காதல் -26
ஊரிலிருந்து திரும்பி வந்த அன்பரசனிடமும் பார்வதியிடமும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும். அப்போது இன்பாவும் தன் நண்பர்களும் தான் தன்னை பார்த்துக் கொண்டார்கள் என்று அன்று நடந்தது அனைத்தையும் கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் கீதா.
அன்பரசனுக்கு கவலை இருந்தாலும் அவர்கள் இல்லாத நேரத்தில் தன் மகளுக்கு துணையாக இன்பா இருந்து அவர்கள் செய்ய வேண்டிய கடமையை அவன் செய்ததை நினைத்து பெருமிதம் கொண்டார்.
தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து இனியும் கவலை பட தேவையில்லை என்று எதுவாக இருந்தாலும் இனி இன்பராஜா இருப்பான் என்ற சந்தோஷத்தில் தன் பணியை பார்க்க பள்ளிக்கு சென்றார்.
கல்லூரிக்குள் நுழைந்த கீதா அங்கே சோகமாக அமர்ந்து இருந்த சூர்யாவை பார்த்து கொண்டு வந்தாள்.
‘டேய் அண்ணா என்னடா உன்னை பார்க்க முடியல. அன்னிக்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததோடு சரி. ஆமா எங்க உன் ஆளையும் என் ஆளையும் காணும்” என்று கீதா பேசிக்கொண்டே அவ்ன் அருகில் அமர்ந்தாள்.
சூர்யா அமைதியாக இருப்பதை பார்த்து “ஏன்டா, அண்ணா அமைதியா இருக்க? எப்போ பாரு பேசிட்டு இருப்ப? இப்ப என்ன அமைதியின் மறு உருவமாக இருக்க?” என்று அவனை வம்பு இழுத்தாள்.
சூரியாவோ “தலைவலி கீத்து. அதான் வேற எதுவும் இல்லை.” என்று சொல்லியவன் “சரி நான் கிளாசுக்கு போறேன்” என எழுந்த சூர்யாவின், தோள்களை பிடித்து அமர வைத்து தன் பையில் வைத்து இருந்த தைலத்தை எடுத்து சூர்யாவுக்கு தேய்த்தாள்.
அதை எதிர்பார்க்காத சூர்யா “வேண்டாம் கீத்து விடு. ஒரு டீ குடிச்சா சரியாகிடும். ராஜா பார்த்தானா சண்டை போடுவான். உனக்கே இப்பதான் உடல் நிலை சரியா இருக்குமா விடு” என்று அவளை தடுக்க. அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வாளா என்ன அவள்.
“ஏன் நான் செய்ய கூடாதா அண்ணா. நான் உன்னை என் கூட பிறந்த அண்ணனா தான் நினைக்குறேன். அதான் உரிமையா வாடா போடா சொல்லிக் கூப்பிடுறேன். வேற யாரையாவது நான் இப்படி கூப்பிட்டு பார்த்து இருக்கியா?”.என தைலத்தை தேய்த்துக் கொண்டே சொன்னவளை நினைத்து பெருமை கொண்டான்.
‘உன்னோட இந்த பாசத்தால தான் ராஜா நீயே கதினு இருக்கான். உன்னை பத்தி சின்னதா ஏதாவது தப்ப சொன்னாலும் அவனுக்கு தலைக்கு மேல கோபம் வருது. நான் சொன்னதும் தப்பு தான். அதற்கு ரம்யாவை அடிச்சது தான், என்னால தாங்க முடியல.’ என அவனின் ஒரு மனம் சொன்னாலும்,
இன்னொரு மனம் ‘அட முட்டாள் ராஜா தெரிந்தேவா அடித்தான். உன்னை அடிக்க போய் நடுவில் ரம்யா வர அந்த அடி அவளுக்கு பட்டுடுச்சு. உன் நண்பனை பற்றி தெரிந்து இருந்தே இப்படி செய்துவிட்டாய்’ என்று எடுத்து கூற. அவன் மூளை அதை ஏற்க மறுத்தது. பின் கீதாவிடம் சொல்லிவிட்டு அங்கே சென்றான்.
சூர்யா போவதை பார்த்துக் கொண்டு இருந்த கீதாவோ ‘என்னாச்சு சூர்யாவுக்கு? சம்திங் ராங். ரம்யாவுக்கும் சூர்யாவுக்கும் ஏதாவது சண்டையா இருக்குமோ” என்று தன் மூளையை போட்டு கசக்கிக் கொண்டு இருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் இன்பராஜா.
“என்ன மேடம் பலத்த யோசனையில் இருக்கீங்க போல” என்று கேட்டவனிடம்,
“ம்” என்று மட்டும் கூற. அவனோ,
“ம் வா! ஓய் உன்னை தான்டி கேட்கிறேன். ம் மட்டும் சொல்ற என்னனு சொன்னா நானும் உனக்கு ஏதாவது உதவி பண்ணுவேன்ல.” என்று ராஜா கேட்குக் கொண்டு இருக்க அப்போதும் அவள் அமைதியாக யோசனை செய்துக் கொண்டு இருந்தாள்.
………………
அதில் கடுப்பானவன் “என்னடி நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன். நீ யோசிச்சிட்டு இருக்க.?” என்று தன்னவளின் கையை கிள்ளினான்.
அப்போதும் எந்த ரியாக்ஷனையும் கொடுக்காமல் யோசனை செய்தவளை, வேண்டுமென்றே தன் அருகில் தன்னவளின் இதழில் இதழ் பதிக்க செல்ல ராஜாவை தள்ளிவிட்டு ஒடினாள் கீதா.
ராஜாவோ முத்து பற்கள் தெரிய சிரித்தவன் கீதாவை பிடிக்க அவள் பின்னால் துரத்தினான்.
கீதாவோ ராஜாவின் கரங்களில் சிக்கிக் கொள்ளாமால் அங்கே இங்கே என பாசங்கு செய்ய.
ஒரு கட்டத்தில் அவளை எட்டி பிடித்து,
“ஏன்டி நான், என்னனு கேட்டுட்டு இருந்தேன். ஆனால் நீ பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாவே இருந்த. அதான் உன்னை சீண்டினேன்” என்றவன் அவளை பின்னால் இருந்தபடி தன்னிடம் இழுத்து நிறுத்தினான்.
“டேய் என்னை விடுடா. இது காலேஜ் யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.?” என்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே கீதா அவனிடமிருந்து விலக போராடினாள்.
அவனோ “பார்த்தா பார்க்கட்டும் எனக்கு என்ன கவலை. இது நம்ம காலேஜ்” என்றான் இன்பராஜா.
அவன் சொன்னதை கேட்டவள் அதை மாறுத்தாள்.
“இது நீ, சுயமா சம்பாதித்து கட்டியதா இருந்தா தான் இது நம்ம காலேஜ் சொல்லலாம். இது உங்க தாத்தா காலேஜ். இனி இப்படி சொல்லாத இன்பா” என சொல்லி தன்னவனுக்கு புரிய வைக்கவும் செய்தாள்.
இன்பாவும் கீத்து சொல்றது சரிதான் என முதல் முதலாக தன் எதிர்காலத்தை பற்றி யோசித்தான்.
“ம் சரி கீத்து இனி இந்த மாதிரி பேச மாட்டேன். நீ சொல்லு அப்படி என்ன யோசனையில் இருந்த” என்று மீண்டும் விட்ட இடத்துக்கே இன்பா வந்து பேச.
சூர்யாவை பார்த்ததில் இருந்து அவன் சரியில்லை என்று, தான் நினைத்ததை சொல்லி முடித்தாள்.
அவள் கூறியதை கேட்ட இன்பாவுக்கு முகம் மாறினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமால் “அவனுக்கு வேற ஏதாவது பிரச்சனையா இருக்கும்டா. சரி, இத விடு நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு.
ராஜா சொல்வது தான் அவளுக்கும் சரியென பட்டது. கண்ட்டிப்பா வேற ஏதாவது வேலையா தான் இருக்கும் என்று முடிவு செய்தாள்.
பின் ராஜாவிடம் திரும்பி “ம் கேளுடா” என்றாள்.
ராஜாவோ அவளின் கண்களை பார்த்து “என்னை உனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் கீத்து” என்று கேட்டான்.
“இது என்னடா கேள்வி. நீயும் என் அப்பா அம்மாவும் வேற வேற இல்லை, ஒன்னு தான்” என்று கீதா சொன்தை கேட்ட இன்பாவுக்கு மனம் நிறைந்தாலும், ஏதோ ஒன்று அவனிடம் கேள்வியாகவே இருந்தது.
அச்சமயம் ரம்யா அந்த வழியில் செல்வதை பார்த்த கீதா “ஏய் ரம்யா நில்லுடி. என்ன ரம்யா பார்த்தும் பார்க்காத மாதிரி போற” என்று தோழியை நிறுத்தி கேள்வியாக பார்த்தாள்.
ரம்யாவோ ராஜாவை ஒரு தரம் பார்த்துவிட்டு “நீங்க பேசிட்டு இருந்திங்க அதான். நான் எதுக்கு உங்களுக்கு நடுவுல நந்தி மாதிரி அதான்” என்று ரம்யா தயங்கியபடி கூறினாள்.
ரம்யாவை பார்த்ததும் ராஜா தனக்கு வேலை இருப்பதாக சொல்லி விட்டு சென்று விட்டான் கீதாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல்.
அதை கவனித்த கீதாவின் மூளையோ “இவங்க மூன்னு பேருக்கு நடுவில் ஏதோ ஒன்னு நடந்து இருக்கு. எப்பவும் நம்ம ஒன்றாக தானே இருப்போம். ஆனா இன்னிக்கு ஆள் ஆளுக்கு தனி தனியா வராங்க போறாங்க என்னமோ இருக்கு” என்று எண்ணியவள் ரம்யாவிடம் என்னவென்று விசாரித்தாள்.
கீதா கேட்டதும் ரம்யாவுக்கு என்ன சொல்வது, ஏது சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.
தோழின் முகபாவனைன்னை கண்டுக் கொண்ட கீதாவுக்கு சந்தேகம் அதிகமாகியது.
சட்டென்று ரம்யாவின் வலக் கரத்தை பிடித்து அவளின் தலையில் வைத்து “என் மேல சத்தியமா சொல்லு ரம்யா என்ன நடந்தது” என்று கேட்கும் தோழியை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
கீதாவின் உறுதியை கண்டவள் வேற வழி இன்றி அன்று நடந்ததை சொல்லி முடிக்க கீதாவிற்கு எல்லையை கடந்த கோபம் வந்தது.
“உன்னை அடிக்குற உரிமையை யாருடி இன்பாவுக்கு கொடுத்தது. என்ன தைரியம் இருந்தா, அவன் இப்படி செய்துவிட்டு என்னிடம் இருந்தே மறைத்து இருப்பான்”. என்று ஆவேசமாக பேசிக் கொண்டே எழுந்து நடந்தவளை தடுத்தாள் ரம்யா.
“நில்லு கீதா இப்போ எங்கடி போற”என்று பதற்றமாக கேட்ட ரம்யாவை முறைத்து பார்த்து,
“ம் இன்பாவை பார்க்க” என்று பல்லை கடித்துக்கொண்டு சொன்னாள் கீதா.
தோழியின் கோபத்தை பார்த்த ரம்யா ராஜாவிற்கும் கீதாவிக்கும் நடுவில் சண்டை வந்துவிடுமோ என்று பயந்தவள்,
“இங்க பாருடி தப்பு என் மேல தான். நண்பர்கள் இரண்டு பேரும் சண்டை போடும் போது நடுவில் போனது நான். அப்போ எதிர்பாராமல் நடந்தது தான் ராஜா அண்ணா என்னை அடித்தது. நீ கோபப்பட வேண்டியது என் மேல. அவரு மேல இல்லை புரியுதா. சூர்யாவுக்கும் இதை தான் அன்னிக்கு சொல்லி புரிய வச்சேன் என்று ரம்யா விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
கீதாவோ “என்ன தான் இருந்தாலும் அவன் உன்னை அடிச்சு இருக்க கூடாதுடி” என்றாள் கோபம் சற்றும் குறையாமல்.
“ஏய் லூசாடி நீ? நான் தான் சொல்லிட்டு இருக்கேன்ல. அவரு என்னை அடிக்கனும்னு நினைச்சி அடிக்கல. சும்மா, சும்மா அதே பேசிட்டு இருக்காத. இப்ப அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கிற வழிய தேடுவோம்” என்று அந்த பிரச்சனைக்கு முடிவுக்கட்ட நினைத்தாள் ரம்யா.
கீதாவிற்கோ கண்கள் கலங்கி விட்டது. தன் தோழியின் பெருந்தன்மையை நினைத்து அவளை கட்டிக்கொண்டு “அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்டி.
கீதாவை முறைத்து விட்டு “ஏதாவது யோசனை பண்ணுடி. என்ன செய்து இருவரையும் சேர்த்து வைக்கிறது” என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
கீதாவோ அலுத்துக் கொண்டு “ரம்யா, எப்பவும் பிரிஞ்ச லவ்வர்ஸை தான் நண்பர்கள் சேர்ந்து அவங்களை சமாதானம் செய்வார்கள். ஆனால் இங்க பாரு எல்லாம் தலை கீழா நடக்குது. காலக்கொடுமைடி” என்று தலையில் கை வைத்த சொல்லிய கீதாவை பார்த்து சிரித்தாள் ரம்யா.
இருவரும் வெகு நேரம் யோசித்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த வழியும் கிடைக்காமல் சோர்ந்து போனார்கள்.
அந்நேரம் அந்த வழியாக வந்த ராம் அவர்களை பார்த்து அவர்களிடம் வந்து. “என்ன இரண்டு பேரும் பலத்த யோசனையில் இருக்கிங்க போல”என்று கேட்டவனை,
இரு தோழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து “ஹை பை” என கையை தட்டி “சிக்கினான்டா ராமு” என்று கோரசாக சொல்ல,
ராமோ ‘தானே வந்து மாட்டிக்கிட்டோமோ’ என்று நினைத்தான்.
ராமை பிடித்து சூர்யாவையும் இன்பாவையும் பற்றி அறிந்துக் கொண்டனர்.
———————————————————
“நாங்க ப்ளஸ்டூ படிச்சி முடிச்சிட்டு ரிசல்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த சமயம் ராஜாவுக்கு திடீருனு அடிப்பட்டு ஆஸ்பத்திரில இருந்தான்.
நான் சூர்யா பரத் மூன்று பேரும் போய் பார்த்து வருத்தப்பட்டோம். ஆனால் சூர்யா மட்டும் தான் ஆஸ்பத்திரினு கூட பார்க்காமல் அவனை கட்டிப் பிடிச்சு அழுதான்.
எவ்வளவோ சமாதானம் பண்ணியும் அவன் அழுகையை கட்டுப்படுத்த முடியல. அப்ப ராஜா சூர்யாகிட்ட..
‘ஏன்டா சூர்யா, எப்ப பார்த்தாலும் நீ என் கூடவே இருக்கியே எனக்காக அழுகுற. அப்படி என்ன தான்டா என் மேல பாசம் உனக்கு. நான் உனக்காக எதுவும் செய்தது கூட இல்லையேடா” என்றான் ராஜா.
அவன் கூறியதை கேட்ட சூர்யா “நட்புக்குள்ள ஏதாவது செஞ்சு தான் பாசம் வருனும்னா, அதுக்கு பேரு நட்பு இல்லடா. வேற பேரு இருக்கு. எனக்கும் சரி உனக்கும் சரி இரண்டு பேருக்கும் முதல கிடைச்ச நட்பு இது தான்டா. உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால கண்டிப்பா தாங்க முடியாதுடா… நானும் நீ இருக்கும் இடத்துக்கே வந்துடுவேன்” என்று உணர்ச்சிவசப்பட்டான் சூர்யா.
அதை கேட்ட ராஜா வாய் விட்டு சிரித்து விட்டான் “டேய் பொய் சொல்லாதடா. நான் செத்துட்டா நீயும் செத்துடுவியா. காமெடி பண்ணாம போடா” என்று அவனின் உண்மையான அன்பை கிண்டல் செய்தான் ராஜா.
சூரியாவோ ஆவேசமாக “நீ சொன்னா நான் என் உயிர கூட கொடுப்பேன்டா” என்று வார்த்தைகள் உதிர்க்க. மேலும் பலமாக சிரித்த ராஜா,
“அப்படியா! அப்போ இந்த ஜன்னல் வழியா குதிச்சிடுடா சொன்னா குதிப்பியா என்ன?” என்று ராஜா விளையாட்டுக்காக தான் கூறினான்.
ஆனால் சூர்யாவோ ராஜா சொன்ன அடுத்த நொடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் மருத்துவமனை ஜன்னல் வழியாக குதிக்கப் போனவனை சுந்தர் ஒரு வினாடி சுதாரித்து பிடித்து விட்டார்.
சூர்யாவின் பாதி உடல் ஜன்னலுக்கு வெளியே இருந்தது. சுந்தரோ பதற்றத்துடன் கஷ்டப்பட்டு சூர்யாவை பிடித்து இழுத்து காப்பாற்றியவர் ஓங்கி ஒரு அறை வைத்தார் கோபத்தி..
“ஏதோ சின்ன பிள்ளைங்க விளையாட்டு தனமா பேசிட்டு இருக்கிங்கனு பார்த்தா? என்ன துணிச்சல் சூர்யா உனக்கு.” என கோபமாக கேட்டார்.
அவர் அடித்ததை கூட பெரியதாக நினைக்காமல் “என் ராஜாவுக்காக அவன் என்ன சொன்னாலும் யோசிக்காமல் செய்வேன் அங்கிள்” என சூர்யா உணர்வுபூர்வமாக கூறினான்.
ராஜாவோ உறைந்து போனான். சூர்யா அவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக இப்படி செய்வான். அதுவும் தன் உயிரைக் கொடுக்க கூட துணிவான் என்று எதிர்பார்க்கத ராஜா தன் நண்பனை கட்டிக் கொண்டு கண்கள் கலங்க “சாரிடா மச்சி” என்றான்.
இவர்களது நட்பை பார்த்து அசந்து போனார் சுந்தரம்..
———————————————————
ராம் கூறியதை கேட்ட இரு தோழிகளுக்கும் வியப்பாக தான் இருந்தது. அப்படிப்பட்டவர்களா இப்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இருவருக்கும் எழாமல் இல்லை.
அதன் ராம் விட்டால் போதும் என்று அங்கே இருந்து ஓடிவிட. தோழிகள் இருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.
அப்போது கீதா ஒரு திட்டம் கூற. முதலில் மறுத்த ரம்யா பிறகு கீதாவின் வற்புறுத்தில் சரியென்று ஒப்புக் கொண்டாள்.
கீதா தன் கைப்பேசியை எடுத்து முதலில் இன்பராஜாவுக்கு அழைப்பு விடுத்து சூரியாவுக்கு பலத்த அடிப்பட்டு விட்டதாகவும். தனியாக அவனை தூக்க கூட முடியவில்லை சீக்கரமா வா என்று போலி கண்ணீருடன் கூறிவிட்டு. அடுத்து சூரியாவிற்க்கும் அதே போல் கூறி இருவரையும் ஒரே இடத்திற்கு வர சொன்னாள்.
பாவம் ரம்யாவுக்கு தான் பயம் ஏற்பட்டது. என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று.
ஆனால் கீதாவின் கெட்ட நேரம் இன்பாவுக்கு முதல் சூர்யா வந்தான்.
தன் நண்பனுக்கு அடிப்பட்டு விட்டதை கேட்டு அடித்துப்பிடித்து கீழே விழுந்து தன் கால் விரலில் அடிபட்டு இரத்தம் வந்தத்தை கூட பொருட்படுத்தாமல் தன் நண்பனின் உயிர் தான் முக்கியம் என்று நினைத்து வந்தவனிடம் புன்னகைத்தபடி,
“நான் விளையாட்டுக்காக தான் இப்படி செய்தேன். உங்களையும் இன்பாவையும் சேர்த்து வைக்க நான் போட்ட திட்டம். இன்பாவுக்கு எதுவும் ஆகவில்லை அண்ணா. நீங்கள் கவலைப்பட தேவையில்லை” என்று எந்த பதற்றமும் இன்றி சொன்னவளை கொலை வெறியுடன் பார்த்தான் சூர்யா.
கீதாவின் விளையாட்டு தனத்தை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.
பின் இருக்காதா, அவள் விளையாடியது அவர்களின் உயிரை வைத்து தானே பொய் சொல்லி இருவரையும் சேர்க்க நினைத்தாள்.
சூர்யாவின் பதற்றமும் கோபமும் சற்றும் குறையாமல் போக. பின்விளைவை பற்றி யோசிக்காமல் கீதாவின் கண்ணத்தில் அறைந்து விட்டான். ஆனால் அப்படி அறைந்தும் அவன் ஆத்திரம் குறையாமல் இருக்க இன்னொரு கண்ணத்திலும் அறைந்தான்.
சூரியா அறைந்த வேகத்தில் நிற்க முடியாமல் பின்னால் விழ போனவளை அச்சமயம் அங்கே வந்து சேர்ந்த ராஜா கீதாவை தாங்கி பிடித்து நிறுத்தினான்.
அனல் தெறிக்கும் பார்வையோடு சூர்யாவை நோக்கி சென்றவன் காதல் கண்ணை மறைக்க, நண்பன் என்றும் பாரமல் சூரியாவை அறைந்து, வாயில் ஒரு குத்துவிட்டான். அதில் சூர்யாவுக்கு ரத்தம் வழிந்தது. அதை எதையும் பொருட்படுத்தாமல் தன் காலால் அவனின் ஆருயிர் நண்பன் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளினான் இன்பராஜா.
காதல் இங்கே நட்புக்குள் விரிசல் அதிகமாகிக் கொண்டே போனது.
அன்று சூரியா ரம்யாவிற்காக செய்த அதே தவறை இன்று ராஜா கீதாவிற்க்காக செய்தான்.
இதை எதையும் எதிர்பார்க்காத இரு பெண்களும் ஸ்தம்பித்து போயினர்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
