தூரிகை 26❤️

அமுதனின் காரசேகர் பின் தொடர்ந்து வர அந்த கூட்டத்தில் இருந்து ஒருத்தன், “அண்ணா நாம இந்த பக்கம் பைபாஸ் போய் ஆப்போசிட்ல வந்தோம்னா அவனோட வண்டிய மடக்கிடலாம்” என்றான் ஒருவன்.

சேகரிக்கும் அது சரி என பட தனக்கு இடது பக்கம் இருக்கும் வளைவில் காரை விட்டான்.

அவர்கள இடது பக்கம் வருவது அமுதனின் கண்ணாடியில் தெரிய தனக்கு வலப்பக்கத்தையே சரியாக பார்த்துக் கொண்டு வந்தான்.

அப்போதும் அவனுக்கு வலி எடுக்க அதை கண்டுகொள்ளாமல் வண்டியின் வேகத்தை அதிகரித்து வந்தவனின் காயங்களில் இருந்து ரத்தம் கசிந்தது.

அதைப் பார்த்தக் குழலிக்கு மனம் பதறி, ” ஏங்க ரத்தம் வருதுங்க அத பார்க்காம இருக்கீங்க கொஞ்சம் வண்டிய ஓரமா நிறுத்துங்க” என்றாள்.

“ஏய் அவனுங்க துரத்திகிட்டு வரானுங்கடி இப்ப என்னால அவங்க கூட நின்னு சண்டை எல்லாம் போட முடியாது நம்ம இப்ப தப்பிக்கிறது தான் ஒரே வழி கொஞ்ச நேரம் சும்மா ” என்றான்.

“அது எப்படி சும்மா இருப்பது? ரத்தம் நிற்கவே இல்ல இப்படியே போனால் ரொம்ப கஷ்டமா ஆகிடும்,” என்றாள்.

அவன் கடுப்புடன், “ஏய்! அவங்க என்னை கொல்ல வரலடி உன்னை தான் கொல்ல வர்றாங்க பாரு எத்தனை பேர் இருக்காங்க  இப்போ எனக்கு   உன்னை காப்பாத்துறதுதான்,” முக்கியம் என்றான்.

அவள் உடனே, “எனக்காக நீங்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்ல நீங்க வண்டியை நிறுத்துங்க நான் இறங்கிடுறேன். நான் செத்தாலும் பரவாயில்லை… உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது,” என்றாள்.

அவன் கோபமாக, “அப்போ உன்னை காப்பாத்த முடியாம போன என்னை கொன்னுட்டு நீ இறங்கி போ!” என்றான்.

“நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க” என்று அவள் சொல்லும் போது அவன் வலியில் “அம்மா…” என்று கூச்சலிட்டான்.

அவனைப் பார்த்தவளுக்கு கண்களில் கண்ணீர் வந்து 

“ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க,” என்றாள்.

அவன் வலியில் துடித்துக்கொண்டே, ஒரு கையால் காயத்தை பிடித்து மற்ற கையால் ஸ்டியரிங் பிடித்து

“என்ன கேட்கணும்?” என்று தடுமாறிக் கேட்டான்.

“அங்க பாருங்க ஒரு ஹாஸ்பிட்டல் வருது அங்க போகலாம்,” என்றாள்.

“இப்போ வேண்டாம் அவங்க பின்தொடர்ந்து வரும்போது நம்ம ஹாஸ்பிட்டல் போனா, அது அவங்களுக்கு இன்னும் வசதியா ஆகிடும் நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா உன்னை பாதிக்கலாம் நீ என்னை பற்றி நினைச்சா தயவு செய்து இப்படி பயப்படாமல் என் மேல நம்பிக்கை வச்சி அமைதியா இரு,” என்றான்.

அவள் அதற்கு பிறகு எதுவும் பேசவில்லை.

ஆனால், அவன் ஒவ்வொரு நொடியும் வலியில் துடிப்பதைப் பார்த்தவளின் இதயம் கலங்கியது.

‘எனக்காக ஏன் இவர் இப்படி பண்ணுறார்? நான் இவருக்கு என்ன பண்ணேன்? இன்னும் சொல்லப்போனால் இந்த ரெண்டு நாளா இவர் தான் எனக்கு ஆபத்தான நேரத்தில் ரொம்ப பெரிய உதவி செஞ்சி இருக்காரு இதுக்கு நான் என்ன பண்ண போறேன் ‘ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம், அவன் மீண்டும் “அம்மா ” என்று அலற அவள் அவன் கையை பிடித்து,”ஒன்னும் இல்லங்க எல்லாம் சரியா போயிடும் இனி எதுவாக இருந்தாலும் சேர்ந்தே பார்க்கலாம் நீங்க பார்த்து வண்டியை ஓட்டுங்க நான் அவங்க வராங்களான்னு பார்க்கிறேன்” என்றாள்.

நொடியினில் அவளின் இந்த மாற்றம் அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. 

அதனால் அவனும் தன் வலியை மறைத்துக் கொண்டு “சரி பாரு ” என்றான். 

ஆனால் அவள் கையை மட்டும் அவன் விடவில்லை அவளும் அவர்கள் எங்கே வருகிறார்கள் என்று பார்த்து சொன்னாள்.

அந்த நேரம் ஒருவன் கத்தியை எடுத்து வீசினான். அந்த கத்தி வீச்சை, தன் காரை லாவகமாக ஓட்டி தடுத்தான். 

அதைக் கண்ட குழலிக்கு ‘இந்த நிலையிலும் எப்படி இவர் இவ்வளவு கவனமாக இருக்கிறார்’ என்று தன் கண்களை விரித்து வியந்து பார்த்தாள்.

அவள் கண்களில் ஏற்கனவே தன்னை தொலைத்தவன்  இப்போது தாமரைப்பூ போல விரிந்திருக்கும்  கண்களை பார்த்தவனுக்கு அதில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளவே ஒரு நிமிடம் ஆகி பின் தெளிந்து, ” இப்ப எதுக்குடி என்ன முழுங்குற மாதிரி பாக்குற அந்த முட்ட கண்ணை கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பிக்கோ ” என்றான்.

“ஏதே நான் உங்களை முழுங்கற மாதிரி பாக்குறேனா உங்கள பார்த்தாலே எனக்கு பயம்தான் வருது இதில் நான் எங்கிருந்து உங்களை முழுங்குறது” என்றுக் கூறி தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

அதையும் ரசித்தான் அவன் என்ன வலியில் எதுவும் தெரியவில்லை, ‘நான் என்ன  இவர்கிட்ட இப்படி எல்லாம் பேசுறேன்’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டு, அந்தப் புறம் திரும்பிக் கொண்டாலே தவிர அவன் கையை விடவில்லை, 

அதை அங்கு பார்த்துக் கொண்டிருந்த சேகருக்கு மேலும் கோவத்தை ஏற்படுத்த தன்னிடம் உள்ள தூப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி குறி வைக்க அவன் உடனிருந்த ஒருவன் “அண்ணா என்ன அண்ணா துப்பாக்கி எல்லாம் வச்சி இருக்க இது எல்லாம் வேண்டாம் அண்ணா, ” என்று தடுத்தான்.

“டேய் சும்மா இருடா எல்லாம் எனக்கு தெரியும் ” என்று சேகர் சொன்னான்.

“உனக்கே எல்லாம் தெரியுமானா எங்களை ஏன்னா கூட்டிட்டு வந்த துப்பாக்கி தூக்குவதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் நீ பேசாம வண்டியை  ஓரமா நிறுத்த சொல்லு நான் இறங்கிக்கிறேன்” என்றான்.

“நீ இல்லைனா என்னால எதுவும் முடியாதுன்னு சொல்ல வரியா, இதோ இப்போ அந்த வளைவு வரும் அதுல ஒரு இரண்டு நிமிஷம் நிறுத்த சொல்றேன் இறங்கி ஓடி தொலை” என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வளைவு வர, அந்த வளைவில் இவர்கள் முந்துவதற்கு முன் அமுதன் இவர்களை முந்திக்கொண்டு தனக்கு வலது பக்கம் இருக்கும் வெள்ளை கேட் ஊரின் பாதையில் நுழைந்தான்.

கண்ணிமைக்கும் நொடியில் எதிர்பாராமல் நடந்த இந்த திருப்பத்தில் அவர்களுக்கு எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு அப்படியே நின்று விட்டனர்.

இவனும் கண்ணாடி வழியில் அவர்கள் வருகிறார்களா இல்லையா என்று பார்த்துக் கொண்டே செல்ல அவர்கள் வரவில்லை என்று தெரிந்ததும் முன்பை விட வேகமாக தனது வண்டியை செலுத்தினான்.

ஆனால் என்ன அதில் ஒரு பயனும் இல்லாமல் அவன் ஒரு இடத்தில் தன்னால் முடியாமல் அவள் மீது அப்படியே மயங்கி சரிந்தான்.

அவன் மயங்கி சரிந்ததும் இவளுக்கு வழியும் தெரியாமல், அவனை எப்படி காப்பாற்றுவது என்றும் தெரியாமல் முழித்த குழலி அவன் கன்னங்களில் தட்டி, ” ஏங்க எழுந்திரிங்க நீங்களே இப்படி மயங்கி விழுந்தால் நான் என்ன பண்ணுவேன்” என்று அவன் கன்னங்களை கையில் ஏந்தி அவன் முகத்தோடு முகம் வைத்து அழுதாள். 

ஆனால், அவன் தான் எழுந்தப் பாடில்லை.…

சேகர் அவன் எங்கு சென்றிருப்பான் என்று யோசித்துக் கொண்டு தன் வண்டியை திருப்பும் நேரம் கர்ணா அவனுக்கு அழைத்து, ” சேகர் எங்க இருக்க அவனை புடிச்சுட்டியா “என்று கேட்டான்.

“எங்க கருணா நான் புடிக்கிற நேரத்துல அவன் என்னை தாண்டி எந்த பக்கம் போனானே தெரியல இவங்களோட சண்டை  போடவே எனக்கு நேரம் சரியா இருக்கு எப்படியும் பிடித்து விடுவேன் நீ எங்க இருக்க” என்று கேட்டான்.

இதை கேட்ட அந்த பெண்மணி கர்ணாவிடமிருந்து போனை வாங்கி, “ஏய் இங்க பாரு மிஸ்டர் உனக்கு என்ன வேண்டுமோ? அதை கேளு நான் செய்றேன் ஆனால், எனக்கு அவன் வேண்டும் ” என்றாள்.

“மேடம் நான் அதை முடிச்சு தரேன்” என்று சொன்ன அடுத்த நொடியே அவள் கர்ணாவிடம் போனை கொடுக்க 

 

“கர்ணா இப்போ எங்க” என்றான் சேகர்!

“நான் இப்போதான் வாலாஜா தாண்டி வந்துட்டு இருக்கேன்” என்று அவன் சொன்ன அடுத்த நொடியே அவன் காரை பின்னிருந்து ஒரு லாரி இடிக்கும் சத்தம் இங்கு சேகரின் காது வரை வந்து கிழித்தது.

அந்த லாரி மோதி கர்ணா தன் காரை சுதாரிக்கும் முன் கர்ணா காருக்கு முன் சென்ற காரின் மேல் வேகமாக மோத அந்த இரண்டு காரும் ஒரு மின் கம்பத்தில் மேல் மோதி நின்றது.

அதில் இருந்தவர் அவர்களின் ஆட்கள் அந்த இடத்திலேயே இறந்து விட்டனர்.

வண்டி ஓட்டி வந்த கர்ணாவால் தன் காலை எடுக்கவே முடியவில்லை, தன் அருகில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் தோலை தொட அவள் அந்த இடத்திலேயே உயிரை விட்டிருந்தாள். பின்னே அமர்ந்திருந்த சேகரின் நண்பன் முன்னே இருந்த சீட்டில் மோதி மயக்கம் அடைந்திருந்தான் 

கர்ணா வலியில் துடித்ததில் தெளிந்தவன் தன் போனை எடுத்து சேகருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் அழைத்து வரவழைத்தான்.

இப்போது இதுதான் முக்கியம் என்பதால் சேகரும் அவர்களை தேடுவதை விடுத்து, கர்ணாவை காப்பாற்ற வேண்டி வாலாஜா பக்கம் தன் வண்டியை செலுத்தினான்.

அவன் அந்த இடத்திற்கு வரவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் இங்கு இருப்பவர்களை காப்பாற்ற வேண்டிய அடுத்தடுத்த வேலைகளாக காவல்துறைக்கும், தெரிவிக்க அவர்களும் வந்து வண்டியை இடித்தவனை தேட அவன் எப்போதோ அந்த இடத்தை காலி செய்திருந்தான்.

அவனைத் தேடி நேரத்தை வீணாக்காமல் இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியை  பார்த்தனர் இதில் கொடுமை என்னவென்றால் வண்டியில் வந்திருந்தவர்களில் கர்ணாவும், சேகரின் நண்பர்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். 

கர்ணாவும் காவல்துறை அதிகாரி என்பதால் மேற்கொண்டு எதையும் விசாரிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குழலி இன்னும் அமுதனை எழுப்ப முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.

அந்த நேரத்தில் தனது டிவிஎஸ் ஃபிட்டியில் அமுதனுக்கு சமமான வயதுடைய ஒருவன் அங்கே வந்தான்.

அவனை பார்த்தவுடன் குழலி உதவி கேட்டாள். வேறு வழியில்லாமல் அவனும் உதவ முன்வந்தான்.

அவர்கள் சேர்ந்து அமுதனை தூக்கி, பின் சீட்டில் படுக்க வைத்தனர்.

அப்போது அவன் அமுதனை நன்றாக பார்த்தவுடன்  அவன் முகத்தில் திடீரென கோபம் பெருகியது.

ஆனால் எதுவும் பேசாமல்  வண்டியை ஸ்டார்ட் செய்து, வேகமாக தனது வழியில் சென்றான்.

குழலி எவ்வளவு கேட்டாலும், அவன் ஒரு வார்த்தையும் பேசாமல், வேகத்தை மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றான்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page