மலர் -27

மறு  நாள் தேங்காய் சாதம் . அதையும் இவன் காலி செய்து விடுவான் என்று எதிர் பார்த்தாள் .

“நீங்க  வேண்ணா  இதை சாப்பிடுங்க உங்களுக்கு வர்ற சாப்பாடை நான் எடுத்துகிறேன்”

“ப்ச்! வேணாம் நீயே  சாப்பிடு”

“ஏன் புடிக்காதா ?”

 

“இல்ல! இது எங்க அம்மாவோட பேவரிட் டிஷ். அவங்களும் இப்படித்தான் வேர்க்கடலை போட்டு செய்வாங்க. அப் கோர்ஸ் உருளைக்கிழங்கு ஸ்மால்  ஸ்மாலா   கட்  பண்ணி காய்  செய்வாங்க. ஸ்கூல்ல கொண்டு போனா எனக்கே மிச்சம் இருக்காது. செம்ம டேஸ்டியா இருக்கும். எப்போ அவ எங்களை ஏமாத்திட்டு போனாளோ  அப்பதிலேர்ந்து எனக்கு அது புடிக்காத  டிஷ்”

இந்த மரியாதை இல்லாத  பதிலை கேட்டவளுக்கு  முகம் சுருங்கி போயிற்று. 

மருத்துவர் வந்து மறு  நாள் டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்றார்.

“வரு! என்னவோ ஹனி மூனுலேர்ந்து வீட்டுக்கு போகற  மாதிரி இருக்குடி.  போகவே புடிக்கல. நீயும் வரியா ?”

இவள் பதில் எதுவும் சொல்லவில்லை. இப்போது அங்கு போனால் நிச்சயம் அந்தக்கடந்த கால நினைவை அவளால் நினைக்காமல் இருக்க முடியாது. இப்போதைக்கு இப்படி சிரித்த  நினைவுகளிலேயே வாழ் நாளை கடந்து விடலாம் என்று தோன்றியது. 

மீண்டும் அன்றைய இரவு பேச்சை ஆரம்பித்தான். 

“உங்களுக்கு என்ன ஆச்சு ? அவன் மொபைலை பார்த்தாள்” அதில் காதல் பாட்டுக்கள் ஓடிக் கொண்டிருந்தன.

“என்ன இதெல்லாம் பாக்கறீங்க ? நாவிகா வரலியா ? இல்லனா உங்களுக்குத்தான் ரொம்ப பிடிக்குமே பத்மஜா, அவளை பாருங்க. எதுக்கு கண்டதை பாத்து ஏன் என்  உயிரை எடுக்கறீங்க ?”

“ஏண்டி புருஷன் வீட்டுக்கு வான்னு  கூப்டா என்னென்னவோ பேசற? மரியாதையா மூட்டை  முடிச்ச கட்டிக்கிட்டு நாளைக்கு வந்து சேர்ற வழிய பாரு”

“வரேன்! கண்டிப்பா வரேன். நீங்க  நானு பாட்டி  தாத்தா உங்கம்மா எல்லாரும் சேர்ந்து சந்தோசமா இருக்கலாம். உங்களுக்கு ஓகேவா ?”

பளீரென கன்னத்தில் அரை விழுந்தது.

“என்னோட சந்தோஷத்துல மண்ண அள்ளி  போடவேதான் வந்துருக்கியா ?”

“இதுக்கு ஓகேன்னா செல்லுங்க. நான் வரேன். அவங்களுக்கு மருமகளா . இல்லாட்டி நான் வர மாட்டேன்”

“என்னவோ இந்த பத்து  நாள்ல  உன் மேல எனக்கு ஒரு சாப்ட் கார்னர் வந்தது என்னவோ உண்மைதான். அதுக்காக அந்த பொம்பளைய வீட்டுக்குள்ள சேக்கணுன்னு சொன்னா அது நடக்காது. நான் மட்டும் இல்ல தாத்தா பாட்டியும் கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. “

மறு  தினம் வீட்டிற்கு கிளம்பினான். கண்கள் தான் அவளை ஏக்கமாக பார்த்ததே தவிர வாயால் எதுவும் சொல்லவில்லை. 

இதோ அவளை விட்டு வீட்டுக்குச் செல்ல மனமே இல்லாமல் வீட்டிற்குச்  சென்றான் . கால்களை ஊன்றி ஊன்றி நடக்க ஆரம்பித்திருந்தான், வலது கைக்கு பதிலாக இடது  கைக்கு மூளை பழக்கப் படுத்திக் கொண்டிருந்தது. தாத்தாவின் கட்டளை படி ஒரு நாளாவது வீட்டிலேயே இருந்து விட்டு  மறு  நாள் முதல் வேலைக்கு செல்ல நினைத்தான்.

 காலையில்  எழுந்ததும் வழக்கம் போல வரு என்று அழைத்தான். ஆனால்  அவனின் வரு தான் அங்கு இல்லையே ? மனம் சோர்வுற்றது. ஏனோ அவள் குரலையாவது கேட்க வேண்டும் போல இருந்தது. மனைவியின் போன் நம்பர் கூட தெரியாதே? தாத்தாவிடம் கேட்கலாம்.அல்லது அருணிடம் கேட்கலாம்.  ஆனால்  அதை  விட அசிங்கம் ஒன்றும் இல்லை. என்ன செய்வது? எத்தனையோ பெரிய  பிரச்சனைகளை சுலபமாக கடந்தவனுக்கு திருமணத்திற்கு பின்னரும் மனைவியின் போன் நம்பர் தெரியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தான். அவளிடம் கிளம்புமுன் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அப்போதும் அவன் சுய கௌரவம்தான் வேண்டாம் என்று தடுத்தது. இப்போதும் அதே தான். 

அவன் யோசித்துக் கொண்டிருந்த போது தாத்தா வந்தார்.

“என்னப்பா காபி சாப்பிட்டியா ? உடம்பு எப்படி இருக்கு? டிபன் சாப்பிடரியா ? முன்னாடி ஏதாவது மாத்திரை போடணுமா?”

டக்கென பாயிண்டை பிடித்துக் கொண்டவன், 

“ஆ! தாத்தா நானே கேட்கணுன்னு நினச்சேன். என்னோட போனிலேர்ந்து வரூக்கு  கால் போக மாட்டேங்குது. உங்க போன் குடுங்க, ஒரு டவுட் இருக்கு கேட்கணும்”

“வருண்னு எனக்கு யாரையுமே தெரியாதேப்பா ?”

“வருண் இல்ல தாத்தா.  வரூ  அதான் அமிர்த வர்ஷினி”.

“ஓ  அவளா? அவளுக்கு எதுக்குப்பா கால் பண்ணிக்கிட்டு. ஏதோ ஆஸ்பத்திரில இருந்து பார்த்துக்கிட்டா . அவ ஜஸ்ட் நர்ஸ். அதுக்கு மேலெல்லாம்  அவளுக்கு இம்பார்ட்டன்ஸ்  குடுக்க தேவை இல்ல. நீ அருணுக்கு பேசிக்கோ”

“ஐயோ தாத்தா புரிஞ்சுக்கோங்களேன்” மனம் கெஞ்சியது.

“ சரிப்பா! நான் போய் உனக்கு இட்லி கொண்டு வர சொல்லறேன்”

அந்த கல்லுளி  மங்கனுக்கு தன்  அறைக்கு சென்று முதலில் இந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லியே ஆக வேண்டும்.

இவனுக்கோ அவள் குரல் கேட்காமல் தலையே வெடித்து விடும் போல இருந்தது. மருத்துவமனையில் அவன் தூங்கும்போது அவ்வபோது வந்து அவள் தலை கோதி  விடுவாள். அதற்காகவே அவன் கண் மூடுவது போல நடிப்பான் .

சிறு குழந்தை அன்னைக்காக ஏங்குவது போல அவனும் படுத்துக் கொண்டு கண் மூடினான். அவள் எங்கே வந்தாள்? ஏமாற்றமாக இருந்தது.

இப்போதும் அவள் தலை  கோத  மாட்டாளா என்று மனம் ஏங்கியது. அவள் தொட்டதற்கே அவளை பெல்டால் அடித்தவன் இப்போது அவள் வேண்டும் அவள் ஸ்பரிசம் வேண்டும் என்று நினைக்கிறான்.

அவள் நினைவில் தலையணைக் கட்டிக் கொள்ள ஆரம்பித்தான். ஏதேதோ கனவுகள் கற்பனைகள், அவள் இதழோடு இதழ் பதித்து, கழுத்தில் முத்தமிட்டு, அதற்குக் கீழ் இறங்கி மனம் தொலைத்து , அவளை இம்சித்து, அவளிடம் யாசித்து என்று கணவன் மனைவி அந்தரங்கங்களை காட்டிக் கொடுத்தது.

சற்று நேரம் கழித்து காலை உணவை ஆண்  சமையல் காரன் வந்து பரிமாறிவிட்டு போகவும் இன்னும் கடுப்பேறியது. 

‘புருஷன் இப்டி தனியா வீட்டுல தவிக்கறானே சாப்பிட்டானா நைட்டு தூங்கினானா  ஏதாவது ஒரு வார்த்தை போன் பன்னி கேட்கறாளா பாரு ராட்சசி’ என்று மனம் அவளை திட்டியது. 

சற்று நேரத்தில் பாட்டி வந்தார். மனைவி இல்லாத டென்ஷன் பேரன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. மனதில் சிரித்துக் கொண்டவர்,

“சாப்ட்டியாப்பா ?”

“ம்! ஆச்சு பாட்டி. நீங்க?”

“இதோ இனிமேதாண்டா கண்ணா”

“இப்போ உடம்பு எப்படி கண்ணா இருக்கு? முகம் என்னவோ போல இருக்கே ?”

தாத்தாவிடம் சுய கௌரவம் பார்த்த மனது பாட்டியிடம் மறைக்க முடியாமல் , 

“பாட்டி! நான் ஒன்னு சொல்லுவேன் சிரிக்க மாட்டேங்களே ?”

“என்னப்பா ?”

“எனக்கு அமிர்தாகிட்ட பேசணும். அவ நம்பர் இல்ல.”

“அவ்ளோதானே ? நான்  அனுப்பறேன்”

“தேங்க்ஸ் பாட்டி! மடியில் தலை வைத்து படுத்திருந்த பேரனை மெதுவாக தடவிக் கொடுத்தார். 

இவன் தவிப்பை விட அவள் தவிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறியாதவளா பாட்டி ? அவரும் இதையெல்லாம் கடந்து வந்தவள் தானே ? 

இவர்களின் ஊடலை கண்டு பயந்தவர் இவர்களின் கூடலில் தான் மனம் மகிழ்வார்.

 

இவன் மனம் இங்கு தவித்துக் கொண்டிருக்க அவள் மனம் தவிக்காமலா இருக்கும் ? 

அவன் டிஸ்சார்ஜ் ஆகிப் போனாலும் அவன் நினைவுகள் அவளையே சுற்றிக் கொண்டிருந்தன . அவனின் உடல் நிலையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு அழைக்க முடியாது. என்னதான் இருந்தாலும் அவன் ஆனந்தன். இவளாக அழைத்தால் வார்த்தைகள் எப்படி வந்து விழும் என்பது இவளுக்கு நன்றாகவே தெரியும். வீட்டு  பெரியவர்களிடம் கேட்க தயக்கம். அவர்கள் நிச்சயம் வீட்டிற்கு  வந்து விடு என்பார்கள். அவளுக்கு அங்கே செல்ல விருப்பம் இல்லை. முதலில் அவள் மாமியாரை  அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

அடுத்து, என்னதான் இருந்தாலும் அங்கே  சென்றால் நிச்சயம் அவளுக்கு அந்த கொடுமையான நாள்தான் நினைவுக்கு வரும். எந்த மனைவிக்கும் கணவனின் அறை அவனின் காதலையும் , முதல் தீண்டலையும்  முதல் காமத்தையும் நினைவு படுத்த வேண்டும். ஆனால் இவளுக்கு தன்னை தீண்ட கூட விரும்பாதவன் அடித்தது தான் நினைவுக்கு வரும். 

இவள் அங்கு சென்றால் ஏதோ ஒரு காலத்தில் அவர்களுக்கு முதலிரவு நடக்கலாம். அதற்கு காரணம் இயற்கையாகவோ அல்லது காலத்தின் கட்டாயமாகவோ இருக்கலாம். நிச்சயம் அதில் காதல் இருக்காது. எப்போதுமே அவனின் காதல் ரெஜிதா தான் என்னும்போது இவள் அங்கிருந்து என்ன பயன்? 

 அதிலும் அவர்களின் அந்த மேரேஜ் காண்ட்ராக்ட்… அதில் உள்ளது போல அவள், அவன் அன்னை பற்றி என்றுமே பேசக் கூடாது. இவள்தான் பேசி விட்டாளே ?அவனை தொடக் கூடாது. அதுதான் தொட்டு விட்டாளே ! இதை பற்றி எல்லாம் சொன்னால் பெரியவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? நிச்சயம் அவர்களின் முகத்திற்கு எதிரில் தன்னால் வர முடியாது என்று சொல்லவே முடியாது. 

 அதற்கு பதில் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் . 

 ஆனால் அந்த முடிவையும் அவன் தானே எடுக்க வேண்டும்? அவனுக்குத்தான் இப்போது உண்மையான காதல் உடலை பார்ப்பது அல்ல, மனதை பார்ப்பது என்ற அறிவு வந்து விட்டதே. அவன் அத்தனை எளிதில் அவளை விட்டு விடுவானா ? அப்போதும் அவன் திருந்த வேண்டியது நிறையவே இருந்தது. காலத்தின் கட்டாயம் அவன் திருந்தியே ஆக வேண்டும். அது கொடுக்க போகும் அடிகளை அவன் தாங்குவானா ?

   பாட்டியிடம் நம்பர் வாங்கியவன் அவளுக்கு அழைத்தான். எத்தனை தான் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டாலும் அவனின் குரலில் மனம் மயங்கத்தான்  செய்கிறது. 

வரு என்று அவன் அழைப்பான் என்று காத்துக் கொண்டிருந்தாள்.

அவனோ “ஹாய் பொண்டாட்டி” என்றான்.

“இது என்ன புதுசா ?”

“எது?”

“பொண்டாட்டின்னு சொல்லறது?”

“சரி! அமிர்தா”

“காலைல என்ன சாப்டிங்க? டப்ளேட்ஸ் போட்டிங்களா?”

“அந்த பச்சை கலரு மாத்திரை மஞ்ச கலரு மாத்திரை போட்டுகிட்டேன் நர்சம்மா . வேற ஏதாவது போடணுமா ?”

அவன் சொன்ன விதத்தில் இவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் கலகலவென சிரிக்க அதில் இவனும் கலந்து கொண்டான். காதலர்களை போல இவர்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். எத்தனை நாள் தான்  பேசிக் கொண்டே இருப்பது? பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். 

 

அன்று அமிர்தவர்ஷினி என்ற நர்ஸுக்காக அந்த வீட்டுக்கு வந்தவன் இன்று தன்னுடைய வருவுக்காக வந்து நிற்கிறான். அவன் மனதில் இப்போது அந்த பழைய விஷயங்களை மறக்க முடியாவிட்டாலும் அதை மாற்றிக் கொண்டு ‘இன்னிக்கு அவ என்ன கலர் ட்ரெஸ் போட்டிருப்பா? என்னை பார்த்ததும் என்ன யோசிப்பா? அவளுக்கு இந்த ட்ரெஸ் புடிக்குமா? பாக்க நல்ல இருக்கேனா?’ என்று தன்னுடைய முழு எண்ணத்தையும் அவளை சுற்றி ஓட விட்டான். 

முள் மலரும் …

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!