இனியா தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வலம் வருபவளுக்கு இரவு ஆனால் மட்டும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துது.
தன் பக்கத்தில் தன் அம்மா இல்லாமல் அவள் இப்போதெல்லாம் உறங்குவது கிடையாது. அபிஷேக் ராஜன் சொன்னதைப்போல இனியா இரவு பூஜை அறையில் சாமி கும்பிட்டவள் விபூதியை இட்டுக் கொண்டாள்.
லட்சுமி ,”என்னடி அதிசயமா இருக்கு சாமி எல்லாம் கும்பிடறே”
” நான் நல்ல விஷயம் செய்தாலும் கேள்வி கேட்கற.. உனக்கு பிடிக்காததை செய்தாலும் திட்ற.உனக்கு வேற வேலையே இல்ல போமா நான் போய் படுக்கறேன் நீ சீக்கிரமா வா “என்றவள் அறைக்குச் சென்றாள்.
இனியாவின் அப்பா இருவரின் உரையாடலை கேட்டு சிரித்துக் கொண்டிருக்க ,”என்னங்க இது அதிசயமா இருக்கு.”
“உனக்கு புரியலையா லட்சுமி.அபிஷேக் சொல்லி இருப்பான் .அதனால்தான் இவள் உடனே செய்றா.ஆனால் அவனைப் போல் ஃப்ரண்ட் கிடைக்க நம்ம பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.”என்றார் சிவக்குமார்.
“ஆமாங்க அது என்னமோ உண்மைதான் .ஆரம்பத்தில் நான்கூட ஆம்பள பசங்க கூட பேசாதேன்னு சண்டை போட்டேன் .ஆனால் அந்தப் பசங்க நடந்துக்கற விதத்தைப் பார்க்கும்போது எனக்கும் நம்ம பொண்ணு பாதுகாப்பா இருக்காளே னு நிம்மதியா இருக்குங்க”
சிவக்குமார்,”ஆமா லட்சுமி அபிஷேக் ராஜனின் பெற்றோர்கள் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க .பிள்ளைகளை நல்லா வளர்த்து இருக்காங்க.பெரியவன் கூட ரொம்ப மரியாதையா நடந்துக்கறான்”என்றார்.
“அந்த பையனை நீங்க எங்க பாத்தீங்க ”
“நான் அதை உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்மா. அந்த பையன் வேலை செய்ற காலேஜ்ல தான் என்னோட ஃப்ரண்டோட பொண்ணுக்கு சீட் கிடைச்சிருக்கு , அந்த பொண்ணு ரொம்ப பயந்த சுபாவம் .அப்போதான் நம்ம இனியா அவன் அங்கே வேலை செய்யறதா சொன்னா.நான் நேர்ல போய் அவனை சந்திச்சேன் ரொம்ப மரியாதையா பேசறான்”
“நீங்க என்னங்க இப்படி சொல்றீங்க . ஆனால் நம்ம இனியா அந்த பையனை சரியான ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ,சிடுமூஞ்சி சொல்லிட்டே இருப்பாளேங்க”
“என்கிட்டயும் அப்படித்தான் சொன்னா..பட் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது .அவன் நல்ல பையன் மா. ஒருத்தரை பார்க்கும் போதே நமக்கு தெரியாதா லட்சுமி. நம்ம பொண்ணு ஏதோ தவறா புரிஞ்சிட்டு இருப்பா விடு”
“ஆமாங்க அவனைப்பற்றி இவள் எப்படி நினைச்சா என்ன ?சரிங்க அவள் தனியா இருப்பா பயப்பட போறா நான் போய் படுக்கறேன்”என்று அறைக்குச் சென்றார் லட்சுமி.
இனியா அறையில் அபிஷேக் ராஜனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“டேய் டேய் உனக்கு அவ்வளவு தான் மரியாதை. ..அவளை லூசுன்னு சொல்றதெல்லாம் வேணாம்”
“உண்மையச் சொன்னா உனக்கு ஏன்டா கோபம் வருது ,அடங்காப்பிடாரி பெண்ணா அது.”
“டேய் டேய் கத்தாத டா , அவள் லைன்ல தான் இருக்கா .அம்மா இங்க வாமா உன் பெரிய பையன் என்ன பண்றான் பாரு” என்று கத்தினான் அபிஷேக் ராஜன்.
“டேய் உண்மைய தான் சொல்றியா அந்த பொண்ணு லைன் ல இருக்காளா. சாரி டா தெரியாம பேசிட்டேன் ..எங்கிட்ட ஃபோனை கொடு ” என்று தன் தம்பியிடம் இருந்து போனை வாங்கிய இல்லை இல்லை பிடுங்கிய கார்த்திக்
ஏம்மா பொண்ணு உனக்கு ஃபோன் பேச நேரம் காலம் கிடையாது .காலையில் எழுந்து காலேஜுக்கு போக வேண்டாமா போய் படுத்து தூங்கு போ” என்றான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இனியா அவனின் குரலை எங்கோ கேட்டது போல் இருக்க யோசனையில் ஆழ்ந்தாள்.
அவளை லட்சுமி அழைக்க அதில் தன் நிலையை அடைந்தவள்,” ஹலோ ஹலோ என்ன பேசுறீங்க நீங்க “என்று சத்தமிட அதற்குள் அபிஷேக் ஃபோனை வாங்கியவன்
“டேய் அறிவு கெட்ட முண்டம் அவ கிட்ட சாரி கேட்பன்னு பார்த்தா இப்படி பேசற “என்று கத்திக் கொண்டிருந்தான்.
இவர்களின் சத்தத்தை கேட்டு உள்ளே வந்த கல்பனா தேவி ,”என்னடா இங்க பிரச்சனை .தூங்கும்போது கூட நிம்மதியா விடமாட்டீங்களா?”
அபிஷேக்,”அம்மா இவன் என்ன பண்றான் பாரு.” என்று நடந்ததை கூற,
“ ஏன் கார்த்திக் இப்படி பண்ற.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு டா நீ தான் ஏதோ தவறா புரிஞ்சிக்கிட்டு இருக்க. இப்படி எல்லாம் பேசாத கார்த்திக்.”
“அம்மா நான் ஒண்ணும்ம் தப்பா பேசல..தூங்கும் போது ஃபோன் பேசாதே சொன்னேன் இது தப்பா ?”
“அம்மா இனியா லைன்ல இருக்காமா..அதைத் தெரிஞ்சு தான் இவன் இப்படி பண்றான்” என்று கத்தினான் அபிஷேக் ராஜன்.
“என்னடா சொல்ற இனியா லைன்ல இருக்காளா? என்ற கல்பனா தேவி ஃபோனை வாங்கியவர் இனியா நீ எதுவும் தப்பா எடுத்துக்காத டா.கார்த்திக் டென்ஷன் ல தெரியாம பேசிட்டான்”
“ஆன்ட்டி என்ன டென்ஷன் இருந்தாலும்,தெரியாதவங்கள
இப்படி பேசறது சரியில்ல. அவர் பேசினது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு”என்று இனியா பேசிக்கொண்டிருக்க இதையெல்லாம் கேட்ட லட்சுமி,” ஏய் இருடி என்ன இப்படி பேசுற “என்றவரை முறைத்த இனியா தன் செயலை சிறப்பாக செய்து கொண்டிருந்தாள் .அதாவது கார்த்தியைப் பற்றி அவனின் அம்மாவிடமே குறை கூறிக் கொண்டிருந்தாள்.
“இனியா ப்ளீஸ் இந்த ஆன்ட்டிக்காக அவனை மன்னிச்சுடு மா”
“ஆன்ட்டி ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க அவர் செய்த தவறுக்கு நீங்க எதுக்கு சாரி கேட்கறீங்க”
அவள் கோபம் வந்தா படபடன்னு பேசிடு வா. மத்தபடி மனதில் எதுவும் வச்சுக்க மாட்டா”
“இல்லங்க இனியா மேல எந்த தப்பும் இல்ல .கார்த்திக் தான் ஏதோ விளையாட்டுத்தனமா பேசிட்டான் .அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்”
“சேச்சே என்ன நீங்க இப்படி சொல்றீங்க ,அவர் நல்லதுக்கு சொல்லியிருப்பாரு. இவளுக்கு அது புரியல.. இப்போதான் எங்க வீட்டுக்காரர் கார்த்திக் பற்றி ரொம்ப புகழ்ந்து பேசினார்”என்றார் லட்சுமி.
“அப்படிங்களா ரொம்ப சந்தோஷம் .அவன் யார்கிட்டயும் இப்படி பேச மாட்டான் .ஆனால் ஏன் தெரியல இனியா விஷயத்தில் மட்டும் இப்படி இருக்கான்”
” இவள் ஏதாவது வாய்பேசி இருப்பா. அதனால் தம்பி அப்படி பேசியிருப்பார் விடுங்க கல்பனா”என்ற தன் அம்மாவை முறைத்துக் கொண்டிருந்தாள் இனியா
“ஓகே குடும்பத்தோட ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வாங்க லட்சுமி”
“நாங்க தான் அன்னைக்கு வந்தோமே .நீங்க ஒரு நாள் குடும்பத்தோட வாங்க.
கூடவே உங்க பெரிய பிள்ளையை அழைச்சிட்டுவாங்க..நாங்க உங்கள் வீட்டுக்கு வந்தப்போ அவரில்லையே”
என்றவர்கள் பரஸ்பரம் விசாரித்து ஃபோனை வைத்தனர்.
இனியா , “அம்மா நான் அந்த சிடுமூஞ்சிகிட்ட வாய்பேசினத நீ பார்த்தியா?ஏன் மா இப்படி பண்ற”என்றவளை அவளின் அப்பா சமாதானம் செய்தார்.
இது இவங்க வீட்டில் அடிக்கடி நடப்பது தானுங்கோ
இங்கே அபிஷேக் கொதிநிலையில் இருந்தவன்,” இங்க பார் கார்த்திக் நீ ஒவ்வொரு தடவையும் என்னை இன்சல்ட் பண்ணும் போதும் நான் அமைதியா போய்டுவேன்.பட் அவளை பற்றி உனக்கு என்ன தெரியும்,.அவளை பேச எந்த உரிமையும் உனக்கு கிடையாது”
“டேய் இப்போ எதுக்கு நீ கோபப்படற .போ போய் வேலையை பாரு நான் அப்படி எதுவும் தப்பா பேசல”என்று
இருவரும் விவாதம் செய்ய
கல்பனா,” நிறுத்துங்கடா கார்த்திக் இனி நீ அந்த பிள்ளைக்கிட்ட இப்படி பேசாத.அவளை நீ சரியா பார்த்தது கூட இல்ல .அவளுடைய குரலை மட்டும் கேட்டுட்டு நீ ஏன் அவளை இப்படிப் பேசுற .பெண்பிள்ளையை உன் இஷ்டத்துக்கு எதையாவது நினைச்சு பேசாத.
அந்தப் பொண்ணு பேசும்போது மன கஷ்டத்தோட பேசினா தெரியுமா? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா.யாராவது உன்னை பத்தி தவறா பேசினா நான் தாங்குவேனா? அப்படித்தானே அவளை பெற்றவங்களுக்கும் இருக்கும்.அவங்க அம்மா ,அப்பா நீ இப்படி பேசுவதைக் கேள்விப்பட்டா என்ன நினைப்பாங்க..லட்சுமி பெருமையா உன்னைப்பற்றி சொல்றாங்க.ஆனா நீ அவங்கப் பெண்ணை இப்படி பேசுற. இதெல்லாம் சரி இல்ல கார்த்திக்…” என்றார் கல்பனா.
கார்த்திக் இரவெல்லாம் தன் அம்மா கூறியதை நினைத்து அதே சிந்தனையில் சுழன்றவன் அவள் நினைவிலேயே தூக்கத்தை தொலைத்தான்.
தாரகையின் மாயோன் தொடர்ந்து வரும் கனவினால் தூக்கத்தை தொலைத்த நாயகி.அவளுக்கு உறுதுணையாக இருந்து அவளை அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உதவும் அவளின் நண்பர்கள். நாயகன் அவளை உயிருக்கு உயிராக விரும்பினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக ஆரம்பத்தில் அவளை வெறுப்பது போல்…