காதல்- 30

காதல்-30 
 

 

இன்பராஜாவும் கீதாவும் மோதிரம் அணிந்துக் கொண்டு அவர்களின் திருமணத்தை பதிவு செய்தனர்.

இருவருக்குமே விவரிக்க முடியாதபடி ஆனந்தத்தில் திளைத்தனர்.

அவர்களின் நண்பன் ராமோ “டேய் மச்சி அதான் கல்யாணம் ரிஜிஸ்டர் ஆயிடிச்சு அப்புறம் என்னடா” என்று கிண்டல் செய்தான்.

“நீ வேற சும்மா இரு ராம். கீத்து ஏன் இவ்வளவு அவசரப்பட்டு கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண சொன்னானு தெரியல?. இதுல ஃபர்ஸ்ட் நைட் வேறயா? போடா” என்று இன்பா வெட்கப்பட்டு கூறினான்.

அதை கேட்ட ராமோ ராஜாவின்  தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைக்க,

“அம்மா மா..ஆஆ..வலிக்குதுடா ராம். இப்ப ஏன்டா என்ன அடிச்ச” என்று தலையை தேய்த்துக் கொண்டே கேட்டான் ராஜா.

ராமோ “அடிக்கல மச்சி கொட்டுனேன். பின்ன என்னடா? இன்னும் நம்ம இந்த ரிஜிஸ்டர் ஆபிஸை விட்டு போகவே இல்லை. அதுக்குள்ள ஃபர்ஸ்ட் நைட் கேட்குதா உனக்கு. ஏதோ கீதாவுக்கு 18 வயசு முடிஞ்சதுனால நாம தப்பிச்சோம். இல்லனா இந்நேரம் நம்ம கம்பியை தான் எண்ணிக்கிட்டு இருந்து இருக்கனும்” என்று கூறியவன் அதை கற்பனையும் செய்து பார்த்தான்.

“என்னங்கடா சின்ன பொண்ணை கடத்திட்டு போய் கல்யாணமா பண்றிங்க? என்று இன்ஸ்பெக்டர் லட்டியை எடுத்து ராமை வெலுத்து வாங்க, இன்பா வாயின் மேல் கை வைத்து சிரித்துக்கொண்டு இருந்தான்.

“யக்கா,யக்கா வலிக்குதுக்கா! என்னைய மட்டும் அடிக்கிறிங்க. கல்யாணம் பண்ணானே அவனையும் அடிங்கக்கா” என்று ராம் இன்ஸை ஏத்தி விட,

இன்பாவோ இடையில் புகுந்து, “மேடம் நான் எதுவும் பண்ணல மேடம். இந்த ராம் பையன் தான் என்னை ஏமாத்தி அழைச்சிட்டு போய் கல்யாணம் பண்ணி வச்சான். தப்பு பண்றவங்களை விட அந்த தப்புக்கு உடந்தையா இருக்குறவங்க தான் குற்றவாளினு உங்களுக்கு தெரியாதா மேடம். எவ்வளவு படிப்பு படிச்சுட்டு வந்து இருப்பிங்க”.என்று ராமின் காலை வாரினான்.

‘போச்சுடா கவுத்துட்டான் மொத்தமா கவுத்துடான். ஏற்கனவே இந்த அக்கா பயங்கரமா அடிக்கும். இதுல இவன் வேற ஏத்தி விட்டுட்டான். இப்ப என்ன அடி அடிக்க போகுதோ’ என்று இன்ஸை பார்க்க, அவர் லட்டியை கைகளால் முறுக்கி அடிக்க கை ஓங்க இன்பா ராம் முதுகில் ஒரு குத்து விட்டான்.

“அம்மா ஆஆ, டேய் லூசாடா நீ இப்ப எதுக்கு என்னை அடிச்ச” என்று நினைவுலகிற்கு வந்தான் ராம்.

ராஜாவோ “பின்ன என்னடா? காட்டு கத்து காத்துறேன். நீ வாய பிளந்து வானத்தை பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டான்.

“ஏன்டா சொல்ல மாட்ட! அடி வாங்குறது நாங்க தானே.” என்று  இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே பரத், இன்பாவின் பின் பக்கம் வந்து அவன் முதுகில் தட்டினான்.

பரத் தட்டியதில் ராஜாவிற்கு சுருக்கென்று வலி ஏற்பட அதில் “அப்பா” என்று கத்தியவன்,

“என்னங்கடா ஆளு ஆளுக்கு அடிக்கிறீங்க? பரத் இது தான் வர டைமா? ஏன்டா பரத் நீ அடிக்கும் போது ஊசி குத்துன மாதிரி இருக்குடா” என்று முதுகை தேய்த்துக் கொண்டு கேட்டான்.

பரத்தோ “ஆமா! ஆமா! நாங்க சும்மா தட்டுனா உனக்கு அப்படி தான் இருக்கும்” என்று சமாளிப்பதற்கு பேச்சை மாற்றினான்.

“ஆமா கீதா எங்கடா? ஆளை காணோம்” என்று பரத் கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம்,

கண்கள் சிவந்து கோபத்துடன் அவர்கள் முன் வந்து நின்றாள் கீதா.

அவளின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என்று இன்பா உணர்ந்து கீதாவின் தோளில் பிடித்துக் கொண்டு “என்னாச்சு கீத்துமா” என்று அக்கறையுடன் கேட்டான்.

அவன் அப்படி கேட்ட அடுத்த வினாடி இன்பாவின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தவள், பரத்தை அருவெறுப்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு இன்பாவிடம் பார்வை வீசி,

“எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல கை போட்டு பேசுற?. உனக்கு என்னடா உரிமை இருக்கு? என் தோள் மேல கை போட” என்று இன்பாவை அடித்து எதிர்த்து பேசியவளை பார்த்த அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.

அவர்களை எல்லாம் விட இன்பராஜாவிற்கோ பல மடங்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இங்கு என்ன நடக்குது என்று புரியாமல் தவித்தான் ராஜா.

ராம் தான் சுதாரித்து “ஏய் யாரை அடிக்குற? உனக்கு அவ்வளவு திமிர” என்று எகிறியவனை அடக்கினாள் கீதா.

“நீ யாருடா என்னை கேள்வி கேட்க?” என்று ராம் கண்ணத்திலும் அறைந்து எச்சரிக்கை விடுத்தாள்.

ராமும் தன் நண்பனுக்காக அனைவர் முன்னாலும் அமைதியாக இருக்க.

பரத்தோ கீதா பார்த்த அந்த  பார்வையிலே யாரும் அறியா வண்ணம் அங்கே இருந்து நழுவினான்.

இன்பாவிடம் திரும்பிய கீதாவோ சிறிது நேரத்திற்கு முன் மனம் முழுவதும் காதலுடன் ஆசையாக இன்பராஜா அவளுக்கு அணிவித்த மாலையை கழட்டி அவன் முகத்தில் வீசிவிட்டு திரும்பி நடக்க போனவளை கைபிடித்து தடுத்து நிறுத்தினான் இன்பராஜா.

அவனுக்கோ ‘இது எல்லாம் கனவா தான் இருந்து இருக்கும்’ என்ற நட்பாசையில் தன்னவளை பற்றி அவனுக்கு தெரியாதா என்ன? அவனை விட கீதாவை அறிந்தவர் யார் இருப்பார்?. அந்த நம்பிக்கையில் அவளை தடுத்தான்.

எங்கே அதற்கு மேல் அவள் அங்கு நின்று இருந்தாள் அவள் புட்டு உடைந்துவிடுமோ? இல்லை அடக்கி வைத்த அழுகை, வலி எல்லாம் தன்னவன் முகம் இதற்கு மேல் பார்த்தால் வெளியே வந்துவிடும்..என்ற அச்சத்திலே அங்கு இருந்து கிளம்ப தயாரனாள்.

அவளது பயம் இன்பாவோட இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் உயிருக்கே ஆபத்து நெருங்கி கொண்டு இருப்பதை அறிந்தவளால் எப்படி அவனை சாக விடுவாள்.

கண்ணை மூடி தன்னை கட்டுப்படுத்தியவன் அவன் புறம் திரும்பி ராஜாவின் காலரை பிடித்து ரொம்ப கஷ்டப்பட்டு தன்னவன் கண்களை தன் கண்ணில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெறுப்பை வைத்து நேருக்கு நேர் பார்த்து,

“என்னடா வேணும் உனக்கு? நான் என் அப்பாகிட்ட எதுவும் சொல்ல கூடாதா? அத சொல்ல நீ யாருடா? இப்ப இங்க வந்ததை கூட என் அப்பா கிட்ட சொல்லிட்டு தான்டா வந்து இருக்கேன். எனக்கு என் அப்பா தான் முக்கியம். நீ இல்லை இதை உனக்கு உணர்த்த தான் நான் இடத்துக்கு வந்தேன்” என்று அவளை வெறுக்க வைக்கவே அவ்வார்த்தைகளை பேசினாள்.

பின் அவனை விடுவித்தவள் திரும்பவும் போக. மீண்டும் கீதாவின் கைப்பற்றி,

கண்கள் கலங்க குரல் உடைந்து “நீ சொன்னது எல்லாம் பொய் தானே கீதா. எனக்கு தெரியும் நான் உன்னை காதலிச்சதை விட, நீ என்னை அளவுக்கு அதிகமா காதலிச்சனு. உன் உயிரே நான் தானு எனக்கு தெரியும். இத்தனை நாளா உன் கண்ணுல நான் காதலையும் அக்கறையும் தான் பார்த்து இருக்கேன்”. என்று இன்பா கெஞ்சுதலாக பேசியவனை விளுக்கென்று பார்த்தவள் மனமோ,

‘இல்லடா இன்பா நீ தான்டா என் மேல கண் மூடி தனமான காதலை வச்சி இருக்க. அதான்  நான் எவ்வளவு அவமானப்படுத்தினாலும் திரும்ப, திரும்ப நான் பேசுன வார்த்தை எல்லாம் பொய்யா இருக்க கூடாதானு என் கண்ணை பார்க்குற. உன் கண்ணை இனிமேலும் பார்க்குற சக்தி எனக்கு இல்லைடா. இதுக்கு அப்பறம் நீ எனக்கு இல்லடா. அதுவும் இல்லாம உனக்கே தெரியாம உன் உயிர் உன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்குடா. நீ உயிரோட இருக்கனும்னா நான் உன்னை விட்டு போகனும்டா” என்று மனதில் நினைத்த முடிவுடன் தன்னவனின் முகம் பார்த்து,

“இங்க பாருங்க மிஸ்டர்.இன்பராஜா நான் சொல்றத நல்ல கேட்டுக்கோங்க. நீங்க எனக்கு வேண்டாம். வேணவே வேண்டாம். இந்த ஜென்மத்துல நான் உயிரோடு இருக்குற வரை என் முகத்துக்கு முன்னாடி வராதீங்க.” என்று தன்னவன் பிடித்து இருந்த  கையை உதறிவிட்டு அங்கே இருந்த ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள்.

உறைந்து போன ராஜாவோ “தான் கேட்பது, பார்ப்பது எல்லாம் உண்மை தானா? இல்லை என் பிரம்மையா?’ என்று நினைத்தவன் மொத்தமாக உடைந்து போனான்.

பெண்ணவள் அவன் கையை உதறும் போது அவன் உயிரே அவனை விட்டு பிரிந்து போவது போல் உணர்ந்தவன் மெல்ல மெல்ல மயங்கி சரிந்தான்.

அருகில் இருந்த  ராம் மற்றும் நண்பர்கள் பேசிய எதுவும் அவன் காதில் விழவே இல்லை….

காதல்.. தந்த வலி தீரும் காதலினாலே.. 
கண்ணீரோடு முத்தங்கள் கலந்ததினாலே.. 
காயம் படும் வேளை காதல் மருந்தாகும்.. 
காதல் மடி மீது உயிரும் புதிதாகும்..

மயங்கியவனை ராம் மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சேர்த்துவிட்டு சுந்தருக்கு தகவல் சொல்லிவிட்டு அமர்ந்தான்.

அவன் கண்ணில் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டு இருந்தது. பாவம் அவன் வேறு என்ன தான் செய்வான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் சிரித்த முகத்துடன் பார்த்தவன் இப்படி மொத்தமா உடைந்து போய் இருப்பதை பார்த்து கீதாவின் மேல் வெறுப்பு உண்டானது ராமுக்கு.

அதற்குள் சுந்தர், கணேஷ், இந்து மூவரும் அங்கே வந்து என்ன நடந்தது என்று விசாரிக்க, ராம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி அழுதான்.

அவனை சமாதானம் செய்து இது எதுவும் ராஜாவின் அம்மாவுக்கு தெரிய கூடாது என்று சொல்லி அவனை வலுக்கட்டாயமாக அங்கு இருந்து அனுப்பி வைத்தார்கள்.

ராம் சென்ற பின் டாக்டர் இவர்கள் மூவரையும் அவர் ரூம்க்கு அழைத்து,

“உங்க பையன் உடம்புல ஊசி இருக்குறது நாள தான் மயக்கத்துல இருக்காரு” என்று சொல்லி அமைதியாக இருந்தார்.

சிறிது நேரம் கழித்து அங்கே நான்கு பேர் சிரிக்கும் சத்தம் மட்டுமே கேட்டது.

ஆட்டோவில் ஏறியவள் அதுவரைக்கும் கட்டுபடுத்தி வைத்து இருந்த அழுகை வலி அனைத்தையும் இருக்கும் இடம் மறந்து இரண்டு கையையும் நெஞ்சில் வைத்து கதறி அழுதாள்.

அவள் அழுவதை பார்த்த ஆட்டோ டிரைவர் கூட ஒரு நொடி ஆடி தான் போனார். என்ன பேசுவது எப்படி கேட்பது என்று குழப்பித்தில் வண்டியை அவள் சொன்ன  இடத்திற்கு விரைந்தார்.

‘அய்யோ இன்பா நான் பாவிடா பாவி. உன்னை இப்படி தவிக்க விட்டுட்டு வந்துட்டேன்டா. உன் உயிரை காப்பாத்த நம்ம காதலை விலைக்கு கொடுக்க வேண்டியது வரும்னு நான் நினைச்சு கூட பார்க்கலடா. சூர்யாவும் ராமும் மட்டும் தான்டா உனக்கு உன்மையான நண்பர்கள். இந்த பரத் பச்ச துரோகிடா. ச்சீ அவனை பத்தி முன்னாடியே உன்கிட்ட சொல்லமா மறச்சிடேன்டா. என் புத்திய செருப்பால அடிக்கனும்.

நண்பன் காதலினு தெரிஞ்சும் என் கிட்ட வந்து அவன் காதலை சொன்னானே அப்பவே அவனை செருப்பால அடிச்சிட்டேன். ஆனா உன்கிட்ட இருந்து மறைச்சது எவ்வளவு பெரிய தப்புனு இப்ப தான்டா புரியுது. என்ன நடந்ததுனு உனக்கு தெரிஞ்சா நீ தாங்க மாட்ட இன்பா. ஆனா, கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு நாள் எல்லா உண்மையும் தெரிஞ்சு என்னை தேடி வருவ, அது வரைக்கும் உனக்காக உன் மனைவியா நான் காத்திருப்பேன்டா” என அழுதுக்கொண்டு மனதில் தனக்கு தானே பேசியவளின் உணர்வை கலைத்தார் ஆட்டோ ட்ரைவர்.

“அம்மாடி நீ சொன்ன விலாசம் வந்துடுச்சுமா கண்ணு. நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதடா. நீ ஏன் அழுகுறனு எனக்கு தெரியாது. ஆனா எந்த கஷ்டமா இருந்தாலும் தைரியத்தை விட்டுடாதமா” என்று சொல்லிவிட்டு வண்டியை திருப்ப கீதா அங்கேயே நிற்பது தெரிஞ்சு அவள் அருகில் சென்றார்.

அதற்குள் பக்கத்து வீட்டு பெண்மணி கீதா அருகில் வந்து
“என்னடி கீதா நீ இங்க வந்து இருக்க. உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்லி உங்க மாமாவும் உங்க அம்மாவும் ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போய் இருக்காங்க. நீ என்னடான்னா இப்படி கல்யாண கோலத்துல வந்து நிக்குற. உங்க அப்பா தான் உன் காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாருனு கேள்விப்பட்டேனே. ஆனால் இப்படி வந்து நிக்கிற? என அந்த பெண்மணி பேசிக் கொண்டே இருந்த சமயம், பதற்றத்துடன் மீண்டும் வந்த ஆட்டோவில் ஹாஸ்பிடல் விரைந்தாள் கீதா.

மருத்துவமனைக்கு வந்ததும் ஆட்டோக்காரிடம் பணத்தை நீட்ட அதை மறுத்து விட்டு அவர் புறப்பட்டு விட்டார்.

கீதா உள்நுழைந்து விசாரித்து அவள் தந்தைக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சு என்ற பதற்றத்தில் எல்லா கடவுளிடமும் வேண்டியவள்,

தந்தையை பார்த்த அடுத்த வினாடி தரையில் மண்டியிட்டு உறைந்து அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தது.

அவள் அங்கு வருவதற்கு முன்பே அவள் அன்பு தந்தை அன்பரசன் இவ்வுலகை விட்டு பிரிந்து இருந்தார்.

கீதாவை பார்த்த பார்வதி, அவள் அருகில் வந்து அவள் கண்ணத்தில் மாறி மாறி அடித்து “பாவி பாவி உன் மேல உயிரையே வச்சு இருந்த மனுஷன இப்படி சாகடிச்சிட்டியேடி பாவி. உன் சந்தோஷம் தான் முக்கியம்னு நினைச்சு ஒன்னு ஒன்னா பார்த்து செஞ்சாருடி. உனக்காக என் கிட்ட சண்டை போட்டாருடி, அவரை கொன்னுட்டியேடி. நீ கல்யாணம் பண்ணிட்டு என் தாலியை அறுத்துட்டியே, காலையில நீ போன உடனே என் அண்ணா வந்தாரு.

பின்னாடியே அவரும் வந்து ‘என் மகள் என்னை ஏமாத்திட்டா பார்வதி. நான் அவள சரியா வளக்களையா பார்வதினு’ புலம்புன மனுஷனை நெஞ்சை புடிச்சுட்டு விழுந்தவரு தான். இந்த உலகத்தையும் நம்மளையும் தவிக்க விட்டுட்டு போயிட்டாருடி.

எல்லாம் உன் காதலால, உன் காதல் உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பார்த்தியா?. உன் காதலால நீ அனாதையா தான் இருக்க போறடி” என்றவர் தன் அண்ணனிடம் திரும்பி

“அண்ணா இனிமேல் நீங்க தான் என் பொண்ண பார்த்துக்கனும்” என்று சொன்ன அடுத்த கணம் தன் அன்பு கணவன் அன்பரசனின் மடியில் சரிந்து விழுந்தார்.

விதி கணவனுடனே மனைவியின் உயிரும் பிரிந்து இருந்தது அந்நொடி.

எந்த அளவுக்கு கணவன் மேல் பாசம் இருந்து இருந்தால் அவருடனே அவளும் போய் சேர்ந்து இருப்பார் என்று அங்கே நின்று அனைத்தும் பார்த்துக் கொண்டு இருந்த மனிதர்கள் மனதில் எழாமல் இல்லை.

தன் தங்கை மயங்கி சரிந்து விழுந்ததை பார்த்து பதறியவர், டாக்டரை அழைத்து பார்க்க சொல்ல. அவரும் உயிரும் பிரிந்தது என்று சொல்லிவிட்டு சென்றார்.

அதுவரைக்கும் கீதா இருந்த நிலை மாறாமல் தான் இருந்தது. டாக்டர் சொன்ன அந்த கடைசி வார்த்தையை கேட்டவள் அப்படியே மயங்கினாள் போனாள்.

பாவம் சின்ன பெண் அல்லவா அவள். ஒரே நாளில் பொக்கிஷமாக நினைத்த மூன்று பேரும் அவளை விட்டு பிரிந்தால் அவளாலும் என்ன தான் செய்ய முடியும். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் தத்தளித்தவள் அதை தாங்க முடியாமல் மயங்கினாள்.

இரண்டு நாள் கழித்து..

மெல்ல கண் முழித்த கீதா என்ன நடந்தது என்று நினைத்தவள்  கதறி கதறி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
ரவி தான் அவளை சமாதானம் செய்தார்.

“எல்லா காரியமும் நானே முடிச்சிட்டேன்மா. நீ இரண்டு நாளா கண்ணே முழிக்கல ஹாஸ்பிடல தான்டா இருக்கோம். நீ கண்ணு முழிச்சதும் உன்னை கூட்டிட்டு போலாம்னு டாக்டர் சொன்னாங்க. நம்ம வீட்டுக்கு போலாமாடா”. என்று அவளுக்கு ஆறுதலாக பேசியவர் கீதாவை அழைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அவள் வீட்டிற்குள் நுழையும் போதே கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒரு, ஒரு இடமும் தன் பெற்றோருடன் அவள் சந்தோஷமாக இருந்த ஞாபகத்தை நினைவுப்படுத்தியது.

ஆசை காதல் ஆருயிரே, 
அனாதை போல ஆகுவதோ, 
ஆசை காதல் ஆருயிரே, 
அனாதை போல ஆகுவதோ, 
காதல் கொண்டு அழுகிறேன், 
கண்ணின் நீரில் எரிகிறேன், 
வாயில்லாத குழந்தைபோல், 
வார்த்தையின்றி கரைகிறேன், 
ஓர் காற்றைப் போல காதல், 
ரெண்டும் தேசம் தாண்டி வீசும், 
பெண்ணின் காயம் பேசும்.

‘கீதாவை இப்படியே விட்டால் அவள் கதி என்ன ஆகுறது அதற்காக ஊருக்கும் போகாமல் இருக்க முடியாது’ என எண்ணி கீதாவை சமாதானம் செய்து அவளை அவரின் ஊருக்கு அழைத்துச் சென்றார் ரவி.

அங்கே போன ஆறு மாதத்திற்கு பிறகு தான் தன் மனைவி விஜயாவின் சுயரூபம் கொஞ்ச கொஞ்சமாக தெரிய காலங்கள் கடந்தனர்.

விஜயா கூட சேர்ந்து மகன் தினேஷின் ரூபத்தையும் பார்த்து பயந்தே போனாள் கீதா.

தினேஷ் ஊர சுத்தி கடன் வாங்கி இருக்க அதை அடைக்க, வேறு வழியின்றி ரவி குடி இருந்த வீட்டை விற்று அடைத்தார்.

பிறகு கீதாவோ ரவியை சமாதானம் செய்து அவள் பெற்றோர் வாழ்ந்த வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

இந்த ஆறு வருடத்தில் தன் பெற்றோரை நினைத்து வாடிய  ரோஜா பூப்போல் இருந்தவள் இப்போது தனக்கு ஆறுதல் சொல்வதை பார்த்து பெருமைப்பட்டார் ரவி.

அதன் பிறகு தான் விஜயாவின் வார்த்தை தாங்க முடியாமல் வேலைக்கு செல்ல முடிவு செய்து போன இடத்தில் தான் மீண்டும் தன்னவனை சந்திக்க நேர்ந்தது.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page