சுவாசம் – 6

இதழிடம் ஆடவன் பேசி கொண்டிருந்தாலும் அக்னியின் புறம் பெண்ணவள் பார்வை செல்வதையும் கவனிக்க தவறவில்லை.

நண்பனையும் கவனித்தப்படியே சத்தியன், தனது இடது கரத்தை பெண்ணவள் முன் நீட்டி “எனக்கு உன்கூட பேச ரொம்ப பிடிச்சிருக்கு பீ ஃப்ரெண்ட்ஸ்” என்றதும் பெண்ணவளுக்கு மூச்சு வாங்க தொடங்க, 

அவன் பேசும் போதெல்லாம் தான் இப்படி செய்தால் அவனுக்கு வருத்தமாக இருக்கும் என்று மூச்சை இழுத்துவிட்டு தன்னை கட்டுப்படுத்தியவள் நீட்டியிருந்த கையை அழுத்தமாக பார்த்தாள்.

அதன் அர்த்தம் புரிந்து கொண்டவனோ “உனக்கும் ரைட் ஹேன்ட்ல காயம் எனக்கும் ரைட் ஹேன்ட்ல காயம் அதான் லெஃப்ட் ஹேன்ட்.. சோ லெஃப்ட் லெஃப்ட் கணக்கு சரியாயிருக்கும்” என்றதை கேட்டு மெல்ல புன்னகைத்த இதழ் தன்னுடைய கரத்தை அவனுடன் இணைத்து குலுக்க, 

அந்நொடி கட்டுப்படுத்திய திணறல் அதிகமாகி வெடுக்கென்று கையை பறித்து எடுத்தவள், அருகிலிருந்த இன்ஹேலரை எடுத்து அடித்து கொள்ள, ஆடவனுக்கு தான் பாவமாகி போனது.

பின் இயல்பு நிலைக்கு மாறிய பாவை அவன் அருகில் இருக்கும் போது மூச்சு வாங்கியதில் ஆடவன் வருத்தப்படுவனோ என்று எண்ணி “சா..ரிங்க” என்று மன்னிப்பு வேண்ட,

அதன் காரணம் உணர்ந்த சத்தியன் “இட்ஸ் ஓகே ஸ்வீட் ஹார்ட்.. என்கிட்ட பேசும் போது ஏதோ உனக்கு நினைவுப்படுத்தி டிஸ்டர்ப் பண்ணுதுன்னு எனக்கு புரியுது.. பட் என்கிட்ட டோண்ட் சே சாரி” என்றவனின் புரிதலில் நிம்மதியடைந்தாள் பூவிதழ்.

ஏனோ அதற்கு மேலிருந்து பெண்ணவளை சிரமப்படுத்த விரும்பாதவன் “ஓகே ஸ்வீட் ஹார்ட்.. நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து செல்ல போனவனை கண்ட அக்னி “எங்கடா போவ”

“ஹாஸ்டல் தான் தங்கியிருக்கேன்.. அங்க தான் போறேன்” என்றதை கேட்டு புருவம் உயர்த்தியவன் “சோ நீ இத்தன நாளா வீட்டுக்கு போகல ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்க.. அதுவும் என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லல”

“போன வாரம் வீட்டுல கல்யாண பேச்ச எடுக்கும் போதே ஹாஸ்டல் ஜாயின்ட் பண்ணிட்டன்.. ஆனா யாருக்கும் தெரியாது உன்கூட தான் இருக்கேன் நினைச்சிக்கிட்டாங்க” என்றதை கேட்டு அழுத்தமாக பார்க்கும் அக்னி பார்வையின் அர்த்தம் உணர்ந்து “மிஸ்டர் பயர்.. நான் உங்ககூட இருக்கேன் சொன்னப்போ பிரைவசி பாதிக்கும் சொல்லி.. என்ன கழுத்து பிடிச்சி வெளிய தள்ளினதா ஞாபகம்” என்க, 

அவனை  கண்கள் சுருக்கி முறைத்து நண்பனின் முடியை கொத்தாக பிடித்தவன் “இப்போவும் உன்ன கழுத்து பிடிச்சி தள்ள போறேன்.. இனி வீட்டு பக்கம் வந்துருராத அப்புறம் செப்பல்ல சாணிய முக்கி அடிப்பேன் பாத்துக்க” என்க,

அவனின் கையில் தட்டிவிட்ட சத்தியன் *என் ஸ்வீட் ஹார்ட் இங்க தான் இருக்கா.. உன்ன நம்பி அவள தனிலாம் விட முடியாது.. சோ யாரும் நான் வந்து அவள பாக்குறத தடுக்க முடியாது”

“சத்யா என்னோட பொறுமைய ரொம்ப சோதிக்க.. ஒழுங்கா இங்கயிரு சொல்லிட்டேன்” என்றவனுக்கு நிகராக திமிர் பார்வை வீசிய சத்தியன் “மிஸ்டர் பயர்.. நான் ரோசகாரனாக்கோம் நீங்க காலுல விழுந்து கெஞ்சினாலும் இங்கயிருக்க சமதிக்க மாட்டேன்..” என்று இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அக்னியோ அவனின் கன்னத்தை பதம் பார்த்துவிட்டு “சொன்னத கேட்டு பழகு பதிலுக்கு பதில் பேசின சாவடிச்சிடுவேன்.. பாத்துக்க” என்றதை கேட்டு நண்பன் அடித்த கன்னத்தில் கைவைத்து ஆடவன் பாவமாக பார்த்திருக்க, அதற்கு அசருபவனா நம் அக்னி தேவன் “ஐ வான்ட் மோர் எமோஷன் மச்சி” என்றப்படி அமர்ந்திருந்தவனை முறைத்து வைத்தான் சத்தியன்.

இருவரையும் இதுவரை கவனித்து கொண்டிருந்த பூவிதழோ “சத்..யா” என்று அழைத்திருக்க, மறுநொடி தன் நடிப்பை கைவிட்டு, அவள் பக்கம் விரைந்தவன் “சொல்லு ஸ்வீட் ஹார்ட் எதுவும் வேணுமா” என்றவன் நினைவாக காயப்பட்ட தன் கைகளை பின்னே மறைக்கவும் தவறவில்லை.

அதைக் கண்டு புன்னகைத்த இதழோ “நீ..ங்க இங்கே..யே தங்..க வேண்..டி தா..ன.. அவங்..க தான் அவ்வ..ளவு தூ..ரம் சொல்லுறா..ங்கல”

“நீ வேற ஸ்வீட் ஹார்ட்.. அவன் சரியான கோட்டி பையன் சடனா பாசமா பேசுவான் அப்புறம் பேய் புடிச்சி அடிச்சி வெளிய பத்திருவான்.. அவன நான் நம்பவே மாட்டேன்” என்று நண்பனின் பரிசையும் முறைப்பாக பெற்று கொண்டான்.

“அவ..ங்க உங்..க ப்ரெ..ண்ட் தான.. கண்டி..ப்பா உங்க நல்ல..துக்..காக தான் செஞ்சி..ருப்பாங்க.. அது மட்டுமி..ல்லாம உங்க வீட்டா..ளுங்க கூட இருக்…கணும் தான்.. உங்க..ள இங்க..யிருக்க அனும..திச்சி மாட்..டாங்க.. ஆனா இப்போ நீ..ங்க இந்த வீடுயி..ருந்தும் ஹா..ஸ்டல தங்..குறது அவங்..களு..க்கு வருத்..தமா இருக்கு..ம்ல” என்று அக்னியின் எண்ணத்தை புரிந்து அவனுக்காக பேசிருக்க, அது தான் காரணமென்று நிழல் போலிருக்கும் சத்தியன் தேவன் அறியாததா 

அவனால், அவர்களுடன் ஒன்ற முடியவில்லை தானாவது அவர்களுடன் இணைந்து இருக்க வேண்டுமென்று நினைக்கும் நண்பனின் மனம் அறியவே செய்தது, ஆனாலும் நண்பன் அவன் துன்பத்தை தன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் விரட்டியடித்து விட்டு தனிமையில் வாடுவது தான் வேதனையாக இருக்கும்.

இதில் பெண்ணவளின் பேச்சை காதை தீட்டி கேட்ட அக்னியோ, வந்து ரெண்டே நாட்களில் தன்னை சரியாக கணித்து பேசிய மங்கையவளின் பேச்சில் இறுக்கமாக இருந்த ஆடவனின் இதழோ தாராளமாக விரிந்து கொண்டது.

அதனை ஆச்சரியமாக பார்த்த சத்தியன் ஆறு வருடத்திற்கு பின், இன்று வெளி வந்த நண்பன் சிரிப்பில் ஆடவனின் மனமும் நிம்மதியடைய, மூளையோ ஆறு வருடமாக தான் போராடி கொண்டிருக்க, வந்து ரெண்டே நாட்களில் அவள் அறியாமலே நண்பனிடம் மாற்றத்தை கொண்டு வந்து விட்டாளே என்று வியந்தவனுக்கு ஒரு பக்கம் பொறாமையும்  இருக்க தான் செய்தது.

ஆனால், மனமோ பெண்ணவள் நண்பனுடன் இணைந்து விட்டாள் அவனின் வாழ்வில் மொத்தமும் மாறி விடுமல்லவா என்று எடுத்து கொடுக்க,

அதனை ஆமோதித்த சத்தியன் நண்பனுக்கு தன் ஸ்வீட் ஹார்ட்டை பிடித்திருக்குமோ என்ற சந்தேகமும் வர, அவனிடமே கேட்டு தீர்த்து கொள்ளலாம் என்று எண்ணியவன் நண்பனையே பார்த்தபடி நின்றான்.

தான் பேசி சில நிமிடங்கள் கடந்தும் சத்தியன் அமைதி காத்ததில் இதழ் “சத்..யா.. நான் பேசி..னதும் அமை..தியாகி ஆகி..ட்டீங்க”

“ஆக்சுவலி நீ சொன்னது உண்மைதான் ஸ்வீட் ஹார்ட் ஆனால் நீ வந்து ரெண்டு நாள் இருக்குமா.. அவன் உன்கிட்ட சரியா கூட பேசியிருக்க மாட்டான்.. பின்ன எப்படி கரெக்ட்டா சொல்லுற” என்று அவளின் பதிலை ஆர்வமாக எதிர்பார்த்திருக்க, அக்னியும் கூட அவள் கூறும் பதிலை கேட்க ஆவலாக கண்களில் எதிர்பார்ப்புடன் அவளையே பார்த்திருந்தான்.

இருவரையும் பார்த்துவிட்டு தலையாட்டி சிரித்த இதழ் “ஒரு..த்தர பத்..தி தெரி..ஞ்சி..க்க ரெண்..டு நாள் இ..ல்ல ரெண்..டு மணி..நேரம் பேசி..னாலே தெரிஞ்..சிடும்” என்று அக்னியை பார்வை பார்க்க,

அதன் அர்த்தம் புரிந்தவன், புரியாதது போல் பெண்ணவளை பார்த்து “என்ன இதுக்கு முன்னாடி பாத்துருக்கியா” என்று அக்னி பட்டென்று கேட்டு விட,

தன் பதிலிலே தான் சொல்ல வருவதை கண்டு கொண்டிருப்பான் என்று எண்ணி அவனையே கண்கள் மின்ன பார்த்த இதழுக்கோ ஆடவனின் கேள்வியில் முகம் புஷென்று போக, அதனை கண்டு கொண்ட அக்னியும் உதடு மடித்து சிரிப்பை கட்டுப்படுத்தி விறப்பாக 

“உன்கிட்ட தான் கேக்குறேன்.. இதுக்கு முன்னாடி என்ன பாத்துருக்கியா” என்றதை கேட்டு மேலும் சோகத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டவள் ‘நிஜமா இவருக்கு நம்மள தெரியலயோ.. இல்ல இத்தன வருஷ கேப்ல மறந்துட்டாரா.. அந்த அளவா நம்ம அடையாளம் தெரியாம மாறிட்டோம்’ என்று எண்ணியப்படி தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துவிட்டு அக்னி முகத்தை ஆராய்ந்து பார்த்தவளுக்கு, 

அவன் தன்னை தெரியாது போல் காட்டிக் கொள்கிறானோ என்று தனக்குள்ளே மாறி மாறி பேசி கொண்டிருந்த இதழோ ஆடவர்களின் பார்வை தன்னை மொய்ப்பதை உணர்ந்து பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டவள் “அதா..ன் ரெண்..டு நாள் உங்..க கூட இருந்தி..ருக்கே..ன்ல அதை..யும் நீங்..க ரெண்..டு பே..ரும் இப்..போ பேசிக்கிட்..டது வச்..சும் என்..னால கெ..ஸ் பண்..ண முடி..ஞ்சுது” என்று திக்கி கூறி முடித்திருக்க,

“ஓ..” என்று வார்த்தையை ராகமாக இழுத்த அக்னி கேலியாக இதழ் வளைக்க, பெண்ணவளுக்கு அது புரிந்தும் புரியாதது போல் பார்வையை சத்தியன் புறம் திருப்பியவள் “நீ..ங்க இனி..மே இங்..கேயே இரு..ங்க.. பிளீ..ஸ் எனக்..காக” என்று கேட்டு கொண்டிருந்த நேரம் உள்ளே நுழைந்த இஷா ஆடவனை பார்த்தபடி அமைதியாக நிற்க,

இதழின் பேச்சில் நெகிழ்ந்த சத்தியன் தன்னவள் வருகையையும் உணர்ந்து கொண்டு “இல்ல ஸ்வீட் ஹார்ட்.. நான் இங்கயிருக்கிறது நிறைய பேருக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்..” என்றவனின் பார்வை இஷாவில் பட்டு சென்று நண்பனின் நிலைக்க விட்டு “அதுலயும் என் உயிர் நண்பனுக்கு.. எப்போ குரங்கு புத்தி வந்து எப்போ கழுத்து பிடிச்சி தள்ளுவான் பயந்துட்டே இருக்க முடியாது” என்றான்.

ஆனால் இன்னொரு காரணமாக தன்னுடைய செயலால் பெண்ணவள் எதையோ நினைவுப்படுத்தி வேதனைப்பட்டு கொள்வது மேலும் அவளுக்கு அழுத்தத்தை கொடுக்க கூடும் என்று இதழின் நலனை கருத்தில் கொண்டே தங்க மறுத்திருந்தான்.

அதையும் நொடியில் புரிந்து கொண்ட இதழ் “இ..ல்ல நீ..ங்க பொ..ய் சொல்லு..றீங்க.. இங்க..யிருந்..தா எனக்..கு டிஸ்டர்ப்..பாகும் நினை..ச்சி தான் மறுக்..குறீ..ங்க” என்றவள் முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள,

தன்னை சரியாக கணித்த பாவையை வியந்து பார்த்த சத்தியன் “ஆனாலும் நீ ரொம்ப டேலண்ட் தான் ஸ்வீட் ஹார்ட்.. பட்டு பட்டுன்னு கண்டு பிடிச்சிடுற” என்றதை கேட்டு முறைத்து வைத்தவள் “நா..ன் சும்..மா போட்..டு வா..ங்க தா..ன் கேட்..டேன்.. அப்..போ அது தானே கார..ணம்” என்றவளுக்கு அவன் அப்படி தான் நினைத்திருப்பான் புரியவே முடிய,

வாயில் கைவைத்த சத்தியனோ “அடிப்பாவி.. அப்போ நான் தான் அவுட்டா” என்றவனின் பாவனையில் கிலுக்கென்று சிரித்தவள் “நா..ன் இங்..க இருக்..கிற வரை.. இங்..க தா..ன் இருக்..கணும் இல்ல..ன்னா இங்..கயி..ருந்து போகி..றவரை பேச மாட்..டேன்” என்றதை கேட்டு கேள்வியாக நோக்கிய சத்தியன் 

“ஆமா நீ எங்க போக போற” என்க, பெண்ணவளை அக்னியும் அதே பார்வை தான் பார்த்திருந்தான்.

இதழோ “பின்..ன இங்கே..யேவா நிரந்..தரமா இரு..க்க முடி..யும்.. என..க்கு சரியா..குற வரை தான் இரு..க்க மு..டியும்” என்றதை கேட்டு வெடுக்கென்று எழுந்த அக்னிக்கு, அவள் தன்னைவிட்டு செல்கிறேன் சொல்லும் போதே கோவம் தலைக்கேறியிருக்க பெண்ணவள் எதிரே வந்து “என் கூட யார் இருக்கணும் இருக்க கூடாதுன்னு நான் மட்டும் தான் முடிவு பண்ணுவேன் காட் இட்..” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு சென்றான்.

அவனின் பேச்சை பெண்கள் இருவரும் புரியாமல் பார்த்திருக்க, சத்தியனுக்கோ நண்பனின் பேச்சில் கேள்விகள் எழுந்து மண்டையை குடைய ஆரம்பித்தது.

பின் அவன் சென்ற திசையை பார்த்திருந்த இதழை கண்டு “ஓகே ஸ்வீட் ஹார்ட் நீ கெஞ்சி கேட்டதுனால.. உனக்காக மட்டும் இங்கேயே இருக்கேன்.. ஆனா ஒரு கண்டிசன்” என்றதுக்கு, என்னவென்று அவள் பார்த்திருக்க,

“நம்ம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் தான.. நீ என்ன வாங்க போங்க கூப்பிடுறது எனக்கு ரொம்ப டிஸ்டன்ஸ் ஃபீல்லாகுது.. சோ என்கிட்ட ஒருமையா தான் பேசணும்”

“அய்..யோ நீ..ங்க என்ன..விட பெரிய..வங்க” என்றதில் முறைத்து வைத்தவன் “என்ன பாத்தா அங்கில் போலவா இருக்கு.. ஏதோ உன்னவிட நாலு அஞ்சு வயசு அதிகமா இருப்பேன்.. நீ என்ன டா கூப்பிட்டாலும் ஐ லைக் இட்.. பட் மரியாதை கொடுத்து இந்த வயசு பையன ஆவமானப்படுத்தாத ஸ்வீட் ஹார்ட்.. என் பிஞ்சு ஹார்ட் தாங்காது” என்றவனின் பாவனையில் நன்றாக சிரித்த இதழ் “ஓ..கே சத்..யா உன..க்கு அது தா..ன் விருப்ப..ம்ன்னா அப்..படியே கூப்பி..டுறேன்’

“தட்ஸ் மை ஸ்வீட் ஹார்ட்” என்று பெண்ணவள் முடியை செல்லமாக களைத்தவன், தன்னையே ஏக்கமாக பார்த்திருந்த இஷாவை முறைத்துவிட்டு வெளியேற, இதழின் கண்களோ அக்னி வருவானா என்று தான் வாசலையை பார்த்தது.

****

இரவு உணவை கூட இதழ் தனிமை உணர கூடாது என்பதற்காக ஒன்றாகவே இணைந்து சாப்பிட, இதழ் மற்றும் சத்தியனை தவிர மற்ற இருவருமே சாப்பிடுவதையே பயப்பக்த்தியாக தட்டியிலே கவனம் பதித்திருக்க, 

அக்னியோ பெயருக்கு என்று கொறித்துவிட்டு எழுந்து சென்று விட்டான்.

அவள் தன்னை கண்டுகொள்ளாதில் வருந்திய இதழோ ஆடவனை எண்ணியே உணவை கூட மனமின்றி உள்ள தள்ள, மறுபுறம் அமர்ந்திருந்த இஷாவும் கூட தன்னவனின் நிராகரிப்பில் கண்ணீரை உள்ளிழுத்து தொண்டைகுழியில் இறங்க மறுத்த உணவை கடினப்பட்டு முழுங்கினாள்.

பின் ஆடவன் சாப்பிட்டு முடித்து நண்பனை தேடி செல்ல, ஹாலில் இல்லையென்றதும் அவன் எங்கேயிருப்பான் என்பதை அறிந்து ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டவன் 18 வயது முதிர்ச்சியடைந்த ஆண்மகனின் புகைப்படத்தை வெறித்து கொண்டிருந்த நண்பனை மொத்தமாக அறிந்து கொண்டிருந்தவனுக்கு தெரியாதா, 

அவன் அதிகம் அழுத்தத்தில் இருந்தால் மட்டுமே இவ்விடம் வருவான் என்று அதிலும் ரெண்டு நாட்களில் அவனின் மாற்றத்தையும் கண்டு கொண்டவன் கூடவே நண்பனின் மனதுக்குள் ஓடும் பிரளயத்தையும் உணர்ந்தவனுக்கு அதற்கான பதில் தான் தெரியவில்லை.

நண்பனிடம் கேட்டுவிடும் முனைப்பில் மெல்ல, அவனின் தோளில் கரம் பதித்த சத்தியன் “மச்சி..” என்று அழைத்தான்.

நண்பன் அடுத்து என்ன கேட்க போகிறான் என்பதை உணர்ந்த அக்னியோ “என் தம்பி லவ் பண்ணினது அவள தான்டா” என்றவனின் குரல் சற்று பலவீனமாகவே வெளியே வர, அதிர்ச்சியாகிய சத்தியனோ “என்னடா சொல்லுற சூர்யா லவ் பண்ணினானா” என்றதை கேட்டு நண்பனுக்கு கடந்த காலத்தில் தம்பி பகிர்ந்து கொண்ட காதலை பற்றி கூறியவன், எதிரே சந்தனம் பொட்டு மாலையுடன் மின்னும் தன் தம்பியாகிய சூர்யதேவனின் புகைப்படத்தை விட்டு பார்வை சிறிதும் அகற்றவில்லை.

சுவாசம் தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page