மலர் 9

 மலர்-9
அவர் என்னதான் சமாதானமாக சொல்லி இருந்தாலும் அவள் எதிரில் தன்னை தாத்தா அவமான படுத்தியதாகவே எண்ணினான். அதே சமயம் அவனால் தாத்தாவிடம் கோபப்பட முடியவில்லை. தலையை பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான். அப்போது அவனுக்கு வந்த எண்ணம் கல்யாணமா இவளோடவா?
அதே தான் அங்கு அவளும் யோசித்தாள் .ஒருவேளை எனக்கு இவரோட கல்யாணம் ஆனா எப்படி இருக்கும்? எல்லாருக்கும் பாலும் பழமும் கிடைக்கும். எனக்கு பாலும் சங்கும் அப்பவே  கிடைச்சுடும். அவளின் பைத்தியக்கார எண்ணம் அவளை பார்த்தே சிரித்தது. அதுவே கன்னத்தின் எரிச்சலையும் தாண்டி முகத்திலும் காட்டியது.  
வழக்கம்போல பளிச்சென்ற புன்னகையுடன் அப்போது மலர்ந்த பூவாக வரும் அமிர்தாவை பார்த்ததும் பாட்டிக்கு மிக்க மகிழ்ச்சி.
“ஹலோ பாட்டி எப்பிடி இருக்கீங்க?” போர்வையை விலக்கியபடியே கேட்டாள் .
“வாடியம்மா இப்பதான் இந்த கிழவி நினைப்பு உனக்கு வந்ததா?”
“உங்கள மறக்க முடியுமா ? நேத்து கூட தாத்தாகிட்ட உங்கள பத்தி விசாரிச்சனே”
“ஓ! கிழவந்தான் உன்ன வர சொன்னதா ? ” பாயிண்டை பிடித்தார் பாட்டி .
அவரின் குத்தல் பேச்சை கண்டு கொள்ளாதவளைப் போல,
“மெதுவாக காலை கீழ வைங்க” சொல்லிக் கொண்டே நிதானமாக மிக நிதானமாக பூவைப்  போல தூக்கி காலைக் கீழே வைத்தாள் . அவருக்கு தேவையானதை செய்து விட்டாள் . அங்கே தாத்தா வரவும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு கிட்சன் எங்கே என்று கேட்டு தெரிந்து கொண்டாள் . பாட்டியை பற்றி நன்கு புரிந்து வைத்திருந்தாள் . அதனால் அவருக்குத் தேவையானதை இவள் தயார் செய்தாள் . கூடவே தாத்தாவுக்கும் காபி கலந்தாள் . 
இங்கே பாட்டி தாத்தாவை கொஞ்சினாள். “நீங்கதானே அவளை வர சொன்னீங்க?”
“ம்ம்! ரொம்ப தேங்க்ஸ் டா”
கதிரேசனின் வெள்ளை  பனியனை முகத்தருகில் இழுத்துச்  சொன்னாள் .
“என்னடி இது? இப்போ போய் டா சொல்லி கூப்புடற?” அது அவர்களின் அந்தரங்க சம்பாஷணை. 
“என்னோட புருஷன்”
“அதுக்கு வயசில்லையா?” பெரிய மீசையின் உள்ளே சிறு வெட்கம் வரத்தான் செய்தது.
“இதுக்கு வயசில்லை என்று கணவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். 
“பாட்டி  நீங்க  கொஞ்சினதை நான் பாக்கவே இல்ல” சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஆனந்த் . 
  மணக்க மணக்க வரும் சத்து கஞ்சியை ஆவலாக எடுத்து பருகினார் பாட்டி . தாத்தாவுக்கும் காபி பிடித்திருந்தது.  
இருந்த வெறுப்பினால் அமிர்தா வந்ததுமே அந்த இடத்திலிருந்து உடனே எழுந்து வெளியேறினான் ஆனந்த் . 
அவன் செல்லும் திசையை பார்த்தவள் கையில் ட்ரேயை வைத்துக் கொண்டு, “சாரி தாத்தா என்னாலதான” வருத்தத்தோடு சொன்னாள் . “அதெல்லாம் பார்த்துக்கலாம். எங்க பேரன்தானே எங்க போகப்போறான்?”
அமிர்தாவின் முகத்தை பார்த்த பாட்டியும் இது பேரனின்  கை வேலைதான் என்பதை புரிந்து கொண்டாள் . அவனுக்கு எங்கிருந்துதான் இந்த ஸ்டேட்டஸ் பைத்தியம் பிடித்ததோ மனதுக்குள் வருந்தியவர் அமிர்தா இல்லாத போது கணவரிடமும் கவலை பட்டுக் கொண்டார். 
அந்த இடத்தை காலி செய்தவன் வேகமாக அலுவலகம் கிளம்பினான். சென்று வருகிறேன் என்று  தாத்தாவிடம் சொல்லிவிட்டு பாட்டியையும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து விட்டே போனான். முதலில் சில நாட்களுக்கு அமிர்தாவிற்கு அவன் மீது கோபம், ஆத்திரம் இருக்கத்தான் செய்தது. பின்னர் வந்த நாட்களில்  அவன் பெரிய பெற்றோரிடம் நடந்து கொள்ளும் முறையில் அவன் மீது நன் மதிப்பே வந்தது. அவன் என்ன செய்தாலும் அவன் மீது கோபம் வராததற்கு காரணம் அதுதான் என்றே முதலில் நினைத்தாள் . இல்லை அது தான் காதல் என்பதை உணரும் காலத்தில் ஏதேதோ நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கும். நடக்கவிருக்கும் கசப்பான அனுபவங்களை பலரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 
அன்று மாலை அவன் ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்பதால் அலுவலகத்தில் இருந்து சற்று சீக்கிரமாகவே கிளம்பி இருந்தான். பவித்ரா வின் பார்ட்டிதான் அது. அந்த வருடம் அவர்களின் லாபம் பன் மடங்காக பெருகியதற்கான கொண்டாட்டம்தான் அது. அதில் அவர்களுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றும் முக்கிய நண்பர்களுடன் புதிதாக கை  கோர்த்திருப்பவர்களுக்கும் அழைப்பு வந்திருந்தது. அதில் ஆனந்திற்கு பவித்ரா நண்பன் என்ற முறையில் தனியாக அழைத்திருந்தாள். பொதுவாகவே ஆனந்திற்கு இது போல பார்ட்டி என்றாலே அலர்ஜி. அங்கு வரும் பெண்கள் ஏனோ ஆண்களை முன்பு பார்த்தே இராதவர்கள் போல இவன் மீது விழுவார்கள். அதனாலேயே பெரும்பாலும் இவன் தவிர்த்து விடுவான். ஆனால் இது தவிர்க்க முடியாதது.  வேகமாக கிளம்பினான். வெள்ளை நிற ஷர்ட்டும் அடர் நீல பேண்டும் அதற்கேற்ற பிளேசரும் ‘அப்பா! என்ன ஆளுடா நீ’ என்று பார்ப்பவர்களை நிச்சயம் வசீகரிக்கும். அதற்கு அமிர்தா மட்டும் விதி விலக்கா ? மாடியில் இருந்து கம்பிரமாக இறங்கி வருபவனை பார்த்து ஒரே ஒரு நொடியா நிமிடமா அவள் மயங்கித்தான் போனாள் . அவளின் பார்வையை ஒர பார்வை பார்த்து விட்டு பாட்டியை பார்க்கப்  போனான்.  இவளும் இறங்கி வீட்டிற்கு புறப்பட்டாள். 
இவள் சாலையில் சென்று கொண்டிருப்பதை பார்த்தவன் வேண்டுமென்றே அங்கே தேங்கி இருந்த தண்ணீரை அடித்து விட்டுப்  போனான். மூஞ்சியில் அடித்த தண்ணீரை கையில் இருந்த தண்ணீறில் கழுவியவளுக்கு அவனை பார்த்ததற்காகத்தான் இந்த தண்டனை என்பது நன்றாகவே புரிந்தது. காரில் செல்பவனோ இதழோரம் வந்த புன்னகையை அனுபவித்தபடி சென்று கொண்டிருந்தான். 
அவனுக்கு ஏனோ மனதிற்குள் அப்படி ஒரு பழி வாங்கிய சந்தோஷம். பேருந்தில் பயணித்தவளுக்கு மனம் முழுவதும் பாரம் ஏறிக் கொண்டது. தன்னால் ஏன் அவர்களிடம் முடியாது என்று சொல்ல முடியவில்லை. தான் அத்தனை பலவீனமானவளா? அவளுக்கு விடை தெரியவில்லை. 
எது எப்படி இருந்தாலும் ஆனந்த்  அவனுக்கே தெரியாமல் இவளுக்கு பலத்தைத்தான் கூட்டிக் கொண்டிருந்தான். வீட்டிற்கு வந்து குளித்து பளிச்சென்று இருந்த மகளை பார்த்து கையாலேயே சுற்றி போட்டு நெட்டு  உடைத்தாள் அன்னை. 
“ப்ச்! நீ வேற ஏம்மா ? இருக்கற லட்சணத்துக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்” அலுத்துக் கொண்டாள் . 
பெண்ணின் மனது சரியாக இல்லை என்பதை புரிந்து கொண்டாள்  அன்னை. 
அருகில் அமர்ந்து மகளை மடியில் சாய்த்துக் கொண்டாள் . மெதுவாக தலை  கோதினாள். ஏனோ அன்னையிடம் அனைத்தையும் சொல்ல வேணும்போல இருந்தது. இருப்பினும் அன்னையை கலவர படுத்த விரும்பாதவள் வாயால் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால்  கண்களில் கண்ணீர் மட்டும் வந்தது. அதை விழுங்கியவள் அப்படியே உறங்கி போனாள் .
முரளி வந்ததும், “டேய் அக்கா ஏதோ வருத்தத்துல இருக்கா . எங்ககிட்ட சொல்ல மாட்டேங்கறா நீ என்னனு கேளுடா” கையில் காபியை வாங்கி உறிஞ்சியவன் “இல்லமா! ஏதாவது பிரச்சனைனா உங்க கிட்ட சொன்ன நீங்க வருத்தப்படுவீங்களேன்னு இருக்கும். ஆனா மனசுல இருக்கறத வீட்டுல யாருகிட்டயாவது அக்கா சொல்லணும்.  நான் பேசறேன்.”
அதே சமயம் ஆனந்த் பவித்ரா வீட்டில் பார்ட்டியில் இருந்தான் அங்கே யாரும் எதிர் பார்க்காத வண்ணம்..
என்னதான் சமாதானமாக சொல்லி இருந்தாலும் அவள் எதிரில் தன்னை தாத்தா அவமான படுத்தியதாகவே எண்ணினான். அதே சமயம் அவனால் தாத்தாவிடம் கோபப்பட முடியவில்லை. தலையை பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான். அப்போது அவனுக்கு வந்த எண்ணம் கல்யாணமா இவளோடவா?

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!