நலம் தானா ஊதாப்பூவே 🪻-18

“என்னைப் பார் என்றது இதயம், என்ன செய்தாலும் இருக்க மாட்டேன் என்றது இதழ்கள், விலகிட முடியாமல் தடுத்தது கைகள் “
 

 

…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
 

 

பாகம் -18

 

காலில் விழுந்து புரண்டவனைக் கடுப்போடு பார்த்து நின்றிருந்தான் வர்மா, ஆரண்யா அவன் விழுந்ததைப் பார்த்து திரும்பி சிரித்தாள் சத்தமில்லாமல், ‘இவரை வைத்து தப்பி விடலாம் ‘என்ற எண்ணம  அவளுக்கு, வர்மாவின் கேள்விகளில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அவளுக்கு தெரியுமே, அவனிடம் இருந்து மறைத்திருக்கும் ரகசியம் இப்போது வெளிப்படுவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.

 

தான் முடிக்க வேண்டியவை இன்னும் இருக்கிறதே, அப்பப்போது வர்மாவிடம் தனியாக சிக்கிக் கொள்ளும் போது விஜய் தான் காப்பாற்றுவான் இப்போதும் அப்படி தான் வந்திருக்கிறான்.
 

 

கீழே விழுந்தவன் நிமிர்ந்து வர்மாவைப் பார்த்து “ஏன் டா நான் தான் உனக்கு என்ன ஆச்சோன்ற பதட்டத்துல விழுந்துட்டேன் அப்டியே பார்த்து நிக்குற “

 

படித்துக் கொண்டே கையினை தலைக்கு அண்டக் கொடுத்தப்படி கேட்க 
 

 

வர்மா எதுவும் பேசவில்லை. தன் தோளின் காயம் இப்போது தான் வலியைக் காட்டியது. திரும்பி அவளைப் பார்த்தான் இவனின் காயத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

 

அவளின் தோளிலும் காயம் தான். உன்னால் தானடி இது என்ற குற்றச் சாட்டு அவன் கண்ணிலும், உனக்காகத் தான் என்ற நேசம் இவள் கண்ணிலும் புரிகிறது ஆனால் ஏன் என்பது போல் பார்வையை தொடுக்க, விரைவில் புரியும் என்ற இறைஞ்சுதலோடு பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
 

 

பெரு மூச்சு விட்டவனுக்கு எண்ண சுழல்கள் எங்கெங்கோ சென்று அவளிடமே வந்து நிற்பது அவனை காட்டுப்படுத்துவது போல் தோன்ற, விஜய்யை சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் வெளியே,
 

 

“டேய் வர்மா விடு டா, என்ன டா ஏதோ தப்பு பண்ணவன இழுத்துட்டு போற மாதிரி இழுத்துட்டு போற “
 

 

வெளியே வந்ததும் சட்டையில் இருந்து கையை எடுத்தவன் “அது எப்படி டா எனக்கு இடைஞ்சல் பண்ணவே வருவியா ”  அவள் மேல் இருந்த கோவத்தை இவனிடம் காட்டினான்.
 

 

“நான் என்ன பண்ணேன் ” முழித்த படி கேட்டான் விஜய்.
 

 

“முக்கியமான நேரத்துல தான் வருவியா ப்ச் ” தலையை அழுந்தக் கோதினான் வர்மா 
 

 

“சாரி டா கண்ட்ரோல் பண்ண முடியலையா, இப்போ வேணா போடா நான் வெளிய இருந்து யாரும் வராம பார்த்துக்குறேன் ” சொல்லி முடித்து விட்டு நண்பன் முகத்தைப் பார்க்க,
 

 

விஜயின் வார்த்தையில் கை முஷ்ட்டியை மடக்கி ஓங்கி குத்திட செல்ல,
 

 

அப்போது தான் தான் பேசியதன் அர்த்தம் விளங்கியது. ‘அச்சச்சோ தப்பா பேசிட்டோமே, இவன் வேற கொலை வெறில இருக்கானே, நண்பன் மேல பாசமா இருக்குறது ஒரு குத்தமா, பதறி அடிச்சு வந்தேனே இவன் கிட்ட அடி வாங்கி சாகவா ‘ 
 

 

கை கூப்பி வணங்கி “தெரியாம பேசிட்டேன், உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சோன்ற பதட்டத்துல கதவை தட்டிட்டேன், இப்பயும் அந்த டென்ஷன்ல தான் உளறிட்டு இருக்கேன் மன்னிச்சுடு டா, இப்போ நான் என்ன பண்ண சொல்லு, ப்ளீஸ் கோவப்படாத மச்சான் “
 

 

கோவத்தை மெல்ல கட்டுப்படுத்தியவன் கையினை இறக்கி மூச்சினை இழுத்து விட்டான். அவன் இயல்பு நிலைக்கு திரும்ப,
 

 

“மச்சான் வா காபி சாப்பிடுவோம், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் ” வர்மாவுக்கும் இப்பொழுது தேவைப்பட அமைதியாக இருந்தான்.
 

 

கேன்டீன் அழைத்து சென்றவன் இருவருக்கும் காபி எடுத்து வந்தான். குடித்து முடித்ததும் ஆரண்யாவுக்கு வாங்கி வர சொன்னான். அறைக்கு வந்து அவனே ஆரண்யாவுக்கு ஆற வைத்தே குடிப்பாட்டினான்.
 

 

விஜய்க்கு ஆச்சர்யம் தான். ஆனால் ஏன் நிதிஷாவை திருமணம் செய்ய சம்மதித்தான். அது தான் புரியாத புதிராக இருக்கிறது. கேட்டாலும் பதில் வராது. ஆரண்யாவை நினைத்து தான் வருந்தினான்.
 

 

அவளிடம் காட்டும் நெருக்கம் அவனின் மனதில் அவள் இருக்கிறாள் என்பதை நன்றாகவே தெரிய வைக்கிறான் ஆனால் வெளிப்படையாக சொல்லாமல் வேறு ஒருவளுடன் திருமணம் இது எங்கே கொண்டு போய் முடியுமோ, நண்பனின் வாழ்வை நினைத்து கவலை பட்டான்.
 

 

கவலை பட வேண்டியவனோ அவளை கவனித்து கொள்கிறேன் என்ற பெயரில் படாத பாடு படுத்தி கொண்டிருக்கிறான். அவனின் நெருக்கத்தில் சிக்கித் தவித்தவள், அவன் கையை பிடித்துக் கொண்டாள் அழுத்தமாய்,
 

 

இவனின் செயலில் வெறியான விஜய் வெளியே சென்று விட்டான். நண்பனை வைத்து கொண்டே அவளிடம் சில்மிஷம் செய்தாள் இவனுக்கு கடுப்பாக நிலா நியாபகம் வந்து விட மெதுவாக வெளியே கிளம்பி விட்டான் விஜய்.
 

 

விஜய் வெளியே சென்றதும் தன் கையினை அழுத்திப் பிடித்திருக்கும் ஆரண்யாவைக் கண்டான்.
 

 

“பயப்படுறியா ” அவள் முகம் அப்படித்தான் இருந்தது.
 

 

இல்லை என்பதாய் தலை அசைத்தவள் “உங்க கையை பிடிச்சிக்கிட்டா பயம்லாம் போய்டும்”
 

 

அவள் வார்த்தைகள் சூடான அவன் இதயப் பகுதியை குளிர்வித்துக் கொண்டிருந்தன, 
 

 

“அந்த போன் எனக்கு எதுவும் தெரியாதுங்க, பார்ட்டில அவனா வந்து பேசுனான் நான் பேசவே இல்லை, என் நம்பர் எப்படி தெரியும்னு கூட எனக்கு தெரியல, நீங்க என்னை சந்தேகப் ” வார்த்தையை முடிக்க விடாமல் தன் வசப்படுத்திக் கொண்டான் தன்னிதழ்களால்….
 

 

ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து  ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜோத்பூர் நகரின் புறநகரில் உள்ள மெஹ்ரான்கர் கோட்டைக்குள்  இருக்கும் சாமுண்டா மாதா கோயிலில் ரத்தோர் சிங்கும் அவரின் அன்புக்கு உரிய காதல் மனைவி ஜோதாவும் சாமுண்டா தேவியினை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
 

 

சாமுண்டா தேவி கோவில், ராவ் ஜோதா 1460 ஆம் ஆண்டில் ஜோத்பூர் நகரத்தில் உள்ள மெஹ்ரன்கர் கோட்டைக்கு சாமுண்டா மாதா சிலையை கொண்டு வந்தார். 
 

 

அது தேவி சாமுண்டா மாதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தற்போதைய காலங்களிலும் கூட ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களின் அரச குடும்பங்கள் தேவி சாமுண்டா மாதாஜியை ‘இஷ்ட் தேவி’ என்றே வழிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
 

 

துளசி வழிபாடு போன்ற தினசரி சடங்குகள், மேற்கத்திய செல்வாக்கிற்கு மத்தியிலும் பாரம்பரியத்தை நிலைநிறுத்துகின்றன.
 

 

புஷ்கர்ணா சமூகத்தைச் சேர்ந்த பூசாரிகள் பாரம்பரிய வேதம் மற்றும் தந்திர வழிமுறைகளைப் பின்பற்றி இங்கு வழிபாடுகளைச் செய்கின்றனர். 
 

 

கோயிலின் பழமையும் அதன் இமாச்சலக் கட்டிடக்கலையும் காரணங்களாக உள்ளன. பாலம்பூரின் முக்கிய சுற்றுலாத்தலமான சாமுண்டா தேவி கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர, மலை நகரத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இப்பகுதியில் உள்ள புனிதமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இதைக் கருதுகின்றனர். 
 

 

குறிப்பாக இதன் பல தொன்மகதைகள் மற்றும் வரலாறு காரணமாக. அதனுடன் இணைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர்வசிகளும் அண்டை மலை வாழிடங்களில் இருந்து வரும் பக்தர்களும் அம்மனை பிரார்த்தனை செய்வதற்காக இந்த கோவிலுக்கு வருகிறனர்.
 

 

ஜக்னி மாதா கோயில் என்ற சிறிய கோயில் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை உச்சியில் அமைந்துள்ளது. இது ஒரு குறுகிய மலைப் பாதை மூலம் அடையமுடியும். 
 

 

மக்களைத் தங்கள் தீய திட்டங்கள் மற்றும் தீய செயல்களால் துன்புறுத்திய கொடூரமான வன்முறை தீய அரக்கர்களை தேவியின் வெற்றியை நினைவுகூரும் பண்டிகை இது.இவ்வாறு, சாமுண்டா மாதா நகரத்தின் காவல் தெய்வமாக இருப்பதால், 
 

 

அவரது கோயில் இப்பகுதி முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களின் வழிபாட்டுத் தலமாகும். பக்தர்கள் அவரை சாமுண்டா மாதாவாஸ் அல்லது இன்னும் எளிமையாக மாதாவாஸ் அல்லது தாய் என்று அன்பாகக் குறிப்பிடுகின்றனர்.
 

 

தசரா பண்டிகையை மிகுந்த ஆடம்பரமாகவும், நிகழ்ச்சியாகவும் கொண்டாட கோட்டையில் முன்கூட்டியே விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன . அரச குடும்பத்தினர் சில விரிவான சடங்குகளில் பங்கேற்பதன் மூலம் விழாக்களைத் தொடங்குகிறார்கள், அன்றிலிருந்து பொதுமக்கள் தாய் தெய்வத்தின் வெற்றியைக் கொண்டாடும் சடங்குகளை ஆர்வத்துடனும் பக்தியுடனும் மேற்கொள்கிறார்கள்.
 

 

ஜோத்பூர் 1459-ல் ராவ் ஜோதாவால் நிறுவப்பட்டாலும், மார்வார் பகுதியின் ஒரு பகுதியாகவே நீண்ட காலம் இருந்தது, எனவே மக்கள் தங்களை மார்வாடிகள் என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர். 

 

ராஜபுத்திர வழித் தோன்றலில் பிறந்த ரத்தோர் தமிழ்நாட்டில் வியாபார நோக்கில் வந்தவர் ஜோதாவைப் பார்த்து காதலில் விழுந்து அவரை பெண் கேட்க செல்ல அவள் வீட்டில் காதல் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
 

 

அவளின் விருப்பதிற்கு மாறாக கட்டாய திருமணம் செய்ய முயல ரத்தோர் ஜோதா என்கிற வசுந்திரா தேவியை திருமணம் செய்து ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று விட்டார்.
 

 

மகள் போன அதிர்ச்சியில் தந்தை இறந்து விட, வசுந்தராவின் அண்ணன் தங்கை மீதும் அவளின் கணவன் ரத்தோர் மீதும் கோவம் கொண்டு 24 வருடங்களாக பேசாமலே இருக்கிறான்.
 

 

அண்ணன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்த வசுந்தராவை ரத்தோரின் குடும்பம் பாசமாக பார்த்துக் கொண்டாலும் அண்ணன் பேசாதது வருத்தத்தை கொடுக்க வீட்டின் நினைவு வரும் போதெல்லாம் கோவிலுக்கு அழைத்து வந்து சமாதானம் செய்வார்.
 

 

இன்று தன் அண்ணன் மகன் பப்புவின் நியாபகத்தில் அழுது கொண்டிருக்கும் மனைவியை சமாதானம் செய்தவர்

 

ஜோதாவின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்த ரத்தோர் “ஏன் மா இப்டி அழுவுற, இதுக்கா கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன்.

கோட்டையின் உள்ளே வெள்ளை தாமரை கவிழ்ந்து வைத்தர் போன்ற அமைப்பின் மேலே கோபுரமும் அதன் மேல் கலசமும் கொடியும் கோவிலின் அழகிய கட்டிட கலைக்குச் சான்றாய் இருக்க, 
 

சாரங்கி, கமய்சா, தோலக், அல்கோசா போன்ற வாத்தியங்களின் இசை ஒலித்துக் கொண்டிருக்க 
கருவறையில் முகம் முழுவதும் சிவப்பு நிறம் கொண்டு ஒரு கையில் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த வாளும் மறு கையில் ஆயுதமும் ஏந்தி தீய சக்திகளை விழுங்கும் பார்வையுடன் வீற்றிருக்கும் அம்மனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்

தன் அழுகையினை துடைத்து நிமிர்ந்தவர், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு

“இந்த வருஷமாவது பப்பு வருவானா, இன்னைக்கு என்னன்னு தெரியல அவனுக்கு ஏதோ ஆகிட்ட மாதிரி தோணுது, மனசு பட படன்னு அடிச்சிக்குது, நீங்க அங்க போன் போட்டு பேசுங்க அவன் நல்லா இருக்கானா கேளுங்களேன் “

மனைவி சொன்ன பிறகு செய்யாமல் இருப்பாரா அவரும் அலைபேசியில் அழைத்து விவரம் கேட்டவர் அழைப்பை துண்டித்து மனைவியைப் பார்க்க,

கணவரின் சோக முகத்தைப் பார்த்த ஜோதா

“என்ன ஆச்சுங்க எதனா பிரச்சனையா ” கணவரின் முகத்தை கலவரமாக பார்த்து கேட்க,

எப்படி சொல்வது என்று தயங்கினார் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய தொழிலதிபரில் ரத்தோரும் ஒருவர். தொழிலில் எதிரிகளிடம் கூட பேச தயக்கம் கொண்டதில்லை, இன்றோ மனைவியிடம் தயக்கம் கொண்டு இருப்பது அவரின் மாறாத அன்பிற்கு சான்று தான்

“ப்ளீஸ் சொல்லுங்களேன் “

இதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவர் “பப்பு பேக்டரி தீ பிடிச்சிடுச்சாம் ” மீதி சொல்லி முடிப்பதற்குள் வசுந்தரா மயங்கி அவர் மேலே சரிந்தார். மயங்கியவளை தூக்கியவர்  காரில் மருத்துவ மனைக்கு விரைந்தார்.

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page