மலர் 1

மலர்  1

  பொழுது அழகாக விடிந்தது. சூரிய வெளிச்சம் இன்னும் வெளியில் வரவில்லை. ஆனால் அவருக்கு பதில் அந்த இருட்டிலும் நம் நாயகி பளிச்சென்று கிளம்பி இருந்தாள் . அவளின் அடர் நீலசுடி அவளின் நிறத்தை இன்னும் மெருகேற்றிக் காட்டியது. சிறிய ஸ்டிக்கர் பொட்டும்  அதன் மீது சிறிய விபூதி கீற்றும் வைத்துக் கொண்டவள் தனது சீருடை எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள் . அருகில்  உறங்கிக் கொண்டிருந்த அழகான சிறு மொட்டாக இருக்கும் தங்கைக்கு லேசாக முத்தம் வைத்து எழுப்பினாள் .

“செல்லக்குட்டி! அக்கா கிளம்பறேண்டா.”

தூக்கம் கலையாமலேயே எழுந்தவள் மெதுவாக கண்ணை கசக்கி லேசாக அக்காவை அணைத்து, “பை கா !” உடன் பிறந்தவளின்  எச்சில் முத்தத்தை ரசித்தவள் , 

“பை டி! பட்டுக்குட்டி எழுந்து படிக்க போ செல்லம்” என்று கூறிவிட்டு  “பை மா பை பா”என்று கூறிக் கொண்டே அன்னையிடமிருந்து மதிய உணவு பையை பிடுங்கி கொண்டு அவசரமாக தம்பி  முரளியுடன் வண்டியில் ஏறிக் கொண்டாள் . 

அவள் பஸ் ஸ்டாப் வருவதற்கும் பேருந்து அங்கே வரவும் சரியாக இருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்தவள் நம்ம சாரை தேடினாள் . ஆனால்  பாவம் இன்னும் ஆளைக் காணும். 

“என்னம்மா உங்க ஆள  இன்னும் காணோம் ? “கண்டக்டரும் கண்ணடித்துக் கேட்டார். 

கண்டக்டரிடம் பஸ்  பாசில் டிக் வாங்கி கொண்டவள் “வராம எங்க போய்ட போறாரு. நம்மகிட்ட மாட்டாமலா இருக்க போறாரு. இன்னிக்கு இல்லனா நாளைக்கு…”

அவரும் சிரித்து கொண்டே இருப்பிடத்தில் அமர்ந்தார்..

யார் அவர்? காத்திருங்கள் உங்களுடன் நானும் ..

 “ உங்ககிட்ட பேசினதுல ரொம்ப சந்தோஷம். சீக்கிரம் பார்ட்னர்ஸ் ஆகலாம் ஆங்கிலத்தில் பேசி முடித்தவன், அங்கே வைத்திருந்த ஆப்பிள் ஜூஸை எடுத்து மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்தான். ஜன்னல் அருகில் நின்று கொண்டிருந்தவனுக்கு மனதில் தன்னுடைய தொழிலை பற்றிய சிந்தனையே இருந்தது. அப்போ து சூர்யன் தகித்துக் கொண்டிருந்தார்.. அவரின் பளபளப்பு கண்ணுக்கு தெரிந்ததே தவிர அவர்களின் கட்டிட கலை உதவியால் கண்ணை தொட முடியவில்லை. 

அவர்களின் கட்டிடத்திற்கு நேர் கீழே பேருந்தில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த அமிர்த வர்ஷினி சூரியனுக்கு “ஹலோ!” சொன்னாள் .

“அடிக்கற வெயிலுக்கு ஹலோ சொல்லற ஒரே ஆள் நீதாண்டி” கிண்டலாக சொன்னாள்  அவள் தோழி இனியா .

இவள் சூரியனுக்கு ஹாய்  சொல்லுவது முதல் தளத்தில்  இருந்து பார்த்து கொண்டிருந்த ஆனந்துக்கு அது நன்றாகவே தெரிந்தது. சூரியனுக்கு ஹாயா? அது சரி இவரு மட்டும் இல்லனா?” அவன் மனதில் எழுந்த கேள்விக்கு இவள் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

“அவரு மட்டும் இல்லனா நம்ம கதி அதோ கதிதான். துணி காயாது. இந்த ரோடு கேட்கவே வேணாம். எத்தனை வெயில் அடிச்சாலும் நம்ம ஊரு தாங்கும். அதுவே சின்னதா ஒரு மழை வந்தாலும் ரோடு முழுக்க தண்ணி நிக்கும். இன்னும் பல கஷ்டங்கள். அப்பா சாமி தாங்கவே முடியாது.  இதுலேர்ந்து நம்மள காப்பாத்தறாரு இல்ல? அதுக்குத்தான் காலையிலேயே குட் மார்னிங்  வைக்கறது.  இன்னிக்கு சாரு லேட் சொல்லிக் கொண்டே கைப் பையில் இருந்து லஞ்சை வெளியில் எடுத்தாள் அம்ரிதா.

“அதுசரி சன்னுக்கே டப்  குடுக்கற வேலை  நம்மளோடது. அப்போ அவரு சரியா வந்தாலும் நமக்கு லேட்டாதான் தெரியும்”

 கிண்டலடித்தாள்  இனியா . 

இன்னிக்கு என்னடி லஞ்சு கொண்டு வந்த? கேட்டுக் கொண்டே அமிர்தாவும் அவள் தோழி இனியாவும் உணவை எடுத்து பங்கு போட்டு உண்ண ஆரம்பித்தனர். 

மருத்துவமனையில் காலை சிற்றுண்டி முடித்துக் கொள்வார்கள். வீட்டிற்கு திரும்பி வரும்போது தான் லன்ச் உண்ணுவது அவர்களின் வழக்கம்.

  “ஏ! உங்கம்மா எப்படிடி இவ்ளோ டேஸ்டியா சமைக்கறாங்க?” கண்ணை மூடி ரசித்தாள் அமிர்தா .

“எங்கம்மா ஊத்தற தலகாணி தோசையே உனக்கு அமிர்தமாத்தான்  தெரியும். தயிர் சாதத்துக்கு இவ்ளோ பில்டப்பா ?”

“ஏ! காலைல எழுந்து உனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு செய்யறாங்க? பாராட்ட வேணாமா ?”

“பாராட்டு பாராட்டு” என்று சொல்லிக் கொண்டே இருவரும்  உண்ண  ஆம்பித்தனர்.  பேச்சு எங்கெங்கோ போய்  இறுதியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் டாக்டர் ரகுவில் வந்து நின்றது.

“ஏ ! ஆளு செம்ம ஹண்ட்ஸாம்  இல்ல. இஸ்ஸ்ஸ்  அப்பா! என்ன கண்ணு என்ன கலரு ? அதுலயும் அந்த வைலட் ஷர்ட் அவனை பாக்காத பொண்ணுங்களே இல்ல.”

“ம்ம் அப்டியா ? அசால்டாக கேட்டாள் அமிர்தா .

“சரி! சரி! நீ பாக்கல. ஆனா நாங்க எல்லாரும் பார்த்தோம். நீதான் சாமியாரிணி ஆச்சே !”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை . ஒருவேளை அவருக்கு உன்ன பிடிச்சுருக்குன்னு வச்சுக்கோ. அவங்க வீட்டுல கேட்கற நகை  நட்டு உங்களால குடுக்க முடியுமா ? பையனை  டாக்டருக்கு படிக்க வச்சவங்க நம்மள மாதிரி சாதாரண வீட்டுலேர்ந்து பொண்ணு எடுப்பாங்களா ? அப்புறம் எதுக்கு பாக்கணும்? சைட் அடிக்கணும்? எப்படியும் நமக்குன்னு யாருன்னு எழுதி வச்சுருக்கோ அதுதான். அதை  கல்யாணதுக்கு அப்புறமாவே பாக்கலாம், சைட் அடிக்கலாம் லவ் பண்ணலாமே?”

“ஓகே அமிர்தா!  நீ சொல்லற மாதிரியே பார்த்தாலும் அது ஒரு கடமையா இருக்காதா ?” இனியா கேட்டாள் .

“அது கடமையா எனக்கு தெரியல. ஒரு அன்பான குடும்பம். அதுல அழகான கணவன்  குழந்தைகள், அவரோட அம்மா அப்பா என்னோட அம்மா அப்பா எல்லாரையும் நேசிக்கறது எப்படி  கடமையா இருக்கும். அவரை அவருக்காகவே அப்படியே ஏத்துக்கிட்டா?”

“அதுக்கு பேரு  அட்ஜஸ்ட்மென்ட். ஒரு வேளை கல்யாணம் பண்ணறதுக்கு முன்னாடியே  யாராவது உன்னோட மனசுக்குள்ள வரணுன்னா என்ன பண்ணனும்?”

“அது நடக்கவே நடக்காது. எங்கப்பா யாரை பார்த்து எனக்கு கல்யாணம் முடிக்கறாரோ அவரு மட்டும்தான் என்னோட மனசுக்குள்ள வர முடியும்.” 

“உன்கிட்ட பேசவே முடியாது. நாளைக்கு பாக்கலாம் ” சொல்லிக் கொண்டே தன்னுடைய தோள் பையை இரு புறத்திலும் மாட்டிக் கொண்டு இறங்கி பை  சொன்னாள்  இனியா . அடுத்த நிறுத்தத்தில் இவளும் இறங்க வேண்டிய இடம் என்பதால் அவளும் கண்டக்டர் அருகில் நின்று கொண்டாள் .

 இவளின் மனம் கவர போகிறவன் மனதை எதிர்காலத்தில் வேறு ஒருத்தியிடம் தொலைத்து விட்டு தவித்துக் கொண்டிருப்பான். அப்போது அவள் அவனை அவனுக்காகவே அப்படியே ஏற்றுக் கொள்வாளா? 

ஜூஸை குடித்துக் கொண்டிருந்தவனை  கை பேசி அழைத்தது .

பாட்டிதான் அழைத்திருந்தார்.

“என்னடா கண்ணா சாப்டியா ?”

“இல்ல பாட்டி! இப்பதான்  ஜூஸ் குடிச்சேன். ஒரு மீட்டிங் இருக்கு. அத முடிச்சுட்டு சாப்பிடறேன்.”

“என்னப்பா! இப்பவே மணி ஆயிடுச்சு. சந்தேகப்பட்டுத்தான் கால் பண்ணேன்.”

“ஒன்னும் பிரச்சனை இல்லை . நான் சீக்கிரமா மீட்டிங் முடிச்சுட்டு சாப்பிடறேன். “

மனம் நிறைவாக இருந்தது. அன்னை செய்ய வேண்டியதை பாட்டி  செய்கிறாள். ஒருநாள் அதுவும் தொலைந்து போகும்போது இவன் என்ன செய்வான்? 

மலர் 2

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!