீதா கிட்ட உதவி கேட்டேன். அவங்களும் ரெடி பண்ணி கொடுத்துட்டாங்க சார்.” என்று சொன்னான்.

ராஜாவோ ” ஓகே கீதா அப்போ நாளைக்கு சூட்டீங்ஸ்பாட்ஸ்க்கு நீங்களும் வர வேண்டியது இருக்கும். “என இன்பராஜா சொன்னதை கேட்டவள் சரி என்பது போல் தலையை ஆட்ட, அதை பார்த்தவன் “சரி நீங்க கிளம்புங்க” என்றான்.

அருணும் எழுந்து கிளம்ப  அவனை தடுத்து “உங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க இருங்க. ” சொன்னவன் தன் வேலை தொடர,

கீதாவோ “அருணுக்கு உடம்பு சரியில்லை” என மறுபடியும் கூறினாள்.

ராஜாவோ அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் ” ம்ம் எனக்கு தெரியும் நீங்க கிளம்புங்க ” என்று அழுத்தமாக கூறி, அவளை  அனுப்பி வைத்தான்.

அருணுக்கோ ‘கீதா தன் மேல் அக்கறை எடுத்துக்கொண்டு அவன் வேலையும் செய்துமுடித்து அவனுக்காக வருத்தப்பட்டுதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தான். கீதா சென்றதும் மீதி இருந்த வேலையை இருவரும் சேர்ந்து முடித்து வீட்டுக்கு கிளம்பினார்கள்.

அருண் வண்டியை எடுக்கும் போது “டையர் மறுபடியும் பஞ்சர் ஆகிடிச்சே. என்ன பண்ணலாம்” என்று யோசித்துக் கொண்டு இருந்த நேரம், இன்பராஜா அவன் முன் காரை நிறுத்தி என்னாச்சி என கேட்டான்.

“டையர் பஞ்சர் சார் அத என்ன பண்றதுன்னு தெரியுல சார்.” என்று சோர்வாக கூற, 

“சரி வாங்க நான் உங்கள ட்ராப் பண்றேன். நாளைக்கு மெக்கானிக்க கூட்டிட்டு வந்து சரி பண்ணிக்கேங்க.” என்றான். 

இதுபோல் பல சமயம் சூட்டிங் விசியமா இரவு நேரத்தில் தாமதமாகினால் இன்பராஜாவே அருணை அவன் வீட்ல விடுவது வழக்கம் தான், என்பதால்  அவனும் சரியென்று தன் வண்டியை பார்த்தான். ‘இப்போ தன்னால் வண்டியை தள்ளிக்கொண்டு போக முடியாது’ என உணர்ந்தவன் காரில் ஏறி சென்றான்.

அருண் ஏறியதும் காரை எடுத்துக் கொண்டு செல்ல. போகும் வழியில் அருணோ “சார் எனக்கு ஒரு டவுட்.? ” என ஆரம்பிக்க.

சாலையில் கவனமாக வண்டியை மிதமாக செல்லுத்திக் கொண்டு “சொல்லுங்க அருண்” என்றான்.

“சார் உங்க பக்கத்தில் இருக்கிற முன் சீட்டில் உங்க வைஃப் மட்டும் தான் உட்காரன்னும் சொல்றதுலாம் ரொம்ப ஓவர் சார். ” என்று சிறுப்பிள்ளை போல் பேசிவனை பார்த்து

ராஜாக்கு கோபம் வந்தாலும் பொறுமையாக “நீங்க என் பர்சனல் லைஃப்ல தலையிடாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது” என்றான் அழுத்தமாக .

அதன் பின் அருணும் இதை பற்றி எதுவும் பேசாமல், வேறு பேச்சை மாற்றினான். “ஏன் சார் உங்களுக்கு ப்ரெண்ட்ஸே இல்லையா சார். எப்போ பார்த்தாலும் முகத்தை உறுனு வச்சிட்டு இருக்கீங்க.” என அடுத்த அடுத்த கேள்விகளை அடுக்கினான் ராஜாவின் கோபம் அறியாமல்.

தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “இப்ப தானே சொன்னேன். என் பர்சனல் லைஃப்ல தலையிடதிங்கனு. “எனச் சொல்லிக் கொண்டு இருக்கும் போத் திடீரென்று மழை பொய்யவும் மேலும் கடுப்பாகிப்போனான் இன்பராஜா.

அருணோ “என்ன சார் திடீர்னு மழை வருது. ரோடு எல்லாம் இருட்டா இருக்கு” என சொல்லி கொண்டே சாலையின் ஓரம் கண்களை பதித்தவன். “சார் வண்டியை நிறுத்துங்க.” என்று மூன்று முறை சொல்லியா பிறகே வண்டியை நிறுத்திய ராஜா கோபமாக திரும்பி “இப்ப எதுக்கு வண்டியை நிறுத்த சொன்ன” என கடுப்பில் கேட்க. “உன்னை தான் அருண் கேட்டேன்” என்று கத்தினான்..

அருணோ “சார் அங்கே பாருங்க” என்று ஒரு திசையை காட்ட, அவன் கை காட்டிய திசையை இன்பராஜா பார்த்தான்.

பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை நான்கு பேரு கொண்ட ஒரு கும்பல். அந்த பெண்ணிடம் அவள் கையை பிடித்து தகராறு செய்துக் கொண்டு இருந்தனர்.

மழை பெய்ததில் அங்குள்ள மின் விளக்குகள் அனைத்தும் எரியாமல் இருந்தன. தெருவில் ஒரு ஈ காக்க நடமாட்டம் கூட இல்லாமல் இருக்க மழை சத்ததில் அவள் சத்தம் மற்றவர்களுக்கு கேட்கமலே போனது.

“அங்கே ஏதே பிரச்சனை சார். அந்த பெண்ணுக்கு நம்ம உதவி தேவை” என்று அருண் செல்லிவிட்டு திரும்பி பார்த்தான்.

ஆனால் அதற்கு முன்பதாகவே இன்பராஜா பஸ்டாப்பை நோக்கி விரைந்தான். அவன் பின்னே இவனும் செல்ல அதற்குள் கும்பலில் ஒருவன் அவளது ஆடையில் கை வைத்தவனை தன் பலம் கொண்டு தள்ளிவிட்டு ஓடியவள். “என்னை யாராவது காப்பாத்துங்க ப்ளீஸ் யாராவது வாங்க” என அந்த பெண்ணின் குரலை கேட்டு இருவரும் ஸதம்பத்தி நின்றனர்

ஆம் அது வேற யாரு குரலும் இல்லை கீதாவின் குரல் தான். பேருந்திற்காக காத்திருந்தவள், பஸ் வராமல் போக சிறுது தூரம் நடந்து வந்தவள் திடீரென்று மழை வரவும் அருகில் இருந்த பஸ்டாபில் ஒதிங்கினாள்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு பேரும் இவளிடம் தப்பாக நடக்க முயற்சித்தனர். 
 

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page