காதல் – 13

காதல் -13 
 

 

வழக்கம்போல் ஆபிசுக்கு வந்ததும் கீதாவை குற்ற உணர்வோடு பார்த்து சாரி கேட்டான் அருண்.

“எதுக்கு அருண் சாரி எல்லாம். பிரண்ட்ஷிப் கொள்ள நோ சாரி அண்ட் நோ தேங்க்ஸ் புரியுதா. நேத்து நடந்தது எதிர்பார்க்காத ஒன்னு சோ அதை பத்தி இனிமேல் பேச வேண்டாம்” என்று தன் வேலையில் மூழ்கினாள்

அவளின் இந்த தைரியத்தை பார்த்து அருணுக்கே ஒரே ஆச்சரியம் தான். நேற்று எதுவும் நடக்காததை போல் அவள் இருப்பதை பார்த்து பிரமித்து தான் போனான்.

பின்”ஏஞ்சல் அட் ஷூட்டிங்க் எல்லாம் ரெடி தானே கிளம்பலாமா?” என்றான்.

“ம்ம்ம் ரெடி தான், ஆனா இன்னும் சார் வரல.”

“பாஸ் அப்படியே நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுவேன்னு போன் செய்து சொல்லிட்டாரு. வா நாம போகலாம்” என அவளை இழுக்காத குறையாக  அழைத்துக்கொண்டு போனான்.

அவளுக்கோ தினமும் அலுவலகம் வந்தவுடன் தன்னவனை பார்த்து பழகியவளுக்கு இன்று பார்க்காமல் இருப்பது கவலையாக முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

ஷூட்டிங் தயாரிக்கும் இடத்திற்கு வந்ததும் அருண் அந்த செட்டிங்கை பார்த்து வாயடைத்துப் போனான். “வாவ் என்ன ஒரு செட்டிங்ஸ். செமையா இருக்கு இல்ல ஏஞ்சல்.” என்று தன் அருகில் நின்றிருந்த கீதாவிடம் கேட்டான்.

அவளும் மேலோட்டமாக பார்த்துவிட்டு “ம்ம்ம் ஆமா” என்றாள்.

அருண் சற்று சலிப்புடன் ” என்ன ஏஞ்சல் நீ கார்ல வரும் போதும் இப்படி தான் ம்ம் கொட்டிக்கிட்டு வந்த இங்கேயும் இதே ம்ம் தானா?” என புருவத்தை தூக்கி அவன் கேட்க, அதற்கும் அவள் மறுபடியும் “ம்ம்” மட்டுமே சொன்னவளை பார்த்து ‘ இது வேலைக்காகாது ‘ என்று நினைத்து “சரி நான் போய் மாடல் வந்துட்டாங்களா பார்த்துட்டு வந்துடுறேன். நீ எல்லாம் அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணிடு. பாஸ் வந்ததும் சூட்டிங்கை ஆரம்பித்து விடலாம்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அருண் சென்றதும் தன்  வேலையை தொடங்கினால். அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியும், போன அருணும் வரவேண்டிய ராஜாவும் வராமல் இருக்க அவர்களை தேடி கீதா சென்றாள்.

அங்கே தூரத்தில் அருணும் அவனருகில் ராஜாவும் இருப்பதை பார்த்தவள் உற்சாகமானாள். காலையிலிருந்து தன்னவனை பார்க்காததால் இப்பொழுது அவனது தரிசனம் கிட்ட சந்தோஷமாக அவர்களை நோக்கிச் சென்றாள்.

அவர்களை நோக்கி வரும் கீதாவை பார்த்து இன்பராஜா மனதிலோ கீதாவின் முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்த்து கவலை கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் அவளின் சிரித்த முகம் நொடி பொழுதில் காணாமல் போக போவதை உணர்ந்து.

காலையில் அவசரமாக அலுவலகம் கிளம்பியவனை வசந்தா தடுத்து நிறுத்தி இந்துவையும் கூட அழைத்துச் செல்லுமாறு கெஞ்சினாள். ராஜாவும் கிளம்பும் அவசரத்தில் வேறுவழியின்றி இந்துவை அழைத்துவந்தான்.

அவர்கள் அருகில் போன கீதா இருவரும் பதற்றத்துடன் பேசியது புரிந்தது. “என்னாச்சு “என்று பக்கத்தில் சென்று கேட்டவள் அப்படியே சிலையாக நின்றாள்.

இதுவரை அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பு மொத்தமும் பறிபோனது. இன்பராஜாவும் அவளுக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சி எதனால் என்பதை அறிந்து அமைதியாகவே இருந்தான்.

‘இந்து இங்கே எப்படி வந்தாள்’ என்று நினைத்தவளின் பார்வை இன்பராஜாவின் கையை பிடித்துக் கொண்டு அவனுடன் ஒட்டிக்கொண்டு நின்று இருக்கும் காட்சியை பார்த்த கீதாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து போனாள். அவளின் முகமே அப்பட்டமாக அதை வெளிக்காட்டியது.

அந்த இடத்தில் கீதாவை பார்த்த இந்துவுக்கும் அதே நிலைமைதான். சற்றும் அங்கே கீதாவை எதிர்பார்க்காதவள் அதிர்ந்துதான் போனாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலும் ராஜாவுடன் ஒட்டி நின்று கொண்டாள்.

பின் தன்னை சுதாரித்துக் கொண்ட கீதா அருண் கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள்.

“என்ன சொல்ற அருண் மாடல் மிஸ், ஜெனி வரலையா? ஏன் என்னாச்சு அவங்க வரல. இன்னிக்கு அட் பிலிம் இருக்குன்னு அங்களுக்கு தெரியுமே. அது எப்படி அவங்க வர முடியாதுன்னு சொல்ல முடியும். அவங்க காண்ட்ராக்டில் சைன் போட்டு இருக்காங்க தானே. எப்படி லாஸ்ட் மினிட்ல வர முடியாதுன்னு சொல்லுவாங்க” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

கீதாவின் பதற்றத்தை பார்த்த அருண் ” கூல் கூல் கீதா ஏன் இந்த அளவுக்கு டென்ஷன் ஆகுற. மிஸ் ஜெனியோட அம்மாவிற்கு திடீர்னு உடம்புக்கு முடியலையாம். அவங்களை ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணி இருக்காங்களாம். சோ அவங்க அம்மாவை பார்த்துக்கணும். ஜெனியால இப்ப வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதற்கு நஷ்ட ஈடாக எவ்வளவு வேணாலும் பணம் தராங்கனு சொல்லிட்டாங்க “என்று அருண் பொறுமையாக எடுத்துக் கூறினான்.

அருண் கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்தாலும் இதுவரை ராஜா அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதை கீதாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் நின்றாள்.

ராஜாவிடம் இருந்து பார்வையை விலக்கியவள் அருணை பார்த்து “இப்ப என்ன பண்றது அருண். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு இனி எப்படி நிறுத்த முடியும். இந்த அட் ஃபிலிமுக்கு எவ்வளவு இன்வெஸ்ட்மென்ட் பண்ணியிருக்கோம். அதுவுமில்லாம இது இரவு பகலா பார்க்காம ஒரு சின்ன விஷயம் கூட விடாமல் ரெடி பண்ண கான்செப்ட்.” என்று அழத் தொடங்கிய விலை என்ன சொல்லி சமாதானம் செய்வது புரியாமல் நின்றிருந்தான் அருண்.

அப்பொழுதும் இன்பராஜா எதுவும் பேசாமல் இருக்க சரியாக அவன் அலைப்பேசி ஒலித்ததும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

அதுவரை கீதாவை பார்த்ததிலிருந்து அடக்கிவைத்த கோபத்தை இப்பொழுது அவள் மீது காட்ட ஆரம்பித்தாள் இந்து.

” ஏய் உனக்கு அறிவு இல்ல. ஷூட்டிங்குக்கு ஏற்பாடு பண்றதுக்கு முன்னாடி மிஸ் மாடல் ஜெனி கிட்ட பேசி இருக்கணும். அத விட்டுட்டு இப்ப அழுது நடிச்சிட்டு இருக்கியா. எல்லாமே வீணா போச்சு. பணத்தோட அருமை உனக்கு எப்படி தெரியும். யார் வீட்டு காசு தானே இது. இப்படி வீணா போனா நமக்கென்ன வந்ததுனு வேலைய பார்த்துட்டு இருக்கல்ல.
பணம் என்ன உங்க அப்பனா தருவான் “என்று வார்த்தையை மீறி பேசிய இந்துவை பார்த்து,

அனல் கக்கும் பார்வையோடு ” மேடம் நீங்க உங்க லிமிட்டை தாண்டி பேசுறீங்க. வார்த்தையை பார்த்து பேசுங்க அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று சற்று குரலை உயர்த்தியும் பேசினாள்.

பல வருடம் கழித்து பார்த்த கீதா, தன்னை எதிர்த்துப் பேசியதை பொருத்துக முடியாத இந்து ” என்னடி பண்ணுவ பிச்சைக்கார நாயே. நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு கிட்ட  வேலை செஞ்சுட்டு என்னை எடுத்தெறிஞ்சி பேசுவியா. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் “என சொல்லி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

இந்து தன்னை அடிப்பாள் என்று எதிர்பார்க்காதவள் தடுமாறி விழப் போக அவளை பிடித்து நிறுத்தினான் அருண்.

அங்கே இருந்த அனைவரும் இதை பார்த்துக் கொண்டிருக்க கீதாவுக்கு அவமானமாக போனது.

அருணும் இதை எதிர்பார்க்கவில்லை தான். கீதாவை நிற்க வைத்துவிட்டு இந்துவிடம் திரும்பியவன் ” மேடம் நீங்க செய்யுறது தப்பு. பேசிட்டு இருக்கும்போது எப்படி நீங்க அடிக்கலாம். அதுவுமில்லாமல் நாங்க உங்ககிட்ட ஒர்க் பண்ணல, ராஜா சார் கிட்ட தான் ஒர்க் பண்றோம் “என அவன் கோபமாக பேச.

“நீ என்ன இவளுக்கு சப்போட்டா. நான் அவருக்கு மனைவியாக போறவள். நான் கேட்காம வேற யாரு கேப்பா. ஒழுங்கா வேலை செய்ய துப்பு இல்ல, இப்ப ஏற்பட்ட நஷ்டத்துக்கு யாரு ஈடு கட்டுவா இவளா. இவ இந்த ஃபிலிம் நடித்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டுவாளா “என்று வேண்டுமென்றே கீதாவை சீண்டினாள்.

இந்துவின் மனதிலோ‌ ‘ இவளால கனவுல கூட மாடல் டிரஸ் போட முடியாது. எப்படி இந்தப் பணத்தை ஈடுகட்டுறானு நானும் பார்க்கிறேன். இவளை இந்த ஆபீஸ்ல இருந்து வெளியே துரத்தாமல் விடமாட்டேன். திரும்பவே மாமா கிட்ட வந்து ஒட்டிக்க பார்க்கலா இவ. “என்று உள்ளுக்குள் கருவினாள்.

கீதாவுக்கு இந்து அடித்த வலியை விட இன்பாவின் மனைவியாக போகிறேன் என்று சொன்ன வார்த்தை‌ தான் அதிகம் வலித்தது.

கீதாவோ ஒரு நொடி கூட யோசிக்காமல் தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ” நான் நடிக்கிறேன் “என சொல்லி இந்துவின் வாயை மட்டும் இல்லை அங்கு இருந்த அனைவரையும் அடைத்தாள்.

இந்துவோ அதிர்ந்து கீதாவைப் பார்த்தாள்.

அருண் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் பிடிவாதம் பிடிக்க வேறு வழியின்றி ஏற்பாடுகளை செய்ய துவங்க சொன்னான்.

கடகடவென்று அனைத்து வேலையும் அரை மணி நேரத்தில் முடிய, ஷூட்டிங் தேவையான எல்லாம் ஏற்பாடுகளும் தயாராகி இருந்தன.‌

கேரவானிலிருந்து வெளியே வந்தவளை அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் கண் கொட்டாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.

இந்துவின் மனதோ ‘ இவ இவ்வளவு அழகா. காலேஜில் படிக்கும்போது எப்பவும் சுடிதார் தவிர வேற டிரஸ் போட மாட்டாள். இந்த மாடல் டிரஸ்ல செம அழகா இருக்கா.’ என தன்னையும் அறியாமல் அவளை பாராட்ட செய்தாள்.

பின் தன்னைத்தானே தலையில் தட்டிக் கொண்டு, அவசரமாக ராஜாவே கண்களால் தேடினாள்.
“நல்லவேளையாக அத்தான் இங்க இல்ல. இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பார் என்றே தெரியல. அது மட்டுமா இந்நேரம் இவளை பார்த்த உடன் பிளாட் ஆகியிருப்பார்” என்று யோசனை செய்தவள் கீதாவை பார்த்து கடுப்பாகி கேரவனை நோக்கி சென்றாள்.

கீதாவின் ஓவியம் போன்ற அழகை பார்த்துக் கொண்டிருந்த அருண் அவளை நெருங்கி “ஏஞ்சல் இந்த ட்ரெஸ்ல செம்ம அழகா இருக்க. அப்படியே அந்த வானத்தில் இருக்கிற ஏஞ்சலே பூமிக்கு வந்த மாதிரி இருக்கு. அவ்வளவு அழகா இருக்க ” என அவரைப் பாராட்டினான்‌.

அவனின் பாராட்டை சிறு புன்னகையோடு தலையாட்டியவளின் விழியோ ராஜாவை தேடியது.

இன்பராஜாவின் மீது கோபம் இருந்தாலும் இப்பொழுது அவனை பார்க்க மாட்டோமா என துடித்த மனத்தை அடக்கிவிட்டு நடிக்க தயாரானாள்.

“சார் கிட்ட பேசியாச்சா அருண்? ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.

” இல்ல கீதா, இன்னும் பாஸ் வரல. நம்ம ஸ்டார்ட் பண்ணலாம். அவரு நடுவில் வந்து ஜாயின் பண்ணிப்பாரு. ” என்று கூறிவிட்டு சூட்டிங்கை தொடங்க சொன்னான்.

கீதாவுக்கு சொல்லிக் கொடுத்தது போல் அழகாக நேர்த்தியாக நடனமும் ஆடி தேவைப்படும் இடத்தில் அழகான முக பாவனைகளை மாற்றி தேவைக்கேற்ற உணர்வுகளையும் வெளிப்படுத்தி அழகாக நடித்து முடித்தாள்.

அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி அவளை பாராட்டினார்கள். அச்சமயம் அங்குவந்த ராஜா கைதட்டலை பார்த்து புரியாமல் குழம்பிப் போனான்.

அங்கே கூட்டத்தில் நின்றிருந்த கீதாவை பார்த்து மெய்மறந்து போனான்.

ராஜா வந்ததை பார்த்த அருண் அவன் அருகில் செல்ல, ராஜாவோ தன்னை சமன்செய்து ” என்ன நடக்குது அருண் இங்க. கீதா இந்த டிரஸ்ல நிற்கிறாங்க” என்று கேட்டான்.‌
 

” அது வந்து சார்” என்று அருண் இழுக்க, ராஜாவுக்கு ‘இங்கே ஏதோ பிரச்சனை நடந்து இருக்கிறது’ என புரிந்தது. அருணிடம் நடந்ததை கூறுமாறு கட்டளையிட்டான்.

அருண் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடிக்க இன்பராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது.

“இந்து எங்கே”  என அவன் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க. அவள் இருக்கும் இடத்தை சொன்னான் அருண்.

இன்பராஜா கோபத்துடன் போவதை பார்த்த அருணுக்கு  இப்போதுதான் சந்தோஷமாக இருந்தது.

” என்னுடைய ஏஞ்சலயா அடிச்ச. என்னால உன்ன அப்ப என்ன வேணாலும் பண்ணி இருக்க முடியும். ஆனால் ஏஞ்சல் முன்னாடி என்னை கெட்டவனாக காட்டிக்க நான் விரும்பல. எனக்குத் தெரியும் ராஜா சார் கிட்ட உன்ன பத்தி போட்டு கொடுத்தா கோபப்படுவார்”  என்று ராஜா சென்ற திசையை பார்த்து தனக்குள் பேசிக் கொண்டு நின்றான்.

அங்கே ராஜா இந்துவை சரமாரியாக திட்டி கொண்டு இருந்தான். ” இங்க பாரு இந்து.  அம்மா சொன்னதால் தான் உன்னை அழைச்சிட்டு வந்தேன். ஆனால் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் கீதாவை அடிச்சு இருப்ப. அதுவும் இத்தனை பேருக்கு முன்னாடி. ஒழுங்கா கீதா கிட்ட வந்து மன்னிப்பு கேளு.”என்றான். 

” நான் எதுக்கு அத்தான் மன்னிப்பு கேட்கணும். அவளால தான் இவ்வளவு நஷ்டம் ஆச்சு. அது மட்டுமா அவதான் உங்களை வேண்டாம்னு தூக்கி போட்டு போயிட்டாளே. அப்புறம் எதுக்கு நீங்க அவளை‌ உங்க பி ஏ வா  வச்சிக்கிட்டே இருப்பீங்க. இதப்பத்தி அத்தை மாமா கிட்ட சொன்னீங்களா இல்ல என்கிட்ட தான் சொன்னீங்களா. அது மட்டும் இல்ல அவளுடைய வேலையை சரியா செய்யல அதான் நீங்க பண்ண வேண்டியதை நான் செஞ்சேன்” என்று திமிராகப்  பேசினாள்

ராஜாவோ பல்லை கடித்துக்கொண்டு “என் கோபத்தை அதிகப்படுத்த இந்து. இது என்னோட கம்பெனி யாரை வேலைக்கு எடுக்கணும், எடுக்க கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும். யார்கிட்டயும் சொல்லணும்னு அவசியம் எனக்கு இல்லை. முக்கியமா உன் கிட்ட சொல்லனும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆமா நீ யாரு கீதாவை நடிக்க சொல்ல. யார் உனக்கு அந்த அதிகாரம் கொடுத்தா. ” என அவன் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசினான்.

அச்சமயம் அங்கே வந்த கீதாவும் அருணும் ” சார் நாங்க கிளம்புறோம். ஷூட்டிங் நல்லபடியா முடிஞ்சது. கீதா நல்லாவே நடிச்சு கொடுத்து இருக்காங்க. “என்று சொல்லிய அருணை பார்த்த ராஜா ” வைட்” என்று கூறியவன் இந்துவிடம் திரும்பி,

” கீதா கிட்ட சாரி கேளு இந்து ” என சொல்லிய ராஜாவை பார்த்த கீதா “சார் நான் வேலைய  ரிசைன் பண்றேன்” என கூறினாள்.

இதைக் கேட்ட ராஜாவும் அருணும் அதிர்ச்சியாக இந்துவோ சந்தோஷம் அடைந்தாள்.
 

கீதாவை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ராஜா “எதுவா இருந்தாலும் நாளைக்கு ஆபீசுக்கு வாங்க பேசிக்கலாம் என்று கூறிவிட்டு அவன் காரை நோக்கி நடக்க, ராஜாவின் பின்னால் போன இந்து முன்சீட்டில் ஏற போக. இந்துவை தடுத்து பின் சீட்டில் அமர வைத்தான்.

கீதாவிடம் திரும்பி காரில் ஏறுமாறு சொல்ல, ராஜாவை முறைத்து விட்டு ” நான் அருண் கூட போய்க்கிறேன் சார். நீங்க உங்க வருங்கால மனைவியே அழைச்சிட்டு போங்க ” மனைவி என்னும் சொல்லில் அழுத்தத்தை கொடுத்தாள்.

ராஜா ஏதோ பேச வர கீதாவோ அருணின் கையைப்பிடித்து காரில் ஏறச் சொல்லி அவளும் ஏறி அமர்ந்தாள்.

அதைத் தடுக்க முடியாமல் கோபத்துடன் காரில் ஏறியவன் இந்துவை முறைத்து பார்த்து விட்டு வேகமாக காரை செலுத்தினான்.
 

காரில் ஏறிய கீதாவை எந்த கேள்வியும் கேட்டு தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தான் அருண்.
 

மனதில் வேதனையோடு பின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிய கீதாவின் விழிகள் கண்ணீர் வழிய பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page