அமுதன் அவளை அதட்டி வண்டியில் ஏற வைத்து வண்டியை மெல்ல இயக்கும் நேரம் காமாட்சி மெதுவாக வெளியே வந்து தன் மகளின் தோலை தொட்டு, ” இந்த வாழ்க்கையை எப்படியாவது தக்க வச்சுக்கோ” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் உள்ளே வந்தவரை அங்கு குடியிருக்கும் பெண்கள் தடுத்து, “காமாட்சி அக்கா இப்பதான் அந்த பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு உங்க வீட்டுக்காரர் கிட்ட எப்படியாவது பேசி புரியவைங்க அந்த புள்ளையை சும்மா எதாவது சொல்லாதீங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதை கேட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டே உள்ளே வரும்போது சேகர் போனை காதில் வைத்தப்படியே யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே “சொல்லுடா” என்றான்.
“டேய் உன் தங்கச்சி இப்போ எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா?” என்று அவன் போலீஸ் நண்பன் கேட்கவும், ” இப்போ எதுக்குடா அவளை பத்தி கேக்குற இப்பதான் எங்க பெரியப்பா வீட்டில் இருந்து அந்த ஆளோட வெளியே போற” என்றான்.
” எந்த ஆளோட” என்றான்.
“டேய் நீ சொன்ன அந்த அமுதனோட தான்”
” சரிடா நீ அவங்களை ஃபாலோ பண்ணி போயி சரியா அவங்க எங்க இருக்காங்கன்னு சொல்லு, ” என்றான்.
“எதுக்கு டா ” என்று கேட்டான். சேகர்!
“நான் சொல்றதை கேளு டா இப்போ அந்த ஆளு ஒருத்தனை கொலை பண்ணான் அந்த ஆளோட இரண்டாவது வைப் பெரிய இடம் போல அவனை போட்டுத் தள்ள பிளான் பண்ணி கருணா சார் கிட்ட வந்து கேட்டு இருக்காங்க அவரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்போ அந்த ஆள தேடிட்டு இருக்காங்க, இதுல இன்னும் கொஞ்சம் பேரும் சம்பந்தப்பட்டிருக்காங்க அதை வெளியே சொல்ல முடியாது இப்ப மட்டும் நீ சரியா அவங்க எங்க இருக்காங்கன்னு பார்த்து சொன்ன அப்படின்னா உனக்கு ஒரு அமௌன்ட் நான் வாங்கி தரேன். ” என்று அவன் ஆர்வத்தை தூண்டினான்.
சேகருக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல் வீடும் பணமும் ஒரு சேர வர எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது வண்டியில் நான்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு, ” டேய் அவங்க இப்போ தான் போனாங்க நான் அவங்களை தான் பொல்லொவ் பண்ணி போறேன் நீ இப்போ கிளம்பி வா நான் வேலூர் சைடு போறேன் நீ சென்னை சைடு வா ரெண்டு பக்கமும் ரெண்டு பேரும் லாக் பண்ணலாம் ” என்றான்.
“சூப்பர் டா நாங்க ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் வந்துட்டோம் அவன் இப்ப எனக்கு தெரிந்து சென்னைக்கு தான் வருவான் நாங்க சென்னை பக்கமா அவன ப்ளாக் பண்ணிடுவோம் நீ பூட்டுதாக்கு கிட்ட போயிடு அவன் அங்க வந்தா அப்படியே போட்டுத் தள்ளிடு” என்றான்.
அதைக் கேட்ட சேகர் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகினான் பின்பு தெளிந்து, “என்னடா சொல்ற அப்போ ஆள மட்டும் காமிக்க சொன்ன இப்ப என்னடா ஆளை போட்டு தள்ள சொல்ற அதுவும் அந்த ஆளை அவன் பதிலுக்கு நம்மள போட்டு தள்ளிட்டு போயிடுவான்டா ” என்று பயந்தவாரே கூறினான் சேகர்.
அதில் அவனும் சற்று நிதானமாகி காரில் ஒய்யரமாக அமர்ந்து இருந்தவளைப் பார்த்து அவன் “பயப்படுறான் மேடம் ” என்றான்.
“அவன்கிட்ட நம்ம சொல்ற மாதிரி செஞ்சோம்னா ஒரு புது ஹாஸ்பிடல் சொல்லு ” என்றாள் அவள்!!
அதை தொலைபேசி வழிக் கேட்ட சேகருக்கு தலை கால் புரியவில்லை இதை தான் செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில் களத்தில் இறங்க முடிவு செய்து போனை காதில் வைக்கும் நேரம் அவன் நண்பனும் “இப்ப என்னடா சொல்ற” என்று கேட்டான்.
“டேய் நான் முடிச்சுட்டு மத்த வேலையை பார்க்கிறேன்” என்று கூறி போனை வைக்கும் நேரம் அமுதன் வண்டி முன்னே சென்று கொண்டிருந்தது.
அதைப் பார்த்தவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஆகி அவனை வேகமாக பின் தொடர்ந்தான்.
சேகரின் நண்பனும் போனை வைத்துவிட்டு கர்ணாவை பார்க்க, “மேடம் ஹாஸ்பிடல் கட்டி தர அளவுக்கு வொர்த் இல்லை மேடம்” என்று கேட்டான்.
“அந்த அமுதன் என் மனசுக்கு சந்தோஷத்தை தந்த என்னோட காதலனை கொன்னுட்டான்
அதனால் அவனை நான் கொல்லாமல் விட மாட்டேன் கொன்னுட்டு இதோ பின்னாடி வரானுங்க பாருங்க ரெண்டு மாங்காய் மடையனுங்க அவனுங்க மேல பழிய தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கணும் அதை செய்ய உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு வேண்டுமோ அதை மட்டும் கேளுங்க நான் கொடுக்கிறேன் ஆனால் ஒன்னு அவனை வெளியூர்ல வச்சு போட்டாத்தான் உண்டு சென்னையில வந்துட்டானா அவனை சீண்டவும் முடியாது அதே நேரம் வெளியூர் போய் இருக்க என் புருஷன் வந்துட்டா நான் இப்படி வீட்டை விட்டு வெளிய வரவும் முடியாது” என்றாள். அவள்!!இந்திராணி
பெரிய தொழிலதிபரின் மனைவி அமுதன் கொன்றவனின் இரண்டாவது மனைவி, தனக்கு இருக்கும் பண பலத்தை வைத்து தன் கணவர் இல்லாத போது யார் அவனை கொன்றார்கள் என்று தெரிந்து கர்ணாவின் மூலம் அதிகமாக பணத்தை கொடுத்து இப்போது அமுதனை கொல்ல திட்டமிட்டு தன்னுடன் சில ஆட்களையும் அழைத்து வந்து கொண்டிருக்கிறாள்.
பணம் அதிகமாக கிடைத்ததால் கர்ணா அவனுக்கு கீழ் வேலை செய்யும் சேகரின் நண்பன், இப்போது சேகரும் இணைந்துள்ளனர்.
இரண்டு கார்கள் அதிவேகத்தில் வந்து கொண்டிருக்க பின்னே அவர்கள் ஏற்பாடு செய்த ஆட்களின் வண்டியும் வந்து கொண்டிருந்தது.
இது எதையும் அறியாமல் அமுதன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் வலி ஏற்பட அந்த வலியின் தாக்கம் அவன் முகத்தில் சுருக்கங்களாக தெரிய அவனின் சிறு அசைவையும் தாங்க முடியாத அவள் முதல் முறையாக அவன் கையை பிடித்து, ” ரொம்ப வலிக்குதாங்க நீங்க ஏங்க அங்க வந்தீங்க என் தலையெழுத்து தான் எப்படியோ போகட்டும் நான் செத்தாவது போயிருப்பேன்ல ” என்று கூறினாள்.
“அப்படியெல்லாம் தானாவே போய் யாருகிட்டயும் மாட்டி சாகக்கூடாது பூனை கூட தனக்கு உயிர் போற நிலைமை வந்தா எதிர்த்து போராடும் நாம் மனுஷங்க,” என்றான்.
“அப்போ யாரோட உயிரையும் எடுக்கிற உரிமை நம்மகிட்ட இல்ல தானே நீங்க ஏன் கொலை பண்ணீங்க” என்றாள்.
” எனக்கு துரோகம் பண்ணினா நான் அவங்களை கொல்ல கூட தயங்க மாட்டேன் என்னை பத்தி ஆராய்ச்சி பண்ற வேலையை விட்டுட்டு உனக்கு இப்போ எங்க போகணும்னு சொல்லு நான் கொண்டு போய் விட்டுட்டு போயிட்டே இருக்கேன் ” என்றான்.
“எனக்கு எங்க போறதுன்னு தெரியலைங்க” பாவமாக சொன்னாள்.
” எங்க போறதுன்னு தெரியலைன்னா என்ன அர்த்தம் உனக்கு கல்யாணம் ஆகலையா? ” என்று கேட்டான்.
அவள் அதற்கு அமைதியாகவே இருக்க ” உன்னைத்தான் கேட்கிறேன் உனக்கு கல்யாணம் இன்னும் ஆகலையா?” என்றான்.
அவள் அமைதியாக, “எனக்கு கல்யாணம் ஆகி என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு,” என்றாள்.
“என்ன சொல்ற உனக்கும் உங்க ஹஸ்பண்டுக்கும் டிவோர்ஸ் ஏதும் ஆயிடுச்சா” என்றான்.
“இல்ல அவரு இறந்து போயிட்டாரு”
“எப்போ ” என்றான்
“15 வயசுல கல்யாணம் ஆச்சு, கொஞ்ச நாளிலே அவர் இறந்துட்டாரு அதோட அப்பா, அம்மா கூடவே வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு.. இப்ப அவங்களும் வெளியே போன்னு விரட்டி விட்டுட்டாங்க இப்ப எங்க போறதுன்னு தெரியலை,” என்று ஒரு கசந்த புன்னகை செய்தாள்.
அதைப் பார்த்தவன் சற்றென்று வண்டியை நிறுத்திவிட்டான்.
“ஏங்க என்ன ஆச்சு” என்றாள்.
“ஒன்னும் இல்லை ” என்றுக் கூறி விட்டு மீண்டும் வண்டியை ஓட்டிக்கொண்டு ‘எனக்குத்தான் யாரும் இல்லைனு நினைச்சேன் உனக்கும் யாரும் இல்லையா?’ என்று மனதில் ஒரு ஓரமாக நினைத்துக் கொண்டான்.
அதற்கு மேல் அங்கு அமைதியை நிலவ, “இப்போ உங்களுக்கு வலி எப்படிங்க இருக்கு” என்று கேட்டு அந்த அமைதியை அவளை கலைத்தாள்.
“வலியெல்லாம் ஒன்னும் இல்ல நீ சும்மா வா!” என்றான்.
“சரிங்க” என்று அமைதியானாலும் அவனிடம் மேலும் பேச வேண்டும் தோன்றியதோ என்னவோ? “ஆனால் இந்த ரெண்டு நாளா எனக்கு எந்த துன்பம் வந்தாலும் நீங்க முன்னாடி வந்து நிக்குறீங்க” என்றாள்.
“அந்த காரணம் தான் எனக்கும் தெரியல எல்லாம் என் நேரம்” என்றான்.
“அப்போ என் மேல உங்களுக்கு ” என்றாள்.
“உன் மேல எனக்கு என்ன?”என்று கேட்டு விட்டு அவள் முகத்தை உற்று பார்க்கும் நேரம் சென்னையிலிருந்து வந்த வண்டிகள் இவனின் வண்டியைப் பார்த்து பைபாஸ்சின் ஒரு வளைவில் திரும்பி படு வேகமாக வந்தனர்.
அதை இவர்கள் இருவரும் கண்டுக் கொள்ளவில்லை
” உங்களுக்கு ஒன்னும் இல்லங்க காஞ்சிபுரத்தில் ஆஸ்பத்திரிக்காவது போயிட்டு வந்து இருக்கலாம்” என்று ராகமாக இழுத்தாள்.
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல நீ சும்மா வா!” என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டான்.
“சாப்பிடக் கூட” என்று அவள் கேட்கும் நேரம் அவனைத் தாண்டி இரண்டு வண்டிகள் வேகமாக சர்ரென்று சீறி பாய்ந்தது ஒரு வண்டி பின்னே தொடரந்து வந்தது என்ன நடக்கிறது என்று யோசித்து நிதானிக்கும் முன்னே அந்த வண்டிகள் அவன் முன் வந்து நின்றுது.
அதில் தன்னை சுதாரித்தவன் வண்டியை பின்னி எடுக்கும் முன்னே இன்னொரு வண்டி பின்னே நின்றது முன் பக்கமும் இரண்டு வண்டுகளும் பின்பக்கம் ஒரு வண்டியும் நிற்க அமுதன் ஜிப்பிலிருந்து இறங்கும்போது குழலி அவன் கையை பிடித்து, “எனக்கு பயமா இருக்குங்க ” என்றாள்.
அவள் கையை மெதுவாக தட்டி விட்டு “என்ன நடந்தாலும் வண்டியை விட்டு கீழே இறங்காதே நான் பார்த்துக்கிறேன், ” என்றுக் கூறி விட்டு பின்னே கைகட்டி நின்றவனின் முன்பு கருணா முதலில் இறங்கினான்.
“அட நீதானா கர்ணா” என்று அவன் பேசும் போதே அவன் இடுப்பில் ஒரு கத்தி இறங்க மெல்ல திரும்பியவனுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது
