கெட்டவன் 17

டேய் ரவி, அந்த ரமேஷ், சுரேஷ் ரெண்டு பேரையும் வாச் பண்றதான? அவனுங்க மறுபடி அனுவை தொல்லை பண்ணக்கூடாது! என்று புருவங்கள் ஏறி இறங்க, ரவியிடம் கூறிக் கொண்டிருந்தான் வெற்றி.

ஆமாண்ணே, அவனுங்க இனிமே அனு பாப்பா பக்கம் கூட வர மாட்டாங்க. அப்படி ரெண்டு பேரையும் தட்டி வச்சிருக்கேன் நான்! என்று சட்டை காலரை தூக்கி பிடித்து கூறினான் ரவி.

வெற்றி ரவியை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

அண்ணே… கொஞ்சம் வீடு வரை போய்ட்டு வரேன்! என்று மெல்லிய குரலில் வெற்றியிடம் கேட்டான் ரவி.

எதுக்கு டா? இந்த நேரம்? என்றான் வெற்றி.

அம்மா கால் பண்ணாங்க. போய் என்னனு கேட்டுட்டு வரேன்! என்றான் ரவி.

வெற்றியின் நெற்றியில் புருவங்கள் அழகாக முடிச்சிட்டது.

ரவி திருட்டு முழி முழித்தான். வெற்றியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தடுமாறினான். கெட்டவன் விழிகளை வைத்தே கண்டு பிடித்து விடுவானே!

நிஜமாதான் அண்ணே. நான் ஒரு டைம் போய் அம்மாவை பார்த்து பேசிட்டு வரேன்! என்று வெற்றியின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டான் ரவி.

செல்லும் ரவியின் முதுகை பார்த்த வெற்றி, லேசாக புன்னகைத்து கொண்டான்.

ஹய்யோ, டைம் வேற ஆச்சி! மனதுக்குள் புலம்பிக் கோண்டே டூ வீலரில் பறந்து கொண்டிருந்தான் ரவி.

நிஷாவை பார்க்க ஆர்வம் வேறு அவனுக்கு அதிகமானது.

போகும் போதே தாய்க்கு அழைத்து, கெஸ்ட் வராங்கம்மா. ஏதாவது செஞ்சி வைங்க! என்று கூறிவிட்டு உடனே அழைப்பை துண்டித்தும் விட்டான்.

ரொம்ப நேரமா போன மாதிரி இருக்குதே நிஷா? அன்னைக்கு கெட்டவன் கூப்பிட்டு வரும் போது உடனே ரவி அண்ணே வீடு வந்துருச்சு! என்றாள் அனு.

அன்னைக்கு நீ பயந்துட்டே போயிருப்ப அனு. அதுனால சீக்கிரம் வந்த மாதிரி இருந்திருக்கும். இன்னைக்கு நாம ரெண்டு பேர்தான போறோம். அதுனால பயம் இல்லை உனக்கு! என்றாள் நிஷா.

அனு ஒன்றும் புரியாமல் தலையை குலுக்கிக் கொண்டாள்.

இருவரும் ரவி வீட்டின் முன் வாயிலுக்கு வரவும், ரவியின் டூ வீலர் பறந்து வந்து நின்றது.

டூ வீலரில் இருந்து இறங்கியவன், வெளி கேட்டை அவனே திறந்து விட்டான். இருவரும் உள்ளே செல்ல, ரவி அண்ணே! அனு துள்ளலாக அவன் பெயரை உச்சரிக்க, நிஷா ரவியை பார்த்து வாய்க்குள் சிரித்துக் கொண்டாள்.

ரவிக்கு சந்தோஷம் தாங்கவில்லை நிஷாவை பார்த்ததும்.

வாங்க, “வெல்கம் டூ அவர் ஹோம்!” முப்பத்து இரண்டு பற்களும் அழகாக பளிச்சிட்டது.

சுட சுட டீயும் வாழைக்காய் பஜ்ஜியும் எடுத்து வந்தார் சுபா.

வாங்கம்மா, உட்காருங்க! என்றவரின் பார்வை அனுவை விட்டு அகலவில்லை.

நீங்களும் உட்காருங்க! என்ற நிஷா அவர்களுக்கு எதிரில் போட்டிருந்த சோஃபாவில் அனுவோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள்.

சுபாவின் அருகில் நிஷாவை பார்த்தபடி அமர்ந்தான் ரவி.

இன்று அவனின் இதழ்கள் இரண்டும் விரிந்தே இருந்தது.

நிஷாவும் அவ்வப்பொழுது அவனை கவனிக்கதான் செய்தாள்.

ஹய்யோ! பார்க்க அப்படியே எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க! சுபாவுக்கு ஐஸ் வைத்தாள் நிஷா.

சுபா புன்னகை மாறாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

நிஷா தங்களுக்கு முன் இருந்த வாழைக்காய் பஜ்ஜியை எடுத்து ருசிக்க ஆரம்பித்து விட்டாள்.

அனுதான் சங்கடமாக நிஷாவை பார்த்தாள்.

அன்னபூரணி, நீயும் சாப்பிடு ம்மா! அவளின் முழு பெயரையும் உச்சரித்து கனிவாக அவர் கூறிய வார்த்தையில் டீயை மட்டும் எடுத்துக் கொண்டாள் அனு.

ஹேய் அனு, பஜ்ஜி டேஸ்டா இருக்கு டி! என்று வாழைக்காய் பஜ்ஜியை வெளுத்து வாங்கும் நிஷாவையே பார்க்கும் ரவியையும் கவனிக்க தவறவில்லை சுபா.

டீயை பருகிய அனு, நிஷாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

பஜ்ஜி சாப்பிட்டு மெதுவா பேச்சை ஆரம்பிப்போம்! என்பது போல் கண் சிமிட்டினாள் நிஷா.

என்ன ரெண்டு பேரும் கண்ணாலயே பேசிக்கிறீங்க? என்று கேட்டார் சுபா.

அனு முட்டை விழிகளை விரித்து அவரை பார்த்தாள்.

சுபாம்மா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். அதான் உங்கள பார்க்க வந்தோம்! என்றாள் நிஷா.

அவர் புருவம் உயர்த்தி நிஷாவை பார்க்க, உங்கள சுபாம்மானு கூப்பிடலாம்தான? என்று கேட்டாள்.

தாராளமா கூப்பிடலாம். வெற்றி கூட என்னை அப்படிதான் கூப்பிடுவான்! என்றார் சுபா.

அதேதான் சுபாம்மா. எங்க ரெண்டு பேருக்கும் வெற்றி சாரை பற்றிதான் தெரியணும். அதுக்காகதான் உங்கள பார்க்க வந்தோம்! என்றாள் நிஷா.

ரவியின் முகம் புஷ்வானம் போல் மாறிவிட்டது.

வெற்றியை பற்றி தெரிஞ்சிக்கணுமா? என்று தயக்கத்தோடு கேட்டார் சுபா.

ஆமா! என்று மெல்லிய குரலில் கூறினாள் அனு.

ரவி மூவரையும் மாறி மாறி பார்த்தான். அப்போ என்கிட்ட பேச வரலையா? பாவம் பிள்ளை ஏங்கி போய் இருந்தான்.

சுபா அனுவை பார்த்தார்.

அனு சுபாவை பார்த்தாள்.

இந்த பிள்ளைக்கு வெற்றி சாரை பிடிச்சிருக்காம். ஆனால், கல்யாணம் பண்ணிக்க பயப்படுறா! என்று நிஷா கூறியதும் அனு அதிர்ச்சியாகி விட்டாள்.

சுபா அனுவை திகைப்பாக பார்த்தார்.

ரவி வாயை பிளந்து விட்டான் அதிர்ச்சியில்.

வெற்றி சார் ரொம்ப நல்லவர்னு எடுத்து சொன்னேன். கேட்க மாட்டிக்கிறா. அவர் கெட்டவர்னு அடிச்சி சொல்றா இந்த பிள்ளை. அதான் உங்ககிட்ட வந்து அவரை பற்றி தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சோம்! என்றாள் நிஷா.

எனக்கு அவரை பற்றி தெரிஞ்சிக்கணும்! என்று குனிந்த தலையாக கேட்டாள் அனு.

உனக்கு அவனை பத்தி என்னம்மா தெரியணும்? என்று கேட்டார் சுபா.

அவரோட அம்மா சூசைட் பண்ணிக்கிட்டாங்கனு சொன்னாரு. எதுக்காக? அதுவும் அவரோட அம்மா பார்க்க ரொம்ப சின்ன வயசாதான் தெரிஞ்சாங்க. சின்ன வயசுலயே இறந்துட்டாங்களா? என்று கேட்டாள் அனு.

சுபா எழுந்து வந்து அனுவின் அருகில் அமர்ந்தார்.

அவனை பத்தியும் அவன் அம்மா இறந்ததை பத்தியும் உன்கிட்ட சொன்னா நீ கண்டிப்பா வெற்றியை கல்யாணம் பண்ணிப்பியா? அவனை கல்யாணம் பண்ணிப்பேன்னு எனக்கு நீ வாக்கு கொடுத்தா நான் கண்டிப்பா வெற்றியை பத்தி உனக்கு சொல்றேன்! என்றார் சுபா.

நிஷாவும் அனுவும் அவரின் வார்த்தையில் உறைந்து விட்டனர்.

இரண்டு நிமிடங்கள் மௌனம் மட்டும் நிலவியது.

என்ன சுபாம்மா இப்படி சொல்றிங்க? வெற்றி சார் பற்றி தெரிஞ்சிக்கிட்டு அப்பறமா அவளுக்கு பிடிச்சிருந்தாதான கல்யாணம் பண்ணிக்க முடியும். நீங்க இப்போவே வாக்கு கொடுக்க சொல்றிங்க? நிஷா சற்று அழுத்தமான குரலில் கேட்டாள்.

நான் அன்னபூரணிகிட்ட பேசிட்டு இருக்கேன்! என்று சுபா கூறியதும் நிஷா அமைதியாகி விட்டாள்.

அவரை முறைக்க முடியவில்லை. அவரின் மேல் கோபத்தை காட்ட முடியவில்லை என்றதும் நிஷா ரவியை முறைத்து பார்த்தாள்.

அவள் முறைத்து பார்த்தும் அப்பட்டமாக அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான் ரவி.

நான்… நான் கண்டிப்பா கெட்டவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்! என்று சுபாவுக்கு வாக்கு கொடுத்து விட்டாள் அனு.

சுபாவின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது.

என் ஃப்ரென்ட் உங்களுக்கு வாக்கு கொடுத்துட்டா. சரி, கதையை சொல்லுங்க சுபாம்மா. ஆர்வமா இருக்குது! என்றாள் நிஷா.

வெற்றியோட அம்மா பேரும் அன்னபூரணிதான். நானும் அவளும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப க்ளோஸ்! என்று சுபா கூற, நிஷாவும் அனுவும் அவர் கூறுவதை விழி சிமிட்டாமல் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

*****

சுபாவும் அன்னபூரணியும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.

அன்று பள்ளி முடிந்து இருவரும் வீட்டுக்கு நடந்து வரும் போது, எங்க அப்பா எனக்கு ரப்பர் வச்ச பென்சில் வாங்கி தந்துருக்காங்க அன்னபூரணி. உனக்கும் ஒன்னு கொண்டு வந்தேன். காலையில இருந்து உன்னை பார்க்க உன் க்ளாஸ்க்கு வர முடியல. இந்தா, இதை நீ வச்சிக்கோ! என்று ஒரு பென்சிலை எடுத்து நீட்டினாள் சுபா.

ஐ! பென்சில் ரொம்ப அழகா இருக்கு டி! என்று துள்ளி குதித்து கொண்டு வாங்கிய அன்னபூரணி, திடீரென்று கீழே தரையில் வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

என்னாச்சி அன்னபூரணி? சுபா பயந்து விட்டாள். அவளும் சிறு பெண்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் அன்னபூரணி அழும் போது பதறியே விட்டாள்.

வயிறு ரொம்ப வலிக்குது சுபா! என்ற அன்னபூரணி அடி வயிற்றை பிடித்துக் கொண்டு, அழுகையையும் கட்டுப் படுத்திக் கொண்டு சுபாவோடு சேர்ந்து எப்படியோ வீடு வரை வந்து விட்டாள்.

அன்னபூரணியின் தாய், அவளின் ஆடையில் பட்டிருந்த ரத்தக்கறையை பார்த்து சுபாவின் தாயை அழைத்து அவரிடம் விஷயத்தை கூற, அவர் அன்னபூரணியை பாத்ரூம் அழைத்து சென்று பரிசோதித்து விட்டு சிரித்த முகமாக வெளியே வந்தார்.

அன்னபூரணி பூப்பெய்தி விட்டாள். இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! இவ்வளவு நாள் சிறு பெண்ணாக இருந்த அன்னபூரணி இன்று மலர்ந்து விட்டாள். அது அவளின் தாய்க்குதான் அளவில்லாத மகிழ்ச்சி!

அன்னபூரணியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அதற்கு காரணம், அன்னபூரணியின் தந்தைதான். குடிப்பழக்கத்துக்கு தன்னையே அடிமையாக ஒப்படைத்த மகான் அவர்!

அவளின் சடங்கை மூன்றாம் நாளில் எளிமையாக நடத்தினார் அவளின் தாய்.

ஹேய் அன்னபூரணி, எப்படி டி வயசுக்கு வந்த? சுபா கேட்டதும் அவளிடமிருந்து ஒரு கசந்த புன்னகை மட்டும்தான் வந்தது.

ரொம்ப வயிறு வலிக்குது சுபா. பிடிக்கவே இல்லை. நீ வயசுக்கு மட்டும் வந்துராத! என்றாள் அன்னபூரணி.

ஒரு மாதம் கடந்தது.

அன்னபூரணியின் தந்தையை தேடி, ரவுடிக் கூட்டம் வீடு தேடி வந்து விட்டது.

அன்னபூரணி இப்பொழுதெல்லாம் முன்பை விட பொலிவாக இருந்தாள். சிறு பெண்ணிலிருந்து குமரியாக மாறிக் கொண்டிருந்தாள். பார்ப்பதற்கு மஹாலக்ஷ்மி போல் இருப்பாள்.

கூட்டத்தின் தலைவன் நாற்பத்தைந்து வயதை தொட்ட காளி. அவனின் கொடூரமான கண்களில் விழுந்து விட்டாள் அன்னபூரணி.

வீட்டில் அன்று அவளையும் அவளின் தாயையும் தவிர வேறு எவரும் இல்லை.

இருவரும் அவனைக் கண்டு பயந்து நடுங்க, அவனின் விழிகள் வெறும் பதின் மூன்று வயதை தொட்ட அன்னபூரணியின் மேல் விழுந்தது.

உன் புருஷன் என்கிட்ட பத்து லட்சம் கடன் வாங்கிருக்கான். எங்கே அவன்? என்று விழிகளில் தீப்பொறி பறக்க கேட்ட காளியின் கோபத்தில் இருவரும் அவனை எச்சில் விழுங்கி பயத்தோடு பார்த்தனர்.

பத்து லட்சம்! என்றதும் அன்னபூரணியின் தாய்க்கு விழிகள் தெறித்து விட்டது.

காசை தந்துட்டு உன் பொண்ணை கூப்பிட்டு போ! என்று அன்னபூரணியை இழுத்துக் கொண்டு சென்றான் காளி.

அன்னபூரணியின் தாய் கதறி அழுதும் அவன் கேட்கவில்லை.

அம்மா! கதறி அழும் அன்னபூரணியை காரில் தள்ளியவன், பழைய குடோனில் அவளை கட்டிப் போட்டான்.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா ஒரு குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ். 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!