மலர் -21

மலர் -21

“நீங்க சரியா இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா ? புடிக்கலன்னு சொல்லியும் என் குழந்தையை இப்டி தள்ள வச்சுடீங்களே ? என்னதான் காரு பங்களான்னு வாழ்க்கை இருந்தாலும் மனசு சந்தோசமா இருக்க வேணாமா ?  இந்த இடம் இல்லன்னா அந்த குழந்தையை நான் எப்படி கரை சேர்ப்பேன்?” முகத்தில் அடித்துக் கொண்டார். 

ஏழைகள் பலர் வீட்டில் பெண் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படித்தானே நடக்கிறது. அவர்களுக்கு எப்போதும் எந்த வாய்ப்பும் வாழ்க்கையில் இருக்காது. 

இத்தனை கலவரம் நடந்தும் அமைதியாக சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் அமிர்தா. 

“அக்கா! உனக்கு வேண்டான்னா சொல்லிடு. அம்மாவை நாம் சமாளிச்சுக்கலாம். ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் சார சமாளிக்க முடியாது.”

கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்ட அமிர்தா , 

“இல்லடா! நான் இப்ப இந்த கல்யாணத்த பண்ணிக்கறேன். முதல்ல நீ கொஞ்சம் செட்டில் ஆகு. அதுக்கு அப்புறம் என்ன நடக்குதோ அத அப்ப பார்த்துக்கலாம். அவரை சமாளிக்க முடியலைன்னா நீ பார்த்துக்க மாட்டியா ?” கேலியாக சொன்னாலும் அதன் அர்த்தத்தை முரளி உணர்ந்திருந்தான். 

“உன்னோட வாழக்கையை பாழாக விட்டுட மாட்டேன்க்கா.” 

“ம்ம்!” தலையாட்டியவள் தம்பியை கட்டிக்  கொண்டாள் .

விஷயத்தை அறிந்த இனியாவுக்கும் அருணுக்கும் அதிர்ச்சி.

கடற்கரையில் அமர்ந்திருந்த இனியாவும் அமிர்தாவும் எதுவும் பேசாமலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள். வெளியில் ஆர்ப்பரிக்கும் லையைப் போலவே மனதிற்குள்ளும் ஆயிரம் அலைகள். ‘கடவுளே இது என்ன சோதனை ?’ இனியாவின் மனம் சத்தம் வெளியில் வராமல் கண்ணீர் சிந்தியது தோழிக்காக . இதை தவிர எனக்கு வேற ஏதாவது ஆப்ஷன் இருக்கா? விரக்தியில் இருந்தது அமிர்தாவின் மனம். 

 “என்னடி இது? உனக்கு ஏதாவது பைத்தியம் புடிச்சிருக்கா ? ஆண்டிகிட்ட நான் பேசறேன் . உன்ன கண்டாலே அந்தாளுக்கு கொலை வெறி. அவர்கிட்ட போய் மாட்டிக்கிட்டா உன்னோட உசுருக்கே உத்தரவாதம் கிடையாதுடி. நான் ஆண்டிகிட்ட பேசறேன்.”

“இல்லடி! முதல்ல நான் சொல்லறதை மு ழுசா கேளு. இந்த கல்யாணத்துக்கு நான் முழு மனசோடதான் சம்மதிச்சேன். நீ ஊருக்கு போய் இருந்த போது என்ன நடந்துச்சு தெரியுமா?” நடந்த விஷயங்களை சொன்னாள் . 

“பாவம் முரளி சின்ன பையன். நாங்க மூணு பொண்ணுங்க. எப்படி பார்த்தானுங்க தெரியுமா ? கயல்! அவ குழந்தடி., அவள போய்., எங்கம்மா? எப்படி இருந்துச்சு தெரியுமா? அவங்க பார்த்த பார்வை? ஒடம்புல ஒட்டு துணி இல்லாத மாதிரி இருந்துச்சு. ஆஜானுபாகுவா எங்க மூணு பேரையும் அவரு வந்து மறைச்சுக்கிட்டாரு. அந்த நொடி., சொன்னா புரியாதுடி. அந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக் கூடாது” கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள் .

“அதுக்காக உன்னோட வாழ்க்கையை பலி குடுக்கணுமாடி?” 

“இரு! நான் இன்னும் முழுசா சொல்லல” அதற்க்கு பிறகும் அலுவகத்தில் நடந்த விவரங்களை சொன்னாள் .

 “ஏண்டி! அதுவும் மனிதாபிமானதுல பண்ணதுடி. இதுக்காக கல்யாணம் பண்ணனுமா ?”

“இதுக்காக இல்லன்னா எதுக்காகடி ? நான்தான் உனக்கு பாதுகாப்புன்னு எப்போ அவர் வந்து நின்னாரோ, அதுக்கு மேல வேற  என்னடி வேணும் ?”

இனியாவிற்கு இந்த லாஜிக் புரியவில்லை. ‘அமிர்தாவுக்குமே அவர் மீது ஈடுபாடு இருக்குமோ ?’

அமிர்தாவே தொடர்ந்தாள் . எல்லாத்துக்கும்  மேல வேற இன்னொன்னு இருக்கு இனியா. இதை என்னால வீட்டுல சொல்ல முடியாது. ஆனா யாருக்காவது நான் சொல்லணும். இது ஒரு ஒப்பந்தத் திருமணம்.”

“அப்டின்னா? இது என்னடி புதுசா ?”

“சாரால பாட்டி தாத்தாவை  சமாளிக்க முடியல. அவங்களுக்காகத்தான் ஓகே சொன்னாரு. அதே சமயம் அவருக்கு என்ன புடிக்கவும் புடிக்காது. அதுக்காக அவரு கண்டு புடிச்ச வழிதான் இந்த ஒப்பந்தத் திருமணம் .

இதுல டைம்  பீரியட் கிடையாது. கொஞ்ச நாளைக்கு ஒன்னா இருக்கற மாதிரி இருந்து அப்புறம் ஒத்து வராத மாதிரி நாங்க ரெண்டு பேரும்  பிரிஞ்சுடனும். அதெல்லாம் அவர் பார்த்துக்குவார்.”

“ஏண்டி! தாலி வாங்கிக்கறதும் அத தூக்கி போடறதும் உங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ சாதாரண விஷயமா ?அவருக்குத்தான் புத்தி இல்ல ? உனக்குமா ?”

“என்னப்பத்தி எவ்ளோ சீப்பா நினச்சுட்ட  இனியா? எப்போ அவரு என்ன தொட்டு அந்த ரவுடிங்கல்ட்டேர்ந்து காப்பாத்தினாரோ அப்பவே அவருதான் எனக்கு புருஷன்னு நினச்சுட்டேண்டி. ஒருத்தன் மனசுல வந்து உட்கார்ந்ததுக்கு  அப்புறம், மத்த  விஷயங்கள் என்னடி பண்ணும்? அதைத் தவிர எங்களோட கல்யாணத்துல அவரு தாலி கட்ட மாட்டாரு. வெறும் ரிஜிஸ்திரேசன் மட்டும்தான். அவரோட அம்மாவை  பத்தி நான் வாயைத்  திறந்தா அந்த நொடியே நான் பிரிஞ்சு வந்துடனும். எந்த விதமான காரணத்துக்காகவும் அவருகிட்ட நான் அந்த சொகத்தை எதிர்பார்க்க கூடாது. தத்து எடுக்கறதா இருந்தாலும் குழந்தைக்கு ஆச படக் கூடாது. இதல்லாம்தான் அவரு போட்டுருக்கற கான்டராக்ட்”

“போடிங் நீயும் உன்னோட மண்ணாங்கட்டி கல்யாணமும். அப்டி என்னடி நீ? உனக்கென்ன  அழகில்லையா அறிவில்லையா? வயசில்லையா ? உனக்கென்னடி குறைச்சல். சுத்தி பாருடி பத்து ஆம்பளைல நாலு பேரு உன்னதாண்டி பாக்கறாங்க . நீயெல்லாம் என்ன டக்கர் பிகரு தெரியுமா?”

“அதுசரி! எல்லாத்துக்கும் மேல தேவை பணம். எங்கிட்ட அது இல்லையே ?

 இந்த கல்யாணம் நடந்தா தாத்தா  என்னோட எல்லா  கடனையும்  அடைக்கறதா சொல்லி இருக்காரு. இன்னொரு விஷயம் சொல்லட்டுமா ? இப்போ நான் அந்த வீட்டுக்குப்  போனா சாப்பாட்டுக்கு ஒரு டிக்கட் கம்மியாகுமில்ல ?”

கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் கண்கள் பளபளத்ததை தோழி பார்க்கவில்லையா?

“நீ எதை  விலையா  குடுத்து எதடி  வாங்கப் போற?”

இனியாவின் கண்களில் தோழிக்கான வலி தெரிந்தது.

“பொதுவா இந்த உலகத்துல ஒன்னு சொல்லுவாங்க. எதை விலையா குடுத்தாலும் நிம்மதிய வாங்க முடியாதாம். அப்டியா? நான்,  நிம்மதிய என்னோட குடும்பத்துக்கு வாங்கித் தரப் போறேனே.”

“உனக்கும் அவருக்கும் ஒத்து  வரல பிரிஞ்சுடீங்கன்னா ?”

இனியா கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாலும் மனதின் வலியை கண்கள் நீராக கொட்டிக் கொண்டுதான் இருந்தது. அமிர்தா பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அப்புறம் அப்டியே முரளி, கயல் அவங்க குழந்தைங்கள  பார்த்துகிட்டு… அப்டியே இருந்துட  வேண்டியதுதான். என்ன ஆகிடப் போகுது ? இதோ இவங்கல்லாம் இல்லையா ? எந்த கவலையும் இல்லாம ? அப்டியே அவரோட நினைப்புல!”

இவர்கள் பீச்சில் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.  அங்கே இருந்த ஒரு பைத்தியத்தை காண்பித்து சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த பைத்தியம்தான் இவள் வாழக்கையை மாற்றப் போவது தெரியாமல்.

தான் என்ன பேசுகிறோம் என்பது அமிர்தாவிற்கு உரைக்கவில்லை. அதிர்ச்சியான இனியா,

“ஏய் அப்போ நீ அவரை விரும்பரியா ? ” தோழியின் தோளை  உலுக்கினாள்.

“ம்ம்! தலை மட்டும் ஆடியது” அதில் எந்த உணர்ச்சியும் இல்லை.

தோழியின் காதலில் இனியாவுக்கு மகிழ்ச்சியை விடவும் வருத்தமே அதிகமாக இருந்தது. 

“என்னடா புடவை கடைக்கு கூட்டிட்டு வந்துருக்க?” ஆனந்த் சந்தேகத்துடன் அருணிடம் கேட்டான். . “சும்மாதான்டா  அம்மாவுக்கு எடுக்கலான்னு.” ஆனந்திடம் பொய் சொல்லி கூட்டி சென்றான். மெல்லிய பார்டரில் நாகப்பழ நிறத்தில் அழகான புடவையை தேர்ந்தெடுத்தார்கள். பில்லை  ஆனந்தையே கட்ட வைத்தான். 

“இது வயசானவங்க கட்டற மாதிரி இல்லையேடா?” காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டே கேட்டான் ஆனந்த் . 

“அமிர்தா இன்னும் கிழவி ஆகலையே டா” ஒன்றும் புரியாத மாதிரி நடித்தான் அருண்.

“என்னடா பேச்சு எங்கையோ போகுது?”

“இது உங்க கல்யாணத்துக்காக வாங்கின புடவை”

“ஏன்டா உனக்கு வெக்கமா இல்லை ?”

“நான் எடுத்தா தப்பாகிடும். அதுக்குத்தான் உன்னையே கூட்டிட்டு போனேன். உண்மைய சொன்னா  வந்துருப்பியா ?”

“ஏண்டா! உனக்கு என் மேல கோபமே இல்லையா ? எப்படி டா இவ்ளோ நல்லவனா இருக்க”

“எதுக்கு?

“உன்னோட காதலியை நான் கல்யாணம் பண்ண போகறேனே?”

“டேய் சொன்னா உனக்கு கோபம் வரும்” 

“பரவால்ல சொல்லு”

” நீ வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டுருக்க. என்னை விட  உனக்குத்தான் அவளை மாதிரி ஒரு பொண்ணு தேவை. அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடா”

வண்டியை ஓரமாக நிறுத்தியவன், “இறங்குடா” மிரட்டினான் ஆனந்த்

புரிந்து கொண்டான் அருண். 

“நான் சொன்னது ஒனக்கு புடிக்கலன்னு தெரியுது. ஆனா நீ சில விஷயங்களை ஒதுக்கிட்டுதான் ஆகணும். அவ உன்கிட்டதான் இன்னும் சந்தோசமா இருப்பா . எனக்கு அமிர்தாவை ரொம்ப புடிக்கும். அவளை பத்திரமா பார்த்துக்கோ” சொல்லி விட்டு இறங்கி கொண்டான்.

“லூசு சம்பந்தமே இல்லாம உளறுது”  என்று திட்டிக் கொண்டே காரை வேகமாக செலுத்தினான் ஆனந்த் . சொன்ன படியே அமிர்தா ஆனந்தின் திருமணம் எந்த ஆடம்பரமும் இல்லாமல், விருப்பமும் இல்லாமல், அருணும் இல்லாமல்  இனிதே நடைபெற்றது. 

(மக்களே புது மண ஜோடிகளை வாழ்த்துங்கள். உங்களோட ஆசிர்வாதம் இருந்தாத்தான்  அவங்களால அடுத்தது வரப் போற பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். )

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை சாதாரணமாக சென்றுக்  கொண்டிருந்தது. விக்ரம் வீட்டில் எத்தனையோ பேசிப் பார்த்தான். எந்த முன்னேற்றமும் இல்லை . ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் சித்தப்பா இனியாவை கட்டக் கூடாது என்கிறார் என்பது விக்ரமுக்கு தெளிவாகியது. ஆனால் காரணம் என்ன ? அதுதான் குழப்பியது.  

பேருந்தில் இனியாவின் பயணம் தனியே தொடர்ந்தது. இருப்பினும் மருத்துவமனையில் அமிர்தாவுடனான நட்பு தொடர்ந்தது. விடியல் வேலைக்கு பதிலாக சற்று தாமதமாக ஷிப்ட் வாங்கி கொண்டாள் அமிர்தா.

  காலையில் பெரியவர்களுக்கு தேவையானதை செய்து விட்டு தனக்கும்  ஏதாவது எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள். விடியலிலேயே எழுந்துக் கொள்ளும் ஆனந்த்  அவள் கிளம்பும்வரை உடற் பயிற்சி செய்து விட்டு அவள் கிளம்பியவுடன் தயாராகி கீழே வருவான். இரவில் மற்றவர்கள் சேர்ந்து  உண்ணும்போதும் தாத்தா பாட்டிக்கு மட்டுமே இவள் பரிமாறுவாள். மறந்தும் அவன் பக்கம் முகத்தை கூட திருப்ப மாட்டாள். அவனும் அவன் குடும்பமும் ஒன்றாக இருக்கும்போது இவள் தனியே வந்து விடுவாள். இவளுக்கு வெள்ளிகிழமை விடுமுறை என்பதால் அவன் மறந்தும் சீக்கிரம் வந்து விட மாட்டான். அவனுக்கு சனி ஞாயிறு விடுமுறை என்பதால் அவள் கட்டாயம் வேலைக்குச் செல்வாள். ஓவர் டைமும்  செய்வாள். அது குடும்பத்திற்கு ஓரளவு உதவியது. ஒரே வீட்டில் இருந்தும் அவர்கள் இருவரும் தனி தீவிலேயே வாழ்ந்து வந்தனர்.

 இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை பெரியவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். 

 அவர்கள் இருவருமே தனித்தனி அறையில் இருப்பதும் தெரியாதா? அதை மாற்ற நினைத்தவர்கள் இரவில் அமிர்தாவையே ஆனந்துக்கும் பறிமாறச் செய்தார்கள். பல்லைக் கடித்த ஆனந்துக்கும் தயங்கிய மருமகளுக்கும் பெரியவர் சொன்ன ஒரே பதில், 

“வேலைகாரங்க பாக்கறாங்க . நம்மளோட மதிப்பை நாமதான் தக்க வச்சுக்கணும்” பேரனை பார்த்து முறைத்தார். வேறு வழி இல்லாமல் இருவரும் ஒத்துக் கொண்டனர்.  அப்படி ஒரு நாள் பரிமாறும்போது கணவனின் அருகில் நின்று சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்தாள். அப்போது 

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!