காதல் 4

ஜியா கோபமாகத் தன்னைப் பார்ப்பதை கவனித்த ஆஷிக் வேண்டும் என்றே அவளை வம்பிழுப்பதற்காக, தன் இதழில் விஷமம் ததும்ப, 

“என்ன சந்தீப் சார், ரொம்ப ஹாட்டா இருக்கே?”

“ஆமாப்பா, லைட்டா எனக்கும் அப்படித்தான் இருக்கு, ஏசி சர்வீஸ் பண்ணணும்னு நினைக்கிறேன்.”

“ஷப்பப்பா… அங்க இருந்து பார்த்தா அனல் இங்க அடிக்குது.” என்று அவன் கூறிய பின்பு, அவருக்கு அவன் ஜியாவை வம்பிழுப்பது புரிய, 

அவர், ”ஆஷிக், அப்படிலாம் சொல்லாதீங்க. ஜியா மும்பையில உள்ள பெரிய காலேஜ்ல எம்பிபிஸ் முடிச்சுட்டு, லண்டன்ல பெரிய யூனிவர்சிட்டில ஸ்காலர்ஷிப்ல ஹார்ட்க்கான ரிசெர்ச் முடிச்சுட்டு, அங்க குடுத்த வேலைய வேண்டாம்னு சொல்லிட்டு, நம்ம ஊருக்கு சேவை செய்ய வந்திருக்காங்கப்பா.” என்று மூச்சு விடாமல் அவர் சொல்லி முடிக்க,

கொஞ்சம் கூட அலட்டிக்காதவன் மிகவும் இயல்பாக அதே விஷம புன்னகையோடு, “பார்த்தீங்களாடா, ஹார்ட்டே இல்லாதவங்கலாம் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டாம்? செம காமெடியா இருக்குல்ல… மே பீ இவங்க லண்டன்ல மத்தவங்க ஹார்ட்ட எப்படி எல்லாம் டிசைன் டிசைனா உடைக்கலாம்னு ரிசெர்ச் பண்ணிருப்பாங்கனு நினைக்கிறேன், நீங்க என்னடா சொல்றீங்க?” என்றவனைப் பார்த்து முறைத்த ஆதர்ஷ்,

“ஷட் அப் ஆஷிக்!” என்று கூற,

“ஓகே நான் எதுவும் சொல்லலப்பா…” என்று தன் வாயை மூடுவது போல செய்கை செய்ய, 

மிகவும் தர்மசங்கடத்தில் இருந்த சந்தீப், அசடு வழிந்த புன்னகையோடு, “ஜியா, ஆஷிக் எப்பவுமே அப்படித்தான் விளையாட்டா ஏதாவது சொல்லுவாரு, ஆனா மனசுல எதுவும் இருக்காது.” என்று சமாளிக்க, ஜியா அதற்கு பதில் எதுவும் கூறாமல் சிறு புன்னகையை மட்டும் பதிலாய் கூறினாள்.

ஆதர்ஷ் தன் பங்கிற்கு, “ஜியா அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்றான், உனக்குத்தான் அவனைப் பத்தி தெரியுமே?”

“இட்’ஸ் ஓகே ஆதர்ஷ், கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் பார்க்கலாமே?” என்றவள், ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறு அங்கிருந்து செல்ல, சிரித்துக் கொண்டே இருந்த ஆஷிக் திடீரென்று மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு ரோஹித்தின் தோளில் சாய்ந்தவாறே கீழே விழுந்தான். 

அவன் விழுந்ததைக் கண்டதும் ஆங்காங்கே இருந்த அனைவரும் கூட்டம் கூடினர், ரோஹித் பதறி போய் ஆஷிக்கை எழுப்ப முயற்சி செய்ய, ஆஷிக்கோ பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தான். இதைக் கண்ட ஜியா பதறி போய் அவன் அருகில் வந்து அவனை எழுப்ப முயற்சி செய்ய எந்தப் பயனும் இல்லை. 

ஜியா தனது இரு கரங்களைக் கொண்டு அவனது நெஞ்சை அழுத்த அப்பொழுதும் எந்தப் பயனும் இல்லாமல் போக, அவள் செய்வதறியாமல் நின்றாள். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவன், “ஐ திங்க் ஹீ நீட் ஸிபிஆர்” (CPR) என்று கூற, 

ஒரு நொடி என்ன செய்வது என்று யோசித்த ஜியா, பின்பு பல்லைக் கடித்துக் கொண்டு அவனது உயிரை காப்பாற்றுவதற்காக, அவனுக்கு ஸிபிஆர் கொடுக்க முடிவு செய்து,

ஆஷிக்கின் இதழ் நோக்கி குனிந்தவள், அவனுக்கு ஸிபிஆர் முறைப்படி முதலுதவி கொடுக்க, ஆஷிக்கோ தன் ஒற்றைக் கண்ணைத் திறந்தவாறு கண் விழித்து ஆதர்ஷ், ரோஹித் மற்றும் சுத்தி இருந்தவர்களைப் பார்த்து கண்ணடிக்க, 

அனைவரும் சிரித்தனர். ஆதர்ஷ், ரோஹித் மட்டும் ஆஷிக்கை பார்த்து முறைக்க, என்னது, ஏன் அனைவரும் சிரிக்கிறார்கள் என்று நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்த ஜியாவிற்கு ஒன்றும் விளங்காமல் போக, கீழே இருந்த ஆஷிக்கைப் பார்க்க, அவனோ அவளைப் பார்த்து சிரித்தவாறு கண்ணடித்தான். தன்னிடம் விளையாடுகிறான் என்று உணர்ந்தவள் சட்டென்று எழும்பி,

‘இன்னும் எவ்வளவு தான்டா என்னை அழ வைக்கப் போற? ஆனா அழுறதுக்கு என் மனசுலையும் தெம்பில்லை, என் உடம்புலையும் தெம்பில்லை.’ என்று தன் மனதிற்குள் விம்மியவள், கண்களில் நீர் முட்ட அங்கிருந்து சென்றாள். 

“ஜியா ப்ளீஸ்…” என்ற மேனேஜர் ஆஷிக்கிடம், “என்னப்பா எப்போ எதுல விளையாடணும்னு உனக்குத் தெரியாதா? அதுவும் ஒரு பொண்ணுக்கிட்ட போய்…” என்றவர், தன் வருத்தத்தை ஆஷிக்கிடம் கூறிவிட்டு, ஜியாவை சமாதானம் செய்ய அங்கிருந்து சென்றார். 

ஆதர்ஷ், ரோஹித் இருவரும் அவனைப் பார்த்து முறைத்தவாறு அங்கிருந்து செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற ஆஷிக், “டேய் எங்கடா என்னை விட்டுட்டு போறீங்க? நில்லுங்க.” என்றவாறு அவர்களைத் தடுத்தவன், “என்னடா கூப்பிட்டுட்டே இருக்கேன், நீங்க என்னனா எங்களுக்கு என்ன வந்ததுனு போயிட்டே இருக்கீங்க?”

“வழிய விடுடா.” என்ற ஆதர்ஷிடம்,

“ஏன்?”

“ஆஷிக், நாங்க கோபமா இருக்கோம்.” என்று ரோஹித் கோபமாய் கூற,

“அதுதான் ஏன்?”

“ஏன்டா அப்படி பண்ணின? ஜியா உன் மனசை காயப்படுத்திருக்கா, அதனால எனக்கு அவ மேல கோபம்தான். ஆனா அதுக்காக இப்போ நீ பண்ணினதை என்னால ஏத்துக்க முடியாதுடா. நீ…” என்று தொடர்ந்த ரோஹித்தை தடுத்த ஆதர்ஷ், 

“இவன்கிட்ட ஏன்டா இதெல்லாம் சொல்ற? சார் பெரிய மகான் ஆகிட்டாரு. ஆமா லவ் பத்தி எல்லாருக்கும் அவ்வளவு அட்வைஸ் பண்ணுவ, இதுதான் உன் லவ்வா? அவதான் உன் மனசை உடைச்சா, நீ உண்மையா தானே காதலிச்ச? அப்போ நீ ஏன் அவள் மனசை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கிற? நான் ஒன்னு கேட்குறேன், உனக்கெல்லாம் அறிவுனு ஒன்னு இருக்கா, இல்லையா? 

ஒரு பொண்ணை இப்படியா எல்லார் முன்னாடியும் இன்சல்ட் பண்ணுவ? பாவம்டா அழுதுட்டே போறா. விளையாடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு ஆஷிக். இனிமே எல்லாரும் அவளைப் பார்த்தா சிரிக்க மாட்டாங்க?”

“டேய் இப்போ எதுக்கு நீங்க ரெண்டு பேரும் அவ சைட் எடுக்குறீங்க?”

“இதுல யாரு யார் பக்கம் நிக்குறாங்க என்பது முக்கியம் இல்லை, நடந்த விஷயத்தைப் பாரு. நீ டக்குன்னு விழுந்தது பார்த்து நானும் ரோஹித்தும் எவ்வளவு பதறிப்போயிட்டோம் தெரியுமா? எதுல விளையாடுறதுனு ஒரு அறிவு வேண்டாம். இனிமே எல்லாரும் அவளைப் பார்த்தா சிரிக்க மாட்டாங்க? ஒரு மாதிரியா பார்க்க மாட்டாங்க? அவளுக்கு மத்தவங்களை பேஸ் பண்ண கஷ்டமா இருக்காது? ஒன்னும் கேக்குறேன், எப்போவும் ஷீ ஐஸ் மை கேர்ள் அவ எனக்கு மட்டும் தான்னு கர்வத்தோட சொல்லுவியே, அந்தக் கர்வம் இன்னைக்கு எங்கடா போச்சு? உன் கேர்ள நாலு பேர் தப்பா பார்த்து, தப்பா சிரிச்சா உனக்கு ஓகேவா?”

“ஐ டோன்’ட் கேர்.” என்று சிறு தடுமாற்றத்தோடு சொல்ல,

“அப்படியா அதை அப்படியே என் கண்ணைப் பார்த்து சொல்லுங்க சார்.” என்று இடைவெளி விட்டவன் அசட்டு சிரிப்புடன், “எனக்கு அவளைப் பிடிக்காது, அவளுக்கு என்ன நடந்தாலும் எனக்குக் கவலை இல்லன்னு சொல்லி, உன்னை நீ வேணும்னா ஏமாத்தலாம். ஆனா என்னை இல்லை. 

இப்போ வரை அவளை மறக்க முடியாம நீ எவ்வளவு கஷ்டப்படுறனு எனக்கு நல்லாவே தெரியும். பார்ட்டி, பப், பொண்ணுங்கனு சுத்திட்டு திரியிறியே, இதெல்லாம் நான் அவளை மறந்து மூவ் ஆன் பண்ணி, எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு காட்டுறதுக்காக, இந்த உலகத்துக்கு முன்னாடி நீ போடுற வேஷம்னு எங்களுக்குத் தெரியாதா? எங்க நான் சொன்னது எல்லாம் பொய்னு நெஞ்சுல கை வச்சு சொல்லு பார்ப்போம்.” என்று ஆதர்ஷ் கடிந்து கொண்டிருக்க, அவர்களோடு பணி புரியும் சக பைலட் ஒருவன் அவர்களிடம் வந்து,

“டேய் ஆஷிக், நீ இன்னைக்குக் கலக்கிட்டடா. செம போ…” என்று கூற,

ஆதர்ஷ் எரிச்சலோடு ஆஷிக்கைப் பார்க்க, “சும்மாதான், நாம அப்புறமா பேசுவோமே…” என்று ஆஷிக் மழுப்ப,

“பேசுவோம்டா, ஆனா உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கும் அப்படிப் பண்ணணும்னு ஆசை வந்திருக்கு, ஷீ இஸ் ஹாட் மேன்!” என்று கூற, 

கோபமுற்ற ஆஷிக் அவனது சட்டையின் காலரை பற்றிக்கொண்டு, “ஹவ் டேர் யு? மைண்ட் யுவர் லாங்குவேஜ்?” என்று கூற, அவன் பதிலுக்கு ஆஷிக்கின் சட்டையைப் பிடிக்க, ரோஹித் அவர்களைக் குறுக்கிட்டு சமாதானம் செய்து அந்தப் பைலட்டிடம்,

ப்ளீஸ்டா விடு, அவன் கொஞ்சம் டென்ஷனா இருக்கான். ப்ளீஸ் இதை இப்படியே விட்ரு.” என்று அவனை அனுப்பி வைக்க,

ஆஷிக், “கொழுப்பை பார்த்தியாடா? இவனை எல்லாம் விட்டு வைக்கவே கூடாது.” என்று எகிற,

ஆதர்ஷ், “ஏன் இப்போ அவன் அப்படி என்ன பண்ணிட்டான்? நீ பண்ணினதை விட அவன் பெருசா எதுவும் பண்ணல. அவன் பேசுனது தப்புனா, நீ பண்ணினது அதைவிடப் பெரிய தப்பு.”

“டேய் ஆதர்ஷ், ரோஹித் நில்லுங்கடா…”

“அவளைச் சமாதானம் பண்ணிட்டு எங்ககிட்ட வா, கீழே பார்க்கிங்ல வெயிட் பண்றோம்.” என்றவன் ரோஹித்துடன் அங்கிருந்து செல்ல, 

ஆதர்ஷ் கூறியதையும் ஜியா அழுததையும், தன் பழைய நினைவுகளையும், தனக்குள் சில நொடிகள் நினைத்து பார்க்கும் பொழுதே ஆஷிக்கின் கண்களின் ஓரம் கண்ணீர் வடிய, வடிந்த கண்ணீரைத் துடைத்தவனின் கால்கள் ஜியாவைத் தேடி தன் நடையைச் செலுத்தியது.

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!