தாரகையின் மாயோன்

மாயோன்- 4

   கார்த்திக் தான் பேசியது தவறு என்று நினைத்தவன் இரவு தூக்கத்தை தொலைத்தான்.

இனியா அவளும் கார்த்திக் பேசியதை நினைத்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அழுது கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தாள்.

இனியா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என்ன இனியா நல்ல தூக்கமா ?அவன் வராமல் நிம்மதியா தூங்கற‌ அப்படித்தானே?’

“ஆமா ஆமா இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் .அவனுடைய தொந்தரவு எனக்கு இல்ல .அதுக்குக் காரணம் நீங்க தான் .நீங்க வந்ததும் அவன் காணாமல் போய்டறான். நீங்க என்கூடவே இருந்தா நான் ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன்.நீங்க என்கூடவே கடைசிவரை இருப்பீங்களா?”

“நானும் அதை தானே டா  சொல்றேன்.நான் எப்போதும் உன் கூடவே தான் இருப்பேன்” என்றவன்  அவளை அணைக்க அவளும் அவனுள் சரணடைந்தாள்.

“சரி உங்க பெயர் என்ன சொல்லுங்க”

“நீ என்னை எப்படி கூப்பிட ஆசைப்படறியோ அப்படியே கூப்பிடு அம்மு”

“அம்முவா  என்னுடைய பெயர் இனியா”

“அது எனக்கு தெரியும் .இருந்தாலும் எனக்கு உன்னை இப்படித்தான் கூப்பிடப் பிடிக்குது  நான் என்ன செய்யட்டும் சொல்லு”என்று சிரித்தவனை பார்த்தவள்

“சரி சரி நான் உங்களை மாயோன் கூப்பிடறேன் ”

“ஏதே மாயோனா.  ஏன்டா எனக்கு இப்படி ஒரு  பெயர் வச்சிருக்க.”

“அடிக்கடி மறைஞ்சு போறீங்க தானே.அதனால இந்த பெயர் நல்லா இருக்கா?”

“சூப்பரா இருக்கு டா அம்மு.சரி நான் கிளம்புறேன் “என்ற அடுத்த நொடி மாயமாய் மறைந்தான் இனியாவின் மாயோன்.

காலை விடிந்ததும் இனியாவின் அம்மா அவளை எழுப்ப ,”கொஞ்ச நேரம் தூங்க விடுங்க மாயோன் ப்ளீஸ்.”என்று சிணுங்கினாள் பெண்ணவள்.

“என்னது மாயோனா.அடியேய் என்ன இது .நேத்து ஃநைட்டு கனவு எதுவும் இல்லாம நிம்மதியா தூங்க விட்டியே பார்த்தா ,இப்படி புலம்பறியே எந்திரிடி.”என்றதும் எழுந்து அமர்ந்த இனியா,”அம்மா என்னோட‌ மாயோன் எங்க போனார்” என்று சுற்றி தேடினாள்.

“ என்னடி ஏன் இப்படி படுத்தற .விடியற்காலையில் கூட உனக்கு கனவு வருதா?  எப்போதும் பேய், பிசாசு சொல்லிதான் கத்துவ இப்போ மாயோன் சொல்லி புலம்பறே ஏன்டி இப்படி பண்றே”

“அச்சோ இதுவும் கனவா ? சரி நான் போய் கிளம்பறேன்”என்றவள்  கல்லூரிக்கு கிளம்பினாள்.

ஆனால் லட்சுமிக்கு மேலும் மேலும் கவலைகள் கூடிக் கொண்டே சென்றன.

இங்கே இரவெல்லாம் தூங்காத கார்த்திக் ,” அபி எந்திரிடா.”என்று தன் தம்பியை எழுப்பினான்.

“என்னடா என்ன வேணும் உனக்கு .நீ இப்படி நடந்துப்பேன்னு  நான் நினைச்சுக் கூட பாக்கல.  எங்கிட்ட பேசாத கார்த்திக்.”

“டேய் அபி மறுபடியும் ஆரம்பிக்காத”என்றவனை அபிஷேக் முறைக்க..

“சாரிடா நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.

ஆனால் அம்மா சொல்லும் போது தான் நான் செய்த தவறு எனக்கு புரியுது .அதுவும் ஒரு கல்லூரி விரிவுரையாளராக இருந்த நான் இப்படி செய்து இருக்கக் கூடாது. நான் அந்தப் பெண்ணை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கிறேன்  டா”என்றவனை ஆச்சர்யமாக பார்த்தவன்

“ நீயாடா இது நீ மன்னிப்பு கேட்கப்போறியா.? அதுவும் ஒரு பெண்ணிடமா உன்னுடைய கௌரவம் என்ன ஆகறது ..அதுவும் அவள் என்னுடைய ஃப்ரண்ட் .அது உனக்கு ஞாபகம் இருக்கா?”

“யாரா  இருந்தால் என்னடா. நான் பேசியது தப்பு தானே நம்ம அம்மா  இப்படியா வளத்தாங்க”

“ஆமா பேசறதெல்லாம் பேசிட்டு  கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு டா . இதையும் அம்மா தான் சொல்வாங்க ஞாபகமிருக்கா தமையனே”

“ சமயம் பார்த்து ஓவரா பேசாத டா‌.நான் செய்தது தப்புதான் .சரி நான் சொல்றத ஞாபகம் வச்சுக்கோ எனக்கு அந்த பெண்ணை பார்த்து மன்னிப்பு கேட்கனும் அதுக்கு ஏதாவது ஒரு ஐடியா கொடு”

“அவள் ஏற்கனவே உன் மேல கோபமா இருக்கா? கொஞ்சம் பொறுமையா இரு டா..நான் அவகிட்ட பேசி பாக்கறேன்.”

“ ஓகே டா ..நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா ?தேவையில்லாமல் யார்கிட்டயும் பிரச்சனைக்கு போகக்கூடாது”

“டேய்  அண்ணா மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா ..உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? நான் தேவையில்லாம அடுத்தவங்க சண்டைக்குப் போக மாட்டேன் .இனியாகிட்ட யாராவது வம்பு பண்ணா ..என்னால சும்மா இருக்க முடியாது”

“சரிடா மத்தவங்க இனியாகிட்ட வம்பு பண்ற அளவுக்கு அவள் அப்படி என்ன பண்றா”

“ஒரு பையன் ஒரு பெண்ணை தேவையில்லாம திட்டினாலோ ,  அவளை லவ் டார்ச்சர் பண்ணாலோ ,நம்ம வீராங்கனை சும்மா இருக்க மாட்டாள். அவங்க யாரா இருந்தாலும்

கை நீட்டிடுவாள். அவன் திரும்ப இவளை ஏதாவது செய்ய வருவான்.

என் எதிர்ல என் ரௌடி பேபிக்கு ஏதாவது நடந்தா நான் சும்மா இருப்பேனா?”

“ஓஹோ  சரியான வாலு  டா‌ அவ , நான் கண்டிப்பா அந்த ரௌடி பேபியை சந்திச்சே ஆகனும் .”என்றான் கார்த்திக் ராஜன்.

“சரி டா அதையே எத்தனை தடவை சொல்லுவ . அப்புறம் அவளை நீ ரௌடி பேபி சொல்லாத.அவளைப் பொறுத்தவரை நான் மட்டும்தான் அவளை அப்படிப் கூப்பிடனும் னு சொல்லுவா”

“சரிடா சரிடா  புரியுது.” என்றவன் மனதில் அவளுக்கு அழகான பெயர் வைத்தான்.

கார்த்திக் ராஜன் கல்லூரிக்கு கிளம்பியவனுக்கு அன்று முழுவதும் ஏதோ மனதில் இனியாவின் ஞாபகம் மட்டுமே சுழன்று கொண்டிருந்தது.. ஆனால் அதுவும் சுகமாய் இருக்க அதை விரும்பி அனுபவித்தான் ஆடவணவன்.

வழக்கம்போல் இனியா கல்லூரியில் தன் நண்பர்களுடன் பொழுதை கழித்தாலும் அடிக்கடி கார்த்திக் பேசிய வார்த்தைகள் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

இரவு படுக்கைக்குப் போக பெண்ணவளுக்கு அந்த மாயோனின் நினைவுகள் வர அவன் இன்றும் கனவில் வருவான் என்ற ஆசையுடன் படுத்து உறங்கினாள் பெண்ணவள்.

இனியா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க யாரோ அவளின் போர்வையை பிடித்து இழுப்பது போல் இருக்க , “அம்மா உனக்கு எப்போதும் இதே வேலையா போச்சு.. உன் போர்வையை எடுத்து போர்த்தி தூங்குமா” என்றவள் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

அடுத்த நிமிடம் மீண்டும் யாரோ காலை பிடித்து இழுப்பது போல் இருக்க,” அம்மா “என்று கத்தியவள் எழுந்து அமர அங்கே பக்கத்தில் லட்சுமி இல்லை.

ஒன்றும் புரியாமல் எதிரில் பார்த்தவளுக்கு அதிர்ச்சி மீண்டும் அதே உருவம் கோரமாக முகம் எல்லாம் எரிந்த நிலையில் இவளை நெருங்கி மீண்டும் இவளை பிடித்து கீழே தள்ள அதில் பெண்ணவள் கீழே விழுந்தவள் அதிர்ச்சியிலும் ,பயத்திலும் கத்தவும் முடியாமல் வார்த்தை வராமல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

கீழே விழுந்தவளை மிகவும் நெருங்கிய அவ்வுருவம் அவளின் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்திருக்க அதில்  மிகவும் பயந்தவளாக கண்மூடினாள் இனியா. 

“கண்ணை மூடாத என் முகத்தை மட்டும் பாரு “என்று கத்திக் கொண்டிருந்த உருவத்தை காண முடியாமல் பயத்தில் உயிர் போகும் நிலையை அனுபவித்தவளுக்கு அந்த நேரத்தில் மாயோனின் முகம் தன் கண் முன்னே வந்தது..

தன் தைரியத்தை திரட்டியவளாக  “மாயோன் சீக்கிரம் வாங்க “என்று  கத்த இதில் அந்த உருவம் கோபம் கொண்டு அவளை ஓங்கி அறைய அதில் பெண்ணவள் மயங்கி சரிந்தாள்.மீண்டும் பெண்ணவள் கண் விழிக்கும்போது அவளை மாயோன் தன் மடியில் ஏந்திதியிருந்தான்.

மாயவனை கண்டதும் மகிழ்ச்சியில்  இனியா தன்னையும் மீறி அவனை கட்டிக்கொண்டு கதறியழ மாயோன் அவளை சமாதானம் செய்தான்.

“ அழாத அம்மு நீ என் கூடவே இருக்கும் படி நான் பாத்துக்கறேன் .இனி அவன் உன்னை நெருங்க மாட்டான் சரியா?”

“இங்க பாருங்க மாயோன் நீங்களும் ஒவ்வொரு முறையும் இப்படி தான் சொல்றீங்க. ஆனால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு ,ப்ளீஸ் என்னை அவனிடமிருந்து காப்பாத்துங்க .இல்லனா நான் செத்துடுவேன்”

“ஏய் லூசா டி நீ என்ன வார்த்தை பேசுற. இந்த ஜென்மத்தில் உன்னை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு அம்மு..அதை நான் ஒழுங்கா செய்து முடிப்பேன் நீ கவலைப்படாத”என்றிட

இருவரின்  கண்களும் ஒன்றோடு ஒன்று  கலந்திட மாயோனின் மின்னல் கீற்று 

பார்வையில் பெண்ணவள் தன் பயத்தை மறந்தாள்.

உந்தன் மின்னல் ஒளி பார்வையிலே எனை  அகத்திலே

சிறையெடுத்தவனே..!!

நம் கண்களோடு கண்கள் உறவாடிட  மின்னல் கீற்றை காண முடியாமல் சிரம் தாழ்ந்து   நிற்கிறேனே..!!

உந்தன் நேத்திரத்தை பார்த்த நொடியிலிருந்து ஊண் உறக்கமின்றி அலைகிறேனே …!!

உன் மின்னல் வெளிச்ச விலோசனம்  என் நெஞ்சிலே உந்தன் சுகமான  நினைவுகளை 

வருடிச் செல்கிறதே…!!

நம் இரு விழி  நயனங்கள் சந்திக்கும்

ஒவ்வொரு நொடியும் என்னுள்

உற்சாகம் பிறக்கிறதே..!!

எங்கிருந்து வந்தாயோ!

எனை வசீகர 

விழிகளால் கைது

செய்திடவே என் மன்னவனே …!!

“அம்மு நீ தூங்குடா நான் உன் பக்கத்திலே இருக்கேன்”

“ம்ம் சரி.” என்றவள் மாயோனின்

மடியினில் சுகமாய் துயில் கொண்டாள் இனியா.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page