தீ 🔥 – 12

அத்தியாயம் 12

 

என்னைக்கு நான் உங்க பொண்ணை பார்த்தனோ அன்னைக்கே என் கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்ந்துடுச்சி….. 

 

இத்தனை நாட்களாக பைரவியின் மீது இருந்த காதலை தனக்குள் மறைத்து வைத்திருந்த, மித்ரன் ….

 

தன் வாழ்நாள் லட்சமான போலீஸ் வேலை கிடைத்ததும் தன்னவளிடம்  தன் காதலை கூற வேண்டும்  என்று மித்ரன் நினைத்திருக்க, ஆனால் அவன் நேரமோ என்னவோ ஏற்கனவே பைரவிக்கு தன் தோழி தேவியின் மகனுடன் திருமணம் முடிவு செய்திருந்தார்…

 

இதை அறியாத மித்ரன் பைரவியின் மீதான தன் காதலை ஒவ்வொரு நாளும் வளர்த்து கொண்டே போக, இதை அறிந்து கொண்ட ருத்ரன் தன் அண்ணனிடம் கேட்க.. முதலில் ஏதேதோ சொல்லி சமாளித்த மித்ரன்… தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று தெரிந்ததும் தன் மனதில் இருப்பதை கூறிய மித்ரன் அதை உடனே பைரவியிடம் கூற போவதாக கூறிய மித்ரன் பைரவியை பார்க்க கிளம்ப…

 

“என்ன இவன் இப்படி சொல்றான்? இப்போ நம்ப என்ன பண்றது … இது மட்டும் அருவுக்கு தெரிஞ்ச அவ்வளவு தான் …. ஐயோ கடவுளே…” என்று தன் தலையில் கை வைத்து கொண்ட ருத்ரன் உடனே பைரவிக்கு அழைக்க,

 

“சொல்லு டா நல்லவனே… என்ன இப்போ கால் பண்ணி இருக்க?” என்று பைரவி கேட்க 

 

“ஏய்….. பையூ இப்போ நீ எங்க இருக்க?” என்று டென்ஷனோடு ருத்ரன் கேட்க 

 

“அடேய்…. எரும என்ன பகலையே குடிச்சிருக்கியா?” என்று பைரவி கடுப்போடு  கேட்க 

 

“ஏய்….. மொத நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு இப்போ நீ எங்க இருக்க?” என்று ருத்ரன் சற்று கோபமாக கேட்க

 

“டேய்…. எரும… நான் காம்பெடிஷனுக்காக சிங்கப்பூர் வந்து இருக்கேன்… ஏன் உனக்கு நான் சொன்னது ஞாபகம் இல்லையா?” என்று பைரவி குழப்பத்தோடு, ருத்ரனோ பைரவியின் கேள்விக்கு பதில் கூறாமல் போனை கட் செய்து விட்டான்…

 

“இவனுக்கு என்ன பைத்தியமா? என்னை பிளைட் ஏத்தி விட்டதே இவன் தான் அப்டி இருக்கும் போது ஏன் இவன் திடீருன்னு கால் பண்ணி எங்க இருக்கேன்னு கேக்குறான்?” என்று பைரவி யோசித்துக் கொண்டு நின்றிருக்க… அப்போது பைரவியை யாரோ அழைக்க பைரவியும் அப்போதே அதை மறந்து விட்டு தன் வேலையை பார்க்க சென்று விட, இங்கோ பைரவி இந்தியாவிலே இல்லை என்று தெரிந்த பின் ருத்ரன் பெருமூச்சை ஒன்றை இழுத்து விட்டான்…

 

“நல்ல வேளை பையூ இங்க இல்ல … அதனால இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்ல, பையூ இந்தியா திரும்பி வரதுக்குள்ள நம்ப ருத்ரன் கிட்ட எல்லாத்தையும் எடுத்து சொல்லி அவன் மனச மாத்திடனும்” என்று ருத்ரன் நினைத்து கொண்டு இருக்க, அவன் நினைப்பை கெடக்கும் விதமாக அருந்ததியின் முன் கம்பீரமாக அமர்ந்திருந்தான் மித்ரன்….

 

“ ம்‌….. சொல்லுங்க தம்பி….. யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு என்னை உடனே பார்க்கணும்னு சொல்லி கேட்டீங்க?” என்று தன் முன் கம்பீரமாக அமர்ந்திருந்த மித்ரனை பார்த்து அருந்தி கேட்ட

 

“ஹாய் அண்டி … நான் மித்ரன்… எனக்கு இந்த சுத்தி வளைச்சி பேசறது எல்லாம் பிடிக்காது அதனால நான் நேர விஷயத்துக்கே வரேன்…” என்றவன் ஒரு வித தீர்க்கமான பார்வையோடு அருந்ததியையும் அவர் அருகே அமர்ந்திருந்த நடேசனையும் பார்த்தவன்.

 

“எனக்கு உங்கள் பொண்ணு பைரவிய ரொம்ப பிடிச்சிருக்கு… நான் அவங்கள எப்போ பார்த்தனோ அப்போவே எனக்கு அவங்கள ரொம்ப புடிச்சிடுச்சு… நான் அவங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்…” என்று மித்ரன் சுற்றி வளைக்காமல் நேரடியாக கூற  இதை கேட்ட அருந்ததி மற்றும் நடேசன் இருவரும் அதிர்ந்து போக, 

 

“தம்பி நீங்க என்ன சொல்ரீங்க? நீங்க எங்க பொண்ண விரும்புறீங்கன்னா… அவளும் உங்கள?” என்று நடேசன் எதோ கேட்க வர அவரை தடுத்து நிறுத்திய மித்ரன்….

 

“ஐயோ … சார்… நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் கிடையாது… இதுவரைக்கும் நான் அக்னீ கிட்ட ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது.. இன்பாக்ட் அவங்களுக்கு இப்படி ஒருத்தன் அவங்களை  லவ் பண்றது கூட தெரியாது… நான் ஒன்னும் டீனேஜ் பையன் இல்ல லவ் பண்ற பொண்ணு கிட்ட ப்ரொபோஸ் பண்ணி அவ பின்னாடி சுத்தி பேசி கல்யாணம் பண்றதுக்கு… நான் ஒன்னும் மத்த பசங்க மாதிரி கிடையாது ….. இதுவரைக்கும் நான் என் படிப்பை தவிர வேற எதுலயும் கவனத்தை செலுத்தியது கிடையாது…. என் வாழ்க்கையோட பெரிய லட்சியமே நான் ஒரு IPS  ஆபிஸர் ஆகணும்னு தான், எனக்குன்னு ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கு …. ஆனா என்னைக்கு நான் உங்க பொண்ணை பார்த்தனோ அன்னைக்கே என் கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்ந்துடுச்சி….. என்னோட போஸ்டிங் லெட்டர் வந்த உடனே என் காதலை அவங்க கிட்ட சொல்ல நினைச்சேன்… ஆனா … அது சரி இல்லைன்னு தோணுச்சி… ஒரு பொண்ணோட மனசுல தேவையில்லாத ஆசைகளை விதைக்க நான் விரும்புல அதான் உங்க கிட்டையே ஸ்ட்ரைட்டா என் மனசுல இருக்கறதை சொல்லிடலாம்னு இங்க இப்போ உங்க முன்னாடி இருக்கேன்”  என்று  கூறிய மித்ரன் அருந்ததியிடம் பைரவியை பெண் கேட்க, மித்ரன் கூறியதை எல்லாம் கேட்ட நடேசன் ஏதோ பேச வர தன் அண்ணனை தடுத்த அருந்ததி …

 

” இங்க பாருங்க தம்பி உங்கள பாத்தா ரொம்ப நல்ல பையன் மாதிரி தான் இருக்கு … உங்க மாதிரி ஒரு பையனா என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா அவள் லைஃப் நல்ல இருக்கும்” என்று அருந்ததி கூற… மித்ரனோ அருந்ததி கூறியதை கேட்டு மனம் முழுக்க சந்தோசத்தோடு அதை தன் முகத்தில் காட்டாமல் அமர்ந்திருக்க… 

 

“அரு…. என்ன ம்மா…. பேசிகிட்டு இருக்க? அப்போ தேவிக்கு நம்ப கொடுத்த வாக்கு?” என்று நடேசன் பதட்டத்தோடு கேட்க 

 

“அண்ணா ஒரு நிமிஷம் நான் பேசி முடிகிற வரைக்கும் நீ அமைதியா இரு … தம்பி கிட்ட நான் பேசுறேன்…” என்ற அருந்ததி ஒரு பெருமூச்சோடு…

 

“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உன்ன மாதிரி ஒரு பையன் என் பொண்ணுக்கு கிடைக்க அவள் கொடுத்து வெச்சிருக்கணும் …. ஒரு அம்மாவா  என் பொண்ணுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன் …. ஆனா அவள் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு நாள் என்ன … ஒரு நிமிஷம் கூட நல்ல இருக்க முடியாது…” என்று அருந்ததி கூற இவ்வளவு நேரம் மனம் முழுக்க சந்தோசத்தோடு அமர்ந்திருந்த மித்ரன் அருந்ததி கூறியதை கேட்டு அதிர்ச்சியோடு 

 

“ஆண்டி…. நீங்க என்ன சொல்ரீங்க? நான் ஏன் அவங்கள கஷ்ட்டப்படுத்த போறேன்?” என்று மித்ரன் கேட்க 

 

“நான் நீ என் பொண்ண கஷ்ட்டப்படுத்துவனு சொல்லுலப்பா … என் பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட கஷ்ட்டப்படுவான்னு தான் சொன்னே” என்று அருந்ததி கூற 

 

“அதுக்கும் இதுக்கும் என்ன ஆண்டி பெருசா வித்தியாசம் இருக்கு… ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தானே? ஆனா நீங்க ஏன் அப்படி சொல்றிங்கனு தான் எனக்கு இன்னும் புரியல” என்று மித்ரன் குழப்பத்தோடு கேட்க 

 

“இல்ல ப்பா…. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, நீ என் பொண்ண எவ்வளவு சந்தோசமா பார்த்துக்கிட்டாலும் நீ ஒரு  போலீஸ் ஆபிஸர்… அப்படி இருக்கும் போது என் பொண்ணுக்கு எப்படி நிம்மதியா இருப்பா? அவளுக்கு எப்படி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் ? எந்த நேரம் உனக்கு என்ன ஆகும்  அப்படின்னு  உயிரே கைல புடிச்சுகிட்டு என் வாழறதை என்னால பார்க்க முடியாது… அவளை அப்படி பார்க்கிற திறனும்  எனக்கு இல்ல… என்னை பொறுத்தவரைக்கும் என் பொண்ணு எப்பவும் சந்தோஷமா சிரிச்ச முகத்தோட இருக்கணும், அவ பிறந்ததுல இருந்து ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டா…. இதுக்கு மேலயும் ஒரு அம்மாவா அவள கஷ்டப்படுத்த நான் விரும்பல” என்று அருந்ததி மிக பொறுமையோடு கூற, மித்ரனோ கண் சிவக்க கோபத்தோடு 

 

“அப்போ உங்களுக்கு என் வேலை தான் பிரச்சனையா?” என்று கேட்க அதற்க்கு ஒரு வெற்று புன்னகை சிந்திய அருந்ததி இல்லை என்பது போல் தலையாட்டியவர்.

 

“நீ ருத்ரனோட ரெண்டாவது அண்ணன் மித்ரன் தானே ?” என்று அருந்ததி கேட்க அதற்கு மித்ரனும் ஆம் என்பது போல் தலையாட்ட 

 

“இங்க உன்னோட வேலை மட்டும் பிரச்சனை இல்லப்பா… உன் குடும்பமும் தான் ….” என்று அருந்ததி கூற… மித்ரனோ அருந்ததி கூறவருவது புரியாமல் அவரை பார்க்க…

 

“உனக்கு தெரியுமா இல்லையானு எனக்கு தெரியல ப்பா… ருத்ரனும் என் பொண்ணும் சின்ன வயசுல இருந்தே பிரெண்ட்ஸ் ….. ருத்ரன் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவான் .. ஆனா ஒரு தடவை கூட என் பொண்ணு உங்க வீட்டுக்கு அவன் கூட்டிட்டு போக மாட்டான். அவளும் அவன் எங்க வீட்டுக்கு வந்தரனால அதை பற்றி கண்டுக்கல.. ஆனா ஒரே ஒரு நாள் … சொல்ல போன ஒரு நாள் கூட ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம் இருக்கும் அவ உங்க வீட்டுக்கு வந்ததுக்கே உன் குடும்பம் என் பொண்ண பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி கஷ்ட்டப்படுத்தி அனுப்புனாங்க…. அதை நெனைச்சி என் பொண்ணு எத்தனை நாள் வருத்தப்பட்டு இருப்பான்னு உனக்கு தெரியுமா?” என்று அருந்ததி கேட்க அது மித்ரனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது…

 

“என்ன ஆண்டி…. நீங்க சொல்ற இந்த விஷயம் எதுவும் எனக்கு தெரியாது….” என்று மித்ரன் கூற 

 

“உன் வீட்டுல நடந்த இதுவே உனக்கு தெரியல… நாளைக்கு உனக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம் ஆனா பிறகு நீ வேலை விசயமாவோ இல்ல ட்ரான்ஸ்பார் ஆகியோ வெளியூர் போனா உன் வீட்டை சேர்ந்தவங்க என் பொண்ணா வார்த்தையிலே குத்தி கிழிச்சி கொன்னுடுவாங்க…. என் பொண்ணு தைரியமானவ தான் ஆனா நான் கிடையாது… என் வாழ்க்கையில ஏற்கனவே நான் நிறைய கஷ்டபட்டுட்டேன் அதே கஷ்டம் என் பொண்ணு பட கூடாதுனு நான் நினைக்கிறன்……  அதனால மன்னிச்சிடுப்பா … நீ இப்போ இங்க இருந்து கிளம்பலாம்” என்று கூறி அருந்ததி தன் அண்ணனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.

 

அப்படி மித்ரன் குடுப்பத்தினால் பைரவிக்கு என்ன நடந்தது? அருந்ததி  திருமணத்திற்கு மறுத்த பின்னும் எப்படி பைரவிக்கும் மித்ரனுக்கும் திருமணம் நடந்தது? அப்போ மித்ரனும் பைரவியும் காதலித்தார்களா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்க 

 

தீராத காதல் தீயாக மோத….

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!