காதல்- 31

காதல் -31 
 

 

தன் கடந்த காலத்தில் நடந்ததை கூறி முடித்தவள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

“இன்பா உயிரோடு இருந்தா போதும் என்று தான், எங்களுக்கு கல்யாணம் ஆனா அன்னிக்கே அவரை விட்டு விலகி போனேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்துச்சி திரும்பவும் என் இன்பாவா சந்திப்பேனு. அவரையே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருந்த அப்ப தான் அவர் ஆபிசுன்னு தெரியாமல் வேலை தேடி போனேப்பா தான் என் இன்பாவா பார்த்தேன். இன்பாவை பார்த்த அடுத்த நொடி நான் இழந்த எல்லாமே எனக்கு கிடைச்ச மாதிரி இருந்தது. அப்ப கூட ஒரு சின்ன பயம் திரும்பவும் நம்மளால இன்பாவுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமானு நினைச்சி நான் தினம் தினம் பயந்துட்டு இருந்தேன். நான் பயந்த மாதிரி ஆகிடிச்சி” என்று சொல்லி முகத்தை மூடிக்கொண்டு அழுதவளை சமாதானம் செய்து தோற்று போனார்கள் அனைவரும்.

அருணுக்கு கோபம் வந்தாலும் கீதாவை நினைத்து வேதனைப்பட்டான். இனி அவளிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவள் காதலை தவிர. காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா ஒரு பெண் இந்த அளவுக்கு ஒருத்தானை காதல் செய்து அவனுக்காக தன் அப்பா அம்மாவையும் இழந்து தன் காதலையும் இழந்து இத்தனை கஷ்டத்தை அனுபவிக்க முடியுமா. என்று ஒரு கணம் ஆச்சிரியப்படவும் செய்தான்.

‘நான் உன்னை ஏஞ்சல் சொன்னது தப்பு இல்லைமா. கண்டிப்பா நீ ஒரு தேவதை தான் என் ஏஞ்சல் மாதிரி இனிமேல் ஒரு பொண்ணு தேடினாலும் கிடைக்காது. ஏஞ்சல் நீ இதுவரை பட்ட கஷ்டம் எல்லாம் போதும் ராஜா சார் கண்ணை முழிச்சதும் அவருக்கிட்ட நடந்த எல்லா உண்மையும் சொல்லி புரிய வச்சி உங்களை சேர்த்து வைக்கிறேன்’ என மனதில் சபதம் எடுத்தவன் யோசனையோடு கீதாவை பார்த்து “ஆமா நீ சாரை விட்டுபிரியா என்ன காரணம் சொல்லாவே இல்லையே.”என கேட்டான் அருண்.

கீதா சட்டென்று அருணை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை அருகில் இருந்த சுந்தரிடம் சென்று மீண்டது. 

“அந்த காரணத்தை என்னால சொல்ல முடியாது அருண். அதை யாரும் தெரிஞ்சிக்காமல் இருக்கிறது தான் நல்லது” என்று விரக்தியாக கூறியவளின் கரத்தை பிடித்துக் கொண்டு,

“அம்மாடி” தழுதழுத்து குரலுடன் சுந்தர் “நீ பெரிய மனுஷினி நிரூபிச்சிட்டமா. உன்னை மாதிரி ஒரு குணம் உள்ள பொண்ணு எங்க தேடினாலும், என் பையனுக்கு கிடைக்க மாட்டா. என் குலத்தையே வாழ வைக்க வந்த தெய்வம் நீ” என்று நெகிழ்ந்து பேசிய சுந்தரை புரியாமல் பார்த்தாள் வசந்தா. 

ஆனால் அருணுக்கு மட்டும் ஏதோ ஓர் அளவு புரிந்துக்கொண்டான்.

பிரியா கீதாவின் தோள் மீது கை வைத்து “உங்க காதலை பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு மேடம்” என்று சொல்ல.

“என் மருமகள் மேல யாரும் கண் வைக்காதிங்க” என்று திருஷ்ட்டி சுற்றினார் வசந்தா. அவள் செய்தத்தை பார்த்து எல்லாரும் சிரித்தனர்.

அதே சமயம் ஐசியூவில் இருந்தனர். 
டாக்டர் வெளியே வந்தார்.

எல்லாரும் அவரை ஆவலோடு பார்க்க. கீதா இருக்கிற எல்லா கடவுளிடமும் வேண்டுதல் வைத்தாள்.

‘என் பெற்றோர் விசியத்தில் தான் என்னை ஏமாத்திட்டா இப்ப என் இன்பா விசியத்திலும் என்னை ஏமாத்தாதே என்று கடவுளிடம் வேண்டினாள். இம்முறை கடவுள் பாவம் சின்ன பொண்ணு போனா போகட்டும் என்று நினைத்து அவள் வேண்டுதல் ஏற்க. ஆனால் நீ அவனுடன் சேர வேண்டும் என்றால் அதற்கு நீ இன்னும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும். என்று அருள் வழங்கி இருப்பார் போல்’.

“மிஸ்டர் சுந்தர் உங்க பையனுக்கு நல்லப்படியா ஆப்ரேஷன் முடிஞ்சிது. இன்னும் ஒரு மூன்று மணி நேரத்தில் கண் முழிச்சிடுவாரு” என டாக்டர் சொல்ல,

கீதா ஆசையோடு “நான் ஒரு தடவை என் கணவரை பார்க்கலாமா?” என்று வேதனை நிறைந்த குரலில் கேட்டாள்.

மருத்துவரோ “இல்லை மா. அவருக்கு இப்ப தான் ஆப்ரேஷன் முடிஞ்சி இருக்கு. சோ ஒரு அரைமணி நேரம் கழிச்சி போய் பாருங்க”. என்று சொன்னவுடன்,

ஏமாற்றுடன் முகத்தை வைத்துக்கொண்டு ‘நேத்து நைட் முழுக்க காத்திருந்த எனக்கு! இந்த மூன்று மணி நேரம் என்ன ஆகிட போகுது’ என்று மனதில் வருத்தம் கொண்டாலும் டாக்டரிடம் “தங்க்யூ டாக்டர் தங்கயூ சோ மச், என் இன்பாவா காப்பத்திக் கொடுத்ததிற்கு” என்றாள்.

“நன்றியெல்லாம் எதுக்குமா? என் கடமையை தான் நான் செய்தேன். நீங்க தங்க்யூ சொல்லன்னும்னா உங்க ஹஸ்பண்ட்க்கு ரத்தம் கொடுத்தாரே அவருக்கு சொல்லுங்க”. என்று அவர் சொல்லிவிட்டு போனார்.

அப்ப தான் நினைவு வந்தவளை “ஒரு நிமிசம் டாக்டர் இப்போ அவரு எங்க இருக்காரு” என்று இரண்டடி எடுத்து வைத்த மருத்துவரிடம் கேட்டாள்.

மருத்துவரோ “ரத்தம் கொடுத்துட்டு அப்பவே போய்ட்டாருமா”. என்று சொல்லிவிட்டு சென்றார்.

கீதாவுக்கோ ஏமாற்றமாக இருந்தது. ‘ஒரு நன்றியாவது சொல்லி இருந்து இருக்கலாம்’. என்று தோன்ற, ‘அருண் நண்பர் தானே அவரு. அவன் வாட்ஸ்ப்பில் எல்லாருக்கும் குறுஞ்செய்தி போனதில் தானே வந்தாரு’ என யோசித்து அருணிடம் கேள்விக் கேட்டாள்.

அவனோ “அவர் யாருன்னு தெரியாது. நான் எல்லாருக்குமே அனுப்பினேன். அவருக்கும் நம்ம ராஜா சாருக்கும் ஓரே குரூப் என்பதால் வந்து இருப்பாரு” என்று சொல்ல.

சலித்து போனவள் “அட்லிஸ் அவர் நேமாவது சொல்லு அருண்” என்று கேட்டாள்.

அருணும் சிறிது யோசித்துவிட்டு “ம்ம் அவர் நேம்.. மிஸ்டர் சந்திரசூரியா” என்றான்.

அதை கேட்ட கீதாவிற்க்கு ஏதோ ஒன்று இடிப்பது போல் தோன்றியது. யோசனையுடன் கண்களை சூழலவிட்டாள்.

அதுவரை ஒளிந்துக் கொண்டு இவர்களை கவனித்துக்கொண்டு இருந்த சூரியா. அருண் அவன் பெயரை கீதாவிடம் சொன்னவுடன் அங்கே இருந்து கிளம்ப எத்தனித்த  போது சரியாக கீதா சூரியாவை பார்த்து விட்டாள்.

‘அட ஆமா இன்பாவுக்கும் சூரியாவுக்கும் ஓரே குரூப் தானே. அன்னிக்கு சூரியாவுக்கு இன்பா ரத்தம் கொடுக்கும் போது நான்னும் அங்க தானே இருந்தோன்.எப்படி மறந்து போனேன் ச்சை” என்று நொந்துக் கொண்டவள் சூரியா பின்னாடியே போனாள்.

அருணோ “இவள் இப்போ எங்க போறா? அதுவும் யாரையோ தூரத்திட்டு போறா மாதிரி இருக்கே?” என்று அவனும் கீதா பின்னாடி போனான்.

“சூரியா அண்ணா ஒரு நிமிசம் நில்லுங்க. அண்ணா! அண்ணா!” என்று கத்திக்கொண்டு சூரியா பின்னாடி போனாள், என்று சொல்வதை விட, ஓடினாள் அவன் வேகத்திற்கு என்று தான் கூற வேண்டும்.

அருணோ “பார்த்து போ ஏஞ்சல் கீழே விழ போற”என்று கத்தியவன் எண்ணமோ ‘யாரை தேடிக்கிட்டு இப்படி ஓடி போறா?” என்று கீதாவின் பின்னால் இவனும் ஓடினான்.

அருண் சொல்வதை துளியும்  கீதாவின் காதில் விழவே இல்லை. அவள் காதில் விழுந்து இருந்தால் அவளுக்கு வர போகும் ஆபத்தில் இருந்து தப்பித்து இருப்பாள். பாவம் விதி….யாரை விட்டது.

எப்படியாவது சூரியாவை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது அவளுக்கு. சூரியாவை கூப்பிட்டுக் கொண்டு அவன் பின்னால் ஓடினாள்.

கீதா கூப்பிடுவது சந்திரசூரியா காதில் விழுந்தாலும் அதை கவனிக்காதது போல் வேக வேகமாக படிகட்டில் இரண்டு இரண்டு படியை தாவி போனான்.

“அண்ணா தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. நான் எந்த தப்பும் பண்ணல. என் மேல இருக்கிற கோபத்தில் நீங்க ஏன் உங்க நண்பனை வெறுக்கிறீங்க”. என அவன் பின்னால் கேட்டுக் கொண்டே அவன் தாவியது போல் இவளும் தாவி சென்றாள்.

கீதா சூரியாவை போல் தாவிக்கொண்டே போனவள் படிக்கட்டுகளை கவனிக்க தவறினாள்.

அந்நேரம் அவள் புடவை அவளது காலில் சிக்கி தடுக்கி மேல் இருந்து பத்துவது படியில் இருந்து அப்படியே கீழே கடைசியா இருக்கும் பத்தவது படியில் உருண்டு விழுந்தாள் “அண்ணா” என்று கத்திக்கொண்டே,

அதே சமயம் உருண்டு வந்த வேகத்தில் எதிரில் இருக்கும் தூண் மேல் பின் தலை அடிப்பட்டது கீதாவிற்கு.

அவள் பின்னால் ஓடி வந்த அருண். “கீதா” என கத்த, அருண் கத்தியத்தில் சூரியாவும் திரும்பி பார்த்தான்.

அங்கு கீதா உருண்டு கீழே வருவதை பார்த்தவன். அவள் தூணில் இடிக்க வருவதை தடுக்க வருவதற்குள், கீதா அதில் அடிப்பட்டு மயக்க நிலைக்கு போக கீதாவின் அருகில் வந்த அருணும் சூரியாவும் பதற அருண் கீதாவை தூக்க போகும் போது சூரியா அவளை தூக்கிக்கொண்டு டாக்டரை கூப்பிட்டு அதாவது சத்தம் போட்டுக் கொண்டே அவளை ஸ்டக்சரில் கிடத்தி தள்ளிக்கொண்டு போனான்.

“உனக்கு ஒன்னும் ஆகாது கீத்து. ஏன் இப்படி பண்ணடா?. உன்னை பார்க்கிற சக்தி இல்லாமல் தான் உன் கண்ணுல பட கூடாது நினைச்சி போனேன். நீ! என் பின்னடியே வந்து இப்படி பண்ணிட்டியேடா. இப்போ ராஜா கேட்ட நான் என்ன பதில் சொல்லுவேன்”.என்று பிதறிக்கொண்டே ஐ.சி.யூ. வில் நுழைந்த சூரியாவையும் அருணையும் வெளியே தடுத்து நிற்க வைத்து கீதாவை மட்டும் அழைத்துக்கொண்டு மருத்துவர் போகும் சமயம் அரை மயக்கத்தில் இருந்த கீதா சைகையாலே நிற்க சொல்லி சூரியாவை கை நீட்டி அழைத்தாள்.

சூரியா பதற்றதுடன் அவள் அருகில் வந்து கையை பிடித்துக்கொண்டு “என்னடா” என கேட்டான்.

அவளோ “அண்ணா எ.. ன்.. னை.. ம..ன்னி”.என்று அவள் மூச்சியை இழுத்துக்கொண்டே சொல்ல வர.

கீதா என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து சூரியா “எனக்கு உன் மேலே எந்த கோபமும் இல்லைடா. முதல நீ ஆப்ரேஷன் ரூமுக்கு போ” என்றான்.

அவள் ரத்தம் படிந்த தலையை வருடியவளின் கையை இறுக்கிப்பிடித்து அவள் பக்கம் இழுத்து “இன்பவை தனியா விட்டுடத்தீங்க அண்ணா” என்று ஒரே மூச்சில் சொல்லி அப்படியே கண்களை மூடினாள் கீதா.

தன் கையில் இருந்து கீதாவின் கை நழுவி கீழே விழுவதை அதிர்ச்சியுடன் பார்த்தவன் வேதனைவை அடக்கிக் கொள்ள முடியாமல் “கீதா..” என்று கத்தினான்.

அருண் தான் சூரியாவை பிடித்து நிற்க வைத்தான். பின் கீதாவுக்கு ஆப்ரேஷன் ஆரம்பித்து நடந்துக் கொண்டே இருக்கும் போது வசந்தா,சுந்தர்,பிரியா வர.

சாரில் கண் கலங்கி அமர்ந்து இருக்கும் சூரியாவை பார்த்த வசந்தா. “சூரியா” என்று அழைத்த அடுத்த நிமிசம் வசந்தாவை கட்டிக்கொண்டு அழ துவங்கினான் சூரியா.

“அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்னால தான் எல்லாம். கீதா கூப்பிட்ட போதே நான் அவள் கிட்ட பேசி இருந்து இருக்கனும். கீதாவுக்கு இப்படி நடந்து இருந்து இருக்காதுமா. இப்ப இன்பா கண் திருந்து கேட்ட நான் என்ன பதில் சொல்லுவேன். ஏற்கனவே என்னால இவங்க இரண்டு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க இவங்களை எதிர்க்கொள்கின்ற தைரியம் என் கிட்ட இல்லாமல் தான் நான் இந்த ஊரா விட்டு போனேன். இரண்டு நாளைக்கு முன்னாடி தான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லையின்னு வந்தேன். ஆனா இங்க இங்க” என்று பேசியவன் அப்படியே மயங்கி சரிந்தான். இரத்தம் கொடுத்துவிட்டு எதுவும் சாப்பிடாமல் இருந்தவன். இப்படி சோர்ந்து போய் அழுது மயக்கம் ஆகினான் சந்திரசூரியா.

அவனையும் ஒரு அறையில் அட்மிட் செய்து டிர்ப்ஸ் ஏற்றினார்கள். கீதாவுக்கு என்னாச்சி என்ற கவலையில் தவித்துக் கொண்டு இருந்தனர் அனைவரும்.

பிரியா கீதா போனில் இருந்து அவள் வீட்டிற்கு தகவல் சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் ரவி விஜயா தினேஷ் என மூவரும் வந்து என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு கவலையுடன் நின்றனர்.

தினேஷ்கு மட்டும் மிகவும் வேதனையாக இருந்தது. ‘நேத்து காலையில் அவ்வளவு சந்தோஷமாக. என் கிட்ட பேசிட்டு போனாவள். இப்ப அடிப்பட்டு இந்த நிலமையில் இருக்கிறாள்’ என்று நினைத்து, நினைத்து அவனுக்கு வேதனை தொண்டையை அடைத்தது.

ரவி ஒரு மூளையில் புலம்பிக் கொண்டு இருக்க. விஜயா கடமைக்கு அங்கு நின்றுக்கொண்டு இருந்தாள்.

டாக்டர் ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு “ஐயம் ரியலி சாரி மிஸ்டர்” என டாக்டர் வாய் திறக்க.

தன் இரு கையையும் கூப்பி டாக்டர் எப்படியாவது என் வீட்டு மகாராணியை காப்பத்தீடுங்க. என்று வசந்தா அழுகையுடன் சொன்னாள்.

“அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை மிஸஸ் சுந்தர் பட்.” என்று அவர் இழுக்க,

“ஆனா சொல்லுங்க” என்று ரவிக் கேட்டார்.

அவரோ “அவங்க கீழே விழுந்து உருண்டதில் முன் தலையிலும் பின் தலையிலும் பலமா அடிப்பட்டு இருக்கு. அதுனால அவங்க இன்னும் இரண்டு நாளில் கண் முழிச்சி பார்க்கலனா அவங்க கோமவிற்க்கு போக வாய்ப்பு இருக்கு” என்று கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர்.

அதை கேட்ட சுந்தர் “இரண்டு நாள் இருக்கு டாக்டர். கண்டிப்பா என் மருமகள் கண்ணு முழிச்சிடுவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த கடவுள் மேல இருக்கின்ற நம்பிக்கையை விட அவங்க காதல் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அவ சீக்கிரம் அவளுடைய இன்பவுக்காக கண்ணு திறப்பா” என்று உணர்ச்சியுடன் சுந்தர் பேசுவதை கேட்ட அனைவரும் அவரை மதிப்புடன் பார்த்தனர்.

மருத்துவரோ “பட் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு சுந்தர். கீதா கண் திறந்தாலும் அவங்களுக்கு பழைய நினைவு இருக்குமா என்று தெரியாது” என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார்.

“என்ன டாக்டர் சொல்றீங்க.” என்று அனைவரும் திடுக்கிட்டு  ஓரே போல் கேட்டனர்.

டாக்டர் ஆம் என்று தலையாட்டி “அதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்லி இருக்கேன். ரிசல்ட் வந்ததும் என்னனு சொல்றேன்” என்று அங்கு இருந்து சென்ற பிறகு,

அதுவரை தன் கோபத்தை கட்டுப்படுத்தி வைத்து இருந்த தினேஷோ கோபத்துடன் சுந்தர் காலரை பிடித்து உலுக்கினான்.

அனைவரும் தினேஷின் செயலில் அதிர்ந்தனர்.

அனைவரும் தினேஷின் செயலில் அதிர்ந்தாலும் அருண் சுதரித்து சுந்தரிடம் இருந்து விலக்கினான்.

“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. சார். அவரு எவ்வளவு பெரிய மனுஷன். அவர் சட்டையை போய் பிடிக்கிறீங்க”

“யாரு இந்த ஆள பெரிய மனுஷனா?. எங்க வீட்டு பொண்ணு இப்படி இருக்கிறதுக்கு காரணமே இந்த ஆளு தான்” என்று சுந்தரை முறைத்துக் கொண்டே சொன்னான் தினேஷ்.

சுந்தருக்கு அவன் பார்வையிலே அனைத்தும் விலங்கியது. ரவியும் அமைதியாக இருப்பத்தை பார்த்து சுந்தர் புரிந்துக்கொண்டார். ‘இவர்களுக்கு அனைத்தும் உண்மையும் தெரிந்து இருக்கும்’ என்று தன் தலையை குனிந்து இரு கரத்தையும் கூப்பி மன்னிப்பு கேட்டார் சுந்தர்.

சுந்தரத்தின் மீது ஒரு அலச்சிய பார்வை வீசிவிட்டு “நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது என்கிட்ட இல்லை. உங்க மகன் கிட்டையும், கீதாக்கிட்டையும் இறந்து போன இரண்டு ஆத்மாக்கிட்டையும் போய் மன்னிப்பு கேளுங்க” என்று ஆத்திரத்துடன் தினேஷ் சொல்வதை புரியாமல் பார்த்தனர் வசந்தா அருண் பிரியா மற்றும்  விஜயாவும்.

ரவி தினேஷிடம் நெருங்கி “இந்த உண்மை உனக்கு எப்போடா தெரிஞ்சிது” என்று கேட்டார்.

“நேத்து காலையிலப்பா அது கூட கீதாவை நான் கட்டயப்படுத்தி சொல்ல வச்சேன்.” என்று கூறினான்.

ரவியோ “அப்ப அவளுக்கு கல்யாணம் ஆனது” என்று கேள்வியோடு நிறுத்த,

தினேஷோ “ம் அது எனக்கு ஆறு வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். நீங்களும் கீதாவும் பேசிக்கிட்டு இருக்கும் போது கேட்டேன்.” என்றான்.

அதை கேட்டவர் குழப்பத்தோடு “அப்போ கீதாவுக்கு கல்யாணம் நடந்துடுச்சின்னு தெரிஞ்சே நீ அவளை விரும்பினீயா” என்று ரவி கேட்க.

“அப்பா” என கோபத்துடன் கத்தினான் தினேஷ்.

“என்ன பேச்சி பேசுறீங்கப்பா. 
அவளை நான் என் கூட பிறந்த தங்கச்சியா தான் பார்த்தேன். நீங்க என்னடானா விரும்புறீயா? கேட்கிறீங்க” என்று அனல் போல் கொதித்தான்.

தன் மகனின் பதிலில் அதிர்ந்தவர் “என்னாடா சொல்ற” என கேட்டார்.

விஜயாவிற்க்கே அந்த நிலையிலும் சந்தோஷம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“அப்படா அந்த ராசிக்கெட்டவளை என் பையன் காதலிக்கவில்லை. இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்று மனதில் பேசுவதாக  நினைத்து சத்தமாக பேசினாள்.

அதை கேட்ட அனைவரும் விஜயாவை முறைத்து பார்த்தனர். அவர்களை கண்டுக் கொள்ளாமல் தன் மகனின் அருகில் வந்து “அப்ப நீ அன்னிக்கு லவ் அது இது சொன்னியேடா? அதுக்கு என்ன அர்த்தம்” என்று கேட்டாள்.

தினேஷோ தன் தாயின் கையை உதறிவிட்டு “நான் காதலிக்கிறேன் தான். ஆனா அது கீதா இல்லை. நான் வேலை செய்யுற கம்பெனியோட எம்.டி. பொண்ணு தனுவை என்று என்னவென்று கூற ஆரம்பித்து.

———————————————————

ஆறு வருடத்திற்க்கு முன்னால் கீதாவை முதல் முதலாக ரவியின் வீட்டு அழைச்சிட்டு போனாவளை தினேஷ் உண்மையான மனதால் கீதாவை தங்கையாக தான் பார்த்தான்.

தனக்கு ஒரு தங்கை இருந்தாள் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்த வேளையில் தான் கீதாவை பார்த்தான். அவளிடம் எப்படி அன்பை காட்டுவது என்று தெரியாமல் முதலில் அவளிடம் கோபமாக நடந்து கொண்டான்.

எப்போவும் எதையும் பறிக்கொடுத்த மாதிரி இருந்தவளை பார்க்க பார்க்க தினேஷ்க்கு கோபம் அதிகம் ஆனாது தான் மிச்சம். ஆசை ஆசையா அவளுக்காக கடன் வாங்கி அவள் பிறந்த நாளுக்கு கொடுக்க, ஒரு புடவை வாங்கிக்கொண்டு கீதாவின் அறைக்கு செல்லும் போது தான் அவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்தது. அப்போது தான் அவளுக்கு திருமணம் ஆனாதே தினேஷ்க்கு தெரிந்து ரொம்ப வருத்தப்பட்டான்.

இவ்வளவு வேதனையை அனுபவிச்சி இருக்களே என்று. தன் நண்பர்களிடம் இதை பகிர்ந்துக் கொள்ள போகும் போது தான் கீதாவையும் தினேஷையும் தப்பா பேசுனது கேட்டு கோபம் தலைக்கேற தன் நண்பர்களிடம் சண்டைப்போட்டான். 

“எங்களையே அடிச்சிட்டியா? இனிமேல் நீ எப்படி இந்த ஊருல இருக்கேன் பார்க்குறோம்டா”. என அவன் நண்பர்கள் செய்த சதியால் ரவி வீட்டை விற்று கடனை அடைத்து கீதாவின் வீட்டுற்கு வர நேரிட்டது.

அங்க வந்ததும் அவன் அம்மாவின் வார்த்தையும் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்க்காகவும் வேலைக்கு சேர்ந்தவளை தடுக்க முடியாமல் போனா கோபத்தில் தான் அவளுக்கு போன் செய்தும் அவள் போன் எடுக்காகத்தை நினைத்து அவளுக்கு எதாவது நேர்ந்துவிட்டதா என்ற எண்ணம் தோன்ற மேலும் கோபம் தலைக்கேற ஒரு நாள் கீதாவை அடித்தும்விட்டான்.

தன் தவறை எண்ணி அவன் வேலைக்கு சென்றால், கீதா வேலையை விட சொல்லிடலாம் என்ற எண்ணம் தோன்ற தான் படித்த படிப்பிற்கு. ஏற்ற வேலையை தேடிக்கொண்டு கீதாவை நிற்க சொல்லாலம் என்ற எண்ணத்துடன் வந்தவன் கீதா சொன்னத்தை கேட்டு அந்த யோசனையை கை விட்டான். ராஜா கூறிய ஐந்து லட்சம் நிபந்தனையை கேட்டு.

பின் தன் வேலையை கண்ணும் கருத்துமாக செய்யதுக் கொண்டு இருந்தவன் வாழ்க்கையில் தனு என்னும் தேவதை வந்தாள்.

அந்த கம்பெனி எம்.டி. யாக அறிமுகம் ஆனாவள் தினேஷை பார்த்ததும் பிடித்து போக அன்றே தன் காதலை வெளிப்படித்தினாள்.

தினேஷும் அவள் அழகில் மட்டும் இல்லை, பண்பிலும் குணத்திலும் தடுமாற்றம் அடைய தான் செய்தான்.

ஆனால் வீட்டில் வயசு பொண்ணை வைத்துக்கொண்டு காதல் கத்திரிக்காய் என்று அலைய அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

கீதாவின் வாழ்வில் சந்தோஷத்தை கொடுத்து விட்டு தான் தன் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும், அதுவும் அவன் வேலை செய்யும் கம்பெனி முதலாளி மகளையே காதலிப்பது எப்படி சாத்தியம்? அந்தஸ்து என்ற ஒன்று இடிக்குதோ என்றா முடிவு எடுத்து அதை தனுவிடமும் சொன்னான்.

தனுவோ “நான் முதல் முதலில் காதலித்தது உங்களை தான் உங்களுக்காக நான் எத்தனை வருஷம் வேண்டுமானாலும் காத்துக் கொண்டு இருப்பேன். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் தங்கையாக நினைக்கும் கீதாவை நான் பார்க்க வேண்டும்” என்றதும்,

காதலர்தினத்தன்று கீதாவை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டுதல் வைத்தாள். அவளது இந்த பதிலை எதிர்ப் பார்க்கதவன் திக்குமுக்குகாடித் தான் போனான் தினேஷ்.

அதே போல் கீதாவையும் தனுவையும் சந்திக்க வைத்து நடந்ததை கூறினான். கீதாவிற்கு சந்தோஷத்தில் தலைக்கால் புரியாமல் தனுவை கட்டிக்கொண்டு நன்றி தெரிவித்தாள்.

பிறகு தனு  கீதாவின் காதலையும் அவள் வாழ்க்கையில் நடந்ததையும் கேட்டுக் கொண்டாள். இன்பாவை விட்டு வந்த காரணத்தையும் தினேஷ் விடாப்பிடியாக கேட்டான்.

“உன் அப்பா அம்மாவின் மேல் சத்தியமாக சொல்லி தான் ஆகா வேண்டும்” என்று சொல்லவும் வேறு வழி இன்றி அந்த காரணத்தையும் சொல்லிவிட்டு சந்தோஷமாக கிளம்பினாள். என்று நடந்ததை தினேஷ் சொல்லி முடித்தான்.

———————————————————

தன் மகன் சொன்னத்தை கேட்ட ரவி அந்த வேதனையிலும் மிகவும் சந்தோஷப்பட்டார். அவனை கட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவரை  சந்தோஷமாக தினேஷும் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தான்.

அருணுக்கோ ஒரு காட்சி மனதில் வந்து மறைந்தது ‘அப்ப நான் காலையில் பார்க்கும் போது யாரோ ஒரு ஆள் கிட்ட கோபமா பேசிக்கிட்டு இருந்தாளே’ என்ற எண்ணம் தோன்ற ‘இப்போதைக்கு விட்டுவிடுவோம். அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்’ என்று நினைத்து அவர்கள் பேசிக்கொண்டு இருப்பத்தை பார்த்தான்.

வசந்தாவுக்கு சந்தேகம் தலைக்கேறியது தன் கணவரை பார்த்து “ராஜாவும் கீதாவும் பிரிவதற்கு காரணம் நீங்க தான் இருக்கும்னு எனக்கு கொஞ்சம் புரியுது. ஆனா என்ன காரணம்னு இப்ப நீங்க சொல்லித்தான் ஆகனும்” என்று அனல் பார்வையுடன் தன் கணவனை பார்த்துக் கேட்டாள் வந்தா பிடிவாதமாக.

அவரோ ‘இதுவரை என் மனைவி தன்னிடம் கோபமாக பேசியது இல்லை. அப்படி இருக்கும் போது இன்று எல்லாரும் முன்னாலும் இப்படி கோபமாக பேசுவதற்கு நான் தானே காரணம்’ என்று சுந்தர் நடந்ததை கூற வாய் திறக்கும் போது,

செவிலியர் வந்து “மிஸ்டர் இன்பராஜா கண் முழிச்சிட்டாரு” என்று சொல்லிவிட்டு சென்றார்.

சுந்தர் சொல்ல வருவதை கேட்காமல் அனைவரும் ஆவலுடன் இன்பாவின் முன்னால் சென்று நின்று மகிழ்ச்சியும் வேதனையும் கலந்து அவனை ஒரு பயத்துடன் பார்த்தனர்.

பாவம் அவர்களுக்கு இருக்கிற பயம் என்னவென்றால், இன்பா கண் திறந்ததும் கீதாவை பற்றி அல்லவா கேட்பான் அதற்கான பதில் அவர்கள் கூறினால் என்ன நடக்கும் என்றே அவர்களின் அச்சமாக இருந்தது.

அவர்கள் நினைத்தது போல் கண் திறந்தவன் முதலில் கேட்டது என்னவோ கீதாவை தான். தன்னவளை தேடியவன் விழிகள் அவன் அருகில் அவள் இல்லதத்தை உணர்ந்து அனைவரையும் பார்த்து “கீத்து எங்கே?” என்று கேட்டான்.

அனைவருக்கும் என்ன பதில் சொல்வது எப்படி சொல்வது என்று முழித்தனர். தினேஷ் மற்றும் ரவி விஜயா வெளியேவே நின்றுக் கொண்டு அங்கு நடப்பத்தை பார்த்தார்கள்.

அனைவரின் தயக்கத்தை பார்த்தவன் அந்நிலையிலும் தன்னவளுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று உறுதிப்படுத்தினான்.

அவன் இவ்வளவு உறுதியாக இருப்பத்திற்கு காரணம் கீதா தான்.

என்ன தான் கோபமாக பேசி சண்டை போட்டாலும் அவன் இப்படி உயிர் போகும் நிலைமையில் இருக்கும் போது கண்டிப்பாக என்ன நடந்தாலும் விட்டு சென்று இருக்கமாட்டாள். என்று அவன் நம்பிக்கை தான் காரணம்.

அங்கே சூரியாவிற்ககோ ‘இன்பாவை தனிய விட்டுடாதீங்க அண்ணா’ என்ற கீதாவின் குரல் சூரியாவை சுற்றி சுற்றி வர பதறியடித்துக் கொண்டு எழுந்தவன், “கண்டிப்பமா கண்டிப்பா ராஜாவை தனிய விட மாட்டேன் கீத்துமா” என சத்தம் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

செவிலியர் அவனை சமாதானம் செய்ய, தன்னிலை அடைந்த சூரியா அவர்களிடம் இன்பாவை பற்றியும் கீதாவின் நிலைமை பற்றியும் விசாரித்தான். இன்பா கண் முழித்தத்தையும் கீதாவின் நிலைமை பற்றியும் கூறிவிட்டுச் சென்றாள் செவிலியர்.

கண்களை இறுக்க மூடி தன்னை தானே ஆசுவாசப்படுத்தி கொண்டு, தன் ஆருயிர் நண்பனை ஆறு வருடம் கழித்து நேர்க்கு நேர் பார்க்க சென்றான். 

அதை நினைத்து ஒரு பக்கம் எல்லையில்ல சந்தோஷம் அடைந்தாலும் இன்னொரு பக்கம் அதே நிலையில் வேதனையும் அடைந்தான்.

தன் நண்பனை பார்க்க குற்றவுணர் வந்தது சூரியாவிற்கு. ‘எப்படி இருந்தாலும் ராஜாவை எதிர்க்கொள்ள வேண்டும் தானே. கீதாவுக்கு வாக்கு கொடுத்து இருக்கின்றோம்’. என்று நினைத்து தன் நண்பனை பார்க்க சென்றான் சந்திரசூரியா.

அங்கே சென்றவன் அப்படியே அதிர்ந்துப்போய் நின்றான் இன்பாவின் கோபக் குரலைக் கேட்டு.

“இப்ப எல்லோரும் சொல்ல போறீங்கலா? இல்லையா? எவ்வளவு நேரமா கேட்கிறேன்” என்னனு அவன் கத்திய சத்ததில் பக்கத்தில் இருந்த அனைவரும் வந்து என்னாச்சி என்று எட்டிப் பார்த்தானர்.

டாக்டரும் வந்து “நீங்க இந்த அளவுக்கு கத்தினால் தையல் போட்ட இடம் பிரிந்துவிடும். பிறகு உங்களுக்கு தான் ஆபத்து கீதாவுக்கு ஒன்றும் இல்லை. அவங்களுக்கு இப்பதான் ஆப்ரேஷன் நடந்து முடிஞ்சிது இன்னும் இரண்டு நாள் கழிச்சி அவங்க கண்ணு திறப்பாங்க அதுவரைக்கும் கொஞ்சம் அமைதிய இருங்க” என்று அவனுக்கு ஊசிப் போட்டு விட்டு சென்றார்.

டாக்டர் போனாதும் “என் கீத்துக்கு என்னாச்சு இப்பவாது சொல்லுங்க. இல்லனா நான் என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது” என்று சொல்லியவனை பார்த்தவன்,

“கீதா அப்படி இருக்க காரணம் நான் தான்” என்று சொல்லிக்கொண்டே தன் நண்பனின் முன் வந்து நின்றான் சூரியா.

சூரியாவை பார்த்த இன்பா மயக்கம் நிலைக்கு போனான். அதிர்ச்சியிலும் டாக்டர் போட்ட மயக்க மருந்தின் வீரியத்திலும்.

தன் நண்பனை பல வருடம் கழித்து பார்த்ததும் ராஜாவிற்கு ஏதோ ஒரு வகை நம்பிக்கை வர அப்படியே  மயக்க நித்திரையில் ஆழ்ந்தான் இன்பராஜா.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page