காதல் 25

நவம்பர் 29 2012, ஆஷிக்கால் எப்படி மறக்க முடியும்?

ஜியாவுடன் அவன் சந்தோஷமாக இருந்த கடைசி நாளாயிற்றே? 

தனது காதல் அத்தியாயத்தின் கடைசி நாள் அதுவென்று அவனால் எவ்வாறு அறிந்திருக்கக் கூடும்? 

உறவுக்காரர் வீட்டில் திருமணம் என்பதால் ஹாஜரா ஆயிஷாவுடன் தன் பிறந்த வீட்டிற்குச் சென்று இருக்க, 

ஆஷிக்கின் வீட்டில் ஜியா, “டேய் நாளைக்குப் பிறந்தநாளுக்கு யாராவது இன்னைக்கே கேக் வெட்டுவாங்களா?”

“நாளைக்குப் பிறந்தநாளுக்கு இன்னைக்கே கிஃப்ட் குடுக்கும் பொழுது, கேக் மட்டும் வெட்ட கூடாதா என்ன?” என்று கேக் துண்டை அவளது வாயில் ஊட்டிவிட்டவாறே கூற, 

“டேய் நான் நாளைக்கு இருக்க மாட்டேன், அதான் கிஃப்ட் கொண்டு வந்தேன்.”

“அதேதான், நாளைக்கு நீ இருக்க மாட்ட, அதான் இன்னைக்குக் கொண்டாடுறேன்.”

“நான் நாளைக்கு இல்லைன்னா என்ன, அதான் உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் இருப்பாங்கள்ல?”

“ஆனா நீ இருக்க மாட்டல்ல? நீ இல்லாம நான் எப்படிக் கொண்டாடுறது?”

“அதுக்காகப் பிறந்த நாளையே மாத்துவியா?”

“உனக்காக எதையும் பண்ணுவேன்… இதைப் பண்ண மாட்டேனா?” என்றவன் மேலும் தொடர்ந்து, “ஜியா நாளைக்கு நானும் உன் கூட எக்ஸாம் சென்டருக்கு வரேன்மா.”

“டேய் நாளைக்கு உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் வீட்ல பார்ட்டி தரேன்னு சொல்லிருக்க.”

“ஆமா பார்ட்டி ஏற்பாடெல்லாம் ஆதர்ஷ் பார்த்துக்குவான், நான் உன் கூட வரேனே…”

“உன் ஃப்ரண்ட்ஸ் என்ன நினைப்பாங்க?”

“அதெல்லாம் நினைக்க மாட்டாங்க.” என்று பிடிவாதம் பிடிக்க,

“உன் பர்த்டே பார்ட்டிக்காக வராங்க, அப்போ நீ இல்லனா நல்லா இருக்காதுடா.” என்று ஒருவழியாக ஜியா, ஆஷிக்கை சமாதானம் செய்ய, அவனோ கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க, அவனைச் சமாதானம் செய்வதற்காக அவன் முன்பு தான் வாங்கிக்கொண்டு வந்த கிஃப்டை காட்டி, 

“என்ன இருக்குனு பார்க்க மாட்டியா?” என்று பாவமாய் கேட்க, அவனோ, “என்ன இருந்தா என்ன? அதான் நாளைக்கு என்னை உன் கூட வரவேண்டாம்னு சொல்லிட்டியே?” என்று கோபமாய் கூற, அவனை இறுக்க அணைத்து கொண்டவள், “கோபம் போய்டுச்சா?” என்று கேட்க, 

தன் இதழோரம் வழிந்த புன்னகையை வலுக்கட்டாயமாக மறைத்தவன், “இல்லை” என்று கூறினான். 

“இப்போ…” என்றவாறு அவனது கன்னத்தில் இதழ் பதித்தவாறு கேட்க,

“ம்ஹும்…” என்று ராகம் பாடியவாறே தன்னவளைத் தன்னோடு இறுக்க அணைத்தவன், தன் இதழைக் காட்டி கண்சிமிட்ட, 

அவனது மார்பில் செல்லமாய் தட்டியவள், “நீ இருக்கியே… என்ன நடந்தாலும் உன் காரியத்துல கண்ணா இருப்ப. கிஃப்ட் பார்த்துட்டு சொல்லு.” என்று நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவன் ஜியாவின் நெற்றியில் இதழ் பதித்து,

“ஷர்ட் ரொம்ப அழகா இருக்கு, என்கிட்ட உள்ள எல்லா ஷர்ட்லையும் இதுதான் பெஸ்ட். நாளைக்கு பார்ட்டில இதைத்தான் போட்டுக்குவேன்.”

“நிஜமாவே உனக்குப் புடிச்சுருக்கா?”

“எஸ் ஸ்வீட் ஹார்ட்!” என்றவாறு தன்னவளைப் பின்னால் இருந்து தன் மார்போடு சாய்த்தவாறு அமர்ந்திருக்க, 

ஜியா ஆஷிக்கிடம், “ஆஷிக் நாளைக்குப் பார்ட்டில ட்ரிங்க்ஸ் எல்லாம் இருக்காதுல?” என்று அவள் கேட்டதும்,

ஆஷிக்கிற்குச் சிரிப்பு வர, “நான் குடிக்க மாட்டேன்.” என்று புன்னகைத்தவாறே கூற,

அவளோ, “அப்போ இருக்கும்ல?”

“ம்ம்ம்…”

“நீ…”

“என்னை நீ நம்பவே மாட்டியாடி?”

“நம்புறேன், ஆனா மத்தவங்க குடிப்பாங்கள்ல?”

“ஏய் இது என்ன வம்பா இருக்கு? அவங்களை நான் என்ன பண்ண முடியும்? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் அப்படித்தான். அவங்க ஒன்னும் சின்னக் குழந்தைங்க இல்லை, எல்லாரும் அபோவ் டுவென்டி. எது சரி எது தப்புனு அவங்களுக்குத் தெரியும்.”

“ஆனா நீ சாப்பிட கூடாது, ஏன் அதை ஸ்மெல் கூடப் பண்ண கூடாது, ஏன் தொடவும் கூடாது.” என்றவள் மேலும் தொடர்ந்து, “அங்க பொண்ணுங்க வரமாட்டாங்கல்ல?” என்று கேட்க, இந்த முறை ஆஷிக் வாய் விட்டே சிரித்துவிட்டான்.

ஆஷிக்கிற்கு ஜியாவிடம் பிடித்த ஒன்று என்றால், ஜியா தன்னை எப்பொழுதும் தன்னவனாகப் பார்க்கும் குணம்தான். இதை அவன் ஒருநாளும் சந்தேகமாகப் பார்க்க மாட்டான், தன் மீது அவள் கொண்டுள்ள அதீத காதலாகத்தான் பார்ப்பான். 

அவளோ முகம் சுருங்கியவாறு, “அப்போ வருவாங்களா?” என்று கேட்க, அவளைச் சீண்டி பார்க்க நினைத்தவன்,

“கண்டிப்பா செல்லம்… ரீனா, ஸ்டெல்லா, விஷாகா…” என்று அடுக்கிக்கொண்டே போக, “போதும் ஆஷிக்!” என்றவாறு தன் காதை மூடி கொண்டவள் அவனைப் பார்த்து முறைத்தவாறே,

“நீ அவங்ககிட்ட…” என்று தொடங்குவதற்குள் ஆஷிக், “சாப்பிடாம, ஸ்மெல் பண்ணாம, ஏன் தொடாம இருக்கணும்.” என்றதும் ஜியா, “ச்சீ… ஆஷிக் என்ன பேசுற?” என்று அவனது இதழை மூடியவள் முறைத்தவாறு அவனைப் பார்க்க, 

“நான் என்ன பண்ணுவேன், எல்லாரும் ஜோடியோட இருக்கும் பொழுது எனக்கு ஒருமாதிரியா ஃபீல் ஆகாது?” என்றதும் உக்கிரமாய் முறைத்தவள், “ப்ளீஸ் இப்படி விளையாட்டுக்கு கூடப் பேசாத…”

“விளையாட்டுக்கு சொல்றேன்னு தெரியுதுல, அப்புறம் ஏன் முகத்தைத் தூக்கி வச்சுக்குற? சும்மா சீண்டி பார்த்தேன்.” என்றவனின் மார்பில் செல்லமாய் அடித்தவாறு,

“உனக்கு என்னை வெறுப்பேத்துறதுல அவ்வளவு சந்தோஷம்ல?” என்றவள் ஒருவித தயக்கத்தோடு அவனிடம், “ஆஷிக் இதுக்கப்புறம் நாம என்ன பண்ண போறோம்?” என்று கேட்க ஆஷிக் விஷம புன்னகையோடு, “எதுனாலும் ஓகேதான் செல்லம்.” என்று கிசுகிசுக்க, செல்ல கோபத்தோடு அவனது கையில் கிள்ளியவள், “உனக்கு எல்லாமே விளையாட்டுதான். என் மனசு உனக்குச் சுத்தமா புரியாது.” என்று சற்று அவனை விட்டு விலக முற்பட, அவள் மனதை நன்கு புரிந்து கொண்டவன், தன்னவளின் நொடி பொழுது விலகலைக் கூடத் தாங்காது, தள்ளி செல்ல முன்னைந்தவளைத் தன் மார்போடு இன்னும் நெருங்க அணைத்துக்கொண்டு, 

“ஜாப் கிடைச்சு, சம்பளம் வாங்கின அடுத்தநாளே என் அம்மாவோட உன் வீட்டுக்கு வருவேன்.” என்று அவன் கூறியதும், அதுவரை தலை கவிழ்ந்திருந்தவள் சட்டென்று நிமிர்ந்து திரும்பி அவனது முகத்தைப் பார்த்தவாறே,

“என் வீட்ல ஒதுக்கலைனா?” என்று தன் கண்களை உருட்டியவாறு கேட்க, அதை ரசித்தவன் அவளது நெற்றியில் முட்டியவாறே, 

“அத்தனை பேருக்கும் முன்னாடி வந்து உன்னை அப்படியே தூக்கிட்டு போயிருவேன்.” என்று கூறி தன் புருவம் உயர்த்தி, ‘ஓகேவா’ என்பது போல பார்க்க, அவனது வதனத்தில் இதழ் பதித்தவள், “அதுக்கு அவசியம் இல்லை, நான் எப்பவுமே உனக்குத்தான்.” என்றவாறு அவனது மார்போடு ஒட்டிக்கொண்டாள். 

ஒரு ஆடவனுக்குத் தன் காதலியிடம் இருந்து வேறு என்ன வேண்டும்? 

‘நான் உனக்குத்தான்’ என்ற வார்த்தையில் சொர்க்கத்தையே உணர்ந்தான் ஆஷிக்.

***

நினைவுகள் முடித்த பிறகும், “நான் எப்பவும் உனக்குத்தான்” என்னும் வரிகள் அவனது காதில் ரீங்காரமிட, வறட்டு புன்னகையோடு பெருமூச்சு விட்டவன், அவள் பரிசளித்த அதே ஷர்ட்டை தன் கரத்தால் ஏக்கம் தளும்ப வருடியவன், அதை கட்டில் மீது வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றான். 

ஆயிஷாவின் இல்லத்தில் ஏற்பாடுகள் எல்லாம் ஜோராக நடந்துகொண்டிருக்க, தன் சித்தி கூறியதையே நினைத்துக்கொண்டு உள்ளே வந்த ஜியாவைக் கண்ட ஹாஜரா, “ஜியாமா வாடா, வந்திட்டியா? என்னடா முகம் ஏன் வாடி போய் இருக்கு?” என்றவர், அவள் பதில் கூறுவதற்குள், “ட்ராவல் பண்ணினது உடம்புக்கு அசதியா இருக்கோ?” என்று பதிலையும் கூறிவிட அவரிடம் புன்னகைத்தவாறே,

“அதெல்லாம் இல்லமா, சும்மா யோசிச்சுட்டு இருந்தேன். சரிமா, ஆயிஷா எங்க?” என்று கேட்க,

“அவ ரூம்ல தான்டா இருக்கா, போய் பாரு.” என்றவர் ஜியாவிடம்,

“அப்படியே மாடிக்கு போகும் பொழுது இந்த டிஃபன ஆஷிக்கிட்ட குடுத்திருமா, அவன் இன்னும் ஒன்னும் சாப்பிடல.” என்றவரிடம் மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியாமல்,

சிறு தயக்கத்துடன் வாங்கியவள், ‘இவன் ரூம்குள்ளையா போகணும்? ச்ச…’ என்று தன் மனதிற்குள் எண்ணியவாறு அவன் அறைக்குள் நுழைய, 

அவன் அங்கே இல்லாததை உணர்ந்தவள் நிம்மதி அடைந்தவளாய், தட்டை அவனது டேபிளில் வைத்தவள் அங்கிருந்து செல்ல போக, அப்பொழுது கட்டிலின் மேல் இருந்த ஷர்ட் அவளது பார்வைக்குப் பட, அவளுக்கு அதைப் பார்த்ததும் கடந்த காலச் சுப நினைவுகள் எல்லாம் ஞாபகத்திற்கு வர, 

கூடவே தன் காதல் முறிந்து போனதற்கான காரணமும் தொத்திக்கொள்ள, கோபத்தில் அந்த ஷர்ட்டை எடுத்து அதில் இருந்த ஒவ்வொரு பட்டனையும் பிய்த்து எடுத்தவள் அதைத் தன் கைகளால் கசிக்கொண்டிருந்த நேரம், பாத்ரூமில் இருந்து தன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன், சட்டையைக் கசக்கிகொண்டிருந்ததைப் பார்த்து அவளது அருகில் வந்து, 

“ஏய் என்ன பண்ணிட்டு இருக்க? நான் போடணும்னு வச்சுருந்த ஷர்ட்…” என்று கோபமாய் கேட்க,

“போட வேண்டாம்னுதான் இப்படிப் பண்ணினேன்.” என்று ஆக்ரோஷமாக அவள் கூற,

“இது எந்த ஷர்ட்டுனு தெரியுமா?” என்று புருவம் உயர்த்தியவனிடம்,

“வாவ்! பரவாயில்லையே, இன்னும் ஞாபகம் இருக்கு போல? நான் கூட என்னைத் தூக்கி எறியும் போது இதையும் சேர்த்து எறிஞ்சிட்டனு நினைச்சேன்.”

“என்னை நான் தூக்கி எறிஞ்சேன், என்ன உளர்ற?”

“உண்மைய சொல்றேன், ஆமா இது எப்படி உன்கிட்ட? குடுத்ததை வாங்கிட்டியா, எதுக்கு வாங்கின? ஓ… இப்போ புரியுது என்னை எப்படி எல்லாம் ஏமாத்தினோம்னு ஞாபகர்த்தமா இதை வச்சு அப்போ அப்போ பார்த்து ரசிக்க, சரியா சொன்னேனா?”

“ஜியா என்ன சொல்ற, எனக்கு ஒன்னும் புரியல.”

“புரியாது… எப்படி புரியும்?” என்று மீண்டும் அவனைத் தன் வார்த்தையால் காயப்படுத்த,

“ஆமா எனக்கு எதுவும் புரியாது, முதல்ல வெளியில போ.” என்று பதிலுக்கு அவனும் கோபமுற, தன் கையில் இருந்த ஷர்ட்டை தூக்கி வீசியவாறு அவள் அங்கிருந்து செல்ல, அவளது கோபத்திற்கான காரணம் விளங்காது மிகவும் மன வேதனை கொண்டான். 

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!