காதல்- 27

காதல் -27 
 

 

நண்பர்கள் இருவரும் சண்டை போடுவதை பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர்.

“இன்பா என்ன செய்ற, சூர்யாவை விடு” என்று மீண்டும் அடிக்க போனாவனை தடுத்து நிறுத்தினாள் கீதா.

“விடு கீதா அடிக்கட்டும் அண்ணா அடிச்சது சரி தான். இவன் யாரு உன்னை அடிக்குறதுக்கு. இவனுக்கு என்ன தகுதி இருக்குடி கோபம் வந்தா யாரு என்னன்னு தெரியாதா?. அன்னிக்கு ராஜா அண்ணா என்னை தெரியாம ஒரு அடி அடிச்சதுக்கே நண்பன்னு கூட பார்க்காமல் கையை நீட்டினாரு. ஆனா, நீ இவங்களை சேர்க்கன்னும்னு நினைச்சதுக்கு இவரு உன்னை அடிப்பாரா” என்று ஆத்திரம் பொங்க பேசியவளின் வார்த்தையில் மொத்தமும் உடைந்து போனான் சூர்யா.

தன் நண்பன் அடித்த வலி மன வேதனையாக ஒரு பக்கம் இருக்க, ரம்யா கூறியா இவன் யாரு என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்தது.  உடைந்து அப்படியே தரையில் அமர்ந்தான் சூரியா.

கீதாவை வேண்டுமென்றே அவன் ஒன்றும் அடிக்கவில்லையே. அவன் உயிரில் ஒரு பாதியாக இருக்கும் ராஜாவிற்கு ஆபத்து என்று பொய்யாக கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அடித்தான்.

இருந்தும் தான் செய்தது எவ்வளவு பெரிய தப்பு என்று உணர்ந்தவன், குற்ற உணர்ச்சியில் வேகமாக எழுந்து அங்கே இருந்து சென்றுவிட்டான்.

கலங்கிய விழியோடு சூரியா போவதை பார்த்த கீதா இன்பாவின் கண்ணத்தில் பளார் என்று அறை விட்டாள்.

இதை எதிர்ப்பார்க்கதா இன்பாவும் ரம்யாவும் திகைத்து போயினர்.

ரம்யாவோ “ஏய் லூசாடி நீ? இப்ப எதுக்கு அண்ணாவ அடிச்ச? கிறுக்கு புடிச்சிடுச்சா உனக்கு?” என்று கேட்கும் தோழியை முறைத்து பார்த்து,

“வாயை மூடு ரம்யா” என சொன்னாள்.

ராஜாவிடம் திரும்பி “டேய் உனக்கு அறிவு இருக்கா?. உன் நண்பனையே கை நீட்டி அடிச்சு இருக்க?. நீயெல்லாம் என்ன ப்ரெண்டுடா. ச்சீ வெக்கமா இல்ல, அவரு என்னை அடிச்சாருன்னா அதுக்கு காரணம் உன் மேல இருக்குற பாசம். நான் சொன்ன ஒரு சின்ன பொயில சூர்யா எந்த அளவுக்கு துடிச்சு இருப்பாருனு உனக்கு புரியல. நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக அவரு உயிரை விட துணிந்தவர். அவரை போய் ச்ச.. இங்க பாரு இன்பா நீயாவே சூர்யா கிட்ட போய் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகுற வரை நான் உன் கூட பேச மாட்டேன்டா. இது உன் மேல சத்தியம்”  என்று தன்னவனின் பதிலுக்காக கூட காத்திருக்காமல் சென்றவளை தடுத்து நிறுத்த போராடி சோர்ந்துப் போனாள் ரம்யா.

நட்புக்குள்ளே ஒரு பிரிவு ஒன்று வந்தது, ஏன்னென்று அது புரியவில்லை.

நெஞ்சிக்குள்ளே ஒரு வலி இங்கே வந்தது, ஏன்னென்று அது தெரியவில்லை.

அந்த நேசம் இந்த பாசம் நட்பை போல.. எங்கும் எதும் உயர்ந்ததில்லை..

வாழ்க்கை அது எங்கே சேர்ந்து முடியும். யாரும் அதை அறிந்தது இல்லை.. காதல் வலி அது தெரியவில்லை.. நட்பின் வலி அது புரியவில்லை..

இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்க, இன்பவால் இந்த தனிமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் நண்பனிடமும் பேசாமல், தன்னவளின்  பிரிவையும் தாங்க முடியாமல் பொறுமையை இழந்து சூர்யாவிடம் சென்றான்.

“ராஜா இந்த டைம்ல எங்க போற” என சுந்தர் கேட்க, தன் நண்பனை பார்க்க செல்வதாய் சொல்லி விட்டு சென்றான்.

“இந்த நைட் டைம்ல அப்படி என்ன ப்ரெண்டை பார்க்க வேண்டியது இருக்கு” என்று புலம்பிக்கொண்டு தூங்க சென்றார் அவர்.

சூரியாவின் வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டு இருந்த ராஜாவை பார்த்து,

“வாப்பா ராஜா, எப்படி இருக்க. எங்களலாம் ஞாபகம் வச்சி இருக்கியா?. வீட்டு பக்கமே வரவே மாட்டிங்குற. என்னப்பா இந்நேரத்தில் வந்து இருக்க, ஏதாவது பிரச்சனையா” என்று சூர்யாவின் அன்னை வள்ளி  கேட்டார்.

ராஜாவோ சங்கடத்துன் “அப்படி எல்லாம் எதுவும் இல்லை அம்மா. டைம் கிடைக்கல அதான் வர முடியல. சூர்யா எங்கமா? அவனை பார்த்து ஒரு விசயம் பேசணும்மா அதான் இந்த நேரத்துல வந்தேன். ஏன்மா நான் இந்த டைம்ல வர கூடாதா” என்று தன் பேச்சு திறமையில் அன்னையை சமாளித்து தன் நண்பனை பார்க்க விரைந்தான்.

நிதானம் இல்லாமல் மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்தவனை தட்டி எழுப்பி பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.

இதுவரை இல்லாத பழக்கம் எப்பவும் இருக்க கூடாத பழக்கத்தை கற்றுக்கொண்டு தன் சுயநினைவை இழந்து போதையில் உளறிய தன் நண்பனை பார்க்கும் போது தன் மேலே கோபம் உண்டானது ராஜாவுக்கு.

போதை மயக்கத்தில் இருந்த சூரியாவோ “மச்சி வாடா வா. எனக்கு தெரியும் மச்சி உன்னால என்கிட்ட பேசாமல் பார்க்காமல் சண்டை போடாமல் இருக்க முடியாதுனு தெரியும் மச்சி. ஆனா என்ன நீ அடுத்த நாளே வருவேனு நினைச்சேன்டா. தப்பு தான் என் மேல தப்பு தான், நான் கீத்து வா, அடிச்சு இருந்து இருக்க கூடாது. ஆனா, மச்சி நீ ஒரு விசயத்தை யோசிக்கவே இல்லைடா. உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால தாங்கிக்க முடியாதுடா. அது விளையாட்டுக்கா இருந்தா கூட மச்சி, நீ இல்லனா நான் இல்லைடா”.. என்று போதையில் சூர்யா உளறினாலும் உண்மையை தான் உளறினான் என்று இன்பராஜாவிற்கு தெரிந்தது.

ராஜாவோ ‘நான் ஒரு நிமிசம் நிதானமா இருந்து இருக்கணும். கோபம் கண்ணை மறைச்சிடும்னு சொல்றது எங்க வாழ்க்கையில் உண்மையாயிடிச்சு’ என தன் மனதில் நினைத்தவன்.

“டேய் எழுந்திருடா. என்ன கருமத்தை குடிச்ச சூரியா. இப்படி நாத்தம் அடிக்குது. எப்போல இருந்து இந்த பழக்கம். அம்மாக்கு தெரியுமாடா” என்று கேட்டான்.

“உஸ்ஸ் சத்தமா பேசாதடா. அம்மாக்கு தெரியாது. தெரிஞ்சா பாவம் கஷ்டப்படுவாங்க. இதே இந்த ஒரு வாரமா தான்டா. கஷ்டத்தையும் வலியையும் மறைக்க எனக்கு வேற வழி தெரியல மச்சி” என்று அழுத நண்பனை கட்டிக் கொண்ட சூரியா,

“ஏன் மச்சி நமக்குள்ள சண்டை வந்தது. நீயும் என் கிட்ட பேசுறத நிறுத்திட்ட. என் ரம்யா ரம்மி என்ன பார்த்த கூட முகத்தை திருப்பிக்கிட்டு போயிடுறாடா. அவள நான் எந்த அளவுக்கு காதலிக்கிறேனு தெரியும்லடா உனக்கு. ஆனா, அவ இன்னும் என் கிட்ட காதலை கூட சொல்லாமல் கண்ணாமூச்சி ஆடுறடா” என்று போதையில் பிதறியதை கேட்ட ராஜாவுக்கு அதிர்ச்சி தான்.

“என்னடா சொல்ற இன்னும் ரம்யா உன் கிட்ட லவ்வை சொல்லலையா. அடாபாவி அப்ப இத்தனை நாளா என்கிட்ட இருந்து மறைச்சிட்டியா” என்று கேட்டான்.

“நான் எப்படா மறைச்சேன். நான் தான் எதுவுமே உன்கிட்ட சொல்லலையே. சரி அத விடு கீத்து கிட்ட சாரி கேட்கணும். வா அவ வீட்டுக்கு போலாம்” என தள்ளாடி எழுந்தவன் மறுபடியும் தொப்பென்று கட்டிலில் விழுந்தான்.

“டேய் சூர்யா, நீ முதல்ல படுத்து தூங்கு. நாளைக்கு காலையில போய் பேசிக்கலாம் சரியா”.

“இல்ல மச்சி நான் இப்பவே சாரி கேட்கணும்” என்று போதையில் அடம்பிடித்தான் சூரியா.

“டேய் நான் தான் சொல்றேன்ல. வா தூங்கு. இப்ப நீ நிதானத்துல இல்ல. போதை தெளியட்டும். அப்பறம் பேசிக்கலாம். இப்ப அங்க போனா அவங்க அப்பா இருப்பாரு தேவையில்லாத பிரச்சனை வரும்” என்று எப்படி எப்பாடியோ சமாதானம் செய்ய முயன்றான்.

“மச்சி அப்பானு சொன்ன உடனே தான்டா ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது” என்று வெகு தீவிரமாக எழுந்து போதையில் சொன்னவனை பார்த்து,

“என்னடா” என்று கேட்டான் ராஜா.

சூரியாவோ “மச்சி எல்லா விசயத்தையும் அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டு அவரோடா விருப்பப்படித் தான் செய்யுற. ஒரு வேலை அவங்க அப்பாக்கு உன்னை பிடிக்காமல் போச்சுனா என்னடா பண்ணுவ” என்று உளறியவனை,

“சூர்யா அமைதியா படுத்து தூங்கு” என அவனை தூங்க வைக்க முயற்சி செய்தாலும் சூர்யா விடுவதாக இல்லை.

அவனோ அடுத்தபடியாக “அப்படியே உனக்கும் கீத்துக்கும் அவங்க அப்பா விருப்பப்படி  கல்யாணம் ஆச்சுனா கூட”என சொல்லியவன் ராஜாவின் உடையை பிடித்து இழுத்து “மச்சி மச்சி கிட்ட வாயேன்” என அழைத்தான்.

இன்பாவும் புருவங்கள் சுருக்கி அவன் அருகில் நெருங்கினான்.

அப்போது அவன் காதில் “அப்ப மச்சி மத்த எல்லா விசியத்தையும் அவங்க அப்பா கிட்ட கேட்டு தான் செய்வ” என்று சொல்ல வந்தவனை வாயை பொற்றி படுக்க வைத்தான். அப்படி இருந்தும் சூர்யா தொடர்ந்தான். 
“அய்யோ நான் சொல்ல வந்ததே வேறடா அதாவது” என்று ஆரம்பிக்க.

“டேய் நீ ரொம்ப ஓவரா போற. எதுவும் சொல்ல வேண்டாம் தூங்கு” என்று அதட்டினான்.

அவனோ விடாமல் “மச்சி ராஜா உன்னால கீத்துவ உன் இஷ்டப்படி எதுவும் செய்ய வைக்க முடியாதுடா. அவங்க அப்பா சொன்னா மட்டும் தான் அவ செய்வா. வேண்ணும்னா பாரு நீ போய் அவ கிட்ட உனக்காக ஒரு விசயத்தை அவங்க அப்பாக்கு தெரியாமல் பண்ண சொல்லு பார்க்காலம். முடியாதுடா உன்னால முடியாது, எப்படி இருந்தாலும் உனக்கும் கீத்துக்கும் கல்யாணம் ஆக தான் போகுது. ஆனா அதுக்கு முன்ன உன்னால கீத்து அப்பாக்கு தெரியாமல் கீதாவ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்காட்டு பார்க்காலம்” என்று உளறிக் கொண்டே தூங்கியும் போனான் சூர்யா.

பாவம் அவன் அப்போது அறியவில்லை போதையில் பேசிய வார்த்தைகளால் தன் நண்பனின் வாழ்க்கையை அடியோடு மாற்ற போவதை உணராமல் தூங்கிக் கொண்டு இருந்தான்.

இன்பவால் தான் உறங்க முடியாமல் தன் நண்பனையும் இப்படி விட்டும் போகவும் முடியாமல், தன் நண்பன் சொன்ன வார்த்தையே மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ராஜாவின் மனமோ ‘என்ன தான் இவன் போதையில் சொல்லி இருந்தாலும் சூர்யா சொல்வது உண்மை தானே. இதுவரைக்கும் அவங்க அப்பாகிட்ட சொல்லாமல் கீத்து எதுவும் செய்தது இல்லை. அதுவும் எனக்காக அவள் தனிப்பட்ட முறையில் எதுவும் பண்ணியதில்லை. ஒரு சின்ன விசயமா இருந்தா கூட, அவர் விருப்பப்படி தான் நடக்கும். ஆனா இந்த விசயம் என் விருப்பப்படி தான் நடக்கணும். நடந்தே ஆகணும் அதுக்காக நான் அன்பு மாமா மேல பாசம் இல்லைன்னு சொல்ல முடியாது. அவரு மேல நான் கீத்துவ விட அதிகம் பாசம் வச்சி இருக்கேன். ஆனா, அட்லிஸ்ட் ஒரு விசயமாவது என் விருப்பப்படி  நடக்கணும். அப்ப தான் என் அப்பாவும் அமைதியா இருப்பாரு” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு தன் நண்பனின் அருகில் படுத்து உறங்கி போனான் ராஜா.

மறுநாள் காலை வேளையில் “அய்யோ தலைவலி தாங்க முடியல” என்று தலையை பிடித்துக்கொண்டு இரவு என்ன நடந்தது என்று யோசனை செய்தவன் அறை முழுக்க தன் நண்பனை தேடினான்.

“ச்சா எல்லாம் கற்பனையா? நான் கூட என்னை தேடி தான் உண்மையாவே வந்துட்டானு சந்தோஷப்பட்டேன். ச்சீ என்ன கருமத்தை குடிச்சேனு தெரியில. தலை இப்படி வலிக்குது கற்பனையெல்லாம் உண்மையா நடக்குது. இதோ இப்ப கூட இந்த ராஜா பையன் என் கண்ணு முன்னாடி எனக்கு லெமன் ஜீஸ் எடுத்துட்டு வர இருக்குற மாதிரி இருக்கு” என சொன்னவனின் கையைப்பிடித்து கிள்ளினான் ராஜா.

உறக்கம் சரியாக வராமல்  அதிகாலையிலே உடற்பயிற்சி முடித்து வர, ஏழு ஆகியதால் தனக்கு ஒரு காபியும் தன் நண்பனுக்கு லெமன் ஜூஸையும் எடுத்து வந்தவனை பார்த்து தான் கற்பனை என்று உளறியவனை கிள்ளினான் இன்பா.

“ஆஆ.. வலிக்குதுடா. என்ன கற்பனை கிள்ளலாம் செய்யுமா” என்று தேய்த்தபடி கேட்டான்.

“ம் கற்பனை கிள்ளாதுடா. அடிக்க தான் செய்யும்” என்று சூர்யாவின் முதுகில் ஒரு தட்டு தட்டி காபியை குடுத்தான்.

“டேய் வலிக்குதுடா, ஆமா நீ எப்போ வந்த. என்னை எழுப்பி இருக்கலாம்ல” என லெமன் ஜூஸை வாங்கி குடித்துக்கொண்டே தன் நண்பனின் தோளில் கையைப் போட்டு பேசியவனை ஆச்சரியமாக பார்த்தான் இன்பா.

“என்னடா அப்படி பார்க்குற. என் முகத்துல உன் கீதா முகம் தெரியுதா? என்ன பார்த்து அவனு  நினைச்சு என் உதட்டுல முத்தம்  குடுத்துட போற” என கிண்டல் செய்து கொண்டே பாத்ரூமுக்கு சென்றவனை தடுத்து,

“நான் நேத்து நைட் வந்தேன்டா. எப்போ இருந்துடா இந்த பழக்கம். அம்மாக்கு தெரிஞ்சா அவங்க மனசு எப்படிலாம் கஷ்டப்படும்” என்று இன்பா கேட்டான்.

அமைதியாக நின்ற சூரியாவை மீண்டும் கேள்விக் கேட்டு கஷ்டப்படுத்த தோன்றாமல் தன் நண்பனை கட்டிப்பிடித்து,

“சாரிடா மச்சி, நான் அன்னிக்கு யோசிக்காமல் கையை நீட்டிட்டேன்டா. இனிமேல் நமக்குள்ள சண்டை வராமல் பார்த்துக்கிறேன்டா சாரிடா.” சூர்யா என்று இன்பா கூறினான்.

சூர்யாவும் அவனை கட்டிக்கொண்டு அழுது “நான் நிதானத்தை இழந்து இருக்க கூடாதுடா. பாவம் சின்ன பொண்ண அடிச்சிட்டேன். கீதாக்கிட்ட சாரி கேட்கணும்டா” என்று சிறுது நேரம் பேசி முடித்து இருவரும் காலேஜுக்கு கிளம்பினார்கள்.

அடிக்கடி சூர்யா வீட்டில் இருந்தே இன்பா செல்வது வழக்கமானது என்று வள்ளிக்கு தெரிந்தத்தால் இருவருக்கும் சேர்த்தே காலை உணவு தயார் செய்ய வேலையாளிடம் உத்தரவு வழங்கினாள்.

காலை உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பியவர்களை நிறுத்தி,

“சூர்யா, நான் ஊருக்கு போறேன்டா. வர ஒன் வீக் ஆகும். நீ சமாளிச்சுப்பல. ராஜா நீ இவன் கூடவே இந்த ஒன் வீக் இருக்கியா?.”

“அம்மா, நான் என்ன சின்ன பிள்ளையா? நான் பார்த்துக்கிறேன். அப்புறம் நீங்க என்னவோ இப்ப தான் புதுசா ஊருக்கு போற மாதிரி சொல்றீங்க. எப்பவும் நடக்குறது தானே.” என்று இறுக்கமாக பேசிய சூரியாவை அடக்கினான்.

“டேய் சும்மா இருடா,  அம்மா நான் சூர்யாவ பார்த்துக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க.” என்று மென்மையாக கூறினான்.

“அதுக்கு இல்லப்பா நான் ஊருல இருந்து வர ஒன் வீக் மட்டும் ஆகும்னு சொல்ல முடியாது. எத்தனை நாள் ஆகும்னு தெரியல. இவங்க அப்பா இறந்து பல வருஷத்துக்கு அப்புறம் இவங்க பாட்டியை பார்க்க போறேன் அதான் எத்தனை நாள் ஆகும்னு சொல்ல முடியாதுப்பா”. என்று வருத்ததுடன் கூறினார்.

தன் தந்தையின் நினைவில் முகம் வாடினாலும் தன் அன்னைக்காக சிரித்துக்கொண்டு “நான் பார்த்துக்கிறேன்மா. ராஜாவும் என் கூட தான் இருப்பான்” என தன் தாயை சிரிக்க வைத்த பிறகே கல்லூரிக்கு சென்றனர்.

காலேஜில் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த கீதாவும் ரம்யாவும் மிகவும் சந்தோஷமாக அவர்களிடம் சென்றனர்.

“ஹாய் அண்ணா எப்படியோ இரண்டு பேரும் ஒன்னா  சேர்ந்துட்டிங்க.இப்ப தான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ரம்யா சொல்ல.

கீதாவிடம் திரும்பி மன்னிப்புக் கேட்டான் சூர்யா. ரம்யாவுக்கோ சூரியாவின் பாரா முகம் வலிக்க செய்தது அவளுக்கு.

ஆசையாய் அவனிடம் பேச வந்தவளை வேண்டும் என்றே ரம்யாவை தவிர்த்து கீதாவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

அதே போல் இன்பாவும் தன்னவளின் புறம் கூட திரும்பாமல் ரம்யாவிடமும் சூர்யாவிடமும் பேசிவிட்டு இருவரும் கிளாஸ் ரூமுக்கு சென்றனர்.

கீதாவுக்கு கோபம் வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மனசுக்குள்ளே தன்னவனை வாட்டி வதக்கி கொண்டு இருந்தாள்.

‘என்ன திமிரு ஒரு வார்த்தை பேசி இருக்கலாம். இல்ல ஒரு பார்வை பார்த்து இருக்கலாம். ஒரு வாரமா இவனை பார்க்காமல் பேசாமல் நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும் வீட்டுக்கு போகும் போது வச்சிக்கிறேன்’ என தன் மனதில் தன்னவனுக்கு அர்ச்சனை செய்தாள் கீதா.

ரம்யாவின் மனதிலும் இதே தான் ஓடிக் கொண்டு இருந்தது.  இருவரும் கிளாஸை கவனிக்காமல் அவர் அவர் சிந்தனையில் முழ்கினார்கள்.

ரம்யாவிடம் இருந்து இனிமேல் நான் தள்ளி இருப்பது நல்லது என  சூர்யா இருக்க..

கீத்துவிடம் தனக்கென்ன பதில் தெரியாமல் இனி தன்னவளிடம் பேசபோவது இல்லை என்று நினைத்து இன்பா இருக்க மாலைபொழுதும் வந்தது.

அவர்களை தேடி வந்த கீதா “சூர்யா நான் இன்பா கிட்ட தனியா பேசணும். கோவிச்சிக்காம நீங்க தனியா வீட்டுக்கு போறீங்களா? ப்ளீஸ்” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசியவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது சூர்யாவுக்கு.

“ஏம்மா நான் என் ஆளு கிட்ட பேசணும். நீ தள்ளி போன்னு சொன்னா போக போறேன். அதுக்கு எதுக்குமா ப்ளீஸ்லாம் சரி போங்க” என்று இன்பாவின் கையில் கார் கீயை கொடுத்தான் சூரியா.

அவனுக்கும் கீதாவிடம் தனியாக பேச வேண்டும் என்று தோன்ற அமைதியாக காரில் ஏறினான்.

கார் சென்றதும் “இப்ப நம்ம எப்படி போகறது” என யோசனை செய்தவனை, ரம்யா தன் ஸ்கூட்டியில் வர சொல்லி அழைக்க அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் டாக்சியை அழைக்கலாம் என்று போனை எடுக்க பாக்கெட்டில் கை வைத்தான்.

“போச்சிடா” என்று தலையில் அடித்துக்கொண்டான். அவன் காரை திறந்து தன் போனையும்  பர்ஸையும் காரில் வைக்கும் போது சரியாக கீதா அழைக்க, அதை திரும்பி எடுக்க மறந்தபோனான்.

இதை வாய்விட்டு கூறியவன் ரம்யாவை பார்த்தான்.

அவளோ ‘உனக்கு வேற வழி இல்லை தம்பி. நீ என் கூட தான் வந்து ஆகணும் என்பது போல் திமிராக பார்த்தாள்.

‘இவளுக்கு திமிரா எல்லாம் பார்க்க தெரியுமா’ என்று மனதில் சூர்யா ரசிக்க. ‘ச்சீ..மானக்கெட்ட மனசு’ என்று தன்னை தானே நொந்துக்கொண்டு கல்லூரியின் வாசலை தான்டியவனின் மேல் ஒரு கார்க்காரன் சூர்யாவின் மேல் சகதியை வாரி இறைத்துவிட்டுச் சென்றான்.

இதை பார்த்த ரம்யா அந்த அண்டவனே, ‘நம்ம பக்கம் தான் இருக்கான்’ என்று மனதில் சிரிக்க, அவளின் கண்ணும் முகமும் அப்பட்டமாக வெளிக் காட்டியது.

ரம்யாவின் இந்த முக மாற்றத்தை சூர்யாவால் ரசிக்காமல் இருக்க  முடியவில்லை. ‘வேற வழியில்லை. இவ கூட தான் போய் ஆகணும், கையில் பணம் கூட இல்லை” என யோசனை செய்தவனின் முன்னால் வண்டியுடன் வந்து நின்றாள் ரம்யா.

வேறு வழியின்றி வண்டியில் ஏறி அமர்ந்து வீட்டுக்கு போகும் வழியை சொன்னான். அரைமணி நேரத்தில் சூர்யாவின் வீட்டு வாசல் முன் நின்றவள்,

வாயை பிளந்து கண்களை விரித்து பார்த்தவளை  பார்க்கும் போது ரசித்தாலும் வாய் விட்டு சிரிக்கவே செய்தான்.

ரம்யாவும் தன்னை நினைத்து வெட்கப்பட்டு முகத்தை மறுப்பக்கம் திரும்பியவள் கல் தடுக்கி கீழே விழ போக சூர்யா அவளின் ஒற்றை கையை பிடித்து தன் பக்கம் இழுத்து தன் நெஞ்சோடு முட்டி மோதி நிற்க வைத்தான்.

அவன் சட்டையில் இருந்த சகதி பாதி ரம்யாவின் துணி மேல் ஒட்டியதை கூட கவனிக்காமல் சூர்யாவின் கண்களை பார்த்து வெட்கப்பட்டு கீழே குனிந்தவள் தன் சுடிதாரில் சகதியை பார்த்தவள் சூர்யாவை முறைத்தாள்.

‘என்னடா இவ்வளவு நேரம் ஆசையை பார்த்தவ இப்ப முறைக்குற’ என்று ரம்யாவை பார்த்தவன் அப்போது தான் அவள் ஆடையை கவனித்தான்.

“சாரிடா சாரி, நீ கீழே விழ போனீயா. அதான் உன்னை இழுக்கும் போது இப்படி ஆகிடிச்சு. உள்ளேவா வந்து கிளீன் பண்ணிட்டு போமா” என்றான் சூர்யா.

ஒரு வாரம் கழித்து அவளிடம் சூரியா பேசியதில் உள்ளம் குளிர்ந்தவள் அவன் வீட்டிற்குள் சென்றாள்.

அப்போது தான் கவனித்தாள் அங்கு வேறு யாரும் இல்லை என்று.

அதன் பின் சூர்யாவிடம் விசாரிக்க அம்மா ஊருக்கு போய் இருப்பதையும் அம்மா இல்லாத சமயத்தில் வேலையாட்களுக்கு லீவ் கொடுத்து அனுப்பி விடுவதையும் சொல்லிக்கொண்டே சூர்யாவின் அறைக்கு சென்றவனின் பின்னால் கொஞ்சம் பயத்தோடும் பதற்றத்தோடும் வந்தவளை பார்க்கும் போது வாரி அணைத்து நான் இருக்கிறேன், என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்திக் கொண்டு

“இது என் ரூம் தான். நீ போய் கிளீன் பண்ணிக்கோ. நான் பக்கத்து ரூம்ல இருக்கேன்.” என்று போனவனை தடுத்து,

“இல்ல நான் வீட்டுக்கு போறேன் என் கிட்ட மாத்து துணிக்கூட இல்லை” என ரம்யா கூறினாள்.

அதை கேட்டவன் சட்டென்று “ஒரு நிமிசம் இரு” என்று அவன் அன்னையின் அறைக்கு சென்று புடவையை ஒன்று எடுத்து வந்து ரம்யாவிடம் கொடுத்து “உன் துணி காயுறவரை இதை கட்டிக்கோ. இது என் அம்மாவோட புது புடவை தான்” என்று அவள் கரத்தில் திணித்து விட்டு பக்கத்து அறைக்கு சென்றான்.

சூர்யா சென்றதும் கதவை லாக் செய்தவள், அது சரியாக பூட்டப்பாடமல் இருப்பதை கவனிக்க தவறினாள் ரம்யா.

குளியலறைக்கு நுழைந்து  குளித்துவிட்டு தன் துணியை  சுத்தம் செய்துக்கொண்டு அறையில் புடவையை கட்டிக்கொண்டு அந்த அறையை பார்த்தவள் வாய் அடைத்து போனாள்.

‘நம்ம வீட்டு அளவுக்கே இந்த ரூம் இருக்கு. பாத்ரூம் நம்ம வீட்டு சமையலறை அளவுல இருக்கு. கண்டிப்பா சூர்யாவுக்கும் தனக்கும் செட் ஆகாது’ என்று மனதில் நினைத்து புடவைக்கட்டினாள்.

அதற்குள் சூர்யாவும் குளித்துவிட்டு இடுப்பில் துண்டோடு வந்தான்.

“நம்ம துணியா கூட எடுக்காமல் வந்துட்டோமே. இப்படி நம்மளை ரம்யா வெறும் டவுலுடன் பார்த்தா, மிச்சம் மிதி இருக்கிற நம்பிக்கை கூட போய்டும். எப்படி இருந்தாலும் பெண்களுக்கு பாத்ரூமில் இருந்து வெளிய வர லேட் ஆகும். சோ ரம்யா வெளியே வரவும் லேட்டாகும். அதுக்குள்ள நம்ம போய் துணியை எடுத்துட்டு வந்திடலாம்” என்று தன் அறையை நோக்கி சென்றான்.

அங்கு கதவு பாதியாக திறந்து இருப்பதை பார்த்து “அப்பாடா, ரம்யா ரூம்ல இல்லை. அப்ப அவ எங்க போய் இருப்பா? ஒரு வேல கீழே போயிருப்பாளோ?” என்று அவன் அறையிலுள் சென்று கதவை லாக் செய்துவிட்டு திரும்பியவன் சற்று திகைத்து தான் போனான்.

ரம்யா பாதியாக கட்டிய புடவையில் கதவு சாத்தும் சத்தம் கேட்டு எட்டி பார்த்தவள் வெளவெளுத்து போனாள்.

சூர்யாவுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

ரம்யாவோ பதற்றத்துடன் “எ..ன்..ன..வேணும் சூர்யா” என்று புடவை வாரி சுருட்டிக்கொண்டு திக்கி தினறி பேசியவளின் அழகில் சொக்கித்தான் போனான் சூரியா.

சில நிமிடங்ள் அவளை ரசித்தவன் மனமோ இது தப்பு என்று எடுத்துரைத்தது. பின் அவளிடம் “என் துணியை எடுக்க வந்தேன். கதவு திறந்து இருக்கவே, நீ இல்லைனு நினைச்சு வந்துட்டேன் சாரி ரம்மி.” என்று தன்னிலையை விளக்கினான்.

ரம்யாவோ “அது வந்து, நான் கதவ லாக் பண்ணிட்டு தான் குளிக்க போனேன். நீங்க எப்படி வர முடியும்” என்றாள் சந்தேகத்துடன்.

சூரியாவோ அடுத்த நொடியே “சத்தியமா சொல்றேன் கதவு லாக் ஆகலடி. அப்படி லாக் ஆகி இருந்தா நான் எப்படி உள்ள வர முடியும். நீயே யோசிச்சு பாருடா” என சூர்யா சொல்ல அவளும் தன் மேல் தான் தப்பு என்று நினைத்து சூர்யாவை பார்த்தாள்.

படர்ந்த இருந்த உடலமைப்பு. ஆப்பிள் பழம் கலர். நேர்த்தியான உடற்கட்டு தண்ணீர் சொட்டிக் கொண்டு இருக்கும் கேசம் என்று அவனை அப்பட்டமாக ரசித்தாள் ரம்யா.

அவனோ தன் கைககளை மார்ப்புக்கு நடுவில் கட்டிக்கொண்டு “ரசிச்சிட்டியாடி? நான் என் துணியை எடுத்துட்டு போவா” என்று அவளை குறும்பாக பார்த்து கேட்டான்.

அவளோ தலையில் தட்டிக் கொண்டு வெட்கப்பட்டாள். அதில் அவளின் முகம் முழுவதும் வெட்கத்தில் சிவக்க மொத்தமாக தன்னிலையை இழந்தான் சூர்யா.

‘இதற்கு மேல் இங்கு இருந்தால் தன்னை தானே கட்டுப்படுத்த முடியாது”. என்று எண்ணியவன் கப்போர்டை திறந்து தன் துணியை எடுத்துக்கொண்டு திரும்பியவன் கால் ரம்யாவின் புடவையில் வைத்து வழுக்கி விட, அதில் அவளையும் சேர்த்துக் கொண்டு மெத்தையில் விழுந்தான் சூரியா.

அதில் திகைத்து போன ரம்யாவோ சூர்யாவின் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில்  சூர்யாவின் நெஞ்சிலே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

ஏற்கனவே மொத்தமாக தன் மேல் சரிந்தவளை பார்க்கும் போது தன் கட்டுப்பாட்டை இழுத்து பிடித்தவன்,  இப்போது வெட்கப்பட்டு தன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவளின் அழகில் அவன் உணர்வுகள் கட்டுப்பாட்டை இழந்து ரம்யாவின் அழகில் மயங்கி  அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்து “ரம்மி” என்று கிறக்கத்துடன் அழைத்தான்.

அவளும் உணர்ச்சியின் பிடியில் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்  மூச்சுக்காற்றுடன் கலந்து “ம்” என்று மட்டும் சொல்லி கண்களை முடினாள்.

மாலை மங்கும் நேரம், 
ஒரு மோகம் கண்ணின் ஒரம், 
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும், 
போதும் என்று தோன்றும், 
காலை வந்தால் என்ன, 
வெயில் எட்டி பார்த்தால் என்ன, 
கடிகாரம் காட்டும் நேரம், 
அதை நம்ப மாட்டேன் நானும்.

வெப்பத்துடன் வந்தவளின் மூச்சி காற்றில் தன் முழுக்கட்டுபாட்டையும் இழந்தான் சூரியா. இருவரும் தன் சுயநினைவையும் இழந்து ஒருவரில் ஒருவர் அன்பில் கரைந்து தன்னிலையை மறந்து போனார்கள்.

தன் காதலை சொல்லாமல் சொன்னவளின் அன்பிலும், இன்று முழுக்க தனக்கு மகிழ்ச்சி மட்டும் கிடைத்ததில் மெய்மறந்து போனான் சூரியா.

பாவம் அதிக சந்தோஷம் எப்பவும் அழிவைத் தான் தரும் என்று அறியாமல், ஒருவரில் ஒருவர் கலந்து அவர்களின் அன்பில் திக்குமுக்காடி போனார்கள்.

இனி அடுத்த அத்தியாத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page