காதல்- 16

காதல் -16 
 

 

நாட்கள் நகர்ந்துக்கொண்டே போனது மாதங்களும் கடந்தன. இந்த எட்டு மாதத்தில் இவர்களது காதலும் அதிகமாகியது. ஒரு நாள் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அன்றைய பொழுது அவர்களால் கடக்கவே முடியாத அளவுக்கு அவர்களது காதல் ஆழமாகிக் கொண்டே போனது.

தினமும் இன்பராஜாவுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வர தொடங்கினாள் கீதா. அவள் எடுத்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டு இன்பராஜா கீதாவின் அம்மாவை புகழ்ந்து தள்ளுவான்.

இந்துவோ இவர்களை ஒன்றாக இருப்பதை பார்க்க முடியாமல் பாதி நாள் கல்லூரிக்கு வராமல் தவிர்த்துவிடுவாள்.

கணேஷ் இன்பராஜாவையும் கீதாவையும் எப்படி பிரிப்பது என்று யோசனை செய்து கொண்டு இருக்க, தங்கள் மகன் இந்த எட்டு மாதத்தில் தங்களுடன் பேசுவதையே, அதுவும் அவன் தந்தை சுந்தரிடம் சுத்தமாக பேசுவதை நிருத்தி விட்டான்.

தன் தாய் வசந்தாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்துக் கொண்டு வருகிறான். இதற்கு எல்லாம் அவள் தான் காரணம் என்ற கோபத்திலும்  கவலையிலும் இன்பராஜாவின் பெற்றோர் இருக்க.

கீதாவின் பெற்றோரோ தன் மகள் சந்தோஷமாக இருப்பதை நினைத்து இதற்கு காரணம் அவன் தான் என்ற நிம்மதியில் இருந்தனர்.

இதற்கு இடையில் சூரியா ரம்யாவின் மீது காதல் கொண்டு அதை யாரிடமும் சொல்லாமல் ஏன் ரம்யாவிடமும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.

“ஹாய் சூரியா பரத் எங்கடா?. ஆளு கண்ணுல அகப்பட மாட்டிக்கிறான்.” என்று கேட்டுக் கொண்டே அவர்களிடம் வந்தான் இன்பராஜா.

“வாடா நல்லவனே நாங்க எல்லாம் யாரு ஞாபகம் இருக்கா?என்று இன்பராஜாவின் பின்னால் வந்த பரத் கேடட்டான்.

“ஏன்டா இப்படி எல்லாம் பேசுற?” என்று ராஜா கவலையோடு கேட்க.

பரத்தோ ” ஆமாடா மச்சி, நீ இந்த எட்டு மாசமா உன் ஆளு கீதா பின்னாடியே தான் சுத்திட்டு இருந்த. அவ்வளவு ஏன் இந்த சூரியா கூட நீ எங்க இருக்கியோ அங்க தான் இவனும் இருக்கான். எங்களை எல்லாம் கண்டுக்குறதே இல்ல.” என வருத்ததுடன் கூறினான் பரத்.

” என்ன பரத் இப்படி பேசுற எனக்கு நீங்க தான்டா ஃபர்ஸ்ட் அப்புறம் தான் கீதா”  என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, இன்பராஜாவின் பின்னால் வந்து நின்றாள் அவனது நாயகி கீதா.

கீதாவும் ரம்யாவும் வந்ததை பார்த்த சூரியாவும் பரத்தும் இன்பாராஜாவுக்கு செய்கை செய்ய.

கீதாவும் அவர்களை அதே செய்கையால் மிரட்டி அமைதியாக இருக்க சொன்னாள்.வேற வழியின்றி இருவரும் இன்பராஜாவை பாவமாக பார்த்து அப்படியே நின்றனர்.

தன்னவள் தன் பின்னால் நிற்பதை அறிந்தும் அறியாமல் வேண்டும் என்றே அவளை சீண்ட நினைத்து பேச்சை தொடர்ந்துக் கொண்டே போனான் இன்பா.

“இங்க பாருங்கடா அவ ஜெஸ்ட்  எட்டு மாசத்துக்கு முன்னால் வந்தவ தான். ஆனால் நீங்க என் கூட எல்.கே.ஜி ல இருந்து ஒன்னா படிச்சவங்க. சோ அவளை விட உங்களுக்கு தான்டா முதல் உரிமை இனி உங்களுக்கு டைம் ஒதிக்கிட்டு தான் அவளுக்கு. எப்போ பாரு அவங்க அப்பா புராணம் தான். ஆசையா எதாவது பேசுனா எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான் சொல்றா. மச்சி ஆனா ஒன்னுடா எல்லாம் கல்யணாத்துக்கு அப்புறம் தான் என்ற வார்த்தையை கண்டுபுடிச்சவனை நிக்க வச்சி வாய் மேலேயே! குத்து, குத்துனு குத்துனும்டா ” என்று பரத்தை பிடித்துக் கொண்டு அதே தோரணையில் கூற.

பரத்தும் அவனை விட்டால் நம்மளை அடித்தாலும் அடித்து விடுவான். என்று தோன்ற “விடுடா என்னை” என கூறி விட்டு அவனிடம் இருந்து நகர்ந்து நின்றான்.

“டேய் பரத் சூரியா எப்போ பாரு எல்லா பொண்ணுங்களும் லவ் பண்றப்ப இந்த வாக்கியதையே பேசிக்கிட்டு இருக்காங்க. ஏன் டா பொண்ணுங்களாம் இப்படி இருக்கங்க. ” என இன்பாராஜா கேட்க.

சூரியாவோ தலையில் கைவைத்து “போச்சி இன்னிக்கு இவன் செத்தான். கூட வேற நம்ம ஆளும் வந்து நிக்குறளே. என் மானத்தை வாங்கிடாதடா நான் இன்னும் இவ கிட்ட என் லவ்வ கூட சொல்லாலடா.” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு அப்படியே பெஞ்சில் அமர்ந்தான்.

“ஆமாடா எல்லா பொண்ணுங்களையும் சொன்னியே, அப்ப நீ எத்தனை பொண்ணா லவ் பண்ணி இருக்க” என்று பரத் கேட்க.

இன்பா யோசித்துவிட்டு “நான் ஒரு நாலு அஞ்சி இல்லை.. இல்லை ஒரு எட்டு பொண்ணை மட்டும் தான்டா மச்சி லவ் பண்னேன் ” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

அவன் பின்னால் கோபத்துடன் நின்ற கீதா. இப்போது அவன் முன்னால் வந்து நிற்க பயந்து நடுங்குவது போல் பாவனை செய்தான்.

கீதா அவன் காலரை பிடித்துக் கொண்டு “ஏன்டா எனக்கு முன்னாடி நீ! ஏழு பேர காதலிச்சி இருக்கியா?” என கோபத்துடன் கேட்க.

ரம்யா சூரியா பரத் கீதாவிடம் அவனை விட்டுவிடுமாறு கெஞ்சினர். அதை எதுவும் காதில் வாங்காமல் அவனை பார்த்து முறைத்து விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

மூவரும் ஒன்றும் புரியாமல் முழிக்க. கீதா அவர்களை பார்த்து, “இவனுக்கு பொய் சொல்ல கூட தெரியுல. யாரு இவன் எட்டு பொண்ணை லவ் பண்ணான்னா? இதை நான் நம்பன்னுமா? அங்க பாருங்க நம்ம இங்க பேசிட்டு இருக்கோம். அவன் எந்த கவலையும் இல்லாமல் மூக்கபிடிக்க சாப்பிட்டு இருக்கான்.” என்று இன்பராஜா இருக்கும் திசையை காட்ட இப்போது பரத்தும் சூரியாவும் அவன் மேல் கோபத்தை காட்டும் நேரம் வந்தது.

“ஏன்டா நாங்க கீதாக்கிட்ட உன்னை மன்னிக்க சொல்லிக் கெஞ்சிட்டு இருக்கோம். நீ கொட்டிட்டு இருக்கியா?. உன்னை” என்று சூரியா அவனிடம் இருக்கும் டிபன் பாக்ஸை பிடிங்கிக் கொண்டு ஓட. பரத் இன்பராஜாவை அடிக்க ஓட, இவர்களை பார்துக்கொண்டு இருந்த ரம்யாவும் கீதாவும்  சிரித்துக்கொண்டே சாப்பிட அமர்ந்தனர்.

ஒரு வழியாக மூவரும் அடித்துப்பிடித்து சாப்பிட வந்து அமர்ந்தனர். அப்போது தான் பரத் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த கீதா ” என்ன பரத் நீ சாப்பிடலையா” என கேட்டாள்.

இன்பராஜாக்கும் அப்போ தான் தன் நண்பன் சாப்பிடாமல் இருப்பதை கவனித்தான்.

பரதோ ” நான் எப்போதும் கேன்டீன்ல தான் சாப்பிடுவேன் கீதா. இன்னிக்கு வாங்க மறந்துட்டேன். இருங்க வரேன் “என எழுந்து போனவனை கை பிடித்து அமர வைத்தாள்.

கீதாவின் முதல் தொடுக்கை அவனுக்கு இன்பம் அளித்தாலும் இவள் தனக்கு சொந்தமில்லை என்ற எண்ணம் வந்து மறைந்தது பரத்திற்கு.

தாங்கள் எடுத்து வந்த சாப்பாட்டை ஐந்து பேரும் பகிர்ந்து சாப்பிட்டனர். பரத் கீதாவை பார்த்து காலேஜ் படிக்குற, நம்மல மாதிரி ஸ்டுடென்ட்  இப்ப எல்லாரும் கேன்டீன்ல தான் சாப்பாட்டை சாப்பிடுறங்க. ஆனா எப்போ நீ சாப்பாட்டை எடுத்துட்டு வந்தியோ அன்றிலிருந்து இவனுங்க கூட என்னோடு வந்து சாப்பிடறது இல்லை ” என்று வருத்ததுடன் கூறினான் பரத்.

அதற்கு கீதா ” இது எங்க அம்மா அன்பு கட்டளை கேன்டீன்ல சாப்பாடு எப்படி இருக்கும் தெரியாது, அதனால் நீ வீட்டு சாப்பாட்டை தான் சாப்பிடனும் சொல்லி இருக்கங்க. நானும் ரம்யாவும் எப்பவும் வீட்டு சாப்பாடு தான். நான் இன்பாவுக்கும் சேர்த்து எடுத்துட்டு வருவேன். சூரியாவும் எங்க கூட ஜாயின் பண்ணிப்பாரு. நாளையில் இருந்து நீங்களும் உங்க அம்மாகிட்ட சொல்லி சாப்பாட்டை எடுத்துட்டு வாங்க” என்று கீதா கூற இன்பாவும் சூரியாவும் “கீதா” என்று ஏதோ சொல்ல வாயை திறக்க.

அதைக்கேட்ட பரத் வேதனையுடன் “எனக்கு யாரும் இல்லை. நான் அனாதை. என்னை சின்ன வயசுல இருந்து ராஜாவின் அப்பா தான் படிக்க வச்சி எனக்கு தேவையானது, எல்லாம் அவர்கள் தான் செய்யுறாங்க. ஏன் இது ராஜா உன்கிட்ட சொல்லலையா” என  விரக்தியாக கேட்டான்.

அவளோ அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்தாள். ரம்யாவும் அதிர்ச்சியாக இருக்க. ராஜாவோ ” உன்னை பற்றி நான் இவங்க இரண்டு பேருக்கிட்டையும் சொல்லால பரத். உன்னை யாரும் பாவமாக பார்ப்பது எங்களுக்கு பிடிக்காதுடா. அதுவும் இல்லாமல் நீ ஒன்னும் அனாதை இல்லை. என் கூட பிறந்தவனா தான் நினைக்குறேன். ” என இன்பராஜா கூறினான். சூரியாவும் “எனக்கும் அப்படி தான்டா” என்று பரத்தை தேற்றினார்கள்.

தன் நண்பர்கள் தன் மேல் இந்த அளவுக்கு பாசமாக இருப்பதை எண்ணி மகிழ்ந்தான் பரத்.

கீதாவுக்கோ ‘ எதுவும் தெரியாமல் தவறு செய்து, அதகம் பேசி விட்டோமே’ என்று பேச்சி வராமல் தவித்துக்கொண்டு இருந்தாள்.

இவளது தவிப்பை பார்த்த இன்பா “சாரி கீதா இதை பற்றி முன்னாடியே உன் கிட்ட பேசி இருக்கன்னும். “

“இல்ல இன்பா நான் தான் எதுவும் தெரிஞ்சிக்காமல் லூசு மாதிரி பேசிட்டேன். சாரி பரத் உங்க மனசை கஷ்டப்படுத்திட்டேன்.” என்று மனதார மன்னிப்பு கேட்டாள் கீதா.

“அய்யோ எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு நீ தெரியாமல் தானே கேட்ட. சரி விடுங்க ஃபஸ்ட் எல்லாரும் சாப்பிடுங்க. ” என்று அந்த சூழ்நிலையை மாற்ற முயன்றான் பரத்.

ரம்யாவோ “பரத் அண்ணா முதல நீங்க சாப்பிடுங்க. இனிமேல் உங்களுக்கும் சேர்த்து சாப்பாட்டை நாங்க எடுத்துட்டு வரோம். என்ன சொல்ற கீதா “என ரம்யா அவளிடம் கேட்க.

“ம்ம்ம்ம் ஆமாடி இனிமேல் நம்மளே பரத்துக்கும் எடுத்துட்டு வரலாம்.” என்று சொன்னாள்.

அவளுக்கோ மனசு வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தது. ‘ இப்படி அவசரப்பட்டு வார்த்தையை விட்டுடோமே” என்று வேதனனையுடன் சாப்பிடாமல் அமர்ந்து இருக்க. இன்பராஜா அவளின் கையை பிடித்து சாப்பிடுமாறு சொன்னான். அவளோ பேருக்கு என்று சாப்பிட்டாள்…

சூரியா மனதிலோ ‘இது சரிப்பட்டு வராது. இப்ப இருக்குற சுழ்நிலையை நம்ம தான் ஏதவாது செய்து மாற்றனும். ‘என்று யேசித்தவன், ஏதோ ஒரு ஐடியா தோன்ற.

கீதாவிடம் “ஆமா கீதா, நீ எப்படி ராஜா பொய் தான் சொல்றானு சரியா சொன்ன. ” என்று அவளின் மனநிலையை மாற்ற முயன்றான், ராஜாவை ஒரு அர்த்தமான பார்வை பார்த்து. அது ராஜாவுக்கும் புரிந்தது.

அவன் நினைத்தது போலவே கீதாவும் சற்று உற்சாகத்துடன் “அதுவா சூரியா காதலிக்கிறவங்களுக்கு தன் காதலிக்கும் நபர் மீது சந்தேகம் வரகூடாது. தன் காதல் மேல முழு நம்பிக்கையும் புரிதலையும் வைக்கனும். நம்ம முழுசா புரிஞ்சிக்கிட்டோம்னா.. நம்ம காதலிக்கிறவங்க, உண்மையை சொல்றாங்களா? இல்லை பொய் சொல்றாங்களானு? புரிஞ்சிக்க முடியும். அதுவும் இல்லாமல் இவனுக்கு நான் பின்னாடி தான் நிக்குறேன் தெரியும். “என்று நீளமாக பேசினாள்.

அதை கேட்ட ராஜா “ஏய்! நீ, தான் என் பின்னால் நிக்குறனு, எனக்கு தெரியுமுன்னு உனக்கு எப்படி தெரியும்?”  என இன்பராஜா கேட்க.

“அது தான் காதல்” என்று அவனை பார்த்து கண் அடித்து கூறினாள்.

பிறகு ராஜாவை பார்த்து ” சொல்ல மறந்துட்டேன் இன்பா, நாளைக்கு உங்க எல்லாரையும் அப்பா வீட்டுக்கு வர சொன்னாரு. ” என்க.

“எதுக்குமா எங்களை கட்டி வச்சி உதைக்கவா”  என சூரியா கேட்க.

“ரம்யாவோ இவளுக்கு நாளைக்கு பிறந்த நாள் சூரியா அண்.. ” என்று அவள் வாய் திறக்க.

சட்டென்று ரம்யாவின் வாயில் தன் கைகளால் பொற்றி “பிளீஸ் அண்ணா மட்டும் சொல்லிடாத” என்று அவன் காதலுடன் கூற, சூரியாவின் கண்களை பார்த்த ரம்யா அந்த கண்ணில் ஏதோ ஒன்று தனக்குள் புகுந்து தாக்கம் செய்ததை அறிந்தாள்.

முதல் முறை ஒரு ஆணிண் பரிசம் தந்த உணர்வை  அவளால் தாங்க முடியாமல். வெட்க்கத்துடன் தலைகுனிந்தாள்.

இதை பார்த்துக் கொண்டு இருந்த மூவருக்கும் புரிந்தும் புரியாமல் நடித்துக் கொண்டு சூரியாவை கிண்டல் செய்தனர்.

ரம்யாவுக்கோ இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று குழம்பினாள். அப்போது தான் ரம்யா சொல்லியது சூரியாவின் ஞாபத்துக்கு வர அதை மீண்டும் அவளிடமே கேட்டான்.

“ரம்யா நீ என்ன சொன்ன நாளைக்கு கீதாவுக்கு பிறந்த நாளா?” என அவன் மறுபடியும் கேட்க ரம்யாவும் “ஆமா”  என்று தலை அசைத்தாள்.

“இவள் நிஜாமாவா சொல்றா கீதா” என்று கீதாவை கேட்க.  “ஆமா நீங்க ஏன் இவ்வளவு சந்தோஷமா கேட்குறீங்க. ” என்றாள் கீதா.

“என்னடா, நியாயமா நான் தான் சந்தோஷம்ப்படனும். நீ ஏன்டா இவ்வளவு குஷியா இருக்க? “என இன்பராஜா கேள்வியாக கேட்டு பார்க்க…

“நாளைக்கு என்ன நாள் உனக்கு ஞாபகம் இல்லையாடா ராஜா?  பரத் உனக்கும் ஞாபகம் இல்லையா? என இருவரையும் சூரியா பார்த்துக் கேட்க..

” எனக்கு ஞாபகம் இருக்கு சூரியா” என்று புன்னகையுடன் பரத் சொன்னான்.

ராஜாவோ கோபமாக “இப்ப சொல்ல போறீங்களா? இல்லையா?”  என்று கேட்டான். 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page