தூரிகை 24❤️

அமுதன் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போது, மூன்று வண்டிகள் முன்னும் பின்னும் மறித்து நிற்க பின்னே கைகட்டி நின்றவனின் முன்பு கருணா முதலில் இறங்கினான்.

“அட நீதானா கர்ணா” என்று அவன் கேட்க அவனைப் பார்த்து மர்ம புன்னகை செய்தான். கர்ணா!!

“என்ன கர்ணா நான் பேசிட்டு இருக்கேன் நீ சிரிக்கிறியே” என்று கூறும்போதே பின்னிருந்து ஒருவன் 

அவன் இடுப்பில் ஒரு கத்தியை இறக்கினான். ஒருவன் 

அதை ஜீப்பின் உள்ளிருந்து பார்த்த குழலி, “ஐயோ!”  என்றுக் கத்தினாள்.

அவளைப் பார்த்து வாயின் மேல் கை வைத்து, ” உஷ் சத்தம் வரக் கூடாது” என்றுக் கூறி விட்டு தன்னை குத்தியது  யார் என்று பார்த்து திரும்பி அந்த கத்தியை பிடுங்கிய இடத்தில் இருந்து ரத்த துளிகள் தெளிந்த முகத்துடன் அங்கு நின்றிருந்தது அமுதனின் இளைய மகன் மகனின் மேல் பாசம் இல்லை என்றாலும் இந்த துரோகத்தை ஏற்க முடியாமல் திணரும் முன்னே அவனை போலவே ஒரே முகம் கொண்ட அவனின் மூத்த மகன் அவனது இடது கையை பிடித்தான். 

அவன் ஒரு நிமிடம் திணறினான்.

அடுத்த நொடியே, தன் இடது கையை பிடித்தவன் தனது மூத்த மகன் என்பதையும் பொருட்படுத்தாமல் ஒரு குத்து விட்டான்.

அமுதன் குத்தியதில் அவன் மூத்த மகன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே அமர, பின்புறம் திரும்பி இளைய மகனை இழுத்து  கன்னத்திலே ஒரு அடியை அடித்ததில் அவனும் சுருண்டு விட்டான். 

அமுதன் மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்டு தன் ஜீப்பின் மேல் சாயந்து 

கர்ணாவை பார்த்து, “என்ன கர்ணா இது எல்லாம் அதுதான் நீ கேட்ட பணத்தை நான் கொடுத்துட்டேனே “என்றான்.

” நீங்க கொடுத்ததை விட இவங்க அதிகமா கொடுத்தாங்களே சார் என்ன பண்றது ” என்று காரின் கதவை காட்ட அதிலிருந்து நல்ல உயரத்தில் பால்வண்ண மேனியில் கடல் கன்னியைப் போல் ஒய்யாரமாக ஒருத்தி இறங்கி வந்தாள்.அவள் 

வந்தவளை  கர்ணா மகிழ்ச்சியுடனும், குழலி பயத்துடனும், பார்க்க அமுதன் எப்போதும் போல திமிராகவே பார்த்தான்.

அவன் திமிர் பார்வை அவளுக்கு மேலும் கோவத்தை ஏற்படுத்த வேகமாக  வந்து அவனின் சட்டையை பிடித்து, ” இப்ப கூட உனக்கு திமிரு அடங்கவே இல்ல இல்ல” என்றாள்.

அவள் கையை தட்டி விட்டவன் ” நீ யாருன்னே தெரியல” தன் இரண்டு மகன்களையும் காட்டி “இவனுங்க ரெண்டு பேரும் விளங்காதவனுங்க” என்றதில் அவர்கள் இருவருக்கும் கோவம் வந்து கத்தி குத்திய இடத்திலேயே மீண்டும் ஒரு குத்தை விட அதில் கொஞ்சம் திணறிப் போய் விட்டான் அமுதன்!! 

அவன் திணறியதைப் பார்த்த குழலி “ஏங்க” என்று கத்திக் கொண்டே அவன் அருகில் வந்து மெல்ல தடவிக் கொடுத்தாள்.

அந்த நேரத்திலும் அவள் முகத்தில் கண்ட உண்மையான அன்பை கண்டு அமுதனுக்கு இந்த உலகத்தில் தனக்காக யோசிக்கும் ஒரு உயிர் உண்டு இனி அதற்காகவே வாழ வேண்டும் என்று தோன்ற அவளிடம் தன் வலிகளை மறைத்துக் கொண்டு அவளிடம், “ஏய் ஒன்னும் இல்லடி என்னை யாராலும் எதுவும் பண்ண முடியாது உன்கிட்ட நான் என்ன சொன்னேன் என்ன நடந்தாலும் ஜீப்பை விட்டு இறங்க வேண்டாம் சொன்ன தானே என் பேச்சை கேட்க கூடாதுன்னு இருக்கியா டி ” என்றுக் கூறி கண் அடித்தான்.

அவளுக்கு மரண தருவாயிலும் இப்படி கேட்பது ஒரு மாதிரி வெட்கமாகி போகும் நேரம் பின்னிருந்து கர்ணா அவள் தலை முடியைப் பிடித்து இழுத்து, “இவ பெரிய ஆளுன்னு இவளை சும்மா ஒரு பார்வை பார்த்ததுக்கே நடு ரோட்டில் அப்படி பேசின இல்லை இன்னைக்கு இவளை என்ன பண்றேன்னு பாரு” என்று கூறி அவள் அருகில் வந்து இதழோடு இதழ் பதிக்க வந்தவனின் வாய் மேலே ஒரு குத்து விட்டான். அமுதன்!!

“இவளை சும்மா தலை முடிய பிடிச்சதுக்கே உனக்கு இவ்வளவு கோவம் வருதே எனக்கு மன ஆறுதலை தந்த என்னோட காதலனை மனசாட்சியே இல்லாம கொன்னீயே அப்போ எனக்கு எவ்வளவு வலி இருக்கும் இன்னைக்கு நீங்க இங்க இருந்து உயிரோட போகவே முடியாது” என்று அவன் சட்டையைப் பிடித்து அடிக்கும் வேளையில் குழலி அவளைத் தடுத்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அடியை விட்டாள்.

அந்த அடியில் அவள் தூரம் போய் விழுந்தாள் அதைப் பார்த்த கர்ணா குழலின் கன்னத்தில் சரமாரியாக அடிக்க அமுதன் எட்டி உதைத்தான். 

தந்தையிடம் அடி வாங்கிய இரு மகன்களும் அவனை பெண்ணுரிந்து பிடித்துக் கொண்டு, “ஏன்யா ஒரு நாளும் எங்க அம்மா மேல இப்படி பாசமா இருந்து இருப்பீயா என்னவோ ஊரு பேரு தெரியாத ஒருத்திக்காக அப்படியே பாயிற,” என்றனர். அவர்களிடம் திமிறி கொண்டு இருந்தவனை கையில் கிடைத்த ஒரு கட்டையை எடுத்து அவன் மூத்த மகன் தலை மேலே அடித்ததில் 

அமுதன் மயங்கி கீழே விழப் போக அவனை தாங்கிப் பிடித்த குழலியை தடுக்க வந்த கர்ணாவை தன் பலம் கொண்டு தள்ளி விட்ட்டாள்.

“என்னையவே தள்ளி விடுறீயா?” என்று அவளை காரின் முன் பகுதியில் தள்ள அவளுக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கசிந்தது.

அதைப் பொருட்படுத்தாமல் கர்ணாவை பார்க்க மெல்ல அவள் அருகில் அமர்ந்து அவள் தலை முடியை மெல்ல வருடி விட்டு, ” இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல நான் உனக்கு ஒரு வேலை சொல்ற அத செய் உன்னையும் உன்னையும் விட்டுவிடுகிறேன் என்றான்.

தன்னை விடுகிறேன் என்பது கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை இப்போது அமுதன் தனக்காக வந்து இப்படி யார் எது குற்ற உணர்வு ஆகிப்போக நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் என்று தலையில் கை வைத்துக் கொண்டு சொன்னாள்.

” அன்னைக்கு நான் அவங்க ரெண்டு பேரும் பார்த்தப்ப இவன் ஒருத்தனை கொலை பண்ணான்ல அதை நீ பார்த்தேன்னு இப்ப எனக்கு சாட்சி சொல்லணும் அப்படி நீ சொல்லிட்டாய் இவனை தூக்கி ஜெயில்ல போட்டு உன்னை நான் விட்டுவிடுகிறேன்” என்றான்.

சரி என்று அவள் தலையை ஆட்ட அவன் போனில் அதை படம் பிடித்துக் கொண்டான். 

அதன் பிறகு அவளை நெருங்க முயற்சித்தான். “இங்க பாரு எப்போ வேணும்னாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனக்கு இவன் உயிர் தான் வேண்டும் இந்த சாட்சி எல்லாம் வேண்டாம் அதை முதலில் தூக்கி போடு என்றாள். அவள் அதனால் அதை டெலிட் செய்து விட்டான்.

அதற்குள் “எங்களுக்கு இவன் சொத்து தான் வேணும்” என்றனர் அவன் பிள்ளைகள்!!

“அப்போ என்ன பண்ணலாம்” என்றனர் நேர்மையான காவல் துறையினர். 

“நான் ஒரு ஐடியா சொல்றேன் அது படியே செய்யலாம்” என்றாள் அவள்.

“அதை இங்க இருந்தே பேச வேண்டாம் நம்ம காரில் போய் பேசலாம்” என்று அந்த புறம் செல்லவும் அமுதன் மெல்ல கண் திறக்க அவன் கை பிடித்து, ” அவங்க நம்மளை என்னவோ செய்ய போறாங்க அதிலிருந்து நம்ம எப்படிங்க தப்பிக்கிறது, ” என்றாள்.

“அப்படி சாதாரணமா தப்பிச்சுட்டோம்னா நாம ஓடிக்கிட்டே தான் இருக்கணும் இவங்களை ஏதாவது செஞ்சிட்டு தான் போகணும்” என்று திக்கி திணறிக் கூறினான்.

அதற்குள் அவன் மகன் வந்து அமுதனை தூக்க அவனை அமுதன் தன் பலம் கொண்டு எட்டி விட்டதில் எங்கு சென்று விழுந்தானோ அது அவனுக்கே தெரியாது.

இவ்வளவு அடிப்பட்டு உன் திமிரு இன்னும் குறையவே இல்லை என்று கருணா வந்து அவன் காலை எட்டி உதைக்க வந்தவனை அவன் காலிலே அவன் காலை கெடுக்குப் பிடி போட்டு கீழே தள்ளி விட்டு தட்டு தடுமாறி எழுந்து நின்றான்.

அவன் தட்டு தடுமாறி எழுந்து நின்றாலும் பார்ப்போருக்கு ஏதோ அவனின் கம்பீரமான தோற்றமே பார்ப்பவர்களுக்கு பயத்தை தந்தது இருந்தாலும் அதை எலி காட்டிக்கொள்ளாமல் சட்டையை கழட்டி தன் இடுப்பில் இறுக்கி கட்டிக்கொண்டு அவனை அடிக்க வந்தவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து விட்டான். 

அவன் மகன்களும் வர அவர்களை ஒரு நிமிடம் அடிக்க தயங்கியவன் அவர்களின் பார்வை குழலியின் புறம் திரும்ப அவர்களையும் மனமே அடித்து விட்டான்.

அவர்கள் குத்தியதுக் கூட வலிக்கவில்லை இவர்கள் பேச்சைக் கேட்டு தனக்கே துரோகம் செய்வது தான் அவனுக்கு வலிக்க செய்கிறது. ஒருவேளை தான் தான் இவர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளவில்லையோ என்றுத் தன்னை தானே நொந்துக் கொண்டான்.

ஆனால், எல்லாம் ஒரு நொடி தான் அடுத்த நொடியே குழலியைக் காத்து ஆக வேண்டும் என்று அவளை வண்டியில் ஏற சொன்னான்.

அவளோ மாட்டேன் என்று சொல்ல அதற்கும் திட்டு வாங்கிக் கொண்டே வண்டியில் ஏறினாள்.

அண்ணன் தன்னை அடிக்க வந்தவர்கள் எல்லோரையும் அடித்து விட்டு அவர்களை அடிக்க ஏவியவள் வந்து அவன் முன் நின்று கட்டையை தூக்கும் போது வேகமாக குடல் இறங்கி வந்து அவள் அதை தடுத்து அவளை அடுத்த அவள் எடுத்த கட்டையை அவள் தலையிலே அடித்து விட அவள் அங்கே மயங்கி சரிந்து விட்டாள்.

திரும்பி அமுதனை பார்க்க அவன் கையிலும் முதுகிலும் பட்ட காயத்தால் அதனால் நிற்க கூட முடியவில்லை… 

அவனுக்கு முடியாமல் நின்றபோது அவளை தாங்கிய குழலி, ” வாங்க ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்றாள்.

இந்த பக்கம் இப்படியே சென்னை போனோம்னா  திரும்பவும் இவங்க வந்து நான் இல்லாத அப்போ உன்னை ஏதாவது செய்வாங்க அதனால நான் வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என நம்பி வருவியா என்று கையை நீட்டி கேட்டான்.

வரேன், ஆனா இவங்க ரெண்டு பேரும் உங்க பசங்களா என்று கேட்டாள்.

அவன் அதற்கு வேறு தலை ரெசிபி மட்டும் பதிலை தந்து விட்டு வண்டில ஏறு என்றான்.

அவள் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள்.

வண்டி வேலூரை நோக்கி பயணித்தது, அவர்கள் இந்த புறம் செல்லவும் கர்ணா அங்கு காத்திருக்கும் சேகருக்கு அழைப்பு விடுத்தனர்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page