காதல்- 15

காதல்-15 
 

 

என் அன்பே எந்தன் ஆருயிரே 
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி. 
உன் கார்குழலும் அந்த மழை துளியும் 
என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே.

என்ற பாடலை பாட ஆரம்பித்தான் ராஜா..

நீ இல்லை என்றால் நானும் இல்லை 
இங்கே என் சுவாசமும் நீதானே

என் அன்பே . 
என் அன்பே .

என்ற பாடலை பாடி முடித்து. அனைவர் முன்பும், முக்கியமாக இந்துவின் முன்னால் தன் காதலை தன்னவளிடம் கூறினான்.

கீதாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவள் சும்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக இன்பா இப்படி செய்வான், என்று கீதா எதிர்பார்க்கவில்லை. தன் செல்போனில் தன்னவன் பாடியதை அப்படியே பதிவு செய்துக்கொண்டாள். அவளும் தன் காதலை சொல்ல அனைவருமே கைகளை தட்டி விசில் அடித்தனர்.

இந்து செய்வது அறியாது நின்றுக்கொண்டு இருந்தாள். அவளால் எப்படி இதை தடுக்க முடியும். இன்பராஜா அவளை காலையில் பார்த்து வருத்து எடுத்து விட்டானே.

“இந்து இது தான் உனக்கு முதலும் கடைசியுமா சொல்றேன். இனி என் வாழ்க்கையிலும் கீதா வாழ்க்கையிலும். ஏதாவது கலக்கம் பண்ண, அப்புறம் நீ  என்னுடைய இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும்.” என எச்சரிக்கை செய்து கீதாவிடம் மன்னிப்பு கேட்க சொல்லி அவள் முன்னால் தன் காதலை வெளிபாடுத்தினான்.

கீதா இந்துவிடம் “பார்த்தியா இந்து இப்ப யார் காதல் உண்மையானது. இன்பா கிட்ட பணம் இருக்குன்னு நான் காதலிக்கல. அவன் யாரு தெரியாதா போதே அவனை காதலிக்க ஆரம்பிச்சிடேன். அவனேட நல்ல மனசும் குணத்துக்கும் தான், நான் இன்பாவ லவ் பண்றேன். உன்னல இல்ல வேறு யாராலையும் எங்களை பிரிக்க முடியாது. இனியாவது உன் மனசை மாத்திக்ககோ.” என சொல்லிவிட்டு சென்றவளை வெறுப்புடன் பார்த்தது இந்துவின் விழிகள் மட்டும் இல்லை. இன்னும் இரு விழிகளும் தான்.

சூரியா இன்பராஜாவிடம் வந்து “சூப்பர் மச்சி நைட் கீதா சொன்னதும் நானே ஷாக்கிட்டேன். நீ என்ன பண்ண போறன்னு ஆனா நீ சொன்னது தான் சரியா நடந்து இருக்கு. இது உன் காலேஜ் பாட்டு பாடி காதலை வெளிபடுத்தினா, யாரு கேட்பா?” இரவு ராஜா சூரியாவிடம் சென்னதை மறுபடியும் காலையில் அவனிடமோ சொன்னான்.

சூரியா சொல்லிவிட்டு செல்ல கீதாவும் இன்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததாள். பின் வகுப்பை நோக்கி சென்றனர்.

இந்துக்கு ஆத்திரம் கோபம் அவமானம்  எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை அங்கு நிற்க விடாமல் செய்தது‌. தன் வீட்டுக்கு வந்தவள் தந்தையிடம் நடந்த அனைத்தையும் கூறி அழ தொடங்கினாள்.

தன் மகளை சமாதானம் செய்து இன்பராஜா வீட்டிற்க்கு சென்று நடந்ததை மட்டும் கூறாமல் கீதாவின் குடும்பத்தை பற்றி தப்பான கண்ணோட்டதில் தன் தங்கை பார்க்கும் படி செய்தார்.

இதற்குள் கல்லூரியில் இருந்து இன்பராஜா ஒரு பெண்ணிடம் கல்லூரில் உள்ள அனைவர் முன்னணியிலும் காதலை சொன்ன தகவல் வர. இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று கருதி மேலும் தன் தங்கை வசந்தாவின் கோபத்தை தூண்டிவிட்டார் கணேஷ்.

“இங்க பாருமா வசந்தா எனக்கு என்னவோ அந்த பொண்ணு மேல தான் சந்தேகம் வருது. இவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தில் நுழைந்தால். அவங்க குடும்பம் செட்டில் ஆகிவிடலாம் பணத்துக்கு எந்த பிரச்சனையும் வராது. அவங்களுக்கும் ஊர்ல மதிப்பு மரியாதை கிடைக்கும் நினைச்சி நம்ம வீட்டு புள்ளையை அந்த பணத்தாசை புடிச்ச பொண்ணு வலைச்சி போட்டு இருக்குமுன்னு நினைக்குறேன். ஏனா நம்ம ராஜா எந்த பொண்ணையும் நிமிர்த்து கூட பார்த்தது இல்ல. அவ்வளவு ஏன், என் பொண்ணு அத்தான்! அத்தான்! ராஜா பின்னாடியே  சுத்திக்கிட்டு இருக்குறா. அப்ப கூட அவளிடம் ஒரு வார்த்தை பேச தயங்கி போவான். அவன் எப்படிமா அந்த பிச்சைக்காரி குடும்பத்தில் இருக்கும் பொண்ணை காதலிப்பான். “என்று தன்னால் எவ்வளவு முடியுமே அந்த அளவுக்கு கீதாவை பற்றி தங்கைக்கு தப்பாக எடுத்து உறைத்தார்.

வசந்தா எதுவும் பேசாமல் கோபமாக அமர்ந்து இருக்க. அப்போது வீட்டுற்க்கு வந்த மகனை தடுத்து காலேஜ் நடந்ததை கேட்டார்.

ஒரு நிமிடம் திகைத்தாலும் ” பொண்ணோ அவ்வளவு தைரியமா தன் காதலை அவள் பெற்றோரிடம் சொல்லும் போது நான் ஆண்மகன் எதற்கு பயப்புடனும்” கீதாவின் நினைவு வந்து அவனை பேச வைத்தது “ஆமா அம்மா நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன். நாங்க இரண்டு பேரும் காதலிக்குறோம். “என அவன் சொல்லிய அடுத்த நொடி அவன் கண்ணத்தில் ஓங்கி அறைவிட்டார் அவனது தந்தை.

“கல்லூரில் உங்கள் மகன்  ஃபர்ஸ்ட் இயர் பெண்ணிடம் பாட்டு பாடி லவ் ப்ரொபோஸ் செய்கிறார். அவரே இப்படி செய்தால் மற்ற ஸ்டூடன்ட் எப்படி பிகேவ்  பண்ணுவங்க.” என்று கல்லூரி முதல்வர் கூற. கோபத்துடன் வீட்டுக்கு வந்த சுந்தரம் தன் மகன் அவர் மனைவிடம் காதல் விசியத்தை கூறியதைக் கேட்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் கை நீட்டி விட்டார்.

“உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும். காலேஜ்ல இப்படி என் மானத்தை வாங்கிட்டியேடா.” என்கிறார் கோபத்துடன்.

ராஜாவோ “நான் எப்போ உங்க மானத்தை வாங்கினேன்.” என்று பொறுமையாக கூறியவன்” என் காதல தான் சொல்லிட்டு வந்தேன். “என்றால் தைரியமாக.

அதை கேட்ட சுந்தரம் ஆத்திரத்துடன் “ஓ! காதல் ச்சீ புடலங்காய் காதல். நம்ம அந்தஸ்து எங்கே? அவங்க எங்கே? இனி அந்த பொண்ணு நம்ம காலேஜில படிப்பை தொடர மாட்டாள். இப்பவே டிஸ்மிஸ் பண்ண சொல்றேன். ” என மிரட்டினார்.

ராஜாவிற்கோ ‘முதல் தடவையை தன் தந்தை, தன்னை கை நீட்டி அடித்துவிட்டார். ‘என்ற வருத்தத்தை கொடுத்தாலும், தன் காதலை தக்க வைத்துக்கொள்ள தன் தந்தையிடமோ வாக்குவாதம் செய்தான்.

“இங்க பாருங்க அப்பா அவளை அந்த காலேஜில இருந்து.. வெளியா அனுப்ப முடிவு பண்ணிங்கனா. நான் போராட்டம் இல்லான செத்துடுவோனு மிரட்டல் விடுறது எல்லாம் செய்ய மாட்டோன். உங்க யாருகிட்டையும் சொல்லாம கொள்ளாம இந்த ஊர விட்டே போய்டுவேன். உங்களால கண்டே புடிக்க முடியாத தூரத்துக்கு போய்டுவேன். என் கீதாவையும் கூட்டிட்டு கண்காணா தேசத்துக்கு போய்டுவேன். “என்று அழுத்த திருத்தமாக சொல்லிவிட்டு செல்லும் மகனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

இன்பராஜா போராட்டம் பண்ணி அவனது தாத்தா பெயரை கெடுக்க மாட்டான். உயிர் போகும் கடைசி நிமிடம் கூட தன் பணம் பலம் கொண்டு காப்பற்றி விடலாம் ஆனால் கண்காணதேசம் என்றால் எப்படி எதுவரை அவரால் தேட முடியும். ஓரே மகன் ஆச்சே என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே சோபாவில் அமர்ந்தார்.

“என் மகன் இப்படி எல்லாம் பேசுபவனே இல்லை. எல்லாம் அந்த மகாராசி வந்த நேரம். எப்போ என் மகன் வாழ்க்கையில் வந்தலோ, எங்க பையனை இதுவரை விளையாடுட்டுக்கு கூட, கையை நீட்டதாவர் அடிக்க வச்சிட்டாளே. அப்பாவுக்கும் புள்ளைக்கும் சண்டையை மூட்டிவிட்டுடாளே. ராசியில்லாதவ” என புலம்பிதள்ளினாள் வசந்தா.

அதுவரை அமைதியாக இருந்த கணேஷ் சுந்தரிடம் வந்து அமர்ந்து ஆறுதல் செய்தார். அவரும் இதை எதிர் பார்க்காதவர் தானே தங்கையிடம் அவளை பற்றி தப்பாக கூறினாள். தன் தங்கை அந்த ஒன்னும் இல்லதவளை பார்த்துக்கொள்ளுவாள் என்று நினைத்து தான் தங்கையிடம் பேசினார். ஆனால் தன் நண்பன் சுந்தரம் இடையில் புகுந்து இப்படி செய்வார் என சற்றும் எதிர் பார்க்கவில்லை.

“சுந்தர் இப்ப இந்த பிரச்சனையை ஆற போடுடா. இதை பத்தி பேசினால் இன்னும் பெரிய பிரச்சனையில் தான் முடியும். கொஞ்ச நாள் இந்த பிரச்சனையை தள்ளிவை. மாப்பிள்ளை இப்ப இருக்குற நிலைமைக்கு நம்ம கொஞ்சம் விட்டு கொடுத்து தான் போகனும். ஏனா அவரு வயசு அப்படி. ” என்று கணேஷ் சொல்லி முடிக்க.

“அப்போ அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு மருமகளா ஏற்றுக்க சொல்றீங்களா அண்ணா?” என்று வசந்தா கோபமாக கேட்க. சுந்தரும் கணேஷை பார்த்தான்.

“நான் அப்படி சொல்ல வரலமா! கொஞ்ச நாள் நம்ம இதை பத்தி மாப்பிள்ளை கிட்ட பேச வேண்டாம் தான் சொல்றேன். அவரு வழியில விட்டு தான் பிடிக்கனும் ” என அவர்களை சமாதானம் செய்துவிட்டு கிளம்பினார்.

கணேஷ் சொல்வது தான் சரி என்று பெற்றோர் இருவரும் இனி இதை பற்றி எதுவும் பேசமல் இருக்க முடிவு செய்தனர்.

தன் அறைக்கு வந்தவன் கண்களை மூடி தன் தந்தை அடித்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தான்.

‘கீதா தன்னிடம் காதலை சொல்லியதை முழு சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள், தந்தையின் மூலம் பிரச்சனை வரும் என்று நான் நினைக்கவில்லை. உங்க அப்பா உன்னை எந்த அளவுக்கு சுதந்திரமா, உன் வாழ்க்கையை முடிவு செய்ய விட்டு இருக்காரு. ஆனா என் அப்பா மட்டும் ஏன் என்னை புரிந்துக்கொள்ளவில்லை’ என கீதாவின் போட்டோவை பார்த்துக் பேசிக்கொண்டு இருந்தவன் இரவு சாப்பட்டை கூட சாப்பிடாமல் இரவு சரியாக தூங்காமல் தந்தையிடம் எதுவும் பேசாமல் காலையில் கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டான்.

கீதாவும் தன் தந்தையிடம் அன்று கல்லூரி இந்து நடந்து கொண்டதையும் இரவு இன்பராஜா வந்ததும் பிறகு கல்லூரில் நடந்ததை அனைத்தும் கூறிவிட்டு. தன் தோழியுடன் கல்லூரிக்கு கிளம்பினாள்.

“என்னங்க இவ இப்படி சொல்லிட்டு போறா?”. என கவலையுடன் பார்வதி கேட்டாள்.

“எப்படி சொல்லிட்டு போறா? நடந்ததை தானே சொல்லிட்டு போறா.” என்று அன்பரசன் பொறுமையாக பேச.

“என்னங்க நீங்க கவலைப்படாமல் எதுவும் நடக்காதது போல் பேசிட்டு இருக்கீங்க. அவங்க அந்தஸ்து எங்கே? நம்ம எங்கே? அவள் படிக்கிற காலேஜிக்கு சொந்தக்காரர். அவங்க எப்படி நம்ம பொண்ணை மருமகளா ஏத்துபாங்கா. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. “என வேதனைப்பட்டாள் பார்வதி.

அதற்கு அன்பரசன் அமைதியாக தன் மனைவியை அருகில் அமர்த்தி எடுத்து சொல்லா ஆரம்பித்தார். “இங்க பாரு பார்வதி இது அவ வாழ்க்கை அவ தான் முடிவு செய்யனும். நம்ம பொண்ணுக்கு நல்லது எது கெட்டது எது சொல்லி தான் வளர்த்து இருக்கோம். ” என்று அவர் கூற, நடுவில் பேச வாய் எடுத்தவளை அமைதியாக இருக்க சொல்லிட்டு இவரோ தொடர்ந்தார்.

“பார்வதி பணம் அந்தஸ்து பார்த்து காதல் வராதுமா. மனசையும் குணத்தையும் பார்த்து தான் காதல் வரும். எடுத்துகாட்ட நம்மலையே சொல்லலாம் இந்த காலத்துல எந்த பசங்களாவது அப்பா அம்மா கிட்ட கொஞ்ச நேரம் உட்கார்ந்து இன்னிக்கு என்னலாம் நடந்தது சொல்லுவாங்களா. ஆனா நம்ம பொண்ணா பாரு ஒரு விஷியத்தை கூட நம்ம கிட்ட மறைச்சது இல்ல ஏன்னா! அவளுக்கு நம்ம மேல அவ்வளவு நம்பிக்கை புரியுதா. நம்ம பொண்ணு சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்” என அன்பரசன் பேசி முடிக்க பார்வதியே இன்பராஜா இரவு வந்ததை பற்றி கேட்டாள்.

“ஏன் நம்ம பொண்ணு மேல சந்தேகமா? “என்று மனைவியை கேள்வியாக பார்க்க.

“என்னங்க நீங்க நான் எப்படி  நம்ம பொண்ண சந்தேகபடுவேன். அவ மேல முழு நம்பிக்கை இருக்குங்க. ஆனா அந்த டைம்ல வந்து இருக்க கூடாது தான் நினைச்சேன்.” என்றாள்.

அன்பரசனோ “ஏன்டி உன் பொண்ணு அன்னிக்கே காலேஜில பதில் சொல்லி இருந்த அந்த தம்பி ஏன், அந்த டைம்ல வர போகுது. நம்ம பெண்ணு மேல எந்த அளவுக்கு காதல் இருந்தா. நடுராத்திரி எந்த ரிஸ்க் வந்தாலும் பார்த்துக்கலாம் வந்து இருப்பாரு. அவ்வளவு ஏன் நம்ம காதலிக்கும் போது உன்னை பார்க்க நானும் இப்படி தானா செய்வேன்.” என்று தன் மனைவின் யோசனையை மாற்ற நினைத்தார் அன்பரசன்.

“ஆமா, ஆமா உங்களா மாதிரியே மருமகன் கிடைச்சிட்டாருல. அதான் சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கீங்க. இதெல்லாம் எங்க போய். முடியபோகுதோ “என சொல்லிவிட்டு சமையலறைக்கு நுழைந்தாள்.

கல்லூரிக்கு வந்தவன் கீதாவை தேடி எப்போதும் அவள் அமரும் இடத்தை நோக்கி சென்றான் இன்பராஜா.

அவன் வருவதை பார்த்து மகிழ்ச்சியுடன் தன்னவனை வரவேற்றாள் கீதா. “என்ன இன்பா சாப்பாடு நேரத்துல சாப்பிடாமல் என்ன பார்க்க வந்து இருக்க” என கீதா கேட்க.

நேற்று நடந்ததை கூற நினைத்தவன் கீதாவை தேடிக்கொண்டு இருந்தான்.

ஆனால் கண்களில் அவளது புன்னகையான முகத்தை பார்த்து தன்னவளின் சந்தோஷம் கெடுக்ககூடாது என நினைத்து நேற்று நடந்தது எதுவும் கீதாவுக்கு தெரியா கூடாது என முடிவு செய்து அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

தன் முகத்தை புன்னகையுடன் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். “என்ன சாப்பாடு  கீத்து எனக்கு பசிக்குது கீதா “என்று அவன் சொல்லவும் கீதா தன் சாப்பட்டை அவனுக்கு ஊட்டிவிட்டாள். இவளது அன்பை பார்த்து கண்கலங்கினான்.

“என்னடா கண் வேர்க்குதா.” என்று கீதா கிண்டல் செய்ய, அவளை அடிக்கும் தோரணையில் இன்பா கைகளை தூக்க அவள் எழுந்து ஓடி தன்னவனை வேண்டும் என்றோ வம்புக்கு இழுக்க இவர்களது காதலை பார்த்து இரு கண்களுக்கு சொந்தமான நான்கு விழிகள். சந்தோஷம் அடைந்தாலும். 
இன்னும் இரு கண்களுக்கு சொந்தமான நான்கு விழிகள் வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தன.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page