தாரகையின் மாயோன்_12

மாயோன் -12

   இனியா வெளியே வந்தவளுக்கு யாரோ இவளின் கைபிடித்து அழைத்துச் செல்வதுப் போல் இருக்க நேராக இனியா மொட்டை மாடி சென்றாள்.

 கார்த்திக் யாரோ மொட்டை மாடிக்கு செல்வதைப் பார்த்தவன் இருட்டில் சரியாக யார் என்று தெரியாத நிலையில்,’ ஒருவேளை ஸ்ருதியாக இருக்குமோ ?’என்று நினைத்தவன் அவனும் பின்னே சென்றான்.

மொட்டைமாடி சென்றவள் மாடி சுவரின் மீது ஏறி நிற்க கார்த்திக் ஓடிச்சென்று தடுத்தவன் அவளை சுண்டி இழுக்க அவள் பூமலையாக கார்த்திக் மீது விழுந்தாள்.

கார்த்திக் அவளை பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான்.அன்று ஒரு நாள் நடந்த நிகழ்வு அவனுக்கு மீண்டும் ஞாபகம் வந்தது,’அடியே மாயோன் பைத்தியம் . எத்தனை நாளைக்கு என் கண் எதிரில் வராமல் ஆட்டம் காட்டுவ இன்னைக்கு மாட்டினியா’ என்று நினைத்தவன் அவளை எழுப்ப முயற்சி செய்தான்.அவளோ அவன் மீது படுத்திருந்தவள் எழாமல்  இருக்க அவளின் முகம் பார்க்க அவளோ கண் மூடி இருந்தாள்.  இவனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் அவளை தூக்கி கொண்டு தனது அறைக்குச் சென்றான்.

இனியா அந்த அதிர்ச்சியில் மயங்கி இருந்தாள்.

பிறகு தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினான். இனியா எழுந்து அமர்ந்தவள் கார்த்திக்கை பார்த்து விழித்தாள். கார்த்திக் அவனைத் தாங்கியவன் அவளை படுக்க வைத்து எழ அவளோ அவன் எழ முடியாத அளவிற்கு அவளின் சட்டையை பிடித்தவள்,”மாயோன் எங்கேயும் போகாதீங்க ..இங்கேயே இருங்க ப்ளீஸ் மாயோன் அவன் மறுபடியும் வந்துடுவான் எனக்கு பயமாயிருக்கு “என்று புலம்பியவள் மீண்டும் மயங்கினாள். 

அபிஷேக் கூறியது அனைத்தும் ஞாபகம் வர எப்பொழுது இனியாவைப் பார்த்தவனுக்கு  கஷ்டமாகத்தான் இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னையும் மீறி அவளின் முகத்தை வருடினான்.

இனியாவின் இந்த குழந்தை போன்ற முகத்தை பார்த்தவன் அவளை தன் மடியில் படுக்க வைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இனியா சிறிது நேரம் கழித்து கண் விழித்தவள் எதிரே இருப்பவனைப் பார்த்ததும்  மகிழ்ச்சியில்,” மாயோன்  நீங்க நீங்க எப்படி இங்க” என்றாள்.

“அம்மா தாயே நான் மாயோன் இல்ல கார்த்திக் கார்த்திக் ராஜன் ஓகேவா”என்று அவளின் தலையில் இடியை இறக்கினான்.

இனியா அதிர்ச்சிக்குள்ளானவள் ,”அபியோட அண்ணா நீங்களா ?”என்றவள் வேகமாக அவனின் மடியிலிருந்து எழுந்து கீழே இறங்கப்போனவள் கால் தள்ளாட கீழே விழப்போனவளை தாங்கியவன் அவளின் உடல் நடுங்கி கொண்டிருப்பதை உணர்ந்தவன் ,

“இப்போ எதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ற.  நான் என்ன பேயா பிசாசா? “என்றவனை  பயத்தில்  கட்டிக்கொண்டாள்.

இவனும் அவளை அணைத்தவன் தன்னையும் மீறி அவளின்  நெற்றியில் தன் இதழ் பதித்தான் .அவள் உடல் சிலிர்க்க நின்றிருந்தவள் அவனை விட்டு விலகிவள் ,”என்னை விடுங்க.. எனக்கு உங்களை பார்த்தாலே கடுப்பா இருக்கு நகருங்க  நீங்க என்னுடைய எனிமி.நான் இங்க இருந்து போகனும்.”என்றாள்.

“ஆமா ஆமா நாம எனிமி தான்.போகலாம் இப்போ என்ன அவசரம்.நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு ,என்னை பார்த்து ஏன் மாயோன் சொன்ன உன்னுடைய மாயோன் என்னை மாதிரிதான் இருப்பானா?”

கார்த்திக் கேட்ட பிறகுதான் அவளுக்கும் அதுதோன்ற மறுபடியும் கார்த்திக்கை பார்க்க அவளுக்கு பல கேள்விகளுக்கு விடை கிடைக்க கண்கள் கலங்கியவாறு,”நீங்கள் மாயோன் மாதிரியேதான் இருக்கீங்க.

ஆனால் என்னுடைய மாயோன் என்னை கஷ்டப்படுத்தி பார்க்க மாட்டார் .என்னை எந்த இக்கட்டிலும் காப்பாத்துவார் . ஆனால் நீங்க என்னை நேரில் பார்க்காமலேயே எப்பவும் என்ன கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கீங்க” என்று குழந்தைபோல் அழுதாள் பெண்ணவள்..

“ஏய் இனியா அழாதே ப்ளீஸ்மா நீ அன்னைக்கு என்னை பார்த்தபோது இப்படி நடந்துக்கலையே.? அப்போ உனக்கு என்னுடைய பெயர் தான் பிரச்சனை அப்படித்தானே?”

“என்னைக்கு சொல்றீங்க நீங்க. எனக்கு எதுவும் புரியலையே?”

இதில் மிகவும் குழம்பியவன் முதல் முறையாக அவள் மீது பரிதாபம் ஏற்பட அன்னைக்கு நடந்த நிகழ்வை கார்த்திக் கூற ,”எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு .நீங்க மாயோன் சொன்னதிலிருந்து உங்களை நான் என்னை காப்பாத்த வந்த மாயோனா நினைத்து இரண்டு வருடமா வாழ்ந்து வந்தேன். ஆனால் நீங்க அபிஷேக் அண்ணனா இருப்பீங்க என்று நான் கனவில் கூட நினைச்சு பார்க்கல

.எனக்கு இப்போ எல்லாத்துக்கும் விடை கிடைச்சிடுச்சு.சாரி நான் உங்களை தொந்தரவு பண்ணி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க..உங்களுக்கு ஏற்கனவே என்னை பிடிக்காது .. உங்க வீட்டில் வேற நான் தங்கி இருக்கேன் .இவங்க எல்லோரும் என்னை கட்டாயப் படுத்தினாங்க அதனால்தான் தங்கினேன். நான் நாளைக்கு கிளம்பிடுவேன் 

நீங்க நிம்மதியா இருங்க”

“ஏய் நிறுத்துடி  நீ இங்கே தங்கறது எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேனா.? இல்ல உன்னை பிடிக்கலன்னு நேரடியா சொன்னேனா?”

“நீங்க என்ன சொல்றீங்க கார்த்திக் . உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு  உங்க குடும்பத்தினருக்கும்  தெரியும் .என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கும் தெரியும் .எனக்கு என்ன சந்தேகம்.னா நீங்க ஏன் இப்போ எங்கிட்ட இப்படி நடத்துகிறீங்க..என்னை நேரில் பார்க்கும் போது எப்படியும் நீங்க என்னை திட்ட போறீங்கன்னு நான் நினைச்சேன் . ஆனால் எனக்கே இது ஆச்சரியமா இருக்கு,”

“இனியா எனக்கு உன் மேல அப்படி எதுவும் கோபம் கிடையாது .அபிஷேக்கை சீண்டுவதற்கு தான் நான் அப்படி நடந்துகிட்டேன். அன்னைக்கு நம்ம வீட்ல உன்னுடைய குரலை கேட்டதும் நான் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் உன்னை நான் பார்க்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன்.. ஆனால் அப்போ தான் புவனேஷ் தற்கொலை முயற்சி செய்தது எனக்கு தெரிய வர அங்கிருந்து கிளம்பிட்டேன் உனக்கு விஷயம் தெரிந்து நீயே என்னை வந்து பார்க்கணும் என்று நினைத்தேன் அன்னைக்கு அபி ஃபோனை பிடுங்கி உன்னை சீண்டும் விதமாக வேண்டுமென்றே அப்படி பேசினேன் அப்போதாவது உனக்கு என் குரல் தெரியுதா என்று பார்த்தேன்.நீயும் அன்னைக்கு அபியோட ஃபோன்ல பேசும்போது எங்கூட கூட பேசியதால உன்னையும் வெறுப்பேற்றும் படி பேசினேன் அவ்வளவுதான்” என்றான்.

கார்த்திக்  கூறியதை கேட்டவள் வாய் பிளந்தபடி அமர்ந்திருக்க, கார்த்திக் அவளின் வாயை மூடியவன்,” பார்த்து ஏதாவது உள்ளே புகுந்துடப்போகுது”

என்று சிரிக்க அவனை முறைத்தவள்..

“நீங்க உண்மையாவே அபிஷேக் அண்ணா கார்த்திக் தானா? இல்ல என்னுடைய மாயோனா? இல்ல இரண்டு பேரும் ஒருத்தவங்க தானா?எனக்கு ஒன்னுமே புரியல “என்றவள்  தலையில் கைவைத்து அமர்ந்தாள்.

“இனியா இங்க பாரு எதையும் தேவையில்லாமல் போட்டு குழப்பிக்காதமா.உன் சந்தேகத்துக்கு எல்லாம் கண்டிப்பா விடை கிடைக்கும். ஆனால் அந்த மாயோன் நான் இல்ல.. நீ சொல்றபடி நான் மாயோன் என்ற வார்த்தையை சொன்னதால என்னை நீ மாயோனா உருவகப்படுத்தி இருக்க அவ்வளவுதான்..உனக்கு என்ன பிரச்சனை அதாவது உனக்கு அடிக்கடி கனவு வருது.ன்னு அபிஷேக் சொன்னான்..என் மேல நம்பிக்கை இருந்தா சொல்லுமா”

“என் மேல உங்களுக்கு என்ன கார்த்திக் அப்படி ஒரு கரிசனம்.. நீங்க ஒருவேளை என் நிலைமையை

வைத்து என்னை பழிவாங்க நினைக்கிறீங்களா?”

“இனியா போதும் நிறுத்து எதுக்கும் ஒரு அளவு இருக்கு ,நான் உனக்கு எவ்ளோ பொறுமையா சொல்லிட்டு இருக்கேன்.நீ என்னை நம்பாம பேசினா எப்படி.? நீ என்ன நினைச்சுட்டு இருக்க நான் என்ன வில்லனா உன்னை பழிவாங்க.

. உனக்கும் ,எனக்கும் என்ன பூர்வ ஜென்மத்து பகையா சொல்லுடி. 

இங்க பாரு  இனியா எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல  நீ நம்புவியோ இல்லையோ நான் சொல்றது எல்லாம் உண்மைடி.

அன்னைக்கு நீ யாருன்னு தெரியாம தான் நான் உன்னைக் காப்பாற்றினேன்.ஆனால் உன்னை நன்றாக பார்த்ததும் அபிஷேக் உனக்கு ஃபோன் பண்ணதை வைத்தும் நீதான் இனியா அபிஷேக் ஃப்ரெண்ட் என்று எனக்கு தெரிஞ்சது. அதுக்கு முன் நாம இரண்டு பேரும் சந்திச்சிருக்கோம் அதுதான் உனக்கே தெரியுமே. அபிஷேக் ஃபிரண்டும் எனக்கு தெரிஞ்ச பொண்ணும் ஒருத்தி தான் என்று எனக்கு தெரிய வந்ததும் அப்போ ஏற்பட்ட என்னுடைய உணர்வுகளை என்னால் விவரிக்க முடியல டி”என்று மேற்கொண்டு பேசியவனின் வார்த்தைகளைக் கேட்டவள் தன் காதுகளையே நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்கள் தானாக கலங்க அதிர்ச்சியில் நின்றிருந்தாள்.

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க  கார்த்திக் கதவைத் திறந்தவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து கத்த ஆரம்பித்தான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!