மாயோன் -13
கார்த்திக் கோபத்துடன் கதவை திறந்தவன் ..
“என்னடா எதுக்கு இப்போ கதவை போட்டு உடைக்கிறீங்க”
“அண்ணா இனியாவை காணோம் னு ஸ்ருதி சொன்னா.அதான் அவளை தேடி வந்தோம் “என்று அன்பு கூற ஸ்ருதி கார்த்திக் ராஜன் அறையில் இனியாவை பார்த்தவள் நம்ப முடியாதவளாக அபிஷேக்கை கிள்ள அதில் வலியை உணர்ந்தவன்,” ஏய் எதுக்குடி இப்போ கிள்ளுற”
” எருமை கத்தாத டா அங்க பாரு “என்று கைகாட்ட அபிஷேக் கார்த்திக்கின் அறையில் இனியாவை பார்த்தவன் தன் கண்களையே நம்பமுடியாமல் நின்றிருந்தான்.
இவர்கள் உரையாடலை கேட்ட பாலாஜியும் அங்கே பார்த்தவன் “அன்பு டேய் அங்க பாருடா “என்று அவன் காதில் கூறினான்.. இப்போ இவர்களும் நம்ப முடியாதவர்களாக நின்றிருந்தனர்.
இதை எதையும் கவனிக்காத கார்த்திக் அன்புவை மட்டும் பார்த்தவன்,”நான் என்ன பூதமா அவளை கடிச்சிடுவேனா ?இவ்வளவு நேரம் நீங்க எங்கடா போனீங்க”என்றவன் அன்புவின் பார்வை மாற்றத்தைக் கண்டவன் இனியாவை பார்க்க அவளோ இவர்களை பார்த்தவள் தன் தாடையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.
அதைப் பார்த்த கார்த்திக் ,”உடாக்காந்திருக்கறதை பாரு.ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி”என்று கூறியவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
கார்த்திக்கின் சிரிப்பின் தன்னிலை அடைந்த அனைவரும் கார்த்திக்கை ஆச்சரியமாகப் பார்க்க,இனியா எழுந்து வெளியே வந்தவள்,”ஹலோ இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க என்னை பார்த்தா என்ன பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?”
“ஆமா நீ பைத்தியக்காரி தான். இதுல என்ன உனக்கு சந்தேகம் என்ன நடந்தாலும் ,உன் திமிர் மட்டும் அடங்காது போல?”
“ஹலோ இதுக்கு மேல நீங்க எதுவும் பேசாதீங்க..டேய் என்னடா அப்படியே நிக்கிறீங்க.. நான் எப்படி டா இங்க வந்தேன் . இந்த சிடுமூஞ்சி எதையும் சொல்ல மாட்றாரு. நீங்களாவது சொல்லித் தொலைங்கடா”
“ஏய் யாரை சிடுமூஞ்சின்னு சொல்ற.. இந்த சிடுமூஞ்சி இல்லனா என்ன நடந்திருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாரு”
“யோவ் உளராதயா .என்ன நடந்துச்சுன்னு தெரியாம தானே உங்கிட்ட கேட்டுட்டு இருக்கேன். டேய் அபி எப்படிடா இவரை வீட்ல வச்சு சமாளிக்கிறீங்க”
“ஆமாண்டி நான் என்ன உன்னை மாதிரி வானரமா ?”என்று கேட்டான் காரத்திக்.
அபிஷேக் ,”இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்கடா. எதுக்கு இப்போ சண்டை போடறீங்க கார்த்திக் என்ன நடந்துச்சு சொல்லுடா”
“அபி உங்க அண்ணாவ என்னை வாடி போடின்னு சொல்ல வேண்டாம்னு சொல்லு என்ன பத்தி சொல்லி வைடா.”
“ஏய் இருடி இரண்டுபேரும் கொஞ்சமாவது எங்களை யோசிக்க விடறீங்களா ?” என்று அபிஷேக் மீண்டும் கேள்விக் கணையைத் தொடுக்க…
“டேய் நீ இருடா சும்மா நொய் நோய் னு .போடி குள்ளக் கத்திரிக்கா இவ பெரிய இவ.. நான் அப்படி தான் சொல்லுவேன்.. எனக்கு அப்படித்தான் சொல்லத் தோணுது.. அதற்கான காரணம் உனக்கு இன்னுமா புரியல.?”
“ஏதே குள்ள கத்திரிக்கா வா இதுக்கு மேல நான் பொறுமையாக இருக்க மாட்டேன் “என்று இனியா கத்தினாள்.
அபிஷேக் தன் தலைமீது கை வைத்தவன் அங்கேயே அமர்ந்து விட்டான்.
“ஏய் இனியா உனக்கு இந்த பேர் கூட நல்லா இருக்கு ..நாங்க உன்னை இனி இப்படியே கூப்பிடறோம்”என்று பாலாஜியும் ,அன்பும் கூற இனியா அவர்களை அடிக்க துரத்ந அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடினர்.
ஸ்ருதி இனியாவை தடுத்து நிறுத்தியவள் ,”ஏய் என்னடி நடக்குது இங்க ..க்ஷநடுஜாமத்தில் கொஞ்சமாவது தூங்க விடறீங்களா”
“ஏய் உனக்கு தூக்கம் தான் முக்கியமா..? உன் அண்ணாகிட்ட எனக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்ல முடியுமா முடியாதா கேளு”
“இங்க என்ன சத்தம் எல்லாரும் இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க “என்று கேட்டு கொண்டே கல்பனாவும், சரவணராஜனும் அங்கே வந்தனர்.
அன்பு ,பாலாஜி இருவரும் ‘இவர்களின் சண்டை முடிவதாக தெரியவில்லை’ என்று நினைத்தவர்கள் அவர்களை அழைத்து வந்திருந்தனர்.
“டேய் என்ன காரியம் டா பண்ணி இருக்கீங்க .இப்ப6 எதுக்குடா அம்மா ,அப்பாவை எழுப்பனீங்க.” என்று ஸ்ருதி சத்தம் போட…
“நாங்க எழுந்து வரது இருக்கட்டும் இங்கே என்ன நடக்குதுன்னு கேட்டேன் .எங்க நான் பெத்த சிறிய மகன் ஆளையே காணல “என்று கல்பனா தேவி கேட்க..
“அம்மா இதோ இருக்கேன் என்று கை தூக்கியவன்..
அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை அன்னை ஓர் ஆலயம் “என்று சோகமாய் பாடிக் கொண்டிருந்தவனை பார்த்து கல்பனா ஒன்றும் புரியாமல் விழிக்க சரவண ராஜன் தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாதவராக சிரித்தவர்,” என்னடா மகனே எதுக்கு இப்போ கீழே உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு சொல்லு பார்ப்போம்.”
“குழந்தை அழுதுது , உட்வாட்ஸ் குடுங்க சொல்லுங்க “என்று கல்பனா கூற அனைவரும் அங்கிருந்த சூழ்நிலையை மறந்து வாய்விட்டுச் சிரித்தனர்.
கல்பனா ,” என்ன டா மகனே இந்த நேரத்தில் பாட்டு பாடிட்டு இருக்க என்னடா ஆச்சு உனக்கு”
“அச்சோ மம்மி ,தாயே எனக்கு எதுவுமே ஆகல.. உன் பெரிய பிள்ளைக்கு என்னமோ ஆகிடுச்சு மா ஆகிடுச்சு அவனை கொஞ்சம் மந்திரிச்சு விடு மம்மி”
“டேய் பெரியவனே இவன் என்னடா என்னமோ சொல்றான்”
“அம்மா அதெல்லாம் எதுவும் இல்ல .அவனும் அவன் கூட இருக்கிற இந்த வானரங்களும் சரியான பைத்தியங்கள்”என்று கார்த்திக் கூற..
“டேய் “என்று அபிஷேக் கத்த மற்றவர்கள் “அண்ணா” என்றிட …
இனியா ,” மிஸ்டர் .கார்த்திக் இதுக்கு மேல எதுவும் பேசி கடுப்பேத்தாதீங்க..ஆன்ட்டி நான் நாளைக்கு என் வீட்டுக்கு போறேன்.”
இனியா பேசிய பிறகுதான் ,’கார்த்திக் ராஜனும், இனியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் போலவே அச்சோ இனி என்ன நடக்கப் போகிறது என்று தெரியலையே?’ என்று நினைத்த சரவண ராஜன், கல்பனா தேவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “அச்சோ இனியா என்னம்மா இப்படி சொல்ற, டேய் கார்த்திக் பிள்ளையை என்னடா சொன்ன . இங்க என்ன தான் நடந்தது சொல்லுங்கடா.என்னங்க ஏங்க நீங்க இப்படி அமைதியா இருக்கீங்க என்ன நடந்துச்சுன்னு கேளுங்களேன்”என்றார்
கல்பனா தேவி.
“இருமா கல்பனா நான் கேட்கிறேன்” என்றார் சரவணராஜன்.
“அப்பா நீங்க என்ன கேட்டாலும் இந்த ரௌடி பேபியும் எதுவும் சொல்ல மாட்டாள்.இதோ நிக்கிறானே உங்க அழுத்தக்காரன் மகன் அவனும் எதுவும் சொல்ல மாட்டான். என்ன நடந்தது என்று கேட்டு கேட்டு எனக்கு வாய் வலி வந்தது தான் மிச்சம்”என்றான்
அபிஷேக்.
சரவணன் ராஜனுக்கு இப்பொழுது குழப்பம் அதிகமாகியது.. தன்னுடைய மகன் இனியாவை திட்டுவது போல் நடந்து கொண்டாலும் ,அவனின் பார்வையில் மென்மையை உணர்ந்தவர் ஒரு தகப்பனாய் தன் மகனின் மனநிலையை புரிந்து கொண்டவர்’ ஏதோ நல்லது நடந்தால் சரி’ என்று தன் மனதில் சிரித்துக் கொண்டார்..
கார்த்திக் ,”அட ச்சே ரா பிச்சைக்காரன் மாதிரி கத்திட்டு இருக்காத .எழுந்து ரூமுக்கு போடா ..என்றவன் உங்க எல்லாருக்கும் செமஸ்டர் வருது ஞாபகம் இருக்கா இல்லையா ?எல்லோரும் படிக்கிற வேலைய பாருங்க போங்க “என்றான் .
“ஏதே அண்ணா படிக்கறதா இன்னும் தூங்கவே இல்ல அண்ணா .போங்க நாங்க போய் தூங்க போறோம்” என்ற அன்பும் ,பாலாஜியும் அங்கிருந்து எஸ்கேப் ஆகினர்.
கார்த்திக் அங்கிருந்து நகர்ந்தவனை கல்பனா தடுத்து நிறுத்தியவர் “கார்த்திக் உண்மைய சொல்லு ,என்ன நடந்துச்சு இப்போ எதுக்காக இத்தனை பேரும் முழிச்சுக்கிட்டு இருக்காங்க”
“ஆன்ட்டி உங்க மகனை தயவுசெய்து என்ன நடந்ததுன்னு சொல்ல சொல்லுங்க.எனக்கு ஒரே குழப்பமா இருக்கு யோசிக்க யோசிக்க எனக்கு தலை வலி அதிகமா இருக்கு .நான் ஸ்ருதியுடன் அறையில் படுத்திருந்தேன். எப்படி இவரோட அறைக்கு வந்தேன் அதைச் சொல்ல சொல்லுங்க” என்று அழுதாள் இனியா.
சரவணன் ராஜனும், கல்பனா தேவியும் இனியா கூறியதை கேட்டவர்கள் ,”என்ன இனியா சொல்ற நீ கார்த்திக் அறையில் இருந்தியா?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டனர்.
“ஆன்ட்டி நான் வேண்டுமென்றே அவர் ரூமுக்கு போகல .எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது ப்ளீஸ் என்னை நம்புங்க”
“இனியா நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியாடி..உன்னை யாராவது இங்கே நம்பாம இருந்தாங்களா?என்ன நடந்துச்சுன்னு உனக்கே தெரியாத போது இப்போ நீ எதுக்கு மனசை போட்டு குழப்பிக்கிட்டு இப்படி அழற.என்கிட்ட பேசினப்போ பெரிய ஜான்சி ராணி மாதிரி பேசின இப்போ எங்கடி போச்சு உன் வீரம் எல்லாம் ” என்று கார்த்திக் ஆவேசமாகக் கத்தினான்.
அவனின் உரிமையான பேச்சைக் கேட்ட கல்பனா அதிர்ந்து நிற்க ..சரவணராஜன் அவனுக்கு மனதிலே சபாஷ் சொல்லி சிரிக்க ,ஸ்ருதிக்குள் பல சந்தேகங்கள் வலம் வர.
அபிஷேக்குக்கு தெள்ளத்தெளிவாக கார்த்திக்கின் மன நிலைமை புரிந்தது .சிறு வயதிலிருந்தே அவனுடன் வளர்ந்தவனுக்கு அவனைப் பற்றிக் தெரியாதா என்ன?
அதேநேரம் இவர்களை இன்னமும் காணலையே என்று பாலாஜியும் ,அன்பும் அங்கே வந்தவர்கள் கார்த்திக்கின் இந்த செயலில் குழம்பி நின்றனர் .
இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் சிந்தனை வயப்பட்டவர்களாக நின்றிருந்தனர்.
கார்த்திக் கத்தியவன் அங்கிருந்து தனது அறைக்கு சென்றான். இரண்டு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் அவனூக்கு நினைவில் ஊஞ்சல் ஆடியது…
என்னவாக இருக்கும் வாங்க நாமும் யோசிப்போம்.
