மலர் -17

மலர் -17

“என்னங்க  நம்ம சக்தி சாரக்  காணும் ? “

“தெரியலையே? நீ சொல்லும்போதுதான் எனக்கே தோணுது? வீட்டுக்கு வரச் சொன்னேன். அவன் ஏன் வரலன்னு தெரியல”

“சரி காலைல அவங்களுக்கு கால் பண்ணிப் பாருங்க”

அன்று பிடிவாதமாக அமிர்தாவும் இனியாவும் சேர்ந்து  பெற்றோரின்  கட்டிலை அலங்காரமாக்கி அன்னையையும்  அலங்காரம் செய்து  பால் சொம்புடன் அனுப்பினாள்  அமிர்தா. 

“உனக்கு கொஞ்சமாவது விவஸ்த இருக்கா ? நீங்கல்லாம் சந்தோசமா இருக்கணும். நாங்க பேரன் பேத்தியை  கொஞ்சனும். எங்களுக்கு இந்த வயசுல இதெல்லாம் அசிங்கமா ?”

“ப்ச் அம்மா! புரிஞ்சுக்கோம்மா. கணவன் மனைவி உறவுக்கு வயசு கிடையாது. அதே மாதிரி செக்ஸ்? வயசாகிட்டா  தப்பா ? உன் புருசன். திங்கள் ஆனா ஓடற  ஓட்டம் ஞாயிறும் முடியறதில்லை. எங்களுக்காவே ஓடிட்டிங்க. உங்களுக்காக, உங்க கணவனுக்காக கொஞ்சம். இதெல்லாம் ஏதோ சின்ன விஷயம் போல தோணும். ஆனா இதுவும் தேவைதான். மகளே அன்னையாக பேசும்போது? அவள் அன்னையால் எதுவும்  சொல்ல முடியவில்லை. அதே சமயம் யாரும் இல்லாமல் எந்த அலங்காரமும் இல்லாமல் அனாதையாக வெறும் தரையில் நடந்த கூடல் நினைவுக்கு வரவும்,  தன்னை அறியாமல் தேம்பி தேம்பி அழுதாள்.

“ரொம்ப தேங்க்ஸ் அமிர்தா” தேம்பலின் நடுவே சொன்ன அன்னையின் முகத்தை துடைத்து அனுப்பினாள்  மகள். அவரின் பல வருடத்து ஏக்கத்தை அவர் சொல்ல வில்லை என்றாலும் அறியாதவளா மகள் ? 

அன்றைய தினம் இனியாவும் இவர்கள் வீட்டில் தான் தங்கினாள் .

“என்ன இது சில்லியா இருக்குன்னு நினச்சேன் அமிர்தா. உங்க அம்மா மனசுக்குள்ள இவ்ளோ ஏக்கம் இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்ச ? நீதாண்டி எல்லாத்தையுமே வேற ஆங்கிள்ல  பாக்கற.  சிம்பிளி யூ  ஆர் கிரேட்”

“கிரேட் லாம் இல்லடி. எங்க அம்மாவும் அப்பாவும் கல்யாணம் பண்ண போது யாருமே கூட இல்ல. என்னதான் பிரண்ட்ஸ் இருந்தாலும் பொண்ணோட மனசு சில முக்கியமான தருணங்கள்ல அம்மாவைதான் தேடும். அப்போ யாருமே கூட இல்ல. என்னதான் இருந்தாலும் தான் ஒரு அனாதைன்னு ஒரு ஏக்கம் எங்கம்மா மனசுல உண்டு. அதுக்கு ஏத்த மாதிரி எங்க அப்பாவும் வேல வேலன்னே சுத்திகிட்டு இருந்தாரு. சேல்ஸ் ஜாப் வேற. அதனால பாதி நேரம் எங்கப்பா எங்கம்மா  கூட இருந்ததே இல்லை . பசங்க என்னதான் துணி வாங்கி குடுத்தாலும் மத்த  விஷயங்கள் பண்ணாலும் ஏதோ சில விஷயங்கள் மட்டும்தானே அவங்களுக்கு புடிச்சதா இருக்கும்”

“ஆமாண்டி! பேரெண்ட்ஸ்  நமக்காக எல்லாத்தையுமே புடிச்சத மாத்திக்கறாங்க. ஆனா அவங்களுக்கு என்ன புடிக்குன்னு நமக்கு தெரியறதே இல்ல”. பெற்றவர்களுக்கு முதலிரவை ஏற்பாடு செய்தவள் அதுதான் அவரால் இருவரும் ஒன்றாக இருக்கும் கடைசி இரவு என்பது தெரியாமல் தங்கையை கட்டிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள் .

மலர்-19

மறு நாள் காலை  வழக்கம் போல சூரியன் அமிர்தா, இனியா கிளம்பியதும் தான் வந்தார்.

இன்னிக்கும் நம்ம ஆளு லேட்டுத்தான் போல  இருவரும் உணவு டப்பாக்களை அமிர்தாவின் அன்னையிடம் இருந்து வாங்கி கொண்டு கிளம்பினர். இனியா இருப்பதால் இன்று முரளி சற்று லேட்டாக எழுந்திருக்கலாம். கட்டிலில் உறங்கும் பூந்தளிருக்கு வழக்கம்போல முத்தங்களை தந்து  விட்டு  கிளம்பினாள். அப்படியே இன்று முரளிக்கும் சேர்த்தே முத்தங்கள் கிடைத்தன. பருவ காலத்தில் அக்காவின் தீண்டல்களும் முத்தங்களும் ஒரு மாதிரி இருந்தாலும் அதைப் பற்றிய புரிதல் வந்த பிறகு அதை ரசிக்கவே ஆரம்பித்தான் முரளி.

 கணேசன் காலையில்  எழுந்ததும் சக்திக்கு அழைப்பு விடுத்தார் கணேசன். போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது. மீண்டும் மீண்டும் முற்சித்தார். ஒன்றும் பயனில்லை. மாலையில் சக்தி வீட்டுக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் சக்தி யாருக்கும் தெரியாமல் வீட்டை காலி செய்திருந்தார்.

 ‘ஒடம்பு முடியாத அம்மாவை வச்சுக்கிட்டு அவன் எங்க போய் இருப்பான்?’ யோசனையாக இருந்தது. வேலை செய்யும் மேனேஜருக்கு அழைத்தால், அவர் சொன்ன விஷயம் சக்தி எப்போதோ ராஜினாமா செய்து விட்டான் என்பதே. அடுத்து தெரிந்தவர்களிடம் கேட்ட போது  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் அளித்தனர்.  இவருக்கு வயிற்றில் புளியை கரைத்தது . 

அன்றைய தினம்  அவர் முகமே காலை இழந்தது. சக்தியை பற்றியே நினைத்து நினைத்து அன்றைய இரவே தூக்கத்தில் இறந்திருந்தார் கணேசன். யாருக்கும் எதையும் நம்ப முடியவில்லை. 

 முதல் நாள் தான் தொட்டு தடவி கேக் ஊட்டிய கணவன் இன்று பிணமாக? அதிர்ச்சியில் இருந்தனர் அனைவரும். செய்தி கேட்டதும் அருணும் இனியாவும் ஓடி வந்து விட்டனர். பிரம்மை பிடித்தது போலத்தான் அனைவருமே வீட்டில் இருந்தனர். யாருக்கும் அழ வேண்டும் என்பது கூட தோன்றவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்த அமிர்தாவின் அன்னை சட்டென எழுந்து அமிர்தா,  “இன்னிக்கு என்ன லீவா ? ஏன்டா முரளி, கயல் என்ன இன்னிக்கு யாரும் கிளம்பாம இருக்கீங்க? உங்கப்பா என்ன கடைக்கு போனவரை இன்னும் ஆளைக் காணும்?”

அன்னையின் செயல் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால்  அருணுக்கு புரிந்து விட்டது. அவரை அழைத்து அமைதியாக புரிய வைத்தான். 

முரளியிடம், “ உங்க அம்மா மனசுல இந்த அதிர்ச்சியை தாங்க முடியல. அவங்க மனசுல இருக்கறத வெளில கொட்டணும்” முரளிக்கு புரிய வைத்தான். 

 “இங்க பாரு முரளி, இப்போ நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். இனிமே நீதான் இந்த வீட்டு  ஆம்பிள. தைரியமா இரு” சொல்லி விட்டு அடுத்தடுத்து நடக்க வேண்டியவைகளை பார்க்க தொடங்கினான்.

 ஆனந்திற்கு அன்று நிச்சயம் என்பதால் அவர்களுக்கு இவள் எதுவும் சொல்லவில்லை. ஏனோ கணேசனின் இறப்புக்கு இவர்களுக்கு  தெரியாதவர்கள் சிலரும் வந்திருந்தனர். மாலை போட்டு மரியாதை செய்து விட்டு போனார்கள். 

 கணவனின் பிணத்தை எடுக்கும் போதும் கூட மனைவியிடம் எந்த சலனமும் இல்லை. அதை பார்த்த அமிர்தாவால் தாங்க முடியவில்லை. ஆனால்  முரளிக்கு புரிந்தது. அன்னையை உலுக்கி உலுக்கி உண்மையை விளங்க வைத்தான்.

 அவள் “ஓ” வென்று வெடித்து அழுத சத்தம் அவரின் மனதை ஆற்றியதோ? அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்தடுத்து வரப் போகும் பூகம்பங்களை அவரால் எப்படி தாங்க முடியும்?  தந்தையின் நல்ல குணம் தான்  காரணம் யார் யாரோ  வந்து தந்தைக்கு இறுதி மரியாதை செய்யக் காரணம் என்றே வீட்டினர் நினைத்தனர். ஆனால்  பிறகுதான் தெரிந்தது, அவர் சக்திக்காகப் பலரிடம் கடன் வாங்கி இருந்தார் என்று.

 அன்று யாரும் எதுவும் கேட்கவில்லை என்றாலும் மறுநாள் மாலையிலிருந்து ஒருத்தர் பின் ஒருவராக நான் இவருக்கு முப்பதாயிரம் கொடுத்தேன், நாற்பது  ஐம்பது என்று வந்து நின்றார்கள். கணேசனின் அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் பாவம் பார்த்துச் சில ஆயிரங்களை கைச்செலவுக்கென்று கொடுத்து விட்டுப் போனார்கள்.  

 அது வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இறுதி காரியங்களுக்கு அருண்தான் அனைத்து செலவும் செய்தான். அதை அவன் திருப்பிக் கேட்கமாட்டான்தான். இருப்பினும் நாம் கொடுத்து விட வேண்டும் என்று முரளியும் அமிர்தாவும் முடிவெடுத்தனர். வந்தவர்களுக்குக் காபி சாப்பாடு எல்லாம் இனியா பார்த்துக் கொண்டாள். அதைத் தவிரவும் ஒரு சிலருக்கு கடனுக்கும் காசு கொடுத்தாள். அவளிடம் இன்னும் என்ன கேட்க முடியும்?

 அக்கா என்கிட்டையும் எதுவும் காசில்லையே! இருந்தா குடுத்துருப்பேன். ஆனா இது இருக்கே? காதில் இருந்த கம்மலையும் செயினையும் அவிழ்த்துக் கொடுத்தாள் கயல். அதே போல அமிர்தாவும் அவள் அன்னையும் கூட அனைத்தையும் கழட்டி விட்டார்கள்தான். ஆனால்  அதுவும் போதவில்லை.  

 இரண்டாவது நாள் காலையிலேயே ரவுடி போல நான்கு பேர் வந்தனர் சில பத்திரங்களை காட்டி இது எல்லாம் உங்க அப்பா சுரிட்டி போட்டது. அவன் சக்தி ஊர விட்டு ஓடிட்டான். உங்கப்பாதான் இதெல்லாம் குடுக்கணும்.”

“எங்கப்பாவே இல்ல. அவரு எப்படி கொடுப்பாரு?” 

“அதான் நீங்க இருக்கீங்களே நீங்க குடுங்க.”

எத்தனை என்று பார்த்த முரளிக்கு மயக்கம் தான் வந்தது. நான்கு லட்சங்கள். எங்கே போவார்கள்? என்ன செய்ய முடியும்? 

“சாரி சார்! எங்களால இப்போ குடுக்க முடியாது. எங்களுக்கு கொஞ்சம் டைம்  குடுங்க. எப்படியாவது புரட்டி குடுக்கறோம்.”

அவர்கள் நினைத்திருந்தால் நிச்சயமாக ஒத்துக்  கொள்ள முடியும் ஆனால்  வீட்டில் இருந்த கண்ணுக்கு அழகான பெண்கள்**! 

“சரி! பணமா குடுக்க வேணாம். வேற மாதிரி” என்று ஒருவன் கீழ் உதட்டை தடவினான் கயலை பார்த்தான். 

 “என்னடா குடுக்க மாட்டோன்னா சொல்லறோம்? தடவை தானே கேட்கறோம். முதல்ல வீட்டை விட்டு வெளில போங்க இல்லனா போலீசை கூப்புடுவேன்.”

அதற்குள் உள் அறைக்கு ஓடிய கயல் தந்தையின் போனில் இருந்து போலீசுக்கு அழைத்தாள் . பின்னோடே வந்தவன் ஒருவன் “போலீசுக்கா கூப்புடற” என்று பளீரென அறையும் முன்  அங்கே ஆனந்த் நின்றிருந்தான். 

மலர்-20

மூன்று பெண்களையும் தன் பின்னே  நிறுத்தியவன், அந்த மலை மாடு போன்று இருந்தவனை மூக்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். 

“போடா போய் உங்க ஓனர  வந்து பாக்க சொல்லு. ஆனந்தம் கம்பெனி ஓனர் ஆனந்த்”

 அவர்களால் அடி வாங்கி ஓரத்தில் மயங்கி இருந்த முரளியை ஓடிச் சென்று அமிர்தா எழுப்பி ரத்தத்தை துடைத்து விட்டாள் . கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்தான் ஆனந்த் . 

“வாட் இஸ் திஸ் அமிர்தா ?” எப்போதும் குரல் எழுப்பாமல் பேசும் ஆனந்தன்  இன்று சற்று குரல் உயர்த்தினான். அவன் கோபத்தில் கத்தினாலும் இதோ இந்தத் தருணம் எப்போது மூன்று பெண்களையும் தன் பின்னே நிறுத்திப் பாதுகாப்பு கொடுத்தானோ அப்போதே அவன் அமிர்தாவின் மூளையை, இதயத்தை ஆட்சி செய்யத் தொடங்கினான். அவளுக்கு மட்டும் இல்லை. கயலுக்கும் அவனே சூப்பர் ஹீரோ ஆனான். ஏன் அமிர்தாவின் அன்னைக்கும்தான்.

 கணவன் தங்களை பற்றிக் கவலை இல்லாமல் யாருக்கோ பண உதவி செய்கிறேன் என்று இப்படி நட்டாத்தில் விட்டு விட்டாரே. அதிலும் வீட்டில் இரண்டு வயதுக்கு

வந்த பெண்களை. ஏன் அந்தப் பொறுக்கிகள் தன்னை பார்த்த பார்வை? இத்தனை  வயதுக்கு பின்னும் கற்பு பறி போனது போன்ற அருவருப்பான உணர்வு.

மெதுவாக நடந்ததை  சொன்னாள் அமிர்தா.

 “ஏண்டி! என்னை  கூப்பிட வேண்டியது தானே? நான் என்ன அவ்ளோ மனிதாபிமானம்  கூட இல்லாதவனா ? சரி தாத்தா? அவருகிட்ட கேட்டுருக்கலாமே ?”

பதில் சொல்ல முடியாமல் தலை  குனிந்திருந்தாள்.

“தம்பி நீங்க எப்படி இங்க கரெக்டான நேரத்துக்கு வந்தீங்க?” அமிர்தாவின் அன்னை கேட்டார். 

நடந்ததைச் சொன்னான். 

“அது.. ஏனோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா . பாட்டி பேரனிடம் விடி காலையிலேயே சொன்னார்.

“சாரி பாட்டி ! என்னாலதான் எல்லாமே”

“அதில்ல செல்லம்! ஏதோ வேற ஏதோ மனச பிரட்டுது. நமக்கு ரொம்ப நெருங்கினவங்களுக்கு ஏதோ கஷ்டம். இப்போதைக்கு நீ இல்லனா அமிர்தாதான். நம்ம வீட்டு  பிரச்சனை அது சரியாகிடும். ஆனா அவளுக்கு போன் போட்டா எடுக்கல. என்னை கோச்சுக்காம ஒரே  ஒரு தடவ அவளை பார்த்து கூட்டிக்கிட்டு வரியா? அவளை நேர்ல பார்த்தா எனக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும்.”

அவன் முறைத்த முறைப்பில், 

“உன்னால முடிஞ்சா போ. இல்லனா பரவால்ல” 

பாட்டியை சங்கடப்படுத்த விரும்பாமல் இதோ வந்து நிற்கிறான்.

 

முள் மலரும்

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!