காதல் 39

உன்னை இந்த மாதிரி பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு ஆஷிக். அத்தனை பேருக்கும் முன்னாடி அந்தப் பெண்ணுக்காக என்னை அசிங்கப்படுத்துனல, இன்னைக்கு அவ வீட்டாளுங்க முன்னாடி நீ அசிங்கப்பட்டு நிக்குற. என்னை நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாதான் பொண்ணைத் தருவேன்னு அவங்க சித்தப்பா சொல்லிட்டானே, என்ன பண்ண போற ஆஷிக்?

என்னை எப்படிச் சம்மதிக்க வைக்கப் போற? என் கால்ல விழுவியா? ஆஷிக்கோட ஈகோ அதுக்கு ஒத்துக்குமா? என் மனசுல இருந்து சொல்றேன், எனக்கு உண்மையாவே உன்னைப் பார்த்தா ரொம்பவே கஷ்டமா இருக்கு, ஐ ரியலி மீன் இட். 

நமக்குப் புடிச்ச பொருள் நம்ம கண்ணு முன்னாடியே நமக்கு இல்லாம போறது கஷ்டமா இருக்குல்ல, அதே மாதிரிதான் ரொம்ப ஈஸியா நீ என்கிட்ட ஐம்பது கோடி குடுனு கேட்டியே, அப்போ எனக்கு இருந்துச்சு. உன்னை எங்க அடிச்சா வலிக்கும்னு நினைச்சுகிட்டே இருந்தேன், அதுவா அமைஞ்சிருச்சு. இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன். 

அப்புறம் ஆஷிக், என்கிட்ட எப்படிலாம் கெஞ்சணுமோ சீக்கிரமா கெஞ்சிறு. ஏன்னா ஆயிஷா என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் ஒரு முக்கியமான பிஸ்னஸ் டீலிங்க்காக நான் ஃப்ரான்ஸ் போறேன். அப்புறம் நீ என்னைப் பார்க்கிறது ரொம்பக் கஷ்டமாகிரும், வர்றதுக்கு நாளாகும். ஏன் சொல்றேன்னா அதுக்குள்ள ஜியாவுக்கு அவளோட வீட்ல வேற இடத்துல கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்கன்னா? அதான் சொல்றேன். 

உன் முகத்துல இன்னும், ‘ஈகோ, திமிரு, கொழுப்பு, ரோஷம்’ எல்லாம் தெரியுதே? என்கிட்ட கெஞ்ச வரும் பொழுது இதெல்லாத்தையும் தூக்கி போட்ரு. எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது. பாய் ஆஷிக்! ஆல் த பெஸ்ட்!” என்றவர் அவனை ஏளன பார்வை பார்த்தபடி கடந்து சென்றார்.

தன் கண்களில் கோபம் தெறிக்க ஆஷிக் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து தன் நடையைச் செலுத்தினான். 

“ஆஷிக் ஆஷிக்…” என்று ஹாஜரா எவ்வளவோ அழைக்க, அது எதையுமே தன் காதில் வாங்காதவன் ஜியாவின் இல்லத்தில் நடந்ததை நினைத்துக்கொண்டே நடந்து சென்றான். 

‘என்னுடைய கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க நீங்க யாரு’ என்று ஆஷிக் கேட்ட கேள்வியை நன்கு கட்டியாகப் பிடித்துக் கொண்ட அஸாத், “நான் அப்பாடா.”

“அந்த ஸ்தானத்தை நான் உங்களுக்கு என்னைக்குமே கொடுத்தது இல்லை.”

“அப்போ வேற யாருக்குக் குடுத்திருக்க? உன் அம்மாக்கு நான் தானே ஒரே புருஷன்? இல்லை வேற யாரும் இருக்காங்களா?” என்று அவர் வார்த்தையால் கொட்டிய விஷம் ஆஷிக்கின் உடம்பில் சீறிப்பாய, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த தன் உணர்ச்சிகளைக் காற்றில் பறக்க விட்டவன், 

“ஹவ் டேர் யு…” என்று தன் பற்களைக் கடித்தவாறு ஆஷிக் அஸாத்தின் சட்டையைப் பிடித்து, தன் கரங்களை முறுக்கியவாறு அவரது முகத்தில் ஓங்கி குத்த போக, அவனது கரத்தை பிடித்துத் தடுத்த ஷங்கர், “ஆயிரம்தான் இருந்தாலும் அவர் உங்களோட அப்பா. உங்க அப்பா கூட உங்களுக்குச் சரியான உறவு இல்ல போலையே? எனக்கு எதுவும் சரியாபடல. முதல்ல உங்க அப்பாவ சம்மதிக்க வச்சுட்டு வாங்க, அப்புறம் கல்யாணத்தைப் பத்தி பேசிக்கலாம். 

உங்க அப்பாவோட சம்மதம் இல்லாம என்னால ஜியாவை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி தர முடியாது.” என்று ஷங்கர் தன் முடிவைத் தெரிவித்தார். 

“அதை ஜியா சொல்லட்டும்.” என்று ஆஷிக் பிடிவாதம் பிடிக்க, 

“இல்லை, உங்க அப்பாவ சம்மதிக்க வைங்க. இப்படி அப்பாவும் பையனும் சண்டை போட்டுட்டு இருந்தா, அங்க என் பொண்ணு எப்படிச் சந்தோஷமா இருப்பா? முதல்ல உங்க கோபத்தைக் குறைங்க, உங்க வீட்ல உள்ள பிரச்சனைய சரி பண்ணுங்க.” என்றவர் பிடிவாதமாய் கூற, அவரது பிடிவாதம் ஆஷிக்கின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.

இதற்கு மேல் விட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று உணர்ந்த ஹாஜரா, ஆஷிக் கோபத்தில் எதுவும் செய்து விடுவானோ என்கின்ற பயத்தில், ஜியா வந்தால்தான் அங்கிருந்து செல்வேன் என்று பிடிவாதமாய் இருந்தவனை வலுக்கட்டாயமாக அழைத்து இல்லை இழுத்து சென்றார். 

அவர்கள் வந்த நேரம் ஜியா வெளியே போயிருந்ததால், அவளுக்குத் தன் வீட்டில் நடந்த கலவரம் எதுவும் தெரியாது. தங்கையுடன் இரவு வீடு திரும்பியவளிடம் ஷங்கர், “ஜியாமா சித்தப்பா உன்கிட்ட கேட்காம, நீ தப்பா நினைக்க மாட்டனு நம்பி ஒரு முடிவு எடுத்திருக்கேன்.”

“நான் ஏன் உங்களை தப்பா நினைக்க போறேன். சொல்லுங்க சித்தப்பா என்ன முடிவு?” என்று கேட்க,

“எனக்குத் தெரியும்டா, எங்க என் முடிவ நீ ஏத்துக்காம போயிருவியோனு உன் சித்திதான் பயந்துட்டா.” என்றவர் இன்று நடந்த அனைத்தையும் கூற, அதிர்ச்சியில் கண் கலங்கி நின்றவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.

“என்னாச்சு, நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனாமா?” என்ற ஷங்கரிடம், ஜியா பதில் பேசாமல் தன் கைகளைப் பிசைந்தவாறு நிற்க, “என் முடிவுதான் உன் முடிவுனு தெளிவா சொல்லிட்டேன்மா. உனக்கு எந்த வருத்தமும் இல்ல தானே?” என்று கேட்க, 

ஏற்கனவே ஆஷிக்கை விட்டு பிரிய வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தவள், தன் சித்தப்பாவின் மனதையும் காயப்படுத்த விரும்பாதவள், அவரிடம் தன் மனதில் உள்ள எண்ணத்தை மறைத்து அவரது முடிவில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறினாள். 

காலை ஒரு எட்டு மணியளவில் ஆதர்ஷ் ஒருவித தயக்கத்துடன் ஆஷிக்கிடம், “நல்லா யோசிச்சுட்டியாடா, எல்லாம் சரியா வருமா? எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ நல்லா…” என்று முடிப்பதற்குள்,

“எல்லாம் பண்ணிட்டல?” என்று ஆஷிக் கூறியதில் இருந்தே அவன் தான் கூறிய எதையும் கேட்க விரும்பவில்லை என்பதை உணர்ந்தவன், இனி தான் பேசி எந்தப் பயனும் இல்லை என்பதையும் நன்கு புரிந்துகொண்டான். 

அவர்கள் பேசி கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த ஜியா, “என்ன ஆஷிக் திடீர்னு ஃபோன் பண்ணி, புதுசா பிள்ளையார் கோவிலுக்கு வர சொல்லிருக்க? ஏன் வர சொன்ன, நீயும் ஆதர்ஷும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்கவும், 

ஆதர்ஷ், “ஒரு ஃபோன் பண்ணணும், இதோ வந்திடுறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, 

“என்னாச்சு, ஆதர்ஷ் ஏன் ஒரு மாதிரியா இருக்கான்? நீ ஏன் எதுவும் பேசமாட்டிக்கிற? ஃபோன்ல எதோ முக்கியமா பேசணும்னு சொன்ன?”

“முக்கியம்தான்…” என்று இழுத்த ஆஷிக்கிடம்,

“என்னது ஆஷிக்?” என்று வினவியவளின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்தவன்,

“இன்னைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம்.” என்று கூற, ஜியாவிற்கோ அது பேரதிர்ச்சியாக இருந்தது. 

“என்ன ஆஷிக் சொல்ற?”

“என்னன்னா எனக்குப் புரியலை, நான் என்ன புரியாத பாஷையா பேசுறேன்?”

“ஆனா இது எப்படி நடக்கும்?”

“இப்போ இந்த நிமிஷம் நம்ம கல்யாணம் நடக்கும், நடக்கணும், நடந்தே ஆகணும்.” என்றவனின் வார்த்தைகளில் அப்படி ஒரு உறுதி.

“சித்தி, சித்தப்பா…” என்று தயக்கத்துடன் கூறிய ஜியாவிடம் கர்ஜித்தவாறு, 

“உன் சித்தி, சித்தப்பாகிட்ட கேட்டா என்னை லவ் பண்ணின? என்ன எல்லாரும் என்னை வச்சு விளையாடிட்டு இருக்கீங்களா? இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் உன்னை விரும்புறேன், நீ என்னை விரும்புற. கல்யாணம் பண்ணி வைக்கிறத விட்டுட்டு என் அப்பாவை சமாதானம் பண்ணு, ஆட்டுக்குட்டியை சமாதானம் பண்ணுனு உன் சித்தப்பா கதை சொல்லிட்டு இருக்காரு.” சிடுசிடுக்க,

“ஆஷிக் கொஞ்சம் பொறுமையா இரு…”

“ஜியா எதுவும் பேசாத, உனக்காக நூறு வருஷம் கூட என்னால பொறுமையா இருக்க முடியும். ஆனா அதெல்லாம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. ஏன்னா அப்போ உன்னை நான் நம்புனேன், இப்போ எனக்கு உன்மேல அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது. நேத்து அவ்வளவு நடந்திருக்கு, உன் வீட்ல சொல்லாமலா இருந்திருப்பாங்க? 

நீ ஒருவார்த்தை கூட நீ எனக்குப் ஃபோன் பண்ணி பேசல. நீ இப்போலாம் சரியே இல்லை, நானா வந்தாலும் விலகி விலகி போற. என் மேல உள்ள கோபத்துல இவ்வளவு நாள் அப்படி இருந்த ஓகே, ஆனா ரெண்டு பேருக்கும் உள்ள ப்ராப்ளம் தீர்ந்த பிறகும் நீ இப்படி என்னை விட்டு விலகி விலகி போறது, எனக்கு உன் மேல உள்ள நம்பிக்கைய மெல்ல மெல்ல குறைக்குது. எங்க உன் சித்தப்பா பேச்ச கேட்டுட்டு, நீ மறுபடியும் என்னை விட்டுட்டு போயிருவியோனு பயமா இருக்கு.”

“ஆஷிக் நான் சொல்றத கொஞ்சம் கேளு…”

“கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் என்ன வேணும்னாலும் சொல்லு, நான் கேட்டுக்கிறேன்.”

“ஆஷிக் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற?”

“நீதான் புரிஞ்சிக்க மாட்டிக்கிற.”

“ஆஷிக்…”

“ஜியா இப்போ நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல வக்கில் வருவாரு, அவர் முன்னாடி மாலைய மாத்திக்கிறோம். எல்லாம் ஒரு ஐ விட்னஸ்க்காகத்தான், அப்புறம் நாம ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். இந்தக் கல்யாணம் எல்லாம் இந்த ஊர் உலகத்துக்காகத்தான். மத்தபடி என் மனசுல நீ என் மனைவியாதான் வாழ்ந்துட்டு இருக்க.” என்றான் மிக உறுதியாக.

“இவ்வளவு ஏற்பாடு பண்ணிருக்க, என்கிட்ட எதுவுமே கேட்கல?”

“என்ன கேட்கணும், நீ என்னை லவ் பண்ற, நான் உன்னை லவ் பண்றேன். வீட்ல பேசுனோம் ஒத்துவரல, அதனால இப்படிக் கல்யாணம் பண்றோம். இதுல கேட்க என்ன இருக்கு?”

“இதுதான் உன் முடிவா?”

“ஆமா”

“என்னால திருட்டுக் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது, இது வேண்டாம்.” என்றவள் தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு மேலும் தொடர்ந்து, “உன் அப்பா சொல்றதும் சரிதான், நான் உனக்கு எந்த வகையிலும் தகுதி இல்லாதவ. பேசாம நீ உனக்குப் பொருத்தமான ஒரு பொண்ணா பார்த்து…” என்று அவள் முடிப்பதற்குள்,

“ஷட் அப்!” என்று உரக்க கத்தியவன், அவளது கரம் பிடித்துத் தன் பக்கம் திருப்பி, 

“என்ன பேசிட்டு இருக்கோம்னு தெரிஞ்சிதான் பேசுறியா?”

“ஆஷிக் கோபப்படாம நான் சொல்றத கேளு, நாம சேர்றது யாருக்கும் புடிக்காத அப்போ, நாம சேர்ந்துதான் எதுக்கு…”

“அப்போ இந்த ஆஷிக் உனக்கு வேண்டாம்?”

“இந்த ஜியா உனக்கு வேண்டாம், நீ நல்ல பொண்ணா…”

“போதும்… என்னை வேண்டாம்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இருக்கு, ஆனா நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லுற ரைட்ஸ் உனக்குக் கிடையாது. நான் வேண்டாம்ல, ஆஷிக் வேண்டாம்ல, போறேன்… இனிமே நான் யாருக்கும் கிடைக்க மாட்டேன்.” என்று கலங்கியவனைத் தடுத்தவள், 

“ஆஷிக் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற?”

“புரிஞ்சிக்க என்னடி இருக்கு, நீதான் வேணும்னு உருகிட்டு இருக்கேன். ஆனா நீ அதைப் புரிஞ்சிக்காம என்னை வேண்டாம்னு சொல்ற. அப்போ நான் ஏன் வாழணும்?” என்றதும் அவனது இதழை தன் கரத்தால் மூடியவள், 

“நீ ஏன் சாகணும்? நான்தான் சாகணும். நான் செத்து போறேன், எப்பவும் உனக்குக் கஷ்டத்தை மட்டும்தான் கொடுக்கிறேன். வாழுறதுக்கான தகுதியே இல்லாத நான்தான் சாகணும். எல்லாருக்கும் என்னால கஷ்டம். வீட்ல உள்ளவங்களுக்குக் கஷ்டம், உனக்குக் கஷ்டம். நான் கஷ்டப்பட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்துறேன். யாரையும் சந்தோஷமா வச்சுக்க முடியாத அதிர்ஷ்டம் கெட்டவ…” என்று ஜியா கண்ணீர் மல்க ஏதேதோ பேச அவள் அழுவதைத் தாங்க இயலாதவன், 

“ஜியா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, நீ என் ஏஞ்சல்! நீதான் என் சந்தோஷம்!” என்று சமாதானம் கூற,

“இல்ல ஆஷிக், என்னை இவ்வளவு நேசிக்காத, அதுக்கு எனக்குத் தகுதி இல்லை. என்னால உனக்குக் கஷ்டம் மட்டும்தான் குடுக்க முடியும். நீ நல்லா இருக்கணும், நான் இருந்தா உனக்குப் பிரச்சனைதான். உனக்குச் சந்தோஷமே இருக்காது. நான் போயிடுறேன், செத்து போயிடுறேன், நீ நல்லா இரு.” என்றதும் எரிச்சல் அடைந்த ஆஷிக் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, எவ்வளவோ அவளைச் சமாதானம் செய்ய முயற்சித்தும்,

ஜியா, “நான்தான் சாக வேண்டியவ, உன் காதலை புரிஞ்சிக்காம உன்னைச் சந்தேகப்பட்டு ச்ச… எனக்கு என்னை நினைச்சா அசிங்கமா இருக்கு.” என்று அவன் கூறியதை கேட்கமால் தான் சொல்லியதையே மீண்டும் மீண்டும் கூறி, “நான் செத்து போறேன்…” என்று அடுத்த அடி எடுத்து வைத்தவளிடம் ஆஷிக்,

“செத்து போ…” என்று கூற, அவனிடம் இருந்து அப்படி ஒரு பதிலை ஏதிர்பாராதவள் அவனை ஆச்சரியமாய் பார்க்க, அவள் கிரகிக்கும் முன்பே அவளது கரம் பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டவன், 

“அதுக்கு முன்னாடி உன்னை மாதிரி…” என்று காதோரத்தில் ரகசியம் பேசி, அவள் இமைக்கு நொடி பொழுதில், அசைந்தாடி கொண்டிருந்த அவளது ஒற்றை இதழை தன் இதழால் வளைத்து பிடித்து, மேவும் கலைஞனை போலத் தன் அதரம் என்னும் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினான்.

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!