மலர் 10

மலர்-10

    சொன்ன படியே அன்று இரவு அக்காவிடம் பேசினான். தம்பியின் தோள் சாய்ந்து பேசியதில் மனது லேசானது. 

“ரொம்ப தேங்க்ஸ் டா.”

“ஆனா அக்கா! நீ முடியாதுன்னா முடியாதுன்னு சொல்ல கத்துக்கணும்.  இன்னும் கொஞ்சம் வாய திறந்து பேச கத்துக்கணும். இல்லனா எல்லாருமே நம்மள கேவலமாத்தான் நடத்துவாங்க.”

இனியாவும் இதைத்தான் சொல்லறா . ஏன் எல்லாருமே  அப்படித்தான் சொல்றீங்க.  மனசுக்கு புரியுது. ஆனா வாய் வர மாட்டேங்குது. நான் என்னடா பண்ணுவேன்.”

பெரு மூச்சு விட்டவன், ”வாக்கா பார்த்துக்கலாம். எல்லாமே நினச்ச உடனே நடக்க போகறது இல்ல.”

தம்பி சொல்லிக் கொடுத்த இதே பாடத்தை  அவளொரு நாள் செய்யும்போது அவன் தாங்கிக் கொள்வானா ? 

“பட்டுக் குட்டி வாடி சாப்பிடலாம் ,” தட்டுகளை கழுவிக் கொண்டே அக்கா தங்கையை உணவருந்த அழைத்தாள் . அக்காவை பின் தொடர்ந்த தம்பி,

“ஆ அக்கா! சக்தி அங்கிளுக்கு பணம் கிடைச்சிருச்சாம். அப்பா சொன்னாங்க.

“ஓ! எப்ப கிடைச்சுதாம்?”

“அதெல்லாம் நான் கேட்கல. அப்பா ஊருலேர்ந்து வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலான்னு விட்டுட்டேன்”

“அப்பாக்கு  ட்ரெயின்  கன்பார்ம் ஆகிடுச்சா?” பேசிக் கொண்டே இருவரும் உணவு உண்ண சென்றனர்.

“கயல் சாப்பிட வா அப்புறம் படி” மீண்டும் அழைத்தாள் .

“இதோக்கா. இந்த ஒரே ஒரு சம் மட்டும் முடிச்சுட்டு வரேன்.”

“சரி! நாங்க வெயிட் பண்ணறோம்.”

இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.

அதே வேளையில் இங்கு பார்ட்டியில் அழகு பதுமை, பளிங்குச் சிலையுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தான் ஆனந்த் . 

எந்த பெண்களையும் தூரத்தில் நிறுத்தியே பேசும் பழக்கம் உள்ளவன் இந்த பளிங்கு சிலையிடம் தோற்றது விதியின் விளையாட்டா?

முதலில் பவித்ரா தந்தை கிருஷ்ணா மூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பலருக்கு நன்றி சொன்னார். மக்களின் அயராத உழைப்பினால்தான் இத்தகைய பெரிய வெற்றி கிட்டியது என்றும் புகழாரம் சூட்டினார். பவித்ரா ப்ரொபைல் பற்றி அனைவருக்கும் ஏற்கனவே தெரியும் என்பதால் இது அவளுக்கான வெற்றி என்பதை அனைவருமே உணர்ந்திருந்தினர். அதற்கான அங்கீகாரமும் அவளுக்கு அந்த கூட்டத்தில் கிடைத்தது என்றே  சொல்லலாம். வயதிலும் சிறியவள் என்பதால் இள வட்டங்களின் பார்வையும் அவள் மீது இருந்தது. அவள் யாருக்கும் பிடி கொடுக்காமல் நழுவினாள் . 

அப்போதுதான் ரெஜிதாவும் அவள் தந்தையும் வந்தனர். ஷாம்பெய்ன் சிகப்பில் ரோஜாக்கள் பதித்த  நீண்ட பிராகில் ரோஜா கூட்டமாகவே வந்திறங்கினாள்.

இளசுகளின் கண்கள் வேறு பக்கம் திரும்புவதை பார்த்த ஆனந்தின் கண்களும் அவளை நோக்கியது. அதே சமயம் அவளும் அவனைத்தான் பார்த்தாள் . இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. 

ஏனோ முதல் முறையாக அவனுக்கு இனம் புரியா ஓர் உணர்வும் உடம்பில் பாய்ந்தது. இதுதான் கண்டதும் காதலா? அவனுக்கே அவனின் உணர்வு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் பல ஆச்சர்யங்களை அவள் தரத்தான் போகிறாள். அதற்கு நாமும் ஆனந்துடன் சேர்ந்தே தயாராவோம். (மக்களே எல்லாரும் சீக்கிரமா மனசால ரெடி ஆகிடுங்க. நாம எல்லாரையும் அவ எங்கையோ கூட்டிட்டு  போவா. எங்கன்னு மட்டும் கேட்டுடாதீங்க)

அவர் தன் உரையை முடித்ததும் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 

அப்போது ரெஜிதாவும் அவள் தந்தையும் இவனருகில் வந்தனர். பவித்ரா அப்போது இவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

இவனும் பவித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை அந்த ரோஜாப் பெண் மீது தான் இருந்தது. இன்னும் அவள் அவன் முன்னால் வரவில்லை. ஆனால் கண்ணால் சுற்ற வைத்து விட்டாள் .

“தேங்க்ஸ்! தேங்க்ஸ்! எ லாட் மிஸ்டர் ஆனந்த் . நாம் ஒரே ஒரு தடவ தான் பார்த்திருக்கோம். ஸ்டில் நான் கூப்பிட்ட உடனே நீங்க வந்ததுக்கு ஐ  ஆம் வெரி ஹாப்பி.” 

“ஹே! கூல்! எதுக்கு இவ்ளோ பெரிசா பேசிகிட்டு. ஜஸ்ட் வீ ஆர் பிரண்டஸ். இது உனக்கான பாராட்டு விழா. அதுல நான் இல்லாம எப்படி?”

“பிரண்டுன்னு சொல்லிடீங்க. நான் பிஸ்னஸ் இல்லாத நேரத்துல பேர் சொல்லி கூப்பிடலாமா ?”

“டா! ன்னே  சொல்லலாம்.”

“ஓகே டா! நீயும் என்ன டீனே சொல்லலாம்.”

தோள்களை உயர்த்தி கைகளை விரித்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.  

“நோ! அது மட்டும் வராது”

“வை ?”

“அது பொண்டாட்டிக்கான வார்த்தை. அது ஸ்பெஷல்”

“ஓ! இவ்ளோ பெரிய பிஸ்னஸ் ஆளு இன்னும் பழைய பட்டிக்காடா?

“அப்டின்னுசொல்ல முடியாது. பட் அப்டித்தான். “இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ரெஜினாவும் அவள் தந்தையும் பவித்ராவை பார்க்க வந்தார்கள்.

“காங்கிராட்ஸ்  மை  சைல்ட்” கை குலுக்கினார். “தேங்க்ஸ் அங்கிள்”

“ காட் ப்ளஸ் மை சைல்ட்” தலையை தொட்டு ஆசிர்வதித்தார். 

“சாரி அங்கிள் உங்கள பாக்கல”

“இட்ஸ் ஓகே! அப்புறம் ஹூ இஸ்  திஸ் யங்  மேன்?”

“ஹி இஸ் ஆனந்த் பரசுராம். ரவிச்சந்திரன்

அவர்கள் இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். ஏனோ பெரியவர் அவன் கைகளை விடவே இல்லை. மாறாக தன்னுடைய இன்னொரு கரத்தையும் கொண்டு அவன் கைகளை இறுக்கிக் கொண்டார். இப்போது அவன் கை அவரின் இரு கரங்களுக்குள் 

 

“ஆனந்தம் குரூப்ஸ் ?” புருவத்தை சுருக்கினார்.

“எஸ் அங்கிள்” என்று அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினாள் . பிறகு அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இல்லை இல்லை பவித்ரா வும் ரெஜிதாவின் தந்தை வர்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே ஆனந்தும் சேர்ந்துக் கொண்டான். ஆனால்  ரெஜிதாவின் பார்வை மட்டும் ஆனந்தின் மீதே இருந்தது. 

முதன் முறையாக ஒரு பெண்ணின் பார்வையை ரசித்தான். பெருமையாக நினைத்தான் ஆனந்த் .

வர்மா கான்ஸ்ட்ரக்க்ஷன்ஸ். அவர்கள் முதலில் ஆரம்பித்தது வெறும் சிமெண்ட் கம்பனியாகத்தான். பிறகு மீது மெதுவே அதனுடன் சேர்த்து  கட்டுமான தொழிலிலும் பங்கெடுக்க ஆரம்பித்து இன்று மிகப் பெரிய நிறுவனமாக நிற்கிறார்கள். அதற்குக்  காரணம் வர்மாவின் உழைப்புதான். 

“உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன். இந்த சின்ன வயசுல இவ்ளோ ஹார்ட் ஒர்க். என்னையே நான் பார்க்கற மாதிரி இருக்கு. உங்கப்பா தாத்தாவை எனக்கு தெரியாது. பட் அவங்க பட்ட கஷ்டம் இண்டஸ்ட்ரில அநேகமா எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும். ஓரளவு நல்ல போய்ட்டு இருந்த கம்பனிதான் பட் இவ்ளோ பெரிய சாம்ராஜ்யமா மாத்தி இருக்கறது நீங்கதான். இல்லையா ? “

“அப்படிலாம் இல்ல அங்கிள். இதுக்கு எல்லாத்துக்குமே காரணம் தாத்தாதான். அப்பாவும் போய்ட்டாரு. அந்த சமயத்துல எனக்கு என்ன பண்ணனும்னு கூட தெரியல. அப்போ முழுக்க முழுக்க தாத்தாதான் கூடவே இருந்து கைட்  பண்ணி இந்த பிசினசை  இவ்ளோ தூரம் பெரிசா மாத்த  சொல்லிக் கொடுத்தது”

பேசிக் கொண்டிருக்கும் போது பவித்ராவுக்கு கேக் கட்  செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. ஆளுயர கேக் வாழ்த்துக்களுடன் அவளுக்கு பிடித்த ரோஜா பூ வர்ணத்தில் கொண்டு வர பட்டது. கேக்  கட் செய்யும்  நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர்கள் ஜோடி ஜோடியாக நடனம் செய்ய  ஆரம்பித்தார்கள். அன்னையும் தந்தையும் நடனம் ஆடுவதை ரசிக்க ஆரம்பித்த பவித்ரா அப்படியே ஒதுங்கி கொண்டாள் . 

ரெஜிதாவின் ஆசைப்படி ஆனந்த் அவளுடன் ர்ந்து நடனம் ஆட ஆரம்பித்தான். அவள் ஒரு கை இவன் தோளில் பதிர்ந்தது. இவனின் ஒரு கை  அவளின் இடுப்பில் படர்ந்திருந்தது. 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!