மலர் -18

மலர் -18 

 

காரில் அவன் அங்கு வரும்போதே வீட்டிற்கு வெளியில் நிற்கும் ஆட்களை பார்த்தே ஏதோ சரி இல்லை என்று வேகமாக வந்தான். இல்லை எனில் வீட்டுப் பெண்களையும் அவர்கள் அடித்து இருப்பார்கள். அல்லது வேறு விதமாக ஏதாவது செய்திருப்பார்கள்.

“அம்மா எதுக்கும் பயப்படாதீங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்”. அமிர்தா அம்மாவின் கையை பிடித்து ஆறுதல் சொன்னான்.

“கயல் அண்ணாவை பார்த்துக்கோ. குடிக்க ஏதாவது குடு. அமிர்தா வெளில வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”

காரில் அவள் அமர்ந்ததும் வண்டியை  அவன் ஸ்டார்ட் செய்தாலும்,

இருவரும் எதுவும் பேசவில்லை. அவரவர் அவர்களின் மன ஓட்டத்தில் இருந்தனர்  அவர்களை நாம் விட்டு  விடுவோம். அதற்குள்  நாம் ஆனந்த் நிச்சயத்தில் என்ன நடந்தது என்று சுருக்கமாக பார்த்து விடலாம்.

ரெஜிதாவே ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்பவள் தானே? அவளது நிச்சயத்திற்கு சொல்லவா வேண்டும்?

அவளே ஆனந்திற்கு ஆடை உட்பட அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்தாள் . சிறப்பாக இருந்தது என்று சொல்வதை விட அனைத்து ஏற்பாடுமே பிரமாண்டமாக இருந்தது என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அவள் எது செய்தாலும் அதில் ஆனந்துக்கு திருப்தியே.

 சில விஷயங்களைத் தவிர. அதில் முக்கியமானது  உடை ,ஆண் நண்பர்கள். நல்ல குடும்பத்து பெண். சொன்னால் புரிந்து கொள்வாள் அல்லது தன்  காதலின் மூலமாவது அவளை மாற்றி விடலாம் என்றுதான் நினைத்தான். இருப்பினும் மனதின் ஓரத்தில் ஒரு பயம் இருந்து கொண்டதான் இருந்தது. அவன் அன்னையால் அவன் பட்ட துன்பம் போதாதா ? இதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தவன் நிச்சயத்திற்கு முதல் நாள்  அவளிடம் அழுத்தமாகவே கூறி விட்டான்.    முதலில் எல்லாம் அவன் சொன்ன போது நெளிந்து குழைந்து ஏதேதோ காரணங்கள் சொன்னாள் . 

முகத்திற்கு அருகில் வந்து ஒட்டி உரசி சட்டை பட்டன் திருகி அவன் உதடுகள் அவள் முகத்தில் படும்படி செய்து அவனை மயங்கினால் எந்த ஆண் மகனும் தடுமாறாத தானே செய்வான்.தடுமாறட்டும். தாத்தாதான் இருக்கிறாரே தாங்கிப் பிடிக்க.

“இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜம், நீ இன்னும் பழைய காலத்து ஆளாவே இருக்க, அவன் என் கூட வேல செய்யறவன் நாங்க மெட்ரியல்ஸ் சேர்ந்து வாங்கணும். நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ்” இப்படி இருந்த சாக்குகள். 

“நீ என்ன சந்தேகப்படறியா ?” அந்த வார்த்தையில் அடிபட்டவன் அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்டான். இந்த மனத்தாங்கலுடன் தான் அவர்களின் நிச்சயமே நடந்தது. தன் மன  வலிகளைப் பெரியவர்களிடம் சொல்ல அவன் விரும்பவில்லை. நிச்சயம் ஆகட்டும். திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன். அவளிடம் தன்  உண்மையான காதல் மூலம் மற்றவர்களிடமிருந்து மீட்டு  கொண்டு வந்து விடலாம் என்றே நம்பினான். அவன் காதல் மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. எத்தனையோ சூடு கண்டவன் யாரிடமும் ஏமாந்து விடக் கூடாது என்றே  வாழ்க்கையை கழித்தவன், இப்போது விதியின் வசத்தால் ரெஜிதாவிடமிருந்து தன்னை பிரித்து எடுக்க முடியாமல் தவிக்கிறான். 

 நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாகச் செய்யப்பட்டது. வர்மா பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தார். எல்லாமே கேட்டுக் கேட்டுச் செய்தார். ரெஜிதாவும் பெரியவர்களிடம் சிரித்து சிரித்துப் பேசினாள். ஆனால்  அதில் இருந்த போலித்தனத்தை அவர்கள் கண்டு கொண்டார்கள். மாப்பிள்ளையும் பெண்ணும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். கேக் கட் செய்தார்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஏனோ இதில் பெரியவர்கள் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு.

“சுந்தரி! நாம வீட்டுக்குப் போலாமா ?”

“ஆமாங்க! இந்தச் சத்தம் எனக்கும் ஒரே தல வலியா  இருக்கு” உணவு கூட உண்ணாமல்  வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனந்துடன்  சண்டை இட்டாலும் அவனின் ஆண்மையான  அழகு ரெஜிதாவையும் அவள் தோழிகளையும் படுத்தத்தான் செய்தது. நிச்சயத்தன்று ஆனந்தனை எப்படியாவது சமாதானம் செய்து தன்னிடம் தேன் குடித்த வண்டாக, தன்  அழகினால்  அடிமையாக்க வேண்டும் என்று நினைத்தாள் ரெஜிதா. திருமணம்வரை அவளுக்குப் பொறுமை இல்லை. அதற்கு அவள் தோழிகளின் கிண்டல் விடவில்லை.

“ஏய்! உன்னால முடியலைன்னா சொல்லுடி உன்னோட கல்யாணம் வரைக்கும் நான் அவனைப் பார்த்துக்கறேன்” என்றாள் ஒருத்தி.

நீதான் பேரழகியாச்சே இன்னுமா அவனை **பண்ணல என்றாள் வேறொருவள். இன்னும் ஏதேதோ கமெண்டுகள். அதனால் ரெஜிதா  எடுத்த முடிவு இருவருக்கும் நிச்சயத்தன்று முதலிரவு. எப்படியாவது நெளிந்து குழைந்து அவனை  அடைய வேண்டும் என்ற வெறி அவளிடம் இருந்தது. அதையே அவள் செய்தும் காட்டினாள். 

அறையின் அலங்காரத்தைப் பார்த்தவன் பிரமித்துதான் போனான்.

“இதுக்கே இவ்ளோ க்ராண்டா ரெடி பண்ணி இருக்கியே அப்போ நம்ம பர்ஸ்ட் நைட்டுக்கு ?”

“அதுக்கு நாம  பாரின் போகலாம் இன்னும் க்ராண்டா! எனக்கு எவ்ளோ ட்ரீம்ஸ் இருக்கு தெரியுமா?” கண்கள் மின்ன சொன்னாள்.

“அதேதான் ரெஜிதா . நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் இதெல்லாம். எனக்கும் எவ்ளோ ட்ரீம்ஸ் இருக்கு தெரியுமா ?” அவள் கழுத்தை கட்டிக் கொண்டு நெற்றியில் முட்டி மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சினான்.

அவனுக்குத் தானே முதல் முறை. அவளுக்கு அவனுடன் முதல் தடவை என்று சொல்லிக் கொள்ளலாம். மனம் சிறிது சமாதானம் அடையும்.

“நாம கல்யாணம்தானேடா பன்னிக்க போறோம். இதுல என்ன ப்ராப்லம்?” அவனை நெருங்கி நின்று அவனின் கைகளை தன் மேல் பகுதியில் வைத்துக் கொண்டாள்

“தெரியல ரெஜி. எனக்கு கம்பர்டபிலா இல்ல. ப்ளீஸ்”

தன்னுடைய கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டவள் கைகளிலிருந்து முயன்று தன் கைகளை பிரித்து எடுத்துக் கொண்டான்.

“அப்போ நீ என்ன ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதவனா ?”

அவனின் செயலில் அவளுக்கு அத்தனை கோபம் . ஆத்திரம்.

 

அவன் மீது படர்ந்திருந்தவள் நகர்ந்து நின்று கை  கட்டிக் கொண்டாள் . 

“இதை நான் கேக்கல. என்னோட பிரண்ட்ஸ் கேட்கறாங்க” 

“அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அதோட இந்த மாதிரி அசிங்கமா பேசறவங்களோட ப்ரண்ட்ஷிப்பை கட் பன்னு’

“அதானே ! இன்னும் இந்த வார்த்தை வரலைன்னு பார்த்தேன். ஏதோ பணக்காரனா  இருக்கானே பாக்க அழகா இருக்கியேனு நினச்சேன். ஆனா இன்னும் உன்னோட சீப்பான புத்திலேர்ந்து நீ இன்னும் வெளில வரவே இல்ல. நீ உன்னோட பாட்டி,தாத்தா. அவங்கள பார்த்தாலே எரிச்சல் வருது. அவங்க எங்கேஜ்மெண்ட்டுக்கு புடவை எடுத்துக் கொடுக்கறாங்க. நான் என்ன அவங்கள மாதிரி பட்டிக் காடா? நீ மட்டும் என்ன? நீ அவன்கிட்ட பேசாத இவன்கிட்ட பேசாத. உங்கம்மா  யாரோடையோ ஓடி போயிட்டான்னா எல்லாரும் அப்பிடியா ? 

அடுத்த நொடி அவள் கழுத்தை பிடித்திருந்தான் ஆனந்த் . அசால்ட்டாக அவன் கையை தட்டி விட்டவள் 

 உன்னால **** பண்ண முடியல்லன்னா  அதுக்கு எனக்கு வேற ஆள் இருக்கு. முகத்தை திருப்பி நின்றுக் கொண்டாள் . ஏனோ அவனால் அவளை ஒன்னும் செய்ய முடியவில்லை. அவள் பேசுவதை அவனால் அதற்கு மேல் நின்று கேட்க முடியவில்லை. உடனே கிளம்பி விட்டான். அதுவும் நல்லதுக்குத்தான் . 

வரும் வழி எல்லாம்’ இந்தத் திருமணம் சரியா வருமா? மனைவியிடம் அன்னையைத் தேடலாம். அதுவே அவன் அன்னைப் போலவே மனைவி அமைந்து விட்டால்? வேண்டாம் இது இனி சரிப் பட்டு வராது. அவள் தந்தையிடம் கூறி விட வேண்டியதுதான். என்னவென்று கூறுவது? உங்கள் மகள் என்னைக் கட்டிலுக்கு அழைத்தாள் என்னால் முடியவில்லை என்றா சொல்ல முடியும்? எல்லாமே பேசி விட்டுத் தானே திருமணம் என்ற முடிவுக்கு வந்தோம்? அவள் தந்தை கேட்டால் என்ன பதில் சொல்வது? அவள் சொன்ன அசிங்கமான பேச்சை எப்படி அவரிடம் நான் கூற முடியும்? இதில் எங்கே நான் தவறு செய்தேன்?

தாத்தா சொன்னது சரிதான். இந்த உறவுக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர் போட்டிருக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் அவர் சொல்வதைக் கேட்பவன் திருமணம் என்றவுடன் சுயநலமியாக நடந்துக் கொண்டதற்கு தண்டனைதான் இது. இப்படிப் பட்டவள் வீட்டுப் பெரியவர்களை எப்படி பார்த்துக் கொள்வாள்? யோசிக்கவே இல்லையே. பெரியவர்களைப் பற்றி யோசித்தும் தானாகவே அமிர்தாவின் நினைவும் வந்து வந்தது. பாட்டியைப் பூப்போலப் பார்த்துக் கொண்டதும், ராஜகுமாரா என்று தாத்தாவைக் கொஞ்சுவதும், ச! தலையில் அடித்துக் கொள்ளப் போனவன் ட்ரைவர் 

எதிரில் எதுவும் செய்ய முடியாமல் கைகளை இறுக்கி மூடிக் கொண்டன். 

 ட்ரைவர்  இருந்ததால் வீடு வந்து சேர்ந்தான். அமைதியாக பாட்டியின் அருகில் வந்து படுத்துக் கொண்டான். அவன் அன்னையின் அரவணைப்பை பாட்டியிடம் தேடினான். சந்தோசமாக இருப்பான் பேரன் என்று எண்ணி பாட்டியும் மகிழ்ச்சியுடன் உறங்கினாள் . மறு நாள் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருந்தான். தாத்தாவும் பாட்டியும் அதிர்ச்சியாக செய்திகளை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.  

 அடுத்த சிறிது நேரத்தில் இவர்கள் வீட்டிற்கும் போலீஸ் வந்தது. நேற்றைய இரவு எங்கேஜ்மெண்ட் பார்ட்டியில் ட்ரக்ஸ்  பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஆனந்திற்கும்  பங்கு இருக்கலாம் என்று அலுவலகம் வீடு என்று எந்த இடமும் விடாமல் தேடினர். எந்த ஆதாரமும் இல்லாததால் அழைக்கும்போது வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்று விட்டார்கள். அதுவும் அவனுக்கு கமிஷனர் அளவில் தெரியும் என்பதால். 

 பெரியவர்கள் இடிந்து போய் விட்டனர். இவனுக்கே யாராவது ஆறுதல் சொல்வார்களா என்ற நிலையில் அவனால் எப்படி பெரியவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும்? நொடிந்து போய விட்டான். செய்தியை பார்த்த அருண் வந்தான். பவித்ரா வந்தாள் . ஏதேதோ சொன்னார்கள். யாருக்கும் எதுவும் மனதில் உறைக்கவில்லை . 

வர்மாவுக்கு அமைச்சர்கள் அளவில் எல்லாரையும் தெரியும் என்றாலும் மகளின் தவறினால் நன்றாகவே அவள் மாட்டிக் கொண்டாள் . பல நாட்கள் இல்லை என்றாலும் சில நாட்களாவது சிறை வாசம் இருக்கும் அவ்ருக்குத் தெரிந்து விட்டது. இத்தனை வருடத்து உழைப்பு, பாரம்பரியம், குடும்ப கவுரவம் எல்லாம் முடிந்து விட்டது.

ஊன் உறக்கம் இன்றி அன்றைய பொழுது முடிந்தது. இரவு அவர்களுடனே இருந்தான் ஆனந்த் . 

 ‘நீங்க எவ்ளோ சொன்னீங்க இல்ல தாத்தா? ஏனோ ரெஜிதாவோட ரிலேஷன்ஷிப்ல கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கர் வை. ரொம்ப ஓவர் ஸ்பீடா போகற . நீங்க சொன்னதை நான் கேட்கலையே தாத்தா.’ மனம் அழுதது. 

‘இனிமே எனக்கு இந்த ரிலேஷன்ஷிப்பே வேண்டாம். என்னோட வாழ்க்கைல எந்த பொண்ணுக்கும் இடமில்லை’ தீர்க்கமான முடிவெடுத்தான்.

காரில் இருவரும், 

“அமிர்தா! நீ வந்து கொஞ்சம் தாத்தா பாட்டியா  பாக்க முடியுமா? அவங்க ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. தன்னுடைய விஷயங்களை பற்றி அவனால் சொல்ல  முடியவில்லை. அவனுக்கு அசிங்கமாக இருந்தது. வாய் கூசியது 

நிச்சயம் நடந்தது, போதை மருந்து தடுப்பு பிரிவில் இருந்து வந்தது இதை பற்றி மட்டும் சொன்னான். அமிர்தாவால் இதை நம்ப கூட முடியவில்லை. அவளுக்கு உடனே பெரியவர்களை பார்க்க வேண்டும் போல இருந்தது. அவர்களும் இவளைத்தான் எதிர் பார்த்தார்கள் போலும். ஆனந்தம் இல்லத்திற்கு போனதுமே அவர்களின் அறைக்கு ஓடினாள். 

 

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!