அஸாத்தின் முதல் மனைவி ஹாஜராவின் மகன்தான் ஆஷிக். அவருக்குத் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்கள் மீது நாட்டம் அதிகம். இதுவே ஆஷிக் இவரை அதிகமாக வெறுக்கக் காரணமாகியது. இதை அறிந்தும் ஆஷிக்கின் தாய் இந்தச் சமூகத்திற்காகவும், தன் இரு குழந்தைகளுக்காகவும் தாங்கிக்கொண்டிருக்கிறார்.
மறுநாள் காலையில் ஆதர்ஷ் நேற்று இரவு தான் நடாஷாவிடம் நடந்துகொண்டது, ஆஷிக் கூறியது என்று அனைத்தையும் நினைத்து பார்த்து நேராக ஏர்போர்ட்டிற்கு வர, அப்பொழுது அவள் இன்று வேலைக்கு வரவில்லை என்பது தெரிய, நேராக அவளது இல்லத்திற்கு வந்தான்.
கதவை பலமுறை தட்டியவனுக்கு எந்தப் பதிலும் வராமல் போக, “வெளியில பூட்டு போடலை, உள்ள ஒருத்தர் கூடவா இல்லை. யாரும் என்னனு கூடக் கேக்கல ஸ்ட்ரேஞ்…” என்றவன் அங்கிருந்து கிளம்ப,
அப்பொழுது உள்ளே எதோ விழுவது போன்ற சத்தம் கேட்க, மேலும் கதவைத் தட்டியவன், “நடாஷா!” என்று அழைக்க, யாரோ முனங்குவது போல் தோன்ற ஜன்னல் வழியாகப் பார்த்தவன், உள்ளே ஒரு வயதான பெண்மணி மயங்கி கிடப்பது தெரிய, உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்தவன் அவர்களது உதவியுடன் கதவைத் திறந்துவிட்டு, ஆம்புலன்ஸை வரவழைத்து மயக்க நிலையில் இருந்த நடாஷாவின் தாயை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்.
நடாஷாவிற்கு எவ்வளவோ முறை ஆதர்ஷ் ஃபோன் செய்யக் கட் செய்தவள், பிறகு சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாள். தன் தாயின் ஹார்ட் ட்ரீட்மெண்ட்டிற்காக ஒருவரிடம் பணம் கேட்டிருந்தாள். அவர் கடைசி நேரத்தில் கையை விரிக்கவே கலங்கிய கண்களுடன் தன் இல்லம் திரும்பியவளுக்கு நடந்த அனைத்தும் புரிய, ஆதர்ஷ்க்கு கால் செய்ய ஃபோனை ஆன் செய்தவளுக்கு அவன் அனுப்பிய மெசேஜ் வர, ‘கம் டு சிட்டி ஹாஸ்பிடல் எமெர்ஜென்சி’ என்று இருந்ததைப் பார்த்து, பதறியவாறே ஹாஸ்பிடலுக்கு வந்தாள். ஆதர்ஷ் அவசர சிகிச்சை பிரிவிற்கு முன்னால் இருந்த நாற்காலியில் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்ததைப் பார்த்து அவனது அருகில் வந்து,
“அம்மா எப்படி இருக்காங்க?” என்று உடைந்து போன குரலில் கேட்க,
“ஏய் வந்துட்டியா? இப்போ ஓகே, நாளைக்கு ரூம்க்கு ஷிப்ட் பண்ணுவாங்க. எவ்வளவு நேரம் ட்ரை பண்ணினேன், எத்தனை மெசேஜ், ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ற? என்ன நினைச்சுட்டு இருக்க?” என்ற அவனது எந்தக் கேள்விக்கும் பதில் கூறாதவள், கண்ணாடியின் வழியாகத் தன் தாயையேப் பார்க்க, அவளது நிலையைப் புரிந்துகொண்டவன் அவளுக்குத் தண்ணீர் கொடுத்து,
“குடி, இங்க பாரு எல்லாம் சரியாகிரும். உங்க அம்மா சரியாகிருவாங்க. நான் கிளம்பட்டுமா, இல்லை நான் இருக்கணுமா?” என்று கூறி அவளது பதிலுக்காக ஆர்வமாய் எதிர்பார்த்திருந்த ஆதர்ஷ், அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக,
‘போகட்டா, இருக்கட்டுமானு கேட்குறேன். வேண்டாம் போகாதீங்கனு சொன்னா குறைஞ்சா போயிருவா? வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லுடி.’ என்று தன் மனதிற்குள் புலம்பியவாறு நடாஷாவையேப் பார்க்க அவளோ, “நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்று சட்டென்று கூற,
கோபமுற்றவன், “சரி ஓகே, பார்த்துக்கோ. எதுவும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு, டேக் கேர்.” என்றவன் அவளை விட்டு வரவும் முடியாமல், வேறு வழியும் இல்லாமல் திரும்பி திரும்பி அவளைப் பார்த்தவாறே அங்கிருந்து சென்றான்.
நண்பகல் வேளையில் ஜியா உணவருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அவளது வீட்டில் இருந்து அழைப்பு வர அலைபேசியை அட்டென்ட் செய்தவள், “சொல்லுங்க சித்தி, எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்க,
“இருக்காங்க… இருக்காங்க… மாசம் பிறந்துட்டே, சம்பளம் குடுத்திருப்பாங்கள்ல?” என்று பதில் வரவும், தன் இதழ் ஓரம் கவலை தொனிக்கச் ஒருவித வெறுமையோடு புன்னகைத்தவள்,
“ஆமா சித்தி…” என்று கூறி முடிப்பதற்குள் அவளது சித்தி, “அப்போ ஏன் இன்னும் நீ பேங்க்ல போடல?” என்று கொஞ்சம் அழுத்தமாய் கேட்க,
“சித்தி நான் நாளைக்கு ஊருக்கு வரேன், அதான் போடல.” என்று நிதானமாய் அவள் கூற,
“இத சொல்றதுக்கென்ன?” என்றவருக்கு, வெறும் வறட்டு புன்னகையை மட்டும் பதிலாய் கூறியவள், வேறெதுவும் பேசாமல் இருக்க அவளது சித்தி,
“சரண்யாக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும், அதனாலதான் கேட்டேன்.” என்று தன் செயலுக்குக் காரணம் தேட,
ஜியாவோ, “சித்தி நான் காலேஜ் பீஸ், எலெக்ட்ரிக் பில், ஃபோன் பில், போஸ்டல் எல்ஐஸி அப்புறம் மத்த சேவிங்ஸ் எல்லாத்தையுமே ஆன்லைன்ல கட்டிட்டேன்.” என்றதும் அவளது சித்தியின் முகம் நெருப்பில் பட்ட சருகாய் கருத்து போக, அவரை மேலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத ஜியா,
“சித்தி நான் நாளைக்கு ஊருக்கு வரேன், உங்களுக்கு எதுவும் வேணுமா?” என்று கேட்க, ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவர்,
“இல்… லை… அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். என்ன திடீர்னு… போனவாரம் நம்ம சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்கு வரமுடியாது லீவ் கிடைக்காதுனு சொன்ன, இப்போ வரேன்னு சொல்ற?”
“அது ஆயிஷாவுக்கு என்கேஜ்மென்ட் அ… தான்…” என்று ஒருவழியாகத் தடுமாறியவாறே கூறி முடிக்க,
“ஆயிஷாவா?” என்று சில நொடிகள் யோசனைக்குப் பிறகு ஒருவித கோபத்தோடு,
“ஏய் ஆயிஷானா அந்த ஆஷிக்கோட தங்கச்சி தானே?” என்று கடுகடுத்தவரின் கேள்விக்கு,
“ம்ம்” என்று மட்டும் பதில் கூறியவள், வேறெதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க,
“அவனும் வருவான்ல. நீ ஒன்னும் வரவேண்டாம்.”
“சித்தி நான் வரேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டேன்.”
“ஆமா பொல்லாத ப்ராமிஸ்.”
“இந்த ஒரு தடவை மட்டும் ப்ளீஸ் சித்தி…” என்று ஜியாவின் பலமுறை கெஞ்சலுக்குப் பிறகு,
“வந்தோமா, போனோமானு இருக்கணும் புரியுதா? ஏதாவது பிரச்சனை வந்துச்சு, அவ்வளவுதான் பார்த்துக்கோ. நீ மட்டும் என் வீட்ல இல்லை, எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா அதை மறந்திராத.” என்று எச்சரிக்கையோடு சம்மதம் தெரிவித்தார்.
அவரது கடினமான பேச்சு ஜியாவைப் பெரிதாய் பாதிக்கவில்லை. அவள் ஒன்றும் புதிதாய் இதைக் கேட்கவில்லையே. தன் சித்திக்கு தானும் ஆஷிக்கும் காதலித்த விஷயம் தெரிந்ததில் இருந்து அவர் இப்படித்தான் வாய்க்கு வந்தபடி ஏதாவது கூறுவார் என்பதால், அதைப் பெரிதாய் எடுத்து கொள்ளாதவள்,
‘இதுக்கே இப்படிச் சொல்றாங்க, நானும் அவனும் ஒரே இடத்துலதான் வேலை பார்க்குறோம், நான் அவன்கூடதான் ஊருக்கு வரப்போறேன்னு தெரிஞ்சா தேவையில்லாம கதை கட்டுவாங்க. இப்போதைக்கு இது எதை பத்தியும் சொல்ல வேண்டாம், அப்புறம் சொல்லிக்கலாம்.’ என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்க, அவளது சிந்தனையயைக் கலைக்கும் விதமாய்,
“என்னடி பதில் சொல்லாம இருக்க?” என்று அவரது சித்தி அரட்டியதில் தன்னிலைக்கு வந்தவள்,
“சரி சித்தி, நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்குறேன். எனக்கு நேரம் ஆச்சு, நான் வைக்கிறேன்.”
“ம்ம் கவனமா வா, சரியா? உடம்பப் பார்த்துக்கோ.”
“சரி” என்ற உரையாடலுக்குப் பிறகு, இருவரும் அலைபேசியில் இருந்து விடை பெற்றனர்.
இரவு ஒரு ஏழு மணியளவில்,
ஆதர்ஷ் காரை ஓட்டிக்கொண்டு வர, ஆஷிக் பின் சீட்டிலும் தியா அவனது அருகில் அமர்ந்துகொண்டு தாங்கள் சிறுவயதில் என்ன என்ன செய்தோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சலிக்காமல் கூற, அவள் கூறிய எல்லாவற்றுக்கும் தங்களின் தலையைத் தாளம் தப்பாமல் ஆட்டிக்கொண்டே வந்தனர். சிறிது நேரம் கழித்து ஜியாவின் அப்பார்ட்மெண்ட் முன்னால் கார் வந்து நிற்க,
“ஆர் யு கைஸ் சீரியஸ்?” என்று தியா கோபமாகக் கேட்க,
“அபௌட் வாட்?” என்ற ஆஷிக்கைப் பார்த்து மேலும் கோபம் கொண்டவள்,
“நம்ம கூட இந்த ஜியா கண்டிப்பா வரணுமா என்ன? அவளுக்குத் தனியா வர தெரியாதா?”
“கார்ல சீட் இருக்கு, போகவேண்டிய இடமும் ஒரே இடம்தான். ஸோ அவளும் வந்தா என்ன தப்பு?”
“ஆஷிக் யு ஹேட் ஹெர். நீ அவளை வெறுக்குற தானே?” என்றவள் பதிலை எதிர்பார்த்து அவனையேப் பார்க்க,
“ஹே… ட்…” என்று ஒற்றை வார்த்தையோடு வேறு எதுவும் பேசாமல் அவன் அமைதியாய் இருக்க,
“நீ அவளை ஹேட் பண்ற தான ஆஷிக்? அவ உன்னை விட்டுட்டு போனவ, எல்லாத்தையும் மறந்துட்டியா?” என்ற தியாவை என்ன கூறியும் சமாதானம் செய்ய முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க,
“இல்லை ஆதர்ஷ்… ஆதர்ஷ் லைக் ஜியா, ஐ லைக் ஆதர்ஷ்.”
“ஸோ?”
“ஸோ ஜியா லைக்ஸ் மீ அண்ட் ஐ…”
“யு?”
“ஐயம் ஃபீல் ஸ்லீப்பி.” என்று ஆஷிக் தன் கண்களை மூட, ஆதர்ஷ் சிரித்தவாறு தியாவிடம், “விடு தியா, அவனுக்கு ஜியாவை புடிச்சுருக்குனா ஜஸ்ட் லீவ் இட்.”
“ஆதர்ஷ், அவ ஏற்கனவே இவன் மனச உடைச்சது பத்தாதா? மறுபடியும் இவன கஷ்டபடுத்தணுமா என்ன?”
“ஓகே ஓகே… லீவ் இட். இப்போ இங்க இதைப்பத்தி பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.” என்ற ஆதர்ஷ், பிரச்சனையை வழக்காமல் சமாளிக்க, தன் தோளில் படுத்து உறங்குவது போல நடித்த ஆஷிக்கை நறுக்கென்று கிள்ளிய தியா அவனைப் பார்த்து முறைத்தவாறு, “நீ என்கிட்ட எதுவும் பொய் சொல்லுறியா?”
“இல்லை தியா.”
“ஆஷிக் உன்னை விட்டுட்டு போனவளை நினைச்சு நீ உன் வாழ்க்கைய வீணாக்காத. அவகிட்ட கொஞ்சம் விலகியே இரு. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.” என்றவளிடம் ஆஷிக், “ஏய் லூசு அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஏற்கனவே சோர்வா இருக்கேன்டி, என்னைப் பார்த்தா பாவமா இல்லை? இப்படிச் சண்டை போடுறியே? ப்ளீஸ் தியா தூக்கமா வருது.”
“நான் பேசுறது சண்டை போடுற மாதிரி இருக்கா?”
“தியா ப்ளீஸ்டா… என் தியால… உன்கிட்ட சொல்லாம எதுவும் பண்ணமாட்டேன்.” என்றவன் பாவமாய் பார்க்க, அந்த நேரத்துக்கு ஆஷிக்கின் முன்னால் சமாதானம் ஆனது போல நடித்தாலும், தியாவின் மனதிற்குள் பழிவாங்குதல் என்னும் தீ திபுதிபுவென அணையாமல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருந்தது.
தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறு தியா, “எவ்வளவு நேரம் ஆஷிக், அந்த மகாராணிக்கு சீக்கிரமா வரமுடியாதா என்ன? நாம போய் வெத்தல, பாக்க வச்சு அழைச்சாதான் வருவாங்களா?”
“நான் வேணும்னா போய் பார்த்துட்டு வரேன்.” என்ற ஆதர்ஷைத் தடுத்த ஆஷிக்,
“நான் போறேன்” என்று சட்டென்று காரின் கதவைத் திறக்க, அவனைத் தடுத்த தியா கோபப் பார்வையோடு, “என்ன? தூக்கம் வருதுனு சொன்ன…” என்று தன் கண்களை உருட்டி கேட்க,
“இப்போ வரல தியா.” என்று முழித்தவனைப் பார்த்து முறைத்தவள்,
“நீங்க யாரும் போக வேண்டாம், நானே போறேன்.” என்று தியா, ஆஷிக்கைப் பார்த்தவாறு ஜியாவின் இல்லத்திற்குச் செல்லவும், ஜியா கதவைப் பூட்டிவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
“ஹாய் ஜியா!” என்றவாறு ஜியாவின் அருகில் தன் இரு கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு நிற்க,
நிமிர்ந்து பார்த்தவள் பதிலுக்கு, “தியா ஹாய்! உனக்கு ஏன் சிரமம், நானே வந்திருப்பேனே? லிஃப்ட் வேற வொர்க் ஆகல.” என்று கூற, நக்கல் பார்வையோடு தியா “அக்கறை அதெல்லாம் இருக்கட்டும், ஏன் மும்பைக்குத் தனியா வரமாட்டீங்களோ?”
“அம்மாதான் சொன்னாங்க.”
“அவங்க சொல்லுவாங்க, உனக்குப் புத்தி வேண்டாம். ஏற்கனவே ஏமாந்தது போதாதா? ஆஷிக் பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவன் உன்னை லவ்லாம் பண்ணல, ஜஸ்ட் மத்த பொண்ணுங்ககிட்ட பழகுற மாதிரிதான் உன்கிட்டயும் பழகுறான். அவன் ஒரு சோஷியலிஸ்ட் பெர்சன். ஏற்கனவே அவனால ஏமாந்து போனல, அப்புறமும் அவனை ஓட்டிகிட்டே அலையுற?
அவன் உன் உயிரை காப்பாத்துனான்றதுக்காக மறுபடியும் ல்வ்னு தப்பான முடிவுக்கு வந்திராத, அப்புறம் நீதான் கஷ்டப்படுவ. ஒரு பொண்ணா இத நான் உனக்குச் சொல்றேன்.” என்று தியா எச்சரிக்கையாய் கூற,
ஜியா பதில் கூறுவதற்குள், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்றவாறு ஆஷிக் அவர்களது அருகில் வர,
திடுக்கிட்ட தியா, “சும்மா கேர்லஸ் டாக். நான் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்ல, நீயேன் வந்த?” என்று சமாளிக்க,
“டைம் ஆச்சே, அதான் என்னனு பார்க்க வந்தேன். ஏய் ஜியா குடு, நான் தூக்குறேன்.” என்று லக்கேஜை அவளது கையில் இருந்து வாங்க முற்பட,
“இல்லை நான் பார்த்துக்கிறேன்.” என்று ஜியா தடுக்க,
“என்னை பார்த்துக்குவ? லிஃப்ட் வேற வொர்க் ஆகல குடு நானே தூக்கிட்டு வரேன் ”
“ஆஷிக்!”
“ஜியா…” என்று உரிமையாய் கண்டித்தவன், “ரெண்டு பேரும் முன்னாடி போங்க, நான் தூக்கிட்டு வரேன்.” என்றான்.
காரில் ஜியா, ஆதர்ஷின் அருகில் உட்கார, கார் மெல்ல மும்பையை நோக்கி நகர்ந்தது.
