நிச்சியம் முறிந்தது – 3

அத்தியாயம்- 3

அறையிகுள் அழைத்து சென்ற ரகுபதி தங்கையை பார்த்து “சௌந்து கொஞ்சமாச்சி உனக்கு அறிவு இருக்கா? அந்த பாட்டி தான் ஏதோ சொல்லிச்சினா, விட்டு போகாம நீ ஏன் அது கூட சண்டைக்கு போன? படிச்சி இருக்க தானே. மூளை வேலை செய்யாது உனக்கு. நிச்சியம் ஆனா அன்னிக்கே இப்படி மாப்பிள்ளை முன்னாடி நடந்துக்குறீயே. இது நல்லவா இருக்கு?” என்று கோபத்துடன் கத்தினான் அவன். 

ஏற்கனவே தன் பொறுமையை மொத்தமாக இழந்து இருந்த சௌந்தர்யா உடன் பிறந்தவன் திட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் “என்னடா நீயும் புரியாம பேசுறா? நிச்சியம் ஆச்சினா அவங்களுக்கு பயந்துட்டு இருக்கனுமா என்ன? என்னால அதுக்கு மேல அங்க சாப்பிட முடில, சோ எழுந்துட்டேன். அங்கே நான் இல்ல. யாரா இருந்தாலும் சாப்பிட முடிலனா கை கழுவ எழுந்துக்க தான் செய்வாங்க. ஏன் எல்லார் வீட்ல அப்படி தானே நடக்குது. எல்லார் வீடுமே விடு நம்ம வீட்டிலும் அதே தானே நடக்குது. என்னவோ செய்ய கூடாத பாவத்தை பண்ண மாதிரி சீன் போட்டுக்கிட்டு இருக்கீங்க” என்று கோபத்துடன் பேசியவள் கடைசி இரு வரியில் ஏளனமாக கேட்டாள். 

அவள் பேசுவதை வெறுப்புடன் பார்த்தவன் “இப்போ நீ கை கழுவ எழுந்துகிட்டது தப்புனு நான் சொல்ல வரல சௌந்து. உன்னால சாப்பிட முடியாது தெரிஞ்சா ஒரு வார்த்தை பக்கத்துல இருக்கிற மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டு எழுந்து இருக்கலாம். ஆனால் நீ பண்ணது எப்படி இருந்துச்சி தெரியுமா? அபர்ணா கிட்ட நீ சாரி சொன்னதும், அடுத்த நொடி கோபத்தோடு பாதி சாப்பாட்டை இலையிலே வச்சிட்டு, அங்கே இருக்கிறவங்களை மதிக்காம நடந்துகிட்ட மாதிரி இருந்துச்சி” என்று வெறுப்புடனே சொன்னவன் ஓர் நொடி பேச்சை நிறுத்தி விட்டு, சந்தேகமாக தங்கையை ஆழ்ந்து பார்த்து, 

“இருந்துச்சி என்ன! அதான் நிஜமும் கூட. உன்னால யாருக்கும் அடங்கி போக முடியாது. அதான் தாட்சாயிணி அத்தை சொன்னதை, நீ கேட்டு நடந்ததும் அதை பொறுத்துக்க முடியாம, அந்த மொத்த கோபத்தையும் அந்த பாட்டி மேல கொட்டிட்ட. சரியா நான் சொன்னது?” என்று உறுதியாக சொன்னான். 

ரகுபதி கூறியதை கேட்ட சௌந்தர்யா, ஓர் கணம் திகைத்து தான் போனாள். ‘இப்படி இவன் கண்டு பிடிச்சான்’ என்று யோசித்தவள், பின் தன் முக பாவனையை மாற்றி,

“நீயா ஒன்னு முடிவு பண்ணிக்காதடா” என்றாள். 

ரகுபதியோ தங்கையை நம்பாத பார்வையை பார்த்தவன் “இந்த மூஞ்சை பத்தி எனக்கு தெரியாது. சரியான அடங்காபிடாரி நீ. போயிம் போயிம் உன்னை போய் அந்த நல்ல குடும்பத்துக்கு மருமகளா அனுப்ப நினைக்கிறாங்க பாரு நம்ம அப்பா அம்மா அவங்களை சொல்லனும்” என்று ஆத்திரத்தில் பேசினான்.

ரகுபதி பேசியதை கேட்ட சௌந்தர்யா தன் நிதானத்தை மொத்தமாக இழந்தாள்.

பின் தன் அண்ணனை பார்த்து “ஏன் இவங்களை விட்டா, இந்த உலகத்துல வேற குடும்பமே இல்லையா?” என்று சத்ததாக கத்தியவள் என்ன செய்ய போகிறோம் என்று சிறிதும் சிந்தனையில் கொள்ளாமல் விறு விறுவென அறையிலிருந்து வெளியேறினாள். 

ரகுபதியோ அவளின் கோபத்தை கண்டு ஏதோ தவறாக நடக்க போகிறது என்று உணர்ந்தவன் அவளை தடுக்க பின்னால் ஓடினாள். 

ஆனால், அப்போது தான் ஆராதனா அவர்களை சமாதானம் செய்து அனைவரையும் உள்ளே அழைத்து வர.

அதே சமயம் ஒரு பைத்தியக்காரி போல் அவர்கள் முன் வந்து நின்றவள் மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கியபடி தாட்சாயிணி முறைத்து பார்த்தாள். 

அவளின் இந்த நிலையை கண்ட பெற்றோர்களுக்கு பகிரென்று இருந்தது. ஆராதனாவிற்கோ பதற்றம் ஏற்பட தொடங்க, ஆராதனா பின் நின்று இருந்த அபர்ணா சௌந்தர்யாவை எட்டி பார்த்து “அச்சோ பத்ரகாளியாகிட்டாளே” என்று பயத்தில் முணுமுணுத்தாள்.

நேரடியாக “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல அம்மா, அப்பா” என்று சொல்லி அவர்கள் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டாள். 

அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதை கேட்டு கேஷவ் முகம் இறுகி போனது. ஏன் என்று கேட்க வார்த்தை எழுந்தாலும் சபை நாகரீகம் கருதி அமைதியாக நின்றான். 

தில்லை நாதனும் கௌசல்யாவும் “என்னடி உளறிட்டு இருக்க” என்று கேட்டுக் கொண்டே ஆராதனாவை பின்னால் இழுத்து விட்டு, மகள் அருகில் சென்று என்ன நடந்தது என்று விசாரித்தனர். 

ரகுபதிக்கும் எரிச்சலாக இருந்தது. ‘இவளின் பிடிவாத குணத்தால் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையும் கிடைக்காமல் போயிவிடுமா’ என்று எண்ணியவன் விழி ரதியிடம் சென்று வந்தது. 

ஆனால் அவன் பேசிய வார்த்தைகளால் தான் இப்போது அவன் தங்கை இவ்வாறான முடிவை எடுக்கிறாள் என்பதை மறந்து போனான். 

தாட்சாயிணியோ ஏற்கனவே சௌந்தர்யா மீது அதிருப்தியில் இருந்தவர்  சற்று கோபத்துடன் “ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று  கேட்டார். 

சௌந்தர்யா எந்த வித குற்றவுணர்வுமின்றி “உங்க வீட்டுக்கு மருமகளா வர எனக்கு விருப்பமில்லை” என்று சொல்லியவளை தில்லை நாதன் அடிக்க கை ஓங்கியே விட்டார்.

தாட்சாயிணியோ நிதானமாக அவரை பார்த்து “நிறுத்துங்க தில்லை நாதன். வயசு பொண்ணை கை நீட்டி அடிக்கிறது தப்பு. அவளுக்கு என்ன இப்போ என் வீட்டுக்கு தானே மருமகளா வர பிடிக்கல சொன்னா. கட்டாயப்படுத்தி எங்க வீட்டு மருமகளா அழைச்சிட்டு போக எனக்கும் இப்போ விருப்பமில்லை” என்று சொன்னவர், 

சௌந்தர்யாவிடம் திரும்பி “இதை பொண்ணு பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்களாமே” என்று கேட்டார். 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவள், ஒரு மன்னிப்பு கூட கேட்க தோன்றவில்லை அவளுக்கு. 

அதுவே தாட்சாயிணிக்கு அவளின் குணம் என்னவென்று தெளிவாக எடுத்துரைத்தது. 

தில்லைநாதனோ “சௌந்தர்யா” என்று அதட்டியர் தாட்சாயிணியிடம் திரும்பி “சம்மந்தி” என்று பேச வந்தவரை இடை நிறுத்தி,

“இதே இடத்துல வேற யாராவது இருந்து இருந்தா இந்நேரம் இந்த வீட்டையே இரண்டாகி இருப்பாங்க. ஆனால் நான் அப்படி பண்ண விரும்பல. ஏனா எனக்கும் ஆரம்பத்துல இருந்து உங்க பொண்ணு மேல ஏதோ ஒரு சின்ன திருப்பித்தியின்மை இருந்துட்டே இருந்துச்சி. அது கல்யாணத்து பிறகு போக போக சரியாகிடும் நினைச்சி விட்டேன். அதான் நான் பண்ண தப்பு. அந்த தப்புக்கு தான் இதோ எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிற்கிறேன்” என்று சொல்லியவர் திரும்பி அவர்களுடன் வந்தவர்களை புறப்படுமாறு கட்டையிட்டார்.

ரதியோ தன் அண்ணனை நோக்கினாள். நிச்சியம் முடிந்து இன்னும் ஒரு மணி நேரம் கூட கடக்கவில்லை. ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்து போனது. 

கல்யாணத்திற்கு முன் சௌந்தர்யாவை பற்றி தெரிய வந்ததை நினைத்து நிம்மதி அடையவதா? இல்லை அவள் அண்ணனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து போனதை எண்ணி கவலை கொள்வதா என்று தெரியாமல் தவித்தாள்.

பின் அமைதியாக அங்கே இருந்து வெளியேறி காரில் ஏறி அமர்ந்தாள். 

கேஷவ் சௌந்தர்யாவை முறைத்து பார்த்தவன் யாரிடமும் பேச விருப்பமின்றி அங்கே இருந்து வெளியேற நினைத்தவனை தடுத்தாள் சௌந்தார்யா.

“ஒரு நிமிசம்” என்று கேஷவ் முன் வந்து அவனை தடுத்து நிறுத்த,

கேஷவ் புருவங்களை சுருக்கிக் கொண்டு அவளை என்னவென்று பார்த்தானே தவிர ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை.

ஆனால் அதை பற்றி எதுவும் பெரியதாக எடுத்துக் கொள்ளாத சௌந்தர்யா கேஷவ் விரல்களை நோக்கி “நடந்த நிச்சியமே முறிஞ்சி போச்சி. அப்புறம் எதுக்கு நான் போட்ட மோதிரம்” என்று இதயம் ஒன்று இவளிடம் இருக்கிறதா என்னும் அளவிற்கு நடந்துக் கொண்டாள்.

பேசிக் கொண்டே அவள் கரத்தில் இருந்த நிச்சிய மோதிரத்தை எந்த வித தயக்கமும், உணர்வுமின்றி விரலில் இருந்து உருவி கேஷவ் கரத்தை பிடித்து திணித்தவள், அதே வேகத்துடன் ஆடவன் விரலில் அவள் அணிந்த மோதிரத்தை சடுதியாக அவளை நோக்கி இழுத்தாள்.

அதன் விளைவு கேஷவ் விரலில் சிறிய கீறல் விழ. அந்த வலியை கூட அவன் உணரவில்லை. சௌந்தர்யா செய்யும் செய்கையை பார்த்து.

அவனிற்குள் உண்டான காயம் சௌந்தர்யா அவனை பிடிக்கவில்லை என்றும் சொன்னதாலும் இல்லை. அதே சமயம் அந்த மோதிரத்தை அவனிடமிருந்து கழட்டியதாலும் இல்லை. 

அவனுள் ஏற்பட்ட வலி ஒன்னே ஒன்று தான். அனைத்தும் சரியாக கவனித்து முடிவு எடுக்கும் அவனின் தாயின் மனநிலை இப்போது தப்பான ஒரு பெண்ணை அவர் மகனுக்கு தேர்ந்தெடுத்ததை எண்ணி எந்த அளவிற்கு துடித்துக் கொண்டு இருப்பார் என்று தான் வேதனை அடைந்தான். 

ஆரம்பதிலிருந்தே அவனுக்குள் சௌந்தர்யா ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவனும் திருமணம் முடிந்தால் பழகிவிடும் என்றே நினைத்தானே தவிர. ஏன் என்று உணராமல் இருந்து விட்டான். 

சௌந்தர்யாவின் செயலை கண்டவர்கள் மேலும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். 

கௌசல்யாவின் மனமோ ‘போச்சி மொத்தமா எல்லாம் போச்சி. இனி தேடினாலும் இப்படி பட்ட பெரிய இடம் கிடைக்குமா?’ என்று நொந்துக் கொண்டார். 

ரகுபதி தங்கையின் நடவடிக்கையை பார்த்து தலையில் கை வைத்துக் கொண்டான். ‘இவளை எல்லாம் திருத்தவே முடியாது. இன்னும் என்ன என்ன அவமானத்தை இந்த குடும்பத்துக்கு ஏற்படுத்த போறாளோ’ என்று இயலாமையில் மனதிற்குள்ளே புலம்பினான்.

தில்லை நாதனோ “சௌந்து என்ன பண்ணிட்டு இருக்க” என்று கேட்டுக் கொண்டே மகளை அவர் புறம் இழுத்தார். 

இதை கண்ட தாட்சாயிணியிற்கு இதயத்தில் சுறுக்கென்று வலி ஏற்பட்டது.

முதல் முறை மகனின் வாழ்க்கையில் ஒரு தப்பான முடிவை எடுத்து விட்டோம் என்று வருந்தினார். 

அவருக்கு பேச வார்த்தைகள் தொண்டையில் அடைத்தாலும் விரகத்தியாக மெல்லிய புன்னகை சிந்தினார்.

பின் அவர்களை நோக்கி இருக்கரம் கூப்பி “ரொம்ப நன்றிங்க. எல்லால் ரொம்ப நல்லப்படியா முடிஞ்சிடுச்சு. நாங்க கிளம்புறோம்” என்று அழுத்தமாக ஒவ்வொரு வார்த்தையும் கூறியவர் அதே விரக்தி புன்னகையோடு மகனை அழைத்துக் கொண்டு அங்கே இருந்து வெளியேறினார். 

சௌந்தர்யாவை தவிர மற்றவர்கள் அவர்கள் பின்னால் பதற்றத்துடன், கவலையுடன் சென்றனர். 

காரில் ஏற போன தாட்சாயிணி ஒரு முறை அந்த வீட்டை பார்த்து விட்டு உள்ளே ஏற,

அவரின் புன்னகையின் பின்னால் மறைந்து இருக்கும் வலி  கண்டிப்பாக யாருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் தாட்சாயிணியின் புன்னகையில் தெரிந்த வலியை உணர்வு பூர்வமாக உணர்ந்தாள் ஆராதனா. 

ஏனோ அவரின் வலி அவளுக்கு வலித்தது. பல முறை சௌந்தர்யாவின் செயல்களை கண்ட ஆராதனாவிற்கு உள்ளுக்குள் கோபம் எழும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக கடந்து விடுவாள். காரணம் பெரியப்பாவின் குடும்பத்தில் பிரச்சனைகள் வேண்டாம் என்று விலகி சென்று விடுவாள். 

ஆனால் இப்போது கம்பீரமாக இருந்த பெரிய மனிஷியை அவமானப்படுத்தியை கண்டு முழுவதாக சௌந்தர்யாவை வெறுத்தாள் ஆராதனா. 

சௌந்தர்யாவை கேள்வி கேட்க நா, வரை வார்த்தை வந்தாலும் பெரியவர்கள் இருக்கும் போது அவள் பேச கூடாது பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றாள். 

அப்போது அவளின் நயனங்கள் அங்கே எந்த உணர்ச்சிகளும் இன்றி சிலைப் போல் நின்று இருந்த கேஷவ் மீது பரிதாபமாக பதிந்தது. 

அதே சமயம் அபர்ணாவோ ‘அப்பாடா கேஷவ் மாமா அந்த பிசாசு கிட்ட இருந்து தப்பிச்சிட்டாரு’ என்று நிம்மதியாக உணர்ந்தவள் விழி மகிழ்ச்சியுடன் கேஷவ் மீது பதிந்தது. 

கேஷவ் அமைதியாக காரில் ஏறி அமர்ந்ததும் கருப்பன் வேதனையுடன் வண்டியை அவ்வீட்டிலிருந்து விரைந்தார். 

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!