“வாசம் வீசும் உன் வருகை இது வரை நான் கண்டிராத பூக்களின் வாசம் நீ “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -31
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு ஆரண்யா, வர்மாவை விட்டு எங்கும் செல்லவில்லை. அலுவலக வேலையை கூட போனிலே சொல்லி அங்கு நடப்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாரு வேலைகளை சொன்னால். கையெழுத்து வாங்கிக் கொள்ள மட்டும் மேனேஜர் வருவார். விஜய் கூட இருப்பதால் அவனே பார்த்துக் கொள்வான்.
வர்மாவிற்கு கட்டு பிரித்து விட்டார்கள். உள் ரணம் மட்டும் இன்னும் ஆறவில்லை. தினமும் கைக்கு பயிற்சி செய்ய மருத்துவர் அறிவுறுத்தி இருந்ததால், ஆரண்யா தான் கூடவே இருந்து காலையும், மாலையும் செய்ய வைப்பாள்.
விரல்களை மடக்கி நீட்டும் போது வலி எடுக்கும் ஆனால் அவன் வலியை அவள் பார்த்து பதறும் போது அந்த வலியை அவன் கண்ணில் காட்டுவதில்லை. அவனுக்கு சிறிதாக வலி எடுத்தாலும் உடனே டாக்டருக்கு அழைத்து கேட்டு விடுவாள். வர்மாவின் குடும்ப மருத்துவர் என்பதால் தினமும் இவளிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு அவரும் சலிக்காமல் பதில் சொல்லுவார்.
வர்மா தான் சிரித்துக் கொண்டிருப்பான். பேசி முடித்ததும் வர்மாவை முறைப்பாள். அவளின் முறைப்பையும் அவள் முகத்தில் காணும் சிறு கோவத்தில் அவள் நுனி மூக்கு சிவந்து போகும், அது வர்மாவிற்கு மிகவும் பிடிக்கும். அவன் முகம் ரசனைக்கு மாறிடும் போது, இவள் அவனை ரசிப்பாள்.
சிறிது நேரம் மட்டுமே அந்த பார்வை இருக்கும். வர்மா தான் முதலில் விலகுவான். இவளுக்கு ஏமாற்றமாகி விடும். இவளாக அவனிடம் நெருங்கி பேசலாம், தன் மனதில் அவனைப் பற்றி இருக்கும் உணர்வுகளை சொல்லலாம். ஆனால் பெண் மனம் தயக்கம் கொள்கிறது.
அவனுக்கும் அது புரியாமல் இல்லை. ஆனால் அவன் இதற்க்கு முன் நடந்து கொண்டது, இனியும் அது தொடரக்கூடாது, அவளுக்கு எந்த தயக்கமும் இன்றி தன்னிடம் நெருங்கி வர வேண்டும் அதற்க்கு தான் மீனை எதிர்பார்க்கும் கொக்கினைப் போல் காத்திருக்கிறான் அவளை கொத்தித் தின்ன,
கதவினைத் தட்டும் சத்தத்தில் இருவரும் விலகினர். விஜய் உள்ளே வந்தான். அவன் முகத்தில் மகிழ்வு
“உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ” சிரிப்புடன் கேட்டுக் கொண்டே அருகில் வர
“அதான் பண்ணிட்டியே அப்புறம் கேள்வி வேற “வர்மா சொல்ல, ஆரண்யா கிள்ளி வைத்தாள்.
“ஹேய் வலிக்குது டி ” அவள் கிள்ளியது வலிக்கவில்லை தான் ஆனால் அப்படி சொல்லி அவள் முகத்தில் தோன்றும் மாற்றத்தை ரசிப்பான்.
“ஹம்ம்கூம் “தொண்டையை சரி செய்தவன் தான் இருப்பதை தெரிவிக்க,
“என்ன டா இன்னைக்கு உன் முகம் தௌசண்ட் லைட் பல்பு மாதிரி ஜொலிக்குது, என்ன விஷயம் “
வர்மா கேட்டதும், நகத்தினை கடித்து வெட்கப்பட்ட விஜய்யை பார்த்து,
“டேய் என்ன டா மச்சான் பண்ற, வெட்கமா புதுசா இருக்கு, அப்படி என்ன டா பண்ணிட்ட “
வர்மாவிற்கு புரியவில்லை, ஆனால் ஆரண்யா புரிந்து கொண்டாள். “அண்ணா, நிலா வந்திருக்காளா, வாழ்த்துக்கள் ணா ” கையை நீட்டி சொல்ல,
“தேங்க்ஸ் மா, வந்திருக்கா, கீழ தான் இருக்கா, உங்களை கூப்பிட தான் வந்தேன் “
“டேய் ரெண்டு பேரும் என்ன பேசுறீங்க, எனக்கு எதுவும் புரியல, கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றீங்களா ”
“தங்கச்சி மச்சானுக்கு புரியிற மாதிரி சொல்லி கீழ கூட்டிட்டு வா போறேன் ” வர்மா கூப்பிட்டதற்கு கூட நிற்காமல் விஜய் சென்று விட,
ஆரண்யாவிடம் வந்தவன் “அவன் என்ன டி சொல்றான். ஒன்னுமே புரியல “
வர்மா சொன்னதில் அவனை சீண்டிப் பார்க்கும் எண்ணம் எழ, அவனை நோக்கி நெருங்கி சென்று கொண்டே “நிஜமா என்னன்னு புரியல ” அவள் நெருங்க, இவன் பின்னோக்கி நகர, சுவற்றில் சாய்ந்து,
“என்ன டி ஒரு மார்க்கமா நடந்துக்குற “
அவனின் இரு பக்கமும் கையை வைத்து அவனை நெருங்கி அவனிடம் செல்ல, அவளின் நெருக்கமும், மூச்சுக் காற்றும் ஆணவனை திணறச் செய்தது. அவன் முகத்தின் அருகே சென்றவள், காதருகே நெருக்கமாய் சென்று “நீங்க மாமா ஆகிட்டீங்க, நான் அத்தை ஆகிட்டேன். விஜய் அண்ணா அப்பா ஆகிட்டாரு அதுக்கு தான் அந்த வெட்கம் புரியுதா மாமா ”
அவள் ஹஸ்கி வாய்ஸில் பேச, விண்ணுலகம் சென்று மீண்டும் பூமிக்கு வந்தது போல் கிறங்கிப் போனவன். அவள் பேசும் போது பட்டும் படாமலும் அவள் இதழ் உரசலில் சிவந்த அவன் செவியினை நகர்த்தி அவன் முகத்தை நகர்த்தி “நிஜமாவா ” அவள் செவியினில் அவள் சொன்னது போல் ஹஸ்கி வாய்ஸில் சொல்ல,
அவன் செய்கையில் சிலிர்த்த அவள் தேகம் தள்ளாடியது, அவளைத் தாங்கிக் கொண்டவன் “கீழ போறது நல்லதுன்னு நினைக்கிறேன் “
அவளும் தலை அசைக்க, அவளின் கையினைப் பிடித்து நிமிரச் செய்தவன் கையினை விடாமல் பிடித்துக் கொண்டே கீழே சென்றான்.
ராஜவர்மன், மகிழ்வதனி, விஜய் மூவரும் நின்றிருக்க, நிலா ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்திருந்தாள். இனிப்பினை மாற்றி மாற்றி ஊட்டி விட, வர்மா வந்ததும்
“அண்ணா இவங்க கிட்ட இருந்து காப்பாத்து, ஸ்வீட் சாப்பிட முடியல ” அவளின் அருகே சென்றவன் அவளை அணைத்துக் கொள்ள அவளும் அணைத்துக் கொண்டாள். அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன்
“எனக்கு ரொம்ப சந்தோஷம் டா, நீயே குழந்தை தான் எங்களுக்கு, உனக்கு குட்டி பாப்பா வர போகுது, இனிமே தான் ரொம்ப கவனமா இருக்கணும் சரியா, பெரியவங்க சொல்றதை கேட்டு நடந்துக்கணும், வால் தனம் பண்ணக்கூடாது. நல்லா சாப்பிடணும்”
“ம்ம் சரி ணா, நீ சொன்ன மாதிரியே நடந்துக்குறேன் “
ஆரண்யாவும் அருகில் வந்து அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் சொல்ல அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தான். மதிவதினிக்கு மட்டும் இன்னும் இருவரும் வாழ்வினை தொடங்க வில்லையே, மகளுக்கு முன் மகனுக்கு திருமணம் நடந்து விட்டது, மகன் வழி நல்ல செய்தி வரவில்லையே என்ற ஏக்கம் அவரிடம் இருக்கத்தான் செய்கிறது.
மனைவியின் மன நிலை உணர்ந்த ராஜவர்மன், அவரின் கையினைப் பிடித்து அழுத்தம் கொடுத்து, கண்ணில் அமைதியாய் இருக்குமாறு சொல்ல, தலை அசைத்தார். இருவரின் செயல்களைப் பார்த்த சிறியவர்களுக்கும் இது புரிந்தாலும், அமைதியாய் இருந்தனர்.
விஜய்க்கு கைபேசி அழைப்பு வர அதில் சொல்லப்பட்ட செய்தியில், துள்ளிக் குதித்தவன், அழைப்பை துண்டித்து விட்டு,
“மச்சான் நீ ஆசைப்பட்டது நடந்திடுச்சு, எனக்கு இப்போ தான் நிஜமாவே சந்தோஷமா இருக்கு “
சிரித்த வர்மா ஆரண்யாவிடம் “நாம ஜெயிச்சுட்டோம் டி” ஸ்வீட் எடுத்து வர்மாவே அனைவருக்கும் கொடுத்தவன்,
“இன்டர்நேஷனல் லெவல் காம்பெடிஷன்ல நம்ம கம்பெனி செலக்ட் ஆகி இருக்கு பா, கவர்மென்ட் பண்ற புது ப்ராஜெக்ட் அது நமக்கு தான் கிடைச்சிருக்கு, அடுத்த வாரம் ஜெய்ப்பூர்ல தான் கான்பிரன்ஸ் அதுல இந்தியால எல்லா ஸ்டேட்லையும் செலக்ட் ஆனவங்க கலந்துவாங்க, இதுல பெருமையான விஷயம் எதுனா, தமிழ்நாட்டுல இது வரைக்கும் யாரும் செலக்ட் ஆனது இல்லை. இதான் பர்ஸ்ட் டைம், விஜய், ஆரு இல்லாம இந்த வெற்றி இல்லை”
“நீ ஜெயிச்சிட்டா பா, உங்களோட திறமைக்கு இப்போ தான் முழுமையான அங்கீகாரம் கிடைச்சிருக்கு, அடுத்த வாரம் எல்லாரும் கிளம்புங்க, அப்டியே ஆரு வீட்டுக்கும் போய்ட்டு வாங்க, உன் அத்தை தினமும் கூப்டுட்டே இருக்கா “
“இல்லை மாமா இதுல வர்மாவும், தங்கச்சியும் தான் கலந்துக்கணும் ரெண்டு பேரோட ஐடியா தான் இந்த வெற்றிக்கு காரணம். இங்க நான் ஆபீஸ் பார்த்துக்குறேன்”
விஜய் மனதில் வர்மா ஆறு மாதத்திற்கு முன் சொன்னது நினைவுக்கு வந்தது.
“இன்னமும் ஏன் டா தங்கச்சியை தள்ளி வைக்குற, பாவம் டா இது “
“அவளை நான் தள்ளி வைச்சிருக்கேனா”, அவன் சட்டையினை திறந்து காட்ட, ஆரண்யா அவளின் உருவம் அவன் நெஞ்சில், “அவள் என் உயிர் டா, அவ காதலை எனக்கு நிறையவே கொடுத்துட்டா, உணர வச்சிட்டா, இனிமே இது என்னோட நேரம் டா, சராசரி மனைவியா அவளை கல்யாணம் முடிச்சிட்டு வீட்ல வச்சு குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்குறது மட்டும்னு நினைச்சிட்டியா,
ஜோத்பூர் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது பிசினஸ்ல அவளுக்கு எவ்ளோ டேலண்ட் இருக்குன்னு, இங்க அவ எனக்காக அவ குணத்தை மாத்தி கிட்டா, அது அவ என் மேல வச்சிருந்த காதல், அவளைப் பத்தி புல்லா தெரிஞ்சிக்கிட்டு, புரிஞ்சிக்கிட்ட பிறகும் நான் எப்படி டா சராசரி மனுஷனா நடந்துக்குறது
அவ ஆசைப்பட்டது இன்டர்நேஷனல் லெவல் கன்ஸ்டரக்ஷன் காம்பெடிஷன்ல வின் பண்ணனும். அதை நான் அவ கூட இருந்து செய்யணும் அதுக்கு அப்புறம் தான் எங்களோட வாழ்க்கை சந்தோஷமா ஆம்பிக்கும் “
சொன்னதை வர்மா நடத்திக் காட்டி விட்டான். இருவரும் ஜெய்ப்பூர் சென்றதும் கானபிரன்ஸ் முடித்ததும் அவளுக்காக வர்மா மனதில் நிறைய யோசித்து வைத்திருக்குறான் அதை விஜயிடம் கூட சொல்லவில்லை.
ஆரண்யாவிற்கு இந்த மகிழ்வான செய்தியில் வர்மாவின் காதல் தான் தெரிந்தது. தன் மனதில் இருக்கும் ஆசையை எப்படி இவர் கண்டு கொண்டார், தெரிந்து கொண்டு அதை என்னுடன் இருந்து சாதித்தும் காட்டி விட்டாரே, இனியும் அவரை தவிக்க விடக் கூடாது.
அவரே தடுத்தாலும் நான் இனியும் நேரத்தை வீணாக்கிட மாட்டேன் மனதில் நினைத்துக்கொண்டே வர்மாவைப் பார்க்க, அவளுக்கு இனிப்பினை ஊட்டியவனுக்கு அவளும் ஊட்டி விட்டாள்.
அன்று விஜயும், நிலாவும் வர்மா வீட்டிலே தங்கி விட அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு, நிலாவின் ஆசைப்படி மாடியில் ஒன்றாக படுக்க சென்றனர். ஆருவிற்கு தான் ஏமாற்றமாக இருந்தது. மகிழ்வினை அவருடன் தனிமையில் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று ஏக்கம் கொண்டாள்.
நிலா பேசிக்கொண்டே உறங்கி விட, மற்றவர்களும் உறங்கி விட்டனர், இருவர் மட்டும் உறங்கவில்லை, அவன் காலின் மேல் காலினை போட்டவள், அவன் நெஞ்சில் விரல் வைத்து மேல் ஏறிக் கொண்டே செல்ல
“ராட்சசி ஆரம்பிச்சிட்டா, தனியா ரூமுக்குள்ள மாட்டி இருந்தா நான் அவ்ளோ தான் போலயே, இவளை நாளைக்கே ராஜஸ்தானுக்கு பேக் பண்ணி கொண்டு போக வேண்டியதான், கானபிரன்ஸ் முடியிற வரைக்கும் தாங்க மாட்ட, என்னையும் சும்மா இருக்க விட மாட்டா “
அவனின் எண்ணத்தின் தாக்கம் அவளுக்கு கேட்டதோ என்னவோ, நொடியில் அவனின் இதழினைப் பற்றிக் கொண்டவள் அவனிடம் கற்றுக் கொண்டதை அவனுக்கே செய்து காட்டிட, அவளிடம் தன்னை ஒப்புவித்து விட்டு அவளுக்கு அடங்கிப் போனான் ஆருவின் மாறானாய், அழகனாய், நிலவும் இவர்களின் இதழ் முத்தத்தில் வெட்கம் கொண்டு மேகத்திற்குள் தன்னை மறைத்து கொண்டது.
